Monday, February 19, 2007

படித்ததில் பிடித்தது

வானம் கறுத்து
வளவளன்னு பெய்த மழை
வாய்க்கால் வழி ஓடி
ஊரு கண்மாய் நிறைஞ்சிடுச்சு..
ஊத்துத் தண்ணி பொங்கிடுச்சு..
யாரு கண்ணு பட்டுச்சோ
ஊரு ரெண்டாச்சு
ஊறும் தண்ணி பகையாச்சு
வானத்து மழைக்காக
வழக்கும் வந்திருச்சு...
வெட்டு குத்துப் பகையாகி,
செயிலிலே நாலு பேரு
சென்பாந்தரம் ஆறு பேரு
வாய்க்கால் வந்திடுச்சு..
வாய்ப் பேச்சு சுருங்கிடுச்சு..
யாருக்கு யார் உறவோ
யார் மனுஷர் யாருக்கோ
மனசு வறண்டாச்சு..
மனுஷ குலம் வெடிப்பாச்சு..

பி.கு: பிரபஞ்சனின் 'முதல் மழைத்துளி' புத்தகத்தில் படித்தது,பிடித்தது :) இதில் 'சென்பாந்தரம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை,யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்:)சில மாதங்களுக்கு முன் தமிழ்சங்கத்தில் நடந்த கவிதை போட்டியில் நான் கலந்துக் கொண்டதையும், அந்த கவிதைகளையும் இங்கு பதிவு செய்திருந்தேன்.அந்த போட்டியில் நான் எழுதிய கவிதைக்கு இரண்டாம் இடம் அறிவித்திருந்தார்கள். அதை முன்பே அறிவித்துவிட்டார்கள், நான் தான் அதை வெளிப்படுத்தவில்லை(சில பேருக்கு மட்டும் தெரியும்) இப்பொழுது இரண்டாம் இடம் வந்ததிற்காக இந்த மெடல் கொடுத்திருக்கிறார்கள் :) தமிழ்சங்கமும், நண்பர்களும் கொடுத்த உற்சாகம் தான் இந்த பரிசு கிடைக்க காரணம், எனவே அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் :)

பரிசுக்குரிய கவிதை இங்கே

40 comments:

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம், ஜென்மாந்திரம் என்பது பேச்சு வழக்கில் (கொச்சைத் தமிழில்) சென்பாந்திரம்னு வந்திருக்கும்னு நினைக்கிறேன். என்ன, அக்ஞாத வாசம் முடிஞ்சாச்சா?

மு.கார்த்திகேயன் said...

வாவ். வாழ்த்துக்கள் வேதா.. கவிதை போட்டியில் இரண்டாம் இடம்.. கட்சியில் இருந்து சிறப்பு விழாவாக கொண்டடச் சொல்ல வேண்டியது தான்..

Delhi_Tamilan said...

eh.. just read that poem.. it deserves a good recognition.. great that u got one.. good.. keep it up.. next time.. first prize okaya.. ama eppo treat..?

Dreamzz said...

அடடா! சூப்பர்! வெற்றிப்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

Dreamzz said...

நீங்க quote பன்ன கவிதயும் அழகு! ஆனா, அந்த வார்தத்தைக்கு எனக்கும் meaning தெரியல!

Ravi said...

Veda, first hearty congratulations. Unmaiyile idhu periya vishayam dhaan. Seri, adutha kelvi, treat eppo??

மு.கார்த்திகேயன் said...

காலையில் அவசரமாக படித்ததில் மேலே ஓடும் ரயிலை மறந்துவிட்டேன் வேதா..

நன்றி.. நன்றி வேதா..

கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர்ங்கிறதை மறுபடியும் நிரூபிச்சிட்டீங்க வேதா

Syam said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்....:-)

Syam said...

//இதில் 'சென்பாந்தரம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை,யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்//

எனக்கு என்னமொ அது அந்த ஆத்துக்கு பேருனு தோனுது...காவிரி ஆறு,தாமிரபரனி ஆறு,சென்பாந்தரம் ஆறு (அட்றா அட்றா அட்றா சக்கை) :-)

Balaji S Rajan said...

