Friday, October 27, 2006

எதை தொலைத்தாள் அதை தேடுவதற்கு? - 1

மு.கு. : எல்லாரும் கதை எழுதறாங்களே நாமளும் முயற்சி செய்யலாமேன்னு தான் இந்த கதையை இங்கே எழுதுகிறேன். ஏதோ ஒரு முயற்சி அவ்வளவு தான் அதனால படிச்சுட்டு உங்க விமர்சனங்களை சொல்லுங்க. இப்ப முதல் பகுதி தான் பதிக்க போகிறேன், எனென்றால் எப்படி முடிப்பது என்று இன்னும் யோசிக்கவில்லை:) சரி கதை கேட்க ரெடியா?

அந்த அறையின் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தாள் அவள் அலங்கோலமாக. எங்கோ மிதப்பது போலவும், முள் படுக்கையில் படுத்திருப்பது போலவும் அவளின் ஒவ்வொரு அணுவும் வலித்தது. 'இல்லை எனக்கு நினைவே வரக் கூடாது எழக் கூடாது' என நினைத்துக் கொண்டே நினைவுக்கு வர மறுப்பவள் போல் பிடிவாதமாக மரணத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் அவள் உயிரின் கதறல் தீனமாய் விழுந்தது.

நழுவ விட்ட நினைவை பிடித்திழுத்து சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். இன்னொரு மூலையில் தூளியில் இருந்து எட்டிப்பார்த்து அவள் உயிரின் ஒரு துளி அழுதுக் கொண்டிருந்தது. ஓடிச் சென்று அள்ளி அணைக்க கால்கள் பரபரத்தாலும், எழ முடியவில்லை.

அதற்குள் சத்தம் கேட்டு குடிசையின் வாசலில் வந்து நின்றான் அவள் கணவன் ராமு, அந்த பெயருக்கே உள்ள எந்த குணாதியசமும் இல்லாதவனாய்.(ராமன் என்றால் அனைத்து உயிருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பவன் என்று பொருள்)

அவனைப் பார்த்த கணம் எங்கோ பறந்துக் கொண்டிருந்த தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி தட்டுதடுமாறி எழுந்து அவன் தூளியின் அருகில் செல்லும் முன் தன் குழந்தையை எடுத்து வாரி அணைத்தாள்.

குடிபோதையில் ராமு, 'ஏண்டி நான் குழந்தையை தொடக் கூடாதா' எனக் கத்தினான்.
கண்களில் வழியும் குரோதத்துடன் அவனைப் பார்த்துக், 'ஏன்?' என்றாள்.

அவள் கண்களின் தீவிரம் தன்னை ஒன்றும் செய்யாதது போல 'என்ன கேக்குற? ஓ நேத்து நடந்தது பத்தியா? ஆமா பின்ன நான் என்ன தியாகம் செய்யவா உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? உங்க அம்மா செஞ்சுக்கிட்டுருந்த தொழிலை கொஞ்சம் நாகரீகமா செய்யலாம்னு தான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். முதல்ல சொன்ன நீ ஒத்துக்க மாட்டேன்னு தான் இத்தன நாள் சொல்ல. அதான் என்னோட கொஞ்ச நாள் வாழ்ந்துட்ட இல்ல ஒரு குழந்தையும் வந்துருச்சு. இனிமே நான் சொல்றபடி தான் கேக்கணும். பாரு நீ நேத்து நான் சொன்னதுக்கு ஒத்துக்கல. அதான் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். காலைல அவன் போயிட்டான் எனக்கு பணம் கொடுத்துட்டு' என்றான் விகாரமாய்.

தன்னிடம் ஏதோ ஒன்று குறைவது போன்று உணர்ந்திருந்த அவள் அது உண்மையென்று அறிந்ததை விட, தன் கணவனே அதற்கு காரணம் என தெரிந்தவுடன் கதறி அழ ஆரம்பித்தாள். அவள் குழந்தையும் ஏதோ புரிந்ததுப் போல சேர்ந்து அழுதது.
'ஏய் இதுக்கு இப்படி சீன் போடற? இதெல்லாம் உனக்கு சகஜம் தான? உங்க அம்மா இதை தான் செஞ்சுக்கிட்டுருந்தா? பெரிசா பத்தினி போல் அழற' என்றான்.

