Thursday, March 30, 2006

Religious laws

The case of imrana (which by now has been forgetten by many ) had let the apex court to issue a notice last year, to the centre and to the All India Muslim Personal Law Board to restrain the board from establishing a parallel muslim judicial system. The fatwa issued by Darul-Uloom last year to Imrana was really disgusting. she was ordered to leave her husband and live with her father in law who has allegedly raped her. Many social activists and even many muslims opposed this and the controversy led to the issual of the above said notice by the apex court. The center has informed the supreme court on monday,that they are still looking into the matter and has sought some time from the court. A uniform civil law is what we require now, which will abolish all the existing religious laws in our country, whatever the religion may be. Even as the center is still looking into the matter! a person from west bengal has been ordered by a village moulvi to seperate from his wife jus bcos he uttered the word 'talaq' thrice in his sleep. but the person is wise enough to register his marriage in a sub divisional court after the moulvi's verdict.

Saturday, March 18, 2006

TAGGING GAME

என்னை இந்த சங்கிலித் தொடரில் இணைத்த புண்ணியம் அம்பியைச் சாரும்.

எனக்கு பிடித்த நான்கு விஷயங்கள்.

பிடித்த நான்கு இடங்கள்.

1. "எட்டடுக்கு மாடியில் ஏசியில் இருந்தாலும் எட்டடிக்கு எட்டடி உள்ள நம் வீட்டு அறை போல் வருமா?" என்ற பழமொழிப் படி(அது நான் கண்டுபிடிச்ச பழமொழி)என் வீடு.


2. எவ்வளவு தான் குழப்பத்துடன் போனாலும் படியில் கால் வைத்தவுடன் எல்லாம் மறைந்து போகும் இடம், எங்க ஊர் பெருமாள் கோவில்.(ரொம்ப நல்ல புள்ளை மாதிரி பேசாதன்னு நீங்க சொல்றது எனக்கு புரியுது:)

3. காலேஜ்ல யார் யாருக்கு ரூட் போட்றாங்க என்பதிலிருந்து கடவுள் வரைக்கும் எல்லாவற்றையும் அலசி,பிழிந்து,காயப்போடும் என் தோழியின் வீடு.

4.இந்த இடங்கள் எல்லாம் இருக்கும் நம் தருமமிகு சென்னைப்பட்டிணம்.

பிடித்த உணவு வகையறாக்கள்

1. தயிர் சாதமும் மாவடுவும்(என்றும் இணை பிரியா காம்போ)

2. புளியோதரை(இதை அடிச்சுக்கவே முடியாது)

3. புதினா சாதம் (சொல்றசேயே சாப்ட மாதிரி இருக்கு)

4.அப்பள வத்தக் குழம்பு(இந்த லிஸ்ட பார்த்துட்டு நான் போஜன ப்ரியைன்னு ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க;)

பிடித்த/செய்த நான்கு வேலைகள்

நான் வேலைக்குச் செல்பவள் இல்லை, எனவே எனக்கு பிடித்த நான்கு வேலைகளை பட்டியலிடுகிறேன்

1. புத்தகம் படிப்பது(படிக்க ஆரம்பித்தால் சாப்பாடு, தூக்கம் நினைவே வராது)

2. அக்கம் பக்கம் மற்றும் சொந்தத்தில் படிக்கும் மாணவ, மாணவியர் தேர்வு சமயத்தில் மட்டும் என் ஞாபகம் வரும்,ஓசியில் பாடம் சொல்லிக் கொடுப்பேன்.

3.என் அம்மாவிற்கு வீட்டில் உதவி செய்வது.

4.லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் வேலை பிளாகிங் செய்வது

நீண்ட நாள் சாதனை

25 வருஷமா இந்த உலகத்தில் குப்பை கொட்டுவது

குறுகிய நாள் சாதனை

கையில் அடிப்பட்டதால் இடது கையாலேயே ஒரு வாரமாக ஒப்பேத்துவது:)

நீண்ட நாள் எரிச்சல்

அப்பிடினு ஒன்னும் இல்ல , எதுவா இருந்தாலும் சில தினங்களில் மறந்து விடுவேன்.

