Wednesday, February 14, 2007

காதலும் கடைசரக்காயிற்று..

இன்னும் 10 நாள் தான்.. ஒரு வாரம் தான்.. 7,6,5...... இதெல்லாம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விடறதுக்கு கவுண்டவுன் இல்ல, இந்திய தொ(ல்)லைக்காட்சிகளில் முதன்முறையாக எந்த தியேட்டரிலும் ஓடாத படத்தை போடறதுக்கும், விக்காத பொருட்களையெல்லாம் ஏமாந்தவங்க தலையில கட்றதுக்கும் புதுசா ஒரு வழி கிடைச்சுருக்கே, காதலர் தினம் அதுக்கான கவுண்டவுன் தான் :)

காதல் என்ற வார்த்தையை எழுதக்கூட தெரியாத சிறு குழந்தைகள் கூட ஹாப்பி வேலண்டைன்ஸ் டே என்று சொல்லுகிற அளவு காதல் எங்கும் பரவி கிடக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை கொண்டாடப்படாத ஒன்று திடீரென்று எங்கு பார்த்தாலும் வியாபிக்க காரணம் என்ன? நம்ம ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனவுடன தொடர்ந்து சுஷ்மிதா சென்,லாரா தத்தா என்று நம் நாட்டு பெண்களே ப்ரபஞ்ச அழகி, உலக அழகி, என்று கன்னாபின்னாவென்று பட்டங்களை தொடர்ந்து வென்றதன் காரணம் என்ன தெரியுமா? நம் நாட்டில் அழகு சாதனங்களை விற்பதற்கு தான். அது மாதிரி இப்ப நம் நாட்டு வியாபாரிகளே காதலர் தினத்தை முன்னிட்டு தங்களுடைய பொருட்கள் இளைஞர்களை கவர பல உத்திகளில் ஈடுபடுகின்றனர்.

விஞ்ஞானத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசுரத்தனமான வளர்ச்சியாலும்,உலக மயமாக்கல்(globalisation) போன்றவற்றின் மூலமாகவும் மேற்கத்திய கலாச்சாரம் இங்கு பரவுவதை எவ்விதத்திலும் தடுக்க முடியாது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல நம் நாட்டு கலாச்சாரத்தில் அவர்கள் ஈடுபாடு கொள்வது போல தான் நாமும் அவர்களின் கலாச்சாரத்தில் ஈடுபடுகிறோம். இன்னும் சொல்லப்போனால் நம் சங்ககால இலக்கியங்களில் கூட காதல் தான் வெகு அழகாக சித்தரிக்கப்படுகின்றது. எனவே தமிழ் கலாசார சீரழிவு என்று சொல்லிக் கொண்டு காதலர் தினத்தை எதிர்ப்பது அபத்தம் என்பதே என் கருத்து. ஏனென்றால் காதலை கொண்டாடுவதினாலேயே அது தவறான ஒரு விஷயம் ஆகாது. அதை நாம் எப்படி கொண்டாடுகிறோம் என்பது தான் முக்கியம். கலாச்சாரம் என்பதை விட தனி மனித ஒழுக்கம் என்பதே முக்கியம். ஆனால் காதல் என்பதை புரிந்துக்கொள்ள முடியாத வயதில் வெறும் இனக்கவர்ச்சி மற்றும் வெற்று பந்தாவிற்காக சுற்றுபவர்களால் தான் காதல் என்பது ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. 'காதல்' போன்ற, பள்ளிக்கூட பருவத்தில் வரும் கன்றுக்குட்டி காதலை ஆதரிக்கும் படங்கள் தான் சிறுவர்கள் மனதில் காதலை பற்றி தவறான எண்ணங்களை ஊக்குவிக்கின்றன. எனவே காதலர்கள் காதலர் தினம் கொண்டாடுவதற்கு முன் இந்த மூன்று விஷயங்களையும் கருத்தில் கொள்ளுங்கள்,

1. உண்மையிலேயே ஒருவரையொருவர் காதலிக்கிறீர்களா என்று நன்கு யோசித்துக்கொள்ளுங்கள்(சும்மா அன்னிக்கு பிக்கப் பண்ண ஒரு பொண்ணு/பையன் கிடைச்சான்னு சொல்லி காதலை அசிங்கப்படுத்தாதீங்க)

2. விலை உயர்ந்தது என்று சொல்லி உபயோகப்படுத்த முடியாத பரிசுப்பொருட்களை வாங்கி உங்க பெற்றோர்/உங்க காசை கரியாக்காதீங்க

3. பொது இடத்தில் உங்களை தவிர பொது மக்களும் இருப்பாங்க என்பதை நினைவில் கொண்டு காதல் செய்யுங்க ;)

இதெல்லாம் சொல்றதுக்கு நீ யாருன்னு கேட்கறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன், எல்லாம் ஒரு சமூக அக்கறை தான்:)

இது வரை பொறுமையா படிச்ச உங்களை பாராட்டி நீங்க சிரித்து மகிழ அலைபேசியில் வந்த சில குறுஞ்செய்திகள்,அதாங்க எஸ்.எம்.எஸ் :) இது எனக்கு வந்தது இல்ல, ஒரு தமிழ் பத்திரிக்கையில் போட்டிருந்ததை சுட்டது :)

சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? உன்னை நினைக்கறது சந்தோஷம்.. உன்னையே நினைக்கறது துக்கம் :)

எல்லா ஆண்களும் 'காதல்'ங்கிற பேர்ல ரெண்டாவது தாயை தேடுவாங்க, ஆனா காதலிக்கிற எல்லா பெண்களுக்கும் கிடைக்கறது 'காதலன்'ங்கிற பேர்ல முதல் குழந்தை :)

ஒரு பொண்ணு உன்ன பார்த்து சிரிச்சா மனசுல பட்டர்ஃப்ளை பறக்கும், முகம் சந்தோஷத்துல மிதக்கும், ஏன்னா மச்சி.. அணையப்போற விளக்கு தான் ப்ரகாசமா எரியுமாம் :)

சரி காதலை பத்தி சொல்லிட்டு கவிதை எழுதாம இருக்க முடியுமா :) பொறுமையா அதையும் படிச்சுட்டு போங்க,
எங்க எழுதியிருப்பேன்னு உங்களுக்கு தெரியுமில்லையா? ;)

43 comments:

Ravi said...

Usha, nice post, nice points. Valentine's Day is not necessarily linked with "Romantic Love". Its just "love" - could be between anybody but inga namma makkal ara vekkadu kanakka adhai kaadhalargal dhinam-nu aakitaanga. Anyway, magizhchiya irukka innoru kaaranam, definitely good but neenga sonna maadhiri self-imposed decorum avasiyam.

ஜி said...

ஆஹா....

இவ்வளவு பொறுமையா ஒரு போஸ்ட்ட போட்டிருக்கீங்க... நல்லா சொன்னீங்க காதலப் பத்தி...

நமக்கெல்லாம் அந்த பிரச்சனையே இல்லீங்க :)))))

மு.கார்த்திகேயன் said...

நல்லதா போச்சு.. அட்லீஸ்ட் இந்த காதலர் தினமாவது உங்களை பதிவு போட வச்சதே.. சந்தோசம் வேதா..

மு.கார்த்திகேயன் said...

உண்மை உண்மை..வேதா.. இப்போது பல காதல்கள் காளான்களை போல முளைத்து, பட்டாம்பூச்சி போல பறந்து, சொற்ப கணங்களில் கலைந்து போகிறது.. அதற்குள் இந்த காதலர் தினமெல்லாம் தேவையற்றது..

மு.கார்த்திகேயன் said...

நீங்கள் சொன்ன ஒவ்வொரு கருத்தும் அப்படியே எனது கருத்தை பிரதிபலிக்கிறது வேதா..

Bharani said...

ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க :)

//சிறு குழந்தைகள் கூட ஹாப்பி வேலண்டைன்ஸ் டே என்று சொல்லுகிற அளவு காதல் எங்கும் பரவி கிடக்கிறது//...மிகவும் சரி. இப்படி சொல்லும் குழந்தைகளிடம் காதல்னா என்ன என்று கேட்டால் அவர்கள் வெட்க படுவார்கள் பாருங்கள்...கலி முத்தி போச்சுடா சாமி

Bharani said...

//நம் நாட்டில் அழகு சாதனங்களை விற்பதற்கு தான். அது மாதிரி இப்ப நம் நாட்டு வியாபாரிகளே காதலர் தினத்தை முன்னிட்டு தங்களுடைய பொருட்கள் இளைஞர்களை கவர பல உத்திகளில் ஈடுபடுகின்றனர்//...சரியோ சரி...யாரோட போதைக்கோ இளைஞர்கள் ஊருகாய் ஆகிறார்கள்...என்ன கொடுமை சரவணா :(

Bharani said...

//எனவே தமிழ் கலாசார சீரழிவு என்று சொல்லிக் கொண்டு காதலர் தினத்தை எதிர்ப்பது அபத்தம் என்பதே என் கருத்து//....இதுவும் சரி...ஆனால் மத்தியான நேர வேகாத வெயிலில் பீச்சில் உட்கார்ந்து அவர்கள் அடிக்கும் லூட்டி உலக கலாச்சார சீரழிவு :(

Bharani said...

//கலாச்சாரம் என்பதை விட தனி மனித ஒழுக்கம் என்பதே முக்கியம். //...மீண்டும் சரி...நம் ஊரில் தனி மனித ஒழுக்கம் என்றால் அது பக்கத்து வீட்டுக்காரனுக்கு தான் என்று நினைக்கிறோம்...நாமும் மனிதன்தான் என்பதை மறந்து விடுகிறோம் :(

Bharani said...

//பொது இடத்தில் உங்களை தவிர பொது மக்களும் இருப்பாங்க என்பதை நினைவில் கொண்டு காதல் செய்யுங்க //...இதை முதலில் செய்யுங்கப்பா....எல்லாம் ஒரு stomach burn தான் :)

Bharani said...

//எல்லா ஆண்களும் 'காதல்'ங்கிற பேர்ல ரெண்டாவது தாயை தேடுவாங்க, ஆனா காதலிக்கிற எல்லா பெண்களுக்கும் கிடைக்கறது 'காதலன்'ங்கிற பேர்ல முதல் குழந்தை :)///..ஆஹா...ஆஹா...எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க :)

//பொறுமையா அதையும் படிச்சுட்டு போங்க//....போய் படிச்சிட்டே போறேன் :))

பொற்கொடி said...

adada advice ellam super vedha! totally agree with you :)

kavidhai mejej ellam solli oru padame otringa! :)

Bharani said...

ஆங்...சொல்ல மறந்துட்டேனே...காதலர் தின நல்வாழ்த்துக்கள் :)

Priya said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க வேதா.

Dreamzz said...

adada! vedha! kalakiteenga! arumaiaana nethiyadi!

Dreamzz said...

//கலாச்சாரம் என்பதை விட தனி மனித ஒழுக்கம் என்பதே முக்கியம். ஆனால் காதல் என்பதை புரிந்துக்கொள்ள முடியாத வயதில் வெறும் இனக்கவர்ச்சி மற்றும் வெற்று பந்தாவிற்காக சுற்றுபவர்களால் தான் காதல் என்பது ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.//

100% correctunga!

Dreamzz said...

kavidhaiyum pottu irukeengalla! itha poi paarthidaren!

Dreamzz said...

//சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? உன்னை நினைக்கறது சந்தோஷம்.. உன்னையே நினைக்கறது துக்கம் :)/

I liked this one the most! super! ithu thaan namma intha vaara something!

Delhi_Tamilan said...

VDay ya munnitu oru nalla karuthulla post... good...

வேதா said...
This comment has been removed by the author.
My days(Gops) said...

//ஏமாந்தவங்க தலையில கட்றதுக்கும் புதுசா ஒரு வழி கிடைச்சுருக்கே, காதலர் தினம் அதுக்கான கவுண்டவுன் தான் :)//
starting'ey amarkalamaaa irrukudhu?

sema thaaaku thaaki irrukeenga..

//கலாச்சாரம் என்பதை விட தனி மனித ஒழுக்கம் என்பதே முக்கியம். //
100% correct.

// எல்லாம் ஒரு சமூக அக்கறை தான்:)//
ippadi ellarumey samoogam mela akkarai patta eppadi irrukum :))

Totaly a nice post....

My days(Gops) said...

//சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? உன்னை நினைக்கறது சந்தோஷம்.. உன்னையே நினைக்கறது துக்கம் :)//
idhu thaaan top'u veda....

pudhia sms'ai kandupidithu ulagukku unarthia engal katchi vaazhga...

adha sutta innoru katchi'ai serndha veda'ku engal katchi paaraatu therivithu kolgiradhu.... (paarunga, edhir katchi'nu naan sollala)

வேதா said...