[அவள் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி. தான் படும் அவலங்கள் தன் மகளும் படக்கூடாது என்று அவளை படிக்க வைத்து ராமனுக்கு கட்டி வைத்தாள். ராமனும் ரொம்ப நல்லவன் என்று சொல்ல முடியாது என அவள் தாய்க்கு தெரிந்தும், தன் மகளுக்கு திருமணம் என்று நடந்தால் போதும் என்று தான் நினைத்தாள். அதை செய்தும் காட்டினாள். சிறிது நாட்களில் உயிர் துறந்தாள். அது வரை அமைதியாக இருந்தவன் தன் சுயரூபத்தை காட்டத் துவங்கினான்]

பத்தினித்தனம் பெண்ணுலகிற்கே உரிய சொத்து என்பது போல் அவன் பேசியதைக் கேட்டவுடன் கோபம் அதிகமாகி சுற்றும்முற்றும் பார்த்தாள். முதல் நாளிரவு அவன் குடித்துவிட்டு உருட்டி விட்டிருந்த சாராய பாட்டிலை எடுத்து அவனை நோக்கி விட்டெறிந்தாள்.

அவள் கோபங்களை தாங்கிச் சென்ற அந்த பாட்டில் அவன் தலையில் பட்டு உடைந்தது. அய்யோ என்று கதறியவாறு கீழே விழுந்தவன், அங்கிருந்த உரலின் நுனியில் இடித்துக் கொண்டான். அவன் தலையிலிருந்து புறப்பட்ட ரத்த ஆறு புண்ணியம் தேடி ஓடுவது போல் அறையெங்கும் பரவி அவள் கால்களை நனைத்தது. ரத்தத்தால் நனைந்த கால்களை துடைத்துக் கொண்டு அவள் புறப்பட்டாள் குடிசையை விட்டு.

தொடரும்..

30 comments:

கீதா சாம்பசிவம் said...

எப்படி முடிக்கப் போறீங்க? பார்க்கலாம். அதுக்கு அப்புறம் விமரிசனம் எழுதறேன். ரொம்பவே சீரியஸ் ஆன கருவை எடுத்துக் கொண்டு இருக்கீங்க, பார்க்கலாம்.

ambi said...

nice writeup. waiting for the next episode. :)

மு.கார்த்திகேயன் said...

//அவன் தலையிலிருந்து புறப்பட்ட ரத்த ஆறு புண்ணியம் தேடி ஓடுவது போல் அறையெங்கும் பரவி அவள் கால்களை நனைத்தது. ரத்தத்தால் நனைந்த கால்களை துடைத்துக் கொண்டு அவள் புறப்பட்டாள் குடிசையை விட்டு//

பின்னீட்டீங்க வேதா.. நல்ல்ல முயற்சி..பாராட்டுக்கள்..

மேலும் வித்தியாசமான கதைக்களம்.. வாழ்த்துக்கள்..

Priya said...

ரொம்ப கனமான subject எடுத்திருக்கிங்க. ஆரம்பமே ரொம்ப powerful ஆ இருக்கு. Awaiting the next part..

indianangel said...

good good! nallakeedhu welcome to story writer's club! aaga idhukku oru blog maanadu nadathalam pola irukke - ippodhaikku naalu peru in dhis clubu - gilli priya, thala karthi, neengal and naan! matha ellarum seekarama vaangapa! :)

Known Stranger said...

karuthu vallam, soll vallam, narration, description , everything is good enough to keep the reader sit and read - what else a writer need ?

a good story teller - if you find it difficult to end - they you are a screen play write of soaps of tv serial

if you finish in on 200 words - you are a short story writter.

good one veda... nanri you came to my page.. ifnot i was too lazy to browse other blog page.. find a vermai oflate .. so just keeping quite.

Arunkumar said...

i am interested to c how u r going to end this... good narration style.. read from start to end.. keep it up :)

Syam said...

ஹெவி வெயிட் கதை...ஆனா நல்லா எழுதியிருக்க...சமீபத்துல வந்த நியூஸின் தாக்கமோ... :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆராம்பத்திலேயே ரத்த ஆறு ஓடத்தொடங்கி விட்டது.முடிவாது நல்லபடியா முடித்தால் சரி. எப்படியும் ஏதாவது ஒரு மெஸ்ஸேஜ் இருக்கும் முடிவில் என்று நம்புகிறேன்

Balaji S Rajan said...

Super begining. I am happy that you are writing something related to women revolution, alcholic and sufferings. Quite interesting.. and a serious subject. Can't wait anymore.. bring the next part soon.

Sandai-Kozhi said...

very serious subject.azhaga ezhudi irukeenga.nalla thiruppam.Waiting for the next episode.--SKM

Syam said...

தங்கச்சி இவ்வளோ அருமையா நீ கதை எழுதி இருக்க இன்னும் நிறையா பேரு அட்டண்டெண்ஸ் குடுக்காம இருக்காய்ங்க...சரி பஞ்சாயத்த கூட்ட வேண்டியது தான் :-)

வேதா said...

@கீதா,
எப்படி முடிப்பது என்பதை முடிவு செய்து விட்டேன்,ஆனால் இன்னும் எழுதவில்லை:)

@அம்பி,
நன்றி:)

@கார்த்திக்,
நன்றி தலைவரே.

