Tuesday, February 27, 2007

எச்சரிக்கை: இது ஒரு மொக்கை பதிவு :)

ப்ளாக்குல வாங்குற ஆப்பு போதாதுன்னு நமக்கு ஆப்பு வைக்கறதுக்குன்னே பல பேரு நாட்டுல திரியறாங்க. நேத்து என்னாச்சு நம்ம ப்ளாட் வாண்டு ஒன்னு எங்க வீட்டுக்கு வந்துச்சு. இந்த மேடம் எப்படின்னா வாய தொறந்தா நல்ல நல்ல வார்த்தையா தான் பேசுவாங்க(அதாவது, பன்னி,நாயே,எருமைமாடு)நல்லா தான்யா புள்ளைய வளர்க்குறீங்க, டிஸ்கவரி சேனல் மட்டும் தான் காட்டுவீங்களோ? ஆனா என்னைய கண்டா அதுக்கு கொஞ்சம் பயம்,நாம தான் ரெம்ப ரீஜண்டாச்சே (அது ஒன்னும் இல்ல, ஒரு நாள் சுத்தும்முத்தும் பார்த்து யாரும் இல்லேன்னு நோட் பண்ணிக்கிட்டு அது வாயில பட்டுன்னு போட்டுட்டேன் அதிலிருந்து என்னைய பார்த்தா மட்டும் அதோட வாய் தானா அக்கான்னு கூப்டும்) நம்ம வீட்டுக்குள்ள வரும் போது மட்டும் வாலை சுருட்டி வச்சுக்கிடும் :)நேத்து வரும்போதே மேடம் ரொம்ப கோவமா வந்தாங்க, அவங்க வீட்டு உடைஞ்சு போன சைக்கிளை பக்கத்து வீட்டு வாண்டு தொட்டுடுச்சாம் அதுக்கு இந்தம்மா அவனை ரெண்டு சாத்து சாத்திடுச்சு. நம்ம வாய் சும்மா இருக்குமா, ரொம்ப நல்லவ மாதிரி 'அச்சச்சோ அப்டியெல்லாம் பண்ணக்கூடாது செல்லம், அவன் பாவம் இல்ல? அப்புறம் எல்லாரும் உன்ன பேட் கேர்ள்னு சொல்லுவாங்க, பாரு அக்கா அப்டியெல்லாம் யாரையாவது அடிக்கறேனா அதான் எல்லாரும் என்ன குட் கேர்ள்னு சொல்றாங்க' அப்டின்னு ஒரு பிட்ட போட்டேன்.நம்ம நல்ல நேரம் பாருங்க விதி பின்னாடியிலிருந்து கைக்கொட்டி சிரிச்சது. அப்டியே ஸ்லோமோஷன்ல திரும்பி பார்த்தா என்னோட மாமி நிக்கறாங்க. 'வாண்டுக்கு அட்வைஸ் பண்றியே கொஞ்சம் உன் ப்ளாஷ்பேக்கை ஓட்டி பாரும்மா' அப்டின்னு சிவாஜி கணக்கா டயலாக் விட்டாங்க. சொன்னதோட நிக்காம அவங்களே கொசுவர்த்தி சுருளை பத்தவும் வச்சுட்டாங்க, நானும் ஊதி ஊதி பார்த்தேன், ஹும்.. முடியல, சரி நம்ம பொழப்பு இன்னிக்கு அவ்ளோ தான்னு ஓரமா போய் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். இப்ப ப்ளாஷ்பேக், ஓகே ஷ்டார்ட் மீஜிக்:)சின்ன வயசுல அதாவது எனக்கு மூணு வயசு இருக்கும் போது என் தம்பி பொறந்தான், அதனால எங்கம்மா அவங்கம்மா வீட்டுல இருந்தாங்க,நான் எங்க வீட்டுல தான் இருந்தேன். அப்ப ஒவ்வொரு வார இறுதியிலும் எங்கம்மாவை பார்க்க பாட்டி வீட்டுக்கு போவேன்.அப்ப நான் ரொம்ப சமத்து(நிறுத்து நிறுத்து யார் கிட்ட ரீல வுடற?)சரி சரி நாம அந்த ஏரியால நுழைஞ்சாலே எங்க பாட்டி வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க அப்டியே சுனாமியம்மனை கண்ட மாதிரி நடுங்க ஆரம்பிச்சுடுவாங்க. ஏன்னா அவங்க வீட்டுல நிஜமாவே சமத்து பொண்ணு ஒண்ணு இருந்தது.