Tuesday, October 03, 2006

கேதார்நாத்தில் நான் - 3


கேதாரம் என்றால் கவலை நீக்குதல் என்று பொருள். மகாபாரத போர் முடிந்த பின் பாண்டவர்கள் தீர்த்த யாத்திரை புறப்பட்டனர். இமயமலையை அடைந்த அவர்களுக்கு சிவன் ஒரு எருது வடிவில் காட்சி தரவும் பாண்டவர்கள் பின் தொடர, எருது வடிவில் இருந்த சிவபெருமான் பூமியை தோண்டி உள்ளே நுழைய ஆரம்பித்தார். அதற்குள் பாண்டவர்கள் வாலை பிடித்து நிறுத்தி விட்டனர். அதற்கேற்றாற் போல் இந்த கோவிலின் சிவலிங்க அமைப்பு எருதின் பின்பாகம் போல் இருக்கும்.

சூடுவேன் பூங்கொன்றைச் சூடிச்
சிவன் திரள்தோள் கூடுவேன்
கூடி முயங்கி மயங்கி நின்று ஊடுவேன்
செவ்வாய்க்கு உருகுவேன்
உள்ளுருகித் தேடுவேன் தேடிச்
சிவன் கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்தும் மலர்வேன்
அனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதும் காண்
அம்மானாய். (திருவாசகம்)

என்று பராசக்தியே இங்கு வந்து தவம் புரிந்து சிவனை திருமணம் செய்துகொண்டதாகவும் புராணம் கூறுகிறது.

ஜோராக குதிரையில் ஏறி அமர்ந்த எங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரமும் மிக அருமையானதாக அமைந்தது. எங்கெங்கு காணினும் இயற்கையின் கைவண்ணம். அதுவும் என் தம்பி ஏறி அமர்ந்த பஞ்சகல்யாணிக்கு(நாங்கள் வைத்த பெயர்) தன்னை தாண்டி யாரும் போக கூடாது, அவ்வளவு தான் நம்மூரில் சைக்கிள் கேப்பில் ஓடும் ஆட்டோக்களைப் போல உடனே ஓவர்டேக் பண்ணிவிடும். நான் அமர்ந்து வந்த குதிரையோ என்னை தள்ளிவிட்டு தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டதைப் போல்(இதை இதை தானே நீங்க எல்லாரும் எதிர்பார்த்தீங்க) ஒவ்வொரு முறையும் மலைப்பாதையின் வளைவுகளில் ஓரமாக தான் போகும்,. ஒவ்வொரும் வளைவு திரும்பும்போதும் என் இதயம் தொண்டை வரை வந்துப் போகும்.

என் அம்மாவோ என் நிலையைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தார்கள். ஆனால் குதிரைக்காரன் அதைப் பத்தியெல்லாம் கவலையே படாமல் என்னைப் பார்த்து 'நீங்க பயந்து குதிரையைப் பார்த்து ஏதாவது கத்தினீங்கன்னா அப்புறம் அது வேற ஏதாவது புரிஞ்சுக்கும்' என்றான். உடனே நானும், என் அம்மாவும் வாயை மூடியவர்கள் தான் அப்புறம் மலை மேல போற வரைக்கும் வாயே திறக்கலை. பின்ன நாம ஏதாவது சொல்லி அதை தான் திட்றோம்னு அது எங்கயாவது தள்ளிவிட்டுதுனா? இப்படியாக மூன்று மணி நேரம் பயணித்து (நடுவில் அரை மணி நேரம் ரெஸ்ட் எங்களுக்கில்ல குதிரைகளுக்கு) கேதாரம் வந்து சேர்ந்தோம்.

கோவிலின் வாசல் வரை குதிரை போகாததால் சிறிது தூரம் முன்பே இறங்கிவிட்டோம். இறங்கிய பிறகு தான் தெரிந்தது குதிரையில் பயணிக்கும் போது தோன்றும் வலி என்னவென்று சும்மா சொல்லக்கூடாது இடுப்பு கழன்று விட்டது. அப்படியே விந்தி விந்தி தான் நடந்து சென்றோம் கோவிலுக்கு. இங்கு சுயம்பு வடிவான கேதார்நாத்திற்கு நாமே அபிஷேகம் செய்யலாம். இதை பார்த்தவுடன் என் அம்மா வாய்ப்பை விடாமல் பயன்படுத்த வேண்டுமென்று சிறிது நேரம் காத்திருந்து பணம் கட்டி அபிஷேகம் செய்தார். நம் ஊரை போல் அல்லாமல் வடநாட்டில் கர்ப்பக்கிருகத்தில் நுழைந்து சாமியை தொட்டு வணங்கலாம். நாங்களும் சிவனை தொட்டு வணங்கினோம்.

