Friday, November 03, 2006

எதை தொலைத்தாள் அதை தேடுவதற்கு - 2

தன் உடல் மீது ஆயிரம் பூரான்கள் ஊறுவது போல் உணர்ந்தாள் அவள் . 'இல்ல, இல்ல என்னை விட்டுடு, தூ நீயெல்லாம் ஒரு ஆம்பளையா' என்று கதறியவளை ராணி உலுக்கினாள்.

'ஏய் என்னடி ஆச்சு? ஏன் இப்படி கத்தற ?ஏதாவது கனவு கண்டியா? 'என்றாள் ராணி.

'ஆமா இப்படி தான் அன்னிக்கு ராத்திரியும் எனக்கு இருந்தது, மங்கலா யாரோ வருவது தெரிஞ்சது, என்னால ஒன்னுமே பண்ண முடியல அப்புறம் தான் தெரிஞ்சது எனக்கு ஏதோ கலந்து கொடுத்துட்டான்னு, அன்னிக்கு அனுபவிச்ச வேதனையை வேற யாரும் அனுபவிக்க கூடாதுடி' என்றாள் அழுகையுடன்.

' நீ இங்க வந்து ஒரு வாரமாச்சுடி, நானும் பாத்துட்டே இருக்கேன். இப்டியே அழுதுக்கிட்டு இருக்க. நீ கவலைப்படாத நாம் போலீச்ல புகார் கொடுத்தடலாம் நீ தான் அதுக்கு ஒத்துக்க மாட்டேங்குற. இந்த நேரம் பாத்து என் புருசன் ஊருல இல்லை' என்றாள் ராணி

'இல்லடி எனக்கு பயமா இருக்கு, அவன் என்னை பத்தி ஊருல தப்பா சொல்ல ஆரம்பிச்சுடுவான். எங்கம்மா நான் எப்படி ஆகக்கூடாதுன்னு நினைச்சாங்களோ அப்டியே ஆகிட்டேன் நான் கெட்டுப்போயிட்டேன். அவன் என்னை மிரட்டி பணிய வச்சுடுவான், எனக்கு பயமா இருக்கு எனக்கு பயமா இருக்கு ராத்திரியெல்லாம் தூங்க முடியலை யாராவது வந்துடுவாங்கன்னு பயமா இருக்கு, இந்த ஆம்பளைங்களே மோசம்டி நான் கெட்டுப்போயிட்டேன்' என்று உளற ஆரம்பித்தாள்.

அவள் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள் , தன் தாயை போலவே தானும் ஆகிவிடுவோமோ என்று நினைக்க ஆரம்பித்து விட்டாள் எனப் புரிந்துக் கொண்டாள் ராணி.

மெல்ல அவளை அணைத்து, 'அப்டியெல்லாம் இல்லைடி நீ கெட்டுப் போகல, அதையே நினைச்சுக்கிட்டு இருக்காத எல்லா ஆம்பளைகளும் கெட்டவங்க இல்லடி' என்று சமாதானப்படுத்த ஆரம்பித்தாள். ராணி சொல்வதை அவள் காதில் வாங்காமல் அதையே சொல்லி அரற்றிக் கொண்டிருந்தாள்.

இவளை என்ன சொல்லி தேற்றுவது என யோசித்த ராணி ஓடிப் போய் தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தை ரவியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

அவளிடம் சென்று, 'இவன் யாருன்னு தெரியும்ல?' என்றாள் ராணி.

'உன் பையன்' என்றாள் அவள்.


'ஆமாம் என் பையன் தான், ஆனா இவன் அப்பா என் புருசன் ராஜா இல்லை' என்றாள்.

அது வரை தன் கவலைகளில் மூழ்கிக் கொண்டிருந்தவள் ராணியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து 'என்னது என்னடி சொல்ற?' என்றாள்.

ராணி, 'உனக்கே தெரியும் நான் ஒரு துணை நடிகைன்னு, என்னோட நடிச்சவனை தான் காதலிச்சேன், ரெண்டு வருஷம் ஒன்னா சுத்தினோம். நான் யாரையோ காதலிக்கிறேன்னு மட்டும் தான் எல்லாருக்கும் தெரியும் ஆனா என் காதலன் யாருன்னு என் நெருங்கிய தோழிகள் ரெண்டு பேரை தவிர வேற யாருக்கும் தெரியாது, ஏன் உனக்கு கூட தெரியாது அது யாருன்னு'

'ஆமாம், நான் அப்ப ராஜாவை பார்த்ததில்லை' என்றாள் அவள்

'நான் காதலிச்சது ராஜாவை இல்லை, வேற ஒருத்தனை. ஆனா ராஜாவை எனக்கு அப்பவே தெரியும் அவரு சினிமால செட் போடற டீம்ல இருந்தாரு. அவரும் என்னை காதலிச்சாரு அது எனக்கு தெரியாது, ஒரு முறை ஒரு சினிமாவுக்காக அவுட்டோர் ஷுட்டிங் போனப்போ எனக்கும் என்னை காதலிச்சவனுக்கும் பெரிய சண்டை வந்துடுச்சு, அவன் வேற ஒரு பொண்ணோட பழகிக்கிட்டு இருந்தான், எதிர்த்து கேட்ட என்னை அடிச்சு கேவலப்படுத்தினான். அப்போ தான் ராஜா எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்து சமாதானம் பண்ணினாரு, எனக்காக அவன் கிட்ட பரிந்து பேசினாரு. ஆனா அவனுக்கு வட இந்தியாவுல சினிமா சான்ஸ் கிடைச்சுதனால நான் கெஞ்சினதையும் பொருட்படுத்தாம ஒரு நாள் திடீர்னு காணாம போயிட்டான் அந்த பொண்ணோட'.

