Tuesday, December 12, 2006

இது ட்ரெயிலர் இல்ல நிஜம்! அடிச்சாச்சு சதம்!

இது போன வாரம் ஓட்டின ட்ரெய்லர்:

சென்ற வாரம் களப்பணிக்கு சென்ற இடத்தில் சிறிது ஓவர்டோஸ் ஆகி(வேலையை தாங்க சொல்றேன்) தற்போது ஃபுல் அடிச்சு மப்புல ஆடற குடிமகன் ரேஞ்சுக்கு ஆகிட்டேன். வங்கக்கடலில் குடிக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா இல்லை அப்டியே ஓடிப்போயிடுமா என்பது போல் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் என் உடல்நிலை சரியாகுமா இல்லை தொடர்ந்து நீடிக்குமா என்ற தெரியாததால், இன்னும் இரண்டோர் நாட்களுக்கு வலைப்பக்கங்களில் மேயமுடியுமா? என்ற சந்தேகமாக இருப்பதால் இப்போதைக்கு இது ஒரு ட்ரெய்லர் பதிவு, மீண்டும் வந்து இப்பதிவை நிறைவு செய்கிறேன். ரொம்ப கண்பட்டு விட்டதால் தான் இப்படி இருக்கிறது என்று என் அம்மா பீல் பண்ணுவதால் ட்ரெய்னிங்(!) சென்றுள்ள அண்ணன் நாட்டாமை வந்து சுத்தி போட்ட பின் மீண்டும் வருவேன்:)

இனி மெயின் சினிமா:

எல்லாம் 100வது பதிவு போடறதுக்கு ஒரு பில்டப் தான்:) ஆனா உண்மையிலேயே உடம்பு சரியில்லையாதலால் கொஞ்சம் தாமதமாயிடுச்சு:)

எப்படியோ தட்டு தடுமாறி 100வது பதிவை போட்டாச்சு. அடிதடி,டூயட்,தத்துவம் எல்லாம் கலந்த ஒரு சுமாரான மசாலா படத்தை 100 நாட்கள் ஓட்டின மாதிரி இந்த வலைப்பக்கத்துல சதம் போட்டாச்சு. சில சமயம் கடமைக்காக எழுதற மாதிரி இருந்தாலும் ஒரு விதத்துல இந்த ஒன்றரை வருடத்துல எனக்குள் பல மாற்றங்கள்,சிந்தனைகள் ஏற்பட்டதற்கு காரணம் இந்த வலைப்பூக்கள் தான், பல புதிய நட்புகளின் அறிமுகங்கள் உட்பட.ஆனா பாருங்க 100வது பதிவு போடறதுக்கு ஏகப்பட்ட தடங்கல், எல்லாம் எதிர்கட்சியின் சதி தான் வேறென்ன சொல்ல:)

தலைவர் கடலை கார்த்தியின் சொற்படி களப்பணிக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கணினியின் முன் உட்காரவே முடியாத நிலை, சரி இன்றாவது ட்ரெய்லரை எடுத்துட்டு முழு சினிமா ஓட்டலாம்னு பார்த்தா காலையிலிருந்து இணையத்தொடர்பில் பிரச்னை, சே நாட்டுல ஒருத்தரை முன்னேறவிட மாட்டேங்கறாங்க:)அப்பாடி இப்ப தான் இணையத் தொடர்பு கிடைச்சது, இப்ப மேட்டருக்கு வருவோம்.

இந்த டிசம்பர் மாதத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் அப்படி ஒரு ராசிங்க முக்கியமா என் பாட்டி விஷயத்துல, ஒவ்வொரு டிசம்பர் மாசமும் ஏதாவது நடந்துடும். இப்படி தான் ரெண்டு வருஷம் முன்னாடி திடீர்னு 'என்னால நடக்கவே முடியலை' அப்படின்னு சொல்லி ஒரு மாசம் முழுக்க படுக்கையிலேயே இருந்தாங்க. சாப்பாடு முதற்கொண்டு எல்லாம் படுக்கையில தான்.வீட்டுல ஒருத்தருக்கு உடம்புக்கு முடியலேன்னா அவ்வளவு தான் மத்தவங்களும் அப்டியே நோயில அடிப்பட்டவங்க மாதிரி ஆகிடும், அது தான் நாங்க கொஞ்சம் ஆடிப்போயிட்டோம்:)

