Tuesday, July 04, 2006

இரு வேறு துருவங்கள்

நேற்று திருவள்ளூர் செல்வதற்காக நான், என் அம்மா, என் தம்பி, ஆகியோர் ரயிலில்
ஏறினோம். எங்கள் பின் சீட்டில் நான்கு இளைஞர்கள் பார்ப்பதர்க்கு கல்லூரி மாணவர்களைப் போலிருந்தனர். அது வரை அமைதியாயிருந்த இடம் ஒரே சத்தமயமாகியது. அவர்கள் பேசியதிலிருந்து சமீபத்தில் தான் படிப்பைப் முடித்தவர்கள் போலிருந்தது. அவரவர் தேர்வில் வைத்திருந்த அரியர் பத்தி மிகப் பெருமையாக பேசிக் கொண்டார்கள். பின் சத்தமாகப் பாட்டுப் பாட ஆரம்பித்தனர். எங்களுக்கோ பயங்கர தொல்லை, அவர்கள் பேசியது, கம்பார்ட்மெண்ட் முழுக்க கேட்டது. பிறகு திடீரென்று பேச்சு அவர்களுடைய பெண் நண்பர்கள் பற்றித் திரும்பியது. அது வரை சாதாரணமாக இளைஞர்கள் அடிக்கும் அரட்டையாக இருந்தது, நாராசமாக ஆயிற்று. தமிழில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சர்வ சாதாரணமாக உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.

எனக்கோ ரொம்ப தர்மசங்கடமான நிலைமை. நான் தனியாக இருந்தால் கூட பரவாயில்லை, என் அம்மாவும் கூட வந்திருந்தார். நான் கம்மென்றிருந்தால், இந்த நாராசத்தையெல்லாம் கேட்க நேரும் என்பதால், என் அம்மாவிடம் பேசிக் கொண்டே வந்தேன். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் வேறு வழியில்லாமல் இந்த பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த இளைஞர்களின் அம்மாக்கள் மட்டும் இவர்களுடைய பேச்சைக் கேட்டிருந்தால், ஒரு லிட்டர் பினாயில் வாங்கி அவர்கள் வாயில் ஊற்றிக் கழுவியிருப்பார்கள். நானும் மாணவியாக இருக்கும் கால்த்தில் பேருந்தில நிறைய லூட்டி அடிக்கும் மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட பொறுப்பில்லாத்தனம் மிக்க கூட்டத்தை இப்ப தான் பார்க்கிறேன். ஒரு பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்னும் அடிப்படை விஷயம் கூடத் தெரியாத மாணவர்கள் எப்படி ஒரு பொறுப்பான குடிமகனாக முடியும்?(குடிக்கும் மகனாகத் தான் ஆக முடியும்) இவர்கள் நாராசமானப் பேச்சை வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. பொறுப்பில்லாத்தனத்தின் உச்சக் கட்டமான இந்த இளைஞர்களைச் சகித்துக் கொண்ட எங்களுக்கு, திருவள்ளூர் சென்றுத் திரும்பும் போது, வேறு அனுபவம் கிட்டியது.

இந்த முறையும் ஒரு இளைஞர் கூட்டம், ஆனால் காலையில் வந்தவர்கள் போல் இல்லாமல், அவர்களுக்குள் அரட்டை அடித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் வந்தார்கள். சிறிது நேரம் கழித்து வந்த ஒரு ஸ்டேஷனில் இரு இளைஞர்கள் ஏறினர். அவர்கள் கையில் உண்டியலும், சில அச்சடித்த காகிதங்களும் இருந்தன, சரி ஏதோ நன்கொடைத் தான் கேட்க போகிறார்கள் என புரிந்துக் கொண்ட நம் மக்கள் அவர்களைக் கண்டுக் கொள்ளாமலும், தூங்குவது போலவும் ஆக்ட் குடுத்தார்கள். எனக்கு எப்பவுமே ஆர்வ கோளாறு கொஞ்சம் ஜாஸ்தி, அவர்கள் என்னத் தான் பண்ணப்போகிறார்கள் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்குள் கண் ஜாடைக் காட்டிக் கொண்டு அந்த ரயில் பெட்டியின் நடுவில் வந்து நின்று பேச ஆரம்பித்தார் ஒரு இளைஞர்.

