Tuesday, August 29, 2006

"Five Wierd things about me"

நம்ம வலையுலுக பிஞ்சுக் கைக்குழந்தை, அகில உலக கப்தான் ரசிகர் மன்ற தலைவர், நண்பர் அர்ஜுன் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்த சங்கிலி பதிவில் நானும் இணைந்துக் கொள்கிறேன். அவர் கொடுத்த தலைப்பு "Five Wierd things about me" நான் நல்லவ, வல்லவ, பல பேரை வாழ வைத்த தெய்வம்ன்னு உங்க எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் என் குறை நிறைகளை இங்கே ஒளிவு மறைவின்றி பட்டியிலிடுகிறேன், வழக்கம் போல எல்லாரும் வந்து உங்க பொன்னான பின்னூட்டங்களை இட்டுச் செல்லவும்(இந்த தடவை முதல் பின்னூட்டத்திற்கு அம்பி கேசரியும், ச்யாம் புளியோதரையும் என் சார்பில் பரிசளிப்பார்கள், அப்படி பரிசை தராமல் அவங்களே ஒரு flowல்ல சாப்பிட்டுட்டா நான் அதுக்கு பொறுப்பு இல்லை:)

மறதி: ஒரு முறை என் சித்தப்பாவும், சித்தியும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது, சித்தியை எங்கள் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு வெளியே எங்கேயோ போனவர் ரொம்ப நேரமா வரவேயில்லை. நாங்கள் எல்லாம் பயந்துவிட்டோம், திடீரென்று போன் வருகிறது என் சித்தப்பாவிடமிருந்து, வீட்டுக்கு போய் விட்டேன் என்று. அதாவது சித்தியுடன் வந்ததையே மறந்து விட்டு அவர் வீட்டுக்கு போயிருக்கிறார். அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க பரம்பரையில் வந்த நான் மட்டும் மறதிக்கு விதிவிலக்கல்ல. ஒரு முறை என் அம்மாவை சைக்கிளில் பின்னாடி அமர வைத்து நான் வீட்டுக்கு போய் கொண்டிருந்தேன். போகும் வழியில் மழை பெய்ததால் தண்ணீர் குட்டையாக தேங்கி இருந்தது. என் அம்மா கீழே இறங்கிக் கொண்டு என்னை மட்டும் சைக்கிளில் அந்த குட்டையை தாண்டி வர சொன்னார், அவர் சுற்றிக் கொண்டு வந்து ஏறிக் கொள்கிறேன் என்றார். நான் என்ன பண்ணினேன், தண்ணீரை தாண்டி சைக்கிளை நிறுத்தாமல் என் அம்மாவை அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்பதையே மறந்து வீட்டுக்கு சென்று விட்டேன். இத்தனை வருடம் கழித்தும் என் அம்மா இதை சொல்லி காட்டுவார்கள். இது பரவாயில்லை, இப்பொழுதும் தினமும் நடக்கிற ஒரு விஷயத்தைக் கேட்டீங்கன்னா என் மறதியின் மகாத்மியம் புரியும், தினமும் நான் கடைக்கோ அல்லது கோவிலுக்கோ செல்வதற்காக கீழே இறங்கி போகும் போது மோட்டார் ஸ்விட்சைப் போடும் படி என் அப்பா கூறுவார். அவர் தொடர்ந்து 10 நாள் சொன்னால், ஒரு நாள் மட்டுமே ஞாபகம் வைத்துக் கொண்டு போட்டு விட்டு போவேன். அது என்னமோ தெரியல மாடியிலிருந்து இறங்கும் வரை ஞாபகம் இருக்கும், ஆனால் கீழே வந்தவுடன் யாருடனாவது பேசிக் கொண்டு மறந்து விடுவேன். இது எப்படி இருக்கு?:)