'என்னது அப்ப ராஜாவை நீ காதலிக்கலையா?' என்றாள் அவள்.


'இதுக்கே அதிர்ந்து போயிட்ட இரு இன்னும் இருக்கு. என் காதலன் தலைமறைவாகி ரெண்டு நாள்ல நான் கர்ப்பமாயிருக்கேன்னு எனக்கு தெரிஞ்சது. என்ன செய்யற்துன்னு தெரிய்லை, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது தான் ராஜா என்னை தேற்றி , தானே திருமணம் பண்ணிக்கொள்வதாக கூறினார். அப்போ கூட காதலன் ஓடிப் போய்டதால தான் நான் தற்கொலை பண்ணிக்க போனதா நினைச்சார். ஆனா உண்மையான காரணம் தெரிஞ்சப்புறம் கூட 'பரவாயில்லை ராணி, நீ எனக்கு நல்ல மனைவியா இருந்தா போதும் நான் அந்த குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவா உனக்கு ஒரு நல்ல புருஷனா இருப்பேன்' அப்படின்னு சொன்னாரு. இவ்ளோ நல்ல மனுசனை அடைய எனக்கு தகுதி இருக்கான்னு நானே தயங்கினேன். ஆனா இப்போ சந்தோஷமா இருக்கேன்'

'காதல்னா என்னன்னு தெரியாம ஏதோ இளமை வேகத்துல மனசால கெட்டுப்போய் அதனால உடம்பாலையும் கெட்டுப்போனேன். அப்படியும் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சது, ஆனா நீ அப்படி இல்லைம்மா நீ மனசால கெட்டேபோகலை,ஏன் உடம்பால கூட கெட்டுப்போகலைம்மா. உனக்கு நடந்த விஷயத்தை மறக்கற்து கஷடம் தான். ஆனா முயற்சிக்கலாமில்ல. அப்டியே மறக்க முடியலேன்னா கூட அதை உன் மனசுலேந்து மறைச்சுடு.'

' முன்னல்லாம் ஒவ்வொரு முறையும் என் பையன் முகத்தை பார்க்கும் போது என்னை ஏமாத்திட்டு போனவன் நினைவு வந்தது, ஆனா இப்ப அந்த முகத்தை என் ராஜாவின் முகம் வந்து மறைச்சுடுச்சு, அந்த மாதிரி உன்னாலயும் முடியும் உனக்கு நடந்த விபத்தை மறக்க முடியலேன்னாலும் உன் குழந்தையை நினைச்சு அதை மறைக்க முயற்சி செய், மனசால நீ தைரியமா இருந்தா தான் வாழ்க்கையும் நல்லா இருக்கும் 'என்றாள் ராணி .

இப்படியெல்லாம் பேசி அவள் மனதில் ராமுவை எதிர்க்கும் தைரியத்தையும், நடந்ததை நினைத்து மனரீதியாக அவள் படும் அவஸ்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கவும் முயற்சித்தாள் ராணி. அவளுக்கு தெரியும் ஒரே நாளில் அது முடியாதென்று ஆனாலும் தான் பேசியதில் அவள் கொஞ்சம் சமாதானம் அடைந்த மாதிரி ராணிக்கு தோன்றியது.

மெல்ல விடியத் தொடங்கியது.

அப்பொழுது வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள். உள்ளே இருந்து ராணி 'யாரு?' என கத்தினாள்.


'கதவை திறடி நாயே' என்று பதில் வந்தது.


'அடிச்செருப்பால, யாருடா அது?' என கத்திக்கொண்டே கதவை திறந்தாள் ராணி.


வெளியே தலையில் கட்டுடன் ராமு நின்றிருந்தான். இதற்கிடையில் குரல் கேட்டவுடனே வந்திருப்பது ராமு எனத் தெரிந்துக் கொண்டு தரையில் விட்டுருந்த குழந்தையை எடுத்து அவள் தன்னுடன் அணைத்துக் கொண்டாள்.


'என் பொண்டாட்டி இங்க தான இருக்கா? அவளை மரியாதையா வெளிய விடு' என்றான் ராமு ராணியைப் பார்த்து.


'தூ! நீயும் ஒரு புருஷனா? இரண்டு வாரம் முன்னாடி என் வீட்டுக்கு வந்தவ அன்னியிலிருந்து இன்னி வரைக்கும் அப்டியே பேயறஞ்சவ மாதிரி இருக்கா, ராத்திரில தூங்காம யாராவது வந்துடுவாங்கன்னு சொல்லிக்கிட்டு முழுச்சிக்கிட்டே இருக்கா. 'என்றாள் ராணி


'ஏய் அது உனக்கு தேவையில்லாத விஷயம் நீயே சினிமால கூத்தடிக்கிறவ உன் யோக்கியதை என்னன்னு எனக்கு தெரியும் வாய மூடு' என்றான் ராமு.


அது வரை நடுங்கிக்கொண்டே கணவன் என்ற பெயரில் வந்திருக்கும் மிருகத்தை பார்த்துக்கொண்டிருந்தவள் ராணியை தவறாக பேசியதைக் கண்டு கோவத்துடன், 'தன் பொண்டாட்டியை இன்னொருத்தனுக்கு விக்கற உன்னை விட அவ யோக்கியமானவ தான் ' என்றாள்.


