Monday, September 11, 2006

கேதார்நாத்தில் நான்..

இரண்டு வருடங்களுக்கு முன் நாங்கள் பத்ரிநாத், கேதார்நாத் போகலாம் என முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்த பிறகு தான் தெரிந்த்து பத்ரிநாத் போகும் வழியில் எல்லாம் மணல்சரிவு ஏற்பட்டு பல பேர் இறந்துவிட்டனர் என்று. ஆனாலும் மனந்தளராமல் நாங்கள் ஏற்பாடு செய்தபடி கிளம்பிவிட்டோம்.

டெல்லியில் போய் இறங்கியவுடன் அங்கிருந்து ரிஷிகேஷுக்கு பேருந்தில் சென்றோம். டெல்லியில் இருந்து ரிஷிகேஷ், ஹரித்வார் செல்வது சுலபம், நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. ரிஷிகேஷ் சென்றவுடன் அப்போதைய நிலவரப்படி மணல்சரிவுகள் தொடர்ந்துக் கொண்டிருப்பதாகவும், ராணுவம் உதவிக்கு வரவழைக்கப்பட்டு பத்ரிநாத் செல்லும் பாதை சீரமைக்கப்படுவதாகவும் தெரியவந்தது. முதலில் போட்ட திட்டப்படி பத்ரிநாத் செல்லாமல், கேதார்நாத் பார்த்துவிட்டு வரலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.


உடனே எங்கள் குழுவில் வந்த சில மனிதருள் மாணிக்கங்கள்" நாம் பத்ரிநாராயணனை தான் முதலில் தரிசிக்க வேண்டும், உயிர் போனால் என்ன? பத்ரியில் போவது புண்ணியம் தான்" என்றனர். இப்படி பேசும் பெரிசுகளோடு மாட்டிக்கொண்ட என்னைப் போல் சில பேருக்கு இதயமே நின்றுவிட்டது. ஆஹா நீங்களெல்லாம் நல்லா 50 ,60 வருஷம் வாழ்க்கையை ஆண்டு அனுபவிச்சுட்டு இப்படி பேசறீங்க, நாங்கெல்லாம் இப்பதான்யா வாழ்க்கையையே எட்டிப் பார்க்க ஆரம்பிச்சிருக்கோம்னு மனசுக்குள்ள ஃபீல் பண்ணிக்கிட்டு நின்னோம். நல்லவேளை எங்க டூர் நிர்வாகி பத்ரிக்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு அனுமதி கிடைக்காது என்று சொன்னப்புறம் தான் புலம்பல் நின்றது.


இப்படியாக எங்கள் பயணம் கேதார்நாத் நோக்கி துவங்கியது. கேதார்நாத் சிவன் ஸ்தலம், மலை மீது அமைந்துள்ளது. முதலில் தேவப்ரயாக் சென்றடைந்தோம், நாங்கள் போகும் இடமெல்லாம் மலைப்பிரதேசம் தான் கூடவே கங்கையும், வெவ்வெறு பெயரில். தேவப்ராயகையில் தான் பாகிரதி நதியும், அலகாநந்தா நதியும் இணைகின்றன(ஆனால் இரண்டுமே கங்கை தான்).இங்கிருந்து தான் மலைப்பாதை இரண்டாகப் பிரிகிறது. ஒன்று கேதார்நாத்தை நோக்கி, மற்றொன்று பத்ரிநாத்தை நோக்கி.


எங்கள் பேருந்து கேதார்நாத்தை நோக்கி சென்றது. போகும் வழியில் ராம்பூர் என்னும் மலைகிராமத்தில் அறை எடுத்து தங்கினோம். கடும் குளிரோடு அருமையான இயற்கைக் காட்சிகள். நாம் போனவுடனே சரியாக ஆஜராகிவிடுகிறார்கள் குதிரைக்காரர்கள். கேதார்நாத்தை தரிசிக்க 14 கிலோமீட்டர் குதிரையில் பயணம் செய்ய வேண்டும். இவர்களிடம் முதல் நாளே குதிரை புக் பண்ணிவிட வேண்டும். குதிரை என்றவுடன் எனக்கும், என் தம்பிக்கும் ஒரே சந்தோஷம், ராணி மங்கம்மா, ராஜா தேசிங்கு ஃபீலிங் வேற:) குதிரைக் கனவுகளுடன் உறங்க சென்றோம்.


தொடரும்........

26 comments:

ambi said...

nalla starting. ennada Ulaa varum oli kathir romba naala kanoome?nu paarthen. very gud. very gud.

