Friday, January 05, 2007

சொல்லிய பொய்யும் சொல்லாத உண்மையும்

நினையாமலே எழுகின்றன
உன் நினைவுகள்
உண்மையின் வடிவங்களாய்.

கண்களை இறுக மூடியும்
இமைகளைக் கிழித்துக் கொண்டு
புகுகின்றன காட்சிகள்,
நான் மறுக்க முடியாத
நிகழ்வுகளாய்.

என் கண்களின் வழி
என்னுள் புகுந்து,
என் கைப்பிடித்து,
என் வாழ்க்'கை'யில் இணைய
விழைவதாய் சொன்னாயே!

அன்று
நான் சொல்லாமல் விட்ட உண்மையை
இன்று
நித்தமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!
கேட்க தான் நீயில்லை!

சொல்லாத உண்மை
உள்ளுக்குள் கனத்தாலும்,
சுகமான சுமையென சுமந்து விடுவேன்
இப்பிறவியில் மட்டும்,
இனி வரப் போகும் பிறவிகளில்
உண்மையே உரைப்பதென்ற
முடிவுடன்.

56 comments:

வேதா said...

கவிதை பக்கத்துல எழுத வேண்டியதை இங்க மாத்தி எழுதிட்டதா நினைக்காதீங்க:)

அந்த தியேட்டர்ல படம் ஓட மாட்டேங்குது, இங்க ஓட்டறதுக்கு படமும் இல்லை,அதான் இங்க கவிதையை ஓட்டிட்டேன்:)

பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் பார்த்து தான் ரெண்டு தியேட்டரையும் ஒன்னா ஆக்கிடலாமான்னு முடிவெடுக்கணும்:)

Anonymous said...

arumaiyaana kavidhai!

Anonymous said...

//நினையாமலே எழுகின்றன
உன் நினைவுகள்
உண்மையின் வடிவங்களாய்//
nijamaana varigal!


//அன்று
நான் சொல்லாமல் விட்ட உண்மையை
இன்று
நித்தமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!
கேட்க தான் நீயில்லை!//
ennanga naan eludha vendiyatha ellam neenga eludhareenga! super varigal!

Anonymous said...

sari kavidhaikku back ground kadhai sollunga!

வேதா said...

@ட்ரீம்ஸ்,
கவிதையோட பேக்கிரவுண்ட் கதை
இங்க இருக்கு படிச்சுப் பாருங்க:)

/ennanga naan eludha vendiyatha ellam neenga eludhareenga! /

நீங்க மட்டும் இல்லீங்க, வாழ்க்கையில எல்லாரும் ஒரு முறையாவது இப்டி ஒரு கட்டம் வந்துருக்கும்,வந்துக்கிட்டு இருக்கும்,இனிமேலும் வரலாம். இது எல்லாரும் எழுத வேண்டிய ஒரு கவிதை:)

/nijamaana varigal!/
நிஜமோ நிஜம்:)

நன்றி :)

Priya said...

//கவிதை பக்கத்துல எழுத வேண்டியதை இங்க மாத்தி எழுதிட்டதா நினைக்காதீங்க:) //

கேக்கணும்னு நினைச்சேன். :)

அருமை வேதா..

//அன்று
நான் சொல்லாமல் விட்ட உண்மையை
இன்று
நித்தமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!
கேட்க தான் நீயில்லை!//
சொல்லாத உண்மை - காதலா வேதா??

Syam said...

அதுதான பார்த்தேன்...மாத்தி வந்துட்டனோனு டபுள் செக் பண்ணினேன்....

Syam said...

//கேட்க தான் நீயில்லை//

அப்படியும் சொல்லலாம்...

கேட்க நீ இருக்கிறாய்...ஆனா சொன்னா அபிசேக் பச்சன் ஆள் வெச்சு அடிப்பாரே :-)

Syam said...

//பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் பார்த்து தான் ரெண்டு தியேட்டரையும் ஒன்னா ஆக்கிடலாமான்னு முடிவெடுக்கணும்//

நல்ல முடிவு...இதுல ஒரு படம் அதுல ஒரு படம்னு ஒரே தியேட்டர்ல ஓட்டுனா எங்கள மாதிரி சீசன் டிக்கட் வெச்சுருக்கறவங்களுக்கு சவுகரியம் :-)

வேதா said...

@ப்ரியா,
/சொல்லாத உண்மை - காதலா வேதா?? /

"என் கைப்பிடித்து,
என் வாழ்க்'கை'யில் இணைய
விழைவதாய் சொன்னாயே"

இந்த வரிகளில் சொல்லியிருக்கிறேனே அந்த உண்மையை:)

@ச்யாம்,
/மாத்தி வந்துட்டனோனு டபுள் செக் பண்ணினேன்.... /
அதுக்கு தான் கொடுத்துருக்கோம் டீடெய்லு:)

/சொன்னா அபிசேக் பச்சன் ஆள் வெச்சு அடிப்பாரே :-)/

நாட்டாமை வேணாம் அளுதுவேன்:(
ஹும்..ஐஸுக்காவது அதிர்ஷ்டம் அடிக்குதான்னு பார்க்கலாம்:)

/அதுல ஒரு படம்னு ஒரே தியேட்டர்ல ஓட்டுனா எங்கள மாதிரி சீசன் டிக்கட் வெச்சுருக்கறவங்களுக்கு சவுகரியம் :-)
பார்க்கலாம் நாட்டமை தீர்ப்பு எல்லாருக்கும் ஒத்து போகுதான்னு:)

நாகை சிவா said...

இந்த கவிதையில் எனக்கு பிடித்த விசயமே, அடுத்தவர்களை ஊகிக்கும்படி எழுதியது தான்.
நம் மக்களுக்கு ஸ்டெப் பை ஸ்பெட்பாக கதையோ கவிதையோ சொன்னால் தான் புரியும் என்று எண்ணி நம் தமிழ் எழுத்தாளர்களும், இயக்குனர்களும் ரொம்பவே நம்மள படுத்தி எடுப்பாங்க.....அதற்கு மணிரத்னம் போன்ற சில இயக்குனர்கள் விதிவிலக்கு. இது போன்ற விதிவிலக்கு ஒன்று இந்த கவிதை.

நல்லா இருக்கு......

Gopalan Ramasubbu said...

//சொல்லாத உண்மை
உள்ளுக்குள் கனத்தாலும்,
சுகமான சுமையென சுமந்து விடுவேன்
இப்பிறவியில் மட்டும்,
இனி வரப் போகும் பிறவிகளில்
உண்மையே உரைப்பதென்ற
முடிவுடன். //

இதுவரை படிக்காத வரிகள்.

அடுத்த பிறவியில் இருந்துதான் உண்மை சொல்லனும்னு இல்லைங்கோவ்..இப்ப இருந்தே ஸ்டார்ட்.

கவிதை வழக்கம்போல் அருமை :) வேதா :)

//ரெண்டு தியேட்டரையும் ஒன்னா ஆக்கிடலாமான்னு முடிவெடுக்கணும்:)//

வரவேற்கத்தகுந்த முடிவு :)

Jeevan said...

Beautiful poem veda!!

ambi said...

superrruppu! but something! something! :p

echoose me ejamaan! intha maane! thene!ellam nadula thoovi enakku oru kavithai ezhuthi thara mudiyuma? :)

@syam, Aish kutti venuma unakku? Grrrrrrrrrr.

தி. ரா. ச.(T.R.C.) said...

எந்த தோட்டத்தில் விளைந்தாலும் ரோஜா ரோஜாதான்.அதுபோலத்தான் உங்கள் கவிதை

மு.கார்த்திகேயன் said...

