Sunday, July 16, 2006

அப்தபூர்த்தி

சென்ற வருடம் ஒரு சுபயோக சுப தினத்தில் துவக்கப்பட்ட இந்த ப்ளாக் இன்று முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது. ஜூன் 2005இல் நாங்கள் இணையத் தொடர்பு பெற்றோம். முதலில் என் தம்பியைத் தவிர வேறு யாருக்கும் இதில் ஆர்வம் இல்லை. எனக்கும் தான், ஏனென்றால் சாட்டிங் செய்ய எனக்குப் பிடிக்காது, ஈ-மெயில் அனுப்பும் அளவுக்கு நண்பர்களும் கிடையாது. அப்பொழுது தான் ஹிந்து நாளிதழில் ப்ளாக் பற்றி ஒரு கட்டுரை வந்தது. அதைப் படித்தவுடன், ப்ளாக்கரில் நுழைந்து நிறைய பதிவுகளைப் படித்தேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன், தமிழில் ஒன்று, ஆங்கிலத்தில் ஒன்று.

என் தமிழ் ப்ளாக்கிற்கு மனம் - ஓர் உண்மை முகம் என்று ஏன் பெயர் வைத்தேன் என்று இன்று வரை புரியவில்லை. ஆங்கிலப் பதிவுக்கு என் இன்னொரு பெயரான வேதவல்லி என்பதைச் சுருக்கி வேதா என்று வைத்தேன்.

என் முதல் பதிவு அப்பொழுது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு
வழக்கைப் பற்றியது. என் முதல் பதிவுக்கு பின்னூட்டம் ஒரே நபர் ஒரு வெளிநாட்டவர்.

யாரும் பின்னூட்டம் இடவில்லையென்றாலும் என் ஆர்வம் காரணமாக அந்த மாதம் முழுவதும் தொடர்ந்து எழுதினேன். ஆர்வம் மிகவும் அதிகமாகிப் ப்ளாகரில் முழுகி முத்தெடுத்த எனக்கு ஜூலை மாதத்தின் தொலைப்பேசி பில் வச்சது ஆப்பு.

அதாவது நாங்கள் dataone connection குடுத்தப் போது ஆரம்பக் கால சலுகையாக, ஜுன் மாதம் முழுவதும் downloading free என்று சொன்னதை நான் ஜூலை மாதம் எனத் தவறாகப் புரிந்துக் கொண்டதால் வந்த வினை, அதுவும் எவ்வளவு தெரியுமா? இண்டெர்நெட்டுக்கு மட்டும் 1500 ரூபாய். ஆனால் அந்த பில்லை தனியாக அனுப்பி புண்ணியம் கட்டிக் கொண்டது bsnl. இன்று வரை என் அப்பாவுக்குத் தெரியாது, அப்போ பில் யார் கட்டினது யார்? வேறு யார்? இதுக்காகவே சம்பாதிக்கற என் தம்பி தான்:)

இதிலெல்லாம் மனம் தளராத நான்(ஆமா நாமளா பில் கட்டப் போறோம்?) மற்றவர்கள் பிளாக்கிற்கு நாம போனாத் தான், நம்ம ப்ளாகிற்கு யாராவது வருவாங்கன்னு புரிஞ்சது, பலன் முதல் முதலாக வெளி நாட்டில் வாழும் நம் நாட்டவர் kaps,balaji(இவர் திரு.நாராயணன் அவர்களின் ப்ளாக் மூலம் எனக்கு அறிமுகமானவர்) பின்னூட்டம் இட ஆரம்பித்தனர்.

இப்படியாக ஈ ஓட்டிக் கொண்டிருந்த என் ப்ளாகிற்கும் இந்த
பதிவைப் படித்து அதை தன் பதிவில் லிங்க் குடுத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார் ரவி(எல்லாம் எனக்கு ஒரு ஓசி விளம்பரம் தான்)

இதுற்கு பிறகு என் ப்ளாகிற்கு வரவு அதிகரித்தாலும் நிறைய forwarded mails பதிவா போட ஆரம்பிச்சேன். அப்புறம் அதுவும் போரடிச்சுப் போச்சு. நான் கல்லூரியில் படித்த போது எழுதின ஒரு
கவிதையையும், ப்ளாக் ஆரம்பித்த பின் எழுதிய ஒரு கவிதையையும்ஆங்கில ப்ளாகிலேயே பதிவு செய்தேன். அதன் பின் எல்லா கவிதைகளையும் என் தமிழ் ப்ளாகில் பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

அதன் பிறகு பொது விஷயங்களுடன் என்
அனுபவங்களையும் எழுத ஆரம்பித்தேன். கொஞ்ச நாட்களாக என் பதிவுகளைத் தமிழில் எழுத ஆரம்பித்துள்ளேன்.

ப்ளாக் மூலம் கிடைத்த நட்புகள்(என் ப்ளாகர்ரோல் லிஸ்ட்படி வரிசைப்படுத்துகிறேன்)

அம்பி : நகைச்சுவையாக எழுதுபவர்(நினைப்பு தான்). தற்போது சிஷ்யனால் 'அசினின் தம்பி 'என நாமகரணம் சூட்டப்பட்டு அதற்காக துக்க சமுத்திரத்தில் மூழ்கிக்கொண்டிருப்பவர்.

