Monday, September 04, 2006

தமிழில் பேசுங்கள்

விஜய் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு நிகழ்ச்சியின் தாக்கமே இந்த பதிவு. ஏர்டெல் சூப்பர் சிங்கரின் பெரு வெற்றிக்கு பிறகு அதை தக்க வைக்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள புது நிகழ்ச்சி 'Eq'. இதில் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்குக் கொள்ள முடியும். அவர்களுக்கு கொடுக்கப்படும் கால அவகாசத்தில் அவர்கள் திறமையை பாட்டு,நடனம்,நாடகம், கூத்து என பல விதங்களில் நிருபிக்க வேண்டும்.

இது வரை நடந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் மாணவர்களின் திறமை மிக அற்புதமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருப்பவர்கள் பாடகர் மால்குடி சுபா மற்றும் ஒரு நடன இயக்குனர்(அவர் பெயர் சமயத்திற்க்கு மறந்து விட்டது). இருவருமே மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தான் பேசுகிறார்கள். குறிப்பாக சுபா ஒவ்வொரு முறையும் நல்ல பாடகர்களை எதிர்கொள்ளும் போது தமிழ்நாட்டில் தனி இசைக்குழுக்களாக வர வேண்டும் என உற்சாகப்படுத்துகிறார். ஆனால் இவர் பாதி நேரங்களில் ஆங்கிலம் கலந்துப் பேசுகிறார்.

இவராவது பரவாயில்லை கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு நடுவராக பங்குப் பெற்றவர், பிரபல நடன கலைஞரும், சினிமா நடிகையுமான ஷோபனா, ஒவ்வொருவருரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டி அவர்களின் நிறை குறைகளை அழகாக எடுத்துக் கூறிய அவருக்கு தான் பங்குக் கொள்வது ஒரு தமிழ் நிகழ்ச்சி என தெரியவில்லை போலும், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தான் பேசினார்.(எனக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வேறு இவர் தமிழர் தானா என்று?, அப்படியே அவர் தாய்மொழி தமிழில்லை என்றாலும், இவ்வளவு வருடங்களாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவருக்கு தமிழ் குறைந்தபட்சம் பேசக் கூட வராதா?)

எனக்கு அதைப் பார்த்து எரிச்சல் தான் அதிகமாயிற்று. தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கலைஞர், தமிழ் படங்களில் நடித்தவர் என பல பரிமாணங்கள் கொண்ட இவர் ஏன் ஒரு தமிழ் நிகழ்ச்சி எனத் தெரிந்தும் தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே முழுக்க முழுக்க பேசுகிறார் என புரியவில்லை. சமீப காலங்களில் இவ்விதமான போக்கு அதிகரித்துள்ளது. இவர் என்று இல்லை, இது போல் பல பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கிறது என எனக்கு தோன்றுகிறது.

64 comments:

Balaji S Rajan said...

வேதா,

கரெக்டா நீங்க சொல்றீங்க. இந்த மாதிரி ஆளுங்களை கூப்பிட கூடாது. ஒரு தடவை தமிழ் டி.வி. பேட்டியில நான் பங்கு எடுத்து கிட்ட போது நான் முழுக்க முழுக்க தமிழிலேயே பேசினதை என் தோழர்கள் சில பேர் "என்னம்மா.... ஒரே தமிழ்ல்யே பேசி போர் அடிச்சுட்ட... ரொம்ப கேவலமாய் இருந்தது கொஞ்ஜம் இங்கிலிஸ்ல பேச கூடாதா.. டீசென்டா இருந்து இருக்கும்... " என்று வருத்தப்பட்டார்கள்.... எனக்கு சிரிப்பு தான் வந்தது.... அத விட நான் லீவுக்கு அங்கே வரும் போது பார்க்க்றவங்க எல்லாம்... ஒரே இங்கிலிஷ்ல தான் பேசறாங்க... நாங்க தமிழிலேயே பதில் சொன்னாலும்...ஒரே தத்து பித்து ஆங்கிலம் தான்... நம்ப ஜனங்களை மாத்த முடியாதுங்க..

indianangel said...

sariyaaga sonnenga usha! naanum indha maadhiri nigazhchigal pakkumbodhu yosichurukkaen tamil'a pesina nallairukummae, aana enna panradhu(paarunga indha commente kooda english'la dhaan irukku:)) ovvartharoda vasadhiya portthudhaan irukku - adhuvum innraiya kaala kattathilla parents'e thannoda kuzhandai daddy mummy'nnu koopidathaane pazhakaraanga! ithu enga poi mudiya pogudho! sujatha ezhudina kadhai onnu dhaan nyabagathukku varudhu - ahdula ilakkiya thamizh therinja ore oruthar dhann ulagathula kadasiya irukkar, avarukitta rendu peru thamizh kathuuka varaanga - avarum thamizh aarvathula dhaan kathukka varangannu nennachu solli kodukkaraaru kadasilla paartha avanga our thiviravaadah iyakkatha serndhavanga thangalukkula oru sadhi thittam thettardhukaaga thamizha code word'a use panraanganu kadhai pogudhu!