கோபம் : சாதாரணமாக விருச்சிக ராசியினருக்கு கோபம் அதிகம் என்று கூறுவர். எங்கள் வீட்டில் நான், என் அப்பா ரெண்டு பேருமே விருச்சிக ராசி. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் கோபம் வந்தது என்றால் அவ்வளவு தான் என் அம்மா தான் அரண்டு போய் விடுவார்கள். ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்குமென்றும் சொல்வார்கள்:)(சரி சரி உங்களுக்கு தெரியும் இருந்தாலும் சொல்றது என் கடமை அல்லவா?) இப்பொழுதெல்லாம் கோபத்தை மிகவும் குறைத்துள்ளேன்.
சாதாரணமாக எனக்கு யாராவது தவறு செய்தால் அவரிடமே அதை சொல்லி விடுவேன், நீங்கள் செய்வது தவறென்று. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே அது தான் என் கொள்கை

தயக்கம்: சில பேர் உண்டு, எப்படியென்றால் அந்த நிமிடம் வரைக்கும் யாரென்று தெரியாது, ஆனால் நம் கிட்ட வந்து அவங்க நதிமூலம், ரிஷிமூலம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நாமும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனக்கு எப்பவுமே கொஞ்சம் தயக்கம் அதிகம், முதன் முதலாக யாரையாவது பார்த்தால் கூட ரொம்ப தயங்கிக் கொண்டே தான் பேசுவேன். என் கல்லூரி நண்பர்கள் கூட 'உன்னை முதல் முதலில் பார்த்த பொழுது சரியான அழுத்தக்காரி என்று நினைத்தேன்' எனக் கூறுவார்கள். எனக்கு ஒருவரை பிடிக்கும் வரை தான் தயங்குவேன். பழகி விட்டால், அவளா இவள் என்று வியக்கற அளவுக்கு மாறிடுவேன். அதனால் தான் எனக்கு நெருங்கிய நண்பர்கள் மிக குறைவு. என்னை புரிந்துக் கொண்டவர்கள் மட்டுமே என்னுடன் நன்றாக பழகமுடியும்.

பிடிவாதம் : என் வீட்டில் எனக்கு பெயரே வணங்கா முடி என்பது தான். ஒரு விஷயத்தில் நான் ஒரு முடிவு எடுத்து விட்டால் அவ்வளவு தான் அதை மாற்றவே மாட்டேன். ஆனால் முடிவு எடுக்க தான் நேரமாகும், ரொம்ப யோசித்து தான் எதையும் செய்வேன். மற்றவர் யாரும் என்னை கட்டுப்படுத்துவது எனக்கு பிடிக்காது, எங்க வீட்டுல கூட என்னால ஏதாவது காரியம் ஆகனும்னா அப்படியே அன்பை பொழிவாங்க, ஏன்னா அதிகாரத்துக்கு கட்டுப்படாத என்னிடம் வந்து ப்ளீஸ் எனக்காக இதை செய் என்று அன்புடன் கேட்டால் உடனே சரி என்று சொல்லி விடுவேன். அன்புக்கு நான் அடிமை:)

பயம்: சாதாரணமாக எதற்கும் பயப்படாத நான் இரண்டு விஷயங்களுக்கு ரொம்ப பயப்படுவேன்,

1. உயரம். : எங்க வீட்டு மொட்டை மாடியிலிருந்து கூட எட்டிப் பார்க்க பயம்.
2. கரப்பான்பூச்சி : அப்புறம் இந்த கரப்பான் பூச்சி இருக்கு பாருங்க , சொல்லும் போதே அருவெருப்பாக இருக்கு, வீட்டுக்குள்ள வந்தச்சுன்னா அவ்வளவு தான் நான் போட்டது போட்ட படி வெளியில் ஓடி விடுவேன், என் அண்ணனை தேடி. அவன் தான் இந்த கரப்பு பிடிப்பதில் அசகாய சூரன், அது எங்கு பறந்தாலும், பின்னாடியே போய் பிடிச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பான்.


இதை தொடர்ந்து பதிய நான் அழைக்கும் வலைப்பதிவர்கள்

1.'அன்பு சிஷ்யை' சுபா

2.'கலியுக நாரதர்' அம்பி

3.'மொக்கை பதிவு' கீதா

40 comments:

Jeevan said...

Hello enna nayabakam irukku la, naan thaan Jeevan maranthuda mattengala:)

ennketaium yaravathu anbai pozinja udana flataeduvan, entha karapanpuchi payam yaraium vittuvakla. Very nice Tag friend.

smiley said...

