Friday, November 24, 2006

ஏன்?..

எங்கள் வீட்டில் வேலை செய்பவரின் கணவர் சிறிது நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். நாலு வீட்டில் பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து உடல் நொந்து அவர் மனைவி கொண்டு வரும் பணத்தை அடித்துப் பிடுங்கிக் கொண்டு போகும் அக்மார்க் குடிமகன். வயதானவரும் கூட. ரொம்ப வருடம் தொடர்ந்து குடித்து வந்ததால் குடல் வெந்து சில மாதங்கள் முன் மருத்துவமனையில் படுத்துக் கிடந்தார். அவர் நிலையைப் பற்றி எங்களிடம் முறையிட்ட வேலைக்கார அம்மாளிடம் கொஞ்சம் பணமும் அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற எங்களுக்கு தெரிந்த மருத்தவரிடம் அனுப்பி வைத்தோம்.

மருத்தவரோ நம்ம குடிமகன் சிகிச்சைக்கு பின் குடிக்காமல் இருப்பாரென உறுதியுடன் கூறினால் தான் சிகிச்சை தர சிபாரிசு பண்ண முடியும் என்று கூறி விட்டார். இதனால் தன் காது தோடுகளை அடமானம் வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் வேலைக்காரம்மாள். அவர் கணவர் சிறிது நாட்களே அங்கு இருந்து விட்டு தன்னால் இனி குடிக்காமல் இருக்க முடியாது என வீட்டிற்கு வந்து விட்டார். சிகிச்சைக்கு மறுத்து விட்டதனால் வீட்டில் உடல் நலமின்றி மிகவும் கஷ்டப்பட்டார். அவரை கவனிக்கவும் முடியாமல், வேலைக்கும் விடுப்பு எடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட ஆயா எங்களிடம் புலம்பித் தள்ளினார். 'இவரு இப்படி கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்தற்துக்கு ஒரேடியா போய் சேர்ந்து விடலாம்' என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.

20 நாட்களுக்கு முன் ஒரு நாள் கணவருக்கு உடம்பு ரொம்ப மோசமென்று 2 நாட்கள் வேலைக்கு வரவில்லை, திடீரென்று ஒரு நாள் மாலை வந்து இன்னும் எவ்ளோ நாளைக்கு அது தாங்கும்னு தெரியலை, எனக்கும் வீட்டுல இருக்க பிடிக்கலை, நாளையிலிருந்து வேலைக்கு வரேன் என்று சொல்லிவிட்டு போனார். அப்போ நாங்க கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினோம். அவங்க பணத்தை வாங்கும்போதே கை தவறியது, அய்யோ கை தவறிடுச்சும்மா என்று சொல்லிட்டு அதை வாங்கிக்கிட்டு போனாங்க. அன்னிக்கு இரவு அவங்க கணவர் இறந்துட்டாரு, நாங்க கொடுத்த பணமெல்லாம் அந்த கடைசி செலவுக்கு தான் உபயோகம் ஆச்சு.

ஒரு விதத்தில் உபயோகமில்லாத கணவர் இறந்தது நிம்மதியாயிருந்தாலும் அடுத்தடுத்து இந்த பெண்களுக்கு தான் எத்தனை ப்ரசனை. என்ன தான் சமுதாயம் மாறினாலும், மக்கள் படித்திருந்தாலும் பல தேவையில்லாத நம்பிக்கைகள் நம்மை இருள் போல் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன. கொஞ்சம் கூட மனசாட்சியேயில்லாமல் மனைவி கொண்டு வரும் பணத்தை பிடுங்கிக் குடித்து சீரழித்த அருமை கணவருக்காக இந்த மனைவி இழந்தது நிறைய, அதான் நம்ம சமூகத்துல எவ்ளோ மாறினாலும் இன்னும் பரவலா காணப்படுகிற விதவை என்கிற பட்டம். நேற்று எங்க வீட்டுக்கு 16 நாள் காரியம் முடிந்து விட்டதால் தான் இனி வேலைக்கு வரலாமா என்று கேட்க வந்திருந்தார் வேலைக்காரம்மாள். வீட்டு வேலை செய்பவர் என்றாலும் அதற்கான அறிகுறிகள் எதுவுமின்றி அழகா சுத்தமாக உடையணிந்து பூவும் பொட்டுமாக வலம் வந்தவர் இப்போ வெற்று நெற்றியுடன்.

