Tuesday, November 14, 2006

தயவு செய்து பள்ளிக்கு அனுப்புங்கள்..

அம்மாவிற்கு துணையாய்
வீடு பெருக்கி
குப்பைகளுடன் ஆசைகளையும்
அள்ளிக் கொட்டி,
தேய்த்த பாத்திரங்களை
கவிழ்த்து வைக்கிறாள்,
தலைக்கீழாய் போன விதியறியாமல்.
எட்டாக்கனியாய் ஏடுகள் இருக்க,
ஏற்றி விட ஒரு
ஏணிக்காய் அலைகிறாள்.
பாடப் புத்தகங்களை சுமக்கும்
நாளறியாமல்
நித்தமும் சுமக்கிறாள் தன் வீட்டின் சுமையை.
சீருடைக்காய் ஏங்கும் அவளிடம்
சாக்லேட்டை நீட்டினாள் எசமானி மகள்,
இனிய குழந்தைகள் தினம் என்று.

என்னுடைய சிறு வயது குழந்தைகள் தின நினைவுகள் எல்லாம் மிக அருமையாக, பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகள்,உரைகள் என பசுமையாக இருக்கிறது. ஆனால் பல குழந்தைகள் தங்கள் குழந்தைப்பருவத்தையே அனுபவிக்காமல் இருக்கிறார்கள் எனவறியும் போது மனம் கனக்கிறது. குழந்தைகளை தொழிலில் அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம், முற்றிலும் அதை ஒழிப்போம். பின் கொண்டாடுவோம் ஒரு அழகான குழந்தைகள் தினத்தை.

(இது ஒரு மீள் கவிதை போன வருடம் எழுதியது)
நான் என் கண்களில் கனவுகளையோ,
என் நெஞ்சில் ஆசைகளையோ,
சுமக்க விரும்பவில்லை,
என் முதுகில் புத்தகங்களை
சுமக்க விரும்புகிறேன்.
என்னை,
யாராவது தயவு செய்து
பள்ளிக்கு அனுப்புங்கள்.

29 comments:

Anonymous said...

@Veda,

Vellaikku sellum sirargalavathu paravailla sagoothariyee...Picchai yedukkum sirargalai kandaal......Its a great shame on any nation which has childrens as beggers.

- Hayagriva Dasan

மு.கார்த்திகேயன் said...

//சீருடைக்காய் ஏங்கும் அவளிடம்
சாக்லேட்டை நீட்டினாள் எசமானி மகள்,
இனிய குழந்தைகள் தினம் என்று//

அருமையான கவிதை தோழியே..

இன்னும் எத்தனையோ டீக்கடையில் கிளாஸ் கழுவும் சிறுவனும்,
வீடுகளில் பாத்திரம் கழுவும் சிஏறுமிகளௌம் இருக்கத்தான் செய்கிறார்கள் வேதா

இந்த தப்பை படித்தவர்களும் செய்கிறார்கள்..
படிக்காதவர்களும் செய்கிறார்கள்..

Sandai-Kozhi said...

கவிதைகள் அற்புதம்.Simple and Sweet.உங்கள் இனிய மனதிற்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள். உங்களுக்கு உங்கள் எண்ணங்களை அழகாக எடுத்துரைக்கும் திறமை அழகாக அமைந்துள்ளது.இந்த குழந்தைகள் அனைவருக்கும் நாம் நம்மால் முடிந்ததை செய்வது ஒன்றுதான் வழி.அரசாங்கம் இலவசக் கல்விக் கொடுத்தும் போக முடியாத சூழ்நிலை சில நேரம் இந்தக் குழந்தைகளுக்கு.சில நேரம் எல்லாம் கொடுத்தும் சொந்த முயற்சி என்ற ஒன்றும் இங்கு வேண்டும்.சர்ச்சைக்கு ஏற்ற subject.:)__SKM

Syam said...

அருமையான கவிதை வேதா...

போன வருடம் நீ எழுதின கவிதைக்கு இந்த வருடம் கைமேல் பலன் சிறுவர்களை வேலைக்கு வைக்க தடை சட்டம்...

Arunkumar said...

கவிதை ரொம்ப அருமை.

