Monday, July 10, 2006

கிராமத்தை நோக்கி - II

மு.கு. : இது முன்பு போட்ட பதிவின் தொடர்ச்சி, முதல் பதிவைப் இங்கே பார்க்கலாம்.


திரெளபதி அம்மன் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வரும் போது, முருகன் கோவிலில்அடுத்த கட்ட ப்ரார்த்தனை ஆரம்பம் ஆகி விட்டது. நாங்கள் அதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.முத்லில் காவடி எடுத்துக் கொண்டு நிறைய சிறுவர்கள் ஆட ஆரம்பித்தனர். நேரம் ஆக ஆக, மேள இசை உச்சக்கட்டத்தை அடைந்தது. அந்த சிறுவர்கள் ஆடியதைப் பார்த்து நாங்களே ஆடிப் போய் விட்டோம்.

இசையின் வேகமும் சப்தமும் அதிகரிக்க அதிகரிக்க நம்மை அறியாமலே நாம் ஆட அரம்பித்து விடுவோம். கோவில் விழாக்களில் பெண்கள் சாமி ஆடுவதின் காரணம் இப்பொழுது தான் நன்றாக புரிந்தது. அடுத்து நடந்த நிகழ்ச்சி தான் இன்னும் சுவாரசியம். நாங்கள் ஊருக்குள் நுழையும் போது பார்த்த புது வண்டிகளைப் பூஜைப் போடத் தான் எடுத்து வந்திருக்கிறார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் இப்பொழுது பார்த்தால் கார், வேன், டிராக்டர், என்று ஒன்று விடாமல் எல்லாவற்றையும் முதுகில் கொக்கியை மாட்டிக் கொண்டு இழுத்து வந்தார்கள்.

இதுவும் பிரார்த்தனை தானாம். இதை விட ஆச்சரியம், அந்த வண்டிகளை இழுக்கும் பொழுது உள்ளே ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். இப்படியாக பூஜைக்குப் போன இடத்தில் ஒரு அழகான கிராமத் திருவிழாவைக் கண்டு களித்த நாங்கள் அடுத்து சென்ற இடம், என் இஷ்ட தெய்வமான நரசிம்மரின் திருத்தலங்கள்.

விழுப்புரம் வழியாக சென்னைக்கு வரும் வழியில் அமைந்துள்ள கோவில்கள் சிங்கிரி , பரிக்கல், பூவரசன் குப்பம். இந்த கோவில்கள் எல்லாம் மிக பழமை வாய்ந்தவை, ஆனால் சமீபகாலமாக இந்த கோவில்களைப் பற்றி பலரும் அறியும் வண்ணம் குமுதம் ஜோதிடத்தில் திரு ராஜகோபாலன் எழுதி வருவதால், பாழடைந்து இருந்த இவை புனர்நிர்மாணம் செயப்பட்டுள்ளன.

சிங்கிரி கோவில் நாஙள் போயிருந்த பொழுது மூடியிருந்தது. எனவே நேராக பூவரசன்குப்பம் சென்றோம். இது ஒரு சிறிய கோவில் தான். ஆனால் இங்கே வீற்றிருக்கும் நரசிம்மர் சக்தி வாய்ந்தவர். எனக்கு எந்த கோவிலுக்குப் போனலும் உடனே அதன் ஸ்தல புராணத்தை தெரிந்து கொள்வதில் தான் ஆர்வம். கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால், நரசிம்மரின் மடியில் வீற்றிருக்கும் தாயார் எப்பொழுதும் பக்தர்களைப் பார்த்திருக்குமாறு தான் எல்லா கோவில்களிலும் சிலை அமைந்திருக்கும்.

ஆனால் இந்த கோவிலில் தாயார் ஒரு பக்கமாக அமர்ந்து, ஒரு கண் பெருமாளையும், மறு கண் நம்மையும் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள். அது மட்டுமில்லாமல் பெருமாளுடைய சிலை உயரமும், தாயருடைய சிலை உயரமும் சரிசமமாக அமைந்து ஆணும் பெண்ணும் சமம் என்ற தத்துவத்தை வலியுறுத்துமாறு இருக்கிறது.

அங்கிருந்து நேராக பரிக்கல் சென்றோம். இந்த மூன்று கோவில்களுக்கும் போகும் வழி மிக மோசமாகத் தான் உள்ளது. பேருந்து வசதி எல்லாம் இல்லை. நாம் தான் வண்டி அமர்த்திக் கொண்டு செல்ல வேன்டும். பரிக்கல் கோவிலும் பழமை வாய்ந்ததாகவும், அதே சமயத்தில் மிக பெரியதாகவும் உள்ளது. நாங்கள் போன சமயம் கோவிலில் மின்சாரம் இல்லை, மாலை மங்கும் நேரத்தில், அழகிய தீப வெளிச்சத்தில், நரசிம்மரின் அருமையான தரிசனம்.