இதை விட கொடுமை கூட நடந்தது. சமீபத்தில் கணவரை இழந்தவர் என்பதால் அவர் கண்ணில் படக்கூடாது,எனவே 2,3 மாதங்களுக்கு அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள் சில வீட்டினர், எங்கள் குடியிருப்பிலும் அவர் 2,3 வீட்டில் வேலை செய்கிறார். எனவே குடியிருப்பில் அவர் நுழைவதற்கே(அதாவது 1 மாதத்திற்குள்) அனுமதி கேட்க வேண்டாமா என்று சிலர் கேட்டனர். இதெல்லாம் கேட்ட நான் அதிர்ச்சி அடைந்தேன். நம் வீட்டினுள் யார் நுழையலாம் என நாம் தான் முடிவு செய்ய வேண்டும் மற்றவர்கள் அல்ல, தேவையில்லாத நம்பிக்கைகளை தக்க வைப்பதற்காக ஒருவரின் வயிற்றில் அடிக்கும் பாவத்தை நாம் சுமக்க வேண்டாம் என்று என் அம்மாவிடம் கூறினேன், என் அம்மாவும் அதை தான் சொன்னார்.

ஒரு வழியாக அடுத்த மாத ஆரம்பத்திலிருந்து வரச்சொல்லி அனுப்பினோம். என் மனதில் அலைப்பாய்ந்துக் கொண்டிருக்கும் கேள்வி இது தான், ஏன் கணவரை இழந்த பெண் எல்லாவற்றையும் இழக்க வேண்டும்? உ.தா: பூ,பொட்டு,சுமங்கலி என்ற பெயர், நற்காரியங்களில் முன்னே வருவது, தாம்பூலம் மறுக்கப்படுவது, ஒரு வருடத்திற்கு மற்றவர் வீட்டு விசேஷங்களுக்கு போகாமல் இருப்பது(இது இப்போதும் நடக்கிறது), ஒட்டுமொத்தத்தில் தன் தனித்துவத்தை இழந்து இன்னாரின் விதவை என்றறியப்படுவது. தற்போது காலம் மாறி வருகிறது என்றெல்லாம் சொன்னாலும் பல இடங்களில் இப்படிப்பட்ட எண்ண்ங்கள் வேரூன்றி இருக்கின்றன,முக்கியமாக படித்தவர்கள் மத்தியில்.


தான் உண்டு தன் வேலை உண்டு என்று எந்த பிரச்னையும் தராமல் எங்களிடம் நற்பெயர் வாங்கிய வேலைக்காரம்மாளுக்கு திடிரென்று இவ்வளவு சோதனைகள்(வேலைக்கு போவது உட்பட) கணவர் இறந்து விட்டாரென்ற ஒரே காரணத்துக்காக, இதுவே மனைவி இழந்த கணவர்களுக்கு சுமூகத்தில் இவ்வளவு பிரச்னைகள் வருமா?

31 comments:

Anonymous said...

வேதாவின்
வேதனையை
வேடிக்கையாக எடுத்துவிடகூடாது!
இப்படித்தான் இருக்கு
இந்த உலகம்
இக்கால கட்டத்தில்!
இதை உடைத்தெரிய
இன்னும் காலம்
இருக்கிறதா?
அந்த மனுஷன்
அவளுக்கு கொடுத்திருந்தது
அந்த பூவும் பொட்டும்தான்
அதையும் பிடிங்கிக்கொண்டான்
ஆண்டவன்!
ஆதிகாலம் முதல்
வேறூன்றிவிட்ட
வேதனையை
வேதா என்ன, எவராலும் இனி
வேறருக்க முடியாது!
இரக்கப்படலாம் ஆனால்
இல்லாமல் செய்யமுடியாது!
மண்ணாய் போன
மண்வாசனை இதெல்லாம்
இதுபோன்ற
மூடநம்பிக்கையையாவது
மூடிவிட்டால்
வளமான் இந்தியா
வளர்ந்துவிடாதா என்று
இந்திய மண்ணில் பிறந்த
இவனுக்கு ஆசையாயிருக்கு!
வேதாவின்
வேதனைக்கு
விரைவில்
விடியல் தெரிய
வேண்டிக்கொள்கிறேன்
எல்லாம் வல்ல இறைவனை!

ambi said...

சிந்திக்க வேண்டிய விஷயம். பூ, பொட்டு எல்லாம் ஒரு பெண் பிறப்பிலிருந்தே வருகிறது. so no need to remove those things.