ஏற்கனவே வீட்டுல புது வரவால நான் கொஞ்சம் கடுப்புல இருந்தேன். பின்ன எல்லாரும் திடீர்னு நான் ஒருத்தி இருக்கேன்னு மறந்து என் தம்பியை கொஞ்ச ஆரம்பிச்சாங்க, எல்லா மொத பசங்களுக்கும் வர்ர கோவம் எனக்கும் வரும், என்ன கொஞ்சம் அதிகம். என் தம்பி தூங்குற நேரமா பார்த்து அவன கிள்ளி வுட்டுட்டு வந்துடுவேன், அவன் அழும்போது அப்டியே கவலப்படற மாதிரி ஆக்ட் வுடுவேன்(நமக்கு இதெல்லாம் சொல்லி தெரியணுமா எல்லாம் தானா வர்ரது தான்)இதெல்லாம் கூட நான் நினைவு தெரிஞ்சு செஞ்சதில்லை, சின்ன வயசுல குழந்தைத்தனமா செஞ்சது(ஹிஹி அப்டி சொல்லி சமாளிக்க வேண்டியது தான்).இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு இப்ப என் தம்பி என்னை வெறுப்பேத்தறதை முழு நேர தொழிலாகவும், அப்பப்ப அவன் ஆபிச்ல ஆணி புடுங்கறதை பகுதி நேர தொழிலாகவும் வச்சுக்கிட்டு இருக்கான்:)அட சொல்ல வந்த மேட்டரை வுட்டுட்டேன் பாருங்க, நம்ம பக்கத்து வீட்டு சமத்து பொண்ணு பத்தி சொன்னேன் இல்ல, அது என்னை அவங்க தெருக்கோடில பார்த்தாலே அலற ஆரம்பிச்சுடும். அவங்கம்மா முன்னாடியே என் மாமி கிட்ட சொல்லி வச்சுடுவாங்க 'உங்க நாத்தனார் பொண்ணு வந்ததுன்னா சொல்லிடுங்க, நான் என் பொண்ணை வீட்டுக்குள்ளேயே வச்சுக்கிறேன்'. சரி எதுக்கு தான் இவ்ளோ ஆர்ப்பாட்டம்னு கேட்கறீங்களா? அது ஒன்னும் இல்லீங்க அவங்க வீட்டு பொண்ணு மேல என்ன விரோதமோ தெரியலை,போன ஜென்மத்து பகையோ தெரியல, ஒண்ணுமே செய்ய மாட்டேன்,பேச கூட மாட்டேன் நேரா போய் கன்னத்துல பட்டுன்னு ஒரு அறை விடுவேனாம்,அவ்ளோ தான் அவ அலறி அடிச்சுக்கிட்டு ஓடி போயிடுவா.இதுல காமெடி என்னன்னா இதெல்லாம் எனக்கே நினைவுல இல்ல, ஆனா இத்தனை வருஷம் கழிச்சும் இந்த சம்பவத்தை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது சொல்லலேன்னா எங்க சொந்தக்காரங்களுக்கு ஜென்ம சாபல்யமே கிடைக்காதுங்குற மாதிரி எல்லா வாண்டுகள் கிட்டயும் சொல்லி என்னைய பழிவாங்கிடுவாங்க.இந்த கதையை கேட்டுக்கிட்டு இருந்த எங்க ப்ளாட் வாண்டுக்கு என்ன புரிஞ்சுதோ தெரியல, அதிலிருந்து என்னய பார்த்து நீயெல்லாம் அட்வைஸ் பண்ண வந்துட்டங்குற ரேஞ்சுக்கு ஒரு லுக் வுடும், ஆனா வாய் மேல போட்டதை நினைவுல வச்சுக்கிட்டு எதுவும் சொல்லாம போயிடும்.
இப்டி நாம சின்ன வயசுல அறியாத பருவத்துல தெரியாம(!)பண்ணின டகால்டி வேலையெல்லாம் வெளிய தெரியாம நாம மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணனும்னா இனிமே ஒரு பழமொழிய நினைவுல வச்சுக்கணும், 'பகல்ல அக்கம் பக்கம் பார்த்து பேசு, இரவுல அது கூட பேசாத' :)
சரி இதெல்லாம் ஒரு மேட்டர் இதையும் ஒரு பதிவா போடறியான்னு கேட்கறவுங்களுக்கு சொல்லிக்கறேன் எத்தன நாளைக்கு தான் சீரியஸ் பதிவா போடறது? அதான் இந்த மொக்கை, அடுத்த பதிவு ஒரு சீரியஸ் மேட்டரோட ஆம்புலன்ஸுல காத்துக்கிட்டு இருக்கு, அடுத்த வாரம் அதை அட்மிட் பண்ணிக்கிடலாம், இப்போதைக்கு மீ த எஸ்கேப், வர்ட்டா?:)

