Friday, March 16, 2007

நான் வந்துட்டேன் :)

ஆணிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.. ஆபிசில் தான் ஆணி பிடுங்குவீர்களா? எனக்கு வீட்டிலேயே நிறைய ஆணிகள் பிடுங்க வேண்டியதாயிற்று. அதுக்குள்ள எதிர்கட்சிகள் என்னை பற்றி புரளியை கிளப்பி விட்டார்கள். நம்ம தோஸ்துகள் எல்லாம் இன்னுமா யோசிக்கறீங்கன்னு கேள்வி மேல கேள்வி கேட்டு தாக்கிட்டாங்க :)

ஆணிகள் பல இருந்தாலும் இங்கே எழுத முடியாவிட்டால் கூட எல்லாருடைய வலைப்பக்கத்துக்கும் போய் படிக்கும் கடமையிலிருந்து விலகவில்லை என்று இங்கு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இதற்கிடையில் அமெரிக்கா செல்லவிருக்கும் தானை தலைவி(வலி) கீதாவின் தலைமையகத்திற்கு ஒரு ரகசிய பயணம் மேற்கொண்டு அவரை வரவேற்கும் பொருட்டு அமெரிக்காவில் கட் அவுட் வைக்கும் செலவிற்கு நிதி திரட்டி தலைவருக்கு அனுப்பி வைத்தாயிற்று(தலைவரே பெட்டி அனுப்பினேனே வந்து சேர்ந்துவிட்டதல்லவா?)இப்படியெல்லாம் வீட்டில் விடாது ஆணியும் பிடுங்கி தளராது கட்சி பணியும் மேற்கொண்டு களைத்து போயிருக்கும் நான் ரொம்ப சீரியஸா ஒரு பதிவும் போடறேன். அதையும் படிச்சு ரோசனை பண்ணுங்க, வர்ட்டா?:)

********************************************************************************

சிறிது மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்த நண்பர் ஒருவர் அவருடைய மகனை சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் சேர்க்க யோசனை கேட்டு வந்திருந்தார். அப்பொழுது என்னுடைய தம்பி இன்னொரு பள்ளியின் பெயரை சொல்லி அங்கே சேர்க்குமாறு யோசனை சொன்னான். அதற்கு மறுத்து அவர் சொன்ன தகவல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது(அவரும் ஆசிரியர் என்பதால் சில குறிப்பிட்ட பள்ளிகளில் நடக்கும் விஷயங்கள் அவருக்கு தெரிந்திருந்தது).

சென்னையில் அமைந்திருக்கும் சில பணக்கார பள்ளிகளில் (அங்கு பணக்கார வர்க்கம் மட்டும் தான் படிக்க இயலும், நம்மள மாதிரி நடுத்தரவர்க்கம் அதுக்கு சொத்தையே எழுதி வைக்கணும்) மாணவர்களுக்கிடையே சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் புழங்குவதுண்டாம். நான் கல்லூரியில் படிக்கும் போது எங்கள் கல்லூரியின் அருகே மிக பிரபலமான ஒரு ஐஸ்க்ரீம் கடை இருந்தது, எப்பொழுது போனாலும் கூட்டம் தான். திடீரென்று ஒரு நாள் எங்கள் கல்லூரி முதல்வர் அந்த கடை இருக்கும் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் யாரும் செல்லக்கூடாது என்றும், மீறி செல்பவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவர் என்று அறிவித்தார். காரணம், அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் சாப்பிடுபவர்கள் மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கே தெரியாமல் ஐஸ்க்ரீமில் போதை கலந்திருந்தார்கள். இந்த செய்தி பத்திரிக்கைகளில் எல்லாம் வந்து பின் அந்த கடையை அடைத்து விட்டார்கள்.

ஆனால் போதை பொருட்களின் வரத்து சமீபகாலங்களில் அதிகரித்து விட்டது, காரணம் இளைஞர்களிடையே பணப்புழக்கம் அதிகரித்துவிட்டது. பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள் என்று சகல இடத்திலும் ஒரு மறைக்கப்பட்ட பயங்கரமாக பரவி வருகிறது. மக்கள் தொலைக்காட்சியில் இதை பற்றி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சியாக இருந்தும் கூட திரு. ராமதாசை ஒரு விதத்தில் பாராட்ட வேண்டும், அவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நன்றாகவே இருக்கின்றன, ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுவதில் தவறுவதே இல்லை.

இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அவர்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் என்னவென்றால் பள்ளிகளில் மிகவும் எளிதில் நடக்கக்கூடிய போதை மருந்து போக்குவரத்தை கண்டும்காணாமல் இருக்கும் பள்ளி நிர்வாகங்கள், பணம் வாங்கிக் கொண்டும் அரசியல் காரணங்களாலும் கடமை தவறும் காவல்துறையினர் ஆகியோரின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் தவிர தற்போது மிக வேகமாக பரவி மேற்கத்திய பார்ட்டி கலாச்சாரமும் இதற்கு காரணம், உலகமயமாக்கலின் காரணமாக ஊடுருவும் கலாச்சார மாற்றங்களில் நன்மைகளும் உண்டு,தீமைகளும் உண்டு. எதை நாம் எடுத்துக்கொள்வது என்பதில் தான் நம் வாழ்க்கையே அடங்கியுள்ளது.

சிறிது நாளுக்கு முன் பூனேயில் நடந்த பார்ட்டியில் போதை பொருட்களோடு அகப்பட்ட மாணவர்களும்,இளைஞர்களுமே நம் நாட்டில் மிக வேகமாக பரவி வரும் போதை மயக்கத்திற்கு சாட்சி. தவறு எங்கிருந்து ஆரம்பிக்கிறது? நம்மிடமிருந்து தான். போதை பழக்கத்திற்கு அடிமையாவதில் இரு வகைகள் உண்டு. எடுத்துக்கொள்ளும் பண்டத்தில் போதை மருந்து கலந்திருப்பது தெரியாமல் மாட்டிக்கொள்வது. இந்த வகைக்கு பலியாவது பெரும்பாலும் பள்ளி செல்லும் வயதினர். சென்னையிலேயே பள்ளிகளுக்கு வெளியில் சாக்லெட் வடிவத்தில் குழந்தைகளுக்கு இதை பழக்கப்படுத்துவதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.

இதை தடுக்க நம் வீட்டு குழந்தைகளுக்கு நாம் தான் சொல்லி தரவேண்டும், வெளியில் விற்கும் பண்டங்களை வாங்குவதால் ஏற்படும் அபாயங்களை விளக்க வேண்டும். பெரும்பாலும் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் குழந்தைகள் தினமும் பள்ளி முடிந்தவுடன் வெளியே வாங்கி சாப்பிடும் நிலையில் உள்ளனர். அவர்கள் இன்னும் கூடுதல் கவனத்தோடு தங்கள் பிள்ளைகளை கவனிக்க வேண்டும். இரண்டாவது வகை போதை பொருள் என்று தெரிந்தே அதையும் தான் ஒரு முறை முயற்சி செய்துப்பார்க்கலாமே என்று ஒரு பந்தாவிற்காக செய்வது(களவும் கற்று மற என்பதை கடைப்பிடிப்பதாக நினைப்பு). இது இன்னும் கொடுமை,மீளவே முடியாது.

தனிமனித ஒழுக்கம் இல்லாமை, பெற்றோர் கவனிப்பு இல்லாமை, முக்கியமாக பணவரத்து அதிகம் புழங்கும் இளைஞர்களிடையே தான் இப்பழக்கம் எளிதில் தொற்றிக்கொள்கிறது. மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்(பெயர் மறந்துவிட்டது) சொன்ன ஒரு விஷயம் கேட்க சாத்தியமில்லா ஒன்றாக தோன்றினாலும் நடந்து விடுமோ என்ற அச்சம் மனதின் ஒரு மூலையில் இருந்தது, அவர் சொன்னது இது தான்," மதுவை ஒழித்து விடுவோம் என்று சொல்லி மது விலக்கை அமுல்படுத்தி பின் மதுவிலக்கையே விலக்கி அரசே பார்களை திறந்ததுப்போல் அரசே போதை பொருட்களை விற்கும் நிலை வந்து விடக்கூடாது, அதற்கு முன் அரசு இயந்திரம் விழித்துக்கொண்டு போதை போக்குவரத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும்" என்பதே. இதையே நாமும் எண்ணுவோம், போதைப்பொருட்களை நிராகரிப்போம்.

62 comments:

கீதா சாம்பசிவம் said...