யப்பா! கதையல்ல நிஜம்! பார்த்த Effect. நானும் என் பங்குக்கு மூக்கு சிந்திக்கறேன், அந்த programla எல்லாரும் கடைசில மூக்கு சிந்துவாங்க, அத தான் சொன்னேன்!(innocently)

Balaji S Rajan said...

வேதா,

உங்கள் சிந்தனை அருமை. நான் ஒரு இளம் விதவையின் மகனாக சிறிய வயதிலிருந்து வளர்ந்ததினால் அவர்களின் கஷ்டங்களை அறிவேன். உங்களைப் போல பெண்கள் வீட்டிற்கு ஒருவர் இருக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு விதவைகள் மனம் நோகுமாறு கூறுபவர்கள் இவ்வுலகில் வ்யாக்யனம் வேறு பேசுவார்கள். அந்த அம்மையாரின் நிலையை நினைத்து வேதனை படுகிறேன். மக்கள் நடந்து கொள்ளும் முறையை நினைத்து வெட்கி தலை குனிகிறேன்.

Ravi said...

Well said Veda. In those days, it was understandable to give a special identity to women (for many reasons) but in today's world removing poo, pottu is unwarranted. Yes, it is definitely disheartening to see such things. Though I support traditions in many ways, I would love to see ill-treatments as a result of blind faith to go. Nice post again Veda. Romba feeling aayiduchu :(

Syam said...

அந்த அம்மாவோட கஷ்டத்த நினைச்சா வேதனயா தான் இருக்கு...ஆனா மெத்த படிச்சிட்டு சென்னைல இருக்கவங்களே இப்படி இருக்கும் போது ஆண்டவா கலாம் கணவு நிறைவேறுமா....

Syam said...

இது தமாசுக்காக சொல்லல இருந்தாலும் எனக்கு தோனுச்சு...அவனுக எல்லாம் நிஜமாவே படிச்சவனுகளா இல்ல படிச்ச மாதிரி நடிச்சுட்டு இருகானுவளா....

கடல்கணேசன் said...

சென்னையில் இன்னும் இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரிய வரும்போது வருத்தமாக இருக்கிறது.

காலம் மாறிவிட்டது என்று தான் நம்பிக் கொண்டிருந்தேன். இல்லையென்று உணர வைத்துள்ளது உங்கள் பதிவு.

அடுத்த தலைமுறையிலாவது இது இருக்காது என நம்பலாமா?.

மணி ப்ரகாஷ் said...

வேதா,

கணவனை இழந்த பெண்ண அடுத்தவங்க வீட்டுல இல்ல அவங்க வீட்டுலே அப்படித்தான் நடத்தாங்கறங்க...

எதாவது ஒரு மங்களகரமான விசேசம் என்றால், அது புகுந்த வீடா இருந்தாலும்,பிறந்த வீடா இருந்தாலும் சரி இப்படிதான் ...

நீ முன்னாடி வராத, நீ எல்லாம் இத செய்ய கூடாது இன்னமும் சில....

கலாச்சாரம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது
எனக்குத் தேவை யெனில்
உடையிலும்,உள்ளத்திலும்,உடலிலும் மனத்திலும்...

கீதா சாம்பசிவம் said...

ரொம்பவே நல்ல பதிவு வேதா, உண்மையிலேயே இந்த விஷயத்தில் தான் பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்று நான் சொல்லுவேன். இதைப் பெண்கள் தான் மாற்ற வேண்டும். வேறு யாராலும் முடியாது. எல்லாப் பெண்களும் இதற்கெல்லாம் போராடாமல் வேண்டாததுக்கெல்லாம் போராடறாங்களே.

Anonymous said...

Veda Sagothariyee,

Pacha marathula aani adicha maathiri yezhuthi irukeenga.....unnmaya sollanumnaa....intha blog conceptaa urupidiyaa use pannara sila peerulla neengalum oruthar.Sinthanaiyai thoondum ungal yezhuthukkal thodarattum.

>>சமீபத்தில் கணவரை இழந்தவர் என்பதால் அவர் கண்ணில் படக்கூடாது,எனவே 2,3 மாதங்களுக்கு அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள் சில வீட்டினர்.
>>

Itharkku peyar thaan ventha punnil veel paaichuvathu !

For stopping all such non sense,we should first educate our parents...

A good post again.

Thanks for your time.

- Hayagriva Dasan

வேதா said...

தாமதமாக பதில் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.

