Thursday, January 11, 2007

யாருக்கு வேணும் சர்க்கரை பொங்கல்? :) திருப்பாவை பாடல் (27-29)

என்னடா இது பொங்கலே இன்னும் வரல அதுக்குள்ள சர்க்கரை பொங்கலை பற்றி சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? மார்கழி மாதம் 27வது நாளான இன்று கூடாரவல்லி என்று சொல்வர். அதாவது இன்று மார்கழி நோன்பிருப்பவர்கள் பாலில் அரிசி சேர்த்து செய்யப்படும் அக்காரவடிசல் என்ற இனிப்பு பதார்த்தத்தை செய்து கடவுளுக்கு படைப்பர். எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்து நைவேத்தியம் செய்வோம்.திருப்பாவையின் முதல் 5 பாசுரங்கள் மார்கழி நோன்பை பற்றியும் அதை எப்படி மேற்கொள்வது என்பதையும் சொல்கிறது. 6-15 பாடல்களில் தன் தோழிகளை எழுப்புகின்ற ஆண்டாள், 16வது பாடலில் கண்ணின் வீட்டிற்கு வந்து வாயில் காப்பானை எழுப்புகிறாள், தொடர்ந்து வரும் பாடல்களில் நந்தகோபன்,யசோதை,பலராமன்,நப்பின்னை, அவள் மார்பின் மீது படுத்துறங்கும் கண்ணனையும் எழுப்புகிறாள். 23வது பாடலில் கண்ணன் எழுந்திருப்பதையும், 24இல் அவன் அவதாரங்களை புகழ்ந்தும், 27வது பாடலான இந்த பாசுரத்தில் 'மார்கழி நோன்பு முடியும் தருவாயில் உள்ளது, உன்னை நாங்கள் பாடி உன் அருளை வேண்டுகிறோம், இத்தனை நாள் ஆபரணங்கள் அணியாமல், கண்ணுக்கு மை எழுதாமல், மலர் சூடாமல், நெய், பால் ஆகியவை உண்ணாமல் பாவை நோன்பை மேற்கொண்டு உன் புகழ் பாடினோம், நீ எங்களுக்கு அருள் செய்து நாங்கள் வேண்டுவன தா என்று சொல்கிறாள்'.எங்கள் வீட்டிலும் இன்று சர்க்கரை பொங்கல் செய்தார்கள். நன்றாக முழங்கை நெய் வழிய சுடச்சுட சர்க்கரை பொங்கல் நாங்க சாப்டாச்சு, உங்களுக்காக இதோ இங்கேயும் தருகிறேன், நல்லா சாப்பிட்டு என்சாய் பண்ணுங்க:)திருப்பாவை பாடல் - 27 (11/01/2007)

"கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பகைவரை வெல்லக்கூடிய வலிமையுடைய கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடிப் புகழ்ந்து உன் அருளை பெற வேண்டியதால் நாங்கள் பெறும் சன்மானங்கள் யாதெனில்,சூடகம்(வளை), தோள்வளைகள்(வங்கி),தோடுகள்,பூவின் வடிவில் இருக்கும் ஆபரணங்கள், காலில் அணியப்படும் ஆபரணங்கள் ஆகியவை. அதோடு மட்டுமல்லாமல் புத்தம் புது ஆடைகள் அணிந்து, முழங்கை வரை நெய் வழியும் அளவிற்கு பால் சோறும் உள்ளம் குளிர உண்டு மகிழ்வோம்.


திருப்பாவை பாடல் - 28 (12/01/2007)

"கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா!நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்."

பொருள்:

பசுக்களை மேய்த்துக் கொண்டு அதன் பின்னே சென்று காடுகளில் நாங்கள் ஒன்று கூடி உண்போம்.அதிகம் அறிவை பெறாத ஆயர்குலத்தை சேர்ந்தவர்களான எங்களுள் ஒருவனாக நீ பிறந்த புண்ணியம் செய்தவர்கள் நாங்கள். குறை ஒன்றுமில்லாத கோவிந்தனே நமக்குள் இருக்கும் இந்த உறவானது உன்னாலும், எங்களாலும் என்றும் ஒழிக்க முடியாதது. ஒன்றும் அறியாத பிள்ளைகளான நாங்கள் அன்பினால் உன்னை சிறு பெயரிட்டு அழைத்தால் எங்கள் மீது கோபம் கொள்ளாதே இறைவனே! நாங்கள் வேண்டும் பறை எங்களுக்கு அளிப்பாயாக.திருப்பாவை பாடல் - 29 (13/01/2007)

"சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்து, நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றாமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்."

