Thursday, December 21, 2006

திருப்பாவை பாடல் (6-11)

திருப்பாவை பாடல் - 6

"புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ் சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."


பொருள்:

அதிகாலை நேரம் பறவைகளும் இரை தேட புறப்பட்டன. கருடனின்(புள்ளரையன்) தலைவனான இறைவனின் கோவிலில் வெண்மையான நிறம் கொண்ட சங்கின் ஒலி(பேரரவம்) கேட்கவில்லையோ? பெண்ணே எழுந்திரு! முலைப் பால் கொடுத்து தன்னை கொல்ல வந்த பூதனையை மடித்து திருப்பாற்கடலில் துயிலில் அமர்ந்தவனை உள்ளத்தில் கொண்டு எழுந்து 'அரி,அரி' என்று முனிவர்களும்,யோகிகளும் அழைக்கும் அரவம் நம் உள்ளம் புகுந்து குளிர வைக்கிறது.

திருப்பாவை பாடல் - 7

"கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப்பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்."

பொருள்:

அதிகாலையில் ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் கீசுகீசு என்று தமக்குள்ளே பேசும் சத்தம்(அரவம்) கேட்கவில்லையோ பெண்ணே? கழுத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கலகலவென்று ஒலியெழுப்ப, நறுமணமுள்ள கூந்தலை உடைய இடையக்குல(ஆய்ச்சியர்) பெண்கள் மத்தினால் தயிர்கடையும் சத்தம்(அரவம்) கேட்கவில்லையோ? நாராயணனான கேசவனின் புகழ் பாடுவதை கேட்டும் நீ இன்னும் உறங்குகிறாயோ பெண்ணே? நீயே எழுந்து வந்து கதவை திறவாய்!திருப்பாவை பாடல் - 8

"கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:


காலை புலர்ந்து விட்டது,கீழ்வானம் வெளுத்து விட்டது. புல் மேய்வதற்காக எருமைகள் செல்வதை காண்பாயாக! உன்னை தவிர பாவை நோன்பை மேற்கொள்ள போகின்றவர்களையும் போகாமல் தடுத்து உன்னை அழைக்க உன் வாசலிலே நிற்கின்றோம்! பெண்ணே எழுந்திராய்! குதிரை வடிவில் வந்த ஒரு அசுரனை இரண்டாய் பிளந்தவனை, மல்லர்களை கொன்றவனை அந்த தேவாதி தேவனின் புகழ் பாடி நாம் அவனை சேவித்தால் அவன் நம் மீது 'ஐயோ' என்றிரங்கி நம் குறைகளை கேட்டு அருள் செய்வான்.

திருப்பாவை பாடல் - 9


"தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்."

பொருள்:


அழகான குறையற்ற மாணிக்கங்கள் அலங்கரிக்கும் மாடத்தில் சுற்றிலும் விளக்கெரிய, நறுமணத்துடன் எங்கும் தூபம் கமழ அழகிய மெத்தையில் உறங்கும் மாமன் மகளே உன் மணிக்கதவின் தாளை திறவாய்! மாமியே அவளை எழுப்புங்கள், நாம் சொல்வதை கேட்காமல் உறங்கும் உன் மகள் ஊமையோ?செவிடோ? களைப்போ அல்லது தன்னை மறந்து உறங்கும் வண்ணம் மந்திரவாதம் செய்யப்பட்டாளோ? அவள் உறக்கம் கலைத்து அந்த மாயனின், மாதவனின், வைகுந்த நாதனின் நாமங்களை சொல்லி அவன் அருளை வேண்டுவோம்.திருப்பாவை பாடல் - 10

"நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமுந் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். "

பொருள்:

பாவை நோன்பிருந்து சுவர்க்கம் அடைய உன்னை எழுப்பினால் வாசல் கதவை திறக்காதவளே நீ பேசவும் மாட்டாயோ? மணங்கமழும்(நாற்றம்) துளசி(துழாய்) மாலையை அணிந்திருக்கும் நாராயணின் புகழை நாம் போற்றினால் அவன் நமக்கு வேண்டியன தருவான். அன்றொரு(பண்டொரு) நாள் எமனின்(கூற்றத்தின்) வாயில் வீழ்ந்த கும்பகர்ணன் ,உன்னிடம் உறங்கும் போட்டியில் தோற்று பெரும் உறக்கத்தை உனக்கு தந்தானோ? என்று சொல்லும் படி உறங்குபவளே, எங்களுக்கு அணியாய் இருப்பவளே தடுமாறாமல் தெளிவாய் வந்து கதவை திறப்பாயாக.திருப்பாவை பாடல் - 11

"கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்."