அம்மு : அருமையான கவிதைகள் எழுதுபவர். இவருடைய கவிதைகள் என்னைக் கவிதை எழுத தூண்டின எனக் கூறலாம்.

அஷோக் : இவர் ஒரு ஆர்க்கிடெக்சர். அப்கானிஸ்தானில் தைரியமாக வேலைச் செய்துக் கொண்டு தன் ப்ளாகில் கவிதைகள் எழுதி தள்ளுபவர்(ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் தான்)

அனாமிகா : என்னுடைய கசின், ப்ளாகரில் நான் தான் அறிமுகப்படுத்தினேன். தற்போது குடும்ப சாகரத்தில் முழுகி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறாள், அதனால் ரொம்ப எழுதவதில்லை(இவள் கணினியை ஆன் செய்தவுடன் இவளுடைய பையன்(9 மாதம்) வந்து அணைத்துவிடுவானாம்)

அர்ஜுன் : இவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், ஞானக்கிறுக்கன். விரைவில் திருமணம் என்பதால் தற்போது ப்ளாகில் கொஞ்சம் அடக்கி வாசிப்பவர்.(அண்ணே, எப்ப கல்யாணச் சாப்பாடு?)

பாலா : ப்ளாகில் புதிதாக நுழைந்திருப்பவர், பாண்டிசேரிக்காரர். சென்னை தமிழில் தடுமாறிய இவருக்கு எங்கள் பின்னூட்டங்களில் வாயிலாக இலவச ட்யூஷன் எல்லாம் எடுத்தோம். தற்போது இவர் தங்கியிருக்கும் நாட்டின் விழாவைப் பற்றியும், முக்கியமாக குட்டைப் பாவாடைகள் அணிந்த குட்டிகள் பற்றியும் எழுதி பிரபலமானவர்.

பாலாஜி : நான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் வந்து என் பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டவர். சமூக சிந்தனையுடன் எழுதுபவர்.

டெல்லி தமிழன் : லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து இது நாள் வரைக்கும் நான் எழுதியப் பதிவுகளுக்கு சளைக்காமல்(ஒரே நாளில்) பின்னூட்டம் போட்டவர். நல்ல கதை எழுதுவரும் கூட. கொஞ்ச நாளாக ஆளைக் காணவில்லை(லீவ் லெட்டர் வேற எழுதி வைத்துள்ளார்)

கீதா : தனக்கு வயதாகி விட்டதே என்று கொஞ்சம் கூட மனம் தளராமல் 'நான் சின்னப் பொண்ணு' எனக் கூறிக் கொண்டு சளைக்காமல் எழுதுபவர். இப்பொழுது கூட ஒரு ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

கோபாலன்: குருவை 'அசினின் தம்பி' எனக் கூறி குரு துரோகம் செய்தவர். ஆனாலும் கூட இந்த 'குரு சிஷ்யன்' கூட்டணி ரொம்ப கேடியான ஒரு கூட்டணி, சமயத்துல ஒருத்தர ஒருத்தர் கால வாரிக்கிட்டாலும், திடீர்னு குருவுடன் ஒன்னு சேர்ந்து நமக்கு ஆப்பு வச்சுடுவார் இவர்.

ஜீவன் : அன்புத் தம்பி ஜீவனின் ப்ளாகைப் படித்தால் போதும் நாட்டு நடப்பு அத்தனையும் தெரிந்து விடும். சமூக சிந்தனை மிக்க ஒரு இளைஞர்.

கார்த்திகேயன் : கனவு தேசத்தில் வாழ்பவர், அதுவும் அசினுடன். சமீபத்தில் நடந்த குரு துரோகத்தினால் மிகவும் மகிழ்ந்தவர். கீதாக்கா நடத்த இருக்கும் ஜல்லிக்கட்டில் என் தலைமையில்(என் தலை மேலே ஆடாம இருந்தா சரி தான்)அம்பியுடன் மோதப் போகிறவர்.

வைஷ்ணவ்: ஆங்கிலத்தில் கவிதை எழுதி கலக்குபவர். என்னுடைய கவிதைகளைத் தவறாமல் படித்து விமர்சிப்பவர்.

கார்த்திக் : இவருடைய கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. என் கவிதைகளை மிகவும் மனம் திறந்து பாராட்டுபவர்.

நாகை சிவா: அப்பப்ப வந்து ஆப்பு வைத்துவிட்டுப் போவார், சிட்டுக் குருவியையெல்லாம் வைத்து பதிவு போட்டு அதுக்கும் 100 பின்னூட்டங்களுக்கு மேலே வாங்குபவர்.

நெய்பர்: ரொம்ப நாட்களாக எழுதிக் கொண்டிருந்தவரைக் காணவில்லை. என்னுடைய கவிதைகளை ரசிப்பதோடு மட்டுமில்லாமல் பல முறை சண்டைப் போட்டிருக்கிறோம்(என் கவிதைகளில் அவரால் ஒத்துக் கொள்ள முடியாத கருத்துக்களை முன் வைத்து போடும் ஆராக்கியமான சிந்தனைச் சண்டைத் தான்)

ராம் :முதலில் இருந்தே என் பதிவுகளைப் படிப்பவர். இவரும் சமூக சிந்தனைக் கொண்ட பதிவுகளை எழுதியவர்.