இந்த கோவிலில் உள்ள அஞ்சனேயர் சந்நிதியில் ஆஜானுபாகுவாக ரெட்டை ஆஞ்சனேயர் சிலைகள். இங்கே நவதானியம் பரப்பி நம் மனதில் எதையாவது வேண்டிக்கொண்டு அதை எழுதினால் பலன் உண்டு என ஒரு நம்பிக்கை. எல்லாரும் வேண்டிக்கொண்டு எழுத என் அண்ணன் மகளுக்கு வந்ததே ஒரு சந்தேகம், "அத்தை, தமிழ்ல எழுதணுமா? இங்கலீஷ்ல எழுதணுமா?" என்று கேட்டாள் (அவளுக்கென்று புதுசு புதுசா எதவது சந்தேகம் வரும்,அவளுக்கு நாங்க வைத்த பேர், கேள்வியின் நாயகி).

அப்புறம் அவளே ஒரு முடிவுக்கு வந்து தமிழிலேயே எழுதினாள். இப்படியாக கிராமத்தை நோக்கி ஆரம்பித்த எங்கள் பயணம், இனிதே முடிந்து சென்னையை நோக்கி பயணித்தோம்.

பி.கு. : இந்த பதிவு என் 75வது பதிவு, முதலில் ஒரு விழா எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நம்மை விட பழம் தின்னு கொட்டைப் போட்ட கேஸ்கள் நிறைய இருப்பதால், விட்டு விட்டேன். எனவே இங்கே வந்து பின்னூட்டம் இடும் ப்ளாக் கழக கண்மணிகளிடம் எந்த விழாவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்(ல்)கிறேன்:) (எல்லாம் ஒரு தன்னடக்கம் தானுங்கோவ்)

பி.பி.கு : என் அடுத்த பதிவு இன்னொரு ஸ்பெஷல் பதிவு, அது என்னன்னு யோசிச்சிண்டு இருங்க, 16ஆம் தேதி நெக்ஸ்டு மீட் பண்றேன்.:)


32 comments:

Ravi said...

Veda, first congrats on your 75th post. Appuram, I really enjoy reading your posts - esp Tamizh ones. The narration style makes it an interesting read.

Your analysis about "saami aaduradhu" is very true! I too feel the same when I hear some amman songs in full blast thru' headphones.

Koil patriya vivaram arumai. That too your interests in old temple and its puranams are really appreciable.

Keep more such posts coming - more often ;-)

Arjuna_Speaks said...

congrats usha on ur 75th post :)..valka valamudan :)

Arjuna_Speaks said...

villupuram arugil oru sivan kovil ullathu..I am not sure of the name..romba palaya koil..it was in a bad state..my uncle then renovated the whole temple and did kumbabhishekam..I will try to find out the name of the temple and let u know :)

ambi said...

congrats for the 75th post.
very good info. photos iruntha potrukalaame..? :)

vishy said...

hello.. neenda naatkallukku piragu ungalathu blog padithen..
ezhuvatri ayintham postukku en manamaarntha vazhthukkal..

tamizhil post pannura alavukku eppadi ungalukku porumai irukko..

neway 16th varaikum enga poringa??

vishy said...

hello.. neenda naatkallukku piragu ungalathu blog padithen..
ezhuvatri ayintham postukku en manamaarntha vazhthukkal..

tamizhil post pannura alavukku eppadi ungalukku porumai irukko..

neway 16th varaikum enga poringa??

Syam said...

பவழ விழாவுக்கு வாழ்த்துக்கள்...நீங்க சொன்னா விழா எடுக்காம விடனுமா...எதோ உங்க தன்னடக்கம் வேண்டாம்னு சொல்றீங்க...
யப்பா யாரங்கே சீரணி அரங்கை ரெடி பன்ன சொல்லு :-)

Syam said...

அய்யா சாமி ஆள் ஆளுக்கு மார்கெட்டிங் டெக்னிக் ஆரம்பிச்சுடாங்கையா... ஆரம்பிச்சுடாய்ங்க.. :-)

Jeevan said...

Your Village visit was nice to read, the information about singiri Kovil was nice. Ok mothama serthu unga 1st blog anniversary oru pariya party koduthudunga.