@ப்ரியா,
நன்றி, அடுத்த அத்தியாயம் கூடிய விரைவில்:)

வேதா said...

@ப்ரசன்னா,
நான் ஏற்கனவே இந்த வலைப்பூவில் இரண்டு கதைகள் எழுதியிருக்கேன் ப்ரசன்னா, நீங்க படிச்சிருக்க வாய்ப்பில்லை:)

@வைஷ்ணவ்,
நன்றி,

if you find it difficult to end - they you are a screen play write of soaps of tv serial
ஹிஹி இது கூட நல்ல யோசனை தான்:)

@அருண்,
நன்றி,
ரொம்ப எதிர்பார்க்காதீங்க ஏதோ சுமாரா தான் எழுத வரும்:)

@ச்யாம்,
என்ன நியூஸ் நாட்டாமை?

வேதா said...

@திராச,
ரத்த ஆறு இனி ஓடாது கவலைப்படாதீங்க:) முடிவுல கண்டிப்பா ஒரு செய்தி இருக்கும்:)

@பாலாஜி,
ரொம்ப நன்றி:) ரொம்ப நாளா இந்த கரு என் மனசுல சூல் கொண்டு இருந்தது, இப்ப தான் வெளி வந்தது:)

@skm,
நன்றி:)

@ச்யாம்,
பரவாயில்லை அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்:) இதுக்கெல்லாம் எதுக்கு பஞ்சாயத்து:)

Syam said...

//என்ன நியூஸ் நாட்டாமை//

அதுதான் யாரோ ஒரு அம்மா புருசன சுட்டு கொண்ணுட்டாங்களே :-)

Priya said...

@Prasanna,
//ippodhaikku naalu peru in dhis clubu - gilli priya, thala karthi, neengal and naan!//

unga club la enna sethu en manatha vaangaringa?? neengalam ezhudharadhukku munnadi en kadhai paridhama muzhikkudhu..

கீதா சாம்பசிவம் said...

தொலைச்சு ஒரு வாரமாத் தேடாமல் இருந்தால் என்ன அர்த்தம்? சீக்கிரம் வந்து தேடுங்க.

My days(Gops) said...

eppadinga irrukeenga? nalla write panni irrukeeenga... next post please.........

smiley said...

Thodar kathai... how many episodes to it? all the best. hopefully u will have a fairy tale ending to it.

G3 said...

Yappa.. Naan nenachadha correcta unga heroine senjitta.. :)

Aana kadaisila kadha mudinja effect irundhudhu enakku (oru pakka story effectla)

Waiting to see how u continue :)

Jeevan said...

Veda story was very nice, romba Intersting'a pothu. Let me wait for the next episode..... :)

வேதா said...

@ச்யாம்,
ஓ அந்த சேட்டுக்காரம்மா கதையா? அது மாதிரி இருக்காது என் கதை:)

@ப்ரியா,
ஆனாலும் இவ்ளோ தன்னடக்கம் கூடாது, உங்க எழுத்துக்களும் சும்மா நச்சுன்னு தான் இருக்கு:)

@கீதா,
பொறுமை பொறுமை:) சில காரணங்களால் எழுத முடியாமல் போய் விட்டது. கண்டிப்பாக இன்னும் இரண்டு நாட்களில் எழுதிவிடுவேன்:)

@கோப்ஸ்,
ஊருக்கு வந்தாச்சா?:)

@ஸ்மைலி,
நன்றி. நிறைய பாகங்களுக்கு இழுக்க மாட்டேன், விரைவில் முடித்து விடுவேன்:)

@ஜி3,
நன்றி. கதை முடிஞ்ச மாதிரி தோணினாலும் கதாநாயகி விளைவுகளை எப்படி சந்திக்கிறாள் என சொல்ல இருக்கிறேன்.

@ஜீவ்,
ரொம்ப நன்றி நண்பா:) விரைவில் அடுத்த பாகம் வெள்ளிக்கிழமை ரிலீஸ்:)

Anonymous said...

Good Effort Friend.Nice to see that you are trying to use pure tamil words which is not so easy in today's life...

One clarification,

>>'ஏய் இதுக்கு இப்படி சீன் போடற? இதெல்லாம் உனக்கு சகஜம் தான? உங்க அம்மா இதை தான் செஞ்சுக்கிட்டுருந்தா? பெரிசா பத்தினி போல் அழற' என்றான்.

பத்தினித்தனம் பெண்ணுலகிற்கே உரிய சொத்து என்பது போல் அவன் பேசியதைக் கேட்டவுடன் கோபம் அதிகமாகி சுற்றும்முற்றும் பார்த்தாள்.