61 comments:

Princess said...

நல்ல மொக்கை தான்.


சுவாரஸ்யமான போஷ்ட் மேடம். :)

சீரியஸ் பதிவ எப்ப அட்மிட் பண்ண போரீங்கோ?

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி, இந்த ஹிஹிஹி உங்க போஸ்ட்டுக்கு இல்லை, மவுஸைக் கவனிக்காமல் டி.வியிலே கவனமா அடிச்சேனா அது போய் அட்ரஸ் பாரிலே விழுந்து search bar என்னத்தைத் தேடுறதுன்னு முழி முழின்னு முழிக்குதா, அதுக்குத் தான் சிரிப்பு, இப்போ உங்க போஸ்ட்டுக்கு வருவோம்.

இதுக்கு ஒரு போஸ்ட், இதுக்கு நாங்க சிரிக்கணுமா, போகுது சிரிக்கிறேன், ஹிஹிஹிஹிஹிஹிஹி! போதுமா? இன்னும் வேணுமா?

கீதா சாம்பசிவம் said...

நான் தான் ப்ஃர்ஸ்டா? ஹை, ஜாலி!

கீதா சாம்பசிவம் said...

நீங்க போடற மத்த பதிவு எல்லாம் நல்லதுன்னு யாருங்க சொன்னாங்க? ஆண்டாள் பதிவைத் தவிர! :D

கீதா சாம்பசிவம் said...

கமெண்ட் போதுமா?

மாசிலா said...

கும்மி அடிக்கறதுக்கு விளக்கம்லாம் எதுக்குங்க? உங்கள யாரும் கோவிச்சிக்க போறதில்ல. நடத்துங்க.

Ravi said...

Usha,
first vaazhthukka, for becoming Deputy CM. Treat mela treat pending irukku. Nyabagam vechukonga!!

Indha post-a edhukku "mokkai"nu poteenga? I thorougly enjoyed reading it. Enakku neenga andhu vaanda vaiyla pattunu kudutheenganu sonna podhu, enakku Punnagai Mannan paduthala Srividya kaiyaalra technique dhaan nyabagam vandhadhu.

At the end of reading the post, neenga ivvalavu "Nalaaavaaaaa"nu ivvalavu naal theriyaama poche!!

Btw, how was Chennai Sangamam? Yaaravadhu adhai pathi oru post podungalen, please... Thanks in advance!!

ஜி said...

ஆஹா... நல்ல கொசுவத்திப் பதிவுதானே... இது எப்படி மொக்கயாகும்.. காலங்காலமா நான் கொசுவத்திப் போஸ்ட் மட்டும்தாங்க போட்டுக்கிட்டு இருக்கேன்.. அப்போ எல்லாமே மொக்கையா????

ஆனாலும், ஒரு சப்ப மேட்டர இவ்வளவு பெருசா ஒரு போஸ்ட்டா போட்டதுக்கு உங்களப் பாராட்டத்தான் செய்யணும் ;))))

Arunkumar said...

என்னடா வேதா ரொம்ப நாளா பதிவே போட மாட்றாங்கனு இன்னைக்கு சும்மா வந்து பாத்தா நான் 3 மிஸ் பண்ணியிருக்கேன். சரி,கன்னத்துல அறஞ்சிட மாட்டிங்களே? தோப்புக்கரனம் வேனா போட்டுட்றென் :)

Arunkumar said...

//
அப்டியே சுனாமியம்மனை கண்ட மாதிரி நடுங்க ஆரம்பிச்சுடுவாங்க
//
LOL :)

//
அவன கிள்ளி வுட்டுட்டு வந்துடுவேன், அவன் அழும்போது அப்டியே கவலப்படற மாதிரி ஆக்ட் வுடுவேன்
//
அட, பாருடா.. நான் இதெல்லாம் என்னோட தம்பிக்கு செஞ்ச மாதிரி தெரியலியே.. அம்மாவ கேக்குறேன் :)

Arunkumar said...

//
பேச கூட மாட்டேன் நேரா போய் கன்னத்துல பட்டுன்னு ஒரு அறை விடுவேனாம்,அவ்ளோ தான் அவ அலறி அடிச்சுக்கிட்டு ஓடி போயிடுவா.
//
எக்கா, இதுக்கு பேரு "ஒண்ணுமே செய்ய மாட்டேன்"ஆ? நல்லா இருக்கு நாயம்...

//
'பகல்ல அக்கம் பக்கம் பார்த்து பேசு, இரவுல அது கூட பேசாத' :)
//
துனை முதல்வர் ஆன உடனே இப்பிடியா? ;)

Arunkumar said...

அப்பறம் இன்னும் அந்த கொல வெறி இருக்கா? :)

பதிவு சூப்பருங்க. மத்ததெல்லாம் போய் படிக்கனும். அபீட் ஆயிக்குறேன்.

Syam said...

இவ்வளவு அழகான இரு ஹிஸ்ட்ரி பதிவ போய் மொக்கைனு யாராவது சொல்வாங்களா...என்ன நீ அந்த பக்கத்து வீட்டு பொன்ன மட்டும் அடிப்ப...நான் யாரா இருந்தாலும் கடிதான் :-)

Syam said...

//அப்புறம் எல்லாரும் உன்ன பேட் கேர்ள்னு சொல்லுவாங்க//

நல்ல வேளை அந்த வாண்டு திருப்பி..அப்போ நீ என்ன அடிச்சயே நீயும் பேட் கெர்ள் தான கேக்காம விட்டுச்சே :-)

Syam said...

//அப்பறம் இன்னும் அந்த கொல வெறி இருக்கா? :)//

அருண்...எதுக்கும் கொஞ்சம் சாக்ரதயாவே இருங்க :-)

Aravind said...

muhahahah....

Bharani said...

interesting and suber post :)

//வாய தொறந்தா நல்ல நல்ல வார்த்தையா தான் பேசுவாங்க(அதாவது, பன்னி,நாயே,எருமைமாடு)நல்லா தான்யா புள்ளைய வளர்க்குறீங்க, டிஸ்கவரி சேனல் மட்டும் தான் காட்டுவீங்களோ//...ennakum idhu dhaan puriyala..chinna pasanga bayangara pesaraanga...enga irundhudhan pesa kathukaraangane theriyala...chila samayan maanam kappal erifying :)

Bharani said...

