திருப்பாவை பாடல் - (18-26)
திருப்பாவை பாடல் - 18 (02/01/2007)
"உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்.
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி உன்மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்."
பொருள்:
மதநீர் பெருகும் யானையை போல் வலிமையும் பகைவரை கண்டு அஞ்சி ஓடாத வலிமையான தோள்களையும் உடையவனான நந்தகோபனின் மருமகள் நப்பின்னையே, நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே கதவை திற! பொழுது விடிந்து நாற்புறமும் கோழிகள் கூவுகின்றன, குருக்கத்திக் கொடிகளில்(மாதவி பந்தல்) மீது குயில்கள் அமர்ந்து கூவுவதைக் கேள்!
பந்து பொருந்திய விரல்களை உடையவளே நாங்கள் கண்ணனின் பேர் பாட வந்துள்ளோம். உன் தோள் வளைகள் ஒலி எழுப்ப நீ எழுந்து வந்து, உன் செந்தாமரை கையால் கதவை திறவாய்!
திருப்பாவை பாடல் - 19 (03/01/2007)
"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டின்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்"
பொருள்:
குத்து விளக்குகள் நாற்புறமும் சுடர் விட்டெரிய யானைதந்தத்தால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டிலில், மென்மையான சயனத்தில்(படுக்கையில்), கொத்து கொத்தாக பூக்களை கூந்தலில் சூடிக்கொண்டு உறங்குகின்ற நப்பினையின் மார்பில் தலை வைத்து படுத்துறங்கும் கண்ணா நீ வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் பேசு! மை பூசியுள்ள அழகிய கண்களை உடைய நப்பின்னையே! அவனை விட்டு சிறிது நேரமும் பிரிய மனமில்லாததால் எவ்வளவு நேரமாகியும் கண்ணனை துயிலெழுப்பாமல் இருக்கிறாயே, இது உன் குணத்திற்கு தகுமோ?
(முந்திய பாடலில் நப்பின்னையை எழுப்பிவிட்டு இப்பாடலில் அவள் மேல் படுத்துறங்கும் கண்ணனை எழுப்புகின்றனர்)
திருப்பாவை பாடல் - 20 (04/01/2007)
"முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்ப முடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பங் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்"
பொருள்:
முப்பத்து மூன்று தேவர்களுக்கும் துன்பம் வரும் முன்பே அவர்கள் நினைத்த இடத்திற்கு சென்று அவர்களின் நடுக்கத்தை போக்கும் வலிமையுடையவனே! உன் உறக்கத்திலிருந்து எழுந்திராய்! தன்னிடம் அடைக்கலம் என்று வந்தோரை காப்பவனும்,வலிமையுடையவனும் அவர்களின் பகைவருக்கு துன்பம் கொடுப்பவனுமான தூய்மையானவனே எழுந்திராய்! கலசம் போன்ற மென்மையான முலைகளையும், பவளம் போன்ற சிவந்த வாயினையும், அழகிய சிறு இடையினையும் கொண்ட நங்கை நப்பின்னையே! திருமகளே! நீ துயிலெழுந்து வந்து எங்கள் நோன்புக்கு தேவையான விசிறியும்(உக்கமும்),கண்ணாடியும்(தட்டொளி) கொடுத்து உன் மணாளனான கண்ணனும் நாங்களும் நீராட வழி செய்வாயாக!
திருப்பாவை பாடல் - 21 (05/01/2007)
"ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்ற மாய்நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்"
பொருள்:
கலங்களில்(பாத்திரங்களில்)கறந்த பாலானது பொங்கி வழியும் அளவிற்கு இடைவிடாது பால் சுரக்கும் நல்ல வளமை மிக்க பசுக்களை உடைய நந்தகோபருடைய மகனே! பொழுது விடிந்ததை அறிவாயாக! வலிமைமிக்கவனே! அனைவருக்கும் பெரியவனே! இவ்வுலகில் தோற்றமளிக்கும் ஒளி படைத்தவனே! துயிலெழு! பகைவர்கள் உன் வலிமையை அறிந்து தங்கள் வலிமையை உன்னிடத்தில் தொலைத்து உன் வாசலில் வந்து உன் திருவடிகளை பணிவது போல் நாங்களும் உன்னை போற்றி புகழ வந்துள்ளோம்.
திருப்பாவை பாடல் - 22 (06/01/2007)
"அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டுங்கொண் டெங்கள்மேல்
நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்."
பொருள்:
இந்த அகன்ற பூமியை ஆண்ட அரசர்கள் எல்லாரும் தங்கள் அகங்காரத்தையெல்லாம் விட்டு உன் கட்டிலின் அடியில் வந்து காத்திருப்பது போல் நாங்களும் உன் அன்பை வேண்டி வந்து காத்திருக்கிறோம். சலங்கையின் மணி போல, பாதி மலர்ந்த தாமரைப் பூப்போன்ற உன் அழகிய சிவந்த கண்கள் சிறிது சிறிதாக திறந்து எங்கள் மீது உன் பார்வை விழக்கூடாதா? சந்திரனும், சூரியனும் ஒரே சமயத்தில் தோன்றுவது போல் உன் அழகிய இரண்டு கண்களாலே எங்களை நோக்கினால் நாங்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி விடாதோ?
