Friday, November 10, 2006

அதாவது என்ன சொல்ல வரேன்னா...

இரண்டு நாட்களுக்கு முன் நானும் என் அண்ணியும் அவங்க நான்கு மாத கைக்குழந்தையுடன் மருத்தவமனை சென்றிருந்தோம். வீட்டை விட்டு மெயின் ரோட்டுக்கு வந்தால் என்றும் இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல், சமீப காலமாகவே இரு சக்கர வாகனங்கள் பெருக ஆரம்பித்துவிட்டன. நான் பள்ளியில் படிக்கும் போது பத்தாவது வந்தவுடன் தான் எனக்கு சொந்தமாக ஒரு சைக்கிளே வாங்கிக்கொடுத்தார்கள். இப்ப என்னடான்னா எங்கம்மா பாஷையில சொல்லனும்னா நண்டு சுண்டுங்கெல்லாம் கூட டிவிஸ்50 ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் இப்ப நடக்கற பழக்கமும் குறைந்துக் கொண்டே வருது, ஒரு வண்டி இருந்தாலே போதும் சும்மா பக்கத்து தெருவுக்கு போக கூட நடக்க தோணாது அந்த அளவுக்கு மோசமா போச்சு. குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டருக்குள்ள இருக்குற இடங்களுக்காவது நடந்துப்போகலாம் பெட்ரோலும் மிச்சம், நமக்கும் நல்ல பயிற்சி தான் இல்லையா?

அந்த நெரிசல்ல தப்பிச்சு ஒரு ஆட்டோ படிச்சு மருத்தவமனைக்கு போயிட்டோம். எங்க வீட்டிலிருந்து வண்டியில் போனால் சுமார் 10 நிமிடங்களில் போய்விடலாம் மருத்தவமனைக்கு, ஆனா நாங்க போய் சேர கிட்டத்தட்ட அரை மணி ஆச்சு. இந்த ஆட்டோ பிடிக்க ஒரு பெரிய சாமர்த்தியமே வேணுங்க. எனக்கு நிச்சயம் அந்த சாமர்த்தியம் கிடையாது, ஆட்டோ வாடகைக்கு பதிலா ஆட்டோ விலையையே சில பேர் சொல்லுவாங்க. இப்படித் தான் திரும்பி வரும் போது அதிசயமா எந்த சண்டையும் போடாம இது உண்மையாவே இவர் ஆட்டோ தானா அப்படின்னு அதிசயக்கிற வகையில நாங்க சொன்ன நியாயமான வாடகைக்கு ஒத்துக்கிட்டாரு.

சரி நம்ம நேரம் நல்லாயிருக்குன்னு நாங்களும் ஏறி உட்கார்ந்தோம், கொஞ்ச நேரம் தான் அதுக்குள்ள நம்ம ஆட்டோ டிரைவர் அவங்களுக்கே உரிய அந்த சர்க்கஸ் சாகசத்தை காட்ட ஆரம்பிச்சுட்டாரு. எங்களுக்கு முன்னாடி சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து வலதுப்பக்கம் இருந்த சாலைக்குள் திரும்பியது, நாங்களும் அப்படித்தான் போகணும், அந்த பேருந்து திரும்பறதுக்குள்ள நம்ம ஆட்டோகாரருக்கு அவசரம் அதை தாண்டிப் போக முயற்சித்தார். சென்னைல ஓடற ஆட்டோக்களை பத்தி ஒரு படத்துல விவேக் 'நாங்கெல்லாம் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுவோம், லெப்டுல கைய காமிச்சு,ரைட்டுல இண்டிகேட்டரை போட்டுட்டு ஸ்ட்ரைடா ஆட்டோவை வுடுவோம்' அப்படின்னு சொல்வாரு. அதை அன்னிக்கு எங்க ஆட்டோகாரர் எங்களுக்கு செயல்முறை விளக்கம் செஞ்சு காண்பிச்சார். அப்புறம் நான் திட்டினவுடனே வேகத்தை குறைச்சார். வேகமா போய் நாம் என்னத்த சாதிக்க போறோம்? இதை பத்தி தான் நண்பர் பாலாஜி அவர்களும் அவருடைய வலைப்பக்கதுல எழுதியிருக்கார்.