வீட்டில் காபி கேட்டவுடன் ஐந்து நிமிடத்தில் தயார் செய்து தருகிறார்கள். ஆனால் அந்த காபி வந்தவுடன் நாம் வேறு வேலைகளில் லயித்துவிட்டு ஆறிய பிறகு குடித்தால் சுவைப்பதில்லை. ஆனால் சில விஷயங்கள் காலதாமதமாயினும் சிறக்கின்றன, ருசிகின்றன வேதா.. நான் லேட்டா வந்து உங்கள் தமிழ் பால் கொண்டு உருவாக்கிய இந்த கவிதை காபியைதான் சொல்கிறேன்.. இன்னும் சூடாக மனத்துக்குள் பரவுகிறது ஒவ்வொரு வார்த்தைகளும்..

மு.கார்த்திகேயன் said...

//நினையாமலே எழுகின்றன
உன் நினைவுகள்
உண்மையின் வடிவங்களாய்//

எப்படி கண்களில் தூசு பட்டால், கைகள் தானாக அந்த இடத்துக்கு செல்லுமோ.. எப்படி கருமேகங்கள் வானில் சூழ்ந்தால் தோகை விரித்து அழகு மயில் நடனமாடுமோ, அது போல் உன் நினைவுகள் நான் நினையாமலே 'தனிச்சையாய்' உள்ளத்தில் எழுகிறது..

இந்த ஒற்றை வரிக்கு ஆறேழு பக்கங்களுக்கு விரிவுரை எழுதலாம் போல, அர்த்தம் பொதிந்த புதையல் அடங்கிய அருமையான வரிகள் வேதா

மு.கார்த்திகேயன் said...

//கண்களை இறுக மூடியும்
இமைகளைக் கிழித்துக் கொண்டு
புகுகின்றன காட்சிகள்,
நான் மறுக்க முடியாத
நிகழ்வுகளாய்.//

என் கண்களின், மேல் இமைக்கும் கீழிமைக்கும் இடையில் நின்று தூக்கம் தர மறுக்கிறாய்..அப்படியே தூங்கினாலும் கண்கள் கிழித்து உனது நிழலில் நான் வாழ்ந்த காட்சிகள் என்னை வாட்டுகின்றன.. அப்படி வாழ்ந்த அந்த கணத்தின் ஒவ்வொரும் மைக்ரோசெகண்டும் எனக்குள் ஓடுகிறது.. உன் அழகு முகம் பார்க்க பயந்து, அழுகு நானே என்ற கர்வம் அழிந்து, கூந்தலில் மட்டுமே இருப்பேன் என்று அடம்பிடித்து ஒட்டிகொண்ட அந்த ஓற்றை ரோஜா என்று நான் உன்னை பார்த்து கவிதைகள் மனதுக்குள் படித்தது இன்னமும் மறுக்க முடியாத நிகழ்வுகளாய் விரிகிறது..

மு.கார்த்திகேயன் said...

//என் கண்களின் வழி
என்னுள் புகுந்து,
என் கைப்பிடித்து,
என் வாழ்க்'கை'யில் இணைய
விழைவதாய் சொன்னாயே!

அன்று
நான் சொல்லாமல் விட்ட உண்மையை
இன்று
நித்தமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!
கேட்க தான் நீயில்லை!
//

என் கண்கள் வழி காட்சிகளாய், மூச்சுக்காற்றாய் என்னுள் புகுந்து வாழ்க்கையில் வாழ கை பிடிக்கிறேன் என்று நீ சொன்ன அந்த தருணங்கள், ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தான் (சொல்வது ஒரு ஆண் என்னும் வகையில்) என்று உலகுக்கு சொல்ல நினைத்த சந்தோச தருணமது.. எவ்வளவோ சொல்ல வேண்டும் என்று நினைத்து, கரம் பிடித்தவுடன் கதைக்கலாம் என்று நினைத்த உண்மைகளை நான் இன்னமும் சொல்லிகொண்டு தான் இருக்கிறேன்.. 'வெளியில்' இருந்து கேட்கத் தான் நீயில்லை..

மு.கார்த்திகேயன் said...

