Wednesday, October 18, 2006

ஒன்றல்ல இரண்டல்ல மூன்று...

அருமை நண்பர் பொது அறிவின் களஞ்சியம் ஜீவ், சுகாதார துறை அமைச்சர் ப்ரியா, தலைவர் கார்த்திஆகியோரின் tags யை மொத்தமாக கலந்து ஒரு த்ரி -இன் -ஒன் பதிவு இது, நீண்.......................ட பதிவு கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கோங்க:)

இது ஜீவ் டேகியது,

1. Which is the single best post you have read on any blog, post the link?
ஒன்றா இரண்டா சொல்வதற்கு...:)

2. Which is the best post you have written and which is the worst. Explain why?
என்னுடைய சிறந்த பதிவையும் மொக்கை பதிவையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகிறேன் :) எல்லாமே மொக்கைன்னு சொல்லி காறித் துப்புவர்களும், எல்லாமே சிறந்தது என்று கூறும் அரிச்சந்திரர்களும் உங்கள் கருத்துகளை பின்னூட்ட பகுதியில் பதியவும் :) கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஒரு பிரியாணி பொட்டலம் கட்சி சார்பாக வழங்கப்படும்:)

3. How about a place you have never been to, but would very much like to see?
பத்ரிநாத். இன்னும் ஒரு மணி நேரம் பயணித்தால் போய்விடலாம் எனும் பொழுது மணல்சரிவு ஏற்பட்டு ராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டோம்.

4. If you were a member of the opposite sex, what would you do differently?
நட்டநடு நிசியில் எந்த கவலையும் இல்லாமல் நிலவை ரசித்தப்படி நடந்து செல்வேன்.

5. Do you remember a recurrent childhood dream or nightmare, tell us about it?
அதை பற்றி தான் கார்த்திக் எழுத சொல்லியிருக்கிறார், இந்த பதிவின் இறுதியில் எழுதியுள்ளேன்

6. Make me laugh or make me cry, put your words to use?
இடுக்கண் வருங்கால் நகுக:)

7. Do you regret unfulfilled dreams, the inaccessible roads and the
uncharted lands?

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் போது நடந்ததை பற்றி வருந்தி என்ன பயன்?

8.What is a friend to you and what are you to a friend?
இதை முன்பே இந்த பதிவில் சொல்லிவிட்டேன்(ஒரு ப்ளாஷ்பேக் எடுத்து படிச்சுட்டு வாங்க)

9.T.S.Elliot measured his life with coffee spoons, how about you?
என் கிட்ட அவ்ளோ spoons இல்லை:)

10.Write your own Epitaph, or if it is too hard, how would you like
your Epitaph to read?

அப்டின்னா என்னங்க? என்னமோ சொல்றீங்க புரியலை:)