அவர்கள் ஒரு மாணவர் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அனைவருக்கும் கல்வி, அதுவும் இலவச கல்வி என்ற கோட்பாடை ஆதரிக்கும் அந்த இயக்கத்தினர், பணம் வாங்கிக் கொண்டு சீட்டுகளை விற்கும் பள்ளிகள், கல்லூரிகள், அவற்றை பணத்துக்காக ஆதரிக்கும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இவர்களையெலாம் சரமாரியாகத் திட்டினர். எனக்கோ ஆச்சரியம், அதிர்ச்சி . ஆச்சரியம் என்னவென்றால், நமெக்கன்ன வந்தது என்றெண்ணாமல் சில நல்ல விஷயங்களை சமூக அக்கறையோடு எடுத்துச் சொல்லும் அந்த இளைஞர்ளைக் கண்டு. அதிர்ச்சி என்னவென்றால், சமூகத்தில் கல்வியாளர்கள் என்ற பெயரோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் பலரைப் பற்றி அவர்களுடைய உண்மையான முகத்தினைப் பற்றி கொஞ்சம் கூட பயமில்லாமல் அந்த இளைஞர் பேசிக் கொண்டிருந்தார்.

அது வரை பாடிக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் வந்த அந்த இளைஞர் பட்டாளமும், இந்த திடீர் பேச்சால் கவரப்பட்டு, அவர்கள் பேசி முடிக்கும் வரை அமைதி காத்து, பின் கை தட்டி வரவேற்றது. அந்த இயக்கம் சார்பாக நடத்தவிருக்கும் போராட்டத்திற்காக, நன்கொடையும் திரட்டினர். இப்படி ஒரே நாளில் எதிர்கால இந்தியாவின் இரு வேறு துருவங்களாக வாழப் போகும் இளைஞர்களைக் கண்டேன்.
21 comments:

நாகை சிவா said...

ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும், வாழ்வில் வெற்றி பெற துடிக்கும் அதற்காக கடினமாக உழைக்கும் இளைஞர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இவர்களை போன்ற சிலரும் உண்டு என்பது சிறிது வருத்தமான விசயம் தான்.

இப்ப நீங்களே பாருங்க, அந்த ஒரு சின்ன ரெயில் பயணத்தில் மூன்று விதமான இளைய சமுதாயத்தை பார்த்து உள்ளீர்கள். அதில் ஒன்று தான் மோசம். அவர்களும் திருந்தும் காலம் அல்லது வருத்தபடும் காலம் கண்டிப்பாக வரும்/

Ram said...

மாணவர்கள் மழுங்கிப்போவது மன்பதைக்குக் கேடு..!


PS:

மன்பதை = சமுதாயம் (இலக்கியத் தமிழ்)
Chumma oru 'mana' factor kkaga manpathai serthen :)

Shuba said...

Enna panrathu veda sila per ippadiyum iruppanga sila per appadiyum iruppanga ...solli thirutha mudiyaathu thaana thirunthinaathan aachu!( en compla tamil letters type seyya mudila so typing in eng!)

Jeevan said...

nattenudaiya munathrathuku padupadum sela ielainjerkal, nattai alivukku kondu sella padupadum sela ielainjerkal. ungalukku oru puthu anubavam indha rail payanathil kadithirumun endrun nabukeran.

barath said...

எப்பவும் சமூகத்ல ரெண்டு Extremeமும் இருக்கத்தான் செய்வாங்க,அந்த விகிதத்தை பொருத்துதான் அந்த சமுதாயத்தின் குணம் இருக்கும்.
இது ஒரு bad sign தான்.
காலைல அந்த புரட்சி இளைஞர்கள் வண்டில ஏறியிருந்தா இன்னும் இன்ட்ரஸ்டிங்கா இருந்திருக்கும்னு நெனைக்கறேன்.
trainல போனா இந்த மாதிரி நிறைய அனுபவம் சிக்கும்.
நல்ல பதிவு

Gopalan Ramasubbu said...

contradiction co-exist.

Good post Veda :)

My days(Gops) said...

@இப்படிப்பட்ட பொறுப்பில்லாத்தனம் மிக்க கூட்டத்தை இப்ப தான் பார்க்கிறேன்......
avanga pesunadhu thappu, adhuvum mathavanga'lukku ketkura maadhiri pesunadhu adha vida thapppu...
i do agree with u...

but,@எப்படி ஒரு பொறுப்பான குடிமகனாக முடியும்? solla'laama?
peoples attitudes changes at every stage....
college days'la college cut adichitu cinema'ku poravanga.,
velai'la join pannunadhu'ku appuram velai'a cut adichitu povaanga? no way...
so, thanakkunu vandhuta., ellamey பொறுப்பான'vangala aagiduvaanga..
ps:- oru sila per thirundhavey maataanga....andha oru sila per ivangalaa kooda irrukalam..who knws..