//சொல்லாத உண்மை
உள்ளுக்குள் கனத்தாலும்,
சுகமான சுமையென சுமந்து விடுவேன்
இப்பிறவியில் மட்டும்,
இனி வரப் போகும் பிறவிகளில்
உண்மையே உரைப்பதென்ற
முடிவுடன்.
//

சில வார்த்தைகள் கழைகூத்தாடி போல.. சொல்ல நினைக்கும் போது இதழில் வந்து நின்று கொள்ளும். நிறைய நேரம் இதழ்களிலே தான் நடந்து பழகும், கயிற்றின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடி போல. அப்படி தாண்டவம் ஆடிய ஆயிரம் வார்த்தைகளில் உனக்கு சொன்னது ஒன்றிரண்டு தான்.. அவைகள் எல்லாம் சின்ன இதயத்தில் கிடந்தாலும், வள்ளுவன் சொன்னது போல், சிறு சிறு மயிலிறகெல்லாம் ஒரு பெரிய வண்டியையே குடைசாய்க்கும் திறன் போல, என்னுள்ளே சுமையாய். அவையெல்லாம் இப்போது என்றுமே பெறவாத குழந்தையை சுமக்கும் தாயை போல என்னுள் சுகமான சுமைகள்.. அனுபவித்த இந்த சுகம் கூட இந்த பிறவியில் மட்டும் போதும்.. அடுத்தொன்று இருப்பதாய் கொண்டால், உண்மைகள் மட்டுமே உரைப்பேன் என்னும் முடிவுகளுடன், சுகமாகவே சுமக்கிறேன் இந்த சுமையை..

மு.கார்த்திகேயன் said...

நீன்ட நெடும் நாட்களாகிவிட்டது இப்படி ஒரு விரிவுரை எழுதி, வேதா.. அந்த வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.. இவ்வளவு தாமதமாக வந்துவிட்டோமே இப்படி ஒரு அழகிய கவிதையை படிப்பதற்கு என்று வருந்திய போது, தோன்றியது இந்த எண்ணம்..

இத்தனை விருவுரை பின்னூட்டங்கள் எழுதிய பிறகு மனதிற்குள் இனம் தெரியா மகிழ்ச்சி, வேதா.. இப்படி ஒரு அருமையான கவிதைக்கு விரிவுரை எழுதியது தான் அந்த மகிழ்ச்சிக்கு காரணம். இந்த மகிழ்சியை தந்த கொ.ப.செ ஒரு சல்யூட்..

அப்புறம் அந்த முல்லை பெரியார் அணை பேச்சுவார்த்தையில் ஏதும் முன்னேற்றம் தெரிகிறதா.. :-)

மு.கார்த்திகேயன் said...

//பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் பார்த்து தான் ரெண்டு தியேட்டரையும் ஒன்னா ஆக்கிடலாமான்னு முடிவெடுக்கணும்//

ஓண்ணா ஆக்கிடுங்க வேதா.. அது தான் பெஸ்டு வேதா பெஸ்டு

Anonymous said...

mmm vedha..padichen! purinthathu... mudiva sari thavaru enru sollum urimaiyo, vayadho illa vittaalum,

itha time kidaichal padikkavum
1. http://godshavespoken.blogspot.com/2006/10/blog-post_11.html

2. http://godshavespoken.blogspot.com/2006/11/hmm.html

kaadhalum jothi, natpum jothi.. jothi eppadi innoru jothiya erikkum? illa irandu jothila ithu konjam usathi kammi, ithu jasthi enru irukka mudiyum?

Anonymous said...

neenga entha stagela irukeenga enru enakku theriyaathu! aana, enakku therinju, naama pirarukku throgam pannalam, aana, nammala nammala emathipathu thaan kodumai!

athigaprasangi thanama pesaraan enru thappai ninaika vendaam. manikkavum. sollanum enru thonuchu, sollitten!

வேதா said...

@சிவா,
/இது போன்ற விதிவிலக்கு ஒன்று இந்த கவிதை.