இத்தனை வருடம் கழித்தும் என் அம்மா இதை சொல்லி காட்டுவார்கள்.
niyabaga marithi kudumbam enru solluvatharku illayay

oru vagaiyil marathi nallathu, marapom mannipom :)

பொற்கொடி said...

ஹை நானும் மறதி மங்கம்மா தான்.. :)புது வீடு கட்டி இருக்கேன்.. உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கறேன்னு சொல்லணுமா :)

indianangel said...

Aha! vazhkaila ella pomabalaingalum meesa vecha ore jandhukitta bayapadardhunna adhu karappan poochi maatundhaan polarukku! hmm! pasanagala namaa route maatha vendiyadadhudhaan! :) Nice tag!

Syam said...

//ஒரு விஷயத்தில் நான் ஒரு முடிவு எடுத்து விட்டால் அவ்வளவு தான் அதை மாற்றவே மாட்டேன்//

இது எங்களுக்கு தெரியாதா...வயசானவங்கனு கூட பார்காம தலைவிய இந்த ஓட்டு ஓட்டும் போதே... :-)

டிஸ்கி,
கீதாக்கா இதுல உள் குத்து எதுவும் கிடையாது :-)

Syam said...

பயம் : பல்லிய பார்த்து பயப்பட மாட்டீங்களா :-)

ambi said...

//சாதாரணமாக விருச்சிக ராசியினருக்கு கோபம் அதிகம் என்று கூறுவர்//
Yow veda! நியாமான விஷயத்துக்கு தான் கோபம் தான் வரும். grrrrrrrrr.
ஆனால் பிடிவாதம் ஜாஸ்தி என்பது உண்மை தான்! உங்கள் மேல் தப்பு இல்லை, இது தான் விருச்சிகத்தின் பண்பு.

katchi maariya syam vaazhga! :)

ஜீவன்! கண்டிப்பாக உங்களுக்கு கேசரி வேணுமா? :)

ambi said...

btw, already arjuna has tagged me! anyway will try to write it down dheyvame! :)

வேதா said...

@ஜீவ்,
யோவ் உன்னையெல்லாம் மறக்கமுடியுமா? சொல்ற வேலையைத் தான் மறந்துப் போவேன், பழகியவர்களை என்றும் மறக்க மாட்டேன்:)

@ஸ்மைலி,
என் அம்மா தப்பி தவறி இந்த குடும்பத்தில் மாட்டிக்கிட்டாங்க:)

மறதி கெட்ட விஷயங்களுக்கு நல்லது தான்:)

@பொற்கொடி,
புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்:)

@இந்திய தேவதை,
ஹிஹி நல்லா காமெடி பண்றீங்க:)

@ச்யாம்,
அண்ணாத்த தலைவி தலைநகரத்துக்கு போறாங்கன்னு இப்படி தைரியமா உதார் விடுறீங்க:) பாருங்க வந்து(எப்படியும் தலைநகரத்து மக்கள் அவங்க அக்கப்போர் தாங்காம துரத்தி விட்டுடுவாங்க) வைக்க போறாங்க ஆப்பு:)

பல்லி பறந்துச்சுன்னா அதைப் பார்த்தும் பயப்படுவேன்:)

@அம்பி,
சரியா சொன்னீங்க, நியாயமான விஷயத்துக்கு தான் கோவம் வரும், அதுக்குள்ள உங்களுக்கு கோவம் வந்துடுச்சு பாருங்க:)

ச்யாமுக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன், வழக்கம் போல தலை(வலி)விக்கு மின்னஞ்சல் போயாச்சா?:)

பாத்தியா புத்திய காமிச்சுட்டீங்க:) ஜீவனுக்கு கேசரி கண்டிப்பா குடுத்துடுங்க:)

அர்ஜுன் உங்களையும் டேக் பண்ணிட்டாரா? சரி பரவாயில்லை, என் பேரையும் சொல்லி ஒரு பதிவு போட்டுருங்க:)

கீதா சாம்பசிவம் said...