//
குழந்தைகளை தொழிலில் அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம், முற்றிலும் அதை ஒழிப்போம். பின் கொண்டாடுவோம் ஒரு அழகான குழந்தைகள் தினத்தை.
//

நியாயமான கேள்வி வேதா. அழுத்தமான ஒரு பதிவு !!

பொற்கொடி said...

mudhiyor palliku than anupanum ;)

kavidhai super vedha, nanum iniku en childrens day anubavam ellam asai potutu irunden :)

Bharani said...

//குழந்தைகளை தொழிலில் அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம், முற்றிலும் அதை ஒழிப்போம். பின் கொண்டாடுவோம் ஒரு அழகான குழந்தைகள் தினத்தை.
//....Romba correct-a sonnenga....Children's day annaki mattum nalla vaai kizhiya kuzhandai thozhilalar ozhipu pathi pesitu...aduku appuram vaayayaum, kaadhayaum moodikira govt irukara varaikum...kuzhandaigal dhinam kondaduradhula arthame illa

G3 said...

Unga meel kavidhai Superb!!! Chancae illa.

shree said...

wow! rendu poemume nachunu irukku. appada yeppoda indha kadhai yeludhi mudippeenganu wait pannittue irundhen - yenna panna ippolam periya blog potta padilkka mudiyaradhillai! :(

Priya said...

romba arumaya solli irukkinga. romba touching ayiduchu..

/ஆனால் பல குழந்தைகள் தங்கள் குழந்தைப்பருவத்தையே அனுபவிக்காமல் இருக்கிறார்கள் எனவறியும் போது மனம் கனக்கிறது.//
amam Veda. Nambalala mudinjadha seyyanum.

மணி ப்ரகாஷ் said...

@வேதா
வேண்டிய நல்ல பதிவு.

ஆம் வேதா,அடுத்த வருடத்திலாவது உங்களது பேனா பள்ளி சென்ற குழந்தையின் சீருடை விளையாடி அழுக்கானதை எழுதட்டும்...

நம்புவோம் நல்லது நடக்கட்டும்...

அருகாமையிலுள்ள
ஒரு குழந்தைக்கேனும் கல்வி தருவோம்..

மணி ப்ரகாஷ் said...

@வேதா
வேண்டிய நல்ல பதிவு.

ஆம் வேதா,அடுத்த வருடத்திலாவது உங்களது பேனா பள்ளி சென்ற குழந்தையின் சீருடை விளையாடி அழுக்கானதை எழுதட்டும்...

நம்புவோம் நல்லது நடக்கட்டும்...

அருகாமையிலுள்ள
ஒரு குழந்தைக்கேனும் கல்வி தருவோம்..

Anonymous said...

veda
Poem is simply good and touching...we shd do whatever we can do.....

Shankar

மணி ப்ரகாஷ் said...

@வேதா

கீழ் உள்ள வலைத்தளத்திற்கு செல்லவும்:

http://www.vazhai.org/contribution.asp

வேதா said...

@ஹயக்ரீவ தாசன்,
கையேந்தும் குழந்தைகள் இன்னும் கொடுமை தான் சகோதரரே:(

@கார்த்தி,
பொதுவாக இந்த மாதிரி படிக்க வேண்டிய வயதில் வேலைக்கு போகிறவர்கள் எல்லாம் படிக்க வசதியில்லாமல் தான் இப்படி செய்கிறார்கள். அவர்கள் வேலைக்கு போவதை நிறுத்திவிட்டால் சோற்றுக்கே வழியில்லை என்னும் குடும்பங்களும் உள்ளன, நம்மால் முடிந்தவரை நம் அக்கம்பக்கத்தில் அப்படி இருக்கும் குடும்பங்களுக்கு உதவி செய்யலாம்.

