Friday, October 13, 2006

புது வரவு

செல்லம், புஜ்ஜு, தங்கம், வைரம் என வார்த்தைகள் சிதறிக் கிடக்கின்றன எங்கள் வீடெங்கும். காரணம் எங்கள் வீட்டின் புது வரவு என் கஸின் ப்ரதரின் இரண்டாவது குழந்தை:) தற்போது அதற்கு மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. ஒரு குழந்தையின் வரவால் தான் வீட்டின் சூழல்களில் எவ்வளவு மாற்றம். தொலைக்காட்சியின் குரல் ஓய்ந்து குழந்தையின் சிணுங்கல் குரல் தான் ஓங்கி ஒலிக்கின்றது. எல்லார் முகத்திலும் சிரிப்பு. வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் குழந்தையை தான் தேடுகின்றது எல்லார் மனமும். என் கஸின் ப்ரதர் வீடும் எங்கள் வீடும் அடுத்தடுத்து இருப்பதால் நான் போய் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து விடுவேன். குழந்தையுடன் நேரம் கழிவதால் புது பதிவுகள் கூட போடுவதில்லை, அவ்வளவு பிஸி:) ஒரு வயதாகும் வரை குழந்தையை புகைப்படம் எடுக்க வீட்டில் தடா போட்டுவிட்டதால் இங்கே குழந்தையின் படம் போடவில்லை.

பி.கு: அம்பி, நான் கஸின் ப்ரதர் என்று தான் எழுதியிருக்கிறேன், அன்று கேட்ட மாதிரி அஸின் ப்ரதரா என்று கேட்காதீர்கள்:)

பி.கு.கு:
ஜீவ், ப்ரியா, கார்த்திக் உங்கள் மூவரின் டேகையும்(tag) சேர்த்து அடுத்த பதிவில் போட்டு விடுகிறேன் :)

32 comments:

Priya said...

ஆமா, சின்ன குழந்தைகள் are end-less pleasure. அந்த moments ச njoy பண்ணுங்க. blog லாம் அப்புறம் பாத்துக்கலாம்.

Bharani said...

Pudhu varavin peyar ennavo :)

Yes...Life will be fresh when you have a new one in home...en akka ponnu poranthappa appadithan...life sema jolly....enna paarthale azhuva...adhukune avala thooki vachipen :)

indianangel said...

enzzoy pannungo! :)

Bala.G said...

ennoda veetlayum pakkathu veetu kuzhandhainga eppodhum irundhite irupaanga....now I am missing them all :(

Harish said...

aaha...kutty paapa kooda irunda time poradae teriyaadhae...
Sema jaali yaar

G3 said...

Eppavumae kozhandhaingaloda velayaadaradhu thani kushi dhaan.. Nalla ensoi pannunga... :)

மு.கார்த்திகேயன் said...

சின்ன குழந்தைகள் இருக்க வீடு, சின்ன கடவுள் இருக்க வீடு மாதிரி..இல்லியா வேதா.. சும்மா உற்சக நதி ப்ரவாகம் எடுத்து ஓடும்..

மு.கார்த்திகேயன் said...

//அம்பி, நான் கஸின் ப்ரதர் என்று தான் எழுதியிருக்கிறேன், அன்று கேட்ட மாதிரி அஸின் ப்ரதரா என்று கேட்காதீர்கள்//
வேதா, அம்பிக்கு அசின் அக்கா மேல அம்புட்டு பாசம்

//பி.கு.கு: ஜீவ், ப்ரியா, கார்த்திக் உங்கள் மூவரின் டேகையும்(tag) சேர்த்து அடுத்த பதிவில் போட்டு விடுகிறேன்//

உங்க பொறுப்புணர்ச்சியை என்ன சொல்றதுன்னே தெரில, வேதா..

ஆமா..அதென்ன பி.கு.கு?

நாகை சிவா said...

//ஆமா..அதென்ன பி.கு.கு? //

பின் குறிப்போ குறிப்பு

நாகை சிவா said...

//நான் போய் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து விடுவேன். குழந்தையுடன் நேரம் கழிவதால் புது பதிவுகள் கூட போடுவதில்லை, அவ்வளவு பிஸி:) //

பரவாயில்லங்க வேதா. நீங்க அடிக்கடி குழந்தையை வைத்துக் கொள்வதால் அந்த குழந்தை பயம் இல்லாமல் வளரும் என்று நினைக்கின்றேன். ;)

நாகை சிவா said...

//செல்லம், புஜ்ஜு, தங்கம், வைரம் என வார்த்தைகள் சிதறிக் கிடக்கின்றன எங்கள் வீடெங்கும்.//

வார்த்தைகள் மட்டுமா மகிழ்ச்சியும் வீடு முழுவதும் பரவி இருக்குமே.... குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பில் உள்ளத்தில் உள்ள அனைத்து துயரங்களும் மறந்து விடுமே....

