Friday, September 15, 2006

கேதார்நாத்தில் நான் - 2

மு.கு: குதிரையைப் பத்தி குறிப்பிட்டதும் நான் குதிரையிலிருந்து விழுந்துட்டதா சந்தோஷப்பட்ட என் பாசக் கட்சிகளே அது மாதிரி எதுவும் நடக்கலை:)


மறுநாள் காலையில் நாங்கள் தங்கியிருந்த மலைக்கிராமமான ராம்பூரிலிருந்து இன்னும் மேலே கெளரிகுண்ட் என்னும் இடத்திற்கு பேருந்தில் சென்றோம். இந்த இடத்தில் இயற்கையாகவே பூமியிலிருந்து வெந்நீர் ஊற்றுகள் வருகின்றன. குளிருக்கு சுகமாக வெந்நீரில் குளித்து குதிரைப் பயணத்துக்கு தயாரானோம். குதிரைகள் கட்டி வைத்திருக்கும் இடத்திலிருந்து ஒரு மலைப்பாதை துவங்குகிறது, மலையை சுற்றி சென்று சுமார் 14 கிமீ பயணித்தால் கேதார்நாத் கோவில் சென்றடையலாம். ஏற்கனவே குதிரை குஷியில் இருந்த எங்களுக்கு முன் குதிரை என்று சொல்லி ஒன்றை கொண்டு வந்து நிறுத்தினார்கள்(pony).


எனக்கு கறுப்பு நிறத்தில் ஒரு குதிரை, என் தம்பிக்கு வெள்ளை நிறம், என் அம்மாவிற்கு ப்ரவுன் நிறம். அடப்பாவிகளா, இது எங்களையும் சுமந்துண்டு 14 கிமீ ஏறுமா? அப்படின்னு நான் யோசிக்க அதுக்குள்ள என் தம்பி குதிரை மேல ஜம்மென்று ஏறி அமர்ந்து விட்டான். குதிரைக்கார பையன்(நிஜமாவே சின்ன பையன், 15 ,16 வயசு தான் இருக்கும் ஏற்கனவே குதிரை ஒழுங்கா கொண்டுபோய் சேர்க்குமான்னு பயம், இதுல வேற துணைக்கு இவனுங்களான்னு பயம் அதிகமாயிடுச்சு)'தீதீ(அக்கா), ஜல்தி ஜல்தி(சீக்கிரம்)' என்றான்.


எனக்கு ஏற தெரியலை, என்னனென்னமோ செய்றேன், முடியவே இல்லை, என் தம்பி என்னைப் பார்த்து சிரிக்கிறான். அடப்பாவி துரோகி நீயெல்லாம் ஒரு தம்பியா?ன்னு நினைச்சுண்டே என் அம்மாவைப் பார்த்தா அவங்களும் குதிரை மேல இருக்காங்க, ஆஹா நம்ம மானம் இப்படித் தான் போகணுமான்னு நினைச்சுண்டே திரும்ப ட்ரை பண்றேன், திடிர்னு அந்த குதிரைக்கார பையன் என்னை அப்படியே தூக்கி உக்கார வச்சுட்டான்.


என் அம்மாவும், தம்பியும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. எனக்கு வெட்கம் பிடுங்கி தின்னுது. அடப்பாவி மவனே நீ என்ன தீதீன்னு கூப்டதுனால தப்பிச்சுட்ட,இல்லேன்னா உனக்கு இன்னிக்கு சங்கு தான் அப்படின்னு அந்த பையனைப் பார்த்து முணுமுணுத்தேன். அவன் எதுவும் புரியாம விகல்பமா சிரிச்சுண்டே க்யா தீதீ? ஆப் ரெடி? என்றான் என்னைப் பார்த்து.


சரி கிளம்பலாம் என்று முடிவெடுத்தவுடன் இன்னொரு குண்டைத் தூக்கி போட்டான் . நாங்க ஒவ்வொரு குதிரையையும் பிடித்துக் கொண்டு கூட ஒருவன் வருவான் என்று நினைத்திருந்தோம், ஆனால் ரெண்டு குதிரைக்கு ஒரு ஆள் என்று அந்த பையன் சொன்னதும் என் அம்மாவிற்கு பயம் வந்து விட்டது. அவர் பயந்ததுக்கு காரணம் அந்த மலைப்பாதை மிக குறுகலானது. ஒரு பத்தடி அகலம் தான் இருக்கும், ஒரு பக்கம் குதிரையில் ஏறி செல்வர்கள், அதே பாதையில் தான் இறங்கியும் வர வேண்டும் இது தவிர கோவிலுக்கு கால்நடையாக செல்பவர்கள் கூட்டம் வேறு, இதையெல்லாம் விட ஒவ்வொரு திருப்பத்திலும் அகலபாதாளத்தில் கங்கை நதி. கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்களே அந்த மாதிரி ஆபத்தான ஆனால் மிக அழகான பயணம். கடவுளை வேண்டிக் கொண்டு மலையேற ஆரம்பித்தோம்.