//அது வாயில பட்டுன்னு போட்டுட்டேன் அதிலிருந்து என்னைய பார்த்தா மட்டும் அதோட வாய் தானா அக்கான்னு கூப்டும்//...aaha mariyaadhai vaangaradhuku ippadi oru vazhi iruka...idhu theriyama poyidiche...inimel indha method dhaan :)

Bharani said...

//போன ஜென்மத்து பகையோ தெரியல, ஒண்ணுமே செய்ய மாட்டேன்,பேச கூட மாட்டேன் நேரா போய் கன்னத்துல பட்டுன்னு ஒரு அறை விடுவேனாம்//...paavanga andha ponnu :(

//'பகல்ல அக்கம் பக்கம் பார்த்து பேசு, இரவுல அது கூட பேசாத' //...enna oru pudhumozhi...

Bharani said...

//அடுத்த பதிவு ஒரு சீரியஸ் மேட்டரோட ஆம்புலன்ஸுல காத்துக்கிட்டு இருக்கு, அடுத்த வாரம் அதை அட்மிட் பண்ணிக்கிடலாம்//...LOL :)

ippadhiki avlodhaan...meedhi serious matterku :)

வேதா said...

@இளவரசி,

மொக்கைன்னு சொல்லிட்டு சுவாரஸ்யம்னும் சொல்லிட்டீங்க ஏதோ படிக்க நல்லா இருந்தா சரி,நன்றி:) அடுத்த பதிவு அடுத்த வாரம் தான்:)

@கீதா,
/இதுக்கு ஒரு போஸ்ட், இதுக்கு நாங்க சிரிக்கணுமா, போகுது சிரிக்கிறேன்,/

இதுக்கு பேரு காமெடியா?அய்யோ அய்யோ ஹிஹி:)

/நான் தான் ப்ஃர்ஸ்டா? ஹை, ஜாலி!/

பாருங்க இந்த மொக்க போஸ்டுக்கு கூட உங்களால முதல்ல வர முடியல:)

/நீங்க போடற மத்த பதிவு எல்லாம் நல்லதுன்னு யாருங்க சொன்னாங்க? ஆண்டாள் பதிவைத் தவிர! :D/

அடடா அப்ப நான் ப்ளாக் எழுதறதே வேஸ்டா?:D சரி இந்த கமெண்டை எப்பவும் அம்பியோட பக்கத்துல தான எழுதுவீங்க, பழக்க தோஷத்துல இங்க எழுதிட்டீங்களோ?:)

/கமெண்ட் போதுமா?/
ஏன் இன்னும் ரெண்டு சேர்த்து தான் போடறது,காசா? பணமா?:D

வேதா said...

@மாசிலா,
விளக்கமெல்லாம் சும்மா ஒரு சீனுக்கு தான்:)

@ரவி,
அட உண்மையாகவே ரசித்தீங்களா? அப்ப ஏதோ கொஞ்சம் நகைச்சுவையும் எனக்கு வருதுன்னு சொல்றீங்க ஹிஹி:)

ட்ரீட்டா? நான் எத்தனை தடவை சொல்றது இந்தியாவுக்கு வாங்க ட்ரீட் தரேன்:)இல்ல வந்துட்டீங்களா?

/ neenga ivvalavu "Nalaaavaaaaa"nu ivvalavu naal theriyaama poche!!
ஹிஹி நான் நல்லவளுக்கு நல்லவள்;)

சென்னை சங்கமத்துக்கு நான் போகலை, ஆனா அதை பத்தி பேப்பரில் படிச்சேன்.

வேதா said...

@ஜி,
அதாவது ஜி இது கொசுவத்தி மேட்டர் தான்,ஆனா நீங்க சுத்தன அளவுக்கு நான் சுத்தினேனா அப்டின்னு ஒரு சந்தேகம், அதான் எதுக்கு வம்புன்னு ஒரு டிஸ்கி போட்டுட்டேன்:)

/ஒரு சப்ப மேட்டர இவ்வளவு பெருசா ஒரு போஸ்ட்டா போட்டதுக்கு உங்களப் பாராட்டத்தான் செய்யணும் ;)))) /

ஏனுங்கண்ணா இதுக்கு பேரு தான் வஞ்சப்புகழ்ச்சி அணியோ இல்ல நம்ம சங்கத்து பாஷையில் உள்குத்தா?:)

வேதா said...