பொருள்:


கன்றுகள் ஈன்ற கறவைப்பசுக் கூட்டங்களிடம்(கணங்கள்) குறைவில்லா பால் கறந்து, பகைவரின்(செற்றார்)திறன் அழிய அவர்களோடு போர் செய்யும், குற்றங்கள் ஏதுமில்லாத இடைக்குலத்தை சேர்ந்த பொன் கொடி போன்ற அழகானவளே! காடுகளில் திரியும் அழகிய மயிலை போன்றவளே! உன் தோழிகள் அனைவரும் உன் வீட்டு முற்றத்தில் வந்து கூடி அழகிய மேகத்தைப்(முகில்) போன்ற நிறம் கொண்ட கண்ணின் புகழ் பாடும் பொழுதில் செல்வம் நிறைந்த பெண்ணே நீ சிறிதும் அசையாமலும், பேசாமலும் ஏன் உறங்குகிறாய்?

19 comments:

மு.கார்த்திகேயன் said...

அருமையான விளக்கங்களுடன் திருப்பாவை.. நல்ல பதிவுங்க வேதா.. இப்போதெல்லாம் உங்க பதிவு வந்து ஒரு திருப்பாவை படிச்சிடுறது மறக்காம..

கீதா சாம்பசிவம் said...

தமிழ் மணத்திலே சேர்ந்தாச்சா? வாழ்த்துக்கள். உங்க பதிவை எல்லாம் தகராறு பண்ணாமல் ஏத்துக்குதா? ஹிஹிஹி எனக்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம். அதான் கேட்டேன். இந்தக் கார்த்திக் என்ன, என் பதிவிலே வந்து கமெண்ட் அப்புறம் போடறேன்னு சொல்லிட்டு எல்லார் பதிவிலேயும் பின்னூட்டம் கொடுத்துட்டிருக்காரே? ம்ம்ம்ம்ம், முதல் அமைச்சர் பதவிக்கு வேட்டுத்தான்.:D

ambi said...

//கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி//

@veda, சகடம் என்றால் சக்கரம் என்று பொருள் வருமே! அந்த சகடாசுரனை அழித்ததை பற்றி சொல்லி இருக்காங்களோ? could you pls clarify Miss tamizh..? :p

@geetha madam, உங்க கணிணி சரியாயிடுச்சா? 10 - 15 நாள் ஆகும்!னு நிம்மதியா இருந்தோமே! :)

ambi said...

//உங்க பதிவை எல்லாம் தகராறு பண்ணாமல் ஏத்துக்குதா? ஹிஹிஹி எனக்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம். //

@geeetha madam, மொக்கை பதிவுகளை எல்லாம் தமிழ்மணம் ஏத்துக்காதாம்! :)

வேதா said...

@கார்த்திகேயன்,
நன்றி தலைவரே, உங்க பதிவெல்லாம் தினமும் படிக்கணும்னு முயற்சி பண்றேன், ஆனா கணினி சதி செய்யுது:)

@கீதா,
ஆமா தமிழ்மணத்துல சேர்ந்தாச்சு, சரி இந்த பதிவுக்கான பின்னூட்டம் எங்க?:)

@அம்பி,
ஆமாம் சகடாசுரன் என்னும் அசுரனை காலால் உதைத்து அழித்ததை தான் இந்த வரிகள் குறிக்கின்றன, விட்டுப் போனதை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

பி.கு: மொக்கை பதிவுகள் பத்தி நீங்க பேசக்கூடாது;p

மு.கார்த்திகேயன் said...

ஓ..நாம தான் முதல் பின்னூட்டமா.. திருப்பாவை சிடி ஒண்ணு பார்சல்..கூடவே சுண்டல் இருந்தா நல்லா இருக்கும் வேதா.

மு.கார்த்திகேயன் said...

//கார்த்திக் என்ன, என் பதிவிலே வந்து கமெண்ட் அப்புறம் போடறேன்னு சொல்லிட்டு எல்லார் பதிவிலேயும் பின்னூட்டம் கொடுத்துட்டிருக்காரே? //

மேடம், கொடுத்த பின்னூட்டத்தை தூக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன்

Priya said...

Good job Veda. ஒவ்வொரு பாடலா போடறது நல்ல ஐடுயா.

Syam said...

இதுவும் அவுட் ஆப் சிலபஸ்...எப்படா மார்கழி மாசம் முடியும்னு இருக்கு :-)

Syam said...

//ஹிஹிஹி எனக்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம்//

தலைவியே கரெக்ட்டா சொன்னீங்க...எனக்கும் அதுக்கும் பதினாலாம் பொருத்தம்... :-)

Syam said...