ராஜு,பெளர்ணா: ஆரம்பத்தில் என் பளாகிற்கு வந்து பின்னூட்டம் போட்டவர்கள். இப்பொழுது அதிகம் வருவதில்லை.

ரவி : மாதா மாதம் ஒரு பதிவை தவறாமல் போட்டு விடுவார், அதுவும் இவருக்கு யாராவது ஞாபகப்படுத்துவார்கள். ஒரு பதிவென்றாலும் நச்சென்று எழுதுபவர்.

சச்சின் கோப்ஸ்: பேப்பர், பேனா, ரப்பர் என்று எது பற்றி வேண்டுமானாலும் எழுதுவார். இவரால் மட்டும் தான் இப்படியெல்லாம் எழுத முடியும் என எனக்குத் தோணும்:0 அடுத்து என்னவோ;)

ஷ்ரீ : என்னத்த சொல்ல? கொலு சீசனெல்லாம் முடிஞ்சப்புறம் தான் இவருக்கு கொலுப் பத்தி பதிவு போடணும்னு தோணும், இவரும் குடும்ப (இ)ஸ்திரி ஆகிவிட்டதால் ஒன்னும் சொல்றதுக்கில்ல:)

ஸ்மைலி: ரொம்ப நாளாகவே இவர் பெயரைப் பார்த்து ஒரு பெண் என்றே நினைத்தேன். அப்புறம் ஒரு பதிவுக்கு இவருடையப் பின்னூட்டதைப் பார்த்தவுடன் தான் என் தவறுப் புரிந்தது. இதை அவரிடமே சொன்னேன்(மனதில் என்னைத் திட்டியிருப்பார் என நினைக்கிறேன்)

சுபா: ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் என்ற ரீதியில் போட்டுத் தள்ளுபவர், முதல் போஸ்ட் படித்து பின்னூட்டம் கொடுப்பதற்குள் அடுத்த போஸ்ட் போட்டு அசத்துபவர். சமீப கால நண்பி.

லாஜிக் : இவர் எழுதும் கதைகள் எனக்குப் பிடிக்கும். என் கவிதைகளை மிக அழகாக விமர்சனம் பண்ணுபவர். கொஞ்ச நாட்களாக என் ப்ளாக் பக்கம் வரவில்லை:(

ச்யாம் : அன்பு தங்காச்சி எனக்காக அரங்கம் கட்டப் போவதாக சொல்லியிருக்கும் அருமை அண்ணாச்சி.(சீக்கிரம் முடிச்சிடுங்க அண்ணே, நம்ம மாநாட்ட கூட்ட வேண்டாமா?)

உஷா : அருமை நண்பி, கொடுமைகளின் உறைவிடம். தற்போது கையில் கொடுமைக் கதைகள் எதுவும் இல்லாததால், கொடுமைக்கே கொடுமையா? என்று சக ப்ளாகர்கள் எல்லோரும் இவருக்கு கொடுமைக் கதைகள் கிடைக்க வேண்டும் என வேண்ட ஆரம்பித்துவிட்டார்கள்:)

வத்சன் : இவர் தற்போது தீவிரமாக சமூக சிந்தனைகளில் மூழ்கி விட்டதால், அவர் ப்ளாகுக்கு இப்பொழுதெல்லாம் போவதில்லை(பின்ன நமக்கும் சமூக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்)

விஷி : இவரும் ரொம்ப நாளாக என் ப்ளாகிற்கு வருபவர். கொஞ்ச நாளா காணாம போயிட்டார்(ஏங்க உங்க ப்ளாக் தான் திடீர்னு காணாமப் போகும்னு பாத்தா நீங்களும் காணாம போய்ட்டீங்க?).இப்ப பேக் டூ பெவிலியன்:)

பி.கு: மேற்சொன்ன விஷயங்கள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், தயவு கூர்ந்து மன்னிக்கவும். யாராவது விட்டுப் போயிருந்தால், அவர்களும் மன்னிக்கவும்.

பி.கு.கு.: ஒரு ஆண்டு நிறைவு செய்ததிற்கே இவ்வளவு பில்டப்பா என நினைக்க வேண்டாம்.
நாளை என்ன நடக்கும் என யாமறியோம் பராபரமே. அதனால் இருக்கறவரைக்கும் நாமளும் சந்தோஷப் பட்டு மத்தவங்கள பத்தி நல்லதா(?) நாலு வார்த்தை சொல்லலாமேன்னு தான்:)

41 comments:

Arjuna_Speaks said...

Nanbmi Usha,
Muthalil ungaluku valthukal..Interestingly next saturday is my one year too :)..