திருப்பாவை பாடல் - 23 (07/01/2007)
"மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்த்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா உன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத் திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்."
பொருள்:
மழைக்காலத்தில் மலைக்குகையில் தன் துணையோடு உறங்கி கிடந்த சிங்கமானது விழித்துக் கொண்டு தன் எதிரிகளை அழிக்க, கண்களில் தீப்பொறி பறக்க, பிடரி மயிர் சிலிர்த்துக் கொள்ள, உடலை உதறி நிமிர்ந்து கர்ஜனையிட்டுக் கொண்டே குகையிலிருந்து வெளி வருவது போல, காயாம் பூ போன்ற நிறமுடைய நீயும் உன் கோயிலிலிருந்து வெளியே வந்து இங்கு எழுந்தருளி அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் இங்கு வந்துள்ள காரணத்தை கேட்டு எங்களுக்கு அருள் செய்வாயாக!
திருப்பாவை பாடல் - 24 (08/01/2007)
"அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று படைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்."
பொருள்:
மாபலி சக்ரவர்த்தியிடம் இரந்து பெற்று அன்று இந்த உலகத்தையே அளந்த திருவடிகளை போற்றுகின்றோம், சீதையை மீட்க இலங்கைக்கு சென்று இராவணனை வென்ற உன் தோள் வலிமையை போற்றுகின்றோம், சகடாசுரனை உதைத்து அழித்த உன் புகழை போற்றுகின்றோம், கன்று வடிவில் வந்த அசுரனை எறிதடியாய் கொண்டு கபித்தாசுரன் என்னும் அசுரனின் மீதெறிந்து இருவரையும் அழித்தவனே உன் திருவடிகளை போற்றுகின்றோம், இந்திரனின் கோபத்திலிருந்து இடையர்களை காப்பாற்ற கோவர்த்தனகிரி மலையை குடையாய் பிடித்தவனே உன் குணத்தைப் போற்றுகின்றோம், பகைவர்களையெல்லாம் வெல்லும் உன் கையில் உள்ள வேலை போற்றுகின்றோம். இவ்விதம் உன் புகழை என்றென்றும் பாடி உன்னிடம் அருள் பெற இன்று வந்துள்ள எங்களுக்கு அருள் புரிவாயாக!
திருப்பாவை பாடல் - 25 (09/01/2007)
"ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்."
பொருள்:
தேவகிக்கு மகனாய் அவதரித்து பின் அதே இரவில் யசோதையின் மகனாய் மாறி கம்சனின் கண்ணில் படாமல் வளர்ந்து வந்தவனே! தனக்கு தெரியாமல் வளர்ந்து வருவதை அறிந்ததும் பின் நடக்க போவதை அறியாமல் உனக்கு தீங்கு நினைத்த கம்சனின் நினைப்பை தவறாக்கி அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமாலே! உன்னை பிரார்த்தித்து வந்த எங்களின் குறிக்கோளை நிறைவேற்றினால் உன் பிராட்டியான லட்சுமி ஆசைப்படும் செல்வத்தையும், அதை காக்கவல்ல உன் வீரியத்தையும் நாங்கள் பாடி எங்கள் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம்!
திருப்பாவை பாடல் - 26 (10/01/2007)
"மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத் துன்பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப்பெ ரும்பறையே, பல்லாண்டி சைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்."
பொருள்:
அடியாருக்கு எளியவனான திருமாலே! நீலமணி போன்ற நிறமுடையவனே! மார்கழி நீராடி பாவை நோன்பை மேற்கொள்ள நாங்கள் வந்துள்ளோம், அதற்கு எங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் யாதெனில், உலகத்தையெல்லாம் நடுங்கச்செய்யும் ஒலி உடையதும், பால் வண்ணமும் கொண்ட உன் பாஞ்சசன்னியத்தை போன்ற சங்குகளும், பெரியதான வாத்தியங்களும்(பறை), பல்லாண்டு பாடுபவர்களும், மங்கல தீபங்களும், கொடிகளும், பல்லக்கு,தேர் போன்றவை மேலே கட்டியிருக்கும் பட்டுத்துணிகளும்(விதானம்) ஆகியவையே. ஊழிக் காலத்தில் ஆலிலை மீது பள்ளிக் கொள்பவனே! இவற்றை நீ எங்களுக்கு தந்துருள வேண்டுகிறோம்.
19 comments:
அஹா இந்தப்பாட்டிலும் பாருங்கள் ஆண்டாளின் பறவைகளைப்ப்ற்றிய ஆராய்ச்சியை வெளியிடுகிறார்.Birdwatching society president in those times.
