Monday, March 26, 2007

மொழி

இல்ல இல்ல இது மொழி படத்தின் விமர்சனம் இல்ல. அந்த படம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது (அப்ப எழுதின நாங்க கேணையனுங்களான்னு அடிக்க வராதீங்க, அதான் எல்லாரும் அருமையா விமர்சனம் பண்ணிட்டீங்களே புதுசா நான் எதுக்கு?ஹிஹி).

இந்த படத்தை நேத்து தான் பார்த்தேன். பார்த்தவுடன தோணிய விஷயங்கள்,

1. ஜோ என்ற அருமையான நடிகையை தமிழ் சினிமா இழக்கக்கூடாது.

2.ப்ரகாஷ்ராஜும்,ராதாமோகனும் இணைந்து இன்னும் இது மாதிரி நல்ல படங்களை தரவேண்டும்.

3.வெறும் வணிகத்தை மட்டும் நம்பி, ரசிகர்களின் பெயரை சொல்லி ஹீரோயிசம் காட்டும் கதாநாயகர்கள் இது மாதிரியும் நடிக்க கொஞ்சம் கத்துக்க வேண்டும்.

இந்த படத்தில் வரும் ஜோவின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு அருகாமையை உணர்த்தியது. என் அம்மாவின் இளைய சகோதரிகள் இரண்டு பேரும் இதே மாதிரி பிறவியிலேயே பேசும்,கேட்கும் சக்தி இழந்தவர்கள். இவர்களுடன் நாங்கள் தினம் தினம் பேசுவது சைகை மொழியில் தான். இவர்களின் உலகம் தனி உலகம். என்ன தான் சைகையிலேயே எல்லாவற்றையும் பேசினாலும் இவர்களது எண்ணங்கள் எல்லாம் மனதோடு தடைப்பட்டு போய் விடுகின்றன. நாம் எதையாவது நினைத்தோமானால் அது சொற்களாகவும், பேச்சாகவும் நம் மனதினுள்ளே ஓடிக்கொண்டிருக்கும்,ஆனால் இவர்களுக்கு எல்லாம் படங்களே.

மொழி படத்தில் ஜோதிகா தனக்கு பிறக்கும் குழந்தையும் ஊமையாக பிறந்து விடுமோ என்று பயந்து திருமணத்திற்கு மறுத்துவிடுவார். அப்பொழுது ஒரு அருமையான வசனம் வரும்,'வாழ்க்கையில் சில விஷயங்களை கேள்வி கேட்காம ஏத்துக்கணும்'. என் சித்தியின் திருமண விஷயத்தில் இது தான் நடந்தது. அவருக்கு வந்த வரனும் அவரை போலவே பேசும்,கேட்கும் திறன் இழந்தவர். என் பாட்டிக்கோ(அம்மாவின் அம்மா)இந்த திருமணத்தில் உடன்பாடில்லை,அவர்களின் குழந்தையும் இதே மாதிரி பிறந்துவிடும் என்ற பயம் தான். ஆனால் மாப்பிள்ளை வீட்டில் விடாமல் பேசி என் பாட்டியை சம்மதிக்க வைத்தனர். இரு சகோதரிகளில் மூத்த சகோதரிக்கு இப்படி தான் திருமணம் நடந்தது. தெய்வாதீனமாக அவர்களுக்கு பிறந்த மகன் எந்த குறையுமில்லாமல் பிறந்தான்,தற்போது அவன் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறான். இளைய சகோதரிக்கு திருமணமாகவில்லை எங்களுடன் தான் வசிக்கிறார்,வேலைக்கும் செல்கிறார்.