Irandavuthu - thanks a lot for considering me as ur friend :) - I am honoured my friend :)

Mundravuthu - I am surprised to see that you remember everything in detail - I dont even know what I posted :D

Nalavuthu -
"ஈ-மெயில் அனுப்பும் அளவுக்கு நண்பர்களும் கிடையாது"

See how blogging has given u so many friends :) - I hope Orkut would do the same..

I wish you many more happy years to come :)..

நாகை சிவா said...

//நாகை சிவா: அப்பப்ப வந்து ஆப்பு வைத்துவிட்டுப் போவார், சிட்டுக் குருவியையெல்லாம் வைத்து பதிவு போட்டு அதுக்கும் 100 பின்னூட்டங்களுக்கு மேலே வாங்குபவர்.//
வேதா உங்களுக்கு வஞ்ச புகழ்ச்சி அணி நல்லா வருதுங்க. இதுவும் அந்த அணி தானே!

1 வருஷம் ஆச்சா. வாழ்த்துக்கள். நான் எல்லாம் இன்னும் தவழும் குழந்தை தான். ஒரு முனு மாசமாக ஏதோ எழுதிகிட்டு இருக்கேன்.

அது என்னங்க. பி.கு.கு - பின் குறிப்போ குறிப்பா. உங்கள நான் சங்கத்து பக்கம் பாத்தது கிடையாதே. அப்புறம் எப்படி இந்த பழக்கம் உங்களுக்கு :)))))))

நாகை சிவா said...

//மனம் - ஓர் உண்மை முகம்//
இதுல என்னங்க புரிய வேண்டியது இருக்கு.
மனம் - ஒரே உண்மை முகம் வச்சு இருந்தா இன்னும் சூப்பர இருந்து இருக்கும்.

//ப்ளாக் மூலம் கிடைத்த நட்புகள்//
இதுல நம்ம பெயரை சேர்த்துக்கு தாங்கஸ். ஆமா என்னையே வச்சு ஏதும் காமெடி பண்ணலியே. என்னா யாரையும் நம்ப முடியல.

ஏகப்பட்ட நபர்களை சொல்லி இருக்கிங்க. அதுல ஒரு சிலர தான் நமக்கு தெரியும். ஒவ்வொன்ன போயி பாப்போம்.

ஏது எப்படி இருந்தாலும், இந்த அரங்கம் மேட்டர விட மாட்டேங்க போல இருக்கு. பங்காளி ஏதாவது சொல்லி சமாளிப்பா....

நாகை சிவா said...

எங்க வேதா, வெற்றிகரமா இந்த ப்ளாக் உலகில் ஒரு வருடத்தை நிறைவு செய்து இருக்கீங்க. ஏதுவும் ட்ரீட் கிடையாதா....
சொல்லி அனப்புங்க, படை பரிவாரங்களுடம் வந்துறோம்.

நாகை சிவா said...

//பி.பி.கு : என் அடுத்த பதிவு இன்னொரு ஸ்பெஷல் பதிவு, அது என்னன்னு யோசிச்சிண்டு இருங்க, 16ஆம் தேதி நெக்ஸ்டு மீட் பண்றேன்.:)//
அந்த ஸ்பெஷல் இது தானா.
நல்ல ஸ்பெஷல் தான்.
மறுபடியும் வாழ்த்துக்கள்.

Gopalan Ramasubbu said...

//குருவை 'அசினின் தம்பி' எனக் கூறி குரு துரோகம் செய்தவர்//

அது குரு துரோகம் இல்லை வேதா. என் குரு அவருடைய Range தெரியாமல் அஸின் பின்னாடி சுத்திகிட்டு இருந்தாரு.அம்பியேல்லாம் Paris Hilton கூட Breakfast சாப்பிட்டு, அவ அசந்த நேரத்துல அசால்டா ஆஞ்சலீனா ஜீலிய பிக்கப்பன்ற தெறமசாலி. இப்படிப்பட்ட ஒருத்தரு எப்படி அஸின் பின்னால அலையாலாம்?அதுமட்டும் இல்லிங்,குருவே தமிழ்சினிமா நடிகை பின்னாடி அலைஞ்சா,அவரை நம்பி இருக்கும் கோடானுகோடி சிஷ்யர்கள் என்ன T.V நடிகை பின்னாலயா போறது ;)?அதுங்களே ஒவ்வொன்னா தூக்குமாட்டி செத்துகிட்டிருக்குதுங்க.இதையெல்லாம் யோசிச்சுதான் அம்பிய அஸினுக்கு தம்பி ஆக்கிவிட்டேன்.ஹி...ஹி

//சமயத்துல ஒருத்தர ஒருத்தர் கால வாரிக்கிட்டாலும், திடீர்னு குருவுடன் ஒன்னு சேர்ந்து நமக்கு ஆப்பு வச்சுடுவார் இவர்.//

நானும் எனது குருவும் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் ;)

ஒருவருடம் ஆச்சுங்களா?வாழ்த்துக்கள்.

krk said...

hehehhe..nalla Auto-biography....

Shuba said...

hey congragulations and celebrations!!gud gud..unga one year history pakka nalla irunthuchu...niryaa comment podanumnu vanden!!!anna inga gopalan ramasubbu comment paathuttu mini heart attack vanthadaala onnum elutha mudulaaa...ivangala kelvikekka aale illaya..intha guru syshyan lollo alavillama porathu!veda wat u say!...local fig vittutu ippo intnl kku dive adikkraaanga!!!mmm!

