Wednesday, December 27, 2006

நான் ஒரு படிப்பாளி!


டிஸ்கி: இது நாட்டாமைக்கு, தலைப்பை பார்த்துட்டு இதுவும் அவுட் ஆப் சிலபஸ்ன்னு சொல்லி ஓடக்கூடாது,முழுசா படிச்சு பாருங்க, நம்ம குடும்ப மானத்தை கதை புத்தகம் படிச்சு தான் காப்பாத்தறேன், பாடப்புத்தகம் இல்லை:)

புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறதே அது ஒரு போதை என்றே சொல்லலாம். அந்த வகையில் நான் புத்தக போதையில் உழன்றுக் கொண்டிருப்பவள், சாலையில் நடந்து போகும் போது நம் காலில் வந்து உரசும் சிறு காகிதத்துண்டிலிருந்து, கடையில் சாமான் வாங்கினால் சுற்றிக் கொடுக்கும் காகிதம்,வேர்க்கடலை பொட்டல காகிதம் என்று எது கிடைத்தாலும் படிக்கும் பழக்கம் உண்டு.

இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துக்கொண்டு வருகிறது என்று சிலர் சொன்னாலும் கடந்த சில வருடங்களாய் இருந்த தொய்வு நிலையிலிருந்து இப்பொழுது புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். தொடர்ந்து பல வருடங்களாக சென்னையில் நடக்கும் வருடாந்திர புத்தக கண்காட்சிக்கு செல்வதால் என்னால் இதை உறுதியாக சொல்ல முடிகிறது.

சின்ன வயதிலிருந்தே எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. 7, 8 வயதிலிருந்தே வீட்டுக்கு வரும் கல்கி,விகடன் எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதில் என்ன தான் படிச்சு புரிஞ்சுக்கிட்டேன்னு தெரியலை, ஒரு வேளை, வெறும் படங்கள் மட்டும் தான் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். சிறிய வயதில் புத்தகங்களை அறிமுகப்படுத்துவது தான் சரி என்று நினைக்கிறேன்.

முதலில் நிறைய படங்கள் போட்ட புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து ராணி முத்து காமிக்ஸ் ,அம்புலிமாமா, இரும்புக்கை மாயாவி என்று ஆரம்பித்து நிறைய வார இதழ்கள், தொடர்கதைகள், பின் நாவல்கள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் மானாவாரியாக வீட்டுக்கு வரும் எல்லா புத்தகங்களும் படிக்க ஆரம்பித்தேன்(என்னிக்காவது உன் பாடப்புத்தகத்தை இப்படி படிச்சிருக்கியான்னு அசட்டுத்தனமா கேட்கக்கூடாது)பள்ளியில் படிக்கும் போது தொடர்கதை படிக்க வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். நான் மெதுவாக நழுவி வீட்டினருக்கு தெரியாமல் எல்லாம் படித்த காலம் உண்டு.

தமிழில் ராஜேஷ்குமார்,தேவிபாலா,சுபா போன்ற எழுத்தாளர்கள் தான் முதலில் எனக்கு தெரியும். அவர்களை தாண்டி படித்ததில்லை, ஆங்கிலத்தில் archies,asterix and obelix,tintin போன்ற காமிக்ஸ் ஒன்று விட்டதில்லை.

இப்படி ஒரு பாகுபாடும் இல்லாமல் படித்த நான் கல்லூரி காலத்திலும் அதற்கு பின்னும் தான் எனக்கு எந்த விதமான எழுத்துக்கள் பிடிக்கிறது என்று புரிந்துக் கொள்ள ஆரம்பித்தேன். தமிழில் அறிவியல் கலந்த சுஜாதாவின் நாவல்கள், ஆண்பெண் சமத்துவம், பெண்ணியம்,சமூகம் சார்ந்த பிரபஞ்சனின்,வாஸந்தியின் நாவல்கள் என்று தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.இவர்களின் எழுத்துக்கள் என் எண்ணங்களை,இயல்புகளை மாற்றினவை என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் காமிக்ஸ் மட்டுமே படித்து வந்த நான், கல்லூரியில் தான் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். மருத்துவம் சார்ந்து எழுதும் ராபின் குக்,அறிவியல் சார்ந்து எழுதும் மைக்கேல் கிரிக்டன் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.