பொருள்:

இந்த அதிகாலைப் பொழுதில் இங்கு வந்து உன்னை வணங்கி உன் தாமரை மலர் போன்ற திருவடிகளை நாங்கள் போற்றுவதன் காரணத்தை கேட்பாயாக! மாடு மேய்க்கும் ஆயர் குலத்தில பிறந்த நீ, நாங்கள் செய்யும் சிறு தொண்டுகளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வாயாக! கோவிந்தனே நாங்கள் உன்னிடம் அருள் வேண்டி இன்று மட்டும் வரவில்லை இனி என்றும், ஏழேழு பிறவிக்கும் உன்னோடு உறவு கொள்வோம், உனக்கு மட்டும் நாங்கள் பணி செய்வோம், இதை தவிர எங்கள் மற்ற விருப்பங்களை நீ மாற்றி விடு.

35 comments:

மு.கார்த்திகேயன் said...

முதல் பின்னூட்டமா, வேதா..

மு.கார்த்திகேயன் said...

நெய் வழிய வழிய பொங்கல் உண்டுவிட்டு வாசத்தை காண்பித்தால் கூட பரவாயில்லை, இப்படி படத்தை காண்பிக்கிறீர்களே வேதா..

மு.கார்த்திகேயன் said...

கண்ணில் பார்த்து சுவைத்தேன் பொங்கலை.. அதேற்கேற்ப போட்ட பாடலும் அந்த சுவையை உள்ளத்துக்கு கொண்டு போனது வேதா..

மு.கார்த்திகேயன் said...

முதல் பின்னூட்டம்னா அந்த பொங்கலை பார்சலில் அனுப்புங்கள் கொ.ப.செ.. அட.. இல்லாட்டியும் அனுப்புங்களேன்..

Bharani said...

Ennaga Veda...sarkarai pongalnu edho bisebellahbath maadhiri oru photo potuteenga....idhu original dhaana :)

Bharani said...

Thirupavaai padalgaloda background information-a simple sonnadhu super....inimel idhai naalu perukita naan solra maadhiriye solli image build pannikaren :)

Bharani said...

adhuku appuram vara pattelam still out of syllabus....so appalika vandhu padikaren :)

happy கூடாரவல்லி :)

வேதா said...

@கார்த்தி,

ஆமா இந்த முறை ப்ரைஸ் அடிச்சுட்டீங்க:) சுவையான சர்க்கரை பொங்கல் அதுவும் நெய் வழிய வழிய பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்:)

/இப்படி படத்தை காண்பிக்கிறீர்களே வேதா.. /
ஏதோ ஊரு விட்டு ஊரு போயிருக்கீங்க அதனால படத்தையாவது
காமிக்கிறேன்னு சந்தோசப்படுங்க தலைவா:)

/அந்த சுவையை உள்ளத்துக்கு கொண்டு போனது வேதா.. /
அட அட :)

/அட.. இல்லாட்டியும் அனுப்புங்களேன்.. /
அதான் அனுப்பிட்டோம்ல:)

வேதா said...

@பரணி,
நம்மள மதிச்சு பின்னூட்ட புயலா மாறி பின்னூட்டங்களை அள்ளி விடறதுக்கு முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்:)

/sarkarai pongalnu edho bisebellahbath maadhiri oru photo potuteenga....idhu original dhaana :) /

ஹிஹி அது சர்க்கரை பொங்கல் தான் சாதம் குழையாம போயிடுச்சு அதான் அப்டி இருக்கு:) அப்டியும் உங்களுக்கு சந்தேகம் இருந்தா அதை நான் உங்களுக்காக சுட்ட சைட்ல தான் போய் பார்க்கணும்:)ஹிஹி

/idhai naalu perukita naan solra maadhiriye solli image build pannikaren :) /
பரவாயில்லை நாலு பேரு கிட்ட பில்டப் பண்ணனும்னா எதுவுமே தப்பில்லை:)

/happy கூடாரவல்லி :) /
டாங்கஸ் & ஜேம் டூ யூ:)

Anonymous said...

Pongalin suvaiyai vida adhai varnitha ungal tamilin suvai inimaiyulum inimai...

Bharani said...

//நம்மள மதிச்சு பின்னூட்ட புயலா மாறி பின்னூட்டங்களை அள்ளி விடறதுக்கு முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்//.......ennoda tamizh aasaan ungala madhikaama eppadinga irupen.....idukelam nandri sollikitu....edho sarkara pongal anupi vacha nalla irukum :)

//உங்களுக்காக சுட்ட சைட்ல தான் போய் பார்க்கணும்//....bisibellaabath-a sarkarai pongalnu sollu podhe therinjidhu...adhu pongunathu kedayaadhu..suttadhunu :)

Bharani said...