என்ன தான் இருந்தாலும், நம்மூரில் இருண்ட சுவாமி சன்னிதியில் இயற்கையான விளக்கொளியில் முண்டியடித்துக் கொண்டு சுவாமியை தரிசிக்கும் போது உண்டாகும் அந்த அற்புத உணர்ச்சி இங்கே கிடைப்பதில்லை. தரிசனம் முடிந்ததும் வெளியில் உள்ள சின்ன சன்னதிகளையும் தரிசித்து ப்ரகாரத்தை சுற்றி வந்தோம். எங்களுக்கு மலைப்பு தான் மிஞ்சியது, போக்குவரத்து வசதியே இல்லாமல் இவ்வளவு உயரத்தில் வந்து கோவிலை அமைத்தது பெரிய சாதனை தான். இது கூட பரவாயில்லை, பத்ரிக்கு செல்வது இன்னும் கடினம் என்றார்கள் என் தாத்தா பல வருடங்களுக்கு முன் இந்த இடங்களுக்கு நடந்தே வந்தார் என்று என் அம்மா சொன்னதை கேட்டு இன்னும் ஆச்சரியம் அடைந்தோம்.

பின் அங்கிருந்து மீண்டும் குதிரை வாகனத்தில் அமர்ந்து கீழே இறங்கி வந்தோம். ஏற்கனவே ஊசலாடிக் கொண்டிருந்த எங்கள் இடுப்பு சுத்தமாக கழன்று விழுந்து விட்டது, அந்த அளவுக்கு வலி. கேதார்நாத் செல்பவர்களுக்கு நான் கூறும் ஒரே ஒரு அட்வைஸ் என்னவென்றால், முடிந்த வரை கீழே இறங்கும் போது குதிரையை தவிர்த்து நடந்தே வந்து விடுங்கள்.:)


பி.கு: இந்த முறை சில தவிர்க்க முடியாத காரணங்களால் கொலு வைக்க வில்லை, ஆனாலும் வழக்கம்விட்டுப் போகாமல் இருக்க சரஸ்வதி பூஜையன்று அவசர அவசரமாக வைத்த அலமாரி கொலு இது,

39 comments:

My days(Gops) said...

eppadinga ippadi ellam?

indianangel said...

romba nalla irukku! innorudhadavai padichutu vandhu comment podaren! :)

கீதா சாம்பசிவம் said...

ஹி,ஹி,ஹி, தலைவியும், தோழியும், நட்சத்திரம், ராசி எல்லாத்திலேயும் ஒத்துமைன்னா கொலுவிலே கூட ஒத்துமை. எங்க வீட்டிலேயும் ஸ்வாமி அலமாரியில் தான் இம்முறை கொலு. உங்க கொலுவுக்கு நான் வந்துட்டேன். நீங்க தான் எங்க கொலுவுக்கு வரலை. நற நற நற நற.

அப்புறம் கேதார்நாத் குதிரைக்காவது ஹிந்தி தெரியும், திபெத்தியன் பாஷை மட்டுமே தெரிந்த குதிரையில் போய் வந்த நான் எப்படிச் சமாளித்தேன் பார்த்தீங்களா? ம்ம்ம்ம், தலைவின்னா சும்மாவா?

vishy said...

kolu ellam paarthu rombha varusham aachunga. Indha park ellam kattaliya neenga?

ambi said...

nice writing. kethernaath pic ellam illaya?

cha! enna kuthiriai athu? nalla chancea miss panniduche? :D

generally, horses namba kooda nalla pazhagitta romba chamatha irukkum. namba sonna pecha kekkum. horse taming la ambi oru singam ley!
Disc:
sathyama, nan 4 leg horsea thaan sonnen! intha syam vanthu ennaya nakkal vuduvaan.

Syam said...

அதான அந்த குதிரை ஏதாவது லொல்லு பண்ணிருந்தா நான் வந்து ரெண்டு தட்டு தட்டுவேனு தெரிஞ்சு ஒழுங்கா போய்ருக்கு :-)

Syam said...