@அருண்,
தோப்புக்கரணம் எதுக்கு? பின்னூட்டங்களை அள்ளி வீசுங்க அது தான் உங்களுக்கு தண்டனை:)

/நான் இதெல்லாம் என்னோட தம்பிக்கு செஞ்ச மாதிரி தெரியலியே.. அம்மாவ கேக்குறேன் :) /

அது எல்லாருமே டீஃபால்டா செய்யறது தான் இதுல என்ன சந்தேகம்?:)

/எக்கா, இதுக்கு பேரு "ஒண்ணுமே செய்ய மாட்டேன்"ஆ? நல்லா இருக்கு நாயம்.../

இதல்லாம் கண்டுக்க கூடாது நைனா அக்காங்..:)

/துனை முதல்வர் ஆன உடனே இப்பிடியா? ;) /
ஆமா பின்ன நம்ம கட்சியோட ரகசியங்களை நான் தான் காப்பாத்தணும் நம்ம முதல்வரை நம்ப முடியாது ஹிஹி:)நயனை காமிக்கறேன்னு யாராவது சொன்னா எல்லா ரகசியங்களையும் வித்துடுவாரு;)

/அப்பறம் இன்னும் அந்த கொல வெறி இருக்கா? :)/
என்ன இப்டி சொல்டீங்க நான் நல்லவ,வல்லவ,நாலும் தெரிஞ்சவ பல பேரை வாழ வைத்த தெய்வம், அப்டின்னு நான் சொல்லல நம்ம நாரதர் அம்பி தான் சொன்னாரு:)

வேதா said...

@ச்யாம்,
வாங்க முதல்வரே வாங்க முதல்வர் பதவியேற்றவுடன் நம்ம வீட்டு பக்கம் வந்துருக்கீங்க:)

/என்ன நீ அந்த பக்கத்து வீட்டு பொன்ன மட்டும் அடிப்ப...நான் யாரா இருந்தாலும் கடிதான் :-) /


இதெல்லாம் சொல்லி தெரியணுமா நாமெல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் அல்லவா?:)

/நல்ல வேளை அந்த வாண்டு திருப்பி..அப்போ நீ என்ன அடிச்சயே நீயும் பேட் கெர்ள் தான கேக்காம விட்டுச்சே :-)/

ஹிஹி அதுக்கு அந்த அளவுக்கு மேல்மாடில சரக்கு இல்ல:) எல்லாரும் நம்மள மாதிரி அதிபுத்திசாலிகளா இருப்பாங்களா அண்ணே?;)

/எதுக்கும் கொஞ்சம் சாக்ரதயாவே இருங்க :-) /
ஆமாமா நான் நாட்டாமையோட இல்ல முதல்வரோட தங்கச்சி:)

வேதா said...

@அரவிந்த்,
ஏனுங்கன்னா என்ன சொல்ல வரீங்க?:)

@பரணி,
/chila samayan maanam kappal erifying :) /
அதுக்கு தான் சின்ன பசங்களோட பேசும் போது சாக்ரதையா இருக்கணும் இல்லேன்னா நம்மள அசிங்கப்படுத்திடுவாங்க:)

/interesting and suber post :)/
ரொம்ப நன்றி உங்கள மாதிரி சில பேருக்கு தான் நகைச்சுவை உணர்வு இருக்கு:)

/idhu theriyama poyidiche...inimel indha method dhaan :)/
ஆகா இதுக்கும் நான் தான் ஆசானா?:) ஆனா அந்த குழந்தை அவுங்க வீட்டுல சொல்லாம தப்பிக்கனும் அதுல தான் இருக்கு மேட்டரே;)

/...enna oru pudhumozhi.../
ஹிஹி இது பழைய மொழிதான்

மு.கார்த்திகேயன் said...

இப்போதைக்கு வருகைப் பதிவு..

நாளை காலை எழுந்தவுடன் படிப்பு.. (அப்படித்தானே பாரதி சொல்லி இருக்கார்)

ambi said...

//அதிலிருந்து என்னய பார்த்து நீயெல்லாம் அட்வைஸ் பண்ண வந்துட்டங்குற ரேஞ்சுக்கு ஒரு லுக் வுடும், ஆனா வாய் மேல போட்டதை நினைவுல வச்சுக்கிட்டு எதுவும் சொல்லாம போயிடும்.//

ROTFL :) ipdiyellaama kozhanthaiya bayam kaatrathu? :p

//நீங்க போடற மத்த பதிவு எல்லாம் நல்லதுன்னு யாருங்க சொன்னாங்க? ஆண்டாள் பதிவைத் தவிர!//

@veda, poruthathu pothum veda, pongi ezhu! :D
thudikkirathu meesai!
எஙகளிடம் சகாய விலையில் ஆட்டோக்கள், சுமோக்கள் வாடகைக்கு கிடைக்கும்! ஜாமான் செட்டுக்கள் இலவசம்! :)

//இந்த கமெண்டை எப்பவும் அம்பியோட பக்கத்துல தான எழுதுவீங்க, பழக்க தோஷத்துல இங்க எழுதிட்டீங்களோ?:)//
correcttu! vayasaanale nyabaga marathi jaasthi aayidumaam! :p

கீதா சாம்பசிவம் said...

@அம்பி, இந்தத் தூண்டி விடற நாரதர் வேலை எல்லாம் இங்கே நடக்காது. வேதாவும் சரி, எஸ்.கே.எம்.மும் சரி, ரகசியமா என்னைத் தான் ஆதரிக்கிறாங்க. பப்ளிக்காவும் சொல்லுவாங்க. நீங்க தான் தி.ரா.ச. சார் ஆதரவு ஒண்ணு மட்டுமே கதின்னு இருக்கீங்க! நாங்க ஒரு கூஊஊஊஊட்ட்ட்ட்ட்டண்ண்ண்ண்ணியாக்கும்!

dubukudisciple said...

veda!!
first time in ur post!!!
simply comedy!!
ide mathiri niraya ezhuthunga...
naan kekanamnu irunth kelviya naataamai ketutaru!!!
enaku intha mathiri oru kosuvathi matterum nyabagame illye!!
che enna nyabaga marathi enaku!!!
appuram arunku enna bayam!!
konjam yosikarthuku iruku pola iruke!!
kolutha vendiyatha koluthi potachu!!
inime!!
NARAYANA !!! NARAYANA!!!

