Thursday, August 17, 2006

வேதாளத்திற்கு அபயம் தந்த வேதா

கடந்த நான்கு நாட்களாக இணையத் தொடர்பு சரியாக இல்லை, பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கும் பிள்ளையைப் போல பாதியிலேயே தொடர்பு போய் விடுகிறது. நானும் பொறுத்துப் பொறுத்து பார்த்து, ஹெல்ப்லைனுக்கு போன் போட்டு கேட்டால், அவங்க எங்க பக்கம் எல்லாம் சரியாத் தான் இருக்கு உங்க கணிணியில் தான் ஏதோ குறை என்று சொன்னார்கள். அட இது என்னடா வலைப்பதிவுலகத்திற்கு வந்த சோதனை. என் பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டவர்கள் எல்லாம் பதிலைக் காணாமல் திண்டாடி போய் விடுவார்களே, என்ன ஆகிவிட்டது என்று யோசிக்கும் போது ஒரு அபயக் குரல்,

'வேதா, நீங்கள் தான் என்னைக் காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும்'

'யாருப்பா நீ?"

'ஏங்க என்னை தெரியல? நான் தான் வேதாளம்'

'என்னது வேதாளமா? உன் இடம் இது இல்லையே இங்க எப்படி வந்த?'

'அத ஏன் கேக்கறீங்க? சங்கத்து நிரந்தர தலைவி(வலி) பண்ற வேலை இது, என்னைய கூப்பிட்டு
இந்த நிரந்தர பின்னூட்டாளர், அதான்பா இந்த வேதா, என் எல்லா பதிவுக்கும் வந்து என் வயசை பத்தி கேக்கறாங்க, எங்க என் உண்மையான வயச கண்டுபிடிச்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு, என்னத் தான் அவங்கள சாதான்னு சொன்னாலும் அவங்க பெரிய தாதாவா இருப்பாங்க போல இருக்கு அதனால் நீ போய் உன் வேலைய காமிச்சுட்டு வான்னு என்ன அனுப்பினாங்க'

'அப்ப என் இணையத் தொடர்பை தடை செய்தது நீ தானா?'

'ஆமாம் தலைவியே, ஆனால் உங்க பதிவெல்லாம் படித்த பிறகு ரொம்ப பீலிங்க்ஸ் ஆகிப் போச்சு, இப்படிப் பட்ட ஒரு நல்லவங்க,வல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்க, பல பேர வாழ வைத்த தெய்வம், உங்க பதிவைப் போய் தடை செய்யலாமோ?,அதனால் தான் உங்க கிட்ட சரணடைந்து விட்டேன்'

'ஆஹா, சதி சதி இந்த வேதாவிற்கு எதிராக சதி, என் அருமை ப்ளாக் நண்பர்களே, உங்கள் ஆருயிர் தோழியின் பதிவுக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த சதியை முறியடிக்க அலைக் கடல் போல் திரண்டு வாரீர். ஏற்கனவே கோணி ஊசியுடன் தயாராக இருக்கும் அண்ணன் ச்யாம், நண்பர்கள் அம்பி, சிவா மற்றும் ப்ளாக் உலக நண்பர்கள் எல்லாரும் என் பக்கம் வந்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்'(ஆதரவாளர்கள் அனைவருக்கும் நான் அளிக்கும் பரிசு உங்கள் பதிவிற்கெல்லாம் நிரந்தர பின்னூட்டாளராக பணி செய்வேன்)

'அப்ப என் கதி? எனக்கு மன்னிப்பு உண்டா? உங்கள் காலடியில் இருந்து காலமெல்லாம் பணி செய்வேன்'

'அய்யோ வேண்டாம், உன் மேல் குற்றமில்லை, எய்தவர் எங்கோ இருக்க உன் மேல் குறை சொல்லி என்ன பயன்? நீ என் காலடியில் இருந்தால் பழக்க தோஷத்தில் என் காலையே வாரி விட்டு விடுவாய், அதனால் உன்னை அனுப்பினவங்க கிட்டயே போய்டு'

'அய்யகோ எனக்கு இப்படி ஒரு தண்டனையா? ஏன், என், ஏன் மறுபடியும் அவர்களிடமா? அவங்க மொக்கை தாங்க முடியல:('

'பரவாயில்லை என்னை சாதா என்று கூறியவர்களிடம் போய் சொல், என் மகிமையைப் பற்றி. அவர் புதிதாக இன்றிலிருந்து 'மொக்கை பதிவு கீதா' (மொ.ப.கீ) என பெயரில் அழைக்கப்படுவார் என்றும் தெரிவித்துவிடு'

தன் விதியை நொந்தபடியே வேதாளம் வந்த இடத்திற்கே பறந்து சென்று விட்டது, எனவே மக்களே வேதா எங்கும் சென்றுவிடவில்லையென்றும், மனம் தளரா விக்கரமாதித்தன் போல் எத்தனை வேதாளம் வந்தாலும் வெற்றிக் கொண்டு கொடியை நாட்டுவாள் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்:)

32 comments:

Kamal said...