இது ப்ரியா டேகியது,

1.The best thing to do - மற்றவருக்கு உதவுவது
2.The best gift - உண்மையான அன்போடு எனக்கு கிடைத்த எல்லாம்.
3.The best thing I've ever heard - இன்னும் இல்லை(என் குழந்தை என்னை அம்மா என்றழைக்கும் கணம் தான்)
4.The best thing I've said - மன்னிப்பு கேட்பது தான்(அது தாங்க கஷ்டம்)
5.The best thing that happened to me - என் அம்மா
6.The best person I've met - வாழ்க்கையில் பல கட்டங்களில் பல நல்ல மனிதர்களை கண்டுள்ளேன்.
7.The best friend - அனாமிகா
8.The best moment - ஒவ்வொரு கணத்தையும் சிறந்ததாக கருத தான் முயற்சிக்கிறேன்.
9.The best book - பிரபஞ்சனின் வானம் வசப்படும், வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசம், மைக்கேல் கிரிக்டனின்(michael crichton) டைம்லைன்(timeline).
10The best blog - அவரவர் பாணியில் அவரவர் சிறந்து விளங்கும் போது சிறந்தது என்று எதையும் தனியாக சுட்டிக் காட்ட முடியவில்லை
11.The best place - என் வீடு
12.The best food - தயிர்சாதமும் வினைத்தொகையும். தமிழ் இலக்கணத்தில் வரும் வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டாக என் அம்மா சொல்லிக்கொடுத்தது 'ஊறுகாய்'. எனவே எங்கள் வீட்டில் 'ஊறுகாய்' 'வினைத்தொகை'யாகிவிட்டது:)
13.The best song - குறையொன்றுமில்லை எம்.எஸ்ஸின் குரலில், என் மேல் விழுந்த மழைத்துளியே(மே மாதம்)
14.The best hangout - டிநகரும்,புரசைவாக்கமும்(கல்லூரி நாட்களில் ஒன்றுமே வாங்காமல் வெட்டியாக இந்த இடங்களில் சுற்றியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது)
15.The best eatout - என் கல்லூரி காண்டீன்
16.The best hobby - படிப்பது தவிர இப்பொழுது ப்ளாக்குவது
17.The best TV show ever - சஹானா
18.The best manager - நான் தான்:)
19.The best musician - இளையராஜா
20.The best gang - பள்ளியிலும், கல்லூரியிலும் தற்போது இங்கேயும் கிடைத்த நண்பர் குழாம் தான்
21.The best drink - பில்டர் காப்பி
22.The best quote - நடப்பதெல்லாம் நன்மைக்கே
23.The best woman - என் அம்மா
24.The best kid - எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே..
25.The best poem - நான் எழுதுவதெல்லாம் எனக்கு பெஸ்ட் தான் என்றால் அடிக்க வருவீர்கள்:) கனிமொழி,வைரமுத்து,கண்ணதாசன் கவிதைகள் பிடிக்கும்
26.The best dancer - பத்மினியும் என் கசினும்.
27.The best movie - அன்பே சிவம்
28.The best actor - கமல்ஹாசன்
29.The best vehicle - என் கரும்பச்சை நிற ஸ்கூட்டி
30.The best scene in a movie - அன்பே சிவம் படத்தில் ரயில் விபத்தில் அடிப்பட்ட சிறுவனுக்கு ரத்தம் கொடுத்து மாதவன் காப்பாற்றியும் அந்த சிறுவன் இறந்தவிடுவான். அதிர்ச்சியடையும் மாதவன் கமலிடம் பேசும் ஒரு காட்சி,

மாதவன்: எனக்கு புரியவேயில்லை என்ன மாதிரி டிசைன் இது? ஒரு ரயிலை கவிழ்க்க வச்சு ஒரு சின்ன பையனை சிக்க வச்சு சாகற நிலைக்கு கொண்டு போய் அப்புறம் என் மூலமா ரத்தம் கொடுக்க வச்சு அப்புறம் வழியில சாக வச்சி சே என்ன மாதிரி கடவுள் இது? (கடவுள் நம்பிக்கையில்லாத கமல் தன்னை பார்ப்பது தெரிந்தவுடன்)சே கடவுளை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது i am sorry. உங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கையே கிடையாதே?

கமல்: எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லேன்னு யார் சொன்னா?
மாதவன்: ஓ! இப்ப திடீர்னு கடவுள் நம்பிக்கை வந்துடுச்சா?
கமல்: ரொம்ப நாளாவே இருக்கு
மாதவன்: யார் அந்த கடவுள்?


கமல் மாதவனை சுட்டிக்காட்டுகிறார்.

மாதவன்: look i dont understand ur jokes
கமல்: bcos its is not a joke, முன்னபின்ன தெரியாத ஒரு உயிருக்காக கண்ணீர் விடற மனசு இருக்கே அது தான் கடவுள்.
மாதவன்:thankyou என்ன திடீர்னு இந்த முடிவு?
கமல்: ஏன்னா நானும் கடவுள்
மாதவன்: அதானே பார்த்தேன் ஏதாவது ஒரு hook இருக்கணுமே? சரி நீங்க கடவுள்னு யார் சொன்னது?
கமல்: மலை மேல பொட்டிக்கடை வச்சுருந்த ஒரு அம்மா சொன்னாங்க.
மாதவன் : !!!
கமல்: என்ன புரியலையா?
மாதவன்: இல்லை
கமல்: புரியக்கூடாதது தான் கடவுள்.
மாதவன்: :):)
அன்பே கடவுள் என்பதை உணர்த்தும் இந்த காட்சி தான் எனக்கு மிகவும் பிடித்தது :)


இது தலைவர் டேகியது,(கனவுகள் பற்றி)