நம்ம மாப்ஸை ஞாபகப்படுத்தி வீட்டீர்கள். உடனே அவருக்கு போன் போட வேண்டும்.

கீதா சாம்பசிவம் said...

இன்னிக்குப் பேசும்போது அழுகுரலே கேட்கலியே? குழந்தையை பயமுறுத்தி வச்சிருந்தீங்களோ? :D, குழந்தையின் பெயர் என்ன? அந்த வாண்டுப் பெண் தம்பியை/தங்கையைக் கொஞ்சறாளா?

மு.கார்த்திகேயன் said...

//அந்த குழந்தை பயம் இல்லாமல் வளரும் என்று நினைக்கின்றேன்//

kalaachitteenga chivaa.. vetha..appadiya..

வேதா said...

@ப்ரியா,
ஆமா ப்ரியா ரொம்ப என்ஜாய் பண்றேன், பதிவெல்லாம் அப்புறம் தான்:)

@பரணி,
புது வரவின் பெயர் 'காவ்யா':)
/enna paarthale azhuva...adhukune avala thooki vachipen :)/
பாவங்க அந்த குழந்தை:)

@ப்ரசன்னா,
சரிங்கோ:)

@பாலா,
ஆமா குழந்தைகளோட பழகிட்டு திடீர்னு பார்க்காம இருந்தா கஷ்டமா தான் இருக்கும்.

வேதா said...

@ஹரீஷ்,
ஆமா நேரம் போவதே தெரியவில்லை:)

@ஜி3,
ஆமா ஒரே குஷி தான்:)

@கார்த்திக்,
ஆமா கார்த்திக் சரியா சொன்னீங்க உற்சாகம் கரை புரண்டு ஓடுது:)

ஆனாலும் அம்பிக்கு அக்கா மேல பயங்கர பாசம் தான்:)

//உங்க பொறுப்புணர்ச்சியை என்ன சொல்றதுன்னே தெரில, வேதா..//

எல்லாம் தலைவர்னு ஒரு மரியாதை தான்:)(பட்டுப்புடவை தீவாளிகுள்ள வந்துடுமில்ல:)

/அதென்ன பி.கு.கு? /
பின் குறிப்புக்கு குறிப்பு:)

வேதா said...

@சிவா,
/அந்த குழந்தை பயம் இல்லாமல் வளரும் என்று நினைக்கின்றேன். ;)//
ஆமா பின்ன என்னைய மாதிரி ஒரு தைரியசாலியை பார்த்து வளருதில்லை;)

/நம்ம மாப்ஸை ஞாபகப்படுத்தி வீட்டீர்கள். உடனே அவருக்கு போன் போட வேண்டும்./
அதை செய்யுங்க முதல்ல:)

@கீதா,
அன்னிக்கு போன் செய்யும் போது குழந்தை எங்க வீட்டுல இல்லை, அதான் குரல் கேட்கலை:)அந்த வாண்டு தங்கையை நன்றாகவே பார்த்துக் கொள்கிறாள்:)

@கார்த்திக்,
ஆமா அவரு அப்பிடியே காப்பிய கலக்கிட்டாரு இவரு சொல்ல வந்துட்டாரு:)

நாகை சிவா said...

//ஆமா அவரு அப்பிடியே காப்பிய கலக்கிட்டாரு இவரு சொல்ல வந்துட்டாரு:) //

ஹலோ காப்பிய ஆற்ற தான் செய்வாங்க. கலக்குவது என்பது வேற. அத எல்லாம் இங்க சொல்ல முடியாது. ;)

//ஆமா பின்ன என்னைய மாதிரி ஒரு தைரியசாலியை பார்த்து வளருதில்லை;)//

ஹிஹி... சரிங்க ஹிஹி
இருந்தாலும் ஆஹா ஆஹா உங்களுக்கு காமெடி ஆஹா ஆஹா ரொம்ப நல்லா வருதுங்க ஆஹா ஆஹா

வேதா said...

@சிவா,
நாங்கெல்லாம் காப்பி கலக்கற்துன்னு தான் சொல்வோம், உங்களுக்கு வேறு ஏதாவது ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை:)

//உங்களுக்கு காமெடி ஆஹா ஆஹா ரொம்ப நல்லா வருதுங்க ஆஹா ஆஹா//

அய்யோ அப்படியெல்லாம் புகழாதீங்க கூச்சமாயிருக்கு, எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்டது தான்:)

smiley said...

training for future :) have fun

நாகை சிவா said...

//அய்யோ அப்படியெல்லாம் புகழாதீங்க கூச்சமாயிருக்கு, எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்டது தான்:) //

அய்யோடா சாமி.....

வாழ்க வளமுடன்

தி. ரா. ச.(T.R.C.) said...