@ரவி,
நீங்க சொன்னது போல் இது காதலர்கள் மட்டுமல்லாமல் எல்லாரும் கொண்டாடலாம்:) நம்ம மக்கள் கொண்டாடறதுக்கு ஒரு காரணம் வேணும் அதுல இதுவும் ஒன்னா போச்சு:)

@ஜி,
ஏன் அப்டி சொல்றீங்க காதலிச்சா தான் பிரச்னையா?:)

@கார்த்தி,
ஆமா தலைவரே எத்தன நாளைக்கு தான் சும்மா எதையாவது எழுதி ஓட்ட முடியும், நீங்க அருமையான பதிவா எழுதி தள்ளுறீங்க. நம்மளால முடிஞ்சது இப்டி என்னிக்காவது ஒரு நாள் உருப்படியா..:)

/அப்படியே எனது கருத்தை பிரதிபலிக்கிறது வேதா../
தலைவர் எவ்வழி தொண்டர் அவ்வழி:)

வேதா said...

@பரணி,
/...கலி முத்தி போச்சுடா சாமி /
அது சரி, ஆனா இந்த காலத்து குழந்தைகள் நம்மள விட தெளிவா இருக்காங்க:)

/யாரோட போதைக்கோ இளைஞர்கள் ஊருகாய் ஆகிறார்கள்...என்ன கொடுமை சரவணா :(/
சுயசிந்தனை வேணும் அப்ப தான் இதிலிருந்து தப்பிக்க முடியும். நம்ம நாட்டு இளைய சுமுதாயம் பெரும்பாலும் தமிழ் சினிமா கலாச்சாரத்துல தான் முழுகி கிடக்கு:(

/அவர்கள் அடிக்கும் லூட்டி உலக கலாச்சார சீரழிவு :( /
அதை விட நம் நாட்டுக்கே அவமானம் வேறெதுவும் இல்ல.

/எல்லாம் ஒரு stomach burn தான் :)/
ஹாஹா:):)

வேதா said...

@பொற்கொடி,
படமா? ஏதோ நீ பார்த்து ரசிக்கற மாதிரி இருந்தா சரி:) இன்னுமா என் கவிதையை படிச்சுக்கிட்டு இருக்க?:)

@பரணி,
ஜேம் டூ யூ:)

@ப்ரியா,
வாங்க வாங்க இப்ப தான் உங்க கதையை படிச்சுட்டு வந்தேன்:) வாழ்த்துக்கள்:)

வேதா said...

@ட்ரீம்ஸ்,
ரொம்ப நன்றி:) அதென்ன இந்த வார சம்திங்?:) ஏற்கனவே பொற்கிழி ஒன்னு பாக்கியிருக்கு நினைவு இருக்கா?:)

@dt,
நன்றி:)

@கோப்ஸ்,
ippadi ellarumey samoogam mela akkarai patta eppadi irrukum :))
அட அப்டி இருந்துட்டா எங்கள மாதிரி அட்வைஸ் பண்றவங்க பொழப்பு என்னாறது:) ஆனா நீங்க சொன்ன மாதிரி நடந்தா உண்மையிலேயே நல்லா தான் இருக்கும்:)

pudhia sms'ai kandupidithu ulagukku unarthia engal katchi vaazhga...
என்னது உங்க கட்சியா? ஹலோ இது நான் புதுசு கண்ணா புதுசு குங்குமம் வார இதழிலிருந்து சுட்டது:)

Dreamzz said...

//ரொம்ப நன்றி:) அதென்ன இந்த வார சம்திங்?:) ஏற்கனவே பொற்கிழி ஒன்னு பாக்கியிருக்கு நினைவு இருக்கா?:)/

பொற்கிழி எல்லாம் கடயில வெச்சு சரக்கடிச்சாச்சு! ;)

இந்த வார something நம்ம blog right hand topla irukkum paarunga!

வேதா said...

/பொற்கிழி எல்லாம் கடயில வெச்சு சரக்கடிச்சாச்சு! ;)/
என் ஷேர் வரவேயில்லையே;)

shree said...

nice post! excellent kavidhai! keep it up! :)

ambi said...

//கலாச்சாரம் என்பதை விட தனி மனித ஒழுக்கம் என்பதே முக்கியம்.//

ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க. good on U! :)

//என் ஷேர் வரவேயில்லையே//
U mean sarakku..? :p

ithuku thaan syam kooda sera koodathu!nu solrathu. :)

ambi said...

kavithai padam ellam ingaye otta koodatha?
he hee, anga poi padikka time illa, athaaan! :)

Syam said...

//இன்னும் சொல்லப்போனால் நம் சங்ககால இலக்கியங்களில் கூட காதல் தான் வெகு அழகாக சித்தரிக்கப்படுகின்றது//

இத சொன்னா பெரிசுங்களுக்கு எங்க புரியுது...6th படிக்கும் போதே தலைவன் தலைவி காதல் னு ஸ்கூல்லயே சொல்லி தராங்க.. :-)

Syam said...

//சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? உன்னை நினைக்கறது சந்தோஷம்.. //

காதல் பண்றது சந்தோசம்...அந்த பொண்ணயே கல்யான பண்ணிட்டா துக்கம் :-)

SKM said...

Very well said.

கீதா சாம்பசிவம் said...

ரொம்ப நாள் கழிச்சு வந்தா இன்னும் நீங்க காதலிலே இருந்து வெளியேவே வரலை போல் இருக்கு? அன்னிக்கு வந்தேன், பின்னூட்டம் கொடுக்காதே, போன்னு சொல்லிடுச்சு ப்ளாக்கர், சரி, என்ன ரொம்ப பிசியா? நம்ம வீட்டுப் பக்கம் ஆளே காணோம், போற வீடுகளிலே மட்டும் தலை தெரியுதே? :D

Delhi_Tamilan said...

ennaga.. ippolam netla time jasti spend panradhu illa pola iruku.. constructive time spend panna arambichitaengalo ?

வேதா said...

@ஷ்ரீ,
ரொம்ப நன்றி:)

@அம்பி,
/ரொம்ப நல்லா சொல்லியிருக்கிங்க. good on U! :)/

நன்றிங்க ஆபிசர்:)

/ithuku thaan syam kooda sera koodathu!nu solrathu. :) /

அட சொல்ல வந்துட்டாருடா சத்யசீலன் ஏன் இந்த சீன் அம்பி;)

/he hee, anga poi padikka time illa, athaaan! :) /

உங்களுக்கு தான் பாவம் எவ்ளோ வேலை ஆபிச்ல:)

வேதா said...

@ச்யாம்,
/தலைவன் தலைவி காதல் னு ஸ்கூல்லயே சொல்லி தராங்க.. :-)/

அநேகமா பள்ளியில நீங்க கவனிச்ச ஒரே பாடம் இதுவா தான் இருக்கும் நாட்டாமை;)

/...அந்த பொண்ணயே கல்யான பண்ணிட்டா துக்கம் :-)/
இந்த புதிய தத்துவம் 10001 உங்க தங்கமணி கிட்ட சொல்லி பாருங்க;)

வேதா said...

@skm,
நன்றி மேடம்:)

@கீதா,
என்ன பண்றது எல்லாருக்கும் ஆபிச்ல தான் நிறைய ஆணி புடுங்க வேண்டியிருக்கும் நமக்கு அப்டியா வீட்டுல நாம இல்லேன்னா ஒரு அணுவும் அசையாதில்ல:) அதான் அப்பப்ப கொஞ்சம் வணிக இடைவேளை அதான் ஷார்ட் கமெர்ஷியல் ப்ரேக்:)

வேதா said...

@dt,
ஹிஹி அப்டி தான் வச்சுக்கோங்க:)

Arunkumar said...

சூப்பரா சொல்லியிருக்கிங்க வேதா. தொப்பிய கலட்டிக்கிறேன் (அதாங்க hats off) :-)

Arunkumar said...

நாட்டாம, உங்க தத்துவமோ தத்துவம் :)


//
இத சொன்னா பெரிசுங்களுக்கு எங்க புரியுது...6th படிக்கும் போதே தலைவன் தலைவி காதல் னு ஸ்கூல்லயே சொல்லி தராங்க.. :-)
//
இத இத இதத்தான் ஸ்யாம் நானும் சொல்ல வந்தேன்.தலைவன பாத்து தலைவி என்ன பாடினாங்கனா-னு சொல்லிக்குடுத்து கடிய கெலப்பிடுவாய்ங்க :)

வேதா said...

/தொப்பிய கலட்டிக்கிறேன் (அதாங்க hats off) :-) /
விவிசி:)