//குதிரை என்றவுடன் எனக்கும், என் தம்பிக்கும் ஒரே சந்தோஷம், //

yeeh, yeeh, kuthirai endraale kushi thaan! :)

me thaan pastaa? therilai, ethukum onion dosai reserve panni vekkaren. :)

gils said...

!!wow..dinamani padicha effect..unga tamizh...aniyayathuku nalla iruku

பொற்கொடி said...

என்ன திடும்னு வார்ப்புரு எல்லாம் சேஞ்சிங் சேஞ்சிங்..?

பொற்கொடி said...

ஆ! நீங்க இந்த யாத்திரை எல்லாம் போயிருக்கீங்களா!! எனக்கும் ஆசை உண்டு.. முக்கியமா சிம்லா :)

Syam said...

ஆகா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுடாங்க...கீதாக்க இல்லாத குறைய தங்கச்சி நீ தீர்த்து வைக்கர... :-)

//ஆஹா நீங்களெல்லாம் நல்லா 50 ,60 வருஷம் வாழ்க்கையை ஆண்டு அனுபவிச்சுட்டு இப்படி பேசறீங்க//

யாரயோ சொல்ற மாதிரி இருக்கே... :-)

Ram said...

Pudhu template nalla irukku, esp the header.

Syam said...

template நல்லா இருக்கு...ஆனா எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

தேவப்ராயகையில் தான் பாகிரதி நதியும், அலகாநந்தா நதியும் இணைகின்றன(ஆனால் இரண்டுமே கங்கை தான்
oh nampa geetha madamum vetha(Lam) mathiriya.
avunka varathukkulle aanmiika payanathi oru kalakku kalakka theermanam panniyaachhu.um natahunka.thalaivikku ipaati dhorakam pannalaama.
aana summa sollakutaathu katcheri aarampame kalai kattituththu.paavam antha kuthirai enna patu patap pokiratho
bsnl promblem tamil font kitaikkalai oru pathivu pottu ennai thoranam katti thunka vittutaathe payamma irukku intha ambi vera ippo anukoola chathru.

தி. ரா. ச.(T.R.C.) said...

தேவப்ராயகையில் தான் பாகிரதி நதியும், அலகாநந்தா நதியும் இணைகின்றன(ஆனால் இரண்டுமே கங்கை தான்
oh nampa geetha madamum vetha(Lam) mathiriya.
avunka varathukkulle aanmiika payanathi oru kalakku kalakka theermanam panniyaachhu.um natahunka.thalaivikku ipaati dhorakam pannalaama.
aana summa sollakutaathu katcheri aarampame kalai kattituththu.paavam antha kuthirai enna patu patap pokiratho
bsnl promblem tamil font kitaikkalai oru pathivu pottu ennai thoranam katti thunka vittutaathe payamma irukku intha ambi vera ippo anukoola chathru.

வேதா said...

@அம்பி,
உலா வரும் ஒளிக்கதிரா? அடப்பாவி:)
சரி பரவாயில்லை, கட்டுரை நல்லா இருந்தா சரி:)
ஆமாம் இன்னும் அந்த பஞ்சாபி குதிரையை மறக்கலையா?;)
நீ தான் பஷ்டு அதனால் அம்பிக்கு ஒரு மசால் தோஷை...........:)

@கில்ஸ்,
என்ன இதுக்கே இப்படி அசந்துட்டீங்க:) என்னோட நல்லா எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க:)

@பொற்கொடி,
மாற்றம் தான் என்னிக்குமே மாறாதது, அதனால் தான் மாத்திட்டேன்:)
யாத்திரையெல்லாம் நிறைய போயிருக்கேன், சிம்லா கூட போயிட்டு வந்துட்டேன்:)

@ச்யாம்,
பின்ன தலைவி தற்காலிகமா பதவியை எனக்கு கொடுத்துட்டுனா போயிருக்காங்க[அவங்களுக்கு இது தெரியுமான்னு கேட்கக் கூடாது:)]

//யாரயோ சொல்ற மாதிரி இருக்கே... :-) //
சீசீ உங்களப் போய் அப்படி சொல்வேனா?;)

டெம்ப்ளேட் வேற ஒரு ப்ளாக்ல பார்த்தேன், எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அதனால் நானும் மாத்திட்டேன்:)

@ராம்,
நன்றிங்க:)

@திராச,
தலைவிக்கு துரோகமா? சீசீ அதை எல்லாம் நான் செய்யற்து கிடையாது, ஆனாலும் இந்த மாதிரி பதிவு போட்டு அவங்களை அடிக்கடி நினைவுப்படுத்திக்க வேண்டாமா?
//paavam antha kuthirai enna patu patap pokiratho//
குதிரைக்கு அடியா எங்களுக்கு அடியா? படியுங்கள் அடுத்த பதிவில்.....:)
அப்புறம் என்னை 'ங்க' போட்டு விளித்து தலைவிக்கு ஜோடி சேக்காதீங்க, நான் ரொம்ப சின்னவ:) அதனால் ஒருமையிலேயே கூப்பிடவும்:)

indianangel said...