பிரமாதம் போங்க, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க. ரொம்பவே அருமையான விஷயத்தை மிக மிக நாசூக்காக் கையாண்டிருக்கீங்க. அதுவும் உங்களை மாதிரி உங்க வயசுக்காரங்க கிட்டே போய்ச் சேர வேண்டிய விஷயம். வாழ்த்துக்கள். அந்தப் புனே விஷயம் என்னோட மனசையும் உறுத்தலோ உறுத்தல் தான். என்ன செய்யணும்னு தெரியாமல் திகைச்சுப் போய் இருந்தோம். இளைஞர்கள் எங்கே போகிறார்கள்? புரியவே இல்லை.

கீதா சாம்பசிவம் said...

அட, நான் தான் ப்ஃர்ஸ்டா? நீங்க ரகசியப் பயணம் மேற்கொண்டதினால்தான் நான் உளவுப்படைக்குக் கூடச் சொல்லலை நீங்க வந்துட்டுப் போனதை. அவ்வளவு ரகசியமா :D வச்சிருந்தேன். அது சரி, எவ்வளவு கலெக்ஷன்? எல்லாத்தையும் கார்த்தி கிட்டே அனுப்பியாச்சா? :)))))))

ambi said...

//தனிமனித ஒழுக்கம் இல்லாமை, பெற்றோர் கவனிப்பு இல்லாமை, முக்கியமாக பணவரத்து அதிகம் //

உண்மை! உண்மை!

நல்ல பதிவு.
இப்படி தெளிவா எடுத்து சொன்னா என்னை மதிரி குழந்தைகள் கவனமா இருப்பாங்க.

இனிமே நமது கட்சியில் யாரும் பகார்டி, பேக்பைபர்!னு எழுத கூடாது!னு ஒரு சட்டம் போடுங்க. முதல்ல ஷ்யாமுக்கு!
(syam unakku வெச்சாச்சு வேட்டு)

ambi said...

//ரொம்பவே அருமையான விஷயத்தை மிக மிக நாசூக்காக் கையாண்டிருக்கீங்க. //

@geetha madam, நல்லா பாத்துக்கோங்க. வளவளனு ஜவ்வா இழுக்கலை! :)

dubukudisciple said...

hi veda
Nice post
nalla karuthukal..
ellarukum oraikanume!!

Ravi said...

Veda, very true, but as you say, its just not prevelant amongst rich class. Amongst students, its more like being "hep" than a need (enakku Pithamagan padathula Sangeetha college pasangala adichu veratuvaangalae, andha scene dhaan nyabagathukku varudhu). Good post Vedha!!

Priya said...

வேதா, எப்பவும் மாதிரி ரொம்ப நல்ல கருத்த எளிமையா அழகா சொல்லியிருக்கிங்க.
கலாச்சார சீர்கேடு ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம். நம்ப ஊர்ல western culture ல இருக்கர நல்ல சமாசாரங்கள எடுத்துக்காம partying, dating மாதிரி தேவையில்லாதத மட்டும் எடுத்துக்கறாங்க இளைஞர்கள்.

//உலகமயமாக்கலின் காரணமாக ஊடுருவும் கலாச்சார மாற்றங்களில் நன்மைகளும் உண்டு,தீமைகளும் உண்டு. எதை நாம் எடுத்துக்கொள்வது என்பதில் தான் நம் வாழ்க்கையே அடங்கியுள்ளது. //
ரொம்ப சரி.. இதுக்கான தெளிவ பெற்றோரும், ஆசிரியர்களும் தான் சின்ன வயசுலயே சொல்லிக் குடுக்கணும்.

//எடுத்துக்கொள்ளும் பண்டத்தில் போதை மருந்து கலந்திருப்பது தெரியாமல் மாட்டிக்கொள்வது.//
இது எனக்கு தெரியாத விஷயம். ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு.

Siva said...

ரொம்ப sensitive மேட்டர்.. கீதா குறிபிட்ட மாதிரி விஷயத்த நாசூக்கா சொல்லிருக்கீங்க..

இளங்கன்று பயமறியாதுங்கற மாதிரி.. இதுல குழந்தைகளை குறை சொல்வதிற்கில்லை, பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்விஷயதில்.

இளைஞர்களுக்கிடையே இப்பழக்கம் மலிந்து இருப்பதற்கு இன்ணொரு முக்கிய காரணம் அவர்களிடையே உள்ள பண புழக்கமும் ஆகும்.

நவீன பாரதமோ இளைஞர்கள் கையில்..!!
ஆனால் எம் இளைஞர்களோ போதையின் ம(பி)டியில்..!!