>>

Ramu yengee பத்தினித்தனம் பெண்ணுலகிற்கே உரிய சொத்து என்பது போல் peesinaan..Rather,he had spoken on the otherway by taking her mother as an example ? Is'nt ? Am i missing something ?

Thanks for your time.

-Hayagriva Dasan

வேதா said...

@ஹயக்ரீவ தாசன்,
தங்கள் பாராட்டுக்கு நன்றி:)
தங்களின் சந்தேகத்திற்கு என் விளக்கம்:

கணவனை தவிர மற்றவரை நினைப்பவள் பத்தினியில்லையென்றால், தன்னை வேறொருவனுக்கு விற்றவனுக்கு என்ன பெயர்? பெண்களுக்கு மட்டும் தான் பத்தினித்தனம் வேண்டுமா? என்கிற அவள் கேள்வி தான் அந்த வரியில் வெளிப்படுகிறது.

Ravi said...

vedaaaa ....

neenga edutha subject common subject naalum ...

//அவள் குழந்தையும் ஏதோ புரிந்ததுப் போல சேர்ந்து அழுதது. //

Beautifull lines .............
engayo poiteenga ... veda ... innum yosicheenga na ... oru scene'a pottuduveenga kadhai ezhuthi ... hmmmm

good story nu sollaratha vida .. good writeup nu sollallam ...
keep going !!!!

Anonymous said...

@Vedha,

Ungal villakathirkku mikka nandri.

Irunthaalum enn santheegam theeravillai...

கணவனை தவிர மற்றவரை-yum ninaikka veendum yenbathu thaanee ramuvin yennam.

Sari vidungall.....yenakku sulabathil yethuvum puriyaathu.

Irunthaalum.....Oru vinnappam..Neegal yeduthu konda karu romba sensitive-aanathu.So,ungal kathaanayagi aduthaduthu yedukkum mudivugal namathu kalacharathai kaapathaaga irukattum.

Ungal muyarchikku yenathu paratugal.

Thanks for your time.

Ungal Kathaiyin ootathai aavaludan yethirnookum...

-Hayagriva Dasan

PS: Enn Taminglishukku Manikavum,enakku tamilil yeppadi type seivathu endru theriyaathu.

வேதா said...

@ரவி,
தங்கள் பாராட்டுக்கு நன்றி,
//good story nu sollaratha vida .. good writeup nu sollallam ... //
இதை நான் ஆமோதிக்கிறேன், எல்லாராலும் எழுதப்படும் ஒரு கதை தான் இது:)

@ஹயக்ரீவ தாசன்,
எனது விளக்கம் புரியவில்லையா? சரி விடுங்கள் எனக்கும் இதுக்கு மேல் விளக்க தெரியவில்லை:)

ungal kathaanayagi aduthaduthu yedukkum mudivugal namathu kalacharathai kaapathaaga irukattum.
கலாச்சாரம் பற்றி பேச ஆரம்பித்தால் அதற்கு தனி பதிவு போட வேண்டும்:) ஆனால் என் கதாநாயகி என்ன முடிவு எடுக்கிறாள் என்பதை விட தனக்கு நிகழ்ந்த விபத்தினால் அவள் சந்திக்கும் மன உளைச்சலும், அதை எப்படி அவள் தோழி தீர்க்க முயற்சிக்கிறாள் என்பதே என் கதையின் கரு, கதையின் இறுதி பாகத்தையும் எழுதி விட்டேன். படித்து தங்கள் கருத்தை கூறுங்கள்:)

நாகை சிவா said...

வேதா,
கதை எழுதனும் என்று முடிவு பண்ணி விட்டீர்கள் போல. நல்லா அமர்க்களமாக தான் ஆரம்பித்து உள்ளீர்கள். எனக்கு உங்கள் கதையை சட்டென்று படித்துவுடன் தோணியதை சொல்கிறேன்.

சிறுகதை கூறும் போது, படிப்பவர்களே பெரும்பாலும் புரிந்துக் கொள்ளும்படி எழுதினால் தான் அழுத்தமாக இருக்கும். நீங்கள் ஒரு சில கதாபாத்திரங்களையும் { ) போட்டு சொல்லி உள்ளீர்கள். அது தேவையில்லை என்பது என் எண்ணம்.

வேதா said...

ஆமா ஒரு முடிவோட தான் திரிஞ்சேன் அதை செஞ்சுட்டேன், பாவம் படிக்கற்து உங்க எல்லாருடைய தலையெழுத்து:)

/நீங்கள் ஒரு சில கதாபாத்திரங்களையும் { ) போட்டு சொல்லி உள்ளீர்கள். அது தேவையில்லை என்பது என் எண்ணம்/
என்ன சொல்றீங்க? எனக்கு புரியல:) நீங்க சொல்றது கதையின் நாயகியின் தாயை பற்றி சொன்னதையா?