Tuesday, August 01, 2006

நினைவுகளும் நிஜங்களும்

இன்று காலை என் அப்பாவை அலுவலத்தில் விடுவதற்காக வண்டியில் சென்று கொண்டிருந்தேன். போகும் வழியில் புத்தகம் வாங்க ஒரு கடையில் நின்றோம். வாங்கி விட்டு வண்டியை எடுக்கலாம் என நினைத்த பொழுது தான் என் நண்பனைப் பார்த்தேன். அவனைப் பார்த்தவுடன் எனக்கு மகிழ்ச்சி, துக்கம் ரெண்டும் தோன்றியது. என்னை அவன் நினைவு வைத்திருப்பானோ? என சந்தேகித்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் கண்கள் என்னை ஒரு முறைப் பார்த்து பின் தாழ்ந்தன. வண்டியருகில் வந்தவன் எங்கோ பார்த்துக் கொண்டு 'உம் உம் உஷா, வண்டி எடு' என்று சொல்லிக் கொண்டே சென்று விட்டான். என் அப்பாவோ அவன் என்னைக் கிண்டல் செய்கிறான் என நினைத்து அவனை ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஆனால் அவன் அதற்குள் எப்பவும் போல் தனக்குத் தானே பேசிக் கொண்டே வெகு தூரம் சென்று விட்டான்.

அவன் என்னுடன் பள்ளியில் படித்தவன். அவனுடைய அம்மா எங்களுக்கு பாட்டு டீச்சர். அவன் சின்ன வயதிலிருந்தே கொஞ்சம் மனநிலைப் பாதிக்கப்பட்டவன். என்னுடன் 5வது வரை தான் படித்தான் என நினைக்கிறேன். தான் உண்டு தன் வேலையுண்டு என எப்பொழுதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பான். பாட்டு சொல்லிக் கொடுக்கும் நேரத்தில் அவன் தனியாக ஒரு சுருதியில் பாடிக் கொண்டிருப்பான். ஒரு விதத்துல தானும் மகிழ்ந்து எங்களையும் சிரிப்பால் மகிழ்வித்தவன். எங்கள் வகுப்பில் அவன் பேசுவது என்னிடம் மட்டும் தான். அவன் அழுது நான் பார்த்ததில்லை. யாராவது திட்டினாலோ அடித்தாலோ என்னிடம் தான் வந்து சொல்வான். அவன் அம்மாவிற்கு அடுத்து என்னிடம் தான் நன்றாக பழகுவான்.

திடீரென்று ஒரு நாள் அவன் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டான். அவன் 5வது வரை வந்ததே பெரிய விஷயம் தான். அதன் பின் என் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் தான் நான் அவனைப் பார்த்தேன். ஆனால் பேசும் வாய்ப்பு கிடைக்க வில்லை. பின் ஒரு நாள் அவன் அம்மா இறந்து விட்டதாகவும், அவன் குடும்ப சூழ்நிலைக் காரணமாக வேலைக்கு செல்வதாக தெரிய வந்தது. அதன் பின் சுமார் 10 வருடங்களுக்கு பின் இன்று தான் பார்த்தேன். அவன் கொஞ்சம் கூட மாறாமல் அதே சிரிப்புடன் ஆனால் , இளைத்துப் போய்.

அவன் என்னை மறக்காமல் என் பெயரை சொன்னது ஒரு புறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், என்னிடம் பேசாமல் சென்றது மனதை வருத்தியது. ஆனாலும் அவன் மூளையில் எதோ ஒரு மூலையில் என் பெயரும் உருவமும் பதிந்து விட்டது என்பது மட்டும் புரிந்தது. அது வரை மகிழ்ச்சி அடைந்தேன்.


28 comments:

Arjuna_Speaks said...

nalla post usha..touching-a irunthathu :(

Ravi said...

Nijamavae romba touching post. And you have a kind heart too. Generally others tend to keep away from such people - for their own reasons but on the contrary you were hoping that he should talk to you. Keep up the goodness in you Veda!

Jeevan said...

Sweet memories:)

barath said...

nalla pathivu
//இந்த பதிவிற்கு மட்டும் எந்த விதமான நக்கல், நையாண்டி கமெண்டுகளையும் அனுமதிக்கப் போவது இல்லை. மீறினால் அந்த பின்னூட்டம் வெளியிடப் படாது.//
thevayatra varikal...gives a odd feeling.

Balaji S Rajan said...

He must be upset pyschological and many diseases are not treated properly. He may not be mentally ill at all. Sometimes a kind of depression can cause a behaviour like that. Added to that, our society will make them more depressed by criticising and pushing them to corner. His instinct made him to call you by name, but the complex drove him away. You should try to meet that person with your parents permission and talk to him in a nice manner. Probably old friends talking may help him to revive his metal abilities back. Just give a try.

Syam said...