Viji said...

enakku idhu thavaraaga thondravillai. endha mozhiyil pesugirom enbadhai vida, enna pesugirom enbadhe mukkiyam. aduthavargalukku puriyum vannam, vetru mozhiyil pesinaal thavarillai enbadhu en karutthu.

Shobana veru maanilathai serndhavar, thamizh'il comfort level illamal irundhirukkalam. thamizhil thappum thavarumaga pesuvadhai vida, aangilathileye pesalam! avar avargalukku endha mozhi elidhil varugiradho, adhai payan paduthuvadhil thavarillaiye.

Known Stranger said...

vijiin kuuutrai vazhimozhikiren.

Ravi said...

Veda, good one again. Generally our makkal take more pride in showing their Aagila pulamai than speaking Tamil nicely.

Viji, ungalukku oru kelvi - oru English channel/Hindi channel-il pesum bodhu vera mozhi payam paduthuvaargala? Agreed that the content is important but then how do you carry your native tongue forward if you feel low about talking in it. Fyi, Shobana has been in Chennai ever since she was born and can speak Tamil quite fluently.

Syam said...

இத படிக்கும் போது எனக்கு தோனினது...தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தபா சொல்லும் சன் டிவில நேத்து தங்கவேட்டை பார்த்தேன்...அதுல ரூபி,எமரால்ட்,பேர்ள் இப்படி பேர் வச்சுருக்காங்க...அதுனால கமர்சியல்னு வந்துட்டா இது எல்லாம் சகஜம்... :-)

வேதா said...

@viji,
நீங்கள் சொல்வதில் ஒன்றை நான் ஒத்துக் கொள்கிறேன், என்ன பேசுகிறோம் எனபது முக்கியம் தான். ஷோபனாவை மட்டும் நான் இங்கு குறிப்பிட்டு சொல்லவில்லை(என்னத் தான் அவர் வேற்று மாநிலத்தவராக இருந்தாலும், இவ்வளவு நாள் இங்கு இருந்துவிட்டு தமிழில் பேச வராதா என்ன?)


aduthavargalukku puriyum vannam, vetru mozhiyil pesinaal thavarillai enbadhu en karutthu.

அதை தான் நானும் சொல்கிறேன், தமிழ் சேனலில் பேசும் பொழுது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் அது எல்லாருக்கும் புரியும் என்பதிற்கு என்ன உத்திரவாதம்.
சரி நான் பொதுவாகவே சொல்கிறேன், எல்லாரும் புரிந்துக் கொள்ள முடியும் என்ற நிலையிலும், இடத்திலும் கூட தன்னுடைய ஆங்கில திறமையை பறைச் சாற்றிக் கொள்பவதற்காக மட்டுமே தாய்மொழியை புறக்கணிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். தாய்மொழி அல்லாது வேறு மொழியில் தான் comfort level அதிகமாக உள்ளது என்பது நம் தாய்மொழிக்கு நாம் செய்யும் ஒரு விதமான இழுக்கு தான். என் தாய்மொழியின் மேல் நான் கொண்ட அக்கறையினால் தான் இந்த பதிவு.

aangilathileye pesalam! avar avargalukku endha mozhi elidhil varugiradho, adhai payan paduthuvadhil thavarillaiye.
தவறில்லை தான், ஆனால் எனக்கு தமிழ் சரியாக வராது என்று சொல்வதில் பெருமிதம் கொள்பவர்கள் தான் அதிகம்.
ஆக மொத்தத்தில், எங்கெங்கு நம் தாய்மொழியினை உபயோகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறதோ அதை தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்பது என் கருத்து.

வேதா said...

@syam,
சன் டிவியை பத்தி பேசவே கூடாது, அவங்கெல்லாம் சொல்றது மட்டும் தான். செய்ய மாட்டாங்க:) அவங்க சேனலின் பெயரே அதற்கு சான்று:)(அண்ணே நம்ம ரெண்டு பேருக்கும் நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன், அநேகமா,வீட்டுக்கு ஆட்டோ வரப்போகுது, நீங்க தப்பிச்சுட்டீங்க)

Aravind said...

romba seri. intha post enaku actor vivek as tamizh kirukkan scenes nyabagapaduthithu..

ambi said...

Thought provoking post.
well veda, thamizh pesaren pervezhi!nu neraya per esp in sun meejic channela kothu parotta podraanga. so shobana might've felt that she don't want to do the same thing. Englipees has become universal lang, it's a irony fact. As shobana comments in englipees abt the pple talents that "neenga nallavar! vallavar!" who knows! steve spelberg may see this show and book namma ooru figures(he hee) in hollywood pilms. what say?