அப்புறம் டிசம்பர் முடிஞ்சவுடன் எழுந்து நடமாட ஆரம்பிச்சிட்டாங்க. போன டிசம்பரில் கீழ விழுந்து இடுப்புல எலும்பு முறிவாகி அறுவை சிகிச்சை செய்து(அப்ப அவங்களுக்கு 85 வயசு) வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தோம். கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்தவமனையில் தான் கழிந்தது, விளைவு எங்க பாட்டியை தவிர எங்க எல்லாருக்கும் உடம்பு சரியில்லாம போச்சு.

அதே டிசம்பர் மாதம் இந்த வருடமும் விதி விளையாட ஆரம்பிச்சுது, இந்த முறை மாரடைப்பு. போன வாரம் திங்கட்கிழமை இரவு 7 மணி அளவில் மூச்சு விட முடியாமல் இழுக்க ஆரம்பித்து விட்டது, எங்க குடும்ப மருத்தவருக்கு தொலைபேசியில் தெரிவித்த போது அது மாரடைப்பாக தான் இருக்கும்,உடனே மருத்தவமனைக்கு எடுத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டார். சரி என்று காருக்கு ஏற்பாடு செய்த பிறகு தான் உறைத்தது நிலைமையின் தீவிரம்.

என் பாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ததால் வாக்கர்(walker) இல்லாமல் நடக்க முடியாது, நாங்கள் இருப்பது முதல் மாடியில். என் தம்பி வேலையிலிருந்து வரவில்லை, என் அப்பா, சித்தப்பா ரெண்டு பேருமே என் பாட்டியை தாங்கிச் செல்லும் அளவு உடல் நலம் படைத்தவர்கள் அல்ல. உண்மையிலேயே அடுக்குமாடியில் குடியிருப்பதால் உள்ள லாப,நட்டங்கள் எல்லாம் அப்பொழுது தான் புரிந்தது. என் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் அத்தனை பேரும் வந்து விட்டார்கள். தெருமுனையில் சென்று காரை சரியாக அழைத்து வர ஒருவர் சென்று விட்டார், கார் வந்தவுடன் என்ன நடக்கிறது என்ற்றறியும் முன் பாட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு கீழே காரில் கிடத்தினர் சிலர், எங்கிருந்தோ ப்ளாஸ்க்கும்,வெந்நீரும் வந்தன. விரைந்தோம் மருத்தமனைக்கு, கூடவே குடியிருப்பில் இருப்போர் சிலரும் வந்தனர்.

ஏனடா இப்படி ஒரு குடியிருப்பில் வந்து மாட்டிக்கொண்டோம் எல்லா விஷய்த்திலும் மூக்கை மட்டுமா தலையே நுழைக்கிறார்கள் என்று நான் நினைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவம், என் எண்ணத்தை மாற்றியது. எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. நாம் மற்றவரிடம் என்ன எதிர்ப்பார்க்கிறோமோ அதை தான் மற்றவரும் நம்மிடம் எதிர்ப்பார்க்கின்றனர் இல்லையா? ஒரு வேளை நாங்கள் தனித்து வசித்திருந்தால் இவ்வளவு வேகமாக உதவி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். நம்மள சுத்தி நாலு பேர் இருந்தா கூப்பிட்ட குரலுக்கு உதவி கிடைக்கும்னு சும்மாவா சொன்னாங்க. அதை அன்னிக்கு தான் பூரணமா அனுபவிச்சோம். இதை தான் நம்ம முண்டாசு கவிஞர் சொன்னார், 'அன்பென்று கொட்டு முரசே' என்று:)

பி.கு: இது நூறாவது பதிவு என்பதால் எல்லாரும் ஸ்பெஷலா கவனிப்பீங்கன்னு தெரியும்(அதான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா துப்பிட்டு போவீங்க) ஆனாலும் இன்னொரு விஷயமும் சொல்றேன், என் இன்னொரு வலைப்பக்கத்துல இப்பதான் 25வது பதிவு(அதாவது 25வது கவிதை) எழுதியிருக்கேன், அதையும் படிச்சு கொஞ்சம் உங்க கருத்துக்களை அங்கன சொல்லுங்க,ஹிஹி:)

52 comments:

மு.கார்த்திகேயன் said...