'நீ அன்னிக்கே அம்மிக்கல்லை அவன் தலயில போட்டு சாக அடிச்சுருக்குணும் 'என்றாள் ராணி கோபத்துடன்.


'அன்னிக்கு அப்படி தான் நினைச்சு பாட்டிலால அடிச்சேன், எப்டியோ ஆஸ்பத்திரி போய் பொழச்சு வந்துடுச்சு, நாட்டுல நல்லவங்க எல்லாம் போய் சேர்றாங்க இவனுக்கு ஒரு சாவு வர மாட்டேங்குது' என்றாள் அவள்.


'இது பாரு தேவையில்லாம் பேசாத எப்படியும் நீ கெட்டு போய்ட? இனிமே அது தான் உன் விதி, மரியாதையா என் கூட வந்துடு, உன்ன வச்சு நிறைய ப்ளான் போட்ருக்கேன்' என்றான்.


'முடியாது நான் சாவடிக்கறதுக்கு முன்னாடி ஓடிப் போயிடு உன்னை அப்டியே விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காத . நான் போலிசுக்கு போவேன்' என்றாள் அவள்

'போ அங்க போய் என்ன சொல்வ? இத பாரு நம்ம வீட்டு பக்கத்துல இருக்கறவங்க கிட்ட என்ன சொல்லி வச்சுருக்கேன் தெரியுமா? அன்னிக்கு வந்துட்டு போனானே அவனுக்கும் உனக்கும் தொடர்பு இருக்கு அதை தட்டி கேட்ட என்னை நீ அடிச்சுட்டு போய்டன்னு சொல்லி வச்சுருக்கேன். அவனும் அதை தான் சொல்வான். எப்படி வசதி?' என்றான் ராமு.


அவனை எரித்து விடுபவள் போல் பார்த்து அவன் முகத்தில் தூ என்று துப்பினாள். 'இத பார் நான் ஒன்னும் எங்கம்மா மாதிரி கிடையாது, அவங்க தான் நம்ம தலைவிதி அவ்ளோ தான்னு நினைச்சுக்கிட்டு வாழ்ந்தாங்க. அந்த மாதிரி நானும் இருப்பேன்னு கனவுல கூட நினைக்காத' என்றாள்.


'என்னையா காறி துப்பற?' என்று முகத்தை துடைத்துக்கொண்டு அடிக்க வந்தவன் கூட்டம் சேருவதை பார்த்து, 'நீ எப்படி வாழறன்னு நானும் பாத்துடறேன்' என்றான்.

'இதோ நான் துப்பினதை நீ துடைச்சுக்கிட்டு போகல, அந்த மாதிரி என் உடம்புல உன்னால பட்ட எச்சிலை நான் துடைச்சுக்கிட்டு வாழ்வேண்டா' என்றாள்.

கோபத்துடன் போன ராமுவை பார்த்துக்கொண்டே 'ராணி ,எனக்கு உடனே ஒரு வக்கீலை பார்க்கணும் விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யணும் , இவனை போலீச்ல பிடிச்சு கொடுக்கணும், இல்லேன்னா வேற எந்த பொண்ணையாவது ஏமாத்த முயற்சி செய்வான்' என்றாள் அவள்.

முழுவதுமாக பொழுது விடிந்தது.

பி.கு: இந்த கதையின் முதல் பாகத்தை எழுதி முடித்தவுடன் தான் கதையின் நாயகிக்கு பெயர் வைக்கவில்லை என உறைத்தது. பின் அப்படியே விட்டுவிடலாம் என நினைத்து கடைசி வரை அவளுக்கு பெயரே வைக்காமல் கதையை முடித்து விட்டேன். முடிவை பற்றி அவரவர் விமர்சனங்களை தயங்காமல் கூறுங்கள்:)


40 comments:

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம், போலீஸ்லே பிடிச்சுக் கொடுத்துட்டாளா? சரி, பிடிச்சுக் கொடுக்கப் போறா. ஆனாலும் ஏதோ அவசரமா முடிச்ச மாதிரி இருக்கே,என்னவோ குறையுது. கொஞ்சம் யோசிச்சுட்டு வந்து சொல்றேன்.

கடல்கணேசன் said...

இருங்க.. கடைசி வரியைத் தான் முதலில் படித்தேன்.. (அதான் நீங்க ஹீரோயினிக்கு பேர் வைக்காதது..).
இரண்டையும் படித்து விட்டு மீண்டும் எழுதுகிறேன்..

கடல்கணேசன் said...

/'இதோ நான் துப்பினதை நீ துடைச்சுக்கிட்டு போகல, அந்த மாதிரி என் உடம்புல உன்னால பட்ட எச்சிலை நான் துடைச்சுக்கிட்டு வாழ்வேண்டா'/

இந்த வரிகள் கதையோட சுருக்கம் மாதிரி நான் உணர்ந்தேன். உரையாடல்கள் இயல்பாக உள்ளது..

கதையின் முதல் பாகத்தின் வரிகள் எனக்கு என் தொடரில் வரும் பட்ரீஷியா- ரோஸானா(அம்மா-பெண்) பாத்திரங்களை நினைவுக்குக் கொண்டு வந்தன..(பாலியல் தொழில் செய்யும் அம்மா மகள் அந்தத் தொழிலில் விழுந்து விடக்கூடாது என்று அதிலும் இதே போல் தான்..ஆனால் நீங்கள் சொல்ல வந்த கருத்து வேறு..)

நல்ல எழுத்து நடை.. இன்னும் நிறைய எழுதுங்கள் வேதா.