என் குழந்தை பருவத்திலே(14வயது வரை) நாங்கள் இருந்த வீடு மிக பெரியது. நீண்..........ட ஹால் அதில் இருபுறமும் நிறைய அறைகள் உண்டு. எனக்கு எங்கள் வீட்டு இருண்ட ஸ்டோர் ரூம் கண்டால் ரொம்ப பயம். இந்த பயத்தை அதிகரிக்கிற முறையில் ஒரு கனவு கண்டேன் என் 10வது வயதில். அந்த அறை வாசலில் கறுப்பு புடவை அணிந்த ஒரு பெண்ணின் சடலம் இருக்கிறது. முகம் சரியாக தெரியவில்லை, யாரும் எந்த கவலையும் படாமல் பிணத்தை எடுக்க ஏற்பாடு செய்கிறோம், கனவில் நான் பயப்படாமல் அந்த சடலத்தின் அருகே நின்று கொண்டிருக்கிறேன். கனவு அதோடு முடிந்தது. அவ்வளவு தான் ஏற்கனவே அந்த அறையைக் கண்டால் எனக்கு பயம் இப்போ கேட்கவே வேண்டாம், ஒவ்வோரு முறையும் அந்த அறையை தாண்டி செல்லும்போது கண்ணை மூடிக் கொண்டு ஓடுவேன். என்னை பயமுறுத்திய அந்த அறை தான் எனக்கு தைரியத்தையும் கொடுத்தது. நாம் எதற்காக இல்லாத ஒன்றுக்காக பயப்படவேண்டும் என்றெண்ணி அடிக்கடி அந்த அறை பக்கம் போக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில பயமாக தான் இருந்தது, ஆனால் என் பயத்தை என் மன உறுதியால் வென்றேன். ஆகவே என் வரையில் எனக்கு பயத்தையும் கொடுத்து பின் அதன் மூலமாகவே பயத்தை போக்கிய கனவு இது.

இதை தவிர எனக்கு அடிக்கடி வரும் கனவு ஒன்றும் உள்ளது. படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பேன், திடீரென்று படிகள் காணாமல் போய்விடும் கீழே விழும்முன்னே கனவு கலைந்து விடும். இன்று வரை அந்த கனவு தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு தூரம் பொறுமையா படிச்சதுக்கு நன்றியும் கூடவே தீபாவளி சிறப்பு பரிசாக என் நல்வாழ்த்துக்களையும் வாங்கிக்கோங்க:)

53 comments:

Bala.G said...

//The best hobby - படிப்பது தவிர
இப்பொழுது ப்ளாக்குவது//

vega vegama padikkumbodhu, palvilakkuvadhunu padichitten :)

Happy and Safe Diwali!!

நாகை சிவா said...

//இன்னும் ஒரு மணி நேரம் பயணித்தால் போய்விடலாம் //

சே.., ஒரு ஒரு மணி நேரத்தில் எஸ்கேப் ஆயிட்டீங்களே :-(

//நட்டநடு நிசியில் எந்த கவலையும் இல்லாமல் நிலவை ரசித்தப்படி நடந்து செல்வேன்.//

இப்ப கூட நடக்கலாம் தப்பு இல்லை. எதிரில் லாரி வராமல் பாத்துக்கோங்க....

இங்க தான் ஒரு டவுட், அது எப்படிங்க எந்த கவலை இல்லாமல்...கவலை இருக்காது என்று நினைக்கின்றீர்களா

நாகை சிவா said...

//Write your own Epitaph, or if it is too hard, how would you like
your Epitaph to read?//

உங்கள போட்டு தள்ளுறதுக்கு எதிர்கட்சிகள் எல்லாம் சதி பண்ணுறாங்க போல, ஜாக்கிரதையாக இருங்க....

//கல்லூரி நாட்களில் ஒன்றுமே வாங்காமல் வெட்டியாக இந்த இடங்களில் சுற்றியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது//

பசுமையாக இருப்பதுக்கு அப்ப அப்ப தண்ணி ஊத்துவீங்களா?

Balaji S Rajan said...