My days(Gops) said...

enna'nga annaiku ungalukku b'day va? (16th)

Bala.G said...

nallaa oorai suthi paarthen, ungal padhivil ;-)

வேதா said...

@ravi,
thanks yaar,certainly i will posting such things in future. actually i have travelled a lot all over india, so postuku panjam illa;)

@arjun,
thanks:) u let me know abt the temple.

@ambi,
thanks, photos upload agala, some problem;)

@vishy,
thanks and tamizhil ezhutha payirchi irunthaal pothum, it will be bit difficult in early stages, but u can pick up. why dont u give a try:)

வேதா said...

@ச்யாம்,
// யாரங்கே சீரணி அரங்கை ரெடி பன்ன சொல்லு :-) //
உங்க பாசத்த பாத்து அப்படியே புல்லரிச்சுப் போச்சு. உங்க ஆசைய ஏன் கெடுக்கணும், நடத்துங்க(என்னது? செலவு எல்லாம் உங்களுதா? சரி, உங்க ஆசைப் படி பண்ணுங்க:)


//அய்யா சாமி ஆள் ஆளுக்கு மார்கெட்டிங் டெக்னிக் ஆரம்பிச்சுடாங்கையா... ஆரம்பிச்சுடாய்ங்க//
எல்லாம் உங்க தயவு தான் குருவே:)

@jeev,
yaarupa athu treat kekarthu? muthala unnadaiya first anniversary treat vaiyuppa:)

@gops(md)
nope:)

@bala,
enna osi kaj adikareengala? fees yaar kodupa;)

கீதா சாம்பசிவம் said...

வேதா,
முதலில் 75-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். நான் பாருங்க, 85 பதிவு போட்டுட்டு ஒரு பின்னூட்டம் வராதானு பார்க்கறேன். நான் உங்க ஜுன் 29-ம் தேதி பதிவுக்கு அப்புறம் தான் படிக்கலை. நானே அதுக்கு அப்புறம் சரியா இணையத்திலே இல்லை. இல்லாட்டி உங்க பதிவுக்கு வராம இருக்க மாட்டேன். அம்பியோட பதிவுக்குக் கூட இன்னிக்குத் தான் போனேன்.

Gopalan Ramasubbu said...

nenga pesama India Thiruthalangal or sthala puranam nu oru thodar katturai eluthalam.sooper ah bakthi post ezhutharenga.Congrats on 75th post :)

நாகை சிவா said...

// யாரங்கே சீரணி அரங்கை ரெடி பன்ன சொல்லு :-) //
உங்க பாசத்த பாத்து அப்படியே புல்லரிச்சுப் போச்சு. உங்க ஆசைய ஏன் கெடுக்கணும், நடத்துங்க(என்னது? செலவு எல்லாம் உங்களுதா? சரி, உங்க ஆசைப் படி பண்ணுங்க:)//
ரொம்ப அரிச்சா, அப்புறம் புண் ஆயிடும். அண்ணன் ஷாம் அண்ணன், சீரணி அரங்கத்தை எல்லாம் இடிச்சு பல வருசம் ஆச்சு...

நாகை சிவா said...

//இசையின் வேகமும் சப்தமும் அதிகரிக்க அதிகரிக்க நம்மை அறியாமலே நாம் ஆட அரம்பித்து விடுவோம்//
உணமை தாங்க, ஆயிரம் இசை கருவிகள் இருந்தாலும் இந்த தப்பு, மேளம் இதுல வர இசை நம்மளையும் ஒரு ஆட்டு ஆட்டிடும்.

நாகை சிவா said...

பஞ்சவடி போனீங்களா?
அப்புறம் அந்த ஏரியாவில் வக்கிர காளியம்மன், கடலூர் பக்கத்தில் ஒரு இடத்தில் ஒரு பெருமாள் கோவில், இது எல்லாம் பாத்தீங்களா.

Shuba said...

ammmaaadi kovilukku poittu vanda effect!!!!gud gud

ambi said...

//எல்லாம் உங்க தயவு தான் குருவே:)//
@veda, marketing teqniques ella copy rightsum enkitta thaan irukku veda! :)

@syam, ennapa syam, naan solrathu sari thaane?

smiley said...

congrats on giving us the 75th post. keep blogging, we r having a good time :)

வேதா said...

@கீதா,
//85 பதிவு போட்டுட்டு ஒரு பின்னூட்டம் வராதானு பார்க்கறேன்//
சரி புரியுது:) எல்லோரும் கேட்டுக்கோங்க, கீதாக்கா பதிவுக்கு உடனடியாக பின்னூட்டம் போடுங்க:)

@கோப்ஸ்,
//nenga pesama India Thiruthalangal or sthala puranam nu oru thodar katturai eluthalam.sooper ah bakthi post ezhutharenga//
ஆஹா, நிஜமாவே சொல்றீங்களா? இல்ல வஞ்சப் புகழ்ச்சியாப்பா இது?