சிகரெட், மது, புகையிலை போன்றவையும் போதை பொருட்கள்தாம். (Silent Killers)

Aravind said...

gud post..
Your blog's tamizh text does not render for some reason in google reader . do u know the reason..

Bharani said...

mudhalil varugaiku oru vaazhthu sollitu start meejic :)

Bharani said...

yes veda...me too watched the prog...cinema mayakathula makkal tholaikaatchiya niraya peru paararadhu illa...some programs are really good....

Bharani said...

naan car driving-ka oru school ground-ku poi irundhen...anga anjavadhu, aaravadhu padikara pasanga...ellaraum paartha poor children maadhiri dhaan irundaanga...avanga ellarum...cigaratte pidikaradhum, kanja adikaradhum parkarapa...idhu panakaara idathula mattum illa...ella matathulayum iruku....

Bharani said...

iduku cinema kooda innoru mukiyamaana karanam...cigaratte pidikaradhu dhaan heroism....nalla velayila irukara hero kooda weekends-la beer adikara maadhiri katradhu...ellam serndhu idhu ellam thappu illayonu nenaika vaikudhu...idhula naamale paarthu thirundalana onnum panna mudiyathu...

Bharani said...

though i hate ramadoss for most of the issues he raises, off late konjam nyayamaana vishayathuyum avar solradhu correctnu paduthu...cinema-la cigratte, madhu ozhipunu sollitu arase taasmac open panradhu...kodumai...

Bharani said...

andha nigaichiyila sonna maadhiri nadaka niraya chance iruku....madhu ozhipomnu aarambichi arase eduthu nadathutu, appuram aids awareness-ka university campus-laye condom machine vachaanga....innum konja naal-la makkal ketta podhai marundhu saapduraanga....adhanaala arase nalla podhai marundhu vikkum mayangal arambikum sollanalum solluvaanga.....appuram bothai marundhu thuraila irundhu ivlo kodi laabam...indha thruraya innum virivaaka poromnu arikai vera viduvaanga.....

Bharani said...

okie...me stopees....appalika varen :)

Syam said...

இவ்வளோ சீரியஸ் ஆகாது...இப்பவே என் மகன் சொல்றான், அப்பா நான் எதுனா ஜாலி பண்ணா அத்தை கிட்ட இருந்து தப்ப முடியாதுனு... :-)

வேதா said...

@கீதா,
ஆமாம் ஏற்கனவே இதை பற்றி எழுத நினைத்திருந்தேன் பூனேவில் நடந்த சம்பவம் இதை எழுதவதை இன்னும் நியாயப்படுத்தியது.

அப்புறம் நம் பலத்தை எதிர்கட்சிக்கு நிரூபிக்கவே நம்ம ரகசிய சந்திப்பை பற்றி குறிப்பிட்டுள்ளேன்:)

வேதா said...

@அம்பி,
என்னது குழந்தையா? எப்டி அம்பி உங்களால இப்டி கூசாம பொய் சொல்ல முடியுது:)

முதலமைச்சருக்கெல்லாம் வேட்டு வைக்க முடியாது அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்:)

வேதா said...

@டிடி,
கரெக்ட் தான் ஏதோ ஒருத்தர் ரெண்டு பேருக்காவது உரைக்கட்டுமே.

வேதா said...

@ரவி,
மாணவர்களிடையே குறிப்பிடும் போது பணக்கார இடங்களில் தான் நிறைய இருக்கிறது.ஆனால் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்தியில் பார்க்கும் போது ஏழை,பணக்காரன் வித்தியாசமே இல்லை,ஏனெனில் இப்பொழுது இளைஞர்களிடையே தான் பணப்புழக்கமும்,வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. கருத்துக்களுக்கு நன்றி ரவி:)

வேதா said...

@ப்ரியா,
சரியா சொன்ன ப்ரியா வெளிநாட்டுல இவ்ளோ வருடம் இருக்கறதனால உங்களுக்கு நல்லா புரியும்னு நினைக்கறேன்.

/இது எனக்கு தெரியாத விஷயம். ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு./
ஆமா இதை பத்தி செய்தியில் சொன்னப்ப எனக்கும் அதிர்ச்சி தான் எனக்கு தெரிந்த குழந்தைகளிடம் சொல்லியும் வைத்திருக்கிறேன்.

வேதா said...