தொடரும்.......

26 comments:

ambi said...

ha haa, ROTFL :)
btw, let the font be in lighter don't make it bold as U did in prev post.

ithu enna 10 th examaa? imp pointku adiyila sketch panni bold panna? LOL.

me pashtu illai!nu enakke theriyuthu.
it's ok.

Syam said...

//இந்த இடத்தில் இயற்கையாகவே பூமியிலிருந்து வெந்நீர் ஊற்றுகள் வருகின்றன//

கடவுளா பார்த்து இந்த ஏற்பாடு பண்ணிருக்காருனு நினைக்கிறேன்..இல்லனா அந்த குளிருல ஒருத்தருமே குளிக்காம சாமிய பார்க்க போனா அவரு மூக்க பொத்திட்டு தான் உக்காந்து இருக்கனும்... :-)

Syam said...

//இதையெல்லாம் விட ஒவ்வொரு திருப்பத்திலும் அகலபாதாளத்தில் கங்கை நதி. கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்களே அந்த மாதிரி ஆபத்தான ஆனால் மிக அழகான பயணம்//

ஆகா இத படிச்ச உடனே அந்த இடத்துக்கு போய் பார்கனும் போல ஒரு பீலிங்கு :-)

Syam said...

@ambi,
//me pashtu illai!nu enakke theriyuthu//

oru naal first comment pottathukey indha thullu thulraye :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

எனக்கு கறுப்பு நிறத்தில் ஒரு குதிரை, என் தம்பிக்கு வெள்ளை நிறம், என் அம்மாவிற்கு ப்ரவுன் நிறம்.
ஓ1! அவாவா கலருக்கு மேட்சிங் ஆகிற மாதிரிகூட குதிரை கிடைக்குமா?
நகைச்சுவையுடன் கூடிய நல்ல பதிவு.ஆமாம், வேதாளாம் குதிரையில் போகும்போது பாதாளம் போன்ற சரிவைப்பார்த்தால் அடிவயறு கலக்குமே.
திடிர்னு அந்த குதிரைக்கார பையன் என்னை அப்படியே தூக்கி உக்கார வச்சுட்டான்

அந்த ப்ரிதிவிராஜைப் பார்க்கணும் போல இருக்கு
ஆமாம் இந்த் நகைச்சுவை உணர்வு இவ்வளவு நாள் எங்கு போயிருந்தது.
.

indianangel said...

இப்பதான் உரைநடை விறுவிறுப்பாக போகுது! தொடருங்க!

barath said...

//ஆஹா நீங்களெல்லாம் நல்லா 50 ,60 வருஷம் வாழ்க்கையை ஆண்டு அனுபவிச்சுட்டு இப்படி பேசறீங்க, நாங்கெல்லாம் இப்பதான்யா வாழ்க்கையையே எட்டிப் பார்க்க ஆரம்பிச்சிருக்கோம்னு மனசுக்குள்ள ஃபீல் பண்ணிக்கிட்டு நின்னோம்//
ROTFL :-))

'கேதா'ர்நாத்தில் வேதா
இது எப்ப்டியிருக்கு?

ambi said...

//அந்த ப்ரிதிவிராஜைப் பார்க்கணும் போல இருக்கு//
LOL on TRC sir comment.
//வேதாளாம்//பாதாளம்
ethugai monaila kalakarenga sir. chanceee illa :)
narayana! narayana! :D

Known Stranger said...

good travelling.. i was reading a hill in japan - the ice abode - snow covered valcanoe. a holy place for japanes who follows antoher religion apart from buddhism. every where when there is a difficult mountain - humans try to make it holy. just read a novel fifth mountain - even this system is followed in greeks ages before the full civilisation developed.

Bala.G said...

continue pannunga

Aravind said...

good one Veda.."rendu horse ku oru aalu" - cost cutting pola..