என்ன இது எல்லோருக்கும் இப்படி அடிக்கடி ஜகா வாங்குறீங்க..

ஆனாலும் இந்த ஒவர் பில்-டப் உடம்புக்கு ஆகாது வேதா. இப்படி ஒரு பில்-டப் பதிவா? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணை காடுதே..

சரிங்கோவ்.. நல்லா உடம்ப தேத்திட்டு வந்து ஒரு உற்சாக பதிவ போடுங்க..

இந்த அளவுக்கு களப்பணியா.. உங்க கடமை உணர்ச்சி என்னை மெய் சிலிர்க்க வைக்குது வேதா..சாரி..கொ.ப.செ

Sandai-Kozhi said...

:-D Take Care.:--SKM

Anonymous said...

மழைக் காலம் இல்லையா
சற்று, மப்பும் மந்தாரமும் சகஜம்தான்!
அதுக்காக சுனாமி வந்தது போல சுருங்கிபோய்விடக்கூடாது, சட்டென்று உதரிவிட்டு புறப்படுங்கள், பதிவு மழை பொழியுங்கள்!
ட்ரெய்லர் சூப்பர், ஆனா படம் ஓடாது, so படத்தை stop செய்துவிட்டு பதிவை போடுங்க சரியா!

ambi said...

adapaavi! naan konjam absent aana, enakku pottiku ethanai peru yaa built-up kuduka poraptu irukeenga?
Grrrrr.

anyway, take care :)

G3 said...

//ட்ரெய்னிங்(!) சென்றுள்ள அண்ணன் நாட்டாமை வந்து சுத்தி போட்ட பின் மீண்டும் வருவேன்:) //

annanoda range-a thangachjiyum choopera maintain pandreenga :)

smiley said...

ரொம்ப கண்பட்டு விட்டதால் தான் இப்படி இருக்கிறது

madras eye varamal irunthaal sari thaan

take care :)

Priya said...

உடம்பு சரியில்லனா தான் வேற வேலை ஒண்ணும் பண்ணாம, நெட்லயே இருக்கணும்.
Just kidding... Take care and get well soon Veda.

Ravi said...

Veda, get well soon.

மணி ப்ரகாஷ் said...

//தற்போது ஃபுல் அடிச்சு மப்புல ஆடற குடிமகன் ரேஞ்சுக்கு ஆகிட்டேன்//

இதுக்குத்தான் ராவா அடிக்க கூடாதுனு சொல்றது...(நான் வேலயத்தான் சொன்னேன்.நீங்க மட்டுமே இழுத்து போட்டுக்கிட்டு வேலை செய்ய கூடாது.. Team work than nallathu) இப்ப பாருங்க உடம்பு சரியில்லாம.take care & get well soon

Syam said...

தங்கச்சி உடம்ப பாத்துக்கமா..நாம நல்லா இருந்தாதான் நாலு பக்கம் போய் கமெண்ட் போட முடியும் :-)

Syam said...

ஊரு கண்ணு, உலக கண்ணு,நாய் கண்ணு, பேய் கண்ணு,நல்ல கண்ணு, நொல்ல கண்ணு, அம்பி கண்ணு எல்லா கண்ணும் போகட்டும்...புறப்படு போருக்கு :-)

Anonymous said...

அடடா உங்க நிலமை இப்படி ஆகி போச்சா.... உடம்ப பாத்துக்கங்க. உங்க அண்ணன் லீவுல போனதுனால, அந்த பிரிவ தாங்க முடியாம தான் இப்படினு நினைக்கறேன்... ;-)

வேதா said...