நல்லா இருக்கு...... /

ரொம்ப தாங்ஸுப்பா:)
மணிரத்னம் படம் நிறைய பேருக்கு புரியாதுன்னு சொல்வாங்க:)ஆகா இதுல எதுவும் உள்குத்து இல்லையே:)

@கோப்ஸ்,
/அடுத்த பிறவியில் இருந்துதான் உண்மை சொல்லனும்னு இல்லைங்கோவ்..இப்ப இருந்தே ஸ்டார்ட்./
ஆஹா அதுக்கென்ன ஸ்டார்ட் பண்ணிட்டா போச்சு:)

@ஜீவ்,
நன்றி:)

@அம்பி,
/superrruppu! but something! something! :p/

அட என்ன இது? கவிதை பக்கமெல்லாம் வர மாட்டீங்களே?:)

/enakku oru kavithai ezhuthi thara mudiyuma? :)/

அதான பார்த்தேன் சோழியன் குடுமி சும்மா ஆடுமா?:) நான் என்ன ப்ளாக் விடு தூது நடத்தறேனா? ஆமா உங்களுக்கு எதுக்கு இந்த கவிதையெல்லாம் யாருக்கு அனுப்ப போறீங்க?;))

Anonymous said...

// சொல்லாத உண்மை
உள்ளுக்குள் கனத்தாலும்,
சுகமான சுமையென சுமந்து விடுவேன்//

adada, idhuku mela enakku onnum theriaadhu..

Bharani said...

Superb...vera enna solla...

Bharani said...

//அன்று
நான் சொல்லாமல் விட்ட உண்மையை
இன்று
நித்தமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!
கேட்க தான் நீயில்லை!//....

superb lines...ellarayum oru nimisham feel panna vachiteengale

Bharani said...

//இப்பிறவியில் மட்டும்,
இனி வரப் போகும் பிறவிகளில்
உண்மையே உரைப்பதென்ற
முடிவுடன்//....superb finish....

super-a ezhudareenga....konjam poramaya kooda iruku :)

Bharani said...

kadhalicha dhaan ippadi ellam kavidhai ezhda mudiyuma enna :)

Bharani said...

//அந்த தியேட்டர்ல படம் ஓட மாட்டேங்குது, இங்க ஓட்டறதுக்கு படமும் இல்லை,அதான் இங்க கவிதையை ஓட்டிட்டேன்//....LOL....enna oru business strategy :)

Bharani said...

Amaana....evlo comment aachi....comment moderation-la onnume theriyalngo :)

Seenu said...

arumaiyeanaa kavithai...ungal background kathaiyum padichean...athuvum miga arumai...

Anonymous said...

@Veda,

I don't know the facts behind this kavithai,but as you said,everyone should have undergone such schenario in their life.

Unmaigal yethaartha vaazvil adipattuvidum sagothareyee...Nadakkamal poonavaiyellam Poi-yendraal...Unmai pesupavargalee irukka maataargal.

Yethaarthamum Vunmaiyum Ondraanaal naam Athistasaali.Unn naayagan athistasaali illai poolum.Aathalaal andru avan peesiya unmai yethaartha vaazvil adi pattuvitathu yendre solla veendum...Athu Poi illai !

Thavarukku Mannikavum.

Thanks for ur time ..

- Hayagriva Dasan

வேதா said...

@திராச,
எங்க எழுதினாலும் என்ன எழுதினாலும் உங்க ஆதரவு உண்டு போல:) நன்றி:)

@கார்த்தி,
/உங்கள் தமிழ் பால் கொண்டு உருவாக்கிய இந்த கவிதை காபியைதான் சொல்கிறேன்../
அட அட என்ன ஒரு உவமை:) உங்களுக்கு நான் உவமை புலவர் பட்டம் கொடுக்கறேன் தலைவரே:)

/இந்த ஒற்றை வரிக்கு ஆறேழு பக்கங்களுக்கு விரிவுரை எழுதலாம் போல, அர்த்தம் பொதிந்த புதையல் அடங்கிய அருமையான வரிகள் வேதா/

ரொம்ப நன்றி தலைவரே, எதிர்காலத்தில் நான் ஏதாவது புத்தகம் வெளியிட்டால் கண்டிப்பா முகவுரை உங்களுடையதாக தான் இருக்கும்:)