Take my case, aapich muzhukka englipees, hindi, bengali. so i made it very strict & clear to write my posts in thamizh. my first post evloo thappum thavarumaa irunthathu? usha kolai mirattal ellam vutta. afterwards, naan thiruthikaliyaa ennai? (ammam!nu sollunga pls).

also, many of us know how to write in thamizh.(ex: subha, my shishyan, sachin-gops,syam, me, viji, U, bala.g, etc...). everybody had posted a one in thamizh. athuku aprom..? they feel writing in thanglish is rather comfortable, & handy. nothing wrong in it.
Thangachi subha! no offense in this maa! kobam vantha annana nalu saathu saathu! nee adikaama yaaru adikka pora? :)
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு!
illayaa? :)

but i never agree with peter vidum parties. enakku thamizhee varaathu!nu tamila sonna moonchila kuthanum pola irukkum!

mothalla SUN TV pera maatha solli oru postu podunga parpoom! (apdiyaavathu unga veetuku auto varaatha?nu oru alpa aasai thaan!)


@viji, enna chozha manadala MLA maathiri commentu podara? :) LOL

வேதா said...

@ambi,
who knows! steve spelberg may see this show and book namma ooru figures(he hee) in hollywood pilms. what say?
ஆனாலும் உமக்கு நக்கல் அதிகமாப் போச்சுய்யா:)


everybody had posted a one in thamizh. athuku aprom..? they feel writing in thanglish is rather comfortable, & handy. nothing wrong in it.

நான் இங்கே தமிழில் எழுதுவது பத்தி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, என்னை நீங்க வம்புல மாட்டிவிடுறீங்க:)


enakku thamizhee varaathu!nu tamila sonna moonchila kuthanum pola irukkum!

அப்படிப் போடு:)
மொத்தத்தில் நான் குற்றம் சாட்டுவது தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேச தெரிந்தும் பேசக் கூடிய இடங்களில் கூட தமிழை அலட்சியப்படுத்துபவர்களைத் தான். ஏன் என்றால் தமிழ் பேசாமல் இருப்பதற்கு நாம் சாக்கு சொல்லிக் கொண்டே போனால், தமிழ் இனி மெல்லச் சாகும் என்பதை நிருபிக்கும் வகையில் ஆகிவிடும்.


apdiyaavathu unga veetuku auto varaatha?nu oru alpa aasai thaan!)
ஹிஹி நாங்கெல்லாம் பொது நல சேவகர்கள், பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம், நாளைக்கே எங்க வீட்டுக்கு ஆட்டோ வந்துச்சுன்னா அம்பின்னு ஒரு நல்லவர் இருக்கார் அவரும் இந்த மாதிரி பொது நல சேவையில் இருக்கார்ன்னு உங்களையும் போட்டுக் கொடுத்துடுவோம்ல்ல.:) யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்:)

வேதா said...

@அரவிந்த்,
ஆமா விவேக் இந்த மாதிரி சிந்தனையைத் தூண்டும் வகையில் நகைச்சுவை வழங்கினார் ஒரு காலத்தில்:)

@ரவி,
Generally our makkal take more pride in showing their Aagila pulamai than speaking Tamil nicely.

சரியா சொன்னீங்க:)

@இந்தியத் தேவதை,
நீங்கள் குறிப்பிட்ட கதையைப் போல் நம் தமிழ் மொழியின் நிலைமை ஆகி விடக் கூடாது என்பது தான் என் நிலைப்பாடும், அதற்கு நம்மால் முடிந்த சிறு சிறு முயற்சிகள் எடுத்துக் கொள்வது தப்பில்லையே.

@பாலாஜி,
பார்த்தீங்களா ஆங்கிலம் என்பதும் ஒரு மொழி தான் என்பதையும் தாண்டி அதை ஒரு அறிவு சார்ந்த பொருளாக்கி விட்டார்கள் நம் மக்கள். நம் பிழைப்புக்காக ஆங்கிலததையும், நம் அடையாளத்துக்காக தமிழையும் கற்றறிதலில் என்ன தப்பு? ஆங்கிலம் பேச வரவில்லையென்றால் அதற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோமா அந்த அளவு நம் தாய்மொழியினையும் கற்க அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Known Stranger said...

suulll ooraikkum veda vittukkku kuudiya seekiram varumm autoo.....

ippadi pessiyeee than... azhiyudhu tamil makkal.

thirunthungaa paaaa.... yenni vazhalum vazhuvum pakka vendiyathu than.. by the way is that program stilll coming in dd.

Viji said...

veda, apdi solla varala nan. nan iruppadhu karnataka. appo kooda kannadam kathukkama, hindi um kathukkama, enga pathaalum aangilam/thamizh la pesittu irukken. inga auto kaaranga ellarum thupparanga idha paathu.. apdi irukkum podhu, Shobana thamizh kathukkanum nu epdi edhir paakkaringa... (she's not a tamilian).

Viji said...

Ravi- //oru English channel/Hindi channel-il pesum bodhu vera mozhi payam paduthuvaargala?//- It's a well know fact that everyone knows English... thamizh, thamizhargalukku mattum dhan theriyum. Does this answer your question?

வேதா said...