ஹி,ஹி,ஹி, அப்படியே நம்ம குணத்தைப் பிட்டுப் பிட்டு வச்சிட்டீங்க. சூடான் புலி உங்களை என் சிஷ்யைனு சொன்னது சரிதான். அப்புறம், நானும் விருச்சிக ராசி தான், முடிவு எடுக்கறது கூட உங்களைப் போல் தான். அப்புறம் மாத்திக்கிறது கஷ்டம். அதனால் நான் எழுதினால் copy, paste பண்ணினாப்பல இருக்கும். தவிர ஊருக்குப் போறேன்.

நற நற நற நற "மொக்கைப் பதிவு கீதா" வா? இருக்கட்டும் வந்து தனியா வச்சுக்கறேன், இதுக்கு.

கீதா சாம்பசிவம் said...

அப்புறம், இந்த பயம் விஷயத்திலேயும் அப்படியே தான் உங்களை மாதிரி, இன்னும் கரப்பான் பூச்சி என்றால் (வெளியே சொல்லாதீங்க! கேவலமாப் போயிடும்)

@ அம்பி, ச்யாம், எல்லாம் நான் ஊருக்குப் போற தைரியம்தான் இப்படி எல்லாம் பேசச் சொல்லுது. இருக்கட்டும் வந்து எல்லாருக்கும் இருக்கு ஆப்பு!

வேதா said...

@கீதா,
ரெண்டு பேரும் ஒரே ராசியா அதான் விடாம மோதிக்கறோம்:)
சரி முதல்ல நீங்க திரும்பி வர்ரதுக்கு பயணச்சீட்டு கிடைக்கட்டும், அப்புறம் பார்க்கலாம் யார் யாருக்கு ஆப்பு வைக்கறாங்கன்னு:)

நாகை சிவா said...

வேதா! ரொம்ப நாள் ஆச்சு ஒரு பதிவ திறனாய்ச்சு! இன்னிக்கு உங்க பதிவை திறனாய்வு செய்யலாம் என்று முடிவுடன் வந்தாச்சு.
ரெடி ஸ்டாட்!

இப்ப தான் ஆறு விளையாட்டு முடிச்சி பதிவுலகம் கொஞ்சம் அமைதியா இருக்கு. பொறுக்காதே நம் மக்களுக்கு அடுத்த விளையாட்ட ஆரம்பித்து விட்டார்கள். இப்ப என்ன ஐந்தா? சரி அதை தான் பார்ப்போம்.

1, மறதி!
நீங்க எழுதியதை படித்த பிறகு இதை மறதி என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. அலட்சியம் என்று தான் எடுத்துக் கொள்ள முடிகின்றது. அவங்க என்ன சொல்லுறது நாமா என்ன அதை நின்னு பொறுமையா கேட்பது என்ற விளைவுகள் தான் அது எல்லாம்.

உங்க சித்தாப்பாவை பற்றி எல்லாம் என்னால் சொல்ல முடியாது. அதனால அதை ஒதுக்கி விடலாம்.

ஆக மொத்தில் இது கொஞ்சம் கூட நல்லா இல்ல...

தி. ரா. ச.(T.R.C.) said...

வேதா நானும் உங்க கட்சிதான் மறதியில்.ஒரு முறை ஆபிஸ்லேருந்து வரும்போது மனைவியின் ஆபிஸ்க்குபோய் அவளையும் கூட்டிக்கொண்டு வரும்போது மவுண்ட் ரோடில் நல்ல மழை.ரொம்ப தண்ணியாக இருந்தது என்று அவள் இறங்கி விட்டாள் .அது தெரியாமல் நான் இருக்கிறாள் என்ற நினைப்பில் வீடுவரை (டீ'னகர்)வந்து பார்த்தால் பக் என்றது.இதில் வழியெல்லாம் பேசிக்கொண்டு வேறு வந்தேன். வழியில் 4 பேர் என்னை ஒரு மதிரியாக பார்த்தும் கூட திரும்பி பார்க்கவில்லை.

நாகை சிவா said...