அவர் அங்கே சொல்லாத ஒரு விஷயம் சுடிதார் அணிந்து வண்டி ஓட்டும் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள். நாங்க அன்னிக்கு ஆட்டோல போகும் போது ஒரு இடத்துல போக்குவரத்து நெரிசல் காரணமா சிறிது நேரம் ஆட்டோ நின்றுக் கொண்டிருந்து. அப்போ திடீர்னு அடிச்ச காத்துல எங்க பக்கத்துல நின்றுக் கொண்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் துப்பட்டா வண்டியின் சக்கரத்தில் போய் மாட்டிக் கொண்டது. இதை அவர்கள் கவனிக்கவே இல்லை, பின் நான் பார்த்து சொன்னவுடன் துப்பட்டாவை எடுத்து முன்னால் முடிந்துக் கொண்டார்.

வண்டி ஓட்டுபவர்களும் சரி,பின்னால் அமர்ந்து செல்பவர்களும் சரி பெண்கள் இதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. துப்பட்டா அணிந்து வண்டியில் செல்லும் போது துப்பட்டாவை கழுத்தில் மாலையாக முன்பக்கம் வருமாறு அணிந்து அதையும் முடிந்துக் கொள்ள வேண்டும். இரு பக்கமும் 'பின்' செய்துக் கொள்பவர்கள் கூட அதை பறக்க விடாமல் முன் பக்கத்தில் கொண்டு வந்து முடிந்துக் கொள்ள வேண்டும். அதுவும் தவிர இப்படி செல்வதால் அவர்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை துப்பட்டா காற்றில் பறக்கும் போது ஒரு வேளை அவர்களை தாண்டிச் செல்லும் வண்டியில் மாட்டிக்கொண்டாலோ இல்லை வண்டி ஓட்டுபவரின் முகத்தில் போய் மறைத்தாலோ அது விபத்தில் தான் முடியும். உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை சமூகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று பராசக்தி வசனம் கேட்குதே:) எல்லாம் ஒரு சமூக அக்கறை தான் , அதுவும் தவிர நானும் பாதிக்கப்பட்டவள் தான்.

ஒரு முறை சைக்கிளில் போகும் போது அப்படித்தான் இரண்டு பக்கமும் துப்பட்டாவை பறக்கவிட்டுக் கொண்டு சென்றேன். என் துப்பட்டாவின் ஒரு முனை சக்கரத்தில் போய் மாட்டிக் கொண்டு பின்பு அதை கிழித்து தான் எடுக்க முடிந்தது. ஏதோ அன்று 'பின்' செய்யாமல் போனதால் என் கழுத்து தப்பித்தது. அன்றிலிருந்து யாராவது இப்படி துப்பட்டாவை பறக்கவிட்டுக் கொண்டு போனால் அவர்களிடம் எடுத்து சொல்வேன். சில பேர் கேட்பார்கள், சில பேர் தலையாட்டி விட்டு மீண்டும் அப்படியே போவார்கள். சரி இப்ப என்ன தான் சொல்ல வரேன்னு கேக்கறீங்களா? ஏதோ வண்டி ஓட்றவங்க சாக்கிரதையா இருந்துக்கோங்கன்னு சொல்றேன் அம்புட்டுத்தேன் :)

34 comments:

Syam said...

அவ்வ்வ்வ்வ்வ்....என்ன சொல்றது...தங்கச்சி எலக்சன்ல நிக்க போறயா சமூக அக்கறை 60 அடி கூந்தல விரிச்சு போட்டு ஆடுது... :-)

Syam said...

ஆனா ஆட்டோ அனுபவம் பத்தி கரெக்டா சொன்ன...நான் சென்னைல இருக்கும் போது ஊருக்கு போக ரயில் புடிக்க போகும் போது எல்லாம் வழக்கம் போல லேட் ஆகிடும்..ஆட்டோகார அண்ணாச்சி கிட்ட கொஞ்சம் சீக்கிரம் போங்க அப்படினு சொன்னா போதும்...சிக்னல்ல முன்னாடி நிக்கற PTC பஸ் பின்னாடி கேட் வழியா ஆட்டோ விட்டு முன்னாடி கேட் வழியா இறக்கி...தண்ணி லாரி பின்னாடி சக்கரத்துல பூந்து முன்னாடி சக்கரம் வழியா வெளில வந்து...நம்க்கு பாதி உசுரு போயி இருக்கும் ரயில்வே ஸ்டேசன்ல இறங்கும் போது :-)

மு.கார்த்திகேயன் said...

first comment? :-))

மு.கார்த்திகேயன் said...

//நண்டு சுண்டுங்கெல்லாம் கூட டிவிஸ்50 ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க//

ரொம்ப கரெக்ட் வேதா..

/ஆட்டோ வாடகைக்கு பதிலா ஆட்டோ விலையையே சில பேர் சொல்லுவாங்க. //
அட..நல்ல இருக்கே இந்த உவமை

மு.கார்த்திகேயன் said...