@skm,
/அரசாங்கம் இலவசக் கல்விக் கொடுத்தும் போக முடியாத சூழ்நிலை சில நேரம் இந்தக் குழந்தைகளுக்கு/
மிக சரியாக சொன்னீர்கள். இது ஒரு கசப்பான உண்மை,சர்ச்சைக்குரியதும் கூட ஆனால் சர்ச்சைகள் தொடர்ந்தால் முடிவில் ஒரு தெளிவும் கிடைக்கும் என நம்புவோமாக:)

@ச்யாம்,
தடை சட்டம் கொண்டு வருவதனால் பெரும் பயன் எதுவும் இல்லை,அதை விட அந்த குழந்தைகள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என ஆராய்ந்து அதற்கான தீர்வை தான் அரசாங்கம் செய்ய வேண்டும்.
நேற்று தான் ndtvயில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன், அதில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதில்லை, அதற்கு பதில் காண்ட்ராக்டரிடம் அந்த வேலையை ஒப்படைத்துவிடுவோம் என்று சொன்னார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், நேரடியாக அந்த குழந்தைகள் வேலைக்கு போவதில்லை,ஏனென்றால் காண்ட்ராக்டர்கள் மூலமாக வேலைகள் அவர்கள் வீடு தேடிச் செல்கின்றன. பின் இந்த சட்டம் வந்து என்ன பயன் கண்டோம்?

@அருண்குமார்,
நன்றி, என் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கேள்வியின் பயன் தான் இந்த பதிவு:)

வேதா said...

@பொற்கொடி,
/mudhiyor palliku than anupanum ;)/
உன்னை தான? அனுப்பிட்டா போச்சு:)
பாராட்டுக்கு நன்றி:)

@பரணி,
ஆமா இதற்கான தீர்வு என்று வருமோ?

@ஜி3,
நன்றி:)

@ப்ரியா,
ஆமா ப்ரியா, நம்மாள பெரிசா எதுவும் முடியலேன்னாலும் படிப்புக்கு முடிந்தவரை உதவலாம், சிறு துளி பெரு வெள்ளம் அல்லவா?:)

@ப்ரகாஷ்,
/உங்களது பேனா பள்ளி சென்ற குழந்தையின் சீருடை விளையாடி அழுக்கானதை எழுதட்டும்.../
நானும் அதையே வேண்டுகிறேன்:)
நீங்க சொன்ன இணையதளம் சென்று படித்தேன், அதை பற்றி முன்பே ஆனந்த விகடனில் படித்திருக்கிறேன், நன்றி. என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன்.

@ஷங்கர்,
ரொம்ப நன்றி:) உங்களால் முடிந்ததை கண்டிப்பாக செய்யலாம்.

நாகை சிவா said...

//"தயவு செய்து பள்ளிக்கு அனுப்புங்கள்.." //

"தயவு செய்து பள்ளிக்கு செல்லுங்கள்"

Anonymous said...

நான் என் கண்களில் கனவுகளையோ,
என் நெஞ்சில் ஆசைகளையோ,
சுமக்க விரும்பவில்லை,
என் முதுகில் புத்தகங்களை
சுமக்க விரும்புகிறேன்.
என்னை,
யாராவது தயவு செய்து
பள்ளிக்கு அனுப்புங்கள்.

அருமையான கவிதை

Ravi said...

hmmm .... ayyo veda .. neenga dhaan multiple personality'nu paartha ..en pear'la yaaro oru blog site arambichu .. unga post'ku comment adikaraanga ..

adhuvum en blog policy .. oppsite'a .. romba decent aa comments podaraanga ..

enna nadakuthu intha naatula ..

seri seri .. ippo edhu en original commentu ...

..edhuku thaan paeriyavanga paecha kekanum nu sollarathu .. ippo varutha pattu enna use .. seri seri .. enna'la mundija alavu try pannarane .. illati namma porkodi'oda .. senthu .. mudiyor kalvi'la padinga .. hmmm
ha ha ha !!!

.. hmm .. this is one of my life objective that i wish to do .. in this life time .. engayo .. irukara .. pasangala padika vekkaratha vida .. namma suthi irukaravangaluku .. antha udavi pannarathu much better ..

Usha said...

what to say? India-ladhan idhellam nadakkum, where parents themselves would sell their kids or send them to beg..

indianangel said...

vaazhthukkal usha unga kavidhaikku rendavadhu parisu kuduthurukaangale thamizhsangathula! romba happy!:)

மணி ப்ரகாஷ் said...

@வேதா

//என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன்//

நன்றி வேதா.

வேதா said...

@சிவா,
என்ன சொல்றீங்க?