//திபெத்தியன் பாஷை மட்டுமே தெரிந்த குதிரையில் போய் வந்த நான் எப்படிச் சமாளித்தேன் பார்த்தீங்களா? ம்ம்ம்ம், தலைவின்னா சும்மாவா?//

தலைவியே நீங்க போனீங்கனா சைனீஸ்,ஜப்பானீஸ்,தாய்லாந்து குதிரை கூட ஒழுங்கா போகும்...ஏன்னா அதுங்க சின்ன வயசுல இருக்கவங்க கிட்ட மட்டும் தான் வம்பு பண்ணும் :-)

Syam said...

//generally, horses namba kooda nalla pazhagitta romba chamatha irukkum. namba sonna pecha kekkum. horse taming la ambi oru singam ley//

@ambi, apdiye nambitom, ithu ellorukum therium nee disci podanumnu avasiam illa :-)

நாகை சிவா said...

வேதா! உங்க பதிவு படிச்சவுடம் சட் மின்னல் மாதிரி தோன்றி கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.

இந்த குதிரை மேட்டர மேகனா வரைக்கும் கொண்டு போகலாம் என்று தான் நினைத்தேன். என்ன இருந்தாலும் நீங்களும் நம்ம குட்டையில உள்ள மட்டை தானே, அதுனால் விட்டுட்டேன்.

இப்ப கேள்விகள்

*//ஒவ்வொரும் வளைவு திரும்பும்போதும் என் இதயம் தொண்டை வரை வந்துப் போகும்.//

இந்த அனுபவத்தை கொஞ்சம் விரிவா சொல்ல முடியுமா. இப்ப தான் நான் புதுசா கேள்விப்படுகின்றேன். அதான்...

//எங்கள் இடுப்பு சுத்தமாக கழன்று விழுந்து விட்டது, //

கழன்று இடுப்பை மறுபடியும் எப்படி பிக்ஸ் பண்ணுனீங்க.....

//அப்படியே விந்தி விந்தி தான் நடந்து சென்றோம் கோவிலுக்கு.//

ஹிஹி.... 16 வயதினிலே கமல் மாதிரியா.... வேதாண்ணி சரியா வரதா?

நாகை சிவா said...

இப்ப சீரியஸ் மேட்டரு!

//நம் ஊரை போல் அல்லாமல் வடநாட்டில் கர்ப்பக்கிருகத்தில் நுழைந்து சாமியை தொட்டு வணங்கலாம். நாங்களும் சிவனை தொட்டு வணங்கினோம்.//

இது தவறு. பல இடங்களில் இறைவனை தொட்டு வணங்க முடியும். பெரும்பாலும் கருவறைக்குள் அனுமதிப்பதில்லை என்பது உண்மை தான். அப்படி இருந்தாலும் கூட வருடத்துக்கு ஒரு முறை "மருந்து வைப்பது"(இந்த வார்த்தை சரியா என்று தெரியவில்லை, விசாரித்து சொல்கின்றேன்) என்பதற்கு முன்பு இறைவனை கட்டி தழுவக் கூட விடுவார்கள். இது மிகவும் ஆச்சாரமான வைணவ கோவிகளில் உண்டு.

//நம்மூரில் இருண்ட சுவாமி சன்னிதியில் இயற்கையான விளக்கொளியில் முண்டியடித்துக் கொண்டு சுவாமியை தரிசிக்கும் போது உண்டாகும் அந்த அற்புத உணர்ச்சி இங்கே கிடைப்பதில்லை.//

எல்லாருக்கும் எல்லா இடத்திலும் Vibration கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு காரணமும் என்னிடம் இல்லை. நான் பல இடத்தில் இதை உணர்ந்து உள்ளேன். நமக்கு எங்கு அமைதி கிடைக்குதோ அங்கு போவதே தான் சிறந்தது. மற்ற இடங்களுக்கும் ஒரு முறையாவது சென்று வருவதும் நல்லது தான்.

Priya said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க. அந்த குதிரை இப்படி கடைசி வரைக்கும் சமத்தா இருந்திடிச்சே.

//என்ன தான் இருந்தாலும், நம்மூரில் இருண்ட சுவாமி சன்னிதியில் இயற்கையான விளக்கொளியில் முண்டியடித்துக் கொண்டு சுவாமியை தரிசிக்கும் போது உண்டாகும் அந்த அற்புத உணர்ச்சி இங்கே கிடைப்பதில்லை.//
சரியா சொன்னிங்க, எனக்கும் இதே மாதிரி தான் தோணும், north indian & US ல இருக்கர கோயில்கள பாக்கரப்போ.

