Thursday, July 27, 2006

ஆறு மனமே ஆறு

அம்பியை அசினுக்குத் தம்பியாக்கி அகில உலகப் புகழடைந்து, தற்போது அம்பிக்கு தங்கையாக ஆஞ்சலினாவை டிக்ளேர் செய்யலாமா? என ஆழ்ந்து ஆராய்ந்துக் கொண்டிருக்கும் அருமை நண்பர் கோபாலன் மிகவும் அடக்கத்துடன்(!) கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பதிவு.


ஆறு கேள்விகள்

1. கொளுத்தும் வெயிலில் கச்சேரி செய்யும்போது கூட எப்படி இவர்களால் பட்டுப் புடவையும்(அதுவும் புடவை முழுக்க சரிகையோடு கிப்ட் பேப்பர் மாதிரி), கழுத்து தொங்கிவிடும் அளவிற்கு கனமான நகைகளும் போட்டுக் கொண்டு கச்சேரி செய்ய முடிகிறது? காட்டன் புடவையும், எளிமையான அலங்காரமும் கூடாதா என்ன?


2. 'உம்' 'அப்புறம்' 'நீ தான் சொல்லணும்' 'அய்யோ நான் மாட்டேன்பா' இப்படி ஸ்டாண்டர்ட் டயலாக்குளையே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாறி மாறி இந்த காதலர்களும், வுட்பி காதலர்களும் மாத்தி மாத்தி எத்தனை நாளைக்கு சொ(ஜொ)ல்லிக்கிட்டே இருப்பாங்க?


3.யார் யாரை பழிவாங்கறாங்க?, யார் யாரோட ஓடிப் போறாங்க?, எவருக்கு ரெண்டு பொண்டாட்டி?,அந்த ரெண்டாவது பொண்டாடிக்கு பிறந்த குழந்தை யாரோடது? இப்படி தான் எல்லா சீரியலும் இருக்கு. அதுவும் வாரத்துக்கு ஒரு முறை பார்த்தாலே கதை புரிஞ்சுடும். இந்த கண்றாவியெல்லாம் எப்படி நம்ம மக்கள் தினமும் பாக்கறாங்க?


4.ஒரு நாளைக்கு எத்தனை பேரு ஆக்சிடெண்டில் தலைகவசம் அணியாததால் பலியாகிறார்கள் என்று என்னத் தான் தொண்டைத் தண்ணி வத்த கத்தினாலும் சரி, விளம்பரங்கள் கொடுத்தாலும் சரி, எனக்கு என் தலையை விட என் தலைமுடி தான் முக்கியம் எனக் கூறி ஹெல்மட் அணியாமல் செல்பவர்களை என்ன செய்வது?


5.'அந்த பொண்ணு கறுப்பா இருந்தாலும் களையாக இருப்பாள்'. இது நான் அடிக்கடி கேள்விப்படுகிற ஒரு வாசகம். அதென்ன கறுப்பாக இருந்தாலும்? கறுப்பு என்றால் களையாக இருக்க கூடாதா? இல்லை களையாக இருப்பவர்கள் எல்லாம் சிவப்பானவர்களாகத் தான் இருக்க வேண்டுமா? (உண்மையைச் சொல்லப் போனால் என்னையறியாமல் நானே சிலரை வர்ணிக்க இப்படி சொல்லியிருக்கிறேன். இதை தற்போது தவிர்த்து வருகிறேன்)


6. நம் சினிமாக்களில் ஏன் ஒரு கதாநாயகி திருமணமானவுடன் கதாநாயகி பதிவியிலிருந்து ஒதுக்கப்படுகிறார்?(சில விதிவிலக்குகள் உண்டு) ஆனால் கதாநாயகர்கள் வயசாகி தாத்தா ஆனா கூட கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.