@கார்த்திக்,
என்னது பில்-டப்பா? தலைவரே நீங்களே இப்படி சொல்லலாமா, இப்படியெல்லாம் செய்யலேன்னா நம்ம பொழப்பு என்னாறது? அரசியல்ல பாலபாடமே இது தான?:) பில்டப்பின் ரகசியம் கூடிய விரைவில் தெரியும்:)

@skm,
ரொம்ப நன்றிங்க:)

@ப்ரேம்,
ட்ரெயலே சூப்பரா இருக்கும் போது படம் இன்னும் சூப்பரா இருக்கும் பாருங்க:)

@அம்பி,
பில்டப் பத்தி நீங்க பேசவேகூடாது:) ஆமா என்ன நடக்குது? ஒன்னுமே புரியல,மர்மமா இருக்கு?;)

வேதா said...

@ஜி3,
ஹிஹி எல்லாம் அண்ணன் ட்ரெய்னிங் தான் :)

@ஸ்மைலி,
ஆகா அது ஒன்னு தான் குறைச்சல்:)
நன்றி:)

@ப்ரியா,
அது என்னவோ கரெக்ட் தான் ஆனா கணினி திரையே கண்ணுக்கு தெரியலை, கண்ணிலிருந்து தண்ணியா கொட்டுது, ஒரு பக்கம் ஸ்பீக்கர் வேற அவுட்(அட காதை சொன்னேங்க):) இப்ப கொஞ்சம் பரவாயில்லை:)

@ரவி,
நன்றி:)

வேதா said...

@ப்ரகாஷ்,
ஆமா கரெக்டா சொன்னீங்க, ராவா தான் அடிச்சிட்டேன் இனிமே தண்ணி கலந்து அடிச்சுட வேண்டியது தான்:) நன்றி:)

@ச்யாம்,
அண்ணே வாங்கண்ணே! தமிழ் கூறும் நல்லுலகம் இந்த வலையுலகம் நாட்டாமை லீவுல போனதுல ரொம்ப ஆடிப்போச்சு:) நிறைய பஞ்சாயத்து இருக்கு வெத்தலை பொட்டியை எடுத்துட்டு கிளம்புங்க:)

/அம்பி கண்ணு எல்லா கண்ணும் போகட்டும்...புறப்படு போருக்கு :-)/
என்னது இது என்னை வம்புல மாட்டி வுடறீங்க.
அம்பியே 'உன்னை கண் தேடுதே' பாட்டு பாடிக்கிட்டு திரியிறாரு உங்களுக்கே மேட்டரே தெரியாதா?;)

@விஜி,
அட என்ன அதிசயம்? ரொம்ப நாள் கழிச்சு வரீங்க:)

Anonymous said...

லேட்டா வந்தாலும் உங்க 100-ஆவது பதிவுக்கு சும்மா கன் மாதிரி வத்து சேந்துட்டோம்ல... அங்கன தான் நாங்க நிக்கறோம்.... ;-)
நீங்க சொன்னது ரொம்ப சரி. நிறைய தடவை எதிர்பாராத இடத்துல இருந்து தான் உதவி வரும்... ஒரு கஷ்டம் வரும் போது தான் மக்கள பத்தி புரிஞ்சுக்க வாய்ப்பு கிடைக்கும்.

Anonymous said...

அடடா, 100-ஆவது பதிவுக்கு ஒன்னுமே சொல்லலியே....
வாழ்த்துக்கள்!!!!!! :-)

மு.கார்த்திகேயன் said...

முதல்ல நம்ம கட்சியோட கொ.ப.செவுக்கு வாழ்துக்கள் மற்றும் நம்ம வருகை பதிவு..

100 பதிவுகள்.. அதுவும் என்னை மாதிரி ஆளுக எல்லாம் அசினுக்கும், அஜித்துக்கும் 1000 பதிவுகள் எழுதினாலும், கருத்துக்கள் நிற'ந்த சமுதாயத்தின் மீதான அக்கறையோடு, தேவை இல்லாமல் இருக்கிற தளைகள் மீது உங்கள் கோபப் பதிவுகள்னு ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள் வேதா..

மு.கார்த்திகேயன் said...