வேதா said...

@karthik,
varugai pathivu seyapatathu:)
/நாளை காலை எழுந்தவுடன் படிப்பு.. (அப்படித்தானே பாரதி சொல்லி இருக்கார்) /

aama ella blogleyum intha sentence copy paste paniteengala:)

@ambi,
/ipdiyellaama kozhanthaiya bayam kaatrathu? :p/

ithuku unga stylela pathil sollanumna 'naaney oru kuzhanthai enna paartha athu payapada porathu?;)'

unga narathar buthi innum pogalaya? ellaam innum konja naalaiku thaan ambi appuram irukavey iruku poori kaatai,ippavey mothama order panitatha namma kathci ulavu thurai thagaval vanthuruku:)

வேதா said...

@geetha,
thalaivi(vali) ambiku thakka pathil alikapatathu enbathai thazmaiyudan therivithu kolkirom:) amaithi nilavatum:)

@dd,
romba periya name sry athaan surukiten:)
welcome to my blog:)
vanthavudaney narathar velaiya?
arun en enna pathu payapada porar?,naan ethum ariya appavi, oru kuzhanthai:D

kosuvathi matterelam periya matterey illa, apdiye paduthukittey vittatha verichu paarunga, ella flashbackum nyabagathuku varum:)

Priya said...

Veda kalakittinga... ROFTL :)

Neenga dhana adhu? chinna vayasula enna vandhu aranjadhu ???

Bharani said...

//உங்கள மாதிரி சில பேருக்கு தான் நகைச்சுவை உணர்வு இருக்கு:)
//...இதுல ஏதோ உள்குத்து இருக்க்ற மாதிரியே இருக்கே

ஜி said...

//ஏனுங்கண்ணா இதுக்கு பேரு தான் வஞ்சப்புகழ்ச்சி அணியோ இல்ல நம்ம சங்கத்து பாஷையில் உள்குத்தா?:) //

நீங்க இத கண்டுபுடிக்கிறீங்களா இல்லையான்னு ஒரு டெஸ்ட் பண்ணினேன்... :)))

வேதா said...

@ப்ரியா,
என்னது? நீயா அது எனக்கு அந்த வாண்டு பேரே நினைவுல இல்ல:)

@பரணி,
அய்யோ உள்குத்தும் இல்ல வெளிக்குத்தும் இல்ல ஏதோ நான் நகைச்சுவைன்னு நினைச்சு எழுதினதை நீ மட்டும் தான் interesting and suber post :)ன்னு சொன்ன,
அதான் அப்டி சொன்னேன் ஹிஹி:)

@ஜி,
ஆகா இது செம உள்குத்தா இருக்கே:)

dubukudisciple said...

hi
neenga dd,ad eppadi vena surukikonga no problem...
vantha vudane narathar velai illa.. namba main velaiye athu thaane.. inge vanthathe aduku thaan...
seri edavathu enakum nyabagam varuthanu pakaren

bye bye for now hi hi hi

வேதா said...

@dd,
யக்கா ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கீங்க போல:) அம்பிக்கு பக்கத்துலேயே வீடு புடிச்சு கொடுத்து சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்ட போதே நினைச்சேன் நீங்களும் அம்பி மாதிரி சிண்டு முடியறதுல எக்ஸ்பர்ட்ன்னு அத நிருபிச்சிட்டீங்களே:)

mgnithi said...

//
அப்டியே சுனாமியம்மனை கண்ட மாதிரி நடுங்க ஆரம்பிச்சுடுவாங்க
//

Intha Tsunami amman per nalla irukke. Ramanarayanan intha blog padicha simran vachi ippadi oru padam eduthuduvaar..

மு.கார்த்திகேயன் said...

யெப்பா.. எங்க எங்கயோ போயி நீங்க அடி கொடுத்ததை எல்லாம் சொல்லிட்டீங்க வேதா..

நான் ஒண்ணும் தப்பு பண்ன்னலையே, அப்படி பாக்கதீங்க.. கையை ஓங்காதீங்க.. பயமா இருக்கு..

மு.கார்த்திகேயன் said...

அழகான நினைவுகள் வேதா.. யாராவது வந்து இந்த மாதிரி எழுப்பிவிட்டா தான் நாமளும் கொசுவர்த்தியை சுத்துறோம்..

நானும் நல்லாவே சுத்தினேன்.. உங்க கூட சேர்ந்து, வேதா

ambi said...