Veda,

Congratulations!!! Have been reading all your Tiruppavai meanings... that was a great work. Keep it up. You will be remembered for this. Long time one short story please...

Syam said...

//கட்சியில் இருந்து சிறப்பு விழாவாக கொண்டடச் சொல்ல வேண்டியது தான்..//

தல இது எல்லாம் சொல்லி தான் தெரியனுமா...நான் உண்டியல் குலுக்க ஆரம்பிச்சுட்டேன் :-)

மணி ப்ரகாஷ் said...

வாழ்த்துகள் கவிதாயினி...

இன்னும் நிறைய மடல்களை அள்ளிக்கொண்டு வந்து அதில் எனக்கும் ஒன்னு தந்திங்கனா நல்லா இருக்கும்..

வேற ஒன்னும் இல்ல ஒரு தடவையாவது தொட்டு பார்க்கனும்னு ஆசைதான்....

மணி ப்ரகாஷ் said...

//தல இது எல்லாம் சொல்லி தான் தெரியனுமா...நான் உண்டியல் குலுக்க ஆரம்பிச்சுட்டேன் //

நாட்டாமை அப்ப நானு,,,

சரி நான் இங்க சின்சில ஸ்டார்ட் பண்றேன்..

ஆமா கணக்கு எல்லாம் காமிக்க வேண்டியது இல்லேயே...

ambi said...

அடடா! சூப்பர்! வெற்றிப்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

//அந்த போட்டியில் நான் எழுதிய கவிதைக்கு இரண்டாம் இடம் அறிவித்திருந்தார்கள். அதை முன்பே அறிவித்துவிட்டார்கள், நான் தான் அதை வெளிப்படுத்தவில்லை//

ஆஹா! என்ன ஒரு தன்னடக்கம். நாங்க ட்ரீட் கேட்ருவோம்!னு பயம் தானே? :p

பாருங்க இப்பவே ஷ்யாம் உண்டியல் தூக்கிட்டான்.
eley shyam, கணக்கு எல்லாம் கட்சியின் அடுத்த மாநாட்டுல கரெக்ட்டா சொல்லனும். இல்லாட்டி கட்சி உடைபடும். (எந்த உள்குத்தும் இல்லை)

ambi said...

ஆஹா! என்ன ஒரு தன்னடக்கம். நாங்க ட்ரீட் கேட்ருவோம்!னு பயம் தானே!

பாருங்க இப்பவே ஷ்யாம் உண்டியல் தூக்கிட்டான். கணக்கு எல்லாம் கட்சியின் அடுத்த மா நாட்டுல கரெக்ட்டா சொல்லனும். இல்லாட்டி கட்சி உடைபடும். (எந்த உள்குத்தும் இல்லை)

Bharani said...

வாழ்த்துக்கள் வேதா. கலக்கல். இது எல்லாம் எனக்கு ஒரு inspiration :)

Bharani said...

சரி treat எங்கன்னு சொல்லுங்க :)

Bharani said...

அங்க போய் கவிதையை படிக்கிறேன்...

Syam said...

//ஆமா கணக்கு எல்லாம் காமிக்க வேண்டியது இல்லேயே... //

@மணி,
அதுனால தான உண்டியல்...இல்லனா ரசீது அடிச்சு இல்ல கலக்சன் பண்ணனும் :-)

Syam said...

//கணக்கு எல்லாம் கட்சியின் அடுத்த மாநாட்டுல கரெக்ட்டா சொல்லனும்//

@ambi,

நான் தான் கணக்குல வீக்கே...என்கிட்ட போய் கணக்கு கேட்ட...சின்னபுள்ள தனமால்ல இருக்கு :-)

Priya said...

Congrats வேதா. இன்னும் நிறைய இது மாதிரி recognition கிடைக்க வாழ்த்துக்கள்.