2, கோபம் & 4, பிடிவாதம்:

இதை இரண்டும் சேர்த்து திறனாய்வு செய்யலாம்.
//சாதாரணமாக விருச்சிக ராசியினருக்கு கோபம் அதிகம் என்று கூறுவர். //

யாரு சொன்னா? ஒரு விசயத்தை சொல்லும் போது உதாரணத்துடன் சொல்லனும். புரியுதா. உங்களுக்கு கோபம் மற்றும் பிடிவாதம் சற்று அதிகமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். உங்க பிறந்த தேதியை வைத்து சொல்கிறேன். திமிர் பிடித்தவர்கள் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம்.

கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்றால் கோபப்படாதவர்களிடம் எல்லாம் பணம் இருக்குமா. எதையாவது சொல்லும் என்று சொல்ல வேண்டியது.
நீங்க நக்கீரன் பத்திரிக்கை விடாம படிப்பீங்களோ.... நெற்றிக்கணன அடிக்கடி திறக்காதீங்க. பிடிச்சு மியூசியத்துல நிக்க வச்சிட போறாங்க.

//அன்புக்கு நான் அடிமை:)//
ரஜினி படம் தானே இது. நல்லா இருக்கும்ங்க அந்த படம்.
நிறையா தமிழ் சினிமா பாப்பீங்களோ? இல்ல ஒரு சின்ன டவுட் தான்.

//ஒரு விஷயத்தில் நான் ஒரு முடிவு எடுத்து விட்டால் அவ்வளவு தான் அதை மாற்றவே மாட்டேன். ஆனால் முடிவு எடுக்க தான் நேரமாகும், ரொம்ப யோசித்து தான் எதையும் செய்வேன். //

நல்லா பாயிண்ட். முடிவு எடுக்கும் முன்பு தான் யோசிக்க வேண்டும். எடுத்து விட்டால் சரியோ தப்போ அதை குறித்து வருத்தப்படாமல் அதை சந்திக்க வேண்டும். Hats Up.

நாகை சிவா said...

யப்பா, யாருச்சும் ஒரு சோடா உடைச்சு கொடுக்க கூடாதா? பங்காளி எங்கன இருக்க.

தயக்கம்:
அப்ப உங்கிட்ட வந்து ஒருத்தரை பற்றி கேட்டால் அவர்களின் நதிமூலம், ரிஷி மூலம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம். இதை நோட் பண்ணிக்குறேன். எதிர்காலத்தில் உதவும். வேதைவை புரிந்து கொள்வது எப்படி என்று ஒரு புத்தகம் போடுங்க. அட்லிஸ்ட் ஒரு பதிவாச்சும் போடுங்க. படிச்சு பார்த்து உங்களை புரிஞ்சிக்க முடியுமா முடியாதாது என்று ஒரு முடிவுக்கு வரும் இந்த தமிழ் பேசும் நல்லுலகம்.

பயம்!
//சாதாரணமாக எதற்கும் பயப்படாத நான் இரண்டு விஷயங்களுக்கு ரொம்ப பயப்படுவேன்,//

பயம் என்று டைட்டில் போட்டு எழுதிட்டு அப்புறம் என்ன சாதாரணமாக எதற்கும் பயப்படாத என்ற வார்த்தைகள் வேற.......

ஒ ஹைட்னு உங்களுக்கு பயமா. ரிபிள் டவர் மேலே ஏறி பாக்கனும் என்று என்கிட்ட சொன்னீங்க.

கரப்பான்பூச்சி: அது என்னங்க பண்ணுச்சு உங்கள. அதுவும் ஒரு உயிர், உங்களை மாதிரி இந்த உலகத்தில் உள்ள ஒரு ஜீவராசி என்று நினைத்து பாருங்க. நல்லா பிரண்ட்லியா பழகுங்க அதுங்கிட்ட...

உங்களின் இந்த இரண்டு விசயங்களுக்கு நோட் செய்து வைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் உபயோகப்படும் என்ற நோக்கத்தில்.....

சரிங்க கண்ணா பிண்ணா என்று திறனாய்வு செய்தாச்சு. போதும் என்று நினைக்கின்றேன். மேற்கொண்டு ஏதும் ஆராய வேண்டும் என்றால் சொல்லி அனுப்புங்க. வந்த ஆராய்ஞ்சிடலாம்.

:)))))))))

நாகை சிவா said...