கீதா சாம்பசிவம் said...

யோசிச்சேன், கதை முடிவிலே தான் குறை இருக்கு. விவாகரத்துப் பண்ணுறது எல்லாம் சரி, ஆனால் அவனுக்கு இது போதாதுன்னு தோணுது. ம்ம்ம்ம்ம், முடிவு இன்னும் கொஞ்சம் வேறே மாதிரி இருக்கலாமோ?

கடல்கணேசன் said...

/Not for Publishing/
வேதா.. தோழி ராணியின் கதை நெருடலாக இல்லாவிட்டாலும், நாம் சொல்ல வந்த கதாநாயகியின் வாழ்க்கையை அது மறைத்து விடக் கூடிய அபாயம் இருப்பதாகத் தோன்றியது..

ஏனென்றால் அந்தக் கதையும் இன்னொரு ட்ராக்கில் சுவாரஸ்யமாக போனதால், மனதில் ராணி வாழ்வில நடந்த சம்பவங்கள், கதாநாயகியின் வாழ்க்கையில் நடந்த சோகத்தை விட அதிகம் தங்கி விட்டது - எனக்கு அப்படித் தோன்றியது.

என் மனதில் பட்டது- இரண்டும் தனித்தனி கதையாக எழுதினாலும் நன்றாகத் தான் இருக்கும்.. ராணியின் வாழ்க்கை நாயகிக்கு ஒரு உதாரணமாக எடுத்து, நடந்து போன காயத்தை மறக்க உதவி செய்யும் என்றாலும், பொதுவாக சிறுகதையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எடுத்து அதுபற்றி மட்டுமே நகர்த்திச் செல்வது வழக்கம் இல்லையா..

நான் உங்கள் கதையில் குறை கண்டுபிடிப்பதாக மட்டும் தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.. அப்படி நினைத்திருந்தால் எதுவுமே எழுதாமல் தான் போயிருப்பேன்.. உங்களின் எழுத்து ஆர்வத்தை புரிந்து கொண்டதால் இதை தெரிவித்தேன்..

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.. நன்றி.
என்றும் தோழமையுடன்
-கடல்கணேசன்

my email: kadalganesan@gmail.com

Anonymous said...

@Veda,


>>>>
இப்படியெல்லாம் பேசி அவள் மனதில் ராமுவை எதிர்க்கும் தைரியத்தையும், நடந்ததை நினைத்து மனரீதியாக அவள் படும் அவஸ்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கவும் முயற்சித்தாள் ராணி. அவளுக்கு தெரியும் ஒரே நாளில் அது முடியாதென்று ஆனாலும் தான் பேசியதில் அவள் கொஞ்சம் சமாதானம் அடைந்த மாதிரி ராணிக்கு தோன்றியது.

மெல்ல விடியத் தொடங்கியது.

>>>

Simply superb.You proved your writing ability.

I can understand the pain of ramu's wife as i have seen some real time stories similar to this story.

There are lots of women in our country like ramu's wife.Some gals are getting cheated by the name of friendship,some are getting cheated by the name of love.

The words in the sentance,

'இதோ நான் துப்பினதை நீ துடைச்சுக்கிட்டு போகல, அந்த மாதிரி என் உடம்புல உன்னால பட்ட எச்சிலை நான் துடைச்சுக்கிட்டு வாழ்வேண்டா' என்றாள்.

was really coined well.Good Message.

If you would have added some lines directly/indirectly telling the readers that SHE is mentally prepared and ready for the second marriage then i would have appreciated more.

Finally,very good stuff.

@Gita Sambasivam,

>>
யோசிச்சேன், கதை முடிவிலே தான் குறை இருக்கு. விவாகரத்துப் பண்ணுறது எல்லாம் சரி, ஆனால் அவனுக்கு இது போதாதுன்னு தோணுது. ம்ம்ம்ம்ம், முடிவு இன்னும் கொஞ்சம் வேறே மாதிரி இருக்கலாமோ?
>>

Do you want to Punish Ramu ? Any punishment which does'nt change the original bad attitude is simply waste.Rather,we should educate the gals to be more smarter to handle such guys.That's what veda did.

Thanks for your Time !

- Hayagriva Dasan

G3 said...

Aaha.. Veda enakku en ellam ultava theriyudhunnu therila :( Pona murai kadha mudinja effectla irundhappo thodarumnu sonneenga.. Indha kadha kadaisila thodarumnu varumnu nenacha mudinjiduchunnu solliteenga.. :(

Ramu sethirundha naan romba sandhoshapattiruppen :)

G3 said...

Kadha flow supera irundhudhu veda.. Kandippa paaraatiyae aaganum.. Adhuvum konjam strongaana subjecta supera handle panni irukkeenga.. Hats off!!

மு.கார்த்திகேயன் said...

வேதா, ரொம்ப நல்ல முடிவு. சும்மா சினிமாடிக்கா (கணவனையே கொலை பண்றது,, குழந்தையை வச்சு தாண்டுறது) முடிக்காம பிராக்டிக்கலா முடிச்சுருகீங்க..

மேலும்..அருமையான கதைகளம் வேதா.. பெரும்பாலும் இந்த மாதிரி கதைகளத்தை யாரும் தொடுறதே கிடையாது..

நல்ல முயற்சி.. நல்ல கதை.. கலக்குங்க போங்க

Priya said...

அருமையா எழுதி இருக்கிங்க.