கட்சியின் சார்பா நாடு முழுதும் நமது தொண்டர்கள் இதை ஒரு பெரிய விழாவாக "சதமடித்த வேதா"ன்னு கொண்டாடும்னு கேட்டுக்குறேன்..

வேதா..வாழ்த்துக்கள்

Syam said...

அடுக்கு மாடில குடியிருக்கறது மட்டும் இல்ல..இந்தியாவுல இந்த மாதிரி எல்லா வகை உதவியும் கிடைக்கும்...இங்க எதுனா ஆனா நாய் கூட சீந்தாது...

Syam said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

Syam said...

//அம்பியே 'உன்னை கண் தேடுதே' பாட்டு பாடிக்கிட்டு திரியிறாரு உங்களுக்கே மேட்டரே தெரியாதா//

என்னது இது ஒரு நாளு நாள் லீவுல போனேன் நாட்டுல என்ன என்னமோ நடக்குது :-)

Syam said...

//கட்சியின் சார்பா நாடு முழுதும் நமது //

தலீவா நான் இதை கடுமயாக ஆட்சேபிக்கிறேன்...உலகம் முழுவதும் என திருத்தி சொல்லவும் :-)

Arunkumar said...

சூப்பர்...
வாழ்த்துக்கள் வேதா.. கலக்குங்க :)

Priya said...

வேதா, நூறாவது போஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்! உடம்பு இப்ப பரவால்லயா (ஒரு நாள்ல திரும்பி வர இவ்ளோ build-up ஆ :))

Hope your granny is alright now.

Nosy neighbours பத்தி நீங்க சொல்லியிருக்கறது ரொம்ப சரி. என்ன தான் இடஞ்சலா தெரிஞ்சாலும், ஆபத்து சமயத்துல உதவிக்கு வராங்க பாருங்க, அது தான் முக்கியம்.

Arunkumar said...

//
கட்சியின் சார்பா நாடு முழுதும் நமது தொண்டர்கள் இதை ஒரு பெரிய விழாவாக "சதமடித்த வேதா"ன்னு கொண்டாடும்னு கேட்டுக்குறேன்..
//

சதமடிச்சிருக்காங்க... இதக்கூட செய்யாட்டி எப்டி :)

SKM said...

Congratulations Vedha.sadham adichachu.men melum vaLara vazhththukkal.
How is your patti now?

Anonymous said...

அய்யய்யோ! பாட்டிக்கு இப்ப எப்படி இருக்குது?

என்ன இது உடம்பு சரியில்லாதவர்கள் வாரமா? யாராவது கண்ணுப் போட்டிருப்பாங்க அதான்.

G3 said...

"Koodi vaazhndhaal kodi nanmai" nnum idhukku thaan sollittu ponanga pola :)

Nijamavae gumballa irukkara sugam thanimaila kedaikkaradhillai :)

ambi said...

வேதா, நூறாவது போஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்! dheyvame! ella pugazhum unakke! :)

hope, granny is fine now. take care.

@syam, eley, officela konjam nilamai sari yaagattum, aprom irukku di unakku pongal! :)

Deekshanya said...

Hearty CONGRATS..
very happy to read your 100th post!
Keep writing, I want to read your 1000th post too, as my brother said!
- Deeksh

வேதா said...

@விஜி,
/ ஒரு கஷ்டம் வரும் போது தான் மக்கள பத்தி புரிஞ்சுக்க வாய்ப்பு கிடைக்கும். /

ஆமா 100% சதவிகிதம் உண்மை:)
சரி எவ்ளோ நேரம் தான் நிப்பீங்க? பரவாயில்லை உட்கார்த்துக்கலாம்:)
வாழ்த்துக்கு நன்றி:)

@கார்த்தி,

/உங்கள் கோபப் பதிவுகள்னு ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள் வேதா.. /
நான் எழுதுவதையும் மதித்து இவ்வாறு கூறும் உங்கள் பெருந்தன்மையை என்னவென்று சொல்ல?:)

/"சதமடித்த வேதா"ன்னு கொண்டாடும்னு கேட்டுக்குறேன்../
ரொம்ப நன்றிங்க என்ன பத்தியும் உங்க வலைப்பக்கத்துல எழுதியதற்கு:)