பொதுவாகவே இப்படி குறைப்பாட்டுடன் பிறந்தவர்களுக்கு தன்மானம் அதிகம். நான் அவர்களுடன் பேசும் போது மிகவும் சாக்கிரதையாக பேசுவேன். தங்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் ரொம்ப குறிப்பாக இருப்பார்கள். என் சித்திகளின் எதிரில் மற்றவருடன் பேசினால் நாங்கள் அவர்களை பற்றி தான் பேசுகிறோமோ என்று சந்தேகம் வந்து விடும்,மொத்தத்தில் அவர்களை தவிர்த்து விட்டு பேசுவது என்பது அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம். அதுவும் என் சித்தப்பாவிற்கு(முதல் சித்தியை திருமணம் செய்தவர்) தனக்கு தெரியாத ஒரு விஷயம் இருக்கவே கூடாதென்று நினைப்பார். எதுவாக இருந்தாலும் அதை பற்றி விளக்கமாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர்.

காது கேட்காது எனினும் இவர்களுக்கு தங்களை சுற்றி நடப்பதை புரிந்துக்கொள்ள முடியும். எப்பொழுதும் மிகவும் எச்சரிக்கையோடு இருப்பர். என் சித்திகள் இருவரும் படிக்கவில்லையே தவிர கை வேலைகளில் மிகவும் தேர்ந்தவர்கள், அருமையாக சமைப்பர், மற்றவர்களின் நடை,உடை பாவனைகளை ஒரு கை தேர்ந்த நடிகரை போல நடித்துக்காட்டுவர். மொத்தத்தில் நம்மை போல சாதாரண மனிதர்களை விட இவர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்றே எனக்கு தோன்றும். இவர்கள் அதிர்ஷ்டசாலிகளும் கூட,ஏனென்றால் இவர்களுக்கென்றே ஒரு தனி உலகம் அது யாருக்கும் தெரியாதது புரியாதது,தனி மொழி அது மெளனம்.

(இது மொழி படத்திலிருந்து சுட்டது)

இயற்கையின் மொழிகள் புரிந்து விடின்
மனிதரின் மொழிகள் தேவையில்லை,
இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்
மனிதருக்கு மொழியே தேவையில்லை.

(இது நானே இட்டது)

கண்கள் பேசும் அன்பென்ற மொழி புரிந்துவிடின்
சொற்களின் மொழியும் தோற்கும் இவர்களிடம்..

81 comments:

Bharani said...

naan thaan first-a???

Bharani said...

//ப்ரகாஷ்ராஜும்,ராதாமோகனும் இணைந்து இன்னும் இது மாதிரி நல்ல படங்களை தரவேண்டும்//...same pinch :)

Bharani said...

//மொத்தத்தில் நம்மை போல சாதாரண மனிதர்களை விட இவர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்றே எனக்கு தோன்றும்//....this is very true...nammala vida pala madangu thiramai vaaindhavargal....

Bharani said...

//கண்கள் பேசும் அன்பென்ற மொழி புரிந்துவிடின்
சொற்களின் மொழியும் தோற்கும் இவர்களிடம்//...super guru :)

Bharani said...

hayya....mee the first....puliyodarai pls :)

வேதா said...

ஆமா சிஷ்யா இன்னிக்கு ஆட்டத்துக்கு நீ தான் பர்ஸ்டு:) புளியோதரை என்ன பிரியாணியே அனுப்பறேன்(நாம கட்சிக்காரங்க ஆச்சே)

வேதா said...

என்ன பரணி ஈட்டிங் பிரியாணி?:)

Bharani said...

//புளியோதரை என்ன பிரியாணியே அனுப்பறேன்//...correct-a lunch time paarthu biriyaani anupareenga.....eppadi danks solradhu :)

Bharani said...

/என்ன பரணி ஈட்டிங் பிரியாணி//...yes...yes...neenga saaptaacha???

வேதா said...

எப்பவோ சாப்டாச்சு:) இன்னும் கொஞ்ச நேரத்துல காபி டைமே வரப்போகுது:)

eppadi danks solradhu :)
ப்ளாஸ்மா டிவி போதும்:)ஹிஹி:)

Bharani said...