ராஜா பாத்திரம் ரொம்ப நல்லா இருந்தது (இந்த மாதிரி ஆண்கள் எவ்வளவு பேர் இருப்பாங்கங்கரது வேற விஷயம்)

பெண்கள் கல்லானாலும் கணவன்னு இருக்கரது, சமூகத்துக்கு பயந்து தனியா வாழ தயங்கறது மாதிரி விஷயங்கள் மாறினாலே இந்த மாதிரி ப்ரச்சனைகள் குறையும்னு சொல்ற மாதிரி இருக்கற முடிவு எனக்கு பிடிச்சிருக்கு.

ஆனா இந்த மாதிரி ஏழைப் பெண்களுக்கு வக்கீல், விவாகரத்துனு செலவு பண்ண முடியுமானு தெரியல. ஆனா நிறைய NGOs உதவி பண்றாங்கனு நினைக்கறேன். Domestic violence act எந்த அளவுக்கு உதவியா இருக்குனு போக போகத் தெரியும்.

Sandai-Kozhi said...

சபாஷ்!சபாஷ்!என்ன சொல்ல?கதை கொண்டு போனது படு எதார்த்தம். நடை நல்ல விறுவிறுப்பு.அந்த பெண் மோசமான கணவனை எதிர்த்து போராட முடிவு எடுத்த எண்ணமே போற்றுதற்குரியது.இன்னும் அழகான கதைகள் உங்கள் எழுத்தில் வர ஆசிகள்.
--SKM

Usha said...

veda, adadada enna oru kadhai..ivalo puratchikaramana kadhai ellam ezhuda arambichutta? Good theme. appove patchi sollithu, usha, vedavai vidadha-nu, so I had drafted my next post (a story tag) and linked it to you, inga vandhu partha super surprise he he. Sandoshama poi andha draft-a publsh panren :D

Ravi said...

..first part'la iruntha kadhai ezhudara aarvam second part'la missing pola ...

common vaarthaikalae use panni irukeenga .. kadhai'oda crux .. innum deep eduthundu poi irukaalaam ...


//தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தை ரவியை எடுத்துக் கொண்டு வந்தாள்//

ha ha ha ... i dont need to say y am laughing ...

(thanks for making me a character on this story !! probably if this story continues am going to be a hero on the later part.... ha ha ha !!!!)

...cool story .. nice finish ..


//ஆனாலும் தான் பேசியதில் அவள் கொஞ்சம் சமாதானம் அடைந்த மாதிரி ராணிக்கு தோன்றியது.மெல்ல விடியத் தொடங்கியது //

..main ratnam a iruntha .. oru malai .. apadi'yae sun rise .. rendu birds paraka maathiri kamichirupapula ...

once again .. good lines ..

வேதா said...

@கீதா,
/ம்ம்ம்ம்ம், முடிவு இன்னும் கொஞ்சம் வேறே மாதிரி இருக்கலாமோ? /
முதலில் கதாநாயகி அவனை கொல்வது போலவோ இல்லை அவனுக்கு தலையில் அடிப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டது போலவோ அமைக்க தான் தோன்றியது,ஆனால் அது ரொம்ப சினிமாட்டிக்கா இருக்கும்னு நான் நினைச்சதால இந்த முடிவை எழுதினேன், இது கதைக்கு தான் முடிவு, மற்றபடி கதாநாயகியின் போராட்டம் இனிமேலும் தொடரும்.

@கணேசன்,
ரொம்ப நன்றி கணேசன், ஆமாம் நீங்க சொல்வது போல் உங்கள் தொடரில் வரும் உண்மை கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் நிழல் கதாபாத்திரங்கள் தான் இவர்கள்:)

@ஹயக்ரீவ தாசன்,
நன்றி:) முடிவு தாங்கள் எதிர்ப்பார்த்தது போல் அமைந்துவிட்டதா?

If you would have added some lines directly/indirectly telling the readers that SHE is mentally prepared and ready for the second marriage then i would have appreciated more.
அதற்கு நம் கதாநாயகிக்கு அவகாசமும் அதை எழுதுவதற்கு எனக்கு அவகாசமும் வேண்டும்,அப்புறம் அது தொடர்கதையாகிவிடும்:)

@ஜி3,
எல்லாம் உல்டாவா தெரியுதா?:)
கதாநாயகியே ஒரு கட்டத்துல அவனை கொல்ற நினைப்போட தான் உணர்ச்சிவசப்பட்டு பாட்டிலை தூக்கி அடிச்சதா சொல்றா, ஆனா அவன் செத்திருந்தா அவன் செஞ்ச பாவத்துக்கான பலனை முழுசா அனுபவிக்காம உடனே போயிருப்பான், அதுக்கு பதிலா சட்டத்தின் மூலமாக தண்டனை வாங்கிக் கொடுத்தால் காலம் பூரா அனுபவிப்பான் இல்லையா?

Arunkumar said...

romba nalla kadai eludi irukeenga veda. congrats.

// முழுவதுமாக பொழுது விடிந்தது. //
symbolic...

innum niraya eludunga...

-Arun

வேதா said...

@கார்த்தி,
நான் கதைக்கு கொடுத்த முடிவை நீங்க தான் சரியா புரிஞ்சுக்கிட்டீங்க:) பின்ன தலைவர்னா சும்மாவா?:)ஹிஹி ரொம்ப நன்றி:)

@ப்ரியா,
பாராட்டுக்கு நன்றி:)
ராஜா மாதிரி ஆண்கள் நிறைய பேர் இருக்காங்க ப்ரியா,வெளியில தெரியற்தில்லை அவ்வளவு தான்.
அதுவும் தவிர இப்ப ஏழைகளுக்கு வாதாடவும், போராடவும் நிறைய மகளிர் அமைப்புகளும் உள்ளன:) அப்படி நியாயம் வாங்கி கொடுத்த அமைப்புகளை பற்றி நிறைய படித்திருக்கிறேன்.