வேதா said...

@arjun,
//Interestingly next saturday is my one year too :)..//

advanced wishes :)
//See how blogging has given u so many friends :) - I hope Orkut would do the same..//
yeah thats true. but orkutla enne izhuthu vittu neenga escape:)

@சிவா,
//வேதா உங்களுக்கு வஞ்ச புகழ்ச்சி அணி நல்லா வருதுங்க//
சே சே அப்படி எல்லாம் இல்லப்பா:)

//உங்கள நான் சங்கத்து பக்கம் பாத்தது கிடையாதே. அப்புறம் எப்படி இந்த பழக்கம் உங்களுக்கு :))))))) //
அப்படியா இது என்ன சங்கத்துப் பாஷையா? அப்ப உங்க சங்கத்துல்ல சேருவதற்கான தகுதி எனக்கு இருக்கு:0


//ஆமா என்னையே வச்சு ஏதும் காமெடி பண்ணலியே. என்னா யாரையும் நம்ப முடியல.//
சீசீ.. காமடி பண்றதா இருந்தா நேரடித் தாக்குதல் தான், பதுங்கி தாக்கற பழக்கம் எங்க பரம்பரையிலேயே கிடையாது;)

//சொல்லி அனப்புங்க, படை பரிவாரங்களுடம் வந்துறோம். //
சரவண பவனுக்கு போன் பண்ணியாச்சு, இட்லியும் கெட்டிச் ச்ட்னியும் நேரா சூடானுக்கே பார்சல்:)
அப்புறம் பரிவாரங்கள் போதும் படையெல்லாம் எதுக்குங்க?, ஏற்கனவே ரொம்ப சொறியறீங்க:)

//மறுபடியும் வாழ்த்துக்கள்//
நன்றி:) அப்பாடி எம்மாம் நீள பி.பி(பின்னூட்டத்திற்கு பின்னூட்டம்:)

@கோப்ஸ்,
சும்மா சொல்லக்கூடாதுங்க நல்லா தான் சமாளிக்கறீங்க, சரியான சமாளிப்புத் திலகம். ஆனாலும் நடந்தது தான்:)
உங்க ரேஞ்சுக்கெல்லாம் அசினே ஜாஸ்தின்னு சொல்றேன், நீங்க என்னடான்னா அனுமார் மாதிரி கடல் கடந்து அங்க இருக்கற வெள்ளக்கார பொண்ணுங்கள பத்தி சொல்றீங்க இதெல்லாம் டூ மச், த்ரீ மச் கூட இல்ல, "1,2,3,4,5..................upto infinity much"(maths படிச்சது எப்படியெல்லாம் உதவுது):)

//நானும் எனது குருவும் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் ;)//
அதான் பாச மலர் ரேஞ்சுக்கு குருவுக்கு வக்காலத்து வாங்கற்துலேயே தெரியுதே:)

வாழ்த்துகளுக்கு நன்றி:)

@karthik,
thanks:)

barath said...

வாழ்த்துக்கள் Veda
:)

ambi said...

congrats veda, neenga thaane ennai vaazha vaitha theyvam! vallavar, nallavar(ennoda pastu postuke 4 comment potta Aalu aache!)

//நகைச்சுவையாக எழுதுபவர்(நினைப்பு தான்). //
lesula othukka maatengaleee!

@gops, shuba sonna mathiri Un comment padichu enakkum heart attack vanthuduchu pa! (pls yaraavathu Sssso che! che! thanni kondaanga pa!)
//அம்பியேல்லாம் Paris Hilton கூட Breakfast சாப்பிட்டு, அவ அசந்த நேரத்துல அசால்டா ஆஞ்சலீனா ஜீலிய பிக்கப் பன்ற தெறமசாலி.//
enna vechu marupadiyum comdey kimadi ethum pannaliyee?
//அவரை நம்பி இருக்கும் கோடானுகோடி சிஷ்யர்கள் என்ன T.V நடிகை பின்னாலயா போறது ;)?//
Ohh! athu thaanaa matter..?

//நானும் எனது குருவும் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் ;)//
pullaaaarikuthuuuuu shishyaaa..


//தனக்கு வயதாகி விட்டதே என்று கொஞ்சம் கூட மனம் தளராமல் 'நான் சின்னப் பொண்ணு' எனக் கூறிக் கொண்டு சளைக்காமல் எழுதுபவர்.//

enakku oru bottle honey kudichathu pola irukku.

My days(Gops) said...

ungal oru aaandu sevai melum thodarvadharku,(friend'ku) en vaaalthukal...
unga ella post'aium nyabagam vaithu, adhuku vandha comment pathi ellam nalla eludhi irrukeenga...gud gud....

i thought july 16th is ur b'day nu..but, unga blog b'day'va poiduthu.....eppadi irrundha enna...indha blog ungalai serndhadhu thaaaney?..
he he he.......

thanks....
cheers.....

My days(Gops) said...