வேதா,

இந்த பதிவு கலக்கிட்டீங்க. ஓ... நீங்களும் நம்மை போல கமல் ரசிகரா? அன்பே சிவம் பற்றி எழுதி இருப்பது கலக்கல். எப்படி ஒரு வார்த்தை கூட விடாமல் எழுதி இருக்கீங்க... கலக்கிட்டீங்க போங்க.... உங்க எழுத்து நடை முன்னேற்றம் அடைஞ்சுகிட்டே வருது... உங்க எண்ணங்களை பற்றி சொல்லவே வேண்டாம். உங்க அம்மா மேல இவ்வளவு மரியாதை வச்சு இருக்கறதை பற்றி மிக்க மகிழ்ச்சி. மொத்தத்துல படிக்க நன்றாக இருந்தது

Bharani said...

Konjam moochi vaangikaren...:)

ellam tagayum nalla ezhidhi irueekanga....neenga ezhidhinadhu ellam best post thannu adichi solren :)

Ennaku anbe sivam andha sequence romba pudikum....infact kamal, madhaven serndhu vara ella scenes-me super-a irukum...esp madan's dialog :)

Bharani said...

//தயிர்சாதமும் வினைத்தொகையும். தமிழ் இலக்கணத்தில் வரும் வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டாக என் அம்மா சொல்லிக்கொடுத்தது 'ஊறுகாய்'. எனவே எங்கள் வீட்டில் 'ஊறுகாய்' 'வினைத்தொகை'யாகிவிட்டது:)//....superb one :)

Priya said...

என்னங்க இவ்ளோ பெரிய post.. படிச்சிட்டு பாத்தா half a day ஓடிப் போச்சு. உங்களால நான் இன்னிக்கு after hours உக்காரணும்...
எல்லாமே சூப்பர்.

//நட்டநடு நிசியில் எந்த கவலையும் இல்லாமல் நிலவை ரசித்தப்படி நடந்து செல்வேன்.//
இப்பவும் பண்ணலாமே. மொட்டை மாடில..

//என் குழந்தை என்னை அம்மா என்றழைக்கும் கணம் தான்//
எங்கயோ போயிட்டீங்க போங்க..

அதென்ன 'அன்பே சிவம்' dialogues அப்படியே ஞாபகம் வச்சிருக்கிங்க. கலக்கல்..

//. நாம் எதற்காக இல்லாத ஒன்றுக்காக பயப்படவேண்டும் என்றெண்ணி அடிக்கடி அந்த அறை பக்கம் போக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில பயமாக தான் இருந்தது, ஆனால் என் பயத்தை என் மன உறுதியால் வென்றேன்.//
பரவால்லயே எல்லா situation ஐயும் உங்களுக்கு favorable ஆ மாத்திப்பீங்க போல. Very good.

Jeevan said...

Very Nice Tag Veda!! Arasialvathikalea konjam ingu kavaniungal, Veda nalla idea tharanga kalla votta increase panna:))

Your answer for the “The best thing I've ever heard” was very beautiful.
Ennanga vadumangava maranthutingala!

The scene u said form Anba Sivam made me also feel, what a scene. I wonder there would be a person like kamal (in film) who accept the madavan’s irritate and help him.

Eniya Thipavali Naalvathukkal thozhi Veda avarkalea:)

தி. ரா. ச.(T.R.C.) said...

- இன்னும் இல்லை(என் குழந்தை என்னை அம்மா என்றழைக்கும் கணம் தான்)
இது ஒன்றுதான் உண்மையாக எழுதியது.மற்றதெல்லாம் அடுத்தவற்காக எழுதியது

G3 said...

//எல்லாமே சிறந்தது என்று கூறும் அரிச்சந்திரர்களும் //

Naanun indha listla join pannikarennungo :)

Kalakkiteenga.. 3 tags in 1 posta? Porumasaali dhaanga neenga :)

Anonymous said...

Romba nalla irunthathu unga post.Wishing u a happy & prosperous diwali.

பொற்கொடி said...

அறிவிப்பு இல்லாம பதிவு போடறீங்க, விளைவுகள் பயங்கரமா இருக்கும்!

பொற்கொடி said...

பதிவு முழுக்க ஒரு இடத்துல கூட எங்களுக்கு விளம்பரம் குடுக்கல, துளிர் விட்டு போச்சு..