//நீங்களும் அம்பி மாதிரி சிண்டு முடியறதுல எக்ஸ்பர்ட்ன்னு அத நிருபிச்சிட்டீங்களே//
naan paatuku summa(?) irukken! ennai yen vambuku ezukareenga? :p

dubukudisciple said...

veda!!
enaku eduvume theriyama thaan irunthen.. ellam ambi kudutha training thaan...
hi hi hi... Ambi thappa ninaichukathe!!!
seri namba kadai pakkam vanthu eppadi irukunu solrathu

Ram said...

Veda,
Gud to see that you are blogging still. Aaanalum ippadi oru post naan expect pannave illa.

SKM said...

//அப்டியே சுனாமியம்மனை கண்ட மாதிரி நடுங்க ஆரம்பிச்சுடுவாங்க....

அவன கிள்ளி வுட்டுட்டு வந்துடுவேன், அவன் அழும்போது அப்டியே கவலப்படற மாதிரி ஆக்ட் வுடுவேன்...

பேச கூட மாட்டேன் நேரா போய் கன்னத்துல பட்டுன்னு ஒரு அறை விடுவேனாம்,அவ்ளோ தான் அவ அலறி அடிச்சுக்கிட்டு ஓடி போயிடுவா.

'பகல்ல அக்கம் பக்கம் பார்த்து பேசு, இரவுல அது கூட பேசாத' :) //

mokkainalum super mokkai.LOL!
nambavae mudiyala.:D vedhava ippdi.

மணி ப்ரகாஷ் said...

"சுனாமியம்மனை''சும்மா கண்ண முடி பார்த்தேன்..

ஆத்தா , பயமாயிருக்கு.. காப்பாத்துனு சொல்லதான் நினைக்கிறேன்


ஆனா .இந்த கொ.ப.செ.து.மு எல்லாம் நம்மள சொல்ல விட மாட்டேன் கிது...

மணி ப்ரகாஷ் said...

//ஒரு தடவையாவது சொல்லலேன்னா எங்க சொந்தக்காரங்களுக்கு ஜென்ம சாபல்யமே கிடைக்காதுங்குற மாதிரி எல்லா வாண்டுகள் கிட்டயும் சொல்லி என்னைய பழிவாங்கிடுவாங்க.
//

அவங்க கடமைய கரேக்டாத்தான் செய்யுறாங்க...

ஆனா என்ன இப்படி வீட்டுகுள்ளே சொல்லிகிட்டு இருந்தா எப்படி..

சீக்கிரமாவே அடையனும்னா

கொஞ்சம் சூரியன் FM ல வந்து சொன்னாங்கனா நல்லா இருக்குமே...

மணி ப்ரகாஷ் said...

முதல்வர்... கடி
து.முதல்வர்-- அடி

நல்ல குடும்பம்யா.. அப்பா சின்ன பசங்களா இனிமே கட்டி மீட்டிங் போகும்போது இனி கவசத்தான் போட்டு போகனும்...

மணி ப்ரகாஷ் said...

வேதா, சூப்பர்.. நல்லா இருந்துச்சு


வி.வி.சி


//ஆனாலும், ஒரு சப்ப மேட்டர இவ்வளவு பெருசா ஒரு போஸ்ட்டா போட்டதுக்கு உங்களப் பாராட்டத்தான் செய்யணும் //

ஜி சொன்ன கரக்டா இருக்குமோ.,

Siva said...

வேதா...!! மிக அருமையான நடை, ஓவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்.

அது சரி, எப்படி? எப்படி? இதையெல்லாம் பதிவு செய்யனும்னு ரூம் போட்டு யோசிப்பீங்களா? ;-)

கீதா சாம்பசிவம் said...

இன்னும் எத்தனை நாளைக்கு மொக்கையே போட்டுட்டு இருப்பீங்க? சீக்கிரம் ஆம்புலன்ஸ் போஸ்டைப் போடுங்க மேடம்! :D

Dreamzz said...

செம காமெடி... யதார்த்த பதிவு போங்க! சூப்பர்!

Dreamzz said...

அடடா.... 3 வயசுல உங்களுக்கு முன் ஜென்ம நியாபகம் எல்லாம் இருந்திருக்கு போல! சூப்பர்..

சுனாமியம்மனா! எப்படி? இப்படி எல்லாம் யோசிக்கின்றீர்கள்.

Dreamzz said...

//சரி இதெல்லாம் ஒரு மேட்டர் இதையும் ஒரு பதிவா போடறியான்னு கேட்கறவுங்களுக்கு சொல்லிக்கறேன் எத்தன நாளைக்கு தான் சீரியஸ் பதிவா போடறது? அதான் இந்த மொக்கை, அடுத்த பதிவு ஒரு சீரியஸ் மேட்டரோட ஆம்புலன்ஸுல காத்துக்கிட்டு இருக்கு, அடுத்த வாரம் அதை அட்மிட் பண்ணிக்கிடலாம், இப்போதைக்கு மீ த எஸ்கேப், வர்ட்டா?:) /

நீங்க பொடுற மொக்க படிவு கூட நல்லா தான் இருக்கு.. அப்பப்ப ஒன்ன தள்ளி விடுங்க!

வேதா said...

ரெண்டு நாள் இங்க வரல அதுக்குள்ள இப்டி போட்டு தாக்கியிருக்கிங்க:)

வேதா said...