//மொக்கை பதிவுகளை எல்லாம் தமிழ்மணம் ஏத்துக்காதாம்//

@ambi,
இத பத்தி நீ பேச கூடாது...நீ ஏன் பேசர...நீ பேச கூடாது...நீ பேச கூடாது... :-)

மு.கார்த்திகேயன் said...

வேதா, லிங்க் ஏதாவது போட்டா target=new அப்படிங்கிறதை அந்த ல போடுங்க.. அப்பத்தான் அது புது வின்டோல திறக்கும்..உங்க வலைபக்கம் அப்படியே இருக்கும்..

Anonymous said...

வேதா அப்ப அப்ப நான் சில கேள்வி கேட்பேன்..

பூதனையை ..? அப்படினா என்ன?

ஏன் இரண்டு பாடல்களிலும் பேய் என்று வந்துள்ளது..

வேதா said...

@ப்ரகாஷ்,
பதில் கொடுக்க தாமதமாக்கினால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும், கொஞ்சம் பிசி:)
பூதனை என்பவள் ஓர் அரக்கி, கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது அவனை கொல்வதற்காக வேடம் புரிந்து வந்து அவளுக்கு பால் கொடுக்கும் போது அவளை கொல்கிறான் கண்ணன், அதை தான் இந்த வரிகள்,"பேய்முலைநஞ் சுண்டு" என்று சொல்கிறாள் ஆண்டாள். இங்கே பேய் என்பது அரக்கியை குறிக்கிறது.

அடுத்த பாடலில் உள்ள 'பேய் பெண்ணே' என்னும் வார்த்தை விடிந்தும் எழுந்திராமல் உறங்கும் அந்த பெண்ணை விளிக்கும் வார்த்தையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

போன பதிவில் பகவத் கீதையிலிருந்து நீங்கள் கேட்ட கேட்டிருந்த கேள்வியை இப்ப தான் பார்த்தேன், எனக்கும் தெரியலை, கண்டுபிடிச்சு சொல்றேன்:)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா திருப்பாவைக்கு பாவை செய்யும் நல்ல தொண்டு. ஆண்டாளைப் பார்த்தீர்களா.இயற்கையை என்னமாக ரசித்திருக்கிறார்கள்.காலையில் எழுந்தால்தான் பறவைகளின் சத்தத்தை கேட்கமுடியும்.பாருங்கள் ஆனைச்சாத்தான் குருவி கூவுவதையும் சிலம்பும் புள்ளினகள் என்றும் எத்தனை பறவைகளையும் அதன் ஒலிகளையும் நமக்கு தெரியப் படுத்துகின்றார்.
வந்தாச்சு இனிமே திட்டக்கூடாது.
@கீதா மேடம் மொக்கை அம்பிக்கு மொக்கை பதிவு ஒன்னும் குறச்சல் இல்லை.

Jeevan said...

Very Nice explanations:) Merry Christmas!

Ravi said...

hmm ..
neegaluma .. ayyo ulagam ipdi technology'a poguthey ...

....edho paatu ellam podareenga .. nammaku dhann onnum puriyamatengathu .. athu seri .. indha ... marghazhi maadam eppa mudiyum .. eppo neenga form'ku varuveenga ..@priya

ayi..onnum puriyala naalum .. decent a comment adikareenga ..
ha ha ha !!!!

Anonymous said...

//அழகிய மெத்தையில் உறங்கும் மாமன் மகளே உன் மணிக்கதவின் தாளை திறவாய்! மாமியே அவளை எழுப்புங்கள், நாம் சொல்வதை கேட்காமல் உறங்கும் உன் மகள் ஊமையோ?செவிடோ? களைப்போ அல்லது தன்னை மறந்து உறங்கும் வண்ணம் மந்திரவாதம் செய்யப்பட்டாளோ? அவள் உறக்கம் கலைத்து அந்த மாயனின், மாதவனின், வைகுந்த நாதனின் நாமங்களை சொல்லி அவன் அருளை வேண்டுவோம்.
//

சூப்பர் post! நல்ல விளக்கம்! thxnga!

ambi said...

//எமனின்(கூற்றத்தின்) வாயில் வீழ்ந்த கும்பகர்ணன் ,உன்னிடம் உறங்கும் போட்டியில் தோற்று பெரும் உறக்கத்தை உனக்கு தந்தானோ?//

ROTFL :) explanations are sooo good and simple. i really appreciate your dedication. daily vanthu unga blog check panren theriyuma?
so, he hee, chakra pongal pls! :)