@விஜி,
ஷோபனா இனிமே தான் தமிழ் கத்துக்கணும்ன்னு அவசியம் இல்லை, ரவி சொன்னது போல் இங்கேயே பிறந்து வளர்ந்து முக்கியமாக தமிழ் சினிமாவிலும் நடித்து பரத நாட்டியம் போன்ற கலைத்துறையிலும் இருக்கும் இவர் ஒரு தமிழ் நிகழ்ச்சியில் தமிழ் பேசக் கூடாதா? என்பது தான் என் கேள்வி.ஷோபனா ஒரு உதாரணம் அவ்வளவு தான், அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லை.

nan iruppadhu karnataka. appo kooda kannadam kathukkama, hindi um kathukkama, enga pathaalum aangilam/thamizh la pesittu irukken

கன்னடம் கத்துக் கொள்வதோ,இந்தி கத்துக்கொள்வதோ தவறில்லை விஜி, எனக்கு இந்தியும் தெரியும். நான் சொல்ல வருவது தமிழை பேசக் கூடிய இடங்களிலும் பேச மறுப்பவர்களைப் பற்றி தான்.

inga auto kaaranga ellarum thupparanga idha paathu..
ஹிஹி அவங்க துப்பாத அளவுக்கு கன்னடம் கற்றுக்கொள்ளலாம் தவறில்லை:)

@வைஷ்ணவ்,
ippadi pessiyeee than... azhiyudhu tamil makkal.

பேசாமல் இருந்தால் அழியப் போவது தமிழ்.

பொற்கொடி said...

இத்தன பேரு வந்தாங்களே.. யாராவது அந்த டான்ஸ் மாஸ்டர் பேர உங்களுக்கு சொன்னாங்களா? இது மாதிரி ஜீ.கே எல்லாம் என்ன இல்ல கேக்கணும்? அவரு பேரு ஸ்ரீதர். :)

@அம்பி:
யாரு அடிக்க போறா? னா என்ன கேள்வி இது? அவங்க விட்டலும் நா இருக்கேன்ல..

Pavithra said...

That was a nice post !! Its true tamil channels la kavizhar vairamuthu maathiri pesalainaalum atleast local chennai tamil (tanglish)-la yavathu pesalaam !!

வேதா said...

@பொற்கொடி,
வாம்மா மின்னல், சும்மா சொல்லக்கூடாது உனக்கு ஆனாலும் பொது அறிவு தலை விரிச்சு ஆடுது:)

@பவித்ரா,
அதை அதை தாங்க நானும் சொல்றேன்:)

ambi said...

//ஆனாலும் உமக்கு நக்கல் அதிகமாப் போச்சுய்யா:)//
nammai naame cheapaa nenachu thaan ipdi irukoom! oscaraaa?nu vaaya polanthu paakaroom. namma ooru ARR hollywood pogaliyaa? & a village born ilayaraaja with dutch pple kannula virala vuttu symphony amaikaliyaa? so namma oru figures yen hollywood padathula nadikka mudiyaathu? itha epdinga neenga nakkal nu sollalaam? grrrrr. :)
O figuregale! pongi ezhungal! LOL :)

//நான் இங்கே தமிழில் எழுதுவது பத்தி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை//

//தமிழை பேசக் கூடிய இடங்களிலும் பேச மறுப்பவர்களைப் பற்றி தான்.//
First link the above two lines.

@veda, blogla thamizhla kooda ezhuthalaam, vaaypu irukku, but many(me also) comfortable in commenting in thanglish. itha thaan me mentioned. purinjathaa?


//nan iruppadhu karnataka. appo kooda kannadam kathukkama, hindi um kathukkama//

he hee, athunaala thaan naan chapathis, & rasagullavidamum kathu kolgiren. (hindi thaan! vera onnum illai) LOL.
(but punjabi kitta mattum dance, he hee)

//அவங்க விட்டலும் நா இருக்கேன்ல.. //
@porkodi, annan kaaranai sathanumne alayaaranga paa intha thangachis ellam! :)

வேதா said...

First link the above two lines.
அதாவது அம்பி நான் சொல்ல வந்தது என்னவென்றால் இந்த பதிவில் நான் தமிழில் பேசுவது பற்றித் தான் என் கருத்துகளை முன் வைத்துள்ளேன் என்பது தான்.
வலைப்பதிவில் ஆரம்பத்தில் நானும் ஆங்கிலம், மற்றும் தங்கலிஷில் தான் எழுதினேன். பின் தமிழில் எழுதுவதற்கான வாய்ப்பு பற்றி அறிந்தவுடன் அதை பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் இங்கே எழுதும் பல பேர் தங்கள் வேலையிடங்களில் இருந்து தான் எழுதுகின்றனர், எனவே தமிழில் எழுதுவதற்கான மென்பொருளை வலையிறக்கம் செய்து பயன்படுத்துவது பல பேருக்கு இயலாத காரியம். ஆனாலும் உங்களைப் போல் சிலர் எழுதுவது பாராட்டுக்குரியது தான். எனவே நீங்கள் கமெண்ட் செய்யும் போது ஒவ்வொரு முறையும் தமிழில் கன்வர்ட் செய்வது என்பது கடினம் என்பதும் எனக்கு புரிகிறது. ஆனால் பேசுவது என்பது அப்படி இல்லையே அதை தான் இப்படி குறிப்பிட்டுள்ளேன்,

//தமிழை பேசக் கூடிய இடங்களிலும் பேச மறுப்பவர்களைப் பற்றி தான்.//

Syam said...