@மாணவர் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
ivanga seira sevai magathaanadhu.....

@நன்கொடையும் திரட்டினர்...
u see, naatuku'nu vandhuta nirai''a peru ,ippadi thaan ulaipaanga...gud gud..

@இரு வேறு துருவங்களாக வாழப் போகும் இளைஞர்களைக் கண்டேன்.
nalla soneenga...

btw, nice post veda....

ambi said...

Thatti thatti kondu pona yaraiyum nalla vazhikku kondu pogalaam.

many are kadavul paathi mirugam paathi thaan. we need to stimulate the kadavul part..

btw, y the lines, paragraphs are so conjusted..? also not aligned properly.reading the fonts is very difficult. enna Ms.thamizh,preview pakrathu illaiyaa?

better u change the template. (oru naalaiku 2 temp mathra Aalu aache nee?)

"Sun sirappu paarvaikaaga Ambathurlendhu Usha"nu lastla oru line add panni irukkalaam, :) ROTFL

வேதா said...

@ சிவா,
//அவர்களும் திருந்தும் காலம் அல்லது வருத்தபடும் காலம் கண்டிப்பாக வரும்//
அப்படி ஒரு நாள் வரவேண்டும் என நானும் நம்புகிறேன்.

@ராம்,
ஒரு புது வார்த்தையை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி:)

@சுபா,
ஏதோ திருந்தினா சரி :)

@ஜீவா,
உங்களைப் போல் பொறுப்புள்ள இளைஞர்களும் உள்ளனர்:)

வேதா said...

@பரத்,
//எப்பவும் சமூகத்ல ரெண்டு Extremeமும் இருக்கத்தான் செய்வாங்க,அந்த விகிதத்தை பொருத்துதான் அந்த சமுதாயத்தின் குணம் இருக்கும்.//
சரியாகச் சொன்னீர்கள்.
//trainல போனா இந்த மாதிரி நிறைய அனுபவம் சிக்கும்.//
அனுபவங்கள் தானே நமக்கு நல்ல ஆசிரியர்:)

@கோப்ஸ்,
நன்றி:)

@கோப்ஸ்(md),
//college days'la college cut adichitu cinema'ku poravanga.,
velai'la join pannunadhu'ku appuram velai'a cut adichitu povaanga?//
நான் கூடத் தான் காலேஜ் படிக்கும் பொது கிளாஸ் கட் பண்ணியிருக்கேன். நான் சொல்ல வந்தது, பொது இடத்தில் நாகரீகமாக நடந்துக் கொள்வது பத்தித் தான்.

//so, thanakkunu vandhuta., ellamey பொறுப்பான'vangala aagiduvaanga..//
மிக்க சரி, ஒத்துக் கொள்கிறேன்.

@அம்பி,
//btw, y the lines, paragraphs are so conjusted..? also not aligned properly.reading the fonts is very difficult. enna Ms.thamizh,preview pakrathu illaiyaa? //
அடப் பாவி, இப்பத் தான் என் ப்ளாக் ஏதோ பாக்கற மாதிரி இருக்குன்னு நினைத்தேன், இப்படிச் சொல்ற :(

//better u change the template. (oru naalaiku 2 temp mathra Aalu aache nee?)//
டெம்ப்ளேட் கூடிய சீக்கிரம் மாத்திடுவேன், கவலை வேண்டாம்.

//Sun sirappu paarvaikaaga Ambathurlendhu Usha"//
very bad try, siripey varala enaku,
appuram naan ambatturla irukkenu yaar sonna?

Syam said...

இரு துருவங்கள் இல்லனா நல்ல effect இருக்காது...நீங்க முதலில் பார்த்த gang ah பார்க்காம இருந்து இருந்தீங்கனா..இரண்டாவது பார்த்த மக்கள பத்தி இவ்வளவு நல்ல என்னம் வந்து இருக்காது :-)

மு.கார்த்திகேயன் said...

amanGa veda.. manitharil ellaa vithamum undu.. valter vetrivel padathula sathyaraj thambi mathiri amaithiya irunthu, yaarukkum theriyama mosama kariyam seiravanga romba paer..

ana neenga thiruvallore porappa..vantha pasangalai yaravathu angeye undu illainu akki irukkalam.. atleast next time avanga ithu maattanga illiya

Bala.G said...

che, naan comments adika nenachadhai ellam yerkanave adichutaanga :(...anyway it was nice to read

GeronimoThrust said...