Super Super...Nan Idhai Varaverkiren...Thangal Katchiyil Ennamum serka Pariseelikkum padi Thazhmaiyudan Kaetu Kolgiren...

கீதா சாம்பசிவம் said...

எல்லாரும் கூட்டுச் சேர்ந்து என்னை எதிர்க்கப் போறீங்களா? நிஜமாவே இன்னிக்கு வேதாளம் வந்து என் இணைப்பை வர விடாமல் செய்து விட்டது. என்னனு பார்த்தா வேதா வேலை. மொக்கைப் பதிவு நான் போடறேனா? நீங்களா? வேதா சாதா தான்னு நிரூபிக்கிறீங்களே அம்பி பேச்சைக் கேட்டுக்கிட்டு :D

வேதா said...

உங்களுக்கு இணைப்பு வர வில்லையா? இதை தான் தன் வினை தன்னைச் சுடும்னு சொல்லுவாங்க:)

ambi said...

//'மொக்கை பதிவு கீதா' (மொ.ப.கீ) என பெயரில் அழைக்கப்படுவார் //

he hee, vizhunthu vizhunthu sirichen. oru vaarthai!naalum thiru vaarthaiyaa sonnenga ennai vaazha vaitha dheivamee! atharavu enna, atharavu, oru kootame ungal kattalaikku kaathukitu irukku! utharavidungal! veera vel! Walter vetri vel! :)

நாகை சிவா said...

வேதா!
ஒரு சின்ன திருத்தம். அங்க மொக்கை பதிவு கீதா கிடையாது மொக்கை பதிவாளர் கீதா. கீதாக்கா சாரி, பின்னூட்டத்துக்கு ஆசைப்பட்டு இந்த வார்த்தை சொன்னேனு நினைக்க கூடாது. எனக்கு போட்டியாக(மொக்கை போட தான்) நீங்கள் வந்து விட கூடாது என்பதற்க்கும் அந்த எண்ணங்கள், எண்ணங்கள் பதிவை நீங்கள் போட்டதற்க்கும் தான் இந்த பெயர். நம்ம டீலீங் தனியா வச்சுக்குவோம். இங்க வேணாம் சொல்லிட்டேன்.

மக்கள்ஸ், கொஞ்சம் வேல இருக்கு. முடிச்சுட்டு வந்து விழாவாரியா பின்னூட்டம் போடுறேன். ஒகே....

indianangel said...

mmm இந்த மொக்கை publicity அம்பி ஆரம்பிச்சு வெச்சது உங்களுக்கும் தொற்றிவிட்டதா!
"கேடில்(லா) விழுச்செல்வம் விளம்பரமில்லா Blog ஒருவர்க்கு,
மாடல்ல மற்ற பீலா அனைத்தும்!" :)

தொடரட்டும் தங்கள் பணி! :)

Shuba said...

oh!!!athan ungala online pakka mudilayaa..athu sari.

shree said...

adey kanmani ambi.. indha veda unnai patri yen blogil pazhi solli iruppadhu nenaivirukkiradhu allava.. ivalukkaga nee kural kodukka pogiraayaa?? yosithu oru mudivukku vaa. poruthathu podhum pongi yezhu
err... veda - ambikku indha kadasi line konjam jaasti dhaan illa??? sorrypa!!

ambi said...

padma yekka, ayiram irunthaalum veda, nallavanga, vallavanga enakku vaazhvu thantha dheyvam. athaan! paavam mannichu vudruvoom! but chance kidaikkum pothu kalachuruvoom. ippa ithu geetha madam kanakka theerkartathuku potukitta kootanai.

வேதா said...

@shuba,
அது தான் உண்மையான காரணம், பாரு உன்னோட பதிவைக் கூட இன்னும் படிக்கல:)

@ஷ்ரீ,
யக்கா, அதெல்லாம் அப்படித் தான், நீங்க கூடத் தான் அம்பி பதிவுல போய் காறித் துப்பிட்டு வந்தீங்க ஆனா இங்க வந்து உங்க தம்பி ,தங்க கம்பிக்கு வக்காலத்து வாங்கலியா? இதெல்லாம் கூட்டணி தர்மம், இது கூட தெரியாதா?

@அம்பி,
கரெக்டா சொன்னப்பா அம்பி, பாரு நம்ம ரெண்டு பேரும் எவ்ளோ தெளிவா இருக்கோம். நம்ம கூட்டணி ஒரு சந்தர்ப்ப கூட்டணி என்று நாமே ஒத்துக்கறோம், நம்மள மாதிரி நேர்மையானவங்க யாராவது இருக்க முடியுமோ? :)

வேதா said...