ஒவ்வொரு புத்தகமும் நமக்கு புது உலகத்தை காட்டுகிறது.புத்தகத்தில் ஓடும் வரிகள் நம் மனக்கண்ணில் படமாக விரியும் போது நம் கற்பனை திறன் அதிகரிக்கிறது.

என்ன தான் அறிவியல் முன்னேற்றம் வந்து கணினியில் புத்தக்கங்கள் படிக்கும் வசதி வந்தாலும், ஒரு அமைதியான இடத்தில் அருமையான தேநீரை ருசித்துக்கொண்டே நமக்கு பிடித்த எழுத்தை நம் வசதிக்கேற்ப படிப்பது என்பது எதற்கும் ஈடாகாது.

பி.கு : விடுமுறை சமயம் என்பதால் எல்லாரும் காணாம போயிட்டாங்க, நாட்டாமை பழைய பஞ்சாயத்து நிறைய இருக்குன்னு பார்க்க போயிட்டார், மொ.ப. தலைவி(வலி) கீதா திடீர்னு வராங்க திடீர்னு போறாங்க, நாரதர் அம்பி சென்னையில் மழை பெய்யுதான்னு பார்க்கறேன்னு சொல்லி பாதி நாள் எஸ்கேப்,அவருக்கு பஜ்ஜி சொஜ்ஜி ஏற்பாடு பண்றதுல திராச பிஸி,சுகாதார துறை அமைச்சர் ப்ரியா மத்த மாகாணத்துல எல்லாம் சுத்தபத்தமா இருக்காங்களான்னு பார்க்க போயிட்டாங்க, தலைவர் கடலை கார்த்திகேயன் அமைச்சரவை மாற்றத்துல மும்முரமா இருக்கார். அதனால் நானும் நம்ம கட்சி மானத்தை(!) காப்பாத்த தென்மாவட்ட சூறாவளி சுற்றுப்பயணத்தை இன்று மேற்கொள்கிறேன். எனவே அடுத்த வருடம் திரும்பி வந்து பட்டையை கிளப்பி விடலாம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பி.கு.கு: புதன்(27/12/2006) முதல் திங்கள்(1/1/2007)வரைக்குமான திருப்பாவை பாடல்களை ஒரே பதிவாக இன்று போட்டுள்ளேன். அதையும் படித்து விடுங்கள், வந்தவுடன் கண்டிப்பாக சர்க்கரை பொங்கல் உண்டு. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலருடைய வலைப்பக்கங்களுக்கு வர முடியவில்லை, என் வலைப்பக்கமே போக முடியவில்லை, ஊரிலிருந்து திரும்ப வந்தவுடன் எல்லார் வீட்டுப்பக்கமும் வந்து அட்டெண்டஸ் கொடுத்து விடுகிறேன் :)

49 comments:

Anonymous said...

aaha.... me too a book paithiyam. chinna vayasula amma kitta baingarama thittu vizhum... kulikkama, sapdama book-um kaiyyuma iruppen. :-D
-Viji

Anonymous said...

Humor pudikkum nna P.G.Wodehouse padinga... :)) My fav author.
-Viji

Anonymous said...

And yeah... Advance wishes for a very and prosperous Happy New Year! :))
-Viji

Anonymous said...

And yeah... Advance wishes for a very and prosperous Happy New Year! :))
-Viji

ambi said...

nalla karuthumikka pathivu! (apdi thaan muthala commenta start pannanum!)

intha sloga books ellam padikara vazhakkam illaya? :p

inime chennai ellam vara mudiyathu! apichla velai ellam ekkachakama seyya solraanga! :(

Anonymous said...

நம்ம தான் firstஅ?