@ச்யாம்,
/இந்தியாவுல இந்த மாதிரி எல்லா வகை உதவியும் கிடைக்கும்...இங்க எதுனா ஆனா நாய் கூட சீந்தாது... /

என்ன இருந்தாலும் இந்தியா இந்தியா தான்:)

வாழ்த்துக்களுக்கு நன்றி:)

நீங்க லீவுல போனதுல எல்லாருக்கும் துளிர் விட்டு போச்சு எதையும் சொல்ல மாட்டேங்குறாங்க:) ஒரே மர்மமா இருக்கு நாட்டாமை. நீங்க தான் என்ன ஏதுன்னு விசாரிச்சு ஒரு தீர்ப்பு சொல்லணும்:)

/உலகம் முழுவதும் என திருத்தி சொல்லவும் :-)/

ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க:D

@அருண்,
ரொம்ப நன்றி அப்புறம் புது ஆணியெல்லாம் சீசீ வேலையெல்லாம் எப்படி இருக்கு?:)

வேதா said...

@ப்ரியா,
வாழ்த்துக்கு நன்றி ப்ரியா:) ஒரே நாள்ல எங்க திரும்பி வந்தேன்? ட்ரெய்லர் பதிவு சனிக்கிழமையே போட்டாச்சு, அதையே நிறைவு செய்து நேற்று போட்டேன்:) பில்-டப் எல்லாம் இல்லை, உண்மையிலேயே உடம்பு சரியில்லை தான் என் பாட்டிக்கு,அதனால எங்களுக்கும்:)

/ஆபத்து சமயத்துல உதவிக்கு வராங்க பாருங்க, அது தான் முக்கியம். /

அதை நினைச்சு தான் இடைஞ்சலையும் பொறுத்துக்க வேண்டியதா இருக்கு:)

@skm,
வாழ்த்துக்களுக்கு நன்றி, என் பாட்டிக்கு தற்போது சரியாகிவிட்டது,நன்றி:)

@ஜி,
இப்ப பரவாயில்லை:)
அதான் நாட்டாமை வந்து திருஷ்டி சுத்தி போட்டுட்டாரே,இனி கவலை இல்லை:)
முதல் வருகைக்கு நன்றி:)

@ஜி3,
/Nijamavae gumballa irukkara sugam thanimaila kedaikkaradhillai :)/

ஹிஹி அது நாம யார் கூட இருக்கோமோ அதை பொறுத்தது:)

வேதா said...

@அம்பி,
நன்றி நாரதரே:)இனி அப்படி சொல்ல முடியாதில்ல:)
சரி தெய்வமா? அது யாரு:)

@தீட்சண்யா,
ரொம்ப நன்றி:)

Syam said...

//eley, officela konjam nilamai sari yaagattum, aprom irukku di unakku pongal!//

@ambi,

பஞ்சாப் உன் முதுகு மேல தினம் தினம் தீவாளி கொண்டாடும் போதே நீ இந்த ஆட்டம் ஆடுற...நிலம சரி ஆனா என்ன ஆக போகுதோ... :-)

Anonymous said...

superaa kalakkum vedhavukku en vaazthukkal. indha 100 ai pala madangu aaki kalakkavum vaazthukkal

Anonymous said...

Sagothariyee,

Paati ipothu yeppadi irukaanga ? Nalamthanee.....

>>
அதான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா துப்பிட்டு போவீங்க
>>
Ungal azhagu tamizhil intha karum pulli yetharkku..?

100 Posts are too less for ur writing potential.I would like to see more.

Thanks for your time !

- Hayagriva Dasan

Anonymous said...

Veda,

Congratulations on your 100th post. I am glad to be a sincere reader of all your posts. I appreciate your thoughts.