எனக்கு பிடித்த ஆறு பேர்.(இதில் எந்த விதமான வரிசைப்படுத்தலும் இல்லை. எல்லாரையும் சமமாகப் பிடிக்கும்)


1.இளையராஜா

இவர் இசையின் ராஜா. படித்தவர் முதல் பாமரர் வரை இவருக்கு ரசிகர்கள் உண்டு. இன்றும் இசையுலகில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருப்பவர். இவருடைய பாடல்கள் அருமை என்றால் என்னைப் பொறுத்தவரைக்கும் அருமையோ அருமை இவருடைய குரல். இவர் பாடிய பாடல்களில் என்னைக் கவர்ந்தவை,

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ - தாய் மூகாம்பிகை
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட - மெட்டி
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல - அவதாரம்.2. சுஜாதா

நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் எல்லா விதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்துபவர். இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறும், அதே சமயத்தில் ஆழ்வார்கள் , சிலப்பதிகாரம், பிரம்ம சூத்திரம் இவற்றைப் பற்றியும் எழுதுபவர். எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுத தெரிந்தவர். இவர் எழுதிய 'எப்பொழுதும் பெண்' என்ற நாவலைப் படிக்கும் போது, எப்படி ஒரு ஆணாக இருந்து இவரால் இப்படி எழுத முடிந்தது என நான் வியந்ததுண்டு.3.வாஸந்தி : இவரும் ஒரு எழுத்தாளர். இவருடைய எழுத்துக்களை கடந்த ஒரு வருடமாகத் தான் படிக்க ஆரம்பித்தேன். சமூக சிந்தனை மிக்க கதைகளை எழுதுபவர். இவர் கதைகள் பெரும்பாலும் பெண்ணியம் பற்றித் தான் இருக்கும். மொத்தத்தில் என்னை யோசிக்க வைக்கும் எழுத்துக்கள் இவருடையது. இவருடைய எழுத்துக்களில் பிடித்தது 'வேர்களைத் தேடி', 'யுகசந்தி' என்று சொல்லிக்கொண்டே போகலாம்.4.ஜெயலலிதா

இவருடைய எல்லா அரசியல் கருத்துக்களையும் ஒத்துக் கொள்ளமுடியாவிட்டாலும், இவருடைய கட்சித் தொண்டர்களை அடிமைகள் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாவிட்டாலும், இந்த பாழாய்போன அரசியலில் பழம் தின்னு கொட்டைப் போட்ட அரசியல்வாதிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இவருடைய தைரியம் ஒன்று தான் என்னைக் கவர்ந்தது.5. பாரதியார்

இவரைப் பிடிக்காதவரும் படிக்காதவரும் எவரும் இல்லை என்பதே என் கருத்து. இவருடைய எல்லா பாடல்களையும் படித்து கரைத்து குடித்துவிட்டேன் என்று பொய் எல்லாம் சொல்லப்போவதில்லை. என்னுடைய கடினமான நேரங்களில் நான் துணைக்கழைப்பது பாரதியின் 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லேயே' என்ற வரிகள் தான்.6.கமல்ஹாசன்
இவரைப் பற்றி எழுத ஆரம்பித்தால் இந்த பதிவு பத்தாது. ஆரம்ப காலத்தில் எல்லா தமிழ் பட ஹீரோக்கள் மாதிரி மரத்தைச் சுத்தி டூயட் ஆடி பாடிக்கிட்டு இருந்தவர், ஆனால் பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்களின் படங்களின் மூலம் ஒரு தனித்துவத்தை அடைந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் நடித்ததில் பிடித்தது, அன்பே சிவம், ஹேராம், மகாநதி, நிழல் நிஜமாகிறது..................................நீளமான லிஸ்ட்

29 comments:

கீதா சாம்பசிவம் said...

வேதா,
அப்பாடி, முதலில் வந்துட்டேன், இந்தத்தரம், நீங்க கூப்பிடறதுக்குள்ளே, உண்மையில் மிகுந்த கவனத்துடன் எழுதப்பட்ட பதிவு, விமரிசனம் என்று சொல்வதே சரி.

The last adam said...