@கூல்ஸ்பாட்,
நீங்க கீதா மேடத்தை 'ஆண்ட்டி' என்று கூப்பிட்ட ஒரு காரணதுக்காகவே உங்கள எங்க கூட்டணியில் சேர்த்து கொள்கிறோம்:)

@சிவா,
அதாவது சிவா, நான் அவங்க வயசுக்கு மரியாதை கொடுத்து அவங்கள நேரடியா சொல்லாம அவங்க பதிவை மட்டும் மொக்கை பதிவு என்று சொன்னேன். ஆனால் நீங்க இப்படி அவங்களையே சொல்லி வாய் கொடுத்து மாட்டிக்கிட்டீங்க:) இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க கீதா:) சிவா, அனேகமா கீதா மேடம் இதை படிச்ச உடனே சூடானுக்கு பறந்து வரப் போகுது வேதாளம்:)

@indian angel,
அதெல்லாம் அப்படித்தான், அரசியல்ல இதெல்லாம் ஜகஜம், இதையெல்லாம் கண்டுக்கப்படாது:D

@சுபா,
ஆமாம் என் அருமை சிஷ்யையே, இன்னும் உன் பதிவைக் கூட படிக்கவில்லை:)

@ஷ்ரீ,
யக்கா, என்னக்கா நீ இது தான் கூட்டணி தர்மம். நீ கூடத் தான் அம்பியோட பதிவுல போய் காறி துப்பிட்டு வந்த, ஆனா இங்க வந்து அமிபி தங்க கம்பின்னு சீன் போட்ற:) அதையெல்லாம் நான் கண்டுக்கிட்டேனா? பாரு இந்த கடைசி லைன் அம்பிக்கு ஜாஸ்தி தான், அது அவருக்கே தெரியும், ஆனா கூட்டணிக்காக அமைதி காக்கறார்:)

கீதா சாம்பசிவம் said...

சந்தர்ப்பவாதக் கூட்டணிக்காக ஒன்று சேர்ந்த சிங்கங்களே? என்னை வீழ்த்த முடியாமல் திணறுகிறீர்களே? உங்களால் முடியாது, என்னால் முடியும், தம்பி, தங்கைகளே! :D

ஹி,ஹி,ஹி, எனக்காகக் குரல் கொடுத்த ஸ்ரீக்கு ரொம்ப நன்றி. நம்ம தலைமைக் கழகம் பக்கம் வந்தீங்கன்னா உ.பி.ச. பதவி காலியாவே இருக்கு. வேதாவா, சின்னக்குட்டியானு யோசிச்சிட்டிருந்தேன், வேதா கூட்டணி மாறிட்டாங்க, சின்னக்குட்டி ஆளையே காணோம், நீங்க வாங்க உங்களை உ.பி.ச. வாப் போடறதிலே எந்த ஆட்சேபணையும் கிடையாது.

Kamal said...

Ennai Kootaniyil Saerthu kondatharku Mikka Nandri...Nan enna seiya vendum Kattalai Idungal Thalaiviyae...Kaathukondirukiren...

நாகை சிவா said...

வேதா, பாத்தீங்களா, கீதா வந்தும் நம்மள ஏதும் சொல்லாம போயி இருக்காங்க. நம்மள அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க. :)

Syam said...

கவலையே பட வேண்டாம் பிரியாணி பொட்டலம் ரெடி பண்னீட்டு ஆட்கள லாரில கூட்டிட்டு வந்துடரேன்...ஆனா இவளோ சின்ன வயசுல கீதாக்கு இத்தனை சோதனயா.... :-)

Usha said...

ayyo ayyo ayyo, idhuvum puriyala, andha geetha-oda post-um puriyala..ennama panreenga? Krishna, kapathupa ivalai..

Syam said...

யேம்மா சகோதரி உன்ன எங்க கால வாரினேன் நீ அலை கடலென திரண்டு வர சொன்ன வாய்ல சொன்னா மக்கள் வருவாங்களா அது தான் பிரியாணி பொட்டலம் எல்லாம் ரெடி பன்னேன்...

@usha,உங்களுக்கு தமிழ் படிக்க தெரியாதா (ஆமானு மட்டும் சொல்லுங்க இஷ்டத்துக்கு உங்க பிளாக்ல காமெண்ட் போடலாம்)

Ram said...

enakku tamizh theriyum nu nenachen aana indha post padichadukku appuram oru sandhegam irukku, onnume purilaye :-?

வேதா said...