வேதா said...

@அம்பி,
எனக்கு தெரியும் இந்த பதிவை படிச்சிட்டு உனக்கு சந்தோஷமா இருக்கும்னு.எப்படா மத்தவங்க கால வாரலாம்னு அலையிறீங்களே:)

ithu enna 10 th examaa? imp pointku adiyila sketch panni bold panna? LOL.

அய்யோ கொடுமைடா,ரத்தம் வருது போ, இந்த அழகுல யாரு யாரை பார்த்து ட்யூப்லைட் சொல்லிக்கிட்டு அலையறாங்க?:)

@ச்யாம்,
அண்ணே அடிக்கடி இப்படி ஏதாவது சொல்லி நீங்க புத்திஷாலின்னு நிருபிக்கறீங்க:)விவிசி:):)

இந்த இடமெல்லாம் வாழ்க்கையில் கண்டிப்பா பார்க்க வேண்டிய இடம், பக்திக்காக இல்லேன்னா கூட இந்த இயற்கை அழகுக்காகவே போகலாம்.

@திராச,
அவாவா கலருக்கு மேட்ச் பண்ண இது என்ன புடவையா? அப்படி பார்த்தா குடும்பமே ப்ரவுன் கலர் குதிரைல தான் போகணும்:)

வேதாளமா? அது தலைவியோட தலைநகரம் சுத்தி பார்க்க போயிருக்கு:)

ப்ரித்விராஜனா? யாரு அந்த குதிரைக்காரனா? அவன் பாண்டியராஜன் கணக்கா இருப்பான், அவனைப் பார்க்கனும்னா கேதார்நாத்துக்கு தான் போகணும்:)

நகைச்சுவை உணர்வு இத்தன நாளா எங்க இருந்ததுன்னு எனக்கே தெரியாது:)நன்றி:)

@இந்திய தேவதை,
உங்க தொடர்கதை மாதிரி இதுவும் விறுவிறுப்பு தான்:)

@பரத்,
இதுவும் நல்லா தான் இருக்கு:)

@அம்பி,
டூ லேட்:) வர வர நாரதர் வேலையை சரியா டைமுக்கு செய்ய மாட்டேங்கற:) தலைவி வந்தா தான் சுறுசுறுப்பும் வரும் போல இருக்கு:)

@வைஷ்ணவ்,
சரிங்கண்ணா, என்னன்னமோ சொல்றீங்க நமக்கு தான் புரிய மாட்டேங்குது:)

@பாலா,
கண்டினியூ பண்ணத் தான் போறேன், படிக்கற்து உங்க தலையெழுத்து:) ஆனா மெகா சீரியல் கணக்கா இழுக்க மாட்டேன், பயப்பட வேண்டாம்:)

@அரவிந்த்,
நன்றி:)
.."rendu horse ku oru aalu" - cost cutting pola..
அவங்களுக்கு காசு மிச்சம், நமக்குன்னா இங்க பல்ஸ் எகிறுது:)

பொற்கொடி said...

ஐயயோ.. :( நா இது புது பதிவுனு சரியா பாக்காம புளியோதரை மிஸ் பண்ணிட்டேனே :((

ஹிஹிஹி அவன் தீதினு கூப்பிடாம தூக்கிருந்தா என்ன தான் பண்ணிருப்பீங்கனு சொல்லுங்களேன்..

பொற்கொடி said...

நா இது பத்தின ஒரு விசிடி (திருட்டு விசிடி இல்ல) பாத்துருக்கேன்.. ஹரிதாஸ் கிரி ஸ்வாமி போனது அதே போல நீங்களும் வர்ணிக்கறீங்க.. :)

Jeevan said...

வெந்நீர் ஊற்றுகள், i too saw this in Nengal Ketta Padal in SUntv. Hot water in Cold place its wonder.

Alexander Kuthuraium Karuppu, namba Veda vudaiya Kuthuraium Karuppu:) My grandpa also visit this place years back, that time my granpa ride in Horse and my grandma went in Pallakku (Palanquin) to reach the temple.
Intersting.

Veda u have been tagged!

Priya said...

நல்லா எழுதியிருக்கீங்க வேதா..போகணும் போல இருக்கு நீங்க வ்ர்ணிச்சிருக்கரத பாத்தா..