Hi Veda,

almost all the questions are quite justified and all those people in your favourites are also my favourites..there's a distinct waft of sujatha in your writings..is that conscious?

Shuba said...

1)sudha ragunathan patta kekkravangala vida avanga dressing sense pathithan niraya pathrikkai vimarsanam seyyyuthu..further reasons naan nerla solren!

2)addaa!ippdi opportunity kidailla kidacha def no vetti arattai!

3)seriala paathu ithellam thapppu illanu makkal namba raanga!

4)when i drive two wheeler helmet is a must!!!and in office also anyone who drives two wheeler shd show helmet!!!and wear it!HR Policy!

Dark peoples features get highlightened..namma rajini,vishal...etc!!!radhaa....sarita!!!!vera sila eg personalaa solren!

6)kr vijaya was a vithi vilakku!yaa i too wonder y its like this!!!

piditha 6 perlaa...kamal thavar ellarum romba pudikkum esp Jayalalithaaa!!!!!sujaatha s ardent fan1!!

ambi said...

As all qstns were answered by shuba, no questions your honor!nice post. :)
btw, who is asin? and who is anjelina..? shishya, any idea? LOL :)

Balaji S Rajan said...

I do not know how the list has been prepared according to my wish too. All the 6 you have mentioned goes the same according to my taste. Regarding J you have expressed exactly what everyone would like with her. You are shaping up to be a good journalist. Keep it up. BTW when I was in Chennai, I wanted visit your house. Unfortunately I did not have time. But I saw some one in GRT just like you and was about to ask her name. Fearing for shame, kept quiet.

Jeevan said...

Well Writen.

Serials are very bore, now my favorite programs have gone to my unsutable times, because of new serial Lakshmi:(, who ask the film actres to come to small screen. If the person have brain in his head, sure he will wear the helmet. i too like Sujatha, he has answers for every thing, used to read his writing in tamil magazin Kumudham. When i visit Theakadi in may, we pass through Ilaiyaraja's village.

Syam said...

சரி புளியோதரை கீதாக்கு தான்...மறக்காம அனுப்பிடுங்க..


சகோதரியே உன் ஆறு கேள்விகளும் அருமை..அந்த ஆறு நபர்களும் எனக்கு பிடிக்கும்..ஜெஜே க்கு நீங்க சொன்னது மிக சரி..யாராக இருந்தாலும் தவறு செய்தால் ஓட்டுக்களை பத்தி கவலை படாமல் அந்த அம்மா எடுக்கும் தைரியமான முடிவுகள் எனக்கு பிடிக்கும்...:-)

Gopalan Ramasubbu said...

அடங்கப்பா, நானெல்லாம் சுதா ரங்கநாதனோ இல்ல வேற பெண்கள் கச்சேரியெல்லாம் கேட்கும் போது அவுங்க பாடரதுல மட்டும் தான் கவனம் இருக்கும்.அவுங்களோட உடை அலங்காரத்தையெல்லாம் கவனிச்சதே இல்ல. அவுங்க உட்கார்ந்து கச்சேரி செய்யும் மேடைல AC or Air cooler இருக்கும். நீங்க புடவை, நகை எல்லாம் பார்க்காம, பாட்டைமட்டும் கவனிங்க ;)

//அதென்ன கறுப்பாக இருந்தாலும்? கறுப்பு என்றால் களையாக இருக்க கூடாதா? இல்லை களையாக இருப்பவர்கள் எல்லாம் சிவப்பானவர்களாகத் தான் இருக்க வேண்டுமா?//

இங்க வெள்ளைகாரனெல்லாம் நம்ம கலரைப்பார்த்து பொறாமை படரான், என்னத்த சொல்றது?greener postures.


வாசந்தி அவர்களின் அரசியல் கட்டுரைகளை மட்டுமே படித்திருக்கிறேன். அவரின் புத்தகங்கள் படித்ததில்லை. மற்ற அனைவரையுமே நீங்கள் குறிப்பிட்ட காரணத்திற்காகவே பிடிக்கும்.