@சிவா,
ஏங்க ஏன் இப்படி? எங்களுக்கு அரிச்சா புண் வராதமாதிரி சொறிஞ்சுப்போம்:)

சீரணி அரங்கம் பத்தி எனக்கும் தெரியும், ஏதோ ச்யாம் அண்ணன் தெரியாம சொல்லிட்டாரு விடுங்களேன். அவர் இதுக்கெல்லாம் மனம் தளராதவரு, புதுசா ஒரு அரங்கமே கட்டி விழா எடுத்துடுவார்:)

பஞ்சவடியும் போனேன், ஆனால் வக்கிர காளியம்மன் கோவில் போகவில்லை, நேரம் இல்லை:)

@சுபா,
டாங்க்ஸ்பா:)

@அம்பி,
சரி அதுக்காக உனக்கு எதுவும் fees கொடுக்க முடியாது:)

@smiley,
thanks for ur support:)

Harish said...

பெண்கள் சாமி ஆடுவதின் காரணம் இப்பொழுது தான் நன்றாக புரிந்தது
Too late yaar :-)

My days(Gops) said...

kastapattu oru comment eludhinaa..edhuku'nga approve pannala? bad bad....

Gopalan Ramasubbu said...

NO வஞ்சப் புகழ்ச்சி .unmaya thaan solren :).

Syam said...

//உங்க ஆசைய ஏன் கெடுக்கணும், நடத்துங்க(என்னது? செலவு எல்லாம் உங்களுதா? சரி, உங்க ஆசைப் படி பண்ணுங்க//

அதுபாருங்க சீரணி அரங்கத்துக்கு date கிடைக்கல...சரி விடுங்க பொன் விழாவுல உங்க செலவுலயே பின்னிடுவோம்.. :-)

//ennapa syam, naan solrathu sari thaane? //

அம்பி சொன்னா அப்பீல் ஏது :-)

//சீரணி அரங்கத்தை எல்லாம் இடிச்சு பல வருசம் ஆச்சு... //

பங்கு அந்த தைரியத்துல தான சொன்னேன்... :-)

எல்லாமே உள்குத்தால்ல இருக்கு....

வேதா said...

@harish,
yeah:)

@gops(md),
என்ன இப்படி சொல்றீங்க? நீங்க போட்ட பின்னூட்டம் எனக்கு வரவே இல்லை. சிரமம் பார்க்காம் இன்னொரு வாட்டி போட்ருங்க:)

@கோப்ஸ்,
அப்ப ரொம்ப நன்றிங்க:)

@ச்யாம்,
அண்ணே நீங்க என்னத் தான் சொன்னாலும் இந்த சிவா அரங்கம் கட்டலேன்னா உங்கள விட மாட்டாரு, அம்பியோட ப்ளாக் போய் அவரையும் கிளப்பி விட்டுட்டாரு. அம்பியும் பெருந்தன்மையா(!) அரங்கத்தைக் கட்டி என் பேரையே வக்கச் சொல்லிட்டார். சீக்கிரம் முடிச்சிட்டா மாநாட்டை நடத்திடலாம்.:)

Known Stranger said...

nalla irruntha serri

Usha said...

Veda, super-a describe panra, hats off!

கீதா சாம்பசிவம் said...

16 தேதிக்கு மேலே ஆகியும் இன்னும் புதுப் பதிவு ஒண்ணும் காணோம். என்ன ஆச்சு?

வேதா said...

@வைஷ்ணவ்,
ஏதோ உங்க ஆசிர்வாதம்:)

@உஷா,
ரொம்ப நன்றிப்பா, என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்?

@கீதா,
ஏங்க முதல்ல இந்த பதிவுக்குப் பின்னூட்டம் போடுங்க, அப்புறம் அடுத்த பதிவப் பத்தி பேசலாம். நல்லா தூங்கிக்கிட்டே தான் பின்னூட்டம் போடுவீங்களா? இன்னிக்கு 15 தேதி தான் ஆகுது, நாளைக்குத் தாங்க 16 :)

My days(Gops) said...

mmm.....kovil'a pathi ellam arumai'a eludhureenga?...nice info..
btw, July 16th unga birthday'va? if so, my advance birthday wishes..

PS:- annai'ku enna eludhunenu marandhu pochi......thappu unga perla thaan...so enakku kodunga excuse...