G3 said...

Wishing you a Happy and Prosperous New Year 2007!!!

Happy vacation too!!!

//என்ன தான் அறிவியல் முன்னேற்றம் வந்து கணினியில் புத்தக்கங்கள் படிக்கும் வசதி வந்தாலும், ஒரு அமைதியான இடத்தில் அருமையான தேநீரை ருசித்துக்கொண்டே நமக்கு பிடித்த எழுத்தை நம் வசதிக்கேற்ப படிப்பது என்பது எதற்கும் ஈடாகாது.//
correctunga.. enna dhaan computer screenla padichaalum andha booka kaila vechu padikkara effectu varaadhu :) adhulayum konjam periya bookellam padikkum bodhu kai valichaalum paravaa illannu break edukkama padikkara sugam irukkae.. chancae illa :)

Anonymous said...

// 7, 8 வயதிலிருந்தே வீட்டுக்கு வரும் கல்கி,விகடன் எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன்.//
same Pinch! naanum. puthagam endraal uyir enakkum.

elaarukum antha palakkam varuvathu illa. aana vanthavarkku athu viduvathu avvalovu sulabamilla... நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பா இது ஒரு போதை தாங்க!

//தமிழில் ராஜேஷ்குமார்,தேவிபாலா,சுபா போன்ற எழுத்தாளர்கள் தான் முதலில் எனக்கு தெரியும். அவர்களை தாண்டி படித்ததில்லை, ஆங்கிலத்தில் archies,asterix and obelix,tintin போன்ற காமிக்ஸ் ஒன்று விட்டதில்லை.//
எனக்கு சுபா தான் firstu தெரியும்.
English booksக்கு இன்னொரு same pinch!

Sandai-Kozhi said...

புது வருட வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.Have a wonderful holidays and a very happy Newyear Vedha.--SKM

மு.கார்த்திகேயன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வேதா..

சூறாவளி பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

Arunkumar said...

first comment :)

Arunkumar said...

//
என்ன தான் அறிவியல் முன்னேற்றம் வந்து கணினியில் புத்தக்கங்கள் படிக்கும் வசதி வந்தாலும், ஒரு அமைதியான இடத்தில் அருமையான தேநீரை ருசித்துக்கொண்டே நமக்கு பிடித்த எழுத்தை நம் வசதிக்கேற்ப படிப்பது என்பது எதற்கும் ஈடாகாது
//

ரொம்ப சரியா சொன்னீங்க.
நல்ல பதிவு.

லீவ நல்லா என்சாய் பண்ணுங்க...

Wish you and your loved ones, a very Happy and Prosperous New Year 2007 :)
(english new year , so english wish :))

Bharani said...

Veda Madam....Wishing You a Very Happy & Prosperous New Year :)

Neengalum tour-la irukeengala....ensai :)

Syam said...

thangachi....ippavum thalaipa matum paarthitu poren...appurama padikaren..puriyuth ithu out of syllabus illa but am running out of time... :-)

Syam said...

Wish you a Wonderful New Year!!!

தி. ரா. ச.(T.R.C.) said...

அப்பாடா விடுதலை விடுதலை....

மனிதனின் மிகச்சிறந்த நண்பன் புத்தகங்கள்.எனக்கும் அந்த கெட்டப் பழக்கம் உண்டு . புத்தகத்தை கையில் எடுத்து விட்டால் முடிக்கும் வரை விடமாட்டேன். நிறையத் திட்டு வாங்குவேன். எல்லாரிடத்திலும்

shree said...

great! nanum thundu paper vidama padicha kalangal undu. school leave timela, lunch mudichitu padutha vaakkula book padichikitte thoongi poradhu was my favourite hobby. ippo booksa...? apdeena?
i like balakumaran also

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வேதா..

