Tuesday, June 13, 2006

உண்மையின் நிறம் என்ன?

'நாளைக்கு கார்த்தால எங்க வீட்டுல பூஜை வச்சுருக்கோம் கண்டிப்பா வந்துடும்மா' என்று சொன்ன பார்வதி ஆயாவைக் கவனிக்காமல், கூட வந்திருந்த ஆயாவின் கணவன் பாண்டியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். வெள்ளையும் சொள்ளையுமாக, மிகவும் நீட்டாக வந்திருந்தான். என் கண்களையே நம்பமுடியவில்லை.

என்னை கவனித்த ஆயா, 'இது யாருன்னு தெரீல?, என் புருசங்காரன் தான், இப்ப திருந்திடுச்சு' என்றாள்.

பார்வதி ஆயா எங்க வீட்டுக்கு வேலைக்கு வந்தப்போ மிகவும் மெலிந்து, எப்போதும் அழுக்காக தான் இருப்பாள்.

'ஏன் இப்படி வரீங்க வேலைக்கு, அழுக்க போக்கற வேலை,ஆனா நீங்க அழுக்கா வரீங்க '

'ஆமா அது ஒண்ணு தான் கொறச்சல்'

அவள் முகத்தில் எல்லவாற்றையும் கடந்து வந்து விட்ட ஒரு ஆயாசம் தெரிந்தது.

'ஏன் அப்படி சொல்றீங்க, ஆமா நான் கேக்க மறந்துட்டேன், உங்க பேர் என்ன?'

அந்த கேள்வி அவளை வியப்படையச் செய்தது, தன் பெயரையே மறந்துவிட்டது போல்,

'என் பேர கேக்கற மொத ஆள் நீ தான்மா, பார்வதின்னு பேர் தான் வச்சாங்க யார் கூப்பட்றாங்க?. என் புருசனுக்கு நான், ' நாயே,பேயே,சனியனே' தான். என் அப்பன்,ஆத்தா வச்ச பேரே எனக்கு சமயத்துல மறந்துடும். என்ன எல்லாரும் ஆயான்னு தான் கூப்புடுவாங்க'

'அட சும்மா அலட்டாதீங்க,சொல்லுங்க'

'என் பேரச் சொல்றேன், ஆனா இப்படி வாங்க போங்கன்னு கூப்டாத, என்னவோ போல இருக்கு'

வயதுக்கு ஏற்ற மரியாதையான வார்த்தைகளை இவர் கேட்டிருப்பார என்பதே சந்தேகம் தான். என்னை வற்புறுத்தி ஒருமையில் கூப்பிட வைத்தார்.

நினைவுகளில் இருந்து மீண்டு வந்த நான் ஆயாவைப் பார்த்து, 'ஆமா உன் புருசன் ரொம்ப தண்ணி அடிப்பாரு, காச புடுங்கிப்பாருன்னு சொன்ன, ஆனா இப்டி வெள்ளையும் சொள்ளையும.. , பாத்தா யாரும் நம்ப மாட்டாங்க' என்றேன்.

'அது இப்ப ஒரு மாசமா வீடு கட்றோமா, அதனால கொஞ்சம் புத்தி வந்து காசு சேக்க ஆரம்பிச்சிருச்சும்மா, என் பையன் நேத்து வந்து ஒரு 5000 ரூபாய் வீட்டுக்குன்னு குடுத்துட்டு போனான்'

'ஆமாம்மா, இப்ப நான் திருந்திட்டேன், நாளைக்கு பூஜைக்கு, அப்புறம் மத்த செலவுக்குன்னு ஒரு 2000 வேணும், அதான்....' என்று இழுத்தான் பாண்டி.

நான் பார்வதியைப் பார்த்தேன். தன் கணவன் பரமேஸ்வரனாகவே மாறி விட்டது போல பெருமிதத்துடன் நின்றிருந்தாள். ஆனால், அதே அழுக்கு புடவை, வாராத தலை, ஒரு நகையும் இல்லை.

என்னை கவனித்த பார்வதி, 'அம்மா, நகையெல்லாம் வீட்டுக்காக அடமானம் வச்சுட்டேன், நீ தான் கொஞ்சம் உதவணும்' என்றாள்.

'சரி நான் தரேன்' என்றேன். என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பூஜைக்கு வருமாறு அழைத்துவிட்டுச் சென்றனர்.

அடுத்த நாள், காலையில் வந்து நின்றாள் பார்வதி.