Priya said...

அப்புறம், கொலு அமர்க்களம். simple னாலும் அழகா இருக்கு.

Gopalan Ramasubbu said...

Good narration veda.golu looks good too .

மு.கார்த்திகேயன் said...

//கோவிலின் வாசல் வரை குதிரை போகாததால் //

ஓ..கொஞ்ச தூரம் கூட நடக்காம போயிடலாம்னு ஆசையா..


//என் தாத்தா பல வருடங்களுக்கு முன் இந்த இடங்களுக்கு நடந்தே வந்தார் //

அந்த கால மனிதர்களுக்கு நம்மளை விட ஸ்டாமினா அதிகம் வேதா..

வேதா said...

@gops,
அதெல்லாம் அப்படித்தான்:)

@இந்தியதேவதை,
சீக்கிரம் வந்து கமெண்ட் போடுங்க:)

@கீதா,
கொலுவிற்கு தான் வரணும்னு இல்லையே, கண்டிப்பா ஒரு நாள் வருவேன் உங்க வீட்டுக்கு:)

நீங்களா சமாளிச்சீங்க குதிரையை அது தான் உங்களை சமாளிச்சிருக்கும்:)

@விஷி,
என்ன பண்றது இடப்பற்றாக்குறை, பார்க் கட்டினா நாங்க வெளியில போயிடணும்:)

@அம்பி,
படங்களை ஏற்ற ஸ்கானர் வசதி இல்லை என் கிட்ட, கொலு போட்டோவெல்லாம் என் தம்பி கைப்பேசியில் எடுத்தது:)
horse taming la ambi oru singam ley!
இது சொல்லி தான் தெரியணுமா என்ன? அதுவும் பஞ்சாபி குதிரையா இருந்தா கேட்கவே வேண்டாம்:)

வேதா said...

@ச்யாம்,
அண்ணாச்சி இருக்கும் போது இந்த தங்காச்சிக்கு என்ன பயம்:)

//ஏன்னா அதுங்க சின்ன வயசுல இருக்கவங்க கிட்ட மட்டும் தான் வம்பு பண்ணும் :-) //
நாட்டாமை தீர்ப்பு கடவுள் தீர்ப்பு:)


@ப்ரியா,
அந்த குதிரைக்கு என் மேல அவ்ளோ மரியாதை கலந்த பயம்:)

simple னாலும் அழகா இருக்கு.
நன்றி:)

@கோப்ஸ்,
வாங்க & நன்றி. ரொம்ப நாளா ஆளையே காணும்:)

@கார்த்திக்,
ஓ..கொஞ்ச தூரம் கூட நடக்காம போயிடலாம்னு ஆசையா..
சரி சரி ரொம்ப மானத்தை வாங்காதீங்க:)
ஆமா அந்த கால மனிதர்களின் வாழ்க்கை தரம் அப்படி:)

வேதா said...

@சிவா,
//இந்த அனுபவத்தை கொஞ்சம் விரிவா சொல்ல முடியுமா//
அதெல்லாம் சொன்னா புரியாது நீங்களும் அனுபவிச்சு பாருங்க:)

//மறுபடியும் எப்படி பிக்ஸ் பண்ணுனீங்க.....//

ஹிஹி ஃபெவிகால் போட்டு ஒட்டிட்டேன்:)

//16 வயதினிலே கமல் மாதிரியா.... //

சீசீ அவ்ளோ மோசம் இல்லை:)

வேதா said...

@சிவா,
நான் வட இந்தியாவில் பெரும்பாலான இடங்களுக்கு போயிருக்கேன், பல இடங்கள் சிவ ஸ்தலங்கள் தான். அந்த அனுபவத்தில் தான் இதை குறிப்பிட்டேன். வைணவத்தலங்களில் இப்படி கிடையாது என்றே நினைக்கிறேன். ஆனால் இந்த காரணத்தால் எந்த விதத்திலும் அந்த கோவிலின் புனிதத்தையோ கடவுளின் சக்தியையோ குறைத்து மதிப்பிடமுடியாது அந்தந்த இடங்களின் வழக்கம் அப்படி.