வேதா said...

@கீதா,
அதான, கூப்படறதுக்கு முன்னாடியே வந்துட்டீங்க:) அதுவும் முதல் பின்னூட்டம் வேற. பெரிய அதிசயம் தான்.:)

@last adam,
thanks for ur visit.
//there's a distinct waft of sujatha in your writings..is that conscious? //
i dont know actually, but maybe since i read lot of his writings there may be some influence.

@சுபா,
1.இதையே தான் நானும் சில பேர் ஒத்துக்கமாட்டேங்கறாங்க:)

2.ஆஹா, சரியான சமயத்திற்கு காத்துக்கிட்டு இருக்கீங்க போல:) சீக்கிரம் வேளை வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.:)

நீங்களும் சுஜாதா ரசிகரா? வெரி குட்:)
கமல்ஹாசனை பிடிக்காதா?:(

@அம்பி,
//nice post. :)//
என்னது என்ன சொன்னீங்க? என்னால நம்பவே முடியலே:) ரொம்ப கஷ்டப்பட்டு பாராட்டியிருக்கீங்க:)

//who is asin? and who is anjelina..? shishya, any idea//
என்னே நடிப்பு, என்னே நடிப்பு:) உங்களுக்கு சிவாஜி சிலை பக்கத்துல ஒரு சிலை வச்சுர்றேன்:)@

Keshi said...

Jayalalitha looks soooooo different to what she was in the old movies!

Keshi.

Gopalan Ramasubbu said...

@Ambi :

//who is asin? and who is anjelina..? shishya, any idea? LOL :) //

guruvee, GRRRRRRRRRRRRRRRRRRRRRRRR. hmmmmmm ,kavanichukaren.

parava illa enna irunthalum ennoda guruva nan public place la vitu kuduka maten.thaniya vechukaren kacharia. i mean en blog la ;)

Ravi said...

Veda, sooooooppper (as ever!). All questions were too good - I esp loved Q-5 (because I too fall into the 'karuppu' category).

வேதா said...

@balaji,
thanks for ur compliments, but still i have a long road to go:)
we shall meet definitely when u come to india next time.

@jeev,
இந்த மீனா டீவிக்கு நடிக்க வந்ததனால, சன் டிவியில் 8.30 நிகழ்ச்சி எல்லாவற்றையும் டைம் மாத்தீட்டாங்க, ஒரே போர்.

@ச்யாம்,
ஆமாம், சில சமயம் அது அசட்டு துணிச்சலா இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தீவிரவாததிற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்தது ஜெயலலிதா அரசு தான். அந்த வகையில் எனக்கு அவரைப் பிடிக்கும்

கீதாக்காக்கு புளியோதரை ஒரு பார்சல்:)

@கோப்ஸ்,
//அடங்கப்பா, நானெல்லாம் சுதா ரங்கநாதனோ இல்ல வேற பெண்கள் கச்சேரியெல்லாம் கேட்கும் போது அவுங்க பாடரதுல மட்டும் தான் கவனம் இருக்கும்.//
அப்ப நீங்கல்லாம் தெய்வப்பிறவிங்க:)

முதல்ல கேள்விய புரிஞ்சுக்கோங்க, இப்படியெல்லாம் பட்டும் நகையும் உடுத்திண்டு தான் கர்நாடக சங்கீதம் பாடனுமா என்ன? என்று கேட்கிறேன்.

வெள்ளக்காரனுக்கு நம்ம மேல பொறாமைன்னா, நம்ம ஆளுங்களுக்குஅவங்க கலரப் பாத்து ஒரு மயக்கம் தான். அத போக்கிட்டா எல்லாம் சரியா போய்டும்.