BTW you had written very well about your patti's well being. I appreciate all of your family members. My mother is 76 years old and is living with me in UK. I could understand the difficulties in keeping them in good spirits. This is the major problem in our country. Here, the Governments have made wonderful facilities for aged persons. They can be on their own. I am planning to put a separate post shortly about it. Luckily you had good neighbours. Ofcourse, our people are a bit nosy. I have experienced that too in India. But love and humanity exists there. In western world not many will care about it. But we can call ambulance which will be at your door step within minutes and we do not need to undergo so much of hassle as your family underwent. If needed the patients will be even airlifted by helicopter. Anyhow, I could visualise each and every sentence you had mentioned in your post. Please convey my sincere regards to your patti and all your family members. You seem to have a very good family. Keep up your spirits and I wish you to come out with more posts helpful to society.

Anonymous said...

100 vathu postkku ennoda valthukkal... unga meethi post ellam oru naal porumaiya utkaarnthu padichu kandippa comment panrten :)

மணி ப்ரகாஷ் said...

நூறு பதிவ கண்ட கொ.ப.செ
(கொ.ப.செ னு சொல்லவில்லை என்றால் எனக்கு பதவி தர பரிந்துரைக்க மாட்டீங்கனு தலைவர் கார்த்தி சொல்லிவிட்டதால்... இனி உங்கள் பதவி போனாலும் கொ.ப.செ என்றே..)

வேதாவிற்கு வாழ்த்துகள்.

100 பதிவுகளையும் நான் படித்தது இல்லை.சமீப காலமாய்த்தான் (இரண்டு மாதம் தான்)பதிவுகளை வாசிக்க நேரிட்டது. எனவே என்னால் வாசிக்கபட்ட பதிவுகளில் இருந்து அறிந்தவற்றை :

வேதாவின் வலைப்பூ:
-------------------

ரிக் யஜூர்,சாம அதர்வணம் அல்ல
இது உஷி சார வேதம்

அக்னி குஞ்சாய்
மண் பயணுற,
சர்வமும் கிருஷ்ணார்ப்பணமாய்
(உஷி)வேதா


விழுந்தால் ஊண்றி எழ
தனித்து இருக்க,
உண்மை முகமாய்
(உஷி) சாரா...


கால் நூறு, முழு நூறு
கண்ட வேதா
பல நூறு
பல்லாயிரத்து நூறு
பல லட்ச நூறு காண

வாழ்த்துகள்....


( அப்பாட எழுதி முடிச்சாச்சு,,.. ஒரு வாழ்த்து சொல்ல வார்த்த வர மாட்டென் என்கிறது.)

Ravi said...

//ஃபுல் அடிச்சு மப்புல ஆடற குடிமகன் ரேஞ்சுக்கு //

athaan theriyumae .. neenga sincere kudimagal'nu ... atha vera highlight panni sollareenga .. ha ha ha !!!

//அடிதடி,டூயட்,தத்துவம் எல்லாம் கலந்த ஒரு சுமாரான மசாலா படத்தை 100 நாட்கள் ஓட்டின மாதிரி இந்த வலைப்பக்கத்துல சதம் போட்டாச்சு//

comedy'a vittuteengalae .. athaanae major part (ha ha ha !!)

yaenunga .. 100vathu post'ku vera title'ae kedikalaya .. hmm ..
balachander'oda (3 mudichu padam paatha effect !!!) rajini oda first padam nu oru thrill oda parthane .. athey maathiri .. unga 100'thu post'um athey effect'oda padichane ...

//'அன்பென்று கொட்டு முரசே' என்று:)//

exchoose me .. antha 25th post'la ipdi dhaan technology a post pottu irukeengala ???

BTW : paati epdi irukaanga nu adhu'tha post'la podunga ..


//சே நாட்டுல ஒருத்தரை முன்னேறவிட மாட்டேங்கறாங்க//

naatula mathavanga munneara oru chance .. kuduka try pannaroam ..
(ha ha ha !!)

..hmm congraats on u r sucessfull completion of 100th post .. (treat ???) 87' vayasu paati'a vechu 100'th post'a pottuteenga .. hmm ... (Gud write up !!!)

ok .. vandi vanthuduchu .. gotto go to u r other post .. hmm [kavidhaigal aachae :-)]

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்கள் வேதா.
பாட்டி உடம்பு தேவலையா.