ஹாஹா.. நீங்க கண்ண மூடிட்டு ஓடின மாதிரி இப்போ எல்லாரும் உங்கள பாத்து ஓடும்படி ஆச்சே, இதான் விதி :)

அம்மானு கூப்பிடும் கணமா.. ஓவர் சீன் உடம்புக்கு நல்லது இல்ல வேதா:D

வேதா said...
This comment has been removed by a blog administrator.
வேதா said...

@பாலா,
//vega vegama padikkumbodhu, palvilakkuvadhunu padichitten :)//
ROFTL:)
@சிவா,
ஆஹா நான் போறதுல தான் எல்லாருக்கும் என்னே மகிழ்ச்சி:)

//கவலை இருக்காது என்று நினைக்கின்றீர்களா//
ஒரு குழந்தையுடன் விளையாடும் போது நாம் கவலைகளை மறக்கவில்லையா? அது போல் தான் இதுவும்:)

//ஜாக்கிரதையாக இருங்க....//
உங்களை மாதிரி புலிகள் என் பாதுகாப்புக்கு இருக்கும் போது என்ன கவலை?:) கட்சி பொது செயலாளருக்கு இந்த நாட்டுல பாதுகாப்பே இல்லையா? தலைவரே சிவாவுக்கு கட்சி நிதியிலிருந்து பேட்டா கொடுத்துடுங்க:)

//அப்ப அப்ப தண்ணி ஊத்துவீங்களா?//
உரமும் போடறதுண்டு:)

@பாலாஜி,
ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்களுக்கு. நீங்க எழுதுவதை விடவா நான் சிறப்பா எழுதறேன்? :)

வேதா said...

@பரணி,
Konjam moochi vaangikaren...:)
அதான் எச்சரிக்கை கொடுத்துட்டேனே:)

neenga ezhidhinadhu ellam best post thannu adichi solren :)
ஹிஹி ரொம்ப நன்றி ஆனா அடிச்சு சொல்றீங்களா? எதுக்குங்க வன்முறை?:)

kamal, madhaven serndhu vara ella scenes-me super-a irukum...esp madan's dialog :)
மொத்தத்துல படமே சூப்பர்:)

superb one :)
எங்கம்மாவுக்கு தான் இந்த பாராட்டு போகணும்:)

@ப்ரியா,
நன்றி:)ஆபிஸ் முடிஞ்சும் எப்படியெல்லாம் உழைக்கறீங்க:)
//இப்பவும் பண்ணலாமே. மொட்டை மாடில..//
அதுவும் சரிதான்:)

அன்பே சிவம் படம் நிறைய முறை பார்த்திருக்கேன், என் கணினியில் அந்த படத்தை சேமித்து வைத்திருக்கிறேன் அதான் வசனங்களை அப்படியே எழுதியிருக்கிறேன்.

//எல்லா situation ஐயும் உங்களுக்கு favorable ஆ மாத்திப்பீங்க போல. //
அப்படி உறுதியாக சொல்லமுடியாது:)

@ஜீவன்,
ரொம்ப நன்றி ஜீவ்.

//nalla idea tharanga kalla votta increase panna:))//

என்னை அரசியல்ல மாட்டி விடறதுன்னு முடிவே பண்ணிட்டியா?:)

வேதா said...

@திராச,
ஏன் அப்படி நினைக்கறீங்க? எல்லாமே உண்மை தான் உண்மையை தவிர வேறில்லை:) எதனால் அப்படி சொல்றீங்கன்னு எனக்கு சொல்லுங்க:)

@ஜி3,
நன்றி:)
என்னை பொறுமைசாலின்னு சொன்னதுக்காக:)

@பொற்கொடி,
//அறிவிப்பு இல்லாம பதிவு போடறீங்க, //
அடுத்த முறை பிபிசில்ல முக்கிய செய்தியா போட சொல்றேன்:)

//விளைவுகள் பயங்கரமா இருக்கும்!//
உன்னை விடவா?;)

//எங்களுக்கு விளம்பரம் குடுக்கல, துளிர் விட்டு போச்சு..//

இப்படி சொல்லி உன் பதிவுல எங்க பேர் வந்ததுக்கு நீ காசு வாங்கின மாதிரி எல்லாரையும் நினைக்க வைக்குற:)

//உங்கள பாத்து ஓடும்படி ஆச்சே, இதான் விதி :)//

பாவம் விதி செய்யும் சதி தெரியாம எல்லாரும் உன்னை பாக்க வராங்க:)

//ஓவர் சீன் உடம்புக்கு நல்லது இல்ல வேதா:D //
உண்மையை சொன்னா ஓவர் சீனா? நல்லதுக்கே காலம் இல்லை ஹும்:(

கீதா சாம்பசிவம் said...