/துப்பட்டா காற்றில் பறக்கும் போது ஒரு வேளை அவர்களை தாண்டிச் செல்லும் வண்டியில் மாட்டிக்கொண்டாலோ இல்லை வண்டி ஓட்டுபவரின் முகத்தில் போய் மறைத்தாலோ அது விபத்தில் தான் முடியும்.//

அப்படி ஒரு கோர விபத்து ஒரு வருஷதுக்கு முன்னாடி சென்னையில நடந்தது வேதா.. ஆனா இன்னும் யாரும் பொறுப்பா நடந்துக்க மாட்டேங்கிறாங்க

மு.கார்த்திகேயன் said...

/என் துப்பட்டாவின் ஒரு முனை சக்கரத்தில் போய் மாட்டிக் கொண்டு பின்பு அதை கிழித்து தான் எடுக்க முடிந்தது//

ஓ.. "சில பேர் தலையாட்டி விட்டு மீண்டும் அப்படியே போவார்கள்" இதுல நீங்களும் ஒரு ஆள் தானே.. பட்ட பிறகு தானே நீங்களும் அடுத்தவங்களுக்கும் சொல்றீங்க.. தப்ப எடுத்துக்காதீங்க தோழியே.. நாம எல்லோரும் வருமுன் செய்றதை விட.. வந்தபின் தான் செய்றோம்.. அத சொல்ல வந்தேன்..

மு.கார்த்திகேயன் said...

இந்த பின்னூட்ட மழை போதுமா வேதா?

Bharani said...

நல்ல கருத்தாழமிக்க பதிவு. உங்களை மாதிரி நல்லவங்க இருக்கறதுனாலதான் சென்னையில இவ்ளோ மழையோ :)

Priya said...

நல்லா அட்வைஸ் பண்ணி இருக்கிங்க :) கண்டிப்பா ஃபாலோ பண்றோம் மேடம்..

சென்னைல ஆட்டோ ஓட்றவங்கலாம் சர்க்கஸ்ல இருக்க வேண்டியவங்க!

Arunkumar said...

vivek solradu sari thaan... bangalore-la auto kaaranunga innum mosam. veedu poi serra varaikum uyirukku gaurantee kedayaadu !!!

ambi said...

நல்ல பதிவு! பெங்க்ளுரிலும் போக்குவரத்து இதே நிலமை தான்!

//துப்பட்டா காற்றில் பறக்கும் போது ஒரு வேளை அவர்களை தாண்டிச் செல்லும் வண்டியில் மாட்டிக்கொண்டாலோ இல்லை வண்டி ஓட்டுபவரின் முகத்தில் போய் மறைத்தாலோ அது விபத்தில் தான் முடியும்//

அதுனால தான் இங்கே எல்லா பிகரும் ஜீன்ஸ் போட்டுக்கறாங்க. :)

ROTFL on syam comment.

கீதா சாம்பசிவம் said...

புடவை கட்டிட்டுப் போறவங்களும் புடவைத் தலைப்புலே ஜாக்கிரதையா இருக்கணும். அதுவும் நன்றாக இழுத்துச் சொருக்கிக்கணும். அதை விட்டுட்டீங்களே, மற்றபடி பயனுள்ள பதிவு.
@ச்யாம் என்ன, நம்ம வீட்டுப் பக்கமே காணோம், வேலை (வீட்டில்) ஜாஸ்தியா? :D

நாகை சிவா said...

//"அதாவது என்ன சொல்ல வரேன்னா..." //

புத்தி சொல்லுறாங்களாம்

போய்யா, சாரி போம்மா போய் புள்ளக் குட்டிகள படிக்க வைங்க.....

நாகை சிவா said...

அறிவுரை எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா பாருங்க, நாம் இத சொன்னா தோடா வந்துட்டாருடா XXXX அப்படினு ஒரு அலட்சிய பார்வை கொடுப்பாங்க பாருங்க.... அதுக்கு அப்புறம் நம்மளை நாமலே இது உனக்கு தேவையா அப்படினு நாமளே கேட்டுக் கொள்ளும் படி ஆயிடும்....

நாகை சிவா said...

ஆட்டோ அனுபவம் ரொம்ப நல்ல அனுபவங்க.... அதில் லாங் போன அனுபவம் இருக்கு.... சும்மா கட் அடிச்சு ஒரு சக்கரத்தில் எல்லாம் போவாங்க.... என்ன சாப்பிட்டு விட்டு உடனே ஆட்டோவில் போவது அவ்வளவு நல்லது கிடையாது.