நான் இங்கே வைப்ரேஷனை மட்டும் குறிப்பிடவில்லை நம்முடைய கோவில்களும்,வழிப்பாட்டு முறைகளையும் பார்த்துவிட்டு திடீரென்று வட இந்தியாவின வேறு விதமான கோவில்கள் வழிபாட்டுமுறைகள் கடவுள் சிலைகள் முதற்கொண்டு பார்க்கும் போது ஏற்படும் தாக்கம் தான் அது. மத்தபடி பக்தி உணர்ச்சி என்பது அவரவர் மனதை பொறுத்தது தான், ஏன் நம்ம ஊரிலேயே சில கோவில்களில் எனக்கு எந்த விதமான பக்தி உணர்ச்சியும் ஏற்பட்டதில்லை.

Known Stranger said...

alamari gollu - gollu vacha enna vakellanna yenna. 9 nallum vedha vedhama sundal senchu sapta serri - karamani sundal - sapitu romba nall achu.. hmmm perumuchu than varuthu..

puttu - hmmm kumbakonam golluva parkkannumm

பொற்கொடி said...

hmmm aal aaluku travel tipsa kudukringa.. poga ticketum vaangi kudutha nalla irukum :)

Pavithra said...

Even I remembered my first trip on a horse back. Antha kuthirai samatha irunthaalum ennakku rombha bayamaa than irunthuchi. Nice writing. But pics missing ;-).

indianangel said...

குதிரைல சவாரி செய்யும் போது எல்லாருக்கும் உடம்பு வலிக்கும்! அதை ஒரு நைசா உட்கார்ந்து வரனும்! கயிலை போகனும்னு எனக்கு ரொம்ப ஆசை! இது வரைக்கும் குடுத்து வெக்கலை ஹம்ம்ம்ம்! நல்லா எழுதியிருக்கீங்க! அந்த திருவாசகம் பாடலுக்கு விளக்கம் சொல்லியிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்துருக்கும்! :)

Anonymous said...

2222222

வேதா said...

@வைஷ்ணவ்,
அது தான் சுண்டல் போட்டோவும் போட்ருக்கேன் இல்ல?:)

@பொற்கொடி,
உனக்கில்லாத டிக்கெட்டா கண்டிப்பா வாங்கிதரேன் எருமைப்பட்டிக்கு:) ஆனா ஒரு கண்டிஷன் ரிட்டர்ன் டிக்கெட் கிடையாது:)

@பவித்ரா,
ஹிஹி அது ரொம்ப சமத்தான குதிரை போலிருக்கு:)

@இந்திய தேவதை,
எனக்கும் அதே மாதிரி பத்ரி போகணும்னு ரொம்ப நாள் ஆசை, நிறைவேறும் என்று நம்புவோமாக:)

பாடல் எளிதாக தான் இருக்கிறது என நம்பி அப்படியே கொடுத்து விட்டேன்:)
பூங்கொன்றை சூடி - கொன்றைப்பூ சூடி
திரள் தோள் - திரண்ட தோள்
முயங்கி - புணர்ந்து,கலந்து
ஊடுவேன் - பொய்கோபம் கொள்ளுதல்

Anonymous said...

நல்ல பதிவு

Jeevan said...

Neenga sonna kathai surukkam romba nalla irunthuthu, very informative!

“தள்ளிவிட்டு தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டதைப் போல்” enakku sireppu thangala:)) guthuraiel malai earum potha eppadi naan, erangum pothu sollava vanam, very Risk.

bommaikalai nalla arrange panniirukkenga:)

பொற்கொடி said...

எருமைப்பட்டிக்கு எருமைக்கு தான டிக்கட் வாங்க தெரியும்.. ஆச்சர்யம் ஒண்ணும் இல்ல நீங்க வாங்கி தர்றது :)

வேதா said...

@ஜீவ்,
என் கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா?:)

@பொற்கொடி,
எந்த ஊருலியாவது எருமை போய் டிக்கெட் எடுக்குமா?:) என்ன இது சிறுபுள்ளத்தனமா இருக்கு?:)

Bala.G said...

gethaarathukku sedhaaram illama poitu vandheengala...romba sandhosham....
Naan horse-la ponadhilla...but only photo mattum eduthirukken :)

Syam said...