ஒரு மூன்று நாள் இப்படிப் போயிட்டு வரதுக்குள்ளே ஒரு பதிவும் இத்தனை பின்னூட்டமுமா? சரி, எப்போ போனீங்க பத்ரிநாத்திற்கு? நாங்க பத்ரி போயிட்டுக் கேதார்நாத்தை மிஸ் பண்ணினோம். மத்தபடி, பரிட்சை வச்சா பாஸ் செய்யற அளவுக்கு அன்பே சிவம் படத்தை மனப்பாடம் பண்ணி வச்சிருக்கீங்க.

Sasiprabha said...

Great... Padichitten... Fullaaa padichitten.. Diwali Vaalthukkalai En anbu thozikku solla vandhadhil indha velaium serndhu mudindhadhu..

Syam said...

சகோதரியே தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அன்பே சிவம் டயலாக்ஸ் எல்லாம் எப்ப கேட்டாலும் அலுக்காது... :-)

Syam said...

//Make me laugh or make me cry, put your words to use?
இடுக்கண் வருங்கால் நகுக:)//

LOL....எப்படி வேதா எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது...கலக்கல் போ :-)

மு.கார்த்திகேயன் said...

கொஞ்சம் லேட்டா வந்ததற்கு மன்னிக்கவும், தோழியே..

//நீண்..........ட ஹால் //
எப்பா, எவ்ளொ பெரிய ஹால், வேதா

மு.கார்த்திகேயன் said...

//என் பயத்தை என் மன உறுதியால் வென்றேன்//
வாரே வா வேதா..

//The best food - தயிர்சாதமும் வினைத்தொகையும். தமிழ் இலக்கணத்தில் வரும் வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டாக என் அம்மா சொல்லிக்கொடுத்தது 'ஊறுகாய்'. எனவே எங்கள் வீட்டில் 'ஊறுகாய்' 'வினைத்தொகை'யாகிவிட்டது//

நானும் சில சமயங்களில் இப்படி நினப்பதுண்டு வேதா

மு.கார்த்திகேயன் said...

//The best poem - நான் எழுதுவதெல்லாம் எனக்கு பெஸ்ட் தான் என்றால் அடிக்க வருவீர்கள்:) கனிமொழி,வைரமுத்து,கண்ணதாசன் கவிதைகள் பிடிக்கும்//

எதிர்பார்க்கவே இல்லை கனிமொழி பேரை..ஆனா அப்பாவுக்கு பிள்ளை தப்பாம..

//கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஒரு பிரியாணி பொட்டலம் கட்சி சார்பாக வழங்கப்படும்//

எல்லாமே நட்சத்திர பதிவு தான் வேதா.. கள்ள ஓட்டெல்லாம் பழைய ஃபேஷன்.. இப்போவெல்லாம் அப்படியே பெட்டியை மாற்றுவது.. மதுரை இடைத்தேர்தல்ல போட்ட வோட்டை விட எண்ணுறப்ப இருந்த ஓட்டு அதிகமாம், வேதா..

மு.கார்த்திகேயன் said...

தீபாவளி வாழ்த்துக்கள் வேதா.. நல்லா என்ஜாய் பண்ணுங்க

லேட்டா வந்ததற்காக நிறைய பின்னூட்டம் போட்டுட்டேன் வேதா.. imposition maathiri.. :-))

indianangel said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் usha! அப்புறமா வந்து comment போடறேன்!

பொற்கொடி said...

என்ன சசி படிச்சிட்டேன் படிச்சிட்டேன்னு குதிக்கறாங்க..? வேதா உண்மைய சொல்லுங்க, எவ்ளோ குடுத்தீங்க :)

Raju said...

Wish you a very happy deepavali, veda..

Priya said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வேதா!

வேதா said...