@mgnithi,
அட இது கூட நல்ல ஐடியாவா இருக்கே, யார வச்சு எடுத்தா என்ன நமக்கு ராயல்டி வந்தா ஓகே:)

@கார்த்தி,
என்னது என்னை பார்த்து பயமா? நீங்க உங்க ப்ளாக்குல போட்ட படத்தை பார்த்துட்டு நானில்ல பயந்து போயிருந்தேன்:) நல்ல வேளை அதை எடுத்துட்டீங்க:)

/நானும் நல்லாவே சுத்தினேன்.. உங்க கூட சேர்ந்து, வேதா/

ஓசியில சுத்திட்டு போனா எப்டி டப்பு கொடுங்க எல்லாம் நம்ம கட்சி நிதிக்கு தான் ஹிஹி:)

@அம்பி,
நீங்க சும்மா இருக்கீங்க அதை நாங்க நம்பணும்,உங்க கைப்பேசி எப்டி இருக்கு;) வெடிச்சு போனதா கேள்விப்பட்டேன்;)

வேதா said...

@dd,
யக்கா உங்க கடை பக்கம் ஏற்கனவே வந்துருக்கேன்,ஆனாலும் பையனுங்க மேல உங்களுக்கு எவ்ளோ பாசம் பயங்கரமா படம் காட்டியிருக்கீங்க ஹிஹி ஐ மீன் படம் போட்டு இருக்கிங்க:)

@ராம்,
எப்டி இருக்கீங்க?
நான் இப்டி எழுதுவேன்னு நானே எதிர்ப்பார்க்கல:)

@எஸ்.கே.எம்,
அக்கா என்ன சொல்ல வரீங்க? மொக்கையிலும் சூப்பர் மொக்கையா? ஹிஹி ஏதோ உங்களுக்கு பிடிச்சிருந்தா சரி:)

@ப்ரகாஷ்,
/இந்த கொ.ப.செ.து.மு எல்லாம் நம்மள சொல்ல விட மாட்டேன் கிது... /
கட்சி மீதும் கட்சி உறுப்பினர்கள் மீதும் நீங்க வச்சுருக்கும் பக்தியை நினைக்கும் போது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)

/கொஞ்சம் சூரியன் FM ல வந்து சொன்னாங்கனா நல்லா இருக்குமே.../
ஆஹா ஒரு வெறியோடு தான் அலையறாங்கப்பா:)

/இனிமே கட்டி மீட்டிங் போகும்போது இனி கவசத்தான் போட்டு போகனும்.../
அட இதுக்கே இப்டி ஆடி போய்டீங்க நம்ம கட்சி ஆளுங்க எல்லாம் நம்மள விட பெரிய ஆளுங்க:)

/ஜி சொன்ன கரக்டா இருக்குமோ./,
அய்யோ என்னால முடியல, எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகணும், இதுக்கு பேரு தான் உள்குத்தா? எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லிடுங்க:)

வேதா said...

@சிவா,
என்ன சிவா ரொம்ப நாளா ஆள காணோம்?

/இதையெல்லாம் பதிவு செய்யனும்னு ரூம் போட்டு யோசிப்பீங்களா? ;-) /

ஹிஹி எல்லாம் அதுவா வருது:)

@கீதா,
நம்ம நிலைமையே இங்க சீரியசா கிடக்கு இதுல ஆம்புலன்ஸ் பதிவு வேற(இன்னும் பதிவு ரெடி பண்ணல அதுக்கு எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு)

@ட்ரீம்ஸ்,
/செம காமெடி... யதார்த்த பதிவு போங்க! சூப்பர்! /

நன்றி, ஒரு வழியா உங்க தவத்தை கலைச்சிட்டீங்க போல:)

/3 வயசுல உங்களுக்கு முன் ஜென்ம நியாபகம் எல்லாம் இருந்திருக்கு போல! சூப்பர்.. /
ஆமா பின்ன நாமெல்லாம் அதிபுத்திஷாலிகளாச்சே;)

/நீங்க பொடுற மொக்க படிவு கூட நல்லா தான் இருக்கு.. அப்பப்ப ஒன்ன தள்ளி விடுங்க! /
அட அட மொக்க பதிவை கூட நல்ல பதிவு சொல்றீங்களே ரொம்ப நன்றிங்கோவ்:)

Siva said...

என்ன செய்யறது.. நான் பாட்டுக்கு ஆணி பிடுங்களாம்னு நெனச்சா.. எல்லா accessஅயும் பிடுங்கி உட்க்கார வச்சிடாங்க :-( கேட்டா high security projectனு சொல்றாங்க...
அப்ப அப்ப வீட்ல இருந்து பதிவ படிக்க மட்டும்தான் நேரம் இருக்கு..
இப்போதைக்கு ஓரு கவிதை பதிவு பண்னிருக்கேன்.. நேரம் கிடைச்சா பாருங்க...

Jeevan said...

You said it correct!

If i complain to my mom about my cousin's attakasam, she recall my childhood attakasam, so i can't do anything than shut my mouth.

Anonymous said...

I liked very much Syam is 1st comments. That is HE ONLY BITES rather than hitting. After I read his comments I laughed so hard.

Selvi