//but i never agree with peter vidum parties. enakku thamizhee varaathu!nu tamila sonna moonchila kuthanum pola irukkum!//

@ambi, மீனா(நடிகை) தான சொல்ற...அந்த அக்கா தான் எப்பவும்...actually எனிக்கு டமில் சரியா பேச வராது அப்படின்னு டயலாக் விடுவாங்க :-)

Jeevan said...

aathan namba captain'a solliirukurara, Aankelamdrathu naama pottu irukkura Kanndi mathiri, naama atha theavapatta thaan podanum.

I always like to talk in Tamil.

Viji said...

//தமிழை பேசக் கூடிய இடங்களிலும் பேச மறுப்பவர்களைப் பற்றி தான்.//- Veda, ipdi pesi pesi dhan enakku hindi theriyaama kashta padaren. mastery of any language requires practice. thamizh nattula eppa paru thamizh la pesina inglipis epdi kathukkardhu.. pesi pazhagina dhana varum?!

ambi said...

objection ur honor! if X = Y, then Y = X.
if U r implying things for pechu! then it's applicable to ezhuthu also. [clap! clap! clap! - porkodi, viji, subha]
ada, vudungapa! ithellam ambiku jujubi!

வேதா said...

@அம்பி,
நீங்கள் நான் சொல்வதைப் புரிந்து கொள்ளவில்லை,
if U r implying things for pechu! then it's applicable to ezhuthu also
100% சரி தான்,
//நான் இங்கே தமிழில் எழுதுவது பத்தி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை//
இந்த வரியில் வரும் இங்கே என்பது பதிவுலகு என்று அர்த்தப்படுத்திக் கொள்ளவும் அம்பி.
நான் இந்த பதிவில் கூறியது தமிழ் சேனல்களில் தமிழில் பேசுங்கள் என்று தான்(நான் அப்படி கூறியது தவறு என நீங்கள் கருதுகிறீர்களா?)@விஜி,
//Veda, ipdi pesi pesi dhan enakku hindi theriyaama kashta padaren//
ஏங்க ஹிந்தி பேச தெரியணும்னா தமிழில் பேசக் கூடாதுன்னு சொல்ல வரீங்களா?

அய்யோ டாபிக் அவுட் ஆப் போகஸ் ஆயிடுச்சு:) நான் சொன்னது பொது நிகழ்ச்சிகளில் அதிலும் ஊடகங்களில் தமிழ் பேச மறுப்பதைப் பற்றி.

//thamizh nattula eppa paru thamizh la pesina inglipis epdi kathukkardhu..//

ஏன் பள்ளிகளில்,கல்லூரிகளில் மற்றும் வேலையிடங்களில் எல்லாம் இப்பொழுது ஆங்கிலத்தில் தானே அனைவரும் பேசுகின்றனர், அப்படி பேசி வளர்த்துக்கவேண்டியது தான். நாங்கெல்லாம் அப்படித் தான் வளர்த்துக்கிட்டோம்.

ambi said...

i'm generalising things. U shud look for a solution which could be implied overall not to a particular problem. (oops s/w architectureku poitten.)

i'm comparing both things. since pple are not comfortable in talking in thamizh, so they follow englipes. whatz wrong? wrong thing is only who kuthufying tamizh.
//நான் அப்படி கூறியது தவறு என நீங்கள் கருதுகிறீர்களா//
thappu illai thaan! but tamil mediala englipeesla pesarathum thappu illai!nu solren.

//pesi pazhagina dhana varum?!//
@viji, correct, correct! pesi pazhagina thaan varum! :) LOL
(enna varum?) ROTFL :)

வேதா said...

@ambi,
//i'm generalising things. U shud look for a solution which could be implied overall not to a particular problem.//
yes i agree, but i resort to this particular prob in this post, so as in generalising this we may have put a new post on this issue and continue to exchange our views on this issue:)

but tamil mediala englipeesla pesarathum thappu illai!nu solren.

i agree this, but it can be avoided. thats my point of view.

//(enna varum?)//
ipdiyellam publica kettu vijiya avamana paduthaatheenga poruthathu pothum pongi ezhu viji:)(hehe eppavum neenga seiyara narayana velaiya ippa naan senjiten:)

பொற்கொடி said...

அம்பி அண்ணா.. எனக்கு நகச்சுத்தி :( கை தட்ட முடியாது போலிருக்கு ;)

ambi said...