வேதா எங்க வீட்டிலும் ஒரு புது வரவு.என் பேரன் வந்துஇருக்கிறான் சிட்னியிலிருந்து.என் அண்ணன் மகளும் குழந்தையும் வந்திருக்கிறார்கள்.நீங்கள் வந்தபோது இருந்த சுத்தம் இப்போ கிடையாது,ஆனால் வீடு முழுக்க ஆனந்தம்.ஒரே களேபரம்.கீழே எந்தபொருளையும் வைக்கமுடியவில்லை.முக்கியமாக என் கண்ணாடியும் லேப்டாப்பும்தான் குறி.
நவம்பர் மாதம் 21ஆம் தேதிதான் ஒரு வயது முடிகிறது.நிறைய போட்டோ எடுத்தாகி விட்டது. உங்கள் வீடும் எங்கள் வீடும் ஒரே மாதிரிதான்.

ambi said...

//ஒரு குழந்தையின் வரவால் தான் வீட்டின் சூழல்களில் எவ்வளவு மாற்றம்.//

Unmai, Unmai! True words are never written like this. Happy that U've a gr8 time. :)

Syam said...

காவ்யா குட்டி உங்கள எல்லாம் மகிழ்ச்சி + பிஸியா வெச்சு இருக்கா போல...என்சாய் :-)

Ravi said...

Aahaa... kuzhandhaigal endraalae magizhchi dhaan. En anna magan-udan appadi dhaan. The best thing is their unconditional love - edhaiyum edhirpaaramal kaattum anbu. Enjoy pannunga... but blog post-um pannunga (kozhandhai thoongum bodhu).

கீதா சாம்பசிவம் said...

என்ன இன்னிக்குக் கார்த்திக் பதிவோட முடிஞ்சு போச்சா? குழந்தை ரொம்பப் படுத்தறாளோ?

கீதா சாம்பசிவம் said...

என்ன இன்னிக்குக் கார்த்திக் பதிவோட முடிஞ்சு போச்சா? குழந்தை ரொம்பப் படுத்தறாளோ?

Jeevan said...

How true! Oru kulanthai irunthal, veeda kalaikattum. enga unclekku kuda oru kulanthai piranthirukku 2 months back, naan innum pakkavaillai:(

Enjoy pannunga antha kuttipapakuda:) how was your diwali celebrations going?

Sandai-Kozhi said...

Iam glad that you are having great time with a baby.Babies are always very sharp.yara pathu sirikanum, yara pathu azhanum sariya saivanga.
Enjoy.
you kindled my memories.When my daughter was an year old she could identify my bro's scooter sound. Theru munai thirumbum bodhe mama mamanu kudhikka arambippa.--SKM

Known Stranger said...

cousinin tamil soll enna ?

athanga - amanchi ? or is there any other word. so - english varthaiiyum thevai padduthu for communicaiton. let me appreciate your opennes to embarce other words from other language for easy communicaiton veda.

வேதா said...

@திராச,
அப்படியென்றால் உங்கள் வீட்டிலும் ஒரே கொண்டாட்டம் தான். அதான் புது பதிவு எதுவும் போடவில்லையா?

@ஸ்மைலி,
ஹிஹி:)

@அம்பி,
yes having a great time:)

@ச்யாம்,
ஆமாம் ரொம்ப பிஸியா தான் இருக்கேன்:)

வேதா said...

@ரவி,
edhaiyum edhirpaaramal kaattum anbu.
உண்மை தான் ரவி:) என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?

@கீதா,
உங்க பதிவை படிக்காம இல்லை படிச்சுட்டேன்:) ஆமா நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையோடு செலவிடுகிறேன்:)

@ஜீவ்,
தீபாவளி நல்லா களை கட்டுது ஜீவ், உன் தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி இருக்கு?

@skm,
//yara pathu sirikanum, yara pathu azhanum sariya saivanga.//
என்னை பார்த்தா எப்பவும் சிரிப்பு தான்:)

@வைஷ்ணவ்,
கசின் என்பதற்கான நேரடி தமிழ் சொல் தனியாக இல்லை,அது எந்த உறவு என்பதை பொறுத்து இருக்கிறது. நீங்க சொன்ன மாதிரி அத்தங்கா,அம்மங்கா போன்ற சொற்கள் ஒரு சிலரிடையே பயன்படுத்தப்படுகிறது. நான் குறிப்பிட்டிருப்பது என் ஒன்று விட்ட அண்ணனையும் அவர் மகளையும்.she is my niece எனவே என் மருமாள்.

Balaji S Rajan said...

Children bring in so much of pleasure and happiness. Eventoday I hug my children which takes all my worries. Spending time with children takes our memories.

Kuzhanthaiyum Theivamum gunathal ondru- nnu summava sonnanga.

Enjoy yourself. You are lucky to have relatives around you.