குறுகிய நாள் எரிச்சல்

வேற என்ன என் சுளுக்கிய கை தான்.(கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதின் அர்த்தம் நான் இடது கைல ஸ்பூன் புடிச்சு சாப்பிட்ட போது தான் புரிஞ்சுது :(

whoever interested can continue this.

TANGLISH VERSION

enakku pidiththa naangu vishayanggaL.

ennai intha sangili thodaril iNaiththa puNNiyam ambiyai saarum.

pidiththa naangu idangaL.
1. "yetadukku maadiyil yesiyil irunthalum ettadikku ettadi uLLa nam vettu aRai pol varumaa enRa pazhamozhi" padi(athu naan kaNdupidicha pazhamozhi)en veedu.
2. evvaLavu thaan kuzhapathudan ponalum padiyil kaal vaithavudan ellam maRaithu pogum idam, enga oor perumaal kovil.(romba nalla puLLai maathiri pesatha-nu neenga solRathu ennakku puriyudhu:)
3. collegela yaar yaarukku route podRaangga enbathilirunthu kadavuL varaikkum yelavatraiyum alasi,pizhinthu,kayapodum en thozhiyin veedu.
4.intha idangaL ellaam irukkum nam tharmamigu chennaipattiNam.

pidiththa uNavu vagaiyaRaakkaL
1. thayir saathamum maavaduvum(enRum iNai piriyaa combo)
2. puLiyothaRai(ithai adichukave mudiyaathu)
3. puthina saatham (solRacheye sapitta maathiri irruku)
4.appaLa vathakuzhambu(intha lista parththuttu naan bojana priyai-nu oru mudivukku vanthirupeengga;)

pidiththa/seytha naangu veelaigaL
naan velaikku selbavaL illai, yenavee enakku pidiththa naangu veelaigaLai pattiyal idugiRen

1. puthagam padippathu(padikka aarambithaal saapaadu, thookkam ninaivee varaathu)
2. akkam pakkam matRum sonthathil padikkum maaNava, maaNaviyar thervu samayathil mattum en njaapagam varum,oosiyil paadam solli koduppeen.
3.en ammaviRku veetil uthavi seyvadhu.
4.late aaga vanthaalum latest-ana velai bLooging seyvathu

neeNda naaL sathanai
25 varushamaa intha ulagathil kuppai kottuvathu

kuRugiya naaL saathanai
kaiyil adipattathal idathu kaiyaleye oru vaaramaga oppethuvathu:)

neeNda naaL erichal
appidinu onnum illa , ethuva irunthaalum sila thinangaLil maRanthu viduveen.

kuRugiya naal erichal
veRa enna? en suLukkiya kai thaan.(kaikku yettiyathu vaaykku yettavillai enbathin arththam naan idathu kaila spoon pudichu sapita pothu thaan purinjuthu :(




Wednesday, March 15, 2006

sulukko sulluku!!

it all started a week ago, there was some pain in my right wrist. but i jus ignored it. i usually notice and take medicines in the initial stages, but vithi valiyathu. when i woke up on sunday morning, the pain was unbearable that i could not move my wrist and lead to my visit to our family doctor and he immedietly found the reason for the swelling and pain.he said that we are not supposed to keep the hand below the head while sleeping. nalla tharaila paduthukittu thalaiku kaiya thalagaaniya maathi sokka tv paathalo illa thoonginalo ipdi thaan agumam. naan yerkanave iruntha valiyoda chapathikku maavu pisaiyarenu solli kaiku pressure koduthu athanale yerkanave iruntha vali jasthiyaagi swelling ayiduthu. kaiku nalla oru kattu katti one week rest edukka sollitaru. thirumbina pakkamellam ore thukkam visarippugal. en kattu pota kai ippa oru exhibit maari ayiduthu. flat pasangaluku saadham oota ammakal en kaiya kamichu,'anga paruda thangam bhucha akka kaiya'nu solli saavadikuranga.idhu pothathunu en cousin romba vela menakattu oru msg anupina, aana athu nejamave s/w fieldula irrupavangaluku useful. i am giving it below.