மனநிலை சரியில்லாமல் இருந்தாலும் 10 வருடங்களுக்கு பிறகு உங்க பேர ஞாபகம் வெச்சு இருந்தான்னா..நிஜமாகவே இதுதான் ஆழ்ந்த நட்பு...

Syam said...

மனநிலை சரியில்லாமல் இருந்தாலும் 10 வருடங்களுக்கு பிறகு உங்க பேர ஞாபகம் வெச்சு இருந்தான்னா..நிஜமாகவே இதுதான் ஆழ்ந்த நட்பு...

ambi said...

really a touching post. balaji.s.Rajan has given a nice suggestion.
i too feel last lines very not only irrelevant to this post but also a stupid one. U know, your readers know basic curtosy very well or U might not've understood them yet(in the past one year, of course).

வேதா said...

@all,
i had may own reasons to publish those last lines and i am not going to justify myself. so i am sorry and i have removed those lines. thanks.

Gopalan Ramasubbu said...

nalla post Veda.Unga name 10 years kalichukuda nyabagam vechurukaruna then it's great.

My days(Gops) said...

touching post veda...its really gr8. thanks for sharing with us...
u cud hav stopd him na? miss panniteengaley....
(unga peru ennanga? conpuse'a irruku)

Ram said...

அவருடைய நினைவாற்றல் ஒரு புறம் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அவருடைய இன்றைய நிலையை ஒரு நிமிடம் கூட நினைத்து பார்க்க முடியவில்லை.

இறைவன் துணை புரிவானாக!

Shuba said...

avan konjam mana nilai sari illatha nilayilum ungalai niyaabagam vachan athu paaraatta thakka vishyam...nalla nelamaila irukkura manushanga kooda kaariyam aana vudana paaathum paakaama povanga!ithukku avan evlovo better!

Bala.G said...

padichitu negizhndhu poi vitten....god bless him

The last adam said...

really moving....Good one!

வேதா said...

@all,
என் நண்பனுக்காக இத்தனை நல்ல உள்ளங்களின் ஆதரவு உள்ளன என்பதில் எனக்கு மகிழ்ச்சி, அனைவருக்கும் நன்றி. திரு பாலாஜி சொல்லியிருந்ததுப் போல் என் நண்பனின் உண்மையான பிரச்னை என்ன என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளாத வயதில் தான் எனக்கு அவனுடன் நட்பு ஏற்பட்டது. என்னுடைய 10வது வயது வரை தான் நான் அவனுடன் பழக முடிந்தது. இத்தனை வருடங்கள் கழித்து நான் அவனைப் பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த விஷயம் அவன் வேலைக்குச் செல்வது தான். ஏதோ அது வரைக்கும் தன் தேவைக்கான செலவுகளை அவனே பார்த்துக் கொள்ளும் அளவு அவன் முன்னேறியுள்ளது கடவுளின் ஆசி, அது என்றும் நீடிக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. அவனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அவனோடு சில வார்த்தைகள் பேசவும் என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்யவும் காத்துள்ளேன்.

Pavithra said...

Touching post !! Certain illness could be cured by proper care/attention/love. Not sure if the same would work out for your friend.

:: The Protector :: said...

being a slient reader of your posts...
this one made me comment....
really a heart moving one...if he still remember you then you can move forward and find him and you can help him...

may god bless him....

Cheers!
:)

Syam said...

*******Pls do not publish************
வேதவள்ளி பீல் பன்னது போதும்மா...போஸ்ட்ட மாத்து...இது நாட்டாமயோட தீர்ப்பு..தீர்ப்பு...தீர்ப்பு...

Known Stranger said...

felt like reading s ramakrishnan writings

indianangel said...

Great! ungaloda friendukku udhavi seyyanumnu yosichirukkengale that should be appreciated. Your blog is good!

நாகை சிவா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் வேதா.

நண்பர்கள் வாரத்தில் உள்ள பள்ளி பருவத்து நண்பனை பற்றி ஒரு பதிவு போட்டு உள்ளீர்கள். நல்லா இருக்கு.

ashok said...

moving post...

btw, happy friendship day to u :)

கீதா சாம்பசிவம் said...

நண்பர்கள் தின வாரத்தில் உங்கள் பழைய நண்பரைப் பார்த்ததிலும் அவரைப் பற்றிய இந்தப் பதிவுக்கும் தலை வணங்குகிறேன். முடிந்தால் அவரை மாற்றப் பாருங்கள். உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

Kamal said...

HI Veda..I like Ur posts..But this one is very Touching...U r very Kind Hearted.

Kamal said...

HI Veda..I liked ur Posts..I do blog when Iam Free.But not this much..U rocks!!!..And this post is realyy touching..May God save him..
"Hats Off to U Mam"

Usha said...

these kinda people would be having some plus point, ivaruku memory pola...I have always seen them having some speciality, the entity called God takes care of everything..

smiley said...

really moving, trying to imagine the feelings that would have gone thro him ... mebbe u sparked a momoent of happiness in him :)