//i agree this, but it can be avoided. thats my point of view.//

apdi vaanga vazhikku!
ambi: nakeeri! nandraaga ennai paar! naan ezhuthiya commentu kutramaa? LOL :)
veda(nakeeri): Yow! adangu yaa!

ambi: (samalichufying)Nin thamizhooda vilayadave yaam ingu vanthoom!
piguru englipeesla pesinaalum kutram! kutrame! endru uraitha nakkeriyee! vaazhga nin thamizh! valga nin thundu! cha thondu! LOL :)

வேதா said...

@ambi,,
நல்லாதான்யா சமாளிக்கற:)
பேசாம சமாளிப்பு திலகம்ன்னு பட்டத்தை மாத்திடட்டுமா?
சே! இந்த நேரம் பார்த்து தலைவி தலைநகரம் போய்டாங்களே:)

@பொற்கொடி,
நீ சமாளிப்பு திலகத்தின் தங்கையாச்சே:)

Syam said...

@veda,ambi,viji & porkodi, unga sandaila enaku kuduka vendiya Rs.100 marandhudaatheengappa :-)

வேதா said...

@syam,
இந்த சந்துல சிந்து பாடற வேலையெல்லாம் இங்கிட்டு வேணாம். 100 ரூபாய் கொடுக்கணுமா? ஆமா நீங்க யாரு? ஏன்பா அம்பி,விஜி,பொற்கொடி உங்களுக்கு இவரைத் தெரியுமா;)?

பொற்கொடி said...

வேதா.. யாருங்க இவரு ஸ்யாம்?! போற இடம் எல்லாம் நாட்டாம பண்றாரு.. :-/

Syam said...

அடப்பாவிங்களா ஒரு 100 ரூபாய்க்காக சொந்த அண்ண்ன...வைர மூக்குத்தி வாங்கி வெசுசுருக்கர அண்ணன இப்படி தூக்கி போட்டுடீங்களே... :-)

பொற்கொடு, உங்களுக்கு தீர்ப்பு சொல்ற நாள் வராமயா போகும் :-)

ambi said...

@porkodi, oru lemona kuthi vechukoo ma! (appichla velai seyaama irukarathuku annane maathiriye dakaldi panriyee! very gud!)

//அடப்பாவிங்களா ஒரு 100 ரூபாய்க்காக சொந்த அண்ண்ன...வைர மூக்குத்தி வாங்கி வெசுசுருக்கர அண்ணன இப்படி தூக்கி போட்டுடீங்களே... //

@syam, paarthayaa un thangaiyin pasathai! nanadraaga paar! purinthu kol undanpirappe!

btw, yaaru? neey? vaira mukuthi vaangi vechrukaa? itha naanga namboonam? LOL :)
btw, en thangachi subhavuku day after tmrw swift car presentation on the eve of her b'day. :)

வேதா said...

@அம்பி,
உங்க நாரதர் வேலையையை ஆரம்பிச்சாச்சா:) எங்க அண்ணனுக்கு 100 ரூபாய் என்ன 100 கோடி ரூபாய் நான் கொடுப்பேன் அவரு எனக்கு வைரமூக்குத்தி வாங்கிக் கொடுத்தப்புறம்.:)

en thangachi subhavuku day after tmrw swift car presentation on the eve of her b'day. :)

யாரு? நீங்களா? அதையும் பாத்துடலாம்
(சின்னப்புள்ளத்தனமா காரு படம்,பொம்மை இதெல்லாம் கொடுக்கக்கூடாது:)

Viji said...

Syam- adada... puliyodharai kekkardha vittuttu ippo ellam panamaave kekka aarambichacha?

makkale, naattamaye "theerpa maathi sollu" nu ethana naalaikku dhan keppinga... naattamaiyave maathidunga! ;) :D

Gopalan Ramasubbu said...

ஷோபனா தமிழர் அல்ல அதனால் அவர் ஆங்கிலத்தில் பேசுவதைப் பற்றி விமர்சிக்கத் தேவை இல்லை என்பது என் கருத்து. அதே போல் நாமும் மற்ற மாநில மக்களிடம் இந்தியில் பேசமுடியவில்ல என்றும் வருந்தத் தேவையில்லை.பொது நிகழ்ச்சியில் தமிழில் பேச வேண்டும் என்ற உங்கள் கருத்தை யாரும் மறுக்கமுடியாது :)

வேதா said...

@கோபால்,
அவர் தமிழராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இங்கேயே பிறந்து வளர்ந்தவர் தானே? தமிழே வராதா என்ன?
//பொது நிகழ்ச்சியில் தமிழில் பேச வேண்டும் என்ற உங்கள் கருத்தை யாரும் மறுக்கமுடியாது :) //
அதை சொல்லப்போய் தாங்க இங்க இவ்ளோ கருத்து வேறுபாடு:)

@விஜி,
என்னது நாட்டமையை மாத்தணுமா? கொஞ்சம் யோசிச்சு பாரு, ஒரு வெத்தலை பாக்கு பொட்டி, தோளில் துண்டு, அரசமரத்தடி இவ்ளோ மேட்டரும் என் அண்ணனுக்கு தான் அழகு:) வேற யாராவது இவ்ளோ கெட்டப்போட இருக்க முடியுமோ? அதனால் நான் சொல்றேன், என் அண்ணன் ச்யாம் தான் பதிவுலகின் முடிசூடா நாட்டாமை அவர் தீர்ப்பை வேணா நாம மதிக்காம இருக்கலாம், ஆனா அவர் பதவியை யாராலும் பறிக்க முடியாது:)

barath said...