Please take good care of your wrist while using the keyboard and mouse of your computer.

When doing each of these exercises, the hand should be flexed until a sensation of stretching is felt in the arm. The position should be held for 10 to 15 seconds for each of 10 repetitions. Try to this set of exercises three times a day.



Exercise 1 - Wrist Flexion Bend the hand being exercised backward (palm away from you), as shown in the photos. With the fingers of the other hand, apply pressure.



Exercise 2 - Wrist Extension Bend the hand being exercised forward (palm toward you), as shown in the photos. With the fingers of the other hand, apply pressure.



Exercise 3 - Wrist Flexion against surface With your arm held vertically, press your hand, palm down, on a firm surface, as shown in the photo.



Exercise 4 - Wrist Extension against surface With your arm held vertically, press your hand, palm up, on a firm surface, as shown in the photo.



Exercise 5 - (Radial Deviation) Place your hand palm downward. Grasp the fingers of the hand to be exercised with your other hand (as shown in the photo) and twist the hand toward you. Keep the hand horizontal.



Exercise 6 - (Ulnar Deviation) Place your hand palm downward. Grasp the fingers of the hand to be exercised with your other hand (as shown in the photo) and twist the hand away from you. Keep the hand horizontal.

p.s.: typed the whole post using my left hand. adathu kai sullikinallum vidhathu blogging seiyven.:)




Friday, March 10, 2006

blog - boon or bane


This is the topic for voice ur views in,
the hindu.
my opinion is ofcourse, blogging is a boon to me.
Blogging helped me in rediscovering my writing skills. it is a platform where i can publish my own
thoughts, as if its my journal. Here we have no editing, no censors(of course to a certain extent),lot of healthy arguements,lot of fights. its like a "kaiyezhuthu prathi" to everyone. after becoming a blogger,i started writing poems after a long period, which help me to refine my language skills and my imaginative skills.it brings together,people with common taste and it helps people living out of india, a chance to live in india thro blogs and ofcourse helps to find a lot of friends. so i luv blogging, how abt u?

Wednesday, March 08, 2006

HAPPY WOMEN'S DAY

Saturday, March 04, 2006

voter-id-yum naanum

elections announce panninalum pannanga enga paathalum karuthu ganippu, thoguthi pangeedu appdi eppdi-nu ore galatta thaan.
seri nammalum yethavudhu ezhuthalaam-nu yosichen.
naan voter id vaangina kadhaiya solren kelunga.
appa naan college padichutu irunthen.appa thaan voters id
intro panninaanga. enga paathalum itha pathi thaan pechu.
pozhuthe pola enna pannalam-nu think pannitirunthom.
appa voter id apply pannalam-nu oru idea vanthathu.
naangalum, aha nama inthiya kudimagal aache, namma kadamaiya
vozhunga seiyanum-nu mudivedhuthu, oru nalla naal pathu kelambinom.
photo yedupaanga-nu therinjathum, ore alambal thaan ponga.
nalla palichunu dress pannikitu,kalyanathuku pora kanakka, naan,
en friends jazz,sasi moonu perum ponoom.
enga orulenthu 46A-nu ore oru bus thaan koyembedu-ku
(anga thaan engeyo voters id photo eduthaanga).antha bus naanga kodutha kassuku orellam suthi kamichu oru vazhiya kondu poi vittuthu.
anga pona nalla anumaar vaal kanaka ore kootam.
ellam nammla madiri ore youngsters thaan ponga. ore majaa thaan.
ipdi sight adichikite enga theru per enga irukunu paathu
nalla sokka photo-ku pose koduthutu vanthoom.
puram atha pathi maranthe poi padipula moozhgi muthedukka try panninom
(ok,ok.tenson avatheenga, arasialla ithellam sagajamappa).
oru naal voters id vanthuduchu-nu sonnanga, aha namma azhagana
mugam eppdi vanthuruku-nu avaloda vangi partha, 'aiyo athu naana'
appidingra range-la irunthuthu. seri athuvathu parava illa,
en per thavira ellam maridichu,vera street, vera door no.
ithellam vida periya koothu enakku kalyaname panni vachutaanga.
arasu iyanthiram avlo fast and steady. appa thooki potathu
thaan antha voter id-ya. innum athu enga iruku-nu theriyala.
aanalum pona vaati vote panniten. intha thadavaiyum vidratha illa.
seri ivlo neram en voter-id vaangina kadaiya romba porumaiya
padicha ungalukku urupadiya rendu vishayam solren kettukonga.