நல்லா இருக்கு பதிவு! நான் வாழ்க்கையில ரொம்ப விரும்பி படிச்ச புஸ்தகங்கள்-ல ஒண்ணு "கயிலை யாத்திரை" பரணீதரன் எழுதினதுன்னு நினைக்கிறேன்! அத படிச்சுருகீங்களா??

ambi said...

Templete change panniya veda vaazhga.
oru unmai sollatumaa, munthina templeteaa first naan kaari thupittu thaan unga post padikka arambipen. LOL :)

btw, antha ponna konjam mugatha thirupi intha pakkam pakka sollunga. (pons templetea paathu kaapiyaa?) :)

Bala.G said...

// ராணி மங்கம்மா, ராஜா தேசிங்கு ஃபீலிங் வேற:)// ha haa haa

மு.கார்த்திகேயன் said...

வேதா. நல்ல ஆரம்பம்.. ஷ்யாம் சொன்ன மாதிரி கீதா மேடம் இல்லாத குறையை தீர்த்தி வைக்கிறீங்க.. ஆனா உங்க குரு மாதிரி பெரிய பதிவை போடாம சின்னதா போடுறீக..

பொற்கொடி said...

குதிரை சிலிர்த்து நீங்க விழுந்து வாரிருக்கீங்க சரியா :)

Jeevan said...

Gangaiya pakkartha oru periya bakkiyam thaan! Malai payanama oru thani sugam, anubavam, athuvum Emaaiya malai adivarmna sollava veanum.

continue..... for next post.

gils said...

seri..rendavathu comment posht panathuku oru rava idli parcel :D

Known Stranger said...

desandrigan mathiri ezhudhura.. good... very good.. you can soon start to be a good nagivating author across the boundaries. soon you will be called medhai veda

My days(Gops) said...

ennamo eludhi irrrkeeenga, but ennanu theriala.... font probs
btw, unga background nalla irruku...

PS:- reply tanglish'la pannunga.....

Shuba said...

nalla description..part 2 eppo?

vishy said...

huh.. template ellam change ayidichu.. have been really tiedup with work.. so konja naal aah blog pakkame varala. no updates on mine too...

font color konjam dark aah iruntha padikka elidhakka irukkumm..

வேதா said...

@indian angel,
thanks, neenga sonna book padichathilla but heard abt it:)

@ambi,
ithey velaiya thaan naan panren thinamum un template paathu:)

@bala,
:):)

@karthik,
enna irunthalum thalaivi mathiri varuma?

@porkodi,
aanalum unaku ivlo nalla manasa? but antha mathiri nadakalaye:)

@jeev,
danks:)

@gils,
yenpa ithu enna saravana bavana?;)

@vaishnav,
enna vazthiya unaku 1000 porkasugal parcel;)

@gops(md)
hi welcome to india, cant u view my blog. try it in ie.

@shuba,
nii kekartha paatha itha padichiyanu enaku santhegam varuthu:)

@vishy,
welcome back:)

ambi said...

//thinamum un template paathu//
templete paathaa? athula irukara matteraa paatha? if it is matter, na me don't care. (elay sunaa paanaa! singam da neey)

but i feel my temp looks good and easy to read in blue background which good for all eyes.

வேதா said...

@ambi,
மேட்டர் பார்த்து எப்பவுமே பண்றது தான்:) நான் சொன்னது டெம்ப்ளேட் பார்த்து தான்:) ஆமா என்ன அம்பி இதுக்கு போய் வரிஞ்சுக் கட்டிக்கிட்டு சண்டைக்கு வர?:) btw, i have made the fonts color dark in the latest post, is that comf or shall i retain it in light shade.

Sundar Narayanan said...

template suuper veda..

:)

naan innum badri kedar ponadillai!!

:(

கீதா சாம்பசிவம் said...

ஹி,ஹி,ஹி, இந்தக் குதிரையைப் பத்தி நானும் எழுதணும். அது எப்படி நீங்களும், நானும் ஒண்ணாச் சிந்திக்கிறோம் பாருங்களேன், ஆச்சரியமா இல்லை? GREAT WOMEN THINK ALIKE!!!!!!!!!