@ஷ்ரீ,
ரொம்ப நன்றி:)

@காண்டீபன்,
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி:) இப்பொழுது தான் உங்கள் இலவசம் கவிதை படித்தேன், சுவைத்தேன்,மகிழ்ந்தேன்:)

@ரவி,
ஹாஹா அவர் போலி இல்லை நிஜம்:) இன்னும் சொல்லப்போனால் என் வலைப்பக்கம் ஆரம்பித்த முதலே தொடர்ந்து படித்து அவ்வப்போது பின்னூட்டமிடுபவர். உங்க முதல் பின்னூட்டத்தை பார்த்தவுடன் எனக்கும் குழப்பம் ஏற்பட்டது,ஆனா நீங்க எழுதற்துக்கும் அவர் எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு அதை வைத்து இப்ப கண்டுக்கொள்கிறேன்:)

this is one of my life objective that i wish to do .. in this life time .. engayo .. irukara .. pasangala padika vekkaratha vida .. namma suthi irukaravangaluku .. antha udavi pannarathu much better ..
கண்டிப்பா செய்ய வேண்டியது தான் ரவி வாழ்த்துக்கள்:)

@உஷா,
ஆமா அது தான் இன்னும் கொடுமை:(
இந்தியாவில் தான் அதிக குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்.

@ப்ரகாஷ்,
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நான் என் கருத்துகளை தான் தெரிவித்துள்ளேன்,நீங்க உங்க வலைப்பக்கத்துல அந்த இயக்கத்தை பற்றிக் கூறி படிப்பவர்கள் உதவி செய்ய ஒரு வழி காண்பித்துள்ளீர்கள்:)

@ப்ரசன்னா,
நான் சொல்றதுக்குள்ள நீங்க பார்த்துட்டீங்களா? நன்றி:)

கடல்கணேசன் said...

//என் முதுகில் புத்தகங்களை
சுமக்க விரும்புகிறேன்.
என்னை,
யாராவது தயவு செய்து
பள்ளிக்கு அனுப்புங்கள். //

அழகு வரிகள் வேதா.. வேதனையை, ஏக்கத்தை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள்..

//குழந்தைகளை தொழிலில் அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம், முற்றிலும் அதை ஒழிப்போம். பின் கொண்டாடுவோம் ஒரு அழகான குழந்தைகள் தினத்தை.//

உங்களது எண்ணம் உயர்ந்தது.. அதை வெளிப்படுத்திய விதம் மிகவும் அருமை.. கட்டுரை, கவிதை இரண்டுமே மறக்க முடியாமல் போகும் அளவுக்கு பதிய வைத்து விட்டீர்கள் வேதா..

வேதா said...

@கணேசன்,
உயர்வான எண்ணங்கள் எல்லாம் உங்க மாதிரி நட்பு வட்டத்தினால் கிடைத்தது தான்:) நன்றி உங்கள் பாராட்டுக்கு:)

Balaji S Rajan said...

Veda,

I was unable to read your posts for few days. My computer was not loading your pages. Yenna ... I do not know why my PC is angry with you and your posts. LOL... Waiting with patience, I could see them today. Thanks for the wonderful poems... Oh... those few lines could say the child's mind. Wonderful. I am glad that the Government has done something and let us all try to achieve it.

வேதா said...

@பாலாஜி,
என் வார்ப்புருவில்(template) ஏதாவது பிரச்னையா என்று தெரியவில்லை. அம்பியால் கூட என் பதிவுகளை பார்க்கமுடியவில்லை என்று சொன்னார். நீங்க சொன்ன மாதிரி அரசாங்கம் திட்டம் தான் போட்டு இருக்காங்க, அதை செயல்படுத்துவது நம் கையில் தான் உள்ளது. நன்றி:)

கீதா சாம்பசிவம் said...

இதைப் பத்தி நான் நிறைய எழுதி இருக்கேன் பின்னூட்டமா. அதுக்காக என்னைக் கேலியும் செய்திருக்காங்க. ஆனால் நாம நினைச்சா மட்டும் முடியாது. அந்தப் பெற்றோரும் நினைக்கணுமே. அதான் நான் சொல்றது.

கீதா சாம்பசிவம் said...

உங்க யாரோட ப்ளாகிலேயும் இல்லை. வேறே ஒருத்தரோட ப்ளாகிலே எழுதினேன்.