என்னைப் பற்றி எழுதிய பதிவோன்னு நினைக்கிற அளவுக்கு அவ்வளவு ஒத்துமை.. ரோட்டுல போறப்ப சினிமா போஸ்டர் படிக்கிறதுல இருந்து, ஒண்ணு விடாம படிச்சவன் நான்.. பரவா இல்லை.. நம்ம கொ.ப.செவும் அப்படித்தன்னு நினைக்கிறப்போ, சந்தோசமா இருக்கு..

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு தோழியே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

indianangel said...

wishing you and your family members a wonderful new year with cherishing happiness and everlasting health Usha! ungaloda indha thiruppavai enakku neenga mail'la anuppa mudiyuma! idha naan porumaiya appurma padikkaren! :)

Delhi_tamilan said...

wish u a happy new year

G3 said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

கீதா சாம்பசிவம் said...

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் வேதா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும். ஊருக்குப் போயிட்டு வந்தாச்சா?

நாகை சிவா said...

பெரிய படிப்பாளி தான் போல....
கண்ணக்கட்டுது.

:-)

Ravi said...

am the first one ... !!!!
so addtional chakara pongal venum !!!

Ravi said...

wishing u a very happy and a prosperous new year .. and thanx for making this year more cheerfull ...

Anonymous said...

aiya, enakkum books padikira palakkam undu, adhelaam appo, ippo time'ey kidaika maaatengudhu'nu poi solla maaaaten, ( book edhuvum kidaika maaatengudhu).. he he he..

Wish u a Happy New Year 2007

smiley said...

Wish you a HAppy New Year :)

Raju said...

Wish you and your family a very happy New year!!

கீதா சாம்பசிவம் said...

ஹெல்லோ படிப்பாளி, இன்னுமா படிச்சிட்டு இருக்கீங்க? இல்லை, பதிவு போட்டு எனக்கு வழக்கம்போல் கண்ணாமூச்சி ஆடுதா?

Anonymous said...

happy new year Veda.

:)

வேதா said...

@விஜி,
நான் இப்பவும் திட்டு வாங்கறதுண்டு:)

/P.G.Wodehouse padinga... /
அவருடைய புத்தகங்களும் இருக்கு ஆனா படிச்சதில்லை கண்டிப்பா முயற்சிக்கிறேன்:)

@அம்பி,
/apdi thaan muthala commenta start pannanum!)/
இது சொல்லி தெரியணுமா என்ன? நாங்களே புரிஞ்சுப்போம்:)

சுலோகங்கள் சின்ன வயசுல அம்மா சொல்லிக் கொடுத்தது கொஞ்சம் தெரியும் மத்தபடி கடவுளிடம் எல்லாம் டைரக்ட் பேச்சுவார்த்தை தான்,சுலோகமெல்லாம் அவ்வளவு சொல்றது இல்லை:)

/apichla velai ellam ekkachakama seyya solraanga! :(/
அட அப்டியா சொல்லவேயில்லை:)

@ட்ரீம்ஸ்,
ஹிஹி இல்லை நீங்க ரொம்ப கனவுல முழுகி சர்க்கரை பொங்கலை மிஸ் பண்ணிட்டீங்க:)

வேதா said...

@ஜி3,
/adhulayum konjam periya bookellam padikkum bodhu kai valichaalum paravaa illannu break edukkama padikkara sugam irukkae.. chancae illa :) /
அட ஆமாங்க அப்டியே தூக்கம் வந்தா அதையே தலைக்கு வச்சுக்கிட்டு தூங்கிடலாம்:)

@ட்ரீம்ஸ்,
ஆஆஆஆஅ..........
பயங்கர ஒற்றுமைன்னு சொல்லி பயங்கரமா கிள்ளிட்டீங்க:)வலிக்குது:)

@skm,
வாழ்த்துக்களுக்கு நன்றி:)நான் வரலேன்னா கூட நீங்க அப்பப்ப இங்க வந்து போறதுக்கு நன்றிங்க:)

@கார்த்தி,
சூறாவளி பயணம் வெகு அமர்க்களமாக நடந்து இப்ப புயல் கரை கடந்து போயிடுச்சு:)நம்ம கட்சி மானத்தை நிலைநாட்டிட்டோம்ல:)

வேதா said...