@ப்ரேம்,
உங்க கவிதை மூலமா அழகா சொல்டீங்க நன்றி, நாம் எல்லாரும் சேர்ந்து வேண்டுவோம் இனி இது போல் அவலங்கள் நடக்காமல் இருக்க.

@அம்பி,
கருத்துக்கு நன்றி,இது கதையல்ல நிஜமே தான்:)

@பாலாஜி,
/விதவைகள் மனம் நோகுமாறு கூறுபவர்கள் இவ்வுலகில் வ்யாக்யனம் வேறு பேசுவார்கள்./
அது தான் இன்னும் மனவேதனையை அதிகரிக்கிறது.

@ரவி,
/I would love to see ill-treatments as a result of blind faith to go./
அது தான் என் ஆசையும் கூட, எந்த காலக்கட்டத்திலும் தவறு தவறு தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ரவி.

@ச்யாம்,
/எல்லாம் நிஜமாவே படிச்சவனுகளா இல்ல படிச்ச மாதிரி நடிச்சுட்டு இருகானுவளா.... /
சரியா சொன்னீங்க,ஆனா இதற்கு தீர்வு படிப்பு மட்டுமல்ல, நம் மன மாற்றமும் அதனால் விளையக்கூடிய சமூக மாற்றமும் தான்.

@கணேசன்,
சென்னை மட்டும் என்ன விதிவிலக்கா? இடத்தில அல்ல வித்தியாசம் மனதில் தான் இருக்கின்றது.

/அடுத்த தலைமுறையிலாவது இது இருக்காது என நம்பலாமா?./

அது நம் கையில் தான் இருக்கிறது
நண்பரே.

@ப்ரகாஷ்,
/அவங்க வீட்டுலே அப்படித்தான் நடத்தாங்கறங்க.../

ஆமாம் நண்பரே எங்கே இது போன்ற பழக்கங்களை நாம் கைவிட்டால் சமூகத்தில் நமக்கு இடமில்லாமல் போய் விடுமோ அடுத்தவர் நம்மை என்ன சொல்வாரோ என்ற அர்த்தமற்ற பயத்தினால் விளைகின்ற நச்சுபயிர் இது.

@கீதா,
பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை அப்படி பெண்களையே சொல்லவைக்கும் அளவுக்கு காலங்காலமாக பெண்ணினம் மூளை சலவை செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதிலிருந்து வெளிப்பட்டு வருவதும் பெண்கள் கையில் தான் உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்கிறேன்.

@ஹயக்ரீவ தாசன்,
/.Sinthanaiyai thoondum ungal yezhuthukkal thodarattum./
நன்றி சகோதரரே தங்களை போன்றவர்களின் ஆதரவு என்றும் தேவை என் எழுத்துக்களுக்கு:)

Usha said...

hmm..yeah, has made me think a lot of times too. Society shd change..

Priya said...

ரொம்ப பரிதாபமான விஷயம் வேதா. இதெல்லாம் என்னிக்கு தான் மாறுமோ. படிச்சவங்க, படிக்காதவங்க எல்லார் கிட்டயும் இந்த மாதிரி மூட நம்பிக்கைகள் இப்பவும் இருக்கறது அவமானப் பட வேண்டிய விஷயம்.

Sandai-Kozhi said...

சில நேரங்களில் சில மனிதர்கள் எப்படி சிந்திப்பார்கள் என கண்டுக் கொள்வது மிகக் கடினம்.நாட்டில் படிப்பு,நாகரீகம் ஏற ஏற மூட நம்பிக்கைகளும் ஏறிக் கொண்டு உள்ளன.சில நேரம்,விதவை என சுட்டிக் காட்டுவதும்,அவர் பிழைப்பில் மண் போடுவதும்,அவரைத் தீண்டத்தகாதவரைப் போல நடத்துவதும் பெண்களே.வீட்டில் பெரியவர்கள் என்ற பெயரிலிருக்கும் விதவைகளே மற்றொரு விதவையைப் தவறாகப் பேசுவதுக் கேட்டால் சில நேரம் அவ்வளவு மனசு வருந்தும்.
பேச ஆரம்பித்தால் முடிவு இல்லாமல் திட்டத் தோன்றும் subject/topic is this.Iam happy that atleast you are able to support that lady in her distress.--SKM

Ravi said...

same thing hpnd here too .. //எங்கள் வீட்டில் வேலை செய்பவரின் கணவர் சிறிது நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.//

.. that too b'coz of the same reasons .. neither that man never understood how she slogged to manage for a days food .. neither he understood the luv that she had ..