@கீதா,
//என்னால் முடியும், தம்பி, தங்கைகளே! :D//
ஆக மொத்தம் வயசுல பெரியவங்கன்னு ஒத்துகறீங்க:)

ஸ்ரீக்கு போய் பதவி கொடுக்க போறீங்களா?, அவங்களே பாவம் போன வருஷ கொலுவை பத்தி இன்னும் எழுதிக்கிட்டு இருக்கா அதுக்குள்ள இந்த வருட கொலுவே வர போகுது:). உம், மண் குதிரையை நம்பி தண்ணியிலே இறங்கறீங்க பாக்கலாம் என்ன ஆகுதுன்னு:)

@கமல்,
என்னப்பா திடீர்னு பேர மாத்திட்டீங்க:) நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம், கீதா மேடத்தை 'ஆண்ட்டி' கூப்பிட்டீங்க இல்ல அத அப்டியே தொடருங்க.:)

@சிவா,
அனேகமா அவங்க கண்ணாடி போட மறந்துருப்பாங்க:)

@உஷா,
அதுக்கு தான் அப்பப்ப இங்க வந்து எட்டி பார்க்கணும்:)

@ச்யாம்,
//ஆனா இவளோ சின்ன வயசுல கீதாக்கு இத்தனை சோதனயா.... //
சொல்றதையும் சொல்லிட்டு அப்டியே சின்னப் புள்ள மாதிரி நடிப்பைப் பாரு:) சரி உங்க கஷ்டம் புரியுது, உங்களுக்கு பதவி ஆசை, அதான் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை:)

@ராம்,
சந்தேகமே இல்லை இது தமிழ் தான்:) அது ஒன்னும் இல்லை என்னை கொஞ்சம் சீண்டீனாங்க இந்த கீதா, அதான் அவங்களை வச்சு ஒரு காமெடி பண்ணிட்டேன்:)

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பியை நம்பி(வடிவேலு மாதிரி)கீதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் வேதாவே உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

வேதா said...

@தி.ரா.ச,
சார் தங்கள் அனுதாபங்களுக்கு நன்றி:) ஆனாலும் நான் யாரையும் நம்பி இதில் இறங்கவில்லை, தன் கையே தனக்குதவி கோட்பாடு தான்:) அம்பி அவர் வெளியிலிருந்து ஆதரவு தருகிறார்:)

நாகை சிவா said...

//@சிவா,
அனேகமா அவங்க கண்ணாடி போட மறந்துருப்பாங்க:)//
எப்படிங்க இப்படி பட் பட்னு போட்டு உடைக்கிறீங்க.
கீதா நீங்களே வந்து என்னனு கேளுங்க

smiley said...

tell me how did u solve the disconnecting vedalam problem, pls :)

வேதா said...

@சிவா,
ஏங்க அவங்களுக்கு சமாளிக்கவே முடியலை அதான் இந்த பக்கமே வரலை பாருங்க:)

@ஸ்மைலி,
அதான் சொன்னேனே என் பதிவுகளைப் படிச்சு என்னைய நல்லவ ன்னு சொல்லிடுச்சு, அதான் போனா போகுதுன்னு விட்டுட்டேன். அதுவா சரி பண்ணிட்டு போயிடுச்சு:)

நாகை சிவா said...

//அதான் சொன்னேனே என் பதிவுகளைப் படிச்சு என்னைய நல்லவ ன்னு சொல்லிடுச்சு,//
இருந்தாலும் நீங்க அநியாயத்துக்கு காமெடி பண்ணுறீங்க வேதா.
ஹிஹிஹிஹிஹிஹி
நல்லா சிரிச்சுட்டேன் போதுமா

My days(Gops) said...

mudivaa enna seiya sollureenga?

வேதா said...

@siva,
என்ன இருந்தாலும் உங்கள விட காமெடி பண்ண முடியுமா:)

@gops(md),
அது சரி, நீங்க ஒன்னும் பண்ண வேண்டாங்க:)

Gopalan Ramasubbu said...

MO.PA.KI nalla post.Vedaalam thirumba eppa murungai marathula eerum?;)

My days(Gops) said...

paartheengala, last'la ippadi solliteeenga...

Jeevan said...

enna kodumai vedalama! hope its fine now.

வேதா said...

@gops,
அது திரும்பி ஏறாது, அந்தளவுக்கு என் கிட்ட பயம்:)

@gpps(md),
அய்யோ தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க:( உங்க துடிப்பு புரியுது, ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா, கீதா மேடத்தின் பதிவுக்கு போய் உங்க வயசு என்னன்னு கேளுங்க போதும்:)

@ஜீவ்,
கொடுமை தான், இப்ப சரியா போச்சு:)

Known Stranger said...

yarappa angay - kupiduu kollarai- entha vedavikarmathithani thai marathil vavall polla thonga viddavum