@சிவா,
நீங்க சொன்ன மாதிரி மாற்றங்கள் வீட்டிலிருந்து தான் வரணும். பெற்றோரும் இதில் கவனம் செலுத்தணும்,அதோடு அரசும் கவனிக்கனும்.

வேதா said...

அரவிந்த எனக்கு கூகுள் ரீடர் பத்தி தெரியாது அதனால் நீங்க சொல்றது எனக்கு புரியல:)

வேதா said...

@பரணி,
சினிமா நிகழ்ச்சிகள் மிகவும் கம்மியா இருக்கற தொலைக்காட்சி அது ஒன்னு தான்,இன்னும் சொல்லப்போனா சினிமா நிகழ்ச்சிகள் இருக்கான்னு கூட தெரியல. அதே மாதிரி அதுல வர சில மக்கள் நலன் குறித்த நிமிட படங்கள் கூட நல்லா இருக்கு.

ஹீரோயிஸம் பார்த்து கெட்டு போறதும் உண்டு தான். சாதாரணமாகவே நம்ம எல்லாருக்கும் சமூக பொறுப்புன்னு ஒன்னு இருக்கு. சினிமா மாதிரி ஊடகங்களிலும்,பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அது இன்னும் அதிகமா இருக்கனுங்கறது நம் கருத்து அது அவங்களுக்கு புரியலையே:(

வேதா said...

/ellaraum paartha poor children maadhiri dhaan irundaanga...avanga ellarum...cigaratte pidikaradhum, kanja adikaradhum parkarapa/
இதுக்கு அரசாங்கம் தான் பொறுப்பத்துக்கனும், அனாதை குழந்தைகள் தான் இதில் அதிகமா பாதிக்கப்படுகிறார்கள்

வேதா said...

அது, அந்த பயம் இருக்கட்டும்:)

Sumathi said...

ஹாய் வேதா,

ரொம்ப கரெக்டா சொன்னீங்க...இப்பலாம் பசங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே பயம்மா இருக்கு, அதுலயும் காலேஜுக்கு கேக்கவே வேண்டாம். இருந்தாலும் இது மாதிரி ஒரு நாலு பேர் சொன்னா கொஞ்சமாவது புரியாதா?
நல்ல முயற்ச்சி.

மங்கை said...

பெற்றோர்கள் கண்டிப்பா பொறுப்பாளியாகனும்..கால்ல சக்கரம் கட்டீட்டு, பேங்க் பேலன்ஸ்ல கவணத்த வச்சுட்டு, சமுதாயத்தில அவங்க அந்தஸ்த உயர்த்திக்கிறதுக்காக மட்டுமே குழந்தைகளை பகடை காய் ஆக்கி விளையாடும் சில பெற்றோர்களால் ஏற்படுகிற கேடு தான் இது..

நல்லா இருக்கு

Dreamzz said...

adada! aalamana karuthu solra post!

Dreamzz said...

mm.. ithu nadapathu enakkum theriyum.. i mean kelvi pattu irukken, but dint know it happened on this wide a scale!

Dreamzz said...

thirudana paathu thirudnha vitta thiruttai olikka mudiyaadhu maari, ithu, therinju seiyum aatkal thirunthi nalla muraiyil vaalanum.

therindhum theriyaadha maari irukkum athigaarigal maaranum...

neraiya peru maara vendi irukkunga vedha..

naamalaiyum serthu!

மு.கார்த்திகேயன் said...

நானும் வந்துட்டேங்க வேதா!

மு.கார்த்திகேயன் said...

/தலைவருக்கு அனுப்பி வைத்தாயிற்று(தலைவரே பெட்டி அனுப்பினேனே வந்து சேர்ந்துவிட்டதல்லவா?)//

ஆஹா.. இதென்ன நம்மளை வேற இதுல இழுக்குறீங்க.. ஏற்கனவே கீதா மேடம் 10000 டாலருக்கு கணக்கு கேக்குறாங்க, வேதா

மு.கார்த்திகேயன் said...

//மாணவர்களுக்கிடையே சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் புழங்குவதுண்டாம்.//

அடப் பாவிகளா.. இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா

மு.கார்த்திகேயன் said...

/தனிமனித ஒழுக்கம் இல்லாமை//

இது ரொம்ப முக்கியம் சமூகத்துல வேதா.. வேறெந்த பழக்கமும் இல்லை என்றாலும் இது இருந்தாலே போதும்.. பல பேர் இதுவென்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள்

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் நல்ல அழுத்தமான பதிவுங்க துணை முதல்வரே..