நல்ல பதிவு.
இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களுடன் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு.
பின்னூட்டப்பகுதியும் சுவாரஸியமாக இருக்கின்றது

Syam said...

//கொஞ்சம் யோசிச்சு பாரு, ஒரு வெத்தலை பாக்கு பொட்டி, தோளில் துண்டு, அரசமரத்தடி இவ்ளோ மேட்டரும் என் அண்ணனுக்கு தான் அழகு//

அட அட அட...தங்கச்சி பித்தள சொம்ப விட்டுடயேமா :-)

shree said...

hayyayyo, pora pokkula yennayum ushavayum kooda ipdi tanglishla blog podarathukku thittuveenga pola iruke!

Priya said...

Nice post. தமிழ் தெரியாதுனு சொல்லரத பெருமையா நினைக்கர தமிழர்கள் இருக்கர வரைக்கும் தமிழ் க்கு future இல்ல. பொதுவாவே தமிழர்களுக்கு மொழி பற்று கம்மிங்கரது என் அபிப்ராயம். அரசியல்வாதிகள் ஹிந்திய எதிர்க்கரத தான் பண்றாஙளே தவிர தமிழ காப்பத்த மாட்டேஙறாங்க.

indianangel said...

@ வேதா,ச்யாம்,அம்பி,பொற்கொடி
நல்ல வேளை உங்க பாச மலர் வசனத்த கேக்க கூடாதுன்னுதான் நடிகர் திலகம் மண்டைய போட்டரு! அப்பப்பா! தாங்கலை! இந்த பாச மழையில நான் கண்ணீர் விட்டு! நாக்கு வறண்டு போச்சு! புளியோதரையோட 2 டின் குலாப் ஜாமூன் அனுப்புங்க! :)

Viji said...

//poruthathu pothum pongi ezhu viji:)(hehe eppavum neenga seiyara narayana velaiya ippa naan senjiten:) //- LOL.
Seri, bathil solren...
Ambi- Language varum. neenga enna nenaichinga?!

nalla irungamma Veda!

வேதா said...

@பரத்,
தங்கள் ஆதரவுக்கு நன்றி:)
பின்னூட்டப்பகுதிகள் இல்லையென்றால் நாம் எழுதுவதற்கு ஏது மதிப்பும், கருத்து பரிமாற்றங்களும்?:)

@ச்யாம்,
பித்தளை சொம்பை சொல்லியிருப்பேன், அப்புறம் கற்பனை வேற எங்கயாவது போய்டும், எதுக்குன்னு விட்டுட்டேன்;)

@ஷ்ரீ,
நான் ஏன் திட்றேன், நான் ரொம்ப நல்ல பொண்ணு:) நீங்க கூட தமிழ்ல எழுதலாம் தப்பில்ல:)(கருத்து தாங்க என்னால சொல்லமுடியும் பின்பற்றுவதும், விட்டுவிடுவதும் உங்கள் உரிமை:)

@ப்ரியா,
//அரசியல்வாதிகள் ஹிந்திய எதிர்க்கரத தான் பண்றாஙளே தவிர தமிழ காப்பத்த மாட்டேஙறாங்க.//
சரியா சொன்னீங்க:)

@ இந்தியதேவதை,
ரொம்ப கண்ணக் கட்டிடுச்சோ?:)
ஆனாலும் இப்படி எங்க பாசத்துல கண்ண வச்சுட்டீங்களே முதல்ல எங்களுக்கு சுத்திப் போட்டுக்கணும்;)

//புளியோதரையோட 2 டின் குலாப் ஜாமூன் அனுப்புங்க! :) //


ச்யாம் புளியாதரையை தனக்கு தான்னு ஃபுல் காண்டிராக்ட் போட்டுக்கிட்டாரு, அதனால அவர் கிட்ட போய் ஒரு சப்-காண்டிராக்ட் எடுத்துக்கோங்க:)

ambi said...

//Language varum. neenga enna nenaichinga?!//
@viji, naanum athe thaan ninachen.(with a Avin paal looku!) LOL :)

வேதா said...

@viji,
//nalla irungamma Veda! //
ஏதோ உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் இருந்தா சரிதான்:)

Sasiprabha said...

தங்களை தமிழ் வார்த்தைகள் கொண்டு காண நாளாகிவிட்டது.. அருமையான கவிதைகள்.. நீண்ட நாட்கள் காணாது காலம் தாழ்த்திவிட்டேன்..

தமிழ் நம் மக்களுக்கு பட்டிமன்றத்துக்கும் மேடை பேச்சுக்கும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மொழி.. இதை மறன்து ஆதங்கப்படக் கூடாது..

ambi said...