நூறு இரு நூறு
என்று நிறைய எழுதுங்கள்.
உங்கள் வலைப்பூ
மேலும் வளர வாழ்த்துக்கள்.

வேதா said...

@கிட்டு,
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி:)

@ஹயக்ரீவ தாசன்,
வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி. என் பாட்டி தற்போது நலமாக உள்ளார்.
/Ungal azhagu tamizhil intha karum pulli yetharkku..?/
அது எங்கள் நட்பு வட்டத்தில் உபயோகிக்கும் ஒரு விளையாட்டு வார்த்தை அவ்வளவு தான்:)

@பாலாஜி,
B/ut we can call ambulance which will be at your door step within minutes/
இப்படிப்பட்ட வசதிகள் நம் நாட்டை பொறுத்தவரை நடைமுறையில் வர சில காலம் பிடிக்கும்.
என் பதிவுகளை தொடர்ந்து படித்து தங்கள் கருத்துக்களை கூறி வருவதற்கு நன்றி:) வாழ்த்துக்களுக்கும் நன்றி:)

@ட்ரீம்ஸ்,
முதல் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி, கண்டிப்பாக என் மற்ற பதிவுகளையும் படித்து தங்கள் மேலான கருத்துக்களை கூறலாம்:)

வேதா said...

@ப்ரகாஷ்,
முதலில் வாழ்த்துக்களுக்கு நன்றி:)
/இனி உங்கள் பதவி போனாலும் கொ.ப.செ என்றே..)/
ஆகா ஒரு பக்கா அரசியல்வாதியாக உங்களுக்கு முழு தகுதியும் உள்ளது:) கண்டிப்பாக பரிந்துரை செய்கிறேன்:)

வாழ்த்துகளை கவிதை மழையாக பொழிந்துவிட்டு வாழ்த்த வார்த்தையில்லை என்கிறீர்களே:)

@ரவி,
atha vera highlight panni sollareenga .. ha ha ha !!!
ஹிஹி பின்ன இது கூட இல்லேன்னா அரசியல்ல எப்படி பொழைக்கற்து? :)

antha 25th post'la ipdi dhaan technology a post pottu irukeengala ???
எஜுஸ் மீ:) என்ன சொல்றீங்க புரியலை:)

பதிவோட தலைப்பு நல்லா இல்லையா? அது தான் தோணியது அந்த கணத்திற்கு:)

vandi vanthuduchu .. gotto go to u r other post .. hmm [kavidhaigal aachae :-)]
வண்டியை டைமுக்கு பிடிச்சிட்டீங்க போல:)
வாழ்த்துக்கு நன்றி:)

பகீ said...

நெருப்பு நரியில சரியா தெரியேல்ல. ஒருக்கா கவனியுங்கோ.

ஊரோடி பகீ

சேதுக்கரசி said...

சொன்னபடியே தமிழ்மணத்துக்கு வந்துட்டீங்க! சரி இனி கார்த்தி கிட்ட கேட்டு, எப்படி இந்த மறுமொழி திரட்டியில வர்றதுன்னெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தூள் கிளப்புங்க.

வேதா said...

@பகீ,
கண்டிப்பா கவனிக்கறேன்,நன்றி:)

@சேதுக்கரசி,
இப்ப கொஞ்சம் வேலைப்பளு கூடிய விரைவில் எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்கிறேன்:)

கீதா சாம்பசிவம் said...

நூறாவது பதிவை அடக்கமாகக் கொண்டாடி இருக்கும் வேதாவிற்கு தாமதமான வாழ்த்துக்கள். 200, 300 என்று மேலே மேலே வளரவும் வாழ்த்துக்கள். பாட்டி, நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?

வேதா said...

@கீதா,
வாழ்த்துக்கு நன்றி:) எல்லாரும் நலமாக உள்ளோம்:)

Syam said...

athu ethuku 49 odd ah mudikanum...athunaala 50 :-)

Anonymous said...

first time kaal padhikiren ...

adhulaye unga odambukku mudiyalanu paarthen, take care..edhachum chicken/mutton guniya varama paarthukonga..

shree said...

ungal sevai thodarattum! take care.