Friday, December 01, 2006

கொடுமை கொடுமையோ...


"என்ன இது மசமசன்னு?சீக்கிரம் வாங்க செல்வியில ராதிகா இன்னிக்கு தாலியை கழட்டிக் கொடுக்கறாங்களான்னு பார்க்கணும் இல்ல"


ரெண்டு நாளா சீரியல பார்க்குற கொடுமையில மாட்டிக்கிட்டேன். எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி ஒருத்தங்க காலைல நாலு,மாலைல நாலு சீரியல்னு டைம்டேபிள் போட்டு சீரியல் பார்க்கறவங்க,அவங்களுக்கு கம்பெனி கொடுக்க நாமளும் பார்க்க வேண்டியதா போயிடுச்சு. பாருங்க எதுக்கெல்லாம் கம்பெனி கொடுக்க வேண்டியதா இருக்கு:(

ஆனா நான் கோலங்கள்,செல்வி மட்டும் தான் பார்த்தேன்,அதுக்கே மண்டை காஞ்சுப்போச்சு. இதுல கோலங்கள் சீரியல் நானும் ஆரம்பத்துல பார்த்துக்கிட்டுருந்தேன். ஆனா அபி,பாஸ்கர்(அவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியலேன்னா தமிழ்நாட்டுல இருக்கற்து வேஸ்ட்) பிரிஞ்சுப் போய் அப்புறம் பாஸ்கருக்கு வேற கல்யாணம் நடக்குதுன்னு காமிச்ச வரைக்கும் பார்த்தேன்,அந்த டைரக்டர் அதுக்கப்பறம் அபிக்கு நிறைய இடங்கள் அமைந்தும் அந்தம்மா கல்யாணம் பண்ணிக்காம அப்டியே தியாகச்சுடர் ரேஞ்சுக்கு போனவுடன் சீரியல் பாக்கறத நிறுத்திட்டேன். எல்லா சீரியலிலும் ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதை தான். இதுல கோலங்கள் நேத்து மகா கேவலமா இருந்தது, கல்யாணம் நிச்சயிக்கப்பட்டவுடன் மாப்பிள்ளை ரொம்ப கர்மசிரத்தையா நண்பர்களோட உட்கார்ந்து தண்ணியடிக்கறாரு. எனக்கு வந்த கோபத்துல நாலு அறை அறையணும் போல இருந்தது ஆனா என்ன பண்றது டிவிக்குள்ள போக முடியல:)
நாட்டாமை நீங்க தீர்ப்பு சொன்ன மாதிரி அடுத்த பதிவை போட்டாச்சு:) இன்னும் ரெண்டு நாளைக்கு ஊருல இருக்க மாட்டேன்,அதுனால கார்த்திகை தீப வாழ்த்துக்களை இப்பவே சொல்லிடறேன். கார்த்திகை தீபம் ஸ்பெஷலா இந்த பதிவுக்கு பொறிஉருண்டை தான் முதல் கமெண்டுக்கு:)

37 comments:

umagopu said...

kolangal parthutu adhuku vimarsanam vera "ukkm",naa parkaradhaiye niruthiyachu !!!"ana daily ean velakar poonu vandhu story solliduva:D
sari eanku daan pori urundai,aana niraya kodu,ean ponnukum serthu koduthu vidu ,avalum oorilirundu varal.

Bharani said...

Aaha pori urundai miss :(

serial parthe tamizhnadu seerazhijikitu varudhu....yar yaruko bomb vaikiraanga....indha mega serial edukaravangaluku onnu vaika matraangale :(

Syam said...

பொறி உருண்டைக்கும் போட்டியா... :-)

Syam said...

அது என்னமோ கரெக்ட்டு தான்..எல்லா சீரியல்லயும் ரெண்டு பொண்டாட்டி கதை தான்..அப்புறம் சாப்பிடும் போது சண்டை போட்டு சாப்பிடாம் எழுந்து போறது...இது எல்லாம் கவுண்டர் ஸ்டைல்ல சொன்னா baaaad ejjaamble...இதுக்கு எல்லாம் மருத்துவர் ஐயா ஒன்னும் சொல்ல மாட்டாரா :-)

மு.கார்த்திகேயன் said...