அதில் ஒரு பெரிய கொடுமை என்னா, பிரேக்கை உடனே மிதித்தால் வண்டி நிக்காது, பறந்துடும். விட்டு விட்டு அடிச்சா தான் நிக்கும்....

வேதா said...

@ச்யாம்,
நமக்கும் சமூக அக்கறை இருக்குன்னு காமிச்சுக்க வேண்டாமா? அப்புறம் நாளைக்கு யாராவது நீ ப்ளாக்ல எழுதி என்னத்த சாதிச்சன்னு நாக்கு மேல பல்லு போட்டு கேட்றக்கூடாதில்ல:)

அட அட உங்க ஆட்டோ அனுபவம் நம்மள விட ஜூப்பராகீது:)

@கார்த்தி,
ஜஸ்ட்மிஸ்ஸு:) நம்ம அண்ணாத்தே தட்டிக்கிட்டு போய்டாரு:)

/இதுல நீங்களும் ஒரு ஆள் தானே.. பட்ட பிறகு தானே நீங்களும் அடுத்தவங்களுக்கும் சொல்றீங்க./

ஆனா எனக்கு யாருமே இதை பத்தி எடுத்து சொல்லலை அதான் நான் பட்ட பிறகு மத்தவங்களாவது சுதாரிச்சுக்கட்டும்னு இதை சொன்னேன்:)

/இந்த பின்னூட்ட மழை போதுமா வேதா? /
போதும் என்ற மனமே பொன்னானது. எனவே இந்த பதிவுக்கு இது போதும் மீதிய அடுத்த பதிவுக்கு வந்து போட்டுங்க தலைவரே:)

@பரணி,
ஆஹா இதுல ஏதும் உள்குத்து இல்லையே:)

@ப்ரியா,
நன்றி தோழியே, கண்டிப்பா நான் சொன்னதை பின்பற்றுங்க,மத்தவங்களுக்கும் சொல்லுங்க:)

Bharani said...

உள்குத்து எல்லாம் இல்லீங்கோ....உன்மைதான்

Ravi said...

Vedha, I really appreciate your samooga akkarai (as Syam put it). Duppatta parakka viduradhu, kaal mela kaal pottu bike pinnadi utkaruvadhu, pudavai mundhanaiyai wheel-a sikkira maadhiri vittu varuvadhu, eppo dhaan thirundhuvaangalo????

Balaji S Rajan said...

Veda,

Good one. Dupatta... Saree pallu...all of these should be taken care when travelling or riding a motorised vehicle. (Hope this covers mopeds too).

மு.கார்த்திகேயன் said...

//போதும் என்ற மனமே பொன்னானது. எனவே இந்த பதிவுக்கு இது போதும் மீதிய அடுத்த பதிவுக்கு வந்து போட்டுங்க தலைவரே//

வேதா.. நீங்க போதும்ங்கிற நல்ல மனசோட இருக்கிறதால இந்த பின்னூட்டம் பரிசு..

பொற்கொடி said...

idhuku than nan vandiye otradhu illai :) amama ilichavainu terinja nalla emathuvanga auto karanga.(ungla solarena enna?)

kaarthikeyanoda arasiyal vattathula irukinganalum ivlo pesradhu udambukku agadhu :)

வேதா said...

@அருண்,
அப்டியே அப்ப நம்ம சென்னை ஆட்டோவே மேலா?:)

@அம்பி,
/அதுனால தான் இங்கே எல்லா பிகரும் ஜீன்ஸ் போட்டுக்கறாங்க. :)/
அப்ப பிகருங்க பார்க்கற வேலையை தான் அங்க செய்றீங்க போல:)

@கீதா,
அது என்னன்னு தெரியலை, சுடிதார் போட்டுக்கிட்டு ஓட்டும்போது கவனக்குறைவா இருக்கறவங்க கூட புடவை கட்டிக்கிட்டி ஓட்டும் போது ரொம்ப கவனமா தான் ஓட்டுறாங்க, அதனால் தான் அதை பத்தி சொல்லலை:)
நாட்டாமைக்கு பழைய பஞ்சாயத்தே நிறைய இருக்கு அதான் அப்பப்ப எஸ்கேப் ஆகிடுவாரு:)

@சிவா,
/சாரி போம்மா போய் புள்ளக் குட்டிகள படிக்க வைங்க..... /
சரிங்கப்பு ஆனா யாராட புள்ளக்குட்டிங்கன்னு சொல்லவேயில்லை:)

எல்லாரையும் உங்கள மாதிரி நினைச்சுக்கிட்டா இப்படி தான் தோணும்:) எல்லாம் சொல்ற விதத்துல சொன்னா கேப்பாங்க:)

@பரணி,
ஹிஹி டாங்கஸு:)

வேதா said...