ஒவ்வொரு தடவைய்ம் தொடரும் போட்டு எல்லாரையும் ஆவலோட காத்திருக்க வைக்கரீங்க..(இப்பவாவது இவங்க விழுந்திருப்பாங்களானு தான் :))

மு.கார்த்திகேயன் said...

//ஆஹா நம்ம மானம் இப்படித் தான் போகணுமான்னு நினைச்சுண்டே//
situation ninachchu paaththEn Vetha.. sirikkaama irukka mudiyala
Lol :-))

வேதா said...

@பொற்கொடி,
பாத்தியா இதுக்கு தான் சுறுசுறுப்பா இருக்கணும், பாரு உன் அண்ணனை கரெக்டா முதல்ல வந்துட்டு எனக்கு புளியோதரையே வேண்டாம்னு சொல்லிட்டார், அதனால் அதை நானே சாப்பிட்டேன்:)

/ஹிஹிஹி அவன் தீதினு கூப்பிடாம தூக்கிருந்தா என்ன தான் பண்ணிருப்பீங்கனு சொல்லுங்களேன்..//
அதுக்காக மட்டும் இல்லை பொற்கொடி, ஒருத்தர் நம்மள மேல லேசா பட்டாலே தெரியும் அவரோட நோக்கம் என்னன்னு அதை வச்சு தான் சொன்னேன் அவன் உதவி செய்யும் நோக்கத்தோடு தான் அதை செய்தான்னு:)ஒரு பெண்ணா இருந்துண்டு உனக்கும் இது புரியும்னு நினைக்கறேன்:)

@ஜீவ்,
Alexander Kuthuraium Karuppu, namba Veda vudaiya Kuthuraium Karuppu:)
ஆஹா இதுல உள்குத்து எதுவும் இல்லையே:)
பெரும்பாலும் இந்த இமயமலை பிரதேசங்களில் பல இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் நான் பார்த்திருக்கிறேன், இதெல்லாம் இயற்கையின் அதிசயங்கள்:)

@ப்ரியா,
அப்ப தொடர்ந்து படிக்கறீங்க, போராடிக்காம இருந்தா சரி, நான் விழற்துல தான் எல்லாருக்கும் எவ்ளோ ஆவல்:) எப்படி இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்க நீங்க எல்லாரும்:)

@கார்த்திக்,
சிரிங்க சிரிங்க:) நானே சிரிச்சிண்டு தான் இருந்தேன் அந்த நேரத்துல:)

Shuba said...

LOl nalla irunthathu ..ithukku than merinaa beachla practice pannirukkanum...continue

Sasiprabha said...

ஆபத்தான ஆனால் மிக அழகான பயணம்..
Ippadi patta payanangal thaan eppavume marakkama unarvoda kalandhu manasila padhium.. Adhe maadhiri ippidi patta aabathukkal thaan namma bakthiya innum adhiga paduthi vidum

Gopalan Ramasubbu said...

Very good narration Veda.oru 15 year old paiyan ungala kuthirai mela thooki utkara vechaana? nammba mudiya villai, illai ;)

வேதா said...

@சுபா,
நீ சொன்னா சரி தான்:)

@சசி,
நீங்க சொன்ன மாதிரி இந்த பயணம் கொஞ்சம் ஆபத்தானதாகவும்,கஷ்டமாகவும் இருந்ததால் தான் கோவிலும்,தெய்வமும், இந்த பயணமும் மனதில் பசுமையாக பதிந்து விட்டன.

@கோப்ஸ்,
நம்ப முடியலேன்னா நான் என்ன முடியும்? வேணா ஒரு முறை கேதார்நாத் போய் பாத்துட்டு வாங்க:)

பொற்கொடி said...

aiyoo indha todudal puridhal mattera nenachale kaduppu vedha :( enakula irukra erimalai velila vandudum so freeya vitudvom :)

nerla oru kai pathukkalam trc sira :)

மு.கார்த்திகேயன் said...

vethaa.. enna ungaloda latest postukku ennala comments poda mudiyala.. it seems blog administrator is not allowing to add comments.. konjam paarungalEn

வேதா said...

@பொற்கொடி,
சொல்டயில்ல ஒரு வழி பண்ணிடலாம்:)

Usha said...

hey template mathitta? Super-a iruku ippo. BTW, en new post-ku no comments? And now I can read your blog.

Neeyavadhu kudhirai-la pona, chinna vayasula kazhudhai-la eri ponom in one of the hillstations in the North.