வேதா...நான் சென்னையில இருக்கப்போ எப்போ ஊருக்கு போனாலும், இல்ல எங்கியாவது இந்த மாதிரி சீரியல் பாத்தாலும் உடனே புரிஞ்சிடும் கதை..ரெண்டு மாசம்னாலும் கதை அங்கேயே தான் இருக்கு.. இப்படித்தான் இதை பொறுமையா எடுக்கிறாங்களோ.. அதையும் பாக்குறாங்களோ..

மு.கார்த்திகேயன் said...

ஹ்ம்ம்.. எப்படிYஒ பொறிஉருண்டை மிஸ் பணிட்டேனே வேதா..

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள் வேதா..

கொ.ப.செ இல்லாம ரெண்டு நாள் எப்படித்தான் கட்சியை கட்டிக்காப்பாத்துறதுன்னே தெரில..

Sandai-Kozhi said...

That photo is so cute.
pavam neenga.SERIAL thollaiyil matikittu thavikireenga. pavamdhan.karthigai deepam wishes. Template mathiteenga.
idhuvum nall irukku.--SKM

மணி ப்ரகாஷ் said...

Sorry no coments: enakku intha serial , apprum poriyal ethu ellam onnum theriya thal

i m prsnt:

kaarthigai theepama? eppa?
sari athukkum pori urundaikkum enna thodarbu?

enakku theriyathe...

Priya said...

இந்த serial கொடுமைக்காக தான் நான் sun TV யே வச்சிக்கல. பெண்கள அழுமூஞ்சியாவும், தியாகியாவும், வில்லியாவும் காட்றது - ச்சே! போறாததுக்கு இப்படி culture க்கு against ஆன விஷயங்கள் வேற..
சரி, நீங்க நல்லபடியா ஊருக்கு போய், enjoy பண்ணிட்டு வாங்க.
உங்களுக்கும் கார்த்திகை தீப வாழ்த்துக்கள்.

கடல்கணேசன் said...

வேதா, எனக்கும் கொஞ்சம் பொறி உருண்டை பார்சல் அனுப்புங்க.. சாப்பிட்டுக் கொண்டே சீரியல் பார்க்கப் போறேன்..

Anonymous said...

Kolangal??mmm Thank god I don't get into such situations..

Anonymous said...

Kolangal??mmm Thank god I don't get into such situations..

Anonymous said...

Kolangal??mmm Thank god I don't get into such situations..

Ravi said...

ha ha ha ha !!!

rendu naal company kuduthathuku ipdiya .. hmm

namma tamil serial directors ellam .. ipdi en mega mega serial edukaraanga nu ippo dhaan purinjuthu ..

neenga sonna antha 'kolangal' serial'a enga veetula ellarum daily papaanga .. and am pushed to watch the same .. if hpnd to be at that time .. somedays .. so i gotto know abt the story .. and suddenly i've been trfrd out of the town .. and i hvnt got access to tamil channels .. after a long time i came back home .. hpnd to work along with the schedule (Kolangal pakaratha dhaan sollarane !!1) and u know i cud easily recognize wat cud hve hpnd on the so called serial .. during my absense ..

athaan reason behind those .. megaaaaaaaa serial's ,....

umagopu neengalum naanum best friend dhaanae .. ayyo pori urundai'kaga naan sollarane nu nenacheengala :-) cha cha ..

வேதா said...

@உமா,
நான் எங்க பார்த்தேன் பார்க்க வச்சுட்டாங்க:) சரி பொரிஉருண்டை உங்க பொண்ணுக்கும் சேர்த்து அனுப்பிட்டேன்:)

@பரணி,
சரி விடுங்க பொரி உருண்டைக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க:)
சீரியல் எடுக்கறவங்களுக்கு பாம் வச்சுட்டா மட்டும் பார்க்கறவங்க சும்மா இருந்துடுவாங்களா? அதை ஒரு பெரிய மேட்டராக்கி அதையும் ஒரு சீரியலா எடுத்துடுவாங்க:)

@ச்யாம்,
என்ன இப்படி சொல்டீங்க?போட்டின்னு வந்துட்டா நம்ம மக்களுக்கு எதுவா இருந்தாலும் ஓகே தான்:)அப்டியே டீஜண்ட் பெலோ மாதிரி சீன் போடப்படாது:)

/இதுக்கு எல்லாம் மருத்துவர் ஐயா ஒன்னும் சொல்ல மாட்டாரா :-) /
அவரும் மக்கள் தொலைக்காட்சியில சீரியல் எடுத்துக்கிட்டு இருக்காரு:)

வேதா said...