@shuba:-
//ivangala kelvikekka aale illaya//
naan irrukum bodhu ippadi...?
aiyo vendam.....
neengaley kettukonga..

Syam said...

பாசமலரேரேரேரேரே.....வாழ்த்துக்கள்...அரங்கம் கட்டுரத பத்தி இந்த அண்ணன மட்டும் சொன்னா காசு கொடுக்கும் சிவா அண்ணன் கோவிச்சுக்க மாட்டாரா...

//பதுங்கி தாக்கற பழக்கம் எங்க பரம்பரையிலேயே கிடையாது;)//

ஐயே என்னம்மா இது கேப்பு கிடைக்கும் போது ஆப்பு வெச்சுரனும்..அது தான் சங்கத்துல சொல்லி குடுத்தது...என்ன பங்காளி நான் சொல்லறது சரி தான :-)

Syam said...

//அம்பியேல்லாம் Paris Hilton கூட Breakfast சாப்பிட்டு, அவ அசந்த நேரத்துல அசால்டா ஆஞ்சலீனா ஜீலிய பிக்கப்பன்ற தெறமசாலி//

@GR, குரு பக்தி இருக்கறது தான் ஆனா இது என்னமோ மறுபடியும் குருவையே போட்டு பார்கற மாதிரி தெறியுது... :-)

Jeevan said...

Veda - Namba erandu parukkum oru otrumai, I also came to know about blog through Hindu Newspaper. Thanks for specify me in this time, dear sister. By bless for your blog, keep on coming, lets share:) Vedhavalli, Soundhra name in Arunachalam, Very nice name.

நாகை சிவா said...

//அப்படியா இது என்ன சங்கத்துப் பாஷையா? அப்ப உங்க சங்கத்துல்ல சேருவதற்கான தகுதி எனக்கு இருக்கு//
இது மட்டும் பத்தாது, இன்னும் நிறைய டெவல்ப் பண்ணனும். நம்ம சங்கத்து தான் டா ஒரு தடவை வந்து பாருங்க. அதுவும் இப்ப வந்து பாருங்க, பட்டய கிளப்பிக்கிட்டு இருக்கோம்.

//சரவண பவனுக்கு போன் பண்ணியாச்சு, இட்லியும் கெட்டிச் ச்ட்னியும் நேரா சூடானுக்கே பார்சல்//
அத எல்லாம் ஞாபகப்படுத்தாதீங்க, அத எல்லாம் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மறந்துக்கிட்டு இருக்கேன்.

//"(maths படிச்சது எப்படியெல்லாம் உதவுது):)//
அப்படியா! எனக்கும் இன்னும் சந்தேகமா தான் இருக்கு.

@ அம்பி, உன்னும் சொல்லுரதுக்கு இல்ல. நடத்து நடத்து...அம்புட்டு தான் சொல்ல முடியும்.//பதுங்கி தாக்கற பழக்கம் எங்க பரம்பரையிலேயே கிடையாது;)//
அத புரொபைல் புலி படம் வச்சு இருக்க, என்கிட்ட சொல்லுறீங்க, அதான் பெரிய காமெடியே;)

Bala.G said...

Conratulations!!

Thanx for the free publicity ;-)

வேதா said...

@shuba,
//ivangala kelvikekka aale illaya..intha guru syshyan lollo alavillama porathu!veda wat u say//
நீ சொல்றது கரெக்ட் தான்பா, இவங்க லொள்ளு சபா ரேஞ்சுக்கு அலட்டறாங்க. ஒரு நாள் இருக்கு இவங்களுக்கு ஆப்பு, அதுவும் நாம ஒன்னு சேர்ந்தா முடியும், என்ன சொல்ற? நம்ம உஷா,அம்மு ஏன் கீதாக்கா கூட சேர்த்துக்கலாம்:)

வாழ்த்துகளுக்கு நன்றி:)

@பரத்,
நன்றி:)

@அம்பி,
//congrats veda, neenga thaane ennai vaazha vaitha theyvam! vallavar, nallavar(ennoda pastu postuke 4 comment potta Aalu aache!)//
ஏதோ அது வரைக்கும் நன்றியோட இருந்தா சரி. முதல் போஸ்டுல போய் பாத்தா தான் தெரியும், நான் ஏன் 4 கமெண்ட் போட்டேன்னு:)

//Sssso che! che! thanni kondaanga pa!)//
என்னது என்ன சொல்ல வந்தீங்க? அது அந்த பயம் இருக்கட்டும்:)

//enna vechu marupadiyum comdey kimadi ethum pannaliyee?//
நல்லா தான்பா நடிக்கறீங்க குருவும் சிஷ்யனும். இதப் படிச்சப்புறம் எனக்கு தான் நெஞ்சடைக்குது, யாராவது தண்ணி கொண்டு வாங்கப்பா:)

நானே கீதாக்கா இந்த பதிவ படிச்சப்புறம் என்ன ஆகுமோன்னு டென்சன்ல இருக்கேன், நீங்க வேற ஏத்தி உடறீங்களா? ஜல்லிக்கட்டை வேற என் தலைமேல தான் நடத்தப் போறாங்களாம்:(