//மதநீர் பெருகும் யானையை போல் வலிமையும் பகைவரை கண்டு அஞ்சி ஓடாத வலிமையான தோள்களையும் உடையவனான நந்தகோபனின் மருமகள் நப்பின்னையே//
kalakareenga! ithu madhiri ellam thriupaavai engalukku solli naanga thiruntha help pannum vedakku enathu manamaarntha valthukkal!
@திராச
உண்மை தான், மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு அர்த்தமும் மிகவும் ஆழ்ந்து பார்க்கும் போது பல உள்ளர்த்தங்கள் நிறைந்த பாடல்கள் தான் ஆண்டாளின் திருப்பாவை.
இந்த சுட்டியில் சென்று படித்து பாருங்கள்.
@dreamzz,
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே:) நான் ஏதோ ஒரு சில புத்தகங்களின் உதவியோடு இன்னும் எளிமையான விளக்கத்தோடு இங்கே கொடுக்க முயற்சித்துள்ளேன். இது வெறும் ஒரு துளி தான் ஆழ்ந்து சென்றால் பெரும் கடலாகி விடும். அந்த அளவிற்கு தகுதியும்,ஞானமும் எனக்கில்லை:)
Migavum Arumai.....Very nice to read.
Nalla visayangala share pannareenga...Pls keep going.Thanks for your time.
- Hayagriva Dasan
Veda, unga New Year wishes-kku nandri. Ungalukku ungal kudumbathinar anaivarukkum enadhu Puthaandu nal vaazhthukkal!!
//அந்த அளவிற்கு தகுதியும்,ஞானமும் எனக்கில்லை:)
// athu naanga sollanum!
புத்தாண்டு வாழ்த்துக்கள் வேதா. திருப்பாவை தொடர் அருமையா போயிட்டிருக்கு.
Happy new year 2007 Veda..:)
Completely out of syllabus....irundalum padika try panren...one at a time...dont mistake
romba theliva iruku unga porulurai...super...continue pannunga...may be i will fwd to few of my friends who are really into this thirupaavai and thiruvempaavai learning....
naan appa appa vandhu tamizh kathukitu poren :)
Appuram oru marquee potu irukeengala....super-ana quotes...adhu enna geethai irukara quotes-a??
Veda,
Iniya puthaandu nalvaazhthukal. Coming after a long logn time. :)
வேதா,
சைலண்ட ரீட் பன்னிகிட்டு இருக்கேன்,,
happy new year ..!!!
@ஹயக்ரீவ தாசன்,
நன்றி, தொடர்ந்து படியுங்கள்:)ஏதேனும் தவறிருந்தால் தயங்காமல் சொல்லவும்.
@ரவி,
நன்றி:) புத்தாண்டில் புதிய பதிவை பதிக்கலாமே:)
@ட்ரீம்ஸ்,
ஹிஹி எல்லாம் ஒரு தன்னடக்கம்தேங்:)
@ப்ரியா,
நன்றி உங்க விடுமுறை கொண்டாட்டம் எல்லாம் நல்லா போச்சா?:)
@கோப்ஸ்,
நன்றி:)
@பரணி,
அவசரமில்லை மெதுவாகவே படியுங்கள்:)
நான் சொன்ன மாதிரி இம்போசிஷன் எழுதியிருக்கீங்க,வெரிகுட்:) 10 சொன்னேன், 4 தான் வந்துருக்கு பரவாயில்லை:)
marquee quote is actually a translation of the english quote,
'HE WHO KNOWS THAT HE KNOWS NOT KNOWS EVERYTHING,HE WHO KNOWS NOT THAT HE KNOWS NOT KNOWS NOTHING'
இந்த பொன்மொழியை சின்ன வயசுல ஆங்கிலம்,தமிழ் இரண்டு மொழியிலும் தினமும் டேபிள்ஸ் சொல்ற மாதிரி என் சித்தப்பா மனப்பாடம் செய்ய வச்சாரு:)
@ராம்,
தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் ராம், நன்றி:)
@ப்ரகாஷ்,
ரீடுங்க ரீடுங்க:)
நன்றி:)
//10 சொன்னேன், 4 தான் வந்துருக்கு பரவாயில்லை:)///...appadi ippadinu adjust panni 10 potudarenga...license edukum podhu kooda 8 dhaan poten....adhan 10 poda konjam kastama iruku :)
//'HE WHO KNOWS THAT HE KNOWS NOT KNOWS EVERYTHING,HE WHO KNOWS NOT THAT HE KNOWS NOT KNOWS NOTHING'//.....Ippave kanna kathudu :(
idha manapaadam panni thamizh padhithi irukeengale...deivam :)
@பரணி,
அது அந்த பயம் இருக்கட்டும்:)
/idha manapaadam panni thamizh padhithi irukeengale...deivam :)/
பின்ன காலங்கார்த்தால் எழுந்தவுடன இதை தான சுப்ரபாதம் மாதிரி ஒப்பிக்க வச்சாரு எங்க சித்தப்பா,தூக்கத்துல எழுப்பி கேட்டா கூட சொல்லனும்:)
Post a Comment