கீதா சாம்பசிவம் said...

என்ன ஆச்சு? என்னோட மூணாவது பின்னூட்டம்? கார்த்திக்கோடதுக்கு எல்லாம் முன்னாலேயே கொடுத்திருந்தேனே? பதிவுனு நினைச்சுத் தனி போஸ்டாப்போடப் போறீங்களோ? :))))))))))

Ravi said...

pona postla pottatha vida ithu konjam serious aa'vae iruku hmm ..

.. hmm naatu prichanaiku kural kodukum ungal pazhakathuku paaraatukal... !!!!

வேதா said...

@சுமதி,
ஆமாம் ஏதோ நாம் சொன்னாவாவது நாலு பேரு கேட்டாங்கன்னா சந்தோஷம் தான்:) நன்றி சுமதி:)

@ட்ரீம்ஸ்.
/therindhum theriyaadha maari irukkum athigaarigal maaranum.../

ஆமா இருப்பதிலேயே மோசமான மனிதர்கள் இந்த வகை தான், இவங்க தான் முதல்ல திருந்தனும்(நம்மளையும் சேர்த்து தான்):)

வேதா said...

@கார்த்தி,
/நானும் வந்துட்டேங்க வேதா/
வாங்க தலைவரே வாங்க!

/ ஏற்கனவே கீதா மேடம் 10000 டாலருக்கு கணக்கு கேக்குறாங்க,/
ஹிஹி அவங்க தலைவி அதனால கேட்குறாங்க நானெல்லாம் கேட்க மாட்டேன்(ஹிஹி நம்ம கமிஷனை புடிச்சுக்கிட்டு தான உங்களுக்கு அனுப்பியிருக்கேன்)

/இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா /
நாம தாங்க கேட்கணும்.

/பல பேர் இதுவென்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள் /
ரொம்ப சரியா சொன்னீங்க தலைவா

/நல்ல அழுத்தமான பதிவுங்க துணை முதல்வரே.. /
நன்றி தலைவா:)

வேதா said...

@கீதா,
என்னது மூணாவது பின்னூட்டமா? எனக்கு வரவேயில்லையே, எல்லாம் எதிர்கட்சியின் சதி:)மறுபடி அனுப்புங்க வெளியிடறேன்:)

@ரவி,
ஏதோ என்னால முடிஞ்சது இப்டி எழுதறது தான்:)

வேதா said...

@மங்கை,
ஆமா நீங்க சொன்னது போல் மாற்றம் வீட்டிலிருந்து தான் வரமுடியும் அது பெற்றோரின் கையில் தான் இருக்கிறது, நன்றி தங்கள் வருகைக்கு:)

கீதா சாம்பசிவம் said...

என்னோட ஒரு பின்னூட்டம் நிறைய எழுதி இருந்தேன், அந்தப் பள்ளியைப் பத்திக்கூடத் தெரியும்னு எழுதினதா நினைவு, மறுபடி எங்கே அனுப்பறது? போஸ்டா இது? ஆன்லைனில் கொடுக்க வேண்டி இருக்கு. போஸ்ட் போடவே முடியலை, 4 நாளா, சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டி இருக்கு, நீங்க வேறே மறுபடி அனுப்பச் சொல்றீங்க, எங்கேயாவது ஒட்டிட்டு இருக்கும், பாருங்க, எனக்கு இப்படித்தான் ஒரு 4 கமெண்ட் ஒட்டிட்டும் ஒரு 2 கமெண்ட் வெளியேயே வராமயும் அடம் பிடிச்சுட்டு இருக்கு.

Syam said...

//அது, அந்த பயம் இருக்கட்டும்:) //

இது யாருக்கு எனக்கா...இல்ல முகில்கா :-)

SKM said...

very good serious topic and you have written it so well.very well said vedha.

நாகை சிவா said...

சொல்ல வேண்டிய விசயத்தை இப்ப சொல்ல முடியல. அப்பால வந்து சொல்லுறேன்....

வேதா said...

@geetha,
neenga anupina comment enaku varavey illa:)

@skm,
thans:)

@siva,
methuva vanthu padichu sollunga:)

Balaji S Rajan said...

Veda,

Good one. You have started picking up good humour in your writing. Keep it up. Your post about the current situation regarding drugs is very shocking. Very sad to know about such things. Hats off to Makkal TV for being non-biased. Drugs are main concern for parents in all parts of the world. Awareness can prevent innocent youth falling victims.