//எப்பவோ சாப்டாச்சு:) //...kalayilaye rendu velaikum sertha :)

//இன்னும் கொஞ்ச நேரத்துல காபி டைமே வரப்போகுது://...ennadhu coffee time-a...super fast-a thaan irukeenga :)

//ப்ளாஸ்மா டிவி போதும்:)ஹிஹி:)//....aaaaaaavvvvvvvvv

வேதா said...

இப்டியா கண்ணு போடறது? ஒரு வேளை தான் சாப்டேன்:) ஈவினிங் டிபன் செஷன் வேற இருக்கு:)

Bharani said...

ennadhu kannu vaikarena...illenga guruve...neenga nalla saapdunga...naange ellam andha kalathula eppadi saaptom :)

evening tiffin session coffee sapduradhuku munnadiya, coffee saaptaduku appurama :)

neenga enga working???

வேதா said...

இப்ப காபி அப்புறம் டிபன்:)

ஹிஹி நம்ம திறமைக்கு ஏத்த வேலை எதுவும் இல்ல,அதான் வேலைக்கே போகல:)

Bharani said...

Unga tamizh pulamaiku endra idamellam sirapaache :)

ennaku kooda velaiki pogama irukathaan aasai...indha ulagam vida mateengudhu :(

Bharani said...

adhu sendra :(

வேதா said...

/Unga tamizh pulamaiku endra idamellam sirapaache :)/


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)

அதான் ப்ளாக் எழுதற வேலை இருக்கே இதுல கிடைக்கற மனதிருப்தியே போதும்:) சரி நான் காப்பி சாப்ட போறேன் வர்ட்டா?:)

Bharani said...

Wogey....en pera solli double strong filter coffee saapdunga :)

நாகை சிவா said...

சாரி, நான் கமெண்ட் போடலாம் வந்தேன். இடம் மாதிரி வந்துட்டேன் போல். சாட்டிங் முடிந்த பிறகு சொல்லி அனுப்புங்க, வந்து கருத்து சொல்லிட்டு போறோம்...

Ravi said...

Marubadiyum escape aayiteengalo-nu nenachen.

When I see such challenged people, I feel "when God closes one door, he opens another" because such people have some immense talent in them. I think the best way to help them is to treat them normally instead of making them "special".

We pity them because they have not what we have but as you say, they are in a different world altogether and perhaps more happier than we are :)

வேதா said...

@பரணி,
உங்க பேரை சொல்லி அடிச்சாச்சு:)

@சிவா,
ஒவ்வொரு முறையும் இதே தொல்லையா போச்சு உங்க கூட உங்கள யாரு போக சொன்னது?:)கமெண்டிட்டு போக வேண்டியது தான?:)

@ரவி,
/I think the best way to help them is to treat them normally instead of making them "special"./
அவங்களும் அதை தான் விரும்பறாங்க

/perhaps more happier than we are :)/
அதே தான் நானும் நினைக்கறேன் ரவி:)

ACE said...

இதை படிக்கும் போது, கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் வரும் காவிரித்தாய் தான் ஞாபகம் வருது.. நிச்சயமா, அவங்களும், யாரை விடவும் திறமை குறைந்தவர்கள் இல்லை... அருமையா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

Ram said...

veda,
Enna panradhu satellite channels the violent Paruthi Veeran above Mozhi, Paurthi viran nalla padam thaan aana Mozhi adha vida sooper

Dreamzz said...

mm... nalla vishayam eduthu irukaanga .. kandippa paaratanum... naan innum indha padam parkala.. hoping to see it this week :)

Dreamzz said...

////மொத்தத்தில் நம்மை போல சாதாரண மனிதர்களை விட இவர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்றே எனக்கு தோன்றும்////

kandippa! ellam nalla irundhe namakku ippadi kanna kattuthu! ivangalukku? I dont think they need our pity. What they need is our belief and trust in them :)

Dreamzz said...

kadavum ennum vilangaatha puthirin vidukadhaigalil ithuvum onru!