@கார்த்தி,
/இதை பொறுமையா எடுக்கிறாங்களோ.. அதையும் பாக்குறாங்களோ../
அது தான் பெரும் புதிரா இருக்கு:)அநேகமா நீங்க அமெரிக்காவிலிருந்து ஊருக்கு வந்து பார்க்குற வரைக்கும் கோலங்கள் சீரியல் அப்டியே தான் இருக்கும்:)

/கொ.ப.செ இல்லாம ரெண்டு நாள் எப்படித்தான் கட்சியை கட்டிக்காப்பாத்துறதுன்னே தெரில.. /
அதை நினைச்சு தான் களப்பணியை சீக்கிரம் முடித்துக் கொண்டு திரும்பி விட்டேன் தல:)

உங்களுக்கும் கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

@skm,
அப்பாடி நீங்களாவது அந்த போட்டோவை கவனிச்சீங்களே:)
நம் கட்சி கண்மணிகள் நிறைய பேருக்கு என் வலைப்பக்கமே வர முடியவில்லை,வார்ப்புரு சரியில்லை மாற்றுங்கள் என கோரிக்கை விடுத்ததால் கட்சியின் நலன் கருதி
வார்ப்புருவை மாற்றிவிட்டேன்:)

@ப்ரகாஷ்,
தங்கள் வருகை பதிவு செய்யப்பட்டது,நன்றி:) ஞாயிற்றுகிழமை கார்த்திகை தீபம் முடிந்து விட்டது, சில பேர் இன்றைக்கும் சிலர் நாளைக்கு கொண்டாடுகிறார்கள். எங்கள் வீட்டிலும் நாளை(செவ்வாய்)தான் கார்த்திகை தீபம். அன்று வீட்டில் பொரிஉருண்டை செய்து கடவுளுக்கு படைப்போம்.

வேதா said...

@ப்ரியா,
/போறாததுக்கு இப்படி culture க்கு against ஆன விஷயங்கள் வேற../

அது தாங்க இன்னும் கொடுமை. ஊருக்கு போய்ட்டு வந்தாச்சு,உங்களுக்கும் கார்த்திகை தீப வாழ்த்துக்கள்:)

@கணேசன்,
சீரியல் பாக்குறவங்களுக்கெல்லாம் நாங்க பொரி உருண்டை அனுப்பமாட்டோம்:)

@தூயா,
உண்மையிலேயே கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டியது தான்:)

@ரவி,
பத்மபூஷண் தான் வேண்டாம்னு சொல்டேன் இல்ல?என்னோட பாரத்ரத்னா எங்க?:)

/ hpnd to work along with the schedule (Kolangal pakaratha dhaan sollarane !!1)/
ஹாஹா நான் கூட ஏதோ முக்கிய வேலையை தான் சொல்றீங்கன்னு நினைச்சேன்:)

/ayyo pori urundai'kaga naan sollarane nu nenacheengala :-) cha cha ../
ஆமா உமா அவரு மானஸ்தரு அப்டியெல்லாம் கேட்க மாட்டாரு நீங்களே புரிஞ்சுக்கிட்டு அவருக்கும் கொஞ்சம் அனுப்பிடுங்க:)

Syam said...

//அப்டியே டீஜண்ட் பெலோ மாதிரி சீன் போடப்படாது:)//

நான் சொல்ல வந்தது...பொரி உருண்டைக்கும் எனக்கு போட்டிக்கு வந்துட்டாங்களேனு...டீஜண்ட்டா அப்படின்னா?

Syam said...

//அப்டியே டீஜண்ட் பெலோ மாதிரி சீன் போடப்படாது:)//

நான் சொல்ல வந்தது...பொரி உருண்டைக்கும் எனக்கு போட்டிக்கு வந்துட்டாங்களேனு...டீஜண்ட்டா அப்படின்னா?