//ரெண்டு பேரும் ஒரே ராசியா அதான் விடாம மோதிக்கறோம்:)//

பார்த்து மோதுங்க. அடி பலமா பட்டு விட போது :)

My days(Gops) said...

மறதி:- vandi key'a vittuteeengaley?

கோபம்:- ella idathilaiuma? illa it depends'a?

தயக்கம்: //எனக்கு ஒருவரை பிடிக்கும் வரை தான் தயங்குவேன். பழகி விட்டால், அவளா இவள் என்று வியக்கற அளவுக்கு மாறிடுவேன். //
same pinch.... aval, ivalaa'va eduthutu avan, ivanaaa nu padinga..

பிடிவாதம் :- //அன்புக்கு நான் அடிமை// hey hey paarthaachi paarthaachi pala pera paaarthaachi..

பயம் :- //எங்க வீட்டு மொட்டை மாடியிலிருந்து கூட எட்டிப் பார்க்க பயம்.//
apppa, keela irrundhu mela paaarpeengala?

கரப்பான்பூச்சி :- unga brother'ku en saaaarba oru cheers sollidunga..

Arjuna_Speaks said...

usha - tag eluthinathu nandri nanbiyai :) - neengal piravi payanai(??) adainthu veetirgal thayee :D

Balaji S Rajan said...

Interesting to know few things about you. I appreciate your frankness in accepting and revealing them too. By the way your fear about Cockroaches is universal. As far as I know, many ladies are afraid for Cockroaches. One tip for not forgetting to switch off motor while going down. You can make sound....Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr until you go down and if anyone ask you about the sound you are making, you can switch off the motor and then talk to them. Ha..ha..

வேதா said...

@சிவா,
சிவா இது அலட்சியம் இல்லை உண்மையாகவே மறந்து விடுவேன். ஒரு வேலையைச் செய்கிறேன் என்று சொல்லி பின் வேண்டுமென்றே செய்யாமல் அலட்சியப்படுத்துவதை விட அதை செய்ய முடியாது என்று நேரடியாக சொல்லி விடுவேன்.

//. உங்களுக்கு கோபம் மற்றும் பிடிவாதம் சற்று அதிகமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். உங்க பிறந்த தேதியை வைத்து சொல்கிறேன். திமிர் பிடித்தவர்கள் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம். //
நல்லா தான் திறனாய்வு செய்றீங்க, ஏங்க நீங்க படிக்கற காலத்துல உங்க படிப்பை இந்த மாதிரி திறனாய்வு பண்ணியிருக்கீங்களா?:)

//கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்றால் கோபப்படாதவர்களிடம் எல்லாம் பணம் இருக்குமா. எதையாவது சொல்லும் என்று சொல்ல வேண்டியது.//
நியாயமான கோபம் என்று அர்த்தப்படுத்தி கொள்ளவும், முன்கோபம் இல்லை:)(ருத்ரம் பழகு என்று சொன்னதை பின்பற்றுகிறேன், நியாயமான காரணங்களுக்கு மட்டும்:)

//எடுத்து விட்டால் சரியோ தப்போ அதை குறித்து வருத்தப்படாமல் அதை சந்திக்க வேண்டும்//
ரொம்ப சரி, நானும் அந்த மாதிரி தான்:)

//அப்ப உங்கிட்ட வந்து ஒருத்தரை பற்றி கேட்டால் அவர்களின் நதிமூலம், ரிஷி மூலம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம். இதை நோட் பண்ணிக்குறேன். எதிர்காலத்தில் உதவும்.//
அப்படியெல்லாம் என்னை நம்பி சொன்னவர்களின் நம்பிக்கையை கெடுக்க மாட்டேன்:)

//ரிபிள் டவர் மேலே ஏறி பாக்கனும் என்று என்கிட்ட சொன்னீங்க. //
நான் எப்ப சொன்னேன்?