/நீ சொன்ன அந்த தருணங்கள், ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தான் (சொல்வது ஒரு ஆண் என்னும் வகையில்) என்று உலகுக்கு சொல்ல நினைத்த சந்தோச தருணமது.. /

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........:)

/சில வார்த்தைகள் கழைகூத்தாடி போல.. /
அற்புதமான உவமை தான்:)

நீங்க லேட்டா வந்து விரிவுரை எழுதினாலும் உங்க ரசனையின் மதிப்பை உணர வச்சுட்டீங்க, என் கவிதையை விட உங்க விரிவுரை என்னும் அழகுரையை நான் ரொம்ப ரசிச்சேன், அதற்காக உங்களுக்கு நான் தான் சல்யூட் அடிக்கணும் தல:)

வேதா said...

@ட்ரீம்ஸ்,
நீங்க சொன்ன ரெண்டு பதிவையும் நான் ஏற்கனவே படிச்சுட்டேன்:) அதுல ஒரு பதிவு நான் முன்பு எழுதிய கதையை நினைவுப்படுத்தியது, அது ஒரு உண்மை கதை என் நெருங்கிய நண்பர்களுக்குள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக தான் இந்த கவிதை:)

/nammala nammala emathipathu thaan kodumai!/
கொடுமை தான் ,ஆனாலும் சில சமயங்களில் அது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

/ manikkavum. sollanum enru thonuchu, sollitten! /

எதுவாக இருந்தாலும் இங்கே தாராளமாக சொல்லலாம் நண்பரே:)

@gops,(md)
என்ன அப்டியே நினைவுகளில் முழுகிட்டீங்களா?:)

@பரணி,
/super-a ezhudareenga....konjam poramaya kooda iruku :) /
நன்றி பரணி, சில விஷயங்களில் பொறாமைப்படுவதில் தவறில்லை:) அப்ப தான் நீங்களும் முயற்சியில் இறங்குவீர்கள்.

/kadhalicha dhaan ippadi ellam kavidhai ezhda mudiyuma enna :) /

தெரியல,ஆனா நம்ம சுத்தி நடக்கிற சம்பவங்கள் கூட எழுத வைக்கும்:)

/LOL....enna oru business strategy :)/
ஹிஹி டாங்க்ஸு:)

இது வரைக்கும் 6 பின்னூட்டம் வந்துருக்கு;)

வேதா said...

@கார்த்தி,
/அப்புறம் அந்த முல்லை பெரியார் அணை பேச்சுவார்த்தையில் ஏதும் முன்னேற்றம் தெரிகிறதா.. :-)/
இது வரைக்கும் ஒரு முன்னேற்றத்தையும் காணும், பேசாம ஆட்டோ அனுப்ப ஏற்பாடு பண்ண வேண்டியது, ஒரு கட்சியில் இருந்துக்கிட்டு இது கூட செய்யலேன்னா எப்படி?:)

/ஓண்ணா ஆக்கிடுங்க வேதா.. அது தான் பெஸ்டு வேதா பெஸ்டு/
ஓகே தல:)
தலைவர் பேச்சுக்கு மறுபேச்சில்ல:)

@சீனு,
ரொம்ப நன்றி நண்பரே, கதையை பொறுமையாக படித்ததுக்கும்:)

@ஹயக்ரீவ தாசன்,
/Unmaigal yethaartha vaazvil adipattuvidum sagothareyee.../
உண்மை தான்.

/Aathalaal andru avan peesiya unmai yethaartha vaazvil adi pattuvitathu yendre solla veendum...Athu Poi illai !/
கதாநாயகன் கூறியது பொய் இல்லை, ஆனால் நாயகி கூறியது பொய், உண்மையை மறைத்து கூறப்பட்ட ஒரு பொய்.

நன்றி சகோதரரே:)

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, நம்ம அணியிலே சேர்ந்ததுக்கு அப்புறமும் உங்க கவிதையை நல்லா இல்லைனு சொல்ல முடியுமா? ரொம்பவே நல்லா இருக்கு.

கீதா சாம்பசிவம் said...