Priya said...

//ஜோ என்ற அருமையான நடிகையை தமிழ் சினிமா இழக்கக்கூடாது.//

correct Veda. Namakku theriyudhu, indha Suryakku theriyalaye. Avar nadikkaradha niruthinara? (adhu panninalavadhu paravalla)

//என்ன தான் சைகையிலேயே எல்லாவற்றையும் பேசினாலும் இவர்களது எண்ணங்கள் எல்லாம் மனதோடு தடைப்பட்டு போய் விடுகின்றன.//
nalla solli irukkinga. Ungalukku nerukkamanavanga appadi irukkaradhala ungalukku nalla puriyum.

Priya said...

unga aunts la oruthar kalyan panni kudumbathodaym, innoruthar kalyanam pannikamayum irukkaradha solli irukkinga. This should be their choice. Suthi irukkaravanga avangalukku dhairiyam sollanume thavira, nee kalyanam pannitta kuzhandhaikku problemnu discourage panna koodadhu.

Inga oru TV program pathen. Adhula oru physically chanllenged woman avanga kalyanam pannikaradha criticise panni, kuzhandhaikkum andha problem varumnu eppadi ellarum pesinanganu sonnanga. Romba kashtama irundhadhu.. Avanga personal lifea avanga ishtappadi vazha vidama panna society kku enna rights irukku?

Priya said...

// மொத்தத்தில் நம்மை போல சாதாரண மனிதர்களை விட இவர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்றே எனக்கு தோன்றும்.//
kandippa. Naan idha niraya per kitta parthirukken.

//இவர்கள் அதிர்ஷ்டசாலிகளும் கூட,ஏனென்றால் இவர்களுக்கென்றே ஒரு தனி உலகம் அது யாருக்கும் தெரியாதது புரியாதது,தனி மொழி அது மெளனம்.
//
azhaga solli irukkinga.


//கண்கள் பேசும் அன்பென்ற மொழி புரிந்துவிடின்
சொற்களின் மொழியும் தோற்கும் இவர்களிடம்..
//
icing on the cake..

கோபிநாத் said...

வணக்கம் வேதா ;-)

இது தான் முதல் தடவை ;-) அருமையான பதிவு

\தங்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் ரொம்ப குறிப்பாக இருப்பார்கள்.\

உண்மை தான்... என் கூட ஒரு நண்பன் இருக்கிறான். அவனும் இப்படி தான் எல்லா விஷயங்களும் தெரிய வேண்டும் என்று நினைப்பான். ஊரை விட்டு வெளிநாட்டில் வந்து வேலையும் செய்கிறான்.

ambi said...

வெறும் வணிகத்தை மட்டும் நம்பி, ரசிகர்களின் பெயரை சொல்லி ஹீரோயிசம் காட்டும் கதாநாயகர்கள் இது மாதிரியும் நடிக்க கொஞ்சம் கத்துக்க வேண்டும்.

absolutely true. and as U said, they are more talented than us.

dubukudisciple said...

//வெறும் வணிகத்தை மட்டும் நம்பி, ரசிகர்களின் பெயரை சொல்லி ஹீரோயிசம் காட்டும் கதாநாயகர்கள் இது மாதிரியும் நடிக்க கொஞ்சம் கத்துக்க வேண்டும்.//
idai patri yarum yosipathe illa

dubukudisciple said...

avargalalum ellam seiyya mudiyum endra thannambikai irunthal pothum.. ethaiyum sathipaargal

dubukudisciple said...

//ஜோ என்ற அருமையான நடிகையை தமிழ் சினிமா இழக்கக்கூடாது.//
iduvum unmai.indha mathiri niraya nadigalai namma izhanthu irukom.. adula enaku pudichathu rogini and banupriya and geetha

dubukudisciple said...