.. she used to talk abt him all the time .. nut now .. she doesnt want to do that .. not that he is no more .. but she doesnt want to get emotional ..

... probably veda highlighted the way the society respects such ppl .. me got to highlight the responsiblities of her husband .. and the way he failed to do that ..

.. sad that .. its no one here to meet her expectations now .. neither she wont accept the same .. if its not from her so called husband .. !!!

..after all every girl expects out of their other half .. !!

.. gud post again .. veda .. but adikadi ippdi moolaya kasaka vekkatheenga .. evalo dhaan try pannalum ungaluku padmabooshan virdhu ellam kuduka maataanga !! .. na na .. kuduka vidamaatom !!

ha ha ha !!!

Deekshanya said...

Nalla post! arumaiyana sinthanai..

Anonymous said...

nice post veda....

onney onnu, yaaru sonna
'widow pooovum, pootum vaika kooodaaadhunu? yaarum endha rule'um podala, but namma makkaley appdi thaanu oru vattathukulla live pannuraaanga....enna seiradhu?
(those days, udan kattai yeruradhum irrundhadhu, adha y not following?)

//அவர் கண்ணில் படக்கூடாது,எனவே 2,3 மாதங்களுக்கு அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள் சில வீட்டினர்//
btw, 21st century'laium peoples following these? romba kastam

Bharani said...

சிந்திக்க வேண்டிய பதிவு. மக்கள் மனசு மாறினாத்தான் இந்த கேள்விக்கெல்லாம் விடை கிடைக்குன்னு தோனுது.

யாராச்சும் ஆரம்பிப்பாங்கன்னு விட்டுடாம நம்மால முடிஞ்ச விஷயத்துல இருந்து ஆரம்பிச்சோம்னா மாற்றம் வரலாம்.

மணி ப்ரகாஷ் said...

//தேவையில்லாத நம்பிக்கைகளை தக்க வைப்பதற்காக ஒருவரின் வயிற்றில் அடிக்கும் பாவத்தை நாம் சுமக்க வேண்டாம் என்று என் அம்மாவிடம் கூறினேன், என் அம்மாவும் அதை தான் சொன்னார்//

வேதா, எனது முதல் பின்னுட்டத்தில் உங்களை தட்டி கொடுக்க மறந்துட்டேன்...

good veetha.. மத்தவங்க செய்யாததை சுட்டி காட்டிட்டு நம ஒன்னும் செய்யாமல் இருந்த..அத விட கொடுமையான விசயம் வேற எதுவும் கிடையாது..

I Appreciate your wrk.

வேதா said...

@உஷா,
நாம் மாறினால் சமூகமும் மாறிவிடும் ஆனால் மாற்றம் வர சிறிது காலம் ஆகும் அவ்வளவு தான்.

@ப்ரியா,
கண்டிப்பா அவமானப்படவேண்டிய விஷயம்,நம்மால் முடிந்த வரை இதை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

@skm,
/பேச ஆரம்பித்தால் முடிவு இல்லாமல் திட்டத் தோன்றும் subject/topic is this./
ஆமாம் இந்த தலைப்பில் நாம் பேச ஆரம்பித்தால் பின் அதற்கென்று தனியாக ஒரு வலைப்பக்கமே திறக்க வேண்டும்.

@ரவி,
நன்றி ரவி எனக்கு பத்மபூஷண் எல்லாம் வேண்டாம்,இதை படிப்பவர்கள் யாராவது மனம் மாறினால் சரி(ஹிஹி பாரத ரத்னா கிடைச்சா போதும்):)

வேதா said...

@தீட்சண்யா,
நன்றி தோழியே முதல் வருகைக்கும் சேர்த்து:)

@ gops(md)
/but namma makkaley appdi thaanu oru vattathukulla live pannuraaanga....enna seiradhu?/
நாம மாற முயற்சிக்கலாம், நம் கண் முன் இப்படி ஏதாவது நடக்கும்போது அது தவறு என்று எடுத்துரைக்கலாம்

@பரணி,
/நம்மால முடிஞ்ச விஷயத்துல இருந்து ஆரம்பிச்சோம்னா மாற்றம் வரலாம். /
ரொம்ப சரியா சொன்னீங்க பரணி,இந்த பதிவுடைய நோக்கமே அது தான்.

@ப்ரகாஷ்,
நன்றி தோழரே, மாற்றம் உடனே கொண்டு வர முடியவில்லையென்றாலும் நாம் முயற்சிப்பதில் தவறில்லையே.