@அருண்,
முதல் கமெண்டை மிஸ் பண்ணிட்டீங்க:)
vaazthukaluku nanri(neenga englipeesla wish paninathuku naanum thanglipeesla solten:)

@பரணி,
நான் டூர்ல போன கேப்புல நீங்க வந்து நிறைய போஸ்ட் போட்டுட்டீங்க போல இதோ வந்து படிக்கிறேன்:)

@ச்யாம்,
நாட்டாமை நீங்க தீர்ப்பு சொன்னா அது சரியா தான் இருக்கும்:) நீங்க போய் பதினெட்டு பட்டி பஞ்சாயத்தையும் முடிச்சுட்டு வாங்க:)

வேதா said...

@திராச,
/அப்பாடா விடுதலை விடுதலை..../

அம்பி இனிமே சென்னை பக்கம் வர போறதில்லைன்னு சொன்னாரே அதனால இப்டியெல்லாம் பாட்டு பாடி கொண்டாடுறீங்களா?:)

/எனக்கும் அந்த கெட்டப் பழக்கம் உண்டு . புத்தகத்தை கையில் எடுத்து விட்டால் முடிக்கும் வரை விடமாட்டேன். /
ஆமா பின்ன நாமெல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க தான:)

@ஷ்ரீ,
இப்பல்லாம் படிக்கறது இல்லையா? பாவம் குடும்ப(இ)ஸ்திரி வேற:)சரி உங்க குழந்தை எப்டி இருக்கா?

@கார்த்தி,
/நம்ம கொ.ப.செவும் அப்படித்தன்னு நினைக்கிறப்போ, சந்தோசமா இருக்கு.. /
ஹிஹி தலைவர் எவ்வழியோ 'கொ.ப.செ'வும் அவ்வழியே:)
வாழ்த்துக்கு நன்றி தலைவா:)எல்லா ப்ளாகிலும் இதையே காப்பி பேஸ்ட் பண்ணிட்டீங்களா?:)

வேதா said...

@ப்ரசன்னா,
என்ன உங்க உறக்கத்துலிருந்து எழுந்து வந்துட்டீங்களா?:)
வாழ்த்துக்களுக்கு நன்றி, மெயிலில் அனுப்பறதுக்கு முயற்சி செய்யறேன்:)

@dt,
ஆகா வந்துட்டாரய்யா வந்துட்டாரு:)வாழ்த்துக்கு நன்றி:)

@ஜி3,
நன்றி:)நீங்களும் சில்வர் ஜுப்ளி கொண்டாடினதா கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள்:)

வேதா said...

@கீதா,
வாழ்த்துக்கு நன்றிங்க:) ஊருக்கு போயிட்டு நேற்று தான் வந்தேன்.

@சிவா,
இதுக்கே கண்ண கட்டிடுச்சா?:) புலி என்ன பதுங்குது?:)

@ரவி,
வந்ததே லேட் இதுல சர்க்கரை பொங்கல் வேறயா?:)கண்டிப்பா எல்லாருக்கும் இந்த மாசத்துல ஒரு நாள் உண்டு:) வாழ்த்துக்களுக்கு நன்றி:)

வேதா said...

@gops(md)
என்ன இப்டி சொல்றீங்க சென்னைக்கு வந்தப்ப அள்ளிட்டு போயிருக்கலாம் இல்ல:)வாழ்த்துக்களுக்கு நன்றி:)

@sundar,smiley,raju

thanks a lot and wish u the same friends:)

@கீதா,
எங்கையும் போகல இங்க தானிருக்கேன்:) உங்க பதிவு தான் கண்ணாமூச்சி ஆடும் எங்க வலைப்பக்கமெல்லாம் நல்லா தான் இருக்கு:)

கீதா சாம்பசிவம் said...