30th comment me only.. so parcel pls

dubukudisciple said...

appappo namma kadai pakam vaanga madam

Syam said...

//ஜோ என்ற அருமையான நடிகையை தமிழ் சினிமா இழக்கக்கூடாது//

இதை நான் மிக கடுமையாக ஆமோதிக்கறேன் :-)

Syam said...

//பொதுவாகவே இப்படி குறைப்பாட்டுடன் பிறந்தவர்களுக்கு தன்மானம் அதிகம்//

தன்மானம் மட்டும் இல்ல தன்நம்பிக்கையும் அதிகம்....

SKM said...

//மொத்தத்தில் நம்மை போல சாதாரண மனிதர்களை விட இவர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்றே எனக்கு தோன்றும்//...

kandippa.very true.Actually pala madangu thiramai padaithavargalai irupargal.Very well expressed feelings in your writing.

SKM said...

//கண்கள் பேசும் அன்பென்ற மொழி புரிந்துவிடின்
சொற்களின் மொழியும் தோற்கும் இவர்களிடம்//

Ungal kavidhai just superb.
They always say that God sends these children with disabilities to those who can shower them with loads of love.They are all blessed people,and you are one among them Vedha.God Bless you.

When I see the facilities in this country for the Physically handicaped, I always wonder when it is going to happen in our country where people don't even bother to regard them.Probably now,it is changing for the better , I hope.

பொற்கொடி said...

:( aiyo inga poda mattengranungle mozhiya! apo ungluku indha official sign lang theriyuma??

bharani enga ponalum ipdi chatite irunga! oppice urupudum!! :D

மு.கார்த்திகேயன் said...

சாரிங்க துணை முதல்வரே.. கூட்டத்திற்கு லேட்டா வந்ததற்கு

மு.கார்த்திகேயன் said...

மொழி படத்தை பற்றி அருமையா, ஒரு உண்மை சம்பவத்தை பற்றி எழுதி இருக்கீங்க வேதா.. எங்களுகெல்லாம் படத்தில் பார்த்தே, அப்படியொரு திகைப்பு..

மு.கார்த்திகேயன் said...

உண்மையிலே ஜோதிகா என்றொரு அருமையான நடிகையை தமிழ் சினிமா இழந்தது வருத்ததிற்குரியதே

வேதா said...

@ace,
ஒரு சின்ன டவுட்:) பொன்னியின் செல்வன் ஒரு முறை அதுவும் பல வருடங்களுக்கு முன் படித்தேன் அதான் சரியா நினைவுல இல்ல, இந்த பதிவை நீங்க எந்த விதத்துல சம்பந்தப்படுத்தறீங்க விளக்கம் ப்ளீஸ்?:)

@ராம்,
சாட்டிலைட் சேனல்ல வீராசாமியை கூட தான் நல்ல படம்னு சொல்லுவாங்க:) ஆனா மக்களுக்கு தெரியும் எது நல்ல படம்னு:)

@ட்ரீம்ஸ்,
/What they need is our belief and trust in them :)
ஆமா ட்ரீம்ஸ் அவங்கள நாம நம்பறோம்னு தெரிஞ்சாலே போதும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க:)

/kadavum ennum vilangaatha puthirin vidukadhaigalil ithuvum onru! /
ஆமா விடை தெரியா விடுகதை.
சீக்கிரம் அந்த படத்தை பாருங்க:)

வேதா said...

@ப்ரியா,
/Avar nadikkaradha niruthinara? (adhu panninalavadhu paravalla/
அதானே? திருமணத்திற்கு பின் ஏன் நடிக்கக்கூடாது?

/Ungalukku nerukkamanavanga appadi irukkaradhala ungalukku nalla puriyum/
ஆமா ப்ரியா பல விஷயங்களை நான் அவங்க கிட்ட கத்துக்கிட்டேன்னு கூட சொல்லலாம்:)

/nee kalyanam pannitta kuzhandhaