Sunday, January 14, 2007

இன்புறுவ ரெம்பாவாய்!


இன்றுடன் மார்கழி மாதம் நிறைவடைகிறது, இந்த மாதம் முழுவதும் திருப்பாவை பாசுரங்களுக்கு நான் எனக்கு தெரிந்த வகையில் எழுதிய விளக்கத்தை படித்ததோடு மட்டுமல்லாமல் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி. இந்த முறை நான் எழுதியது பாடல்களுக்கான நேரடி விளக்கம் மட்டுமே, ஆனால் ஒவ்வொரு பாடலுக்கும் உண்மையான உள்ளர்த்தம் நிறைய உள்ளது, அதை முழுவதும் புரிந்துக் கொண்டு எழுதுவது என்பது கொஞ்சம் கடினம் தான், அதற்கான அவகாசமும்,புரிதலும் எனக்கு இன்னும் வரவில்லை. அடுத்த முறை அதை முயற்சிக்கிறேன். பாடல்களின் விளக்கம் எழுத எனக்கு மிகவும் உதவிய புத்தகங்கள் திரு டி.இராஜகோபாலன் எழுதிய 'ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை(விளக்க உரையுடன்)' மற்றும் எழுத்தாளர் திரு சுஜாதா எழுதிய 'ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்'. திரு.சுஜாதாவின் புத்தகத்தில் ஆண்டாளை பற்றி கூறியுள்ள என்னை கவர்ந்த சில வரிகள்,

"இந்த முப்பது பாடல்களையும் நோக்கும்போது ஆண்டாள் பெரும்பாலும் தன் தோழிகளையும் கண்ணனின் உறவினர்களையும், இறுதியில் கண்ணனையும் துயிலெழுப்புகிறார். ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு பெண் தன் தோழிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீங்கள் வெறும் போகப் பொருள்களல்ல; பகவானையே எழுப்பி நீங்கள் விரும்பும் பறையைக் கேட்கலாம். புறத்தூய்மையாலும் அகத்தூய்மையாலும் அவனை அடைய உங்களால் முடியும் என்ற புது நோக்கில் அவரை ஒரு புரட்சிப் பெண்ணாகப் பார்க்க முடிகிறது."

இனி திருப்பாவையின் இறுதி பாடலையும் பார்ப்போம்,

திருப்பாவை பாடல் - 30 (14/01/2007)

"வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்
."

பொருள்:

பாற்கடலை கடைந்த அந்த மாதவனை, கேசவனை , சந்திரனை ஒத்த அழகுடைய பெண்கள் பாடி தங்களுக்கு வேண்டிய வரங்களை(பறை) யாசித்துப் பெற்றதை பற்றி சொல்லும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை மலர் மாலை சூடிய, பெரியாழ்வாரின் மகளாகிய, கோதையின்(ஆண்டாள்) சங்க தமிழ் மாலையாம் இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் சொல்பவர்கள், நான்கு வலிமையான தோள்களையும் அழகிய சிவந்த கண்களையும் கொண்ட திருமாலின் அருள் பெற்று என்றும் இன்புறுவர்.

நாளை தை மாதம் பிறக்கிறது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனக் கூறுவர் அதன் படி நினைத்த காரியம் நிறைவேற ஆண்டவனின் அருளும், நிறைவேறாவிட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவத்தையும் அனைவரும் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்! :)

" அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

27 comments:

Bharani said...

really super-a ezhudhi irundeenga...though i havent read all of them...onnu rendu padichen...clear cut explanation...naanga dhaan ungaluku thanks sollanum....ivlo porumaya solli kuduthadhuku :)

Bharani said...

And...Iniya Pongal Nalvaazthukal...Innoru thadava kooda andha sarkara pongal anupalam :)

தி. ரா. ச.(T.R.C.) said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள். முப்பதுவும் தப்பாமல் சொன்ன வேதா(ளம்)வுக்கு நன்றி.நாளைக்காவது சக்கரைப் பொங்கல் உண்டா.

Usha said...

veda, thiruppavai ellam ezhudhi asathariye..Happy New Year!!

Usha said...

Happy Pongal too

Anonymous said...

//ஒரு பெண் தன் தோழிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீங்கள் வெறும் போகப் பொருள்களல்ல; பகவானையே எழுப்பி நீங்கள் விரும்பும் பறையைக் கேட்கலாம். புறத்தூய்மையாலும் அகத்தூய்மையாலும் அவனை அடைய உங்களால் முடியும் என்ற புது நோக்கில் அவரை ஒரு புரட்சிப் பெண்ணாகப் பார்க்க முடிகிறது."
//

WOW.. Hats off!
அழகான கருத்து.. கண்டிப்பா அவங்க புரட்சி பெண் தான்! அந்த காலத்திலேயே.. எவ்வளவு செய்து இருக்கின்றார்கள்!

Anonymous said...

/பாற்கடலை கடைந்த அந்த மாதவனை, கேசவனை , சந்திரனை ஒத்த அழகுடைய பெண்கள் பாடி தங்களுக்கு வேண்டிய வரங்களை(பறை) யாசித்துப் பெற்றதை பற்றி சொல்லும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை மலர் மாலை சூடிய, பெரியாழ்வாரின் மகளாகிய, கோதையின்(ஆண்டாள்) சங்க தமிழ் மாலையாம் இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் சொல்பவர்கள், நான்கு வலிமையான தோள்களையும் அழகிய சிவந்த கண்களையும் கொண்ட திருமாலின் அருள் பெற்று என்றும் இன்புறுவர்.//

உங்களுக்காக.. நான் கொஞசம் சொல்றேன்..

மாதவன் : அவனை அடைய மாதவம் செய்ய வேண்டும் என்பதாலும், மாதர்களுக்கெல்லாம் மனதில் தொழும் முதல் காதலன் என்பதாலும் ...

கோதை : ஆண்டாள் பிறப்பு தெரியாது..
அத்னால் அவள் "பசு" வின் குழந்தை. காரணம்.. எல்லா ஜிவ ராசிகாளுக்கும் தாயாக "கோ" கருதப்படுவது.

Anonymous said...

கேசவன்: கார் கூந்தலைப்போன கருமையானவன்.. கண்ணன்.

Anonymous said...

//திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி//
அழகான் வரி!

நமக்கு பெயர் காரணம் மட்டும் தான் தெரியும்! :)

Anonymous said...

iniya pongal nalvaazthukkal vedha :) to you n your family!

ambi said...

Nice writeup! hats off to U!
sujatha's view also impressive.

'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனக் கூறுவர்.

kandippa pirakkum! :)

Anonymous said...

Fantastic. very well written.

shankar.

Anonymous said...

இனிய பொங்கல் நல்வாழ்துக்கள்:)

enRenRum-anbudan.BALA said...

திருப்பாவைத் தொடருக்கு பாராட்டுக்கள் !

சமயம் இருப்பின், வாசிக்கவும்:

http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv23.html

to

http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv30.html

Priya said...

நல்லா எழுதினிங்க வேதா. நன்றி.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

@Dreamzz,

>>
மாதவன் : அவனை அடைய மாதவம் செய்ய வேண்டும் என்பதாலும், மாதர்களுக்கெல்லாம் மனதில் தொழும் முதல் காதலன் என்பதாலும் ...

கோதை : ஆண்டாள் பிறப்பு தெரியாது..
அத்னால் அவள் "பசு" வின் குழந்தை. காரணம்.. எல்லா ஜிவ ராசிகாளுக்கும் தாயாக "கோ" கருதப்படுவது.

>>

Arumaiyaana Sinthanai.I liked the way you related Aandal(Koothai) with Koo-Matha.That's why the Koo pooja in temples are done at early morning 4.

@Veda,

Aduthathu enna seiyaa pooreel ?

This month(Makaram - Thai) is Sunrise time for Devas.....Will you write something on Savithur Gayathri Mantra and Adhitya Hrithayam ?

Thanks,

Hayagriva Dasan

Anonymous said...

வேதா..

பாடல்களை படிக்கும் போது என் அப்பாவின் குரல் வந்ததது..

நன்றி வேதா.

எனக்கு இந்த பாடல்களின் முழுமையும் அறிந்திட இன்னும் வயது வேண்டும் என்றே நினைக்கிறேன்..

ஒரு நல்ல முயற்சி...

கீதா சாம்பசிவம் said...

நீங்க சொன்ன அர்த்தமே நல்லாத் தான் இருக்கு. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தாமதமாய் இருந்தாலும். புதுசா வேறே எழுதினாச் சொல்லுங்க. என் கணினியில் தெரியவில்லை.

SKM said...

Belated happy Pongal vedha.மிக அழகாக அத்தனை பாசுரங்கள், அதற்கான விளக்கம்.Superb.மிக்க நன்றி.

Syam said...

// 'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனக் கூறுவர் அதன் படி நினைத்த காரியம் நிறைவேற ஆண்டவனின் அருளும், நிறைவேறாவிட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவத்தையும் அனைவரும் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!//

மொத்த போஸ்ட்லயும் எனக்கு புரிஞ்சது இதுதான்... :-)

Syam said...

belated பொங்கல் வாழ்த்துக்கள் :-)

வேதா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி:) தத்தனியாக எல்லாருக்கும் பதில் எழுத முடியவில்லை, மன்னிக்கவும். ஒரு வாரத்துக்கு என் வலைப்பூவிற்கு விடுமுறை, மீண்டும் அடுத்த வாரம் அனைவரையும் சந்திக்கிறேன். நன்றி:)

Ravi said...

hmmm .. u made a bright yet strong mark on this season ..

whenever i hpnd to hear the word "margazhi" ... u r blog will come to my mind and u r great work on thirupavai ...

..enna pannarathu .. neenga first post thirupaavai'la aarambikum pothu ..konjam interstingaa padichane .. but intha maramandai'ku .. paathi puriyala ...

hmmm..

ne'way hope u had a great pongal ...

veerakumar said...

வேதா (வேதக்காவை நினைச்சாலே பேக்ரவுண்டுல பஜனை மியுசிக்கோட ஊதுவத்தி,சர்க்கரை பொங்கல் எல்லாம் மணக்குது)...

Anonymous said...

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்..


ரசிகா.

கீதா சாம்பசிவம் said...

அப்புறம் ஒண்ணும் எழுதலியா? அல்லது வழக்கம்போல் எனக்கு ஏமாத்துதா?

மு.கார்த்திகேயன் said...

கொ.ப.செ.. எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளா ஆளையே காணலை..