வாஸந்தி கதையெல்லாம் உங்களுக்கு ஒத்து வராது:)

//guruvee, GRRRRRRRRRRRRRRRRRRRRRRRR. hmmmmmm ,kavanichukaren.//

என்னமா ஆட்டம் போட்டீங்க குருவும் சிஷ்யனும் சேர்ந்துண்டு, இதுல ராமகிருஷ்ணர், விவேகானந்தர் மாதிரின்னு ஒரு பில்டப் வேற. இப்ப பாருங்க கடைசியில பரமார்த்த குருவும், சிஷ்யர்களும் போலன்னு நிரூபணம் ஆயிடுச்சு.:)

@ரவி,
நீங்க கண்டிப்பா இந்த பதிவ படிச்சுட்டு கருத்து தெரிவிப்பீங்கன்னு தோணியது. நன்றி:)

@keshi,
ofcourse she has grown old:)

Gopalan Ramasubbu said...

//அப்ப நீங்கல்லாம் தெய்வப்பிறவிங்க:)//

நெம்ப டேங்ஸ்ங்கோவ்

//முதல்ல கேள்விய புரிஞ்சுக்கோங்க, இப்படியெல்லாம் பட்டும் நகையும் உடுத்திண்டு தான் கர்நாடக சங்கீதம் பாடனுமா என்ன? என்று கேட்கிறேன்.//

அதுசரி, நம்ம கல்யானப் பொண்ணுங்க எல்லாம் ஏன் கல்யானமுகூர்த்தத்தில் பட்டுப் புடவை கட்டிட்டு உட்கார்ந்து இருக்காங்க? ஏன்னா, தொன்று தொட்டு வரும் கலாச்சாரம் தான்.அதே தான் கச்சேரி செய்யறவங்களுக்கும். இதெல்லாம் நான் சொல்ல வேண்டியதா இருக்கு.ம்ம்ம் ;)

வேதா said...

//அதே தான் கச்சேரி செய்யறவங்களுக்கும். இதெல்லாம் நான் சொல்ல வேண்டியதா இருக்கு.ம்ம்ம் ;) //
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல

Pavithra said...

Good Post !!

I'm not a voracious reader in Tamil so 1,4,5,6 are my favourites too.

Media is a good way to communicate useful thoughts..but I'm also sad that it doesn't serve the purpose, be it films or serials.

Arjuna_Speaks said...

Usha - ennaku epothume - maniramana penkalai thaan pidikum :) - they are always pretty..

"யார் யாரை பழிவாங்கறாங்க?, யார் யாரோட ஓடிப் போறாங்க?, எவருக்கு ரெண்டு பொண்டாட்டி?,அந்த ரெண்டாவது பொண்டாடிக்கு பிறந்த குழந்தை யாரோடது? "

Ithu evalvu periya thathuvom :D lol

"'உம்' 'அப்புறம்' 'நீ தான் சொல்லணும்' 'அய்யோ நான் மாட்டேன்பா' இப்படி ஸ்டாண்டர்ட் டயலாக்குளையே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாறி மாறி இந்த காதலர்களும், வுட்பி காதலர்களும் மாத்தி மாத்தி எத்தனை நாளைக்கு சொ(ஜொ)ல்லிக்கிட்டே இருப்பாங்க?"

Usha - u know how I speak?? ;) - eppo parthalum idli, vadai, masala dosai pattiye pesitu irupen - paavam ponnu - thalaila kaiya vachutu iruku! :D lol

ambi said...

// இதுல ராமகிருஷ்ணர், விவேகானந்தர் மாதிரின்னு ஒரு பில்டப் வேற. இப்ப பாருங்க கடைசியில பரமார்த்த குருவும், சிஷ்யர்களும் போலன்னு நிரூபணம் ஆயிடுச்சு//

@veda,engalukkul aayiram karuthu verupaadugal varum, poogum, but i'll never giveup my shishyan. guru bakthi!naa ennanu avana paathu thaan therinjukanum. :)

//eppo parthalum idli, vadai, masala dosai pattiye pesitu irupen - paavam ponnu - thalaila kaiya vachutu iruku!//
@arjuna, ROTFL, nanba, eppadi paa? eppadi ithellam? sari vidu, naama ellaam enniki vetti kathai pesi irukkoom? usefull matter thaan pesuvoom. Gud on U! (futurela nee thaane cook panna poraa! atha thaan usefull matter nu sonnen!)

barath said...