//நாலு பேரு கிட்ட பில்டப் பண்ணனும்னா எதுவுமே தப்பில்லை//...Aaaaaahhhhhhhh Aaaaahhhhhh (kamal azhuvura maadhirye padiinga )

veerakumar said...

It has been my first visit to ur site veda... what has been fascinating me is ur spirituality... it is amazing to see a person like u when pub culture and nightlife have come into existant.. All the best

Syam said...

attendance plzzzz :-)

Anonymous said...

//எங்கள் வீட்டிலும் இன்று சர்க்கரை பொங்கல் செய்தார்கள். நன்றாக முழங்கை நெய் வழிய சுடச்சுட சர்க்கரை பொங்கல் நாங்க சாப்டாச்சு, உங்களுக்காக இதோ இங்கேயும் தருகிறேன், நல்லா சாப்பிட்டு என்சாய் பண்ணுங்க:)
//

thiruppaavai puriyutho illaiyo, ithu purinjudhu! hanksngov! seekiram anuppi vaingo!

Anonymous said...

aana, ippadi padatha kaamichu engala kaaya veikareengale.. nyayama?

Anonymous said...

/புத்தம் புது ஆடைகள் அணிந்து, முழங்கை வரை நெய் வழியும் அளவிற்கு பால் சோறும் உள்ளம் குளிர உண்டு மகிழ்வோம்.
//

ada..thirupaavaila kooda paaruda!

super ponga

Anonymous said...

unga thondu ullatha paaraturom!

Anonymous said...

உங்கள் தமிழ் transalation என் தமிழ் ஆசான்க்ளை நினைகுர்ந்தது

எங்கள் ஊர் permal அக்காரவடிசல் super aa irukum..:)

Arunkumar said...

thalaivar solradye than naanum solren.. enna late-aa solren... idukaaga enakkum pongal anuppama vitraading veda :)

Arunkumar said...

Koodaaravalli... hmm, kelvipatrukken...

Happy Koodaaravalli :)

வேதா said...

@dt,
நன்றி நண்பரே:) தமிழ் சுவைக்கு கேட்கவும் வேண்டுமோ?:)

@பரணி,
என்னது ஆசானா?:)கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க:)
சர்க்கரை பொங்கல் தான் அனுப்பி வச்சுட்டேனே:) சுட்டதா இருந்தாலும் அது சர்க்கரை பொங்கல் தான் பிஸிபேளாபாத் இல்ல:)

kamal azhuvura maadhirye padiinga )
படிச்சுட்டேன் :)


@வீரக்குமார்,
நீங்க சொல்ற அளவுக்கு தகுதியானவள் இல்ல நான், உங்க வருகைக்கும் வார்த்தைகளுக்கு நன்றி:) அடிக்கடி வரவும்:)

@ச்யாம்,
அட்டெண்டஸ் நோட்டட்:)

வேதா said...

@ட்ரீம்ஸ்,

/thiruppaavai puriyutho illaiyo, ithu purinjudhu! hanksngov! seekiram anuppi vaingo! /

அதானே நமக்கு என்னிக்குமே இந்த மாதிரி ஐட்டங்கள் தான் முதல்ல புரியும்:) அனுப்பி வச்சுட்டேனே,சாப்டாச்சா?:)

/ippadi padatha kaamichu engala kaaya veikareengale.. nyayama?
ஏதோ கண்ணால பார்த்தாவது சந்தோஷப்படுவீங்களா அத விட்டுட்டு நியாயம் தர்மம்னு பேசிக்கிட்டு:)

/ada..thirupaavaila kooda paaruda/
மேலோட்டமா பார்த்தா இப்படி தான் இருக்கும், ஆனா ஒவ்வொரு பாசுரத்துக்கும் உள்ளர்த்தங்கள் நிறைய இருக்கு, அடுத்த முறை அதை எழுத முயற்சிக்கலாம்னு ஒரு எண்ணம்:)

/unga thondu ullatha paaraturom!/

ஹிஹி எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் தான்:)

@adiya,
முதல் வருகைக்கு நன்றி, அடிக்கடி வாங்க:) ஆமா உங்க பேரு என்ன? 'அதியா'வா? 'அடியா'வா?

@அருண்,
இந்த முறை எல்லாருக்கும் சர்க்கரை பொங்கல் உண்டு கவலப்படாதீங்க:)

Happy Koodaaravalli :)
thanks and same to u :)

Anonymous said...

Veda,

Thanks for your e-prasad.You did a very good karma of posting "Thirupaavai" in this Dhanur Month.I am sure that soon you will see the fruits of this good deed.I appreciate your efforts.Thanks for the same.

Advanced Happy Pongal to you and your family members.


- Hayagriva Dasan

ambi said...

naan thaan romba lateaa vanthutenaa? (innocently).

paravayilla, etho irukaratha kudunga.