1. pudhusa "LOK PARITHRAN" appdi-nu oru katchi start panniyirukaanga.
pls visit here for more info.

2. kadasila namma vaiko-vum poi senthutaaru amma kootaniyile.

Wednesday, March 01, 2006

செல் பேசும் வார்த்தைகள்!



note : one of the best fwd mails i have ever got.

(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒன்னு உண்டு. அப்பிடிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. அவனது செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்! அதான் கண்ணு இது! செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.)

கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. (மெசேஜ் ஒன்று வந்தடைகிறது.)

செல் : நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன மெசேஜ் வேண்டி கிடக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய சாட் தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "பொண்டாட்டி"ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..?

"செல்லம் தூங்கிட்டியாடா?"

அடிப்பாவி நடுராத்திரி ரெண்டு மணிக்கு தூங்காம மெகா சீரியலா பார்த்துகிட்டிருப்பாங்க!
ஆஹா பதில் அனுப்ப தொடங்கிட்டாண்டா

"ஆமா செல்லம் இப்ப தான் தூங்கினேன்.கனவுல நீ தான் வந்த. ரெண்டு பேரும் சுவிஸ்ல டூயட் பாடிக்கிட்டிருந்தோம்."

டேய்,சத்தியமா சொல்லு உன் கனவில் அவளாடா வந்தா! கடலை முட்டாயிலிருந்து காம்ப்ளான் வரை கடன் சொல்லி வாங்கின கடைக்காரர் + கடன்காரர் கந்தசாமி தான வந்தாரு! ஏன்டா என்னையும் பொய் சொல்ல வக்குற..

கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்..
பதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு மேல படுத்துவாளே, என்ன சொல்லியிருக்கா!

"உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்?"

ஆமாடி, ரொம்ப முக்கியம்! என்ன டிரெஸ் போட்டிருந்த, லிப்ஸ்டிக் சரியா இருந்திச்சா!
எல்லாம் வரிசையா கேளு!

" டார்லிங், நீயும் நானும் ஒயிட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்த.."

டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா! ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா!

"டேய் புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்கு! நா என்ன பண்ண?"


ஆங்.. நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீ-பேடுல்லாம் வலிக்குதுடா சாமி! பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு.. அடங்குங்கடா!

"என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ! அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்ம்ம்மா!"

ச்சீ.. தூ.. எச்சி எச்சி! உம்மான்னு அடிச்சா போதாதா.. அந்த எழவை எனக்கு வேற
கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. அதெல்லாம் சொன்னா தூக்கம் வராதுடா, உன்னால தான் தூக்கம் கெட்டுப் போச்சுன்னு வெறுப்புத்தான் வரும். லூசுப்பய! இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.

" ஏய், எனக்கு உன் பேரைச் சொன்னா தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது!"