//ஏதோ உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் இருந்தா சரிதான்//
ithai naan vanmaiyaaga kandikaren. oru wild childa(arai tickettai!nu kooda sollalaam) epdi ivvaaru sollalaam? :D
btw, ithu thamizhla enna ani?nu contact my shishya ko(e)di. :D

vaazhvalitha dheyvathuku ambi saarbaaga 50 thavathu commentu.

மு.கார்த்திகேயன் said...

Vetha,
TVla varra ellorume eppadiththaan pseuraanga.. pona diwalikku azhakiya asinnu oru nikazhchchi sun tv la vanthathu..athula asin muzhukka thamizhla pesanumnu romba try panni thamizhlaye thaan pesinaanga..
samipaththula vantha oru nadigai eppadi irukkirappo paththu varudangalukku munnal vantha shobana appadi senjathu sari illai

(appada..eppadiyo asinukku oru nalla per vangi koduththaachchu)

Syam said...

@IA,
//ந்த பாச மழையில நான் கண்ணீர் விட்டு! நாக்கு வறண்டு போச்சு! //

யேம்பா அம்பி இவருக்கு சோடா ஃபேக்டரி எங்கனு காமிச்சுடு :-)

வேதா said...

@சசி,
தங்கள் பாராட்டுக்கு நன்றி:)
//தமிழ் நம் மக்களுக்கு பட்டிமன்றத்துக்கும் மேடை பேச்சுக்கும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மொழி.. இதை மறன்து ஆதங்கப்படக் கூடாது..//
எப்படி ஆதங்கப்படாம இருக்க முடியும்?

@அம்பி,

btw, ithu thamizhla enna ani?nu contact my shishya ko(e)di. :D

அது என்ன அணி என்று எனக்கு தெரியும், ஆனா நான் சொல்ல மாட்டேன்(என்ன போட்டு வாங்க ட்ரை பண்றியா?;))

முதல்முதலில் ஹாஃப் சென்சுரி அடிக்க ஆதரவு கொடுத்த அம்பிக்கு அல்வா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.எத்தனை வாட்டி தான் நீ எல்லாருக்கும் அல்வா கொடுப்ப;)

@கார்த்திக்,
ஏம்பா இந்த அசின் புகழ் பாடாம எதுவும் சொல்ல தெரியாதா உங்களுக்கெல்லாம்? ஒரு மாதிரியா தான் அலையறீங்க:)

Ram said...

Hi Veda,
Coming here after a log time. gud to c u have got more readers for ur blog. Some ppl think that they ll be respected and praised if they speak in English. Not to blame them, the society thinks so, except for the few ppl like you. Even in big MNCs where ppl are highly educated, they think that a person gud in English is better. First of all this attitude shud be changed.

P.S(Pin Kurippu):- Naan ivlo neram english laye pesinadhukku erichall aagidaathingo. Naan blog panradhu ennoda ingleasea valakarthukkum thaan. :)

வேதா said...

@ram,
thanks for understanding my views. so what happened? long time no see:) i hope if time permits u blog often in future:)

@syam,
நாட்டாமைக்கு நேரம் சரியில்லை:)

Usha said...

po veda, innum kooda enaku words therila! am not sure what is wrong, I can see these tamil words in the comments, but cant see the post :(

பொற்கொடி said...

@இந்திய தேவதை:
வைர மூக்குத்தி ஸ்விஃட் பென்ஸ் இதெல்லாம் வாயார சொல்லி பாருங்க.. உங்களுக்கு பாசம் வரல??!!

gils said...

hmm....damilla adiga dry panlaamnu...ekalappai (no expansions intended) software installina...englpishla thupidchi... :( than muyatchiyil satrum manam thalaratha vedalam still trying....papaoam

Bala.G said...

kaalam maaripochu...

வேதா said...

@usha,
can u view it now? i have changed the template.

@gils,
try try and try till u succeed:)

@bala,
kaalam maarinalum sila adaiyalangalai naam thakka vaithu kolla vendum:)

கீதா சாம்பசிவம் said...

தங்கிலீஷ் எழுதற அம்பிகிட்டே கொஞ்சம் சொல்லக்கூடாதோ தமிழில் எழுதச் சொல்லி, இல்லாட்டி வேதாளமா வந்து பயமுறுத்துவேன்னு சொல்லுங்க.

Known Stranger said...

tamil will live in its own way - It will adapt with the world and will live - senthamil than irrukkannumnu adam piditha - why not all tamilians stick back to the inherent way of living.

let tamil adapt and dont worry - it will not die.

senthamil.org said...

அன்பரே இந்த ஏக்கம் பிறப்பால் ரத்தத்தில் ஊறி இருக்வேண்டும். தாங்களை போன்றோர் தமிழ் ஏக்கத்துடன் எழுதுவது பெருமையாக உள்ளது . தொடருங்கள் உங்கள் கடமையை தமிழ் மகனாக. மேலும் விபரங்களுக்கு senthamil.org