//அதுவும் ஒரு உயிர், உங்களை மாதிரி இந்த உலகத்தில் உள்ள ஒரு ஜீவராசி என்று நினைத்து பாருங்க//
அதெல்லாம் நினைக்கும் போது நல்லா தான் இருக்கு ஆனா நடைமுறைல ஒத்து வர மாட்டேங்குது:)

//சரிங்க கண்ணா பிண்ணா என்று திறனாய்வு செய்தாச்சு. போதும் என்று நினைக்கின்றேன். மேற்கொண்டு ஏதும் ஆராய வேண்டும் என்றால் சொல்லி அனுப்புங்க. வந்த ஆராய்ஞ்சிடலாம்.//

அது யாருங்க கண்ணா? அது கண்ணா பிண்ணா இல்லை, கன்னா பின்னா:)

மேற்கொண்டு ஆராய போறீங்களா? அய்யோ வேண்டாம், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி சூடான்ல்ல புல் மேஞ்சுக்கிட்டுருந்த உங்களை வெத்தலை பாக்கு வச்சு அழைச்சுதல நல்லாவே திறனாய்வு செஞ்சுட்டீங்க, ஆனா இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், நீங்களும் இது மாதிரி பதிவு போடுங்க, நானும் அங்கன வந்து திறனாய்வு செய்றேன்.:)

//பார்த்து மோதுங்க. அடி பலமா பட்டு விட போது :) //
பாவம் வயசான காலத்துல சும்மா இருந்தா தானே, வம்பு தான் அவங்களுக்கு:) தலைவி தலைநகரம் போய்டாங்க அந்த தைரியத்துல சங்கத்து ஆளுங்க ரொம்ப தான் துள்ளுறீங்க :)

வேதா said...

@திராச,
ஹிஹி அன்னிக்கு செம டோஸ் விழுந்துருக்குமே:)
என்னை பன்மையில் விளித்து உங்க வயசைக் குறைச்சுக்காதீங்க, ஒருமையிலேயே அழைக்கலாம்:)

@gops(md)
சாவி என்னிக்குமே மறக்கற்து தான்:)
கோபம் நியாயமான் விஷயங்களுக்கு மட்டும் தான்:)
apppa, keela irrundhu mela paaarpeengala?
ரொம்ப தான் நக்கல அதிகமாயிடுச்சு உங்களுக்கு:)

@அர்ஜுன்,
பின்ன உங்க ஆசையை நிறைவேற்றலேனா எப்படி?:) நிஜமாகவே பிறவி பேறு தான்:)

@பாலாஜி,
சும்மா சொல்லக் கூடாதுங்க, இந்த அம்பியோட பதிவெல்லாம் படிச்சு உங்களுக்கு நக்கல் அதிகமாப் போச்சு, உங்களுக்கு ஒரு காலம் வந்தா எனக்கு ஒரு காலம் வராதா?:)

Bala.G said...

naanum vrichiga raasikaarungov....enakum nalla kovam varum...

ambi said...

//இந்த அம்பியோட பதிவெல்லாம் படிச்சு உங்களுக்கு நக்கல் அதிகமாப் போச்சு,//
sonnathu avaru, atchathai enakka? naane asine! gathinu, ooops shorry, sivanee gathi! nu irukeen. y vambuku eluthufying..? LOL

வேதா said...

@பாலா,
இது என்னப்பா எல்லாரும் வந்து நானும் விருச்சிக ராசின்னு லைன் கட்டி சொல்லிக்கிட்டு இருக்கீங்க:)

@அம்பி,
என்ன பண்றது தலைவலியும் சீசீ தலைவியும் தலைநகரம் போயாச்சு, எனக்கு பொழுது போக வேண்டாமா?:)

அப்புறம் உங்களைத் தான் அசினின் தம்பின்னு அறிவிச்சுட்டாங்க இல்ல, அப்புறமும் ஏன் இப்படி பிலிம் காட்டிக்கிட்டு திரியிரீங்க:)

Pavithra said...

Ha Ha .. Good post !!
I'm exactly opposite in the first 4 but 5th "bayam"..oops I forgot to write it when I was tagged. Cockroach, lizard and frog are my worst enemies. Athu ennovo theriyala.. I never overcome it. Its not a weird thing..most girls have this weirdness.

Usha said...

Veda, I cant read ur posts! :( Enna matter-ne therila, first I thot it was some bizarre thing, but inikum appadidhan iruku. Edhavadhu font download pannanuma enna - any latest updates on ur site?

வேதா said...