'என்ன நீ இங்க வந்துட்ட? இன்னிக்கு பூஜை இல்ல? உங்க வீட்டுக்கு தான் கிளம்பறேன்'

'இன்னிக்கு பூஜை இல்ல'

'ஏன்?'

'என் புருசன் ஏமாத்திட்டான்மா, என் பையன் கொடுத்த ரூபா, நீ கொடுத்தது எல்லாத்தையும் நேத்து ரேசு,சீட்டு இதுல விட்டுட்டு, நல்லா குடிச்சுட்டு வந்து, புது வீட்டுல பூஜை பண்ண வேண்டிய எடத்துல விழுந்து கெடக்குறான்மா' என்றாள் அழுகையுடன்.

என் மனதில், நேற்று வெள்ளையும் சொள்ளையுமாக பாண்டி வந்து போன நினைவுகள் நிழலாடின. அந்த வெண்மை என்னை ஏமாற்றிவிட்டது, என்னை மட்டுமல்ல, பார்வதியையும் தான். யார் சொன்னது உண்மைக்கு நிறம் வெண்மை என்று.? என்னைப் பொறுத்தவரை, உண்மை, பார்வதியின் அழுக்குத் தோற்றத்திலும், உழைப்பின் வியர்வையிலும் தான் உள்ளது. இனி பார்வதி ஏமாற மாட்டாள்.

17 comments:

Delhi_tamilan said...

Pavam, kudikaran pechu vidinja Pochunu solradhu unmaidhan pola iruku.... Really I pity all those wife who had to deal with Kudikara Purushan.......

Ram said...

Veda,
Gud naration. Ivanga yellam thirundhave maatanga. The day when the society accepts these parvathis when they divorce such husbands will be the Golden day for our society.

Seenu said...

Parvathi emara matangaloo illayeaooo...aanaa nenga enemel emara mattingannu nenaikerean....palaiyeaa kadhai, palaiyea kelvi enralum...putheyeaa pathil edhu....nanraga ullathu

Gopalan Ramasubbu said...

hmmm,kathai konjam sumar thaan.:)

ambi said...

is it an anectode or your story..? (or sutta pazhamaa?). usha (inimee) Ushaaraa irunga.

வேதா said...

@dt,
a real incident inspired me to write this story. i hope things change in future.
@ram,
thanks and u r rite. waiting for the golden day.
@seenu,
thanks seenu and actually naan yemarala:)
@gops,
hmm..,really. thanks for ur genuine comments and will try my best in future writings.
@ambi,
this is an anectode cum story. anectode is not mine but story is mine.

Bala.G said...

Nalla muyarchi. Keep writing.

unknown said...

nice one...

My days(Gops) said...

kudikaaran pechu, vidincha pochu'nu summma'va solli irrukaanga..

veluthadhu ellam paal'nu y 2 think.

smiley said...

vellai chattai pottu vitaal pala per easiyaga emanthu vidugirargal. naay valai nimitha mudiyuma , reminded me too of a few drunkards whom i met in my life :)

shree said...

"இனி பார்வதி ஏமாற மாட்டாள்" - i dont think so.

வேதா said...

@ammu and bala,
thanks.

@gops(md),
//veluthadhu ellam paal'nu y 2 think.//
athaiye thaan naanum solren.

@smiley,
yes, u r rite.

@shree,
pengal konjam vizhithu kondargal enru thaan naan ninaikiren.

Jeevan said...

Kudi Kudiyai Keadukkum, itha ippa ellarum unnarurangalo appathaan ella kudumbamum uruppudum. Nice:)

Balaji S Rajan said...

Very good. Excellent. I have come across characters like this. You have written it very well. Keep continuing. As someone had commented, unless the society changes, we cannot change all these. For example Parvathis should come forward to leave such men, and keep going forward. We have a very strange culture in sticking on to one person which makes men like this, to think that there is no one other than him for that woman. It is the sincerity of women, which helps such men to continue their attitude. Once women kick them, they will be alright. Whether they become alright or not, atleast such good women can have a peaceful life.

ashok said...

good attempt...keep them comming

வேதா said...

@balaji,
thanks for ur compliments. i think u rightly understood the concept of the story.
//Whether they become alright or not, atleast such good women can have a peaceful life. //
thats very true.

@ashok, jeev,
thanks yaar.

Usha said...

super kadhai veda, hope it isnt some real episode in ur life