You have done a wonderful job. thirupaavai 30 songs meaningla ivloo irukku!nu ippa thaan theriyum. itha kooda symphony pannalam!

*ahem, karthiku Spongal kidachathu romba santhosam. illati, as usual, post padikamaleye intha syam payal lavatitutu poiduvaan! :p

Priya said...

வேதா, சர்க்கரைப் பொங்கலுக்கும், திருப்பாவைப் பொருளுக்கும் நன்றி.

பாவை நோன்பைப் பத்தி simple ஆ சொன்ன விதம் அருமை.

Anonymous said...

சேம் பின்ச். :)

Anonymous said...

//மேலோட்டமா பார்த்தா இப்படி தான் இருக்கும், ஆனா ஒவ்வொரு பாசுரத்துக்கும் உள்ளர்த்தங்கள் நிறைய இருக்கு, அடுத்த முறை அதை எழுத முயற்சிக்கலாம்னு ஒரு எண்ணம்:)

//

அப்ப இது வரை எழுதியது! LOL !!!!!

Anonymous said...

//மேலோட்டமா பார்த்தா இப்படி தான் இருக்கும், ஆனா ஒவ்வொரு பாசுரத்துக்கும் உள்ளர்த்தங்கள் நிறைய இருக்கு, அடுத்த முறை அதை எழுத முயற்சிக்கலாம்னு ஒரு எண்ணம்:)

//

அப்ப இது வரை எழுதியது! LOL !!!!!

Anonymous said...

//மேலோட்டமா பார்த்தா இப்படி தான் இருக்கும், ஆனா ஒவ்வொரு பாசுரத்துக்கும் உள்ளர்த்தங்கள் நிறைய இருக்கு, அடுத்த முறை அதை எழுத முயற்சிக்கலாம்னு ஒரு எண்ணம்:)

//

அப்ப இது வரை எழுதியது! LOL !!!!!

Anonymous said...

எங்க நான் குடுத்த சேம் பின்ச்ச காணோம் :(

Jeevan said...

Veda ithu ungalukkea nayamairukk'a. nenga nalla chakkara pongal saptuttu, engalukku googlela irunthu oru photova lootetu vanthu inthanga chakkara pongalnu sorathu! :D

Wish you and your Family a Happy Pongalo Pongal. have a nice time:)

Anonymous said...

//நன்றாக முழங்கை நெய் வழிய சுடச்சுட சர்க்கரை பொங்கல் நாங்க சாப்டாச்சு//

:(( yenga ______________ kootureeenga?

btw, eppadinga ippadi ''திருப்பாவை'' ellathaium nyabagam vatchi, adhuku meanings'um eludhureeenga?
(seriously asking, yerkanavey padichadha? )

Anonymous said...

//நன்றாக முழங்கை நெய் வழிய சுடச்சுட சர்க்கரை பொங்கல் நாங்க சாப்டாச்சு//

:(( yenga ______________ kootureeenga?

btw, eppadinga ippadi ''திருப்பாவை'' ellathaium nyabagam vatchi, adhuku meanings'um eludhureeenga?
(seriously asking, yerkanavey padichadha? )

வேதா said...

@ஹயக்ரீவ தாசன்,
எல்லாம் உங்களை போன்றவர்களின் பாராட்டு வார்த்தைகளும் ஊக்கமும் அளித்த தைரியம் தான்,நன்றி:)
தங்களுக்கு தங்கள் குடும்பத்தும் என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரரே:)

@அம்பி,
நீங்க லேட்டா வந்தாலும் சரி இல்ல வரவேல்லானும் நாங்கெல்லாம் தப்பாவே நினைச்சுக்க மாட்டோம், பாவம் உங்களுக்கு தான் எவ்ளோ வேலை இருக்கு?:)

@ப்ரியா,
நன்றி தோழியே:)

@ட்ரீம்ஸ்,
நான் எழுதியது பாடலுக்கான நேரடி விளக்கம்(literal meaning), அதே பாடல்களுக்கு தத்துவார்த்த விளக்கங்களும் உண்டு(inner meaning) :)

@பொற்கொடி,
அதுவா நீ பயங்கரமா பின்சிட்டியா, வலி தாங்க முடியாம கமெண்டை பப்ளிஷ் பண்றதுக்கு பதிலா தவறுதலா
ரிஜக்ட் பண்ணிட்டேன்,ஹிஹி:)

@ஜீவ்,
அதுக்கென்ன ஜீவ் உனக்கு தனியா பார்சல் பண்ணி கூரியர்ல அனுப்பிடறேன் ஹிஹி:)

@gops(md)
மனப்பாடமெல்லாம் பண்ணலை புத்தகத்திலிருந்து குறிப்பெடுத்து தான் எழுதறேன்:)