@pavithra,
i agree thats most girls have this weirdness.:)

@usha,
aiyo ennama solra en posts padika mudiyalaaya? latest updates perisa vonum illa, but inimey thaan nerya varum, nii explorer thaana use panre, mozilla firefoxla tamil fonts padika mudiyathu:(

பொற்கொடி said...

@நாகை சிவா:
நீங்க ஒரு முடிவோட தான் சுத்தறீங்க :)) இப்படி பேசினா சோடா ஃபேக்டரியே வாங்கணும் உங்களுக்கு...

பொற்கொடி said...

எனக்கு பொழுது போகல :( அடுத்த பதிவைப் போட போறீங்களா இல்லியா..

வேதா said...

@பொற்கொடி,
அம்மா பொற்கொடி உனக்கு பொழுதுபோகலன்னு ஒரே காரணத்துக்காக நான் பதிவு போட முடியுமா?:) நான் பொதுவாக வாரத்துக்கு ஒரு பதிவு என்கிற முறையில் தான் போடுவேன், அதனால் ஒரு 4 நாளைக்கு பொறுத்துக்கோ:) ஆனாலும் இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது குழந்தை(நான் தான்) பயந்துடும்:)
சிவாக்கு சோடா பாக்டரியா? இதுக்கே மலைச்சுப் போயிட்டா எப்படி? இன்னும் வரும் பாரு ஆப்பு;)

ambi said...

//இப்படி பேசினா சோடா ஃபேக்டரியே வாங்கணும் உங்களுக்கு...//

//சிவாக்கு சோடா பாக்டரியா? //

@veda, & porkodi, ayooo! enakku onnu sollanum pola irukku! but solla maatten.
"thidikiriathu en vaay!
adhai adakku! adakku engirathu uravu!" LOL :)

வேதா said...

@அம்பி,
adhai adakku! adakku engirathu uravu!"
அது அந்த பயம் இருக்கட்டும்:)

Known Stranger said...

in fact thatz my favorite line I have no clue how i got those flow. though many said everything fine about other stanca - i was wondering will there be some one who could really say a word on the stance what i really enjoyed while writting. thanks veda

பொற்கொடி said...

enna vedha innum indha ulagathaye paarkada ennai poi aal aluku akka amma nu kupidringa.. apram doo vituduven :((

Syam said...

//இப்படி பேசினா சோடா ஃபேக்டரியே வாங்கணும் உங்களுக்கு...//

அம்பியோட தங்கச்சின்னு நல்லா தெரியுது...பொற்கொடி நீங்க சரவெடி...ஆனா அதுக்காக பதிவு போட சொல்லி என் தங்கைய மிரட்டுரது நல்ல இல்ல :-)

Syam said...

//enna vedha innum indha ulagathaye paarkada ennai poi//

ஆரம்பிச்சுடாங்கையா...ஆரம்பிச்சுட்டாய்ங்க :-)

வேதா said...

@பொற்கொடி,
//enna vedha innum indha ulagathaye paarkada ennai poi//
எங்கண்ணன் சொன்ன மாதிரி கிளம்பிட்டாங்கய்யா,கிளம்பிட்டாங்கய்யா:)
தலைவி இல்லாத நேரத்தில அவங்க இடத்தைப் பிடிக்க இப்படி ஒரு சதி வேலையா??;) ஆனானப்பட்ட தலைவியே இவ்ளோ சீன் போடல:)

Viji said...

haiyyo!! Veda, ennala idha nambave mudila!! கோபம், தயக்கம், பிடிவாதம்... indha moonum enakkagave ezhudhina madhiri irukku... nanum appadi dhan. Exactly the same... kenjina dhan vela nadakkum... konjam intimidate panninalum murukkippen nan.
Really Surprising to read this!!
P.S: You need not publish this. :)

Gopalan Ramasubbu said...

தமிழ்துறை,வணங்கா முடி இன்னும் வேற எதாவது பேர் இருக்குதுங்ளா?;)

//ப்ளீஸ் எனக்காக இதை செய் என்று அன்புடன் கேட்டால் உடனே சரி என்று சொல்லி விடுவேன். அன்புக்கு நான் அடிமை:)//


சூப்பர் ஸ்டாரினி வேதா வாழ்க :D