பொற்கொடி said...

aahaa vaazthukkal guruve :)

பொற்கொடி said...

guruvaiye vaazhthina sishyai ;)

கீதா சாம்பசிவம் said...

நான் வந்து பார்த்தப்போ என்னோட கமெண்ட்டே பப்ளிஷ் பண்ணாமல் இருந்தது. அப்புறமாப் போட்டது போல் இருக்கு, இந்த மெடல் விஷயம், ம்ம்ம்ம்ம், நல்லா இருக்கு, மெடல், தங்கமா? :D
நானாவது அறிவிச்சிருந்திருப்பேன், பரிசு வந்ததை.

வேதா said...

எல்லாரும் வந்து கும்மி அடித்ததற்கு நன்றி:) நாளைக்கு பார்க்கலாம்:)

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள்.

ஜெயில் தண்டனைகளில் சாதாரணம்(simple),கடுமை(rigarous) மற்றும் ஜென்மாந்திரம்(life) (வாழ்க்கை முழுவதும்
அதைத்தான் கவிங்கர் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

ஜி said...

vetri petra kavithaayinikku vaazththukkal....

unga rangekku first prize kedatchirukkanum.. adutha thadava first munnaala ethavathu irunthutchunna atha ungalluku kodukka solren ;)))))

வேதா said...

@கீதா,
அஞ்ஞாத வாசமா? அப்டியெல்லாம் இல்ல:)
சென்பாந்திரம் என்ற சொல்லுக்கு நீங்க சொன்னதை தான் நானும் நினைச்சேன், ஆனாலும் தலைவி(வலி) சொல்லிட்டா அப்பீலே இல்லை, நன்றி:)

@கார்த்தி,
நன்றி தலைவரே, தொண்டரை பாராட்டி விழா எடுக்கும் தலைவர் வாழ்க:)

வேதா said...

@dt,
நன்றி, அடுத்த தடவை கண்டிப்பா முதல் பரிசு வாங்கிட்டா போச்சு:)

@ட்ரீம்ஸ்,
நன்றி :)
/ஆனா, அந்த வார்தத்தைக்கு எனக்கும் meaning தெரியல! /
தலை(வலி)வி கீதா சொல்லியிருக்காங்க பாருங்க:)

வேதா said...

@ரவி,
நன்றி ரவி, ட்ரீட் தான கொடுத்துட்டா போச்சு:) முதல்ல இந்தியாவிற்கு வாங்க அப்புறம் ட்ரீட் கொடுக்கறேன்:)

@கார்த்தி,
கட்சிக்காக பாடுபடும் ஒரு தொண்டருக்கு இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்ல தலைவா!:)
அப்புறம் இந்த அமைச்சரவை மாற்றம் என்னாச்சு:)ஹிஹி

வேதா said...

@நாட்டாமை,
வாழ்த்துக்கு நன்றி:)

/காவிரி ஆறு,தாமிரபரனி ஆறு,சென்பாந்தரம் ஆறு (அட்றா அட்றா அட்றா சக்கை) :-)/

ஹிஹி அப்பப்ப நீங்களும் உங்க மூளையை யூஸ் பண்றீங்க:) ஆனா தீர்ப்பு மாத்தி சொல்டீங்க:)பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்:)

@பாலாஜி,
ரொம்ப நாளா ஆளையே காணோமே:) சரி கதை தான எழுதிட்டா போச்சு, படிக்கணும்ங்கறது உங்க ஹெட்லெட்டர் ஹிஹி:)
நன்றி:)

வேதா said...

@நாட்டாமை,
/நான் உண்டியல் குலுக்க ஆரம்பிச்சுட்டேன் :-) /
புத்தி எப்டி போகுது பாரு நாட்டாமையா இருந்துக்கிட்டு இப்டியெல்லாம் பண்ணலாமா? சே நாட்டாமை வர்க்கத்துக்கே அவமானம்(ஹிஹி என் பேரை சொல்லி தான் உண்டியல் குலுக்க போறீங்க, மரியாதையா என் ஷேர் கொடுத்துடுங்க);)

வேதா said...

@ப்ரகாஷ்,
எனக்கே மெடல் மயில் மேல தான் வந்தது, படம் தான் காண்பிச்சாங்க:)இதுல நீங்க எங்க மெடலை தொட்டு பார்க்கறது?:)

/நான் இங்க சின்சில ஸ்டார்ட் பண்றேன்..

ஆமா கணக்கு எல்லாம் காமிக்க வேண்டியது இல்லேயே... /
நாட்டமை கிட்ட ரேட் பேசிட்டேன் நீங்க சின்சில வேணா ஸ்டார்ட் பண்ணுங்க எங்க வேணா ஸ்டார்ட் பண்ணுங்க நம்ம பங்கு ஒழுங்கா வந்து சேர்ந்துடணும்;)

@அம்பி,
/! என்ன ஒரு தன்னடக்கம். நாங்க ட்ரீட் கேட்ருவோம்!னு பயம் தானே? :p/

அதெல்லாம் ஒன்னும் இல்ல, நான் முதல்ல சொல்லாததுக்கு காரணம் இருக்கு:)
நல்ல வேளை நினைவுபடுத்துனீங்க முதல்ல நீங்க எங்களுக்கு ட்ரீட் கொடுங்க அப்புறம் நான் அதை பத்தி யோசிக்கிறேன் நாரதரே:)

/ கணக்கு எல்லாம் கட்சியின் அடுத்த மா நாட்டுல கரெக்ட்டா சொல்லனும்/.
யாரை பார்த்து கேட்கிறாய் கணக்கு?, எங்க நாட்டாமை நல்லவர்,வல்லவர், ஜொள்ளவர் சீசீ சொல் தவறாதவர்:)

வேதா said...

@பரணி,
நன்றி பரணி,
எனக்கு நீங்க எல்லாரும் கொடுக்கற ஊக்கம் தான் நான் தொடர்ந்து எழுதுவதற்கு காரணம்:)

@நாட்டாமை,
இல்லனா ரசீது அடிச்சு இல்ல கலக்சன் பண்ணனும் :-)
நீங்க எப்டி வேணா கலக்சன் பண்ணுங்க எனக்கு தர வேண்டியது மட்டும் கரெக்டா வந்துடனும் ஹிஹி:)

வேதா said...

@ப்ரியா,
ரொம்ப நன்றி ப்ரியா:)

@பொற்கொடி,
குருவை வாழ்த்திய சிஷ்யகேடிக்கு ஒரு மசால் தோசை பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்:)

@கீதா,
ஆமா நீங்க வந்து கமெண்டிட்டு போனப்புறம் தான் எனக்கு இந்த மெடல் மடல்ல வந்தது:)

@ஜி,
என்னது முதல் பரிசா? இதை விட ரொம்ப அருமையா எழுதினவங்க இருக்காங்க ஜி:) ஆனாலும் நீங்க சொன்னதுக்காக நன்றி:)

@திராச,
நீங்க சொன்னதை தான் கீதா மேடமும் சொல்லியிருக்காங்க:) நன்றி:) ஆளையே காணோமே ரொம்ப பிசியோ?;)

SKM said...

பாராட்டுக்கள் வேதா.இதை போல பல பல பாராட்டுகள் பரிசுகள் வாங்க வாழ்த்துகிறோம்.

Dreamzz said...

@வேதா
படித்தேன்.. கீதாம்மா கலக்கறாங்க :)

வேதா said...

@எஸ்.கே.ம்
ரொம்ப நன்றி:)உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்,இப்ப பரவாயில்லையா?

@ட்ரீம்ஸ்,
பின்ன தலைவி(வலி)ன்னா சும்மாவா?:)

Arunkumar said...

வாவ். கலக்கிட்டீங்க. கவிதையும் சூப்பர் :-)

ட்ரீட் எப்போ?

வேதா said...

நன்றி அருண்:)