எனக்கு வேதனை வேதனையா வருது. எப்படா தூங்குவீங்க! தினமும் இதே தலை வேதனையாப் போச்சு! 'கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவனை விட செல்லைப் படைத்து ப்ரீ எஸ்.எம்.எஸ்ஸை படைத்த மனுசன் தான் கொடியவன்'
போன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல!

"செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?"

" உலக வங்கியில இந்தியா வச்சிருக்கிற கடன் தொகையைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்?"


கடன்காரி, உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா, நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம்.

" முதல் டீச்சர். முதல் சம்பளம். முதல் கவிதை. முதல் காதல்... இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி! நீதான் என் முதல் காதல்"

டேய் அளக்காதடா! ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெசேஜைத் தான நீ அனுப்புன. நடத்து,நடத்து ! எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ!

(அரை மணி நேரம் கழித்து, அந்த இளைஞன் ஒன்பதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு 'சாட்'டை முடிக்கிறான்.)

முடிச்சிட்டாங்களா! என்னது இவன் திருப்பி எதோ நோண்டுறான். ஓ.. என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வக்கப் போறானா.. எத்தனை மணிக்கு? அடப்பாவி உலகத்துலயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா! அதுவரைக்கும் 'பொண்டாட்டி' திருப்பி 'சாட்'டுக்கு வராம இருந்தா சரிதான்.

(காலை பதினொரு மணி..)

அட என்னமோ குறுகுறுங்குதே.. ஓ எதோ ரிமைண்டர் செட் பண்ணி வச்சிருக்கான்.

" இன்று திங்கள்கிழமை பல் தேய்க்க வேண்டும்."

அட நாத்தம் புடிச்சவனே! ரிமைண்டர் சிஸ்டத்தை கண்டுபிடிச்சவருக்கு இந்த விஷயம்
தெரிஞ்சா 'ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்'னு தன்னைத் தானே அடிச்சுக்குவான்.விட்டா 'பல் தேய்ச்சதுக்கப்புறம் வாய் கொப்பளிக்க வேண்டும்'னு கூட ரிமைண்டர் வைப்படா நீ! டேய் எவ்வளவு நேரம் தாண்டா கத்துறது. தொண்டை வலிக்குது.
எழுந்திரிச்சுத் தொலைடா. அடப்பாவி ரிமைண்டரை ஆப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே! அப்ப இன்னிக்கும் பல்லைத் தேய்க்க மாட்டான் போல!
டேய் நீ பல்லைத் தேய்க்க வேண்டாம்டா! எனக்கு சாப்பாடு போடு. பேட்டரில சார்ஜ் தீர்ந்துடுச்சு! சார்ஜர்ல போடுறா! இவன் காதுல எங்க விழப்போகுது. சோம்பேறி!

(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)

'நந்தவனத்தில் ஓர் ஆண்டி..'(ரிங்க்டோன் ஒலிக்கிறது)

அவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட் டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய! ரிங்டோனைப் பாரு. நந்தவனத்தில் ஆண்டியாம். டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க! அப்பாடா எழுந்திரிச்சிட்டான்.

"ஹலோ.. ஆங்.. குட் மார்னிங் சார்.. கண்டிப்பா.. இன்னிக்கு கண்டிப்பா முடிச்சிரலாம் சார்.. இல்ல சார்.. ஆமா கொஞ்சம் பிஸி தான்.. ஒரு மீட்டிங்ல இருக்கேன்.. ப்ளீஸ் அப்புறமா பேசலாம் சார். ஓ.கே"

தலையெழுத்து இவன் பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியிருக்கே! மணி பன்னிரெண்டு ஆக இன்னும் 5 செகண்டுதான் இருக்கு.
அலாரமா அலறக்கூட என் உடம்புல சக்தியே இல்ல! நீ தூங்கிக்கிட்டே இரு.
நானும் தூங்.........

(செல் ஸ்விட்ச் ஆப் ஆகிறது.)