Veda, Excellent post..First time her and that was the first post I read .. Well done and thanks for ducumenting this wonderful experience you had in teh train..Orae oru varutham ennanu sonna - teh lack of responsibility on your part.... Sometimes being silent when something goes wrong around you is also being a part of the Wrong-Doing..I wish you stepped out of our seat and walked over to the guys and told them to keep it down ..Ippadi ovvoru citizen-um start doing this, we would have a society that would be far better..If you happened to see this the next time, I wish you wouldn;t come back and say that "நான் கம்மென்றிருந்தால், இந்த நாராசத்தையெல்லாம் கேட்க நேரும் என்பதால், என் அம்மாவிடம் பேசிக் கொண்டே வந்தேன். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் வேறு வழியில்லாமல் இந்த பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்." I would rather love to see you saying "with me talking to those grown men, I made them realize that they are acting irresponsibly and they apologized".. Maybe I'm day dreaming here.. But I wish everyone of us stepped up to check these societal irregularities.. Lets be sure that I'm not making this call just to you.. But to all teh citizenry, irrespective of their gender..

Usha said...

good one, ore naal-la rendu type-um parthiruka...where do you think India is?

வேதா said...

@syam,
அப்படி எல்லாம் சொல்ல முடியாது, இரண்டாவதா நான் பாத்த இளைஞர்கள் எப்படி இருந்தாலும் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கியிருப்பாங்க:)

@கார்த்திக்&GeronimoThrus
நீங்க சொன்ன மாதிரி யாராவது அன்னிக்கு தட்டி கேட்டிருக்கணும்.
அந்த வேலை நானே செஞ்சிருக்கணும், உண்மையை சொல்லப் போனா, நான் அன்னிக்கு எங்க அம்மா கூட இருந்ததனால நான் கொஞ்சம் தயங்கினேன். ஆனா இப்படிச் சொல்லி நான் என் செயல்களை ஜஸ்டிஃபை பண்ண விரும்பல:) may i should have acted more responsibly. thanks.:)

@bala,
ipdi late-a vantha ipdi thaan:) anyway thanks.

@usha,
India iruka vendiya idathula thaani iruku:) jus kidding kochukatha:)

Bala.G said...

Veda, ippo thaan gavanichen.....alignment pattaya kelapudhu ;-)

Arjuna_Speaks said...

Veda - ungal postil intha post migavum arumai - mika nandraga ullathu..

I agree with u..If I was there in the bus - nadakira katheya vera - orai adi uthai kuduthu irupen - then they wuld have kept quiet!

I think all of u shuld have gone and bashed these guys up! Adiku adi - uthaiku uthai kuduthaa thaan ivanga thirunthuvaanga..

While the other guys - I appreciate them too :)

Overall - a very good post..

smiley said...

good post, makes me think?
why do people speak loud without manners and offend others too? were they lonely and needed/trying to attract some friends or show off? and the other group collecting money to help others? or did it go into their own pockets? sometimes i don't know how to judge people.

krk said...

Case-I: They are the ones who know what is right and what is wrong? They lack experience..so in few more years...they will propser in their life...At that time, they will realise what they did few years back...They have the qualities of becoming a leader

Case-II(a): These are the bunch of guys who lack individuality...They are good workers...may be slaves...who listen to others to get motivation...

Case-II(b): These are the guys who qualify to become motivational speakers...but are going to suffer diplomatic qualities to reach the goals...what they wish to acheive...

just a 2 paise thought in a managerial outlook...

வேதா said...

@bala,
dankspa:)

@arjun,
aha ungaluku kovam kooda varuma;)
romba tenson ayiteenga cool down:)

@smiley,
they were indeed showing off.
and bfore i donated money to the guy, i verified his credentials to show his id card where he studied and he also gave me the address and phone no.

@karthick,
managerial guruvey:)
caseii(a) and (b) yes i agree, but case(i)they will realise their wrongs ofcourse but i dont think they have quality of bcoming a leader.