@கீதா,
//ஒரு மூன்று நாள் இப்படிப் போயிட்டு வரதுக்குள்ளே ஒரு பதிவும் இத்தனை பின்னூட்டமுமா?//

ஸ்ஸ்யப்பா கண்ணெல்லாம் எரியுது இப்படியா புகையும்:D

//சரி, எப்போ போனீங்க பத்ரிநாத்திற்கு? நாங்க பத்ரி போயிட்டுக் கேதார்நாத்தை மிஸ் பண்ணினோம்.//
நாங்க கேதார் போயிட்டு பத்ரி மிஸ் பண்ணிட்டோம்:(

//மத்தபடி, பரிட்சை வச்சா பாஸ் செய்யற அளவுக்கு அன்பே சிவம் படத்தை மனப்பாடம் பண்ணி வச்சிருக்கீங்க. //
ஹிஹி பின்ன இது கூட செய்யலேன்னா படம் பார்த்து என்ன பயன்?:)

@சசி,
நன்றி தோழியே:)

@ச்யாம்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே:)

//எப்படி வேதா எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது...கலக்கல் போ :-) //
ஹிஹி நன்றி:) எல்லாம் உங்க சகவாச தோஷம் தான்:)

@கார்த்திக்,
தலைவரே,இது என்ன கட்சி கூட்டமா தாமதமா வரதுக்கு? முதல் முறைங்கற்தனால மன்னிச்சு விடறேன்:D

//நானும் சில சமயங்களில் இப்படி நினப்பதுண்டு வேதா //
நாமெல்லாம் அதிபுத்திசாலிகள் அதான் ஒரே மாதிரி யோசிக்கிறோம்:)

//எல்லாமே நட்சத்திர பதிவு தான் வேதா..//
நன்றி தலைவரே:)

// மதுரை இடைத்தேர்தல்ல போட்ட வோட்டை விட எண்ணுறப்ப இருந்த ஓட்டு அதிகமாம், வேதா.. //
அதுக்கு எதுக்கு மதுரைக்கு போகணும் இங்கேயே நிறைய கூத்துகள் நடந்தது.
என்ன இருந்தாலும் நம்ம கட்சி மாதிரி நியாயமான கட்சி உண்டா தலைவரே?:)

//லேட்டா வந்ததற்காக நிறைய பின்னூட்டம் போட்டுட்டேன் வேதா.. //
அடிக்கடி லேட்டா வாங்க தலைவரே ஹிஹி:) தீபாவளி வாழ்த்துக்கள்:)

வேதா said...

@ப்ரசன்னா, ராஜு,ப்ரியா
உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்:)

@பொற்கொடி,
சீசீ இது பாசத்தால் இணைந்த நட்பு பொற்கொடி:D

ashok said...

have a wonderful deepavali...

Arunkumar said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள

புதுசா கட open பன்னியிருக்கேன். நேரம் கெடச்சா நம்ம கடப்பக்கம் வந்துட்டு போ்கனும் :)

http://findarun.blogspot.com/2006/10/blog-post_19.html

வேதா said...

@அசோக்,
நன்றி :) உங்களுக்கும் என் இனிய தீபாவளீ நல்வாழ்த்துக்கள்:)

@அருண்,
அதுக்கென்ன வந்துட்டா போச்சு:)

Gopalan Ramasubbu said...

//Write your own Epitaph, or if it is too hard, how would you like
your Epitaph to read?
அப்டின்னா என்னங்க? என்னமோ சொல்றீங்க புரியலை:)//


Epitaph = இரங்கல் செய்தி.

நீங்க சொன்ன அன்பே சிவம் டயலாக் எனக்கும் ரொம்ப புடிக்கும்.

எங்க வீட்டுலயும் ஊருகாய் வினைத்தொகை தான்.:)

ambi said...

nicely written. esp liked the anbe sivam dialogue. very good movie. i dono y it was not given at least a national award.
//ஓவர் சீன் உடம்புக்கு நல்லது இல்ல வேதா//
@LOL on porkodi's comment. :)

பொற்கொடி said...

என்ன வேதா, குழந்தை காலேஜ் சேர்ந்தப்புறம் தான் திரும்ப வருவீங்களா? :)

Shuba said...

sooooper..........aaanaaa romba unmai pesurathu udambukku nallathu illai

Anonymous said...

nanum blog open pannitene!!
umagopumaami.blogspot.com vanthu padichutu sollungo epdi irukunu
padikaravaluku sakari pongal kodukapadum
chennaimaami
(veda nanna ezhudarel)

வேதா said...

@gops,
விளக்கத்துக்கு நன்றி:)

@அம்பி,
நன்றி:)ஆமாம் அன்பே சிவம் படத்துக்கு எந்த அவார்டும் கிடைக்காதது வருத்தமே.

@பொற்கொடி,
என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா?:)

@சுபா,
வாம்மா மின்னல்,ரொம்ப நாள் கழிச்சு வந்துட்டு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறியா?:)

@சென்னை மாமி,
வருக வருக:)
நீங்களும் ஜோதில ஐக்கியமாகிட்டீங்களா? இதோ வந்துட்டேன்:)

Syam said...

நானும் வேதாவும் மாமி வூட்டாண்ட போய் சர்கரை பொங்கல் வாங்கிக்கினு வண்டோம்...யாருக்காவது வேனும்னா சீக்கிரமா போங்க :-)

வேதா said...

அண்ணே பாருங்க நம்ம ஒத்துமையை பார்த்து யாராவது கண்ணு போட்ற போறாங்க:)

Anonymous said...

nalla blog.vaazha ungal thamiz pattru.

Marutham said...

HI :D

Elaathayum vida - Abey Sivam dialogue'a KILI PILLAI maari opitchurukeengaley adhu sooper!! [:)] Madhavanum Kamalum munaadi ninnu pesuna maree oru Feel :D

Ram said...

Deepavali parisaaa taga? dhoda idhu romba over :)

Anonymous said...

ivaluv yezhuthi irukeenga... ippothiku only attendence... appalika vanthu padikuren...

indianangel said...

amma veda enga pooteenga? udambu sariyilliya? konja naala aala kanome!

கடல்கணேசன் said...

/எல்லாமே சிறந்தது என்று கூறும் அரிச்சந்திரர்களும் /

நான் அரிச்சந்திர லிஸ்ட்டில் சேர்ந்திட்டேன் வேதா. நீங்கள் எளிய வார்த்தைகளில் அழகாக எழுதுகிறீர்கள். எல்லாவற்றையும் படிக்க ஆசை.. ஆனால் நேரம்.?

இனி எப்படியாவது வந்து பார்க்கிறேன்..

Anonymous said...

அன்பே சிவம் காட்சி....உண்மையில் எனக்கும் பிடித்த காட்சி (இப்பொழுது தான் படம் பார்த்தேன்..உங்கள் ப்ளொக்கை பார்த்ததும்..)

வேதா said...

@bio,
நன்றி நண்பரே:)

@மருதம்,
நன்றி, அந்த காட்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால தான் வசனங்கள் மனப்பாடம் ஆகிவிட்டன:)

@ராம்,
என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?

@kk,
அட வாராவதங்க வந்துகிறீங்க, அப்பாலிக்கா வந்து உங்க கருத்தை சொல்ட்டு போங்க:)

@ப்ரசன்னா,
உங்கள் அக்கறைக்கு நன்றி:)
உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கு, எங்கேயும் போகலை, உங்க பதிவெல்லாம் படிச்சுட்டு தான் இருக்கேன். கண்டிப்பா சிறிது நாட்களில் மீண்டும் வருவேன்:)

@கணேசன்,
நன்றி தோழரே:) உங்களுக்கு சமயம் கிடைக்கும் போது வந்து படியுங்கள்.

@தூயா,
இப்ப தான் படம் பாத்தீங்களா? இனிமே மீண்டும் மீண்டும் பார்ப்பீங்க:)

Anonymous said...

happa!!! padichuten.... Neengalum anbe sivam thana...athu super padam... I like that movie a lot.
Unga kanavula varathu escalator'a iruka poguthu... athula mattum than padikat kanama poidum :)
Spencer's plaza poi paarnga :)

வேதா said...

@kk,
ஹிஹி அது எஸ்கலேட்டரெல்லாம் இல்லை நிஜமாவே படிக்கட்டு தான்:)
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது?:)

smiley said...

4. If you were a member of the opposite sex, what would you do differently?
நட்டநடு நிசியில் எந்த கவலையும் இல்லாமல் நிலவை ரசித்தப்படி நடந்து செல்வேன்

i never realised this situation till i read it from ur blog. anyway even the opp sex would be scared to walk all alone in the city with the robbers, rowdies....