@ரவி,
அட நிஜமாவே நீங்க தானா?:) சரி நான் உங்கள புது பதிவு போட சொன்னா இங்கன வந்து கமெண்ட் போட்டு எஸ்கேப் ஆகலாம்னு ப்ளானா?:)

@பாலாஜி,
ஆமா நீங்க சொல்றதும் சரி தான்:) உங்க பதிவை படிச்சப்புறம் தான் இதை பத்தி எழுதணும்னு தோணிச்சு:)

@கார்த்தி,
தலைவரே, உங்க நல்ல மனசை என்னன்னு சொல்ல? எப்படின்னு சொல்ல?:)அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)

@பொற்கொடி,
மணமகளே மணமகளே வா வா:)
நீ பேசற்தை விட நான் ஒன்னும் பெரிசா பேசிடலம்மா:)

G3 said...

Aaha.. Nalla usefullaana informationa pottirukkeenga.. Nijaamaavae arasiyalla gudhikka pora effect vidareenga.. :)

Indha front knot idea nalla irukkae.. naan dhupatta pin pannalum backla knot poduven.. namma pora speedukku adutha 2 nimishathula andha knot avundhudum.. Ovvoru signalla nikkum bodhum knot podaradhey periya velaiya irukkum :)

கடல்கணேசன் said...

//எந்த சண்டையும் போடாம இது உண்மையாவே இவர் ஆட்டோ தானா அப்படின்னு அதிசயக்கிற வகையில நாங்க சொன்ன நியாயமான வாடகைக்கு ஒத்துக்கிட்டாரு//

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு.. நல்ல தகவல்கள் வேதா.

Anonymous said...

Nalla Post Veda.

- Hayagriva Dasan

கீதா சாம்பசிவம் said...

பார்த்துட்டேன், கவிதையும் நல்லா இருக்கு. 2-ம் பரிசு பெற்றதற்கு என்னோட வாழ்த்துக்கள். இதைச் சொல்லாமல் ரொம்பவே அடக்கமா இருக்கீங்க, அதுக்கும் வாழ்த்துக்கள்.

Ravi said...

Vedha, naam pudhu padhivu podalengarathukaga unga blog-a padikkala-nu artham illa. Btw, pudhu post pottachu and the topic of discussion should be interesting to u. So vandhu paarunga (this comment is just to reply to your comment, so you need not add this for public viewing. Thanks!)

Syam said...

அய் அய் நான் தான் பர்ஸ்ட்டா...ஜூப்பர்.... :-)

வேதா said...

@ஜி3,
/Nijaamaavae arasiyalla gudhikka pora effect vidareenga.. :) /

அதுக்கென்ன வாய்ப்பு கிடைச்சா அதையும் ஒரு கை பார்த்துட வேண்டியது தான்.:)

பார்த்து இனிமே நான் சொன்ன மாதிரி எச்சரிக்கையா வண்டி ஓட்டுங்க:)

@கணேசன்,
ரொம்ப நன்றி:)

@ஹயக்ரீவ தாசன்,
என் வலைப்பக்கத்தை விடாமல் படித்ததுக்கு நன்றி:)

@கீதா,
ரொம்ப நன்றிங்க:) முழு அறிவிப்பு வந்தவுடன் தான் இங்க சொல்லலாம்னு இருந்தேன்:)

@ச்யாம்,
நாட்டாமை,என்னிக்கும் நீங்க தான் பஸ்ட்டு:)

Sandai-Kozhi said...

நீங்கள் கூறியது எல்லாமே 100% சரி.ஒரு விபத்தில் சிக்கிய பின் மற்றவர்களுக்கு அறிவுரைத் தருவது தவறில்லை.பட்டால்தான் தெரியும்னு அப்போவே சொல்லியிருக்காங்க. நிஜமாகவே ஆட்டோல போய் நல்ல படியா வீடு வந்து சேர்ந்தா நாம பண்ணியப் புண்ணியம் அப்படி சொல்லிக் கொள்ளும்படியான நிலமை.--SKM

smiley said...

17 people died in the auto train crash? eppa thaan intha auto drivers porupaga pogirargaloo?
ippallam F! race anubavam auto vil chennail pogum pothu?
avalavu fast appuram eli mathiri entha gap kidaichalum athil pugundu viduvargal
good post:)

sruthi said...

hi,
ur flow is very nice and informative.romba nalla pathivu.
many times I used to think abt the girls with thupppatta in two wheelers. how careless they r?
sruthi

Anonymous said...
This comment has been removed by a blog administrator.