Vedha, really it is super. Very true indeed. Keep it up.

Deekshanya said...

ரொம்ப நல்லா இருந்தது. மனசில என்னமோ செஞ்சது உங்க வார்த்தைகள்.... இன்னும் இது போல எழுதுங்கள்

vishy said...

me in chennai.. now... so ne plans for a bloggers meets?? I will check bk the comments sections.. let me know.

Anonymous said...

//கண்களை இறுக மூடியும்
இமைகளைக் கிழித்துக் கொண்டு
புகுகின்றன காட்சிகள்,
நான் மறுக்க முடியாத
நிகழ்வுகளாய்.//

indha line miga attagaasam. maelum kalakunga vedha.

Anonymous said...

//பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் பார்த்து தான் ரெண்டு தியேட்டரையும் ஒன்னா ஆக்கிடலாமான்னு முடிவெடுக்கணும்//


வேதா இது என் கருத்து,,

இப்படியே இருக்கட்டுமே. கவிதைக்குனு ஒரு பக்கம், கதை கட்டுரைக்குனு ஒரு பக்கம்..

என்ன மாதிரி கவித வாசிப்பவர்களுக்கு கவிதைக்குனு தனிப் பக்க இருந்தா ஒரே தம்ல (நான் மூச்சதான் சொன்னேன்..)எல்லாத்தையும் படிச்சுட்டு ரசிச்சுட்டு அங்கேயெ தங்கிபுடுவோம்...

சரக்கு இருக்கிற நீங்களே இப்படி ரெண்டு பக்கத்த ஒன்னா ஆக்கிடலாம்னு நினைச்சீங்க அப்படினா
நாங்க எல்லாம் என்ன பன்ரது,,

Anonymous said...

//பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் பார்த்து தான் ரெண்டு தியேட்டரையும் ஒன்னா ஆக்கிடலாமான்னு முடிவெடுக்கணும்//


வேதா இது என் கருத்து,,

இப்படியே இருக்கட்டுமே. கவிதைக்குனு ஒரு பக்கம், கதை கட்டுரைக்குனு ஒரு பக்கம்..

என்ன மாதிரி கவித வாசிப்பவர்களுக்கு கவிதைக்குனு தனிப் பக்க இருந்தா ஒரே தம்ல எல்லாத்தையும் படிச்சுட்டு ரசிச்சுட்டு அங்கேயெ தங்கிபுடுவோம்...

சரக்கு இருக்கிற நீங்களே இப்படி ரெண்டு பக்கத்த ஒன்னா ஆக்கிடலாம்னு நினைச்சீங்க அப்படினா
நாங்க எல்லாம் என்ன பன்றது?

Anonymous said...

//கண்களை இறுக மூடியும்
இமைகளைக் கிழித்துக் கொண்டு
புகுகின்றன காட்சிகள்,
நான் மறுக்க முடியாத
நிகழ்வுகளாய்//
என்னை பொறுத்த வரை ஒரு உண்மையான, நல்ல கவிதை என்பது படித்தபிறகு இன்னுமொரு உலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்..

இதோ நான் இன்னுமொரு உலகத்தில்..


தலைப்பு படிச்சுட்டு கவிதையை படித்தப்போ ஒரு சின்ன நெருடல்.சரியா பொருந்தலையோனு ஆனா கவிதையோட பேக்ரவுண்ட் படிச்சதும் புரிஞ்சிடிச்சு.

நான் திரும்பவும் ரசித்த மற்றுமோர் கவிதை..

Anonymous said...

இது காதலன் - காதலி காம்பினேஷனுக்கா, இல்ல, செத்துப்போன கணவனின் அல்லது மனைவியின் நினைப்பா...

எதுவா இருந்தா என்ன..

கவிதை சூப்பர்.

//
நேற்றுப் பார்த்தத் திரைப்படமே மறந்துபோகும் எனக்கு,
உன்னை மறப்பதற்கு மட்டும், உன் நினைவுகள்
என் ஆயுட்காலம் கேட்குதடி...
//

எப்படி நம்ம கவித :)

வேதா said...