Known Stranger said...

hi VEDA - I noticed you and some of your friends in blog world have a great affinity with tamil - I am searching for tamil urrai for some of the sangam literature in soft copy - could you check with your friends if you can manage some of these - if you can do share with me. I am interested to spend some time trying to read sanga illakiyam - while studying school didnt try learning much beyond the syllabus.

1. Manimegalai,
2.Civaka Cintamani
3.Valayaapathi 4.Kundalakesi.

atleast i know the story of silapathikaram but have no clue what all these other iymperu kappiyam talks about.

Could you be able to help with some e soft copies? if not do you know who has written porullurai for these - like Dr. Karunanidhi has written for thollkapiyam - if you know any hard copy book form do let me know with publisher will try to buy them

மு.கார்த்திகேயன் said...

வேதா, ஒரு முறை சில பேர் கலைஞரிடம் "பாருங்கள் வேதனையை.. விதவை என்னும் சொல்லில் கூட பொட்டு (புள்ளி) இல்லையே" என்று வேதனை பட்டிருக்கின்றனர். ஆனால் அவரோ "விதவை என்று ஏன் சொல்கிறீர்கள். கைம்பெண் என்று சொல்லுங்கள். இரண்டு பொட்டுக்கள் இருக்கிறதே" என்றாராம்.

வேதா, இது ஒரு கை ஓசை அல்ல.. சமுதாயமே குரல் கொடுத்து எழவேண்டும்.. இன்னும் எத்தனை பேர் வந்தாலும் இதையெல்லாம் தீர்க்க வழி கிடையாது போல..சே..

Anonymous said...

ஷெம Blog வேதா

Syam said...

வேதா, போதும்மா போதும் தேவையான அளவுக்கு சிந்திச்சாச்சு...பீலும் பண்ணியாச்சு...வேற போஸ்ட் போடுறது :-)

Anonymous said...

@கார்த்திக்,
தீர்க்க வழியில்லை என்று சொல்வதை விட நாம் அதற்கான முயற்சியில் இறங்கலாம் கார்த்தி,சிறு துளி பெரு வெள்ளம் அல்லவா.

@கிட்டு,
டாங்கஸு:)

@ச்யாம்,
சரி சரி புரியுது,நான் என்ன உங்கள மாதிரி செஞ்சுரி அடிக்கவா வெயிட் பண்றேன்,அட யோசிக்க வுடுங்கப்பா:)

வேதா said...

அட சே நான் பதில் சொன்னதை இந்த பாழாப்போன ப்ளாகர் அனானி கமெண்டா போட்டுடுச்சு:)

Anonymous said...

well said veda,
இந்த கொடுமை வித்வைகளுக்கு மட்டும் கிடையாது. விவாகரத்தானவர்களுக்கும் தான். காலம் மாறிவிட்டது ன்னு சொல்றது எல்லாம் சும்மா. படித்து நல்ல நிலையில் இருப்பவர்களும் அப்படியே. தனக்குனு வந்தா ஒன்னு, அடுத்தவங்களுக்குனா ஒன்னு. atleast let us expect from this generation. Its all in the hands of young mothers having small kids.All the youngsters are going to b ma and pa na? they have to think.
sruthi

smiley said...

Life has been never fair to widows, single moms, divorcees and spinsters... hopefully it will change :)

வேதா said...

@ஸ்ருதி,
/All the youngsters are going to b ma and pa na? they have to think./
ஆமா சுருதி ,இனி எல்லாமே நம் கையில் தான் இருக்கிறது,மாற்ற நம்மால் முடிந்ததை செய்வோம்:)

@ஸ்மைலி,
கண்டிப்பாக மாற்றம் வரவேண்டும் அது நம் கையிலே தான் இருக்கிறது.

Anonymous said...

வேதா,
இந்தப் பதிவை இன்னிக்குத் தான் நான் பார்த்தேன்.

நல்ல பதிவு. இதைப் பதிவா எழுதியதுடன் விடாமல், அந்த அம்மா கிட்ட உங்க எண்ணங்களை மெதுவா பேசிப் பாருங்களேன்? இவர் போன்ற பெண்கள் சமுதாய அங்கீகாரத்திற்காகவே பூ, பொட்டு இழந்து விதவைக் கோலம் போட்டிருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமா பேசி உங்களால் கூட அவரிடம் மாற்றம் கொண்டு வர முடியும். உங்க வீட்டில் கொண்டுவந்தது போல்.. ஏன் முயலக் கூடாது?