@skm,
ரொம்ப நன்றி தங்கள் பாராட்டுக்கும், ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கும் ஆசிகளுக்கும்:)

@உஷா,
அடிப்பாவி இன்னொரு டேகா அதுவும் இன்னொரு கதையா? ஏன் இப்படி என்னை பழிவாங்குற?:) பார்க்கலாம் முடிஞ்சா தான் எழுதுவேன் இப்பவே சொல்டேன்:)

வேதா said...

@ரவி,
முதல் பகுதியில் வசனங்கள் ரெண்டாவது பாகத்தைவிட குறைவு, அதனால் தான் அப்படி தோணுது, அதுவும் தவிர இந்த மாதிரி எழுதும் போது நாம் எப்படி பேசறோமோ அப்படி தான வசனங்களும் எழுத முடியும்.
ரவின்னு பேர் வச்சது தற்செயலானது, உங்களுக்கு சந்தோஷமா இருந்தது எனக்கு மகிழ்ச்சியே:)

Anonymous said...

Veda:
Really good, but atleast it should have went two more episodes...

Geetha madam:
I am reading ur Aanmiga payam...really good information..since ur blog doesnot allow anonymous info iam dropping message here...hope u or veda passes u the msg there..
Shankar

Anonymous said...

Veda:
story was good, but could have had really good interesting ending....

Geetha Madam:
I am reading your Aanmiga payanam blog...its really interesting and good information. Your blog doesnot allow anonymous msgs.....so iam leaving this here, anyway this counts for you too:-)

Shankar

கீதா சாம்பசிவம் said...

Mr. Hayagriva Dasan,
அவனைச் சும்மா விட்டா இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் அவன் வலையில் விழுவாங்களோ? இவளைப் பொறுத்தவரை விழிப்புணர்வு இருந்தது. தப்பிச்சுட்டா, இது மாதிரி ஏமாத்தறவங்க எத்தனை பேர் வேணும்? நிஜ வாழ்விலேயே இருக்காங்க. அதான் அவன் காலத்துக்கும் மறக்காம இருக்கிற மாதிரியான முடிவு இருந்திருக்கலாமோன்னு தோணியது. மத்தபடி பெண்கள் படிப்பினால் ஏமாறமாட்டார்கள் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. படித்த பெண்கள் ஏமாறுவதும் தொடர்கதைதான். தினசரிகளைப் படிச்சாலே தெரியுதே? பெண்களுக்குத் தேவை படிப்பு மட்டும் இல்லை. ஆராய்ந்து நல்லது கெட்டது தெரிந்து கொள்ளும் குணமும், தைரியமும், போராட்டத்துக்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளும் மனமும் தான் தேவை.

தி. ரா. ச.(T.R.C.) said...

கதையின் நடையும் கருத்தும் மனதில் நிற்கும். ஆனால் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு கடைசியில் சற்று குறைந்து விட்டது.

வேதா said...

@அருண்,
ரொம்ப நன்றி:) இன்னும் எழுதணுமா? முயற்சி பண்றேன்.

@சங்கர்,
நன்றி, இதை தொடர்கதையாக்க நான் விரும்பவில்லை அதனால் தான் இத்துடன் முடித்து விட்டேன்.

@கீதா,
நீங்களும் திரு ஹயக்ரீவ தாசனும் கருத்து பரிமாறிக்கொள்ளும் போது நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

/அவனைச் சும்மா விட்டா இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் அவன் வலையில் விழுவாங்களோ/

இதையே தான் என் கதாநாயகியும் நினைக்கிறாள், அதனால் தான் சட்டத்தின் உதவியை நாடுகிறாள்.

/மத்தபடி பெண்கள் படிப்பினால் ஏமாறமாட்டார்கள் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை/
நீங்க சொல்வது உண்மை தான். இந்த கதையிலும் கதாநாயகி படித்தவள் தான் ஆனால் அவளுக்கு மன உறுதியும் போராடும் குணத்தையும் வரவழைப்பது படிக்காத ராணி கதாபாத்திரம் தான், ராணியை கதையில் கொண்டு வந்ததற்கான காரணமே அது தான்.

@திராச,
பாராட்டுக்கு நன்றி சார். விறுவிறுப்பு குறைந்து விட்டதா? இந்த கதையின் முக்கிய நோக்கமாக நான் எடுத்துக் கொண்டது இத்தகைய கொடுமை நடக்கும் போது ஒரு பெண் மனரீதியாக எப்படி பாதிக்கிப்படுகிறாள் அதனால் அவள் வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பதை என்னால் முடிந்தவரை சொல்லத்தான்.

Syam said...

கதை முடிஞ்சு போச்சா...ஜிஸ்டர் ரெண்டு நாளா பிஸி...நாளைக்கு ஆபீஸ் போன உடனே முதல் வேலையா கதைய படிச்சிட்டு கமெண்ட் போடுறேன்...இல்லனா எங்க மேனேஜரும் கோவிச்சுக்குவார்... :-)

ambi said...

Nice ending. divorce is the right option at this stage. summa, vazha vazha kozha kozhaanu kathaiya mudichruntha nane thakkali erinju iruppen. :)

Good one.