நல்ல பதிவு,
உங்களின் ஆறில் என்னுடைய நாலும் இருக்கிறது.கேள்விகளனைத்தும் அருமை

//இவர் எழுதிய 'என்றும் பெண்' என்ற நாவலைப் படிக்கும் போது,//

"எப்போதும் பெண்" என்று நினைக்கிறேன்

வேதா said...

@பரத்,
தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி:) படிக்கிற புத்தகத்தின் தலைப்பை நான் அடிக்கடி மறந்து விடுவேன், ஆனால் கதை நன்றாக ஞாபகம் இருக்கும்:)

நாகை சிவா said...

ஆற்றில் ஐக்கியம். நன்று.

கேள்விகள் ஆறு!
1, யாருங்க கொளுத்தும் வெயிலில் வர்கார்ந்து கச்சேரி பண்ணுறாங்க. பாடுபவர்களை விட அதை கேட்க வரும் பெண்மணிகளை பார்த்து இருக்கிங்களா. இந்த மாதிரி கேள்வி எல்லாம் ஆண்கள் சமுதாயம் தான் கேட்கனும். நீங்க கேட்க கூடாது.

2, உங்களுக்கு பொறாமை. உங்களுக்கு இது எல்லாம் எப்படி தெரியும். ;)

3, ஹுக்கும் ஒரு வாரமா, ஒரு வருசம் கழித்து பார்த்தாலும் கதை புரியும். மெகா சிரியலுக்கு தடை போடனும்.

4, நான் அந்த லிஸ்ட்டில் இல்ல.

5, கறுப்பு தாம்ப்பா அழகு.

6, நோ கமெண்ட்ஸ்

ராக தேவன், முண்டாசு கவிஞன் - Legends

ஜெ.ஜெ. - அசட்டு தைரியம் தான் அவரின் பலமே

வாஸ்ந்தி - அவர் கட்டுரைகளை தொடர்ந்து இந்தியாவில் படித்து உள்ளேன். பெரும்பாலும் ஒரு நிலை சார்பு இருக்கும். இது என் கணிப்பு.

சுஜாதாவை பிடிக்கும், ஆனால் நீங்கள் சொல்வது போன்று அவர் சிக்கலகளில் சிக்காதவர் கிடையாது. பல சிக்கல்களில் சிக்கியவர். மிக சமீபத்தில் கூட ஒரு மிக பெரிய சர்ச்சையில் சிக்கியவர்.

கமல் - தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற, எடுத்த செல்ல முயலும் சில கலைஞர்களில் ஒருவர். அவரின் முயற்சிகள் அனைத்து அருமை. ஆனால் தன் படத்தை காண வருபவனும் தன்னை நிலையில் வைத்து சிந்திக்க கூடியவர்(மணிரத்னம் போல)

வேதா said...

@pavithra,
thanks for ur comments and keep visiting:)

@arjun,
// maniramana penkalai thaan pidikum :) //
ஓகே ஓகே புரிஞ்சுப் போச்சு:)

//eppo parthalum idli, vadai, masala dosai pattiye pesitu irupen - paavam ponnu - thalaila kaiya vachutu iruku! :D lol //
ரொம்ப பாவம் தான்:)


//Ithu evalvu periya thathuvom :D lol//

என்ன பண்றது இப்பல்லாம் தத்துவங்கள் மெகா சீரியல்களில் தான் பிறக்கின்றன:)

@அம்பி,
சரி சரி ஏதோ சொல்லி சமாளிக்கறீங்க:) போனாப் போறது பொழச்சுப் போங்க:)


@சிவா,
//இந்த மாதிரி கேள்வி எல்லாம் ஆண்கள் சமுதாயம் தான் கேட்கனும். நீங்க கேட்க கூடாது.//
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல, சில பெண்களும் கேட்பாங்க(என்ன மாதிரி:))