@கீதா,
தொண்டரை பாராட்டி தலைவி தலை(வலி)வி தான்னு அடிக்கடி நிருபிக்கிறீங்க:) நன்றி:)

@தீட்சண்யா,
உங்க ஆதரவு இருக்கும் போது கண்டிப்பா தொடர்ந்து எழுதுவேன் தோழி நன்றி:)

@vishy,
i have no idea vishy last time ambi had arranged for the meet actually.

@கிட்டு,
நன்றி, கலக்கிடலாம்:)

வேதா said...

@ப்ரகாஷ்,
நீங்க சொல்ற கருத்தையும் யோசிக்கிறேன் ப்ரகாஷ், கவிதை பக்கத்தில் நான் எழுதுவது பல பேருக்கு தெரிவதில்லை அதற்காக தான் இரண்டையும் ஒன்றாக்கிவிடலாமா என்று தோன்றுகிறது, இன்னும் முடிவு செய்யவில்லை:)

/இன்னுமொரு உலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.. /
இந்த கவிதை அப்படி ஒரு அனுபவத்தை உங்களுக்கு கொடுத்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே:)

/நான் திரும்பவும் ரசித்த மற்றுமோர் கவிதை.. /
நன்றி:)

@ஜி,
அட கலக்கலா கவிதை எழுதி கலக்கறீங்க:)
இந்த கவிதை உண்மையை மறைத்து பேசிய ஒருவரின் கதை, அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்:)

ambi said...

intha theatrela padam box office hit polirukku! :p

Anonymous said...

//நேற்றுப் பார்த்தத் திரைப்படமே மறந்துபோகும் எனக்கு,
உன்னை மறப்பதற்கு மட்டும், உன் நினைவுகள்
என் ஆயுட்காலம் கேட்குதடி//

ஜி..கலக்கிறீயேப்பா..ம்ம். சூப்பர்...

Syam said...

//intha theatrela padam box office hit polirukku!//

@அம்பி, இவ்வளோ பிஸிலயும் நீ வந்து இருக்கனா பாக்ஸ் ஆபீஸ் இல்லாம இருக்குமா :-)

Syam said...

50 :-)

Anonymous said...

பொய் சொல்லப்போறேன்
பொய் சொல்லப்போறேன்
உன் கவிதை வரிகள் சூப்பருங்க!
பொய் சொல்லப்போறேன்
பொய் சொல்லப்போறேன்
நான் சொன்னது பொய் வார்தைங்க!

வேதா said...

@அம்பி,
ஆமாம் நாரதரே:) ஒரு விழா எடுத்தடலாமா?:)

@ச்யாம்,
நாட்டாமை உங்க தீர்ப்பு என்னிக்குமே 'நச்' தான்:) பாவம் அம்பி நம்மள மறந்துடாம இருக்க அப்பப்ப எட்டி பார்த்துட்டு போறார், அதையும் தடுக்கணுமா?:)

/50 :-) /
அட அட உங்க பாசத்தை நினைச்சா..........:):)

@ப்ரேம்,
/நான் சொன்னது பொய் வார்தைங்க!/
எந்த வார்த்தையைன்னு சொல்லலியே:)

Kittu said...

//கண்களை இறுக மூடியும்
இமைகளைக் கிழித்துக் கொண்டு
புகுகின்றன காட்சிகள்,
நான் மறுக்க முடியாத
நிகழ்வுகளாய்// superb. kalakareenga vedha...unga kavidhai ellaam padichaen...miga miga arumai.

//சொல்லாத உண்மை
உள்ளுக்குள் கனத்தாலும்,
சுகமான சுமையென சுமந்து விடுவேன்
இப்பிறவியில் மட்டும்,
இனி வரப் போகும் பிறவிகளில்
உண்மையே உரைப்பதென்ற
முடிவுடன். // ellamae oru range'aa dhaan ezudhareenga.

வேதா said...

ada kittu sir romba seekiram vanthu padichiteenga :D thanks for ur words :)