அது சரி, நாயகனுக்கு "கங்கூலியை"ப் பத்தி மொக்கைப் பதிவு எழுதறதுக்கு விளம்பரம் கொடுக்கவே நேரம் பத்தலை. பதிவு எங்கே எழுதறது?
இந்தக் கங்கூலி வந்ததும் பாருங்க இந்தியா டெஸ்ட் மாட்சிலே தூள் கிளப்பிடுச்சு இல்லை? :D

வேதா said...

@கீதா,
உங்களுக்கு பொறாமை என் தம்பியோட அருமையான பதிவைப் பார்த்து:D உங்களுக்கும் ஒரு விளம்பரம் கொடுக்கலாம்னு பார்த்தேன்,இப்ப அந்த ஐடியாவை ட்ராப் பண்ணிட்டேன்:)
சரி அந்த பதிவை நீங்க படிச்ச மாதிரியே தெரியலையே:)

Arunkumar said...

ennoda first commentunu sonnen veda :)

Anonymous said...

வேதா,

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

ம்ம் நீங்களுமா..
பு.பிரியர்
ஆனா நான் புத்தகத்த படிக்க ஆரம்பிச்சா பின்னாடி இருந்த்து படிப்பேன்.. அதுவும் இந்த ஆனந்தவிகடன் ன சொல்லவே வேண்டாம்

இப்ப i am missing tamil books.
antha smell..

கீதா சாம்பசிவம் said...

ப்ளாக்கர் ப்ராப்ளமா என்னன்னு புரிஅலை, நேத்தி என்னோட கம்ப்யூட்டர் மெகானிக்கைக் கூடக் கூப்பிட்டுக் கேட்டாச்சு. சில பதிவுகள் வரதே இல்லை. சில பதிவுகள் பாதி தான் தெரியுது. உதாரணமா என்னோட ப்ளாகிலேயே 174 வரை ஒரு இடத்திலேயும் அதுக்கு அப்புறம் போட்டது வேறே இடத்திலே இருந்தும் பார்க்க வேண்டி இருக்கு. கைப்புள்ள கூட உதவி செய்யறேன்னு ஏதோ தரவிறக்கம் செய்து கொள்ளச் சொல்லி அனுப்பச் சொன்னார். இந்த "KK" மாதிரி தலையைப் பிச்சுக் கொண்டது தான் மிச்சம். அதான் நீங்க ஏதும் எழுதினீங்களான்னு கேட்டேன். இன்னிக்குப் போறேன், உங்க பாசமலரின் பதிவுக்கு. பார்க்கலாம் வருதான்னு.

கீதா சாம்பசிவம் said...

என்ன ஆச்சு? என்னோட கமெண்ட்டே கிட்டத் தட்ட 4 ஆயிடுச்சு. கமெண்ட் ஹிட் கொடுக்கவா? ஆளையே காணோம்?

Jeevan said...

That's Great veda!!! I realize it only 3 years back, when we buy news papers reguarly, by reading only we can learn much.

Hope u had a nice trip:)

நாகை சிவா said...

விசயம் தெரியல, புரியல. அதான் பதுங்குது.....:-)

வேதா said...

@ப்ரகாஷ்,
/நான் புத்தகத்த படிக்க ஆரம்பிச்சா பின்னாடி இருந்த்து படிப்பேன்../
ஹிஹி இப்ப சமீபகாலமா நானும் அப்படி படிக்க ஆரம்பிச்சுருக்கேன்:)

@ஜீவ்,
ட்ரிப் நல்லா இருந்தது ஜீவ்:)

@சிவா,
ஆமா புலி இப்ப இந்தியாவுல உலவுதுன்னு கேள்விப்பட்டேன், உண்மையா?:)

பரத் said...

நல்ல பதிவு வேதா.
//புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்//
மிகவும் சரி.Happy to see another puththaga paithiyam.

மனதோடு மனதாய் said...

நல்லா எழுதுறீங்க.

இதையும் கொஞ்சம் படிங்க.

http://manthodumanathai.blogspot.com/2008/02/blog-post.html