எனக்கு பொறாமையா? ம்ம் என் நேரம், இது தெரிஞ்சுக்க பெரிசா ஒன்னும் செய்ய வேண்டாம், இப்பல்லாம் எங்க திரும்பினாலும் இந்த மாதிரி பேச்சுக்கள் தான் காதுல விழற்து:)

மெகா சீரியலுக்கு தடை போட்டா எல்லா சேனல்களும் இழுத்து மூட வேண்டியது தான்:)

வாஸந்தியின் கட்டுரைகள் பற்றி எனக்கு தெரியாது, அவருடைய கதைகள் தான் என்னை மிகவும் கவர்ந்தவை. அதே போல் நான் சுஜாதாவைப் பற்றி சொல்லும் போதும் அவருடைய கதைகளை தான் சொன்னேன். அவர் சர்ச்சையில் சிக்கினார் எனக் கேள்விப்பட்டேன் ஆனால் முழு விவரம் தெரியாது.

மு.கார்த்திகேயன் said...

veda..romba arumaiyana pathivu.. neenga sonna aru perula JJ thavira elloraiyum pidikkum.. aana neenga sonna reasonukkaka JJ pidikkum..

appuram, karuppa irunthalum kalaiya irukkirangirathai naanum inemel mudinjavarai avoid panren.. nalla suttikattal ithu..

My days(Gops) said...

1. paata ketka oru kootam'na, idhu madhiri extra fittings'a paarka oru kootam....
he he he..
(some sort of advertisement)
2.neena sonna dialogues ellam innum irrukudhaa.
3.neenga TV serial paarkuradhilai'a?
4.helmet poduradhu rule aagitadha?
5. enakkum andha doubt undu...
6. sathyama ungalukku reason theriaadhu? therinchi kittey ketkureengaley?

@6 favourites
1.ஜனனி ஜனனி - naan ivara meet pannuna'pa ivaru padi kaamichaaru..
u knw, ivarukku pudicha paatum idhuvey..
2.ivaru eludhinadhai padichi irruken.., but indha thadavai thaan collections vaanganum'nu irruken...(india'la)
3. i duno..
4. adhey adhey..
5.ivar collections'um vaanganum..
6. sivaji'ku aduthathu ivaru orutharkitta thaan tallent irruku'nu naan namburavan....

Usha said...

correct, adhu enna karuppa irundhalum kalai? Namma TN-ku karupudhane azhagu???

Bala.G said...

arumaiyana post....muzhumiaya comment adikanumna oru 15 mins aagum..so stop pannikaren ;-)

senthil natarajan said...

kamal kaga oru 'O'
came here thru shubas' site

வேதா said...

@karthick,
thanks.
//appuram, karuppa irunthalum kalaiya irukkirangirathai naanum inemel mudinjavarai avoid panren.. nalla suttikattal ithu.. //
நன்றி, இது தான் என் நோக்கமும்:)

@சச்சின்,
//neena sonna dialogues ellam innum irrukudhaa.//
மொபைல் போன் இருக்கற வரைக்கும் இதுவும் இருக்கும்:)

// sathyama ungalukku reason theriaadhu? therinchi kittey ketkureengaley?//
தெரியலயேப்பா, தெரியலயே:)


//ஜனனி ஜனனி - naan ivara meet pannuna'pa ivaru padi kaamichaaru..//

நீங்க இவரை சந்தித்தீர்களா? வெரி குட். அடிச்சுதப்பா அதிர்ஷ்டம் உனக்கு:)

@உஷா,
ஆமா நம்ம தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்ல, எங்கையுமே கறுப்பு தான் அழகு:)

@பாலா,
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது முழு கமெண்டும் போட்ருங்க:)

@செந்தில்,
ஆமா, கமலுக்கு என் சார்பாகவும் ஒரு 'ஓ':)
அடிக்கடி வந்து போங்க:)

priya said...

Great post... Matured and little naughty in your write up.