Anonymous said...

@Geetha Sambasivam,

>>
அவனைச் சும்மா விட்டா இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் அவன் வலையில் விழுவாங்களோ? இவளைப் பொறுத்தவரை விழிப்புணர்வு இருந்தது. தப்பிச்சுட்டா, இது மாதிரி ஏமாத்தறவங்க எத்தனை பேர் வேணும்? நிஜ வாழ்விலேயே இருக்காங்க. அதான் அவன் காலத்துக்கும் மறக்காம இருக்கிற மாதிரியான முடிவு இருந்திருக்கலாமோன்னு தோணியது.

>>

I think veda had already given some explanations which i too agree.But,in my opinion any punishment which can change the basic bad attitude should be choosen...But practically the only punishment which can gaurentee that the mistakes wont be repeated by that person is MARANA THANDANAI.....that too in a cruel way.This will also teach some good lessons to others.Other punishments is simply useless until the change in attitude happens.

>>

மத்தபடி பெண்கள் படிப்பினால் ஏமாறமாட்டார்கள் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. படித்த பெண்கள் ஏமாறுவதும் தொடர்கதைதான். தினசரிகளைப் படிச்சாலே தெரியுதே? பெண்களுக்குத் தேவை படிப்பு மட்டும் இல்லை. ஆராய்ந்து நல்லது கெட்டது தெரிந்து கொள்ளும் குணமும், தைரியமும், போராட்டத்துக்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளும் மனமும் தான் தேவை.

>>

I am very happy to hear this from a gal.This is what i meant by education.I was not talking aboout any UG/PG educations.Indru sila pengal thaan padithuvittom yendra kaaranathaal sila sagikka mudiyaatha seyalgalai seithukondirukiraargal.....vazkaila nallathu kettatha padikka thavarinaa yevvloo periya padippum waste thaanee...

Pothuvaa periyavanga solluvanga,Pengalukku Aacham,Madam,Naanam and Payirppu irukkanumnu...In my opinion,PAYIRPPU( Sari/Thavarai Paguthu Arinvathu ) mattum irunthaal poothum..Yevanum yentha ponnaium yeematha mudiyaathu.....That's what i meant as Education.

@Veda,
>>
முடிவு தாங்கள் எதிர்ப்பார்த்தது போல் அமைந்துவிட்டதா?
>>

Nalla Mudivu.Ungal kathaiyaal enn karuthukallai naan parimaarikolvatharkku oru vaaippu kidaithathu..mikka nandri.

Unmaiyaaga ungal kathai sila kayavargalai yoosikka vaithirukkum.

Ungalidam ithu pool karuthulla kathaigalai yethirpaarkireen.

Thanks for your time.

- Hayagriva Dasan

கீதா சாம்பசிவம் said...

மரண தண்டனை சரியான தீர்ப்பு கிடையாது. ஏன்னா அப்புறம் அவன் தான் செய்த தப்பை நினைத்து வருந்தவே முடியாமல் போயிடும். ஆகவே அவன் காலத்துக்கும் வேறு பெண்ணை மனதால் கூட நினைக்கவோ, மணமுடிக்கவோ முடியாமல் போக வேண்டும். அதை நினைத்து வருந்த வேண்டும். மற்றபடி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இந்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பது பார்க்கிற கோணம் மாறி விட்டது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.

வேதா said...

@ச்யாம்,
என்னது ஆபிஸ்ல வேலையா? ஏன் இப்படி ஜோக் பண்றீங்க:) அதென்ன என் பதிவுக்கு பின்னூட்டம் போட முடியல ஆனா நான் போற எல்லா வலைப்பக்கங்களிலும் உங்க பேர் தென்படுது:)

@அம்பி,
அட அட நாரதர் வாயால சீசீ வசிஷ்டர் வாயால ப்ரும்ம ரிஷி பட்டம்:)

@கீதா,ஹயக்ரீவ தாசன்,
உங்க கருத்துக்களை பரிமாறி கொள்ள என் கதைக்களம் ஒரு வித்தாக அமைந்து எனக்கு மகிழ்ச்சியே:)

Syam said...

//என்னது ஆபிஸ்ல வேலையா? ஏன் இப்படி ஜோக் பண்றீங்க:) அதென்ன என் பதிவுக்கு பின்னூட்டம் போட முடியல ஆனா நான் போற எல்லா வலைப்பக்கங்களிலும் உங்க பேர் தென்படுது:)//

ஆபீஸ்ல வேலைனு சொன்னனா...இப்படி எல்லாம் என்ன அவமான படுத்த கூடாது ஆமா...அது என்னமோ பிளாக் ரோலிங் சொதப்புது...உன்னோட பிளாக் அப்டேட்னு காட்டவே இல்லயே :-)

Syam said...

கதை சூப்பர் ரொம்ப ரியலிஸ்டிக்கா இருந்தது...ஆனா விறுவிறுப்பா போய் டக்குனு முடிஞ்சுட்ட பீலிங்...அவளோதான இன்னும் வருமா :-)

Syam said...

சினிமா வாழ்க்கைல அவங்க எவ்வளவு கஷ்ட பட்டாலும் அவங்களும் மனுசங்க அவுங்களூக்கும் மனசு இருக்குனு எவ்வளவு அழகா சொல்லி இருக்க...

Jeevan said...

Oru thiraipadathil varum katchiyai poal irunthathu!! Romba theramaiya ealuthirikkenga veda. "இதோ நான் துப்பினதை நீ துடைச்சுக்கிட்டு போகல, அந்த மாதிரி என்... " Neaththi Adi!