Anonymous said...

தொலைக்காட்சி
தொடருக்குள்
தொலைந்துபோயிருந்த
நிம்மதியை
தொலைவில் இருப்பதால்
தோண்டி எடுத்துவிட்டேன்!
சிங்கப்பூரையும்
சிரமப்படுத்த
தொடங்கிவிட்டது
தொலைக்காட்சி தொடர்கள்!
இது
ஆண்களுக்கு எதிராக
தொடர் பார்க்கும்
பெண்மணிகள்
தொடங்கியுள்ள
மூன்றாம் உலகப்போர்
இந்த போரின்
இறுதியில் ஒன்று
ஆண்கள் இருக்கவேண்டும்
அல்லது
தொலைக்காட்சி
பெட்டி இருக்கவேண்டும்!
எலவு விழுவாதவன் வீட்டில் கூட
எப்ப பார்த்தாலும் அழுகுரல்!
அய்யோ....சாமி....
எவன் டா....கண்டுபிடிச்சா.. இந்த
TV ஐ....டார்ச்சர்...ப்பா...
இதுல....அரசியல்வாதிங்க வீடு..வீடாக வேற கொடுக்கபோறாங்க....நல்லாயிருக்கட்டும் நாடும்... நாட்டு மக்களும்....
நாசமா போச்சு... மனுசன் நிம்மதி!

கீதா சாம்பசிவம் said...

பொரி உருண்டைக்கு இத்தனை சண்டையா? சரியாப் போச்சு, போங்க, எங்கே பிடிச்சீங்க இந்தப் படத்தை? ரொம்ப நல்லா இருக்கு.

ambi said...

//அவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியலேன்னா தமிழ்நாட்டுல இருக்கற்து வேஸ்ட்//

ROTFL :)

//பொரி உருண்டைக்கு இத்தனை சண்டையா? //
food poison ippa thaane sari aachu! athukulla vanthaachaa? *ukkum* thirunthave maatenge geetha madam! :)

Anonymous said...

வேதா,

அருமையான படம். டிவி தொடர் பற்றி பக்கம் பக்கமா எழுதலாம். ரொம்ப வருடங்களுக்கு பிறகு சாட்டிலைட் சானல் கொடுத்து இருக்கிறோம். அம்மாவுக்கு பொழுது போக வேண்டுமே!.. 6.30க்கு ஜெயம் வந்தாச்சு. நமக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை. அப்புறம் லஷ்மி,கோலங்கள்,செல்வி,பெண். இப்ப அஞ்சலி. ஐயோ... ஒரு போஸ்ட் போடலாம் போங்க... எனக்கு யாராவது ஒரு உதவி செய்யுங்களேன். செல்வியில் அமர்ன்னு ஒருத்தர் நடிக்கறாரே..அவரு முகவரி யாராவது வாங்கி தாங்களேன்.... ப்ளிஸ்.. அவரும அவர் பேசற தமிழும்.... சே..சே... எங்க பிடிச்சாங்க அவரை... அவரு ஒவ்வொரு தடவையும்...."பாப்ஸ்" அப்படின்னு கூப்பிடும் போது..... வேண்டாம்.... நிப்பாட்டிடறேன்.

வேதா said...

@ச்யாம்,
அதானே பார்த்தேன், என்னடா டீஜண்டா மாறிட்டீங்களோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன், நமக்கு அதெல்லாம் தேவையா? நாளொரு ப்ளாகும் பொழுதொரு பொரிஉருண்டையும் இருந்தா போதும்:)

@ப்ரேம்,
/இந்த போரின்
இறுதியில் ஒன்று
ஆண்கள் இருக்கவேண்டும்
அல்லது
தொலைக்காட்சி
பெட்டி இருக்கவேண்டும்!/

விவிசி:):)ஆனா மெகா தொடர்களை பார்க்கும் ஆண்களும் உண்டு:)

@கீதா,
உங்களால சாப்ட முடியலைன்னா என்ன? மத்தவங்க சாப்டு போகட்டுமே:) இந்த படம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது, வசனம் நான் எழுதியது:)

@அம்பி,
உண்மையாகவே அது தான் உண்மை,கோலங்கள் சீரியலை ஒரு நாளாவது பார்க்கலேன்னா கூட அந்த கதாபாத்திரங்கள் தெரியாதவங்க இருக்க முடியாது:)

@பாலாஜி,
இதுக்கே டென்சன் ஆகறீங்களே அமர் அப்படி பேசற்துக்கே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு, இந்த கொடுமையை எங்க போய் சொல்றது:)

vishy said...

hmm been amsot 2 yrs now sicne I watched TV serials.. infact never bought a TV here in the US.... pakkalam will be in INdia in JAN>. so time for serials again..