Dreamzz said...

ithu 50th a?

கீதா சாம்பசிவம் said...

என்ன ஆச்சு? இன்னும் ஒண்ணும் காணோம்?

வேதா said...

@ச்யாம்,
ரெண்டு பேருக்கும் தான்:)

@பாலாஜி,
என் எழுத்துக்களில் நகைச்சுவை கொண்டு வர நான் செய்த முயற்சியை சரியாக கண்டுக்கொண்டீர்கள் நன்றி:)

@ட்ரீம்ஸ்,
அதே அதே:)

@கீதா,
அவசரப்படாதீங்க அடுத்த பதிவு போட்டுவிடலாம்:)

மணி ப்ரகாஷ் said...

// கட் அவுட் வைக்கும் செலவிற்கு நிதி திரட்டி தலைவருக்கு அனுப்பி வைத்தாயிற்று//

கட் அவுட் ன அது நான் தான்..தலைவர் கிட்ட பெட்டி யா...

மணி ப்ரகாஷ் said...

//மதுவை ஒழித்து விடுவோம் என்று சொல்லி மது விலக்கை அமுல்படுத்தி பின் மதுவிலக்கையே விலக்கி அரசே பார்களை திறந்ததுப்போல் அரசே போதை பொருட்களை விற்கும் நிலை வந்து விடக்கூடாது, அதற்கு முன் அரசு இயந்திரம் விழித்துக்கொண்டு போதை போக்குவரத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும்" என்பதே. இதையே ///
யாரு கண்டா? இலவசமா கொடுக்கனும் அப்படினா அத செஞ்சாலும் செய்வாங்க

..அப்புறம் சீரியசனா விசயத்த நல்லா சொன்னதுக்கு நன்றி தான் சொல்லனும்


செயலில் காட்ட முனைவோம்...

வேதா said...

@ப்ரகாஷ்,
கட்-அவுட் காண்ட்ராக்ட் என்னிக்குமே உங்களுக்கு தான்,ஆனாலும் முறைன்னு ஒன்னு இருக்குல்ல அதான் தலைவருக்கு அனுப்பியிருக்கேன் அவரு உங்களுக்கு கொடுப்பாரு:)

/இலவசமா கொடுக்கனும் அப்படினா அத செஞ்சாலும் செய்வாங்க/
நல்லா சொன்னீங்க நாம தான் சாக்கிரதையா இருக்கணும்:)

பொற்கொடி said...

aamma indha bodhai marundhuna enna vedha aunty?? :)

வேதா said...

முதல்ல பதிவை முழுசா படிங்க பொற்கொடி பாட்டி:)

Manoj said...

If you don't justify your paragraphs, then your blog will look nice in firefox also. Leaving it left aligned is a good practise.

Aravind said...

www.reader.google.com.. idhu oru web based news aggregator service provided by google.neenga ungaloda favorite blogs,news etc. ellathayum xml feeds moolama idhula subscribe panni padikkalam.ella sites ku poganumngra avasiyam illa.but today ur blog rendered properly.I donno how it worked.anyways u can take a look at google reader.

மனதின் ஓசை said...

நல்ல சமூக அக்கரையுள்ள ஒரு பதிவு..

Arunkumar said...

//
தனிமனித ஒழுக்கம் இல்லாமை, பெற்றோர் கவனிப்பு இல்லாமை, முக்கியமாக பணவரத்து அதிகம் புழங்கும் இளைஞர்களிடையே தான் இப்பழக்கம் எளிதில் தொற்றிக்கொள்கிறது
//
ரொம்ப சரி.

எல்லாருக்கும் தேவையான கருத்தை உங்க நடைல அருமையா சொல்லியிருக்கீங்க வேதா. பள்ளிகளில் இது நடப்பது ரொம்ப ஷாக்கா தான் இருக்கு.

//
இதையே நாமும் எண்ணுவோம், போதைப்பொருட்களை நிராகரிப்போம்.
//
கண்டிப்பாக...

தி. ரா. ச.(T.R.C.) said...

சமூகத்தில் மெதுவாக நுழைந்து கொண்ட கேன்சர் இது.
பொதுவாக நாம் அறிவதாகுள் உச்சக்கட்டத்தை அடைந்து விடுகிறது.
அவ்ங்களா பாத்து திருந்தாத வரை இதை ஒழிக்கவே முடியாது