//எருமைப்பட்டிக்கு எருமைக்கு தான டிக்கட் வாங்க தெரியும்.. ஆச்சர்யம் ஒண்ணும் இல்ல நீங்க வாங்கி தர்றது//

கொடி என்னா இது நீ சொல்றது பார்த்தா..மைசூர் போண்டா மைசூர்ல மட்டும் தான் கிடைக்கும்னு சொல்ற மாதிரி இருக்கு...:-)

Jeevan said...

Sireppu vanthuthu sirichean avalo thanka nenga eathuvum tappa nanachikathinga:) Happy Weekend veda, Suntv specail program parthu enjoy pannunga!

பொற்கொடி said...

அடடா நாட்டாம அப்படி இல்ல.. இப்போ மனுஷன் பேசுறது மனுஷனுக்கு தான் புரியும். அதே போல மனுஷன் போக கூடிய இடத்துக்கு தான் அவனுக்கு டிக்கட் எடுக்க தெரியும். எருமைப்பட்டிக்கு டிக்கட் எடுக்க எருமைக்கு தான் தெரியும், என்ன இது நாட்டாமனா டக்கு னு புரிஞ்சுக்க வேணாமா.. :))

பொற்கொடி said...

ஆனா, வேதாள உலகத்துல வேதாளம் போய் எப்போ எரும வந்துதுனு நீங்க கேட்டா அதுல ஒரு நியாயம் இருக்கு :)

Shuba said...

eiii romba nalla irukku enakke kedar pona feel varuthu sooober nariya eluthunga unga kolu cuteaa irkkupaa

வேதா said...

@பொற்கொடி,
//
எப்போ எரும வந்துதுனு நீங்க கேட்டா அதுல ஒரு நியாயம் இருக்கு :) //

அதையெல்லாம் நாட்டாமை கேக்க மாட்டாரு நீ வந்தவுடனேயே அதை அவரே புரிஞ்சிக்கிட்டாரு:)

@ஜீவ்,
சீசீ உன் மேல போய் கோபம் வருமா? சும்மா தான் சொன்னேன்:)

@ஷுபா,
சொல்ட இல்ல இனி அடுத்தடுத்து வரும் பாரு:)

Usha said...

aaha, vaama jhansi rani! Kuthirai-ya thatti koduthu vaal veesiyiruka vendama nee? ;)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆனால் குதிரைக்காரன் அதைப் பத்தியெல்லாம் கவலையே படாமல் என்னைப் பார்த்து 'நீங்க பயந்து குதிரையைப் பார்த்து ஏதாவது கத்தினீங்கன்னா அப்புறம் அது வேற ஏதாவது புரிஞ்சுக்கும்' என்றான். உடனே நானும், என் அம்மாவும் வாயை மூடியவர்கள் தான் அப்புறம் மலை மேல போற வரைக்கும் வாயே திறக்கலை.

சே அவன் விலாசம் தெரியாமபோயிடுத்தே இருந்தா ஞாயிற்றுக்கிழமை மீடிங்குக்கு அவனையும் வரவழைச்சு இருப்பேன் வேதா வாயை முடுவது லேசான விஷயமா என்ன?
கொலு அருமையாக இருக்கு. அந்த சுன்டல் எல்லாருக்குமா இல்லை சுய உபயோகத்திற்கு மட்டுமா?நன்றி வேதா நம்ம பிளான் படி எதிரியின் பாசறைக்குப் போய் ரகசியங்களைத் தெரிந்துகொண்டு வெற்றிகரமாக திரும்பி வந்ததற்கு. "பாட்டியை வெற்றிகொண்ட பார்ட்டி" என்ற பட்டத்தை பொற்கொடி அளிக்கச்சொன்னாள்

Balaji S Rajan said...

Sundal yengalukku kidaiyatha?

வேதா said...

@திராச,
//வாயை முடுவது லேசான விஷயமா என்ன?//
ஆமாம் அந்த பாசமலர்கள் வாயை மூடுவது ரொம்ப கஷ்டமான வேலை தான்:)
சுண்டல் எல்லாருக்கும் தான் என்ஜாய் பண்ணுங்க:)
அம்பியோட ஊருக்கு போய்டு வந்தப்புறம் நாரதர் வேலையை செவ்வனே செய்றீங்க:)

@உஷா,
அது சரி நான் தட்டி கொடுத்து அது எட்டி உதைச்சுடுச்சுனா?:)

@பாலாஜி,
உங்களுக்காக தாங்க சுண்டலை படம் புடிச்சு போட்ருக்கேன்:)