Anonymous said...

serial ellamae serial killers maa
paatha thothikka podunnu daan anda pakkam ellaam thalayae vekkal

shree said...

veda, pls. clarify me this - andha tholkappiyan yen ipdi serialla irukkara athanai kalyanamagadha ponnungalyum propose pannararu??? funny, yet strage!

shree said...

BTW, 'penn' ngra serial was really good. i started watching it in the mid only. but it was good.

கீதா சாம்பசிவம் said...

நான் எனக்கு எங்கே பொரி உருண்டை கேட்டேன். எல்லாரும் அடிச்சுக்கிறாங்களேன்னு சொன்னால் உடனேயே இந்த அம்பிக்குத் தான் இப்படின்னா? நீங்களுமா வேதா(ள்)? :D

வேதா said...

@விஷி,
அட வாங்க வாங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்:)
so time for serials again..
ஒன்னும் சொல்றதுக்கில்ல விதி யாரை விட்டது?:)

@கிட்டு,
தலை வக்காத வரைக்கும் பொழச்சீங்க:)

@ஷ்ரீ,
அவரு யாரை ப்ரோபோஸ் பண்ணினா நமக்கு என்ன? அவருக்கு யாரும் செட் ஆகல அதனால ட்ரை பண்றாரு, குழந்தையை கவனிக்கற்த விட்டுட்டு பெரிசா இதை ஆராய்ச்சி பண்ண வந்துட்ட:)
பெண் சீரியல் நல்லாயிருக்கா? ஆஹா இப்படி தான் நானும் கோலங்கள் ஆரம்பிச்சேன்,அப்புறம் ரொம்ப பீல் பண்ணினேன் அதனால வேண்டாம் சொல்டேன்:)

Ram said...

Naalu naal kodumaike oru post potutieenga, naangellam daily idhai anubavikkirom :(

Usha said...

paavam nee, andha kadhaila ellam costume selavu vida glycerin selavudhan jaasthiyama, kelvi patten ;)

வேதா said...

@ராம்,
தினமும் அனுபவிக்கறீங்களா?அய்யோ பாவம்:)

@உஷா,
ஆமா சரியா தான் கேள்விப்பட்டுருக்க, இவங்கெல்லாம் நிஜமாவே அழற நிலைமை எதுக்காவது வந்ததுன்னா கூட க்ளசரினை தேடுவாங்கன்னு நினைக்கிறேன்.

Jeevan said...

Inthanaal thaan kadantha erandu varudattikku munba intha serialkalukku oru muttrupulli vaithuvettean! Engavettulaium ennga patti vantha ella seriallaium parpanga, erandukku eppadina, avanga patthu!!! naan kasta pattu enga ammava kapathurean:)

smiley said...

அவங்களுக்கு கம்பெனி கொடுக்க நாமளும் பார்க்க வேண்டியதா போயிடுச்சு

adada virunthombalin sigarathai thotu vittergal :)

வேதா said...

@ஜீவ்,
நல்ல வேளை சீரியலை பார்க்கறை நிறுத்திட்டீங்க:)அதை அப்டியே மெயிண்டன் பண்ணுங்க:)

@ஸ்மைலி,
பின்ன தமிழர்களின் விருந்தோம்பலுக்கு ஈடேது?:)

Anonymous said...

neenga naalu varam illa masam kazhichalum kadhai indha speedla than poitu irukkum. adhoda enna vidhyasamna kadhai eppo parthalum puriyum, oruthannu 3rd marriage nadandhirukkum , or 2nd wife 4th husband katiruppa...dono wat serial these ppl r taking..