@சச்சின்,
நன்றிப்பா:) அதுக்குள்ள அடுத்த போஸ்ட் வேற போட்டுட்டிங்க, இனிமே தான் படிக்கணும்:)

@ச்யாம்,
காசு பிரச்னையெல்லாம் உங்களுக்குள்ளே தீர்த்துக்கணும் என்ன இழுக்க கூடாது.:) கொளுத்திப் போட்டது யாரு, சிவா தான? அவரையே கேளுங்க:)

ஏதோ, சங்கத்து பழக்க வழக்கங்கள் எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்தா சரி தான், இனிமே எல்லோருக்கும் 'கேப்புல ஆப்பு':)

@ஜீவா,
நான் உன் பேர சொல்லிக்கிட்டே இங்க பின்னூட்டம் போட்றேன். இத்தன நேரமா ப்ளாக் ஓப்பன் ஆகாம அப்புறம் நீ சொன்னது போல் பண்ணினேன். நன்றி:)

@சிவா,
சங்கத்துப் பக்கம் தானே, அப்பப்ப வந்து எட்டிப் பாத்துக்கிட்டு இருக்கேன்:)

//அப்படியா! எனக்கும் இன்னும் சந்தேகமா தான் இருக்கு.//
என்ன சந்தேகம் இதுல?

//அத புரொபைல் புலி படம் வச்சு இருக்க, என்கிட்ட சொல்லுறீங்க, அதான் பெரிய காமெடியே;)
அது சரி, நீங்க பதுங்கற்தே பாயற்துக்கு தானே:)

Ravi said...

Veda, vazhthukkal again! Adhuvum ennai patri indha post-il kuripittamaikkai Nandri - I truly really feel honoured. As you know, en blog visitors konjam paer dhaan but andha ella regular visitors-um romba naal nalla pazhagina friends maadhiri thonum. Thanks again!

Ungal blog-ai thavaraamal update seidhu (kurippaga Tamizhil) en pondra saga bloggers-ai maghivikkavum.

Ram said...

//என் இன்னொரு பெயரான வேதவல்லி என்பதைச் சுருக்கி வேதா என்று வைத்தேன்.//

வேதவல்லி - Yenakku therinthavarai, valli kku intha 'ல்' varathu. intha 'ள்' thaan varum...yethukkum confirm pannikonga...Yennada, ivan oottai sollite irukkane nnu nenaikaatheenga...Unga peru athu ngrathunala solren...

Congrats on அப்தபூர்த்தி.!

வேதா said...

@ravi,
thanks ravi and am so happy to have friends like u. keep visiting.:)
//Ungal blog-ai thavaraamal update seidhu (kurippaga Tamizhil) en pondra saga bloggers-ai maghivikkavum//
same request to you too:)

@ram,
வேதவல்லி வேறு, வள்ளி வேறு. வள்ளி என்பது முருகனின் மனைவியைக் குறிக்கும் பெயர். வேதவல்லி, அமுதவல்லி, சுதாவல்லி போன்றவை தாயாரைக் குறிக்கும்(ஒரு வைணவப் பெயர்)

Ram said...

@Veda - Good , Good....I learnt something new.Thanks for the explanation.

மு.கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கள் வேதா.. ஒரு வருஷம் என்பது சாதாரணமான விஷயமா.. தங்கள் நட்பு வட்டதில் நானும் இருப்பது கண்டு மிகவும் மகிழ்வுற்றேன். எப்போ ஜல்லிக்கட்டு? அம்பியை போட்டுத்தள்ள தினமும் ரெண்டு டம்ளர் பாலும், நாலு முட்டையும் உள்ளார இறக்குறேன்..

பிளாக்கில் தங்கள் பணி மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Keshi said...

tnxx Veda for droppin by :)

Keshi.

vishy said...

Apthapoorthi na enna?? One year completion aah?? Ellarayum nalla dscribe pannitinga.. and yeah.. neenga sonna mari.. I am back to the pavilion... see the next post.

வேதா said...

@ராம்,
தங்கள் நன்றிக்கு நன்றி:)

@கார்த்திக் முத்துராஜன்,
//எப்போ ஜல்லிக்கட்டு? அம்பியை போட்டுத்தள்ள தினமும் ரெண்டு டம்ளர் பாலும், நாலு முட்டையும் உள்ளார இறக்குறேன்..//
ஆஹா, ஒரு கொலைவெறியோட தான் திரியிரீங்கப்பா:) ஏதோ என் தலை தப்பிச்சா சரி தான்:)

ஜல்லிக்கட்டு எப்போ? எங்கே? என்பது எல்லாம் நம்ம 'சின்னப் பொண்ணு ' கீதாக்கா தான் முடிவு பண்ணனும்

//பிளாக்கில் தங்கள் பணி மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். //
நன்றி:)

@keshi,
welcome and thanks.

@விஷி,
அப்தபூர்த்தி என்றால் முதல் ஆண்டு நிறைவு, புது போஸ்ட் போட்டாச்சா? இதோ வந்துட்டேன்:)

கீதா சாம்பசிவம் said...

Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.
வேதா, இது அடுக்கவே அடுக்காது. இதுக்காகவா வருந்தி வருந்திக் கூப்பிடறீங்க? இருக்கட்டும், யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும். நான் என்னைக்குமே சின்னப் பொண்ணுதான். வேணும்னா எங்க சங்கத் தலைவர் திரு கைப்புள்ளயைக் கேளுங்க. அவர் கிட்டேவே நிரூபிச்சிருக்கேனாக்கும். இதுக்கு அம்பி, நாகை சிவா, கார்த்திகேயன் எல்லாரும் உடந்தையா? Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

கீதா சாம்பசிவம் said...

வேதா, மூணு நாளா வேலை அதிகமா இருந்தது. தவிர இணைய இணைப்பும் சரியில்லை, அதான் பதிவுக்கே வர முடியலை. சாரி. இனிமேல் சரியாகும்னு நினைக்கிறேன்.

கீதா சாம்பசிவம் said...

அம்பி,
அசினுக்குத் தம்பி, இப்படியா பச்சைத் துரோகம் பண்ணறது? இதுக்காக வேலை மெனெக்கெட்டு எனக்கு ஒரு மெயில் கொடுத்து,
நல்லா வேணும் எனக்கு. அந்த மெயில் பார்த்துட்டு இங்கே வந்தேன், எங்கே போய் முட்டிக் கொள்ள? அசினுக்குத் தம்பி கூட இல்லை, தாத்தானு கோபாலன் ராமசுப்பு கிட்டேச் சொல்லிடறேன். You too Brutus?

கீதா சாம்பசிவம் said...

முதலாம் ஆண்டுப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேதா.

வேதா said...

@கீதா,
//அசினுக்குத் தம்பி கூட இல்லை, தாத்தானு கோபாலன் ராமசுப்பு கிட்டேச் சொல்லிடறேன். You too Brutus? //
நல்லா சொன்னீங்க:)

//முதலாம் ஆண்டுப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேதா. //
ரொம்ப நன்றி, ஏதோ உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம்:)

// நான் என்னைக்குமே சின்னப் பொண்ணுதான்//
அதெப்படிங்க சளைக்காம பொய்ய திருப்பி திருப்பி சொல்றீங்க:)

நாகை சிவா said...

கீதாக்கா, இந்த பஞ்சாயத்துல என்ன இழுக்காதீங்க. நான் உங்கள பத்தி ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. ஆமாம் சொல்லிட்டேன்.

//அதெப்படிங்க சளைக்காம பொய்ய திருப்பி திருப்பி சொல்றீங்க:) //
அப்படியா, நீங்க திருப்பி திருப்பியா சொல்லுறீங்க....

Ram said...

Veda,
Congrats on completing one year. BTW Anniversary sollitu edhaavathu settings change panniteengala blogle,am not able to view this properly in Mozilla, anyways IE is there...

Sundar Narayanan said...

keep on posting.

:)

vaazhthukkal.

வேதா said...

@சிவா,
//அப்படியா, நீங்க திருப்பி திருப்பியா சொல்லுறீங்க.... //
அய்யோ உங்க மொக்கை தாங்க முடியலயே இதுக்கு கொசுத் தொல்லையே தேவலை, அதுக்கு கூட கவிதையெல்லாம் எழுதறாங்க

@ராம்,
thanks a lot and u can view my tamil fonts in ie.

@சுந்தர்,
நன்றி, ரொம்ப நாள் கழித்து வந்தாலும் சரியான நேரத்துக்கு வந்தீர்கள்:)

நாகை சிவா said...

//@சுந்தர்,
நன்றி, ரொம்ப நாள் கழித்து வந்தாலும் சரியான நேரத்துக்கு வந்தீர்கள்:) //
அவரும் நம்ம சூப்பர் ஸ்டார் ரசிகர்னு நினைக்கிறேன்.

//கொசுத் தொல்லையே தேவலை, அதுக்கு கூட கவிதையெல்லாம் எழுதறாங்க//
யாருங்க அது, கவிதை எழுதும் நல்லவரு.

Usha said...

hey veda, en arumai nanbiye..sirika vachutta ennai pathi ezhudina lines-la :)) thanks da :)good post

வேதா said...

@siva,
அதானே யார் அந்த கவுஜ எழுதும் நல்லவரு?

@உஷா,
என்னம்மா, என்ன ஆச்சு, நீ ப்ளாக் பக்கமே வரலன்னு நாங்க எல்லோரும் சோகமா இருக்கோம், நீ வந்து சிரிச்சுட்டு போறீயா?

Delhi_tamilan said...

vanakkam, ennai yapagam iruka, Konjam serious-ah office work poitu iruku adhan blog update panna mudiyala, analum appa appa sila blog-ah mattum padipen, adhil idhuvum onru, (kalarai thooki vitukongo!)... ennai patri ingae padithen, mikka magilchi.. mikka nandri... viraivil varuven...

வேதா said...

@dt,
ஆஹா, வந்துட்டீரா? அப்பப்ப என் ப்ளாக படிக்கறீங்களா? ரொம்ப நன்றி. ஆபிஸ்ல வேலை செய்ற பழக்கம் எல்லாம் உண்டா?:)