Known Stranger said...

more than your story - i read more on what people comment ( in your language enna thupirukanganu) to know he mind feeling of many.

Interesting - gives a variety of feeling on what people while read get the mind set. What i noticed is - many has got involved in story line many have visualised they are part of the story and left a point of their as if they know your namless herone. -

what it indicates - you have made the readers involve in your story telling ability. What else a narrator should need when he or she says a story.

The coincdence while you narrating the story is you didnt name it - so it shows you didnt start with a prefixed mind on this is how you should write a story - it indicates - you have no pre fixed notions on story - you went on writting with your flow of words and mind. Yes you may have edited latter but during your first draft certainly you had the flow - and the flow was not affected till end.

I know i didnt comment on your story line - i felt many had already done . as well as - i dont get personal with stories - i read it as story except it is a history novels where it feeds my interest for minute information on cultre and religion and other details and some historical facts.

i dont know if you are already a serious writer ( i mean a serious write as professional) . if not you should spend more time on it and make a collection with various ideas and various style with no steriotypic writing other wise after reading few of your writing - people can get your flow and will start expecting how and where you will take the story.. for example - in rajeshkumar, suba, pattukoti prabhakar novels after reading so much - every story has a common thread line - it is just after few chapter - you can tell how the writer is going to take the novel.. some time they give a surprise.

one day I would like to see your novels on social issues expressed more eloquent like what sivasankari, and other female writers had done. I forgot to mention i could feel a style of your writing with that famous female writer of bangaladesh. i couldnt recall her name now. will let you know soon.

கீதா சாம்பசிவம் said...

வேதா, திரு. சங்கருக்கும் அப்படியே உங்க ப்ளாக் மூலமா என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். நேத்திக்கு மறந்துட்டேன் குறிப்பிட.

Usha said...

adi paavi, drogi!! Kavuthuttiye ennai ippadi, evalo nambinen unnai...odi po!

வேதா said...

@ச்யாம்,
/ஆபீஸ்ல வேலைனு சொன்னனா...இப்படி எல்லாம் என்ன அவமான படுத்த கூடாது ஆமா.../
ஏதோ உங்களுக்கு கொஞ்சம் நல்ல பேர் வாங்கிக் கொடுக்கலாம்னு பார்த்தா நீங்களே இப்படி சொல்டீங்க:)

ரொம்ப மெகா தொடர்கள் பார்க்கறீங்களோ அதான் சின்னதா முடிச்சா பிடிக்கல:)

/அவங்களும் மனுசங்க அவுங்களூக்கும் மனசு இருக்குனு எவ்வளவு அழகா சொல்லி இருக்க... /
எல்லாரும் மனிதர்கள் தான், அவரவர் சூழ்நிலை பொறுத்து தான் அவரவர் நடத்தையும்.

@ஜீவ்,
ரொம்ப நன்றி ஜீவ்:)

@வைஷ்ணவ்,
/so it shows you didnt start with a prefixed mind on this is how you should write a story /
ஓரளவுக்கு உண்மை தான், முதல் பாகம் எழுதும் போது ஆரம்பத்தில் தயக்கத்தோடு எழுத ஆரம்பித்தேன்.எதை பற்றி எழுதப்போகிறேன் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தேன் எப்படி எழுதப்போகிறேன் என்பதில் அல்ல:)

/if not you should spend more time on it and make a collection with various ideas and various style with no steriotypic writing other wise after reading few of your writing - people can get your flow and will start expecting how and where you will take the story../
இல்லை நான் முழு நேர எழுத்தாளர் அல்ல, கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன் கதையும் எழுத முயற்சிக்கலாம் என்று தோன்றியதால் இந்த பலன்:)

/one day I would like to see your novels on social issues expressed more eloquent like what sivasankari, and other female writers had done/
என் எழுத்தின் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் உங்களுக்கு என் நன்றிகள்:)

என் எழுத்தையும் மதித்து நேரம் எடுத்துக்கொண்டு இந்த நீண்ட விமர்சனம் கொடுத்ததற்கு நன்றி நண்பரே:)

@கீதா,
தாராளமா தெரிவிச்சுக்கோங்க:)

@உஷா,
கோச்சுக்காதம்மா இப்ப தான் ஒரு கதை எழுதி முழி பிதுங்கி நிக்கறேன், அதுக்குள்ள இன்னொரு கதையான்னு பயந்துட்டேன்:)

கீதா சாம்பசிவம் said...

தஸ்லிமா நஸ்ரீனைப் பத்திக் குறிப்பிடறார்னு நினைக்கிறேன், நம்ம "அறிந்த அந்நியர்". அவரோட விமரிசனத்தை விட எப்படிக் கதை எழுதலாம்னு உங்களுக்குப் பாடம் எடுத்திருக்கார்னு சொல்லலாம். :D

வேதா said...

@கீதா,
எனக்கும் அவர் தஸ்லிமா நஸ்ரினாவை பத்தி தான் சொல்றார்னு தோணியது, ஆனா நான் அவங்க கதைகளை படித்தது இல்லை, அதுவும் தவிர அவங்களோட என்னை போய் ஒப்பிட்டு கூட பார்க்க முடியாது என்பதால் தான் நான் அதை சொல்லவில்லை, நீங்க சொல்டீங்க:)

Anonymous said...

Well structured!!
Excellent Job

வேதா said...

@தூயா,'
ரொம்ப நன்றி:)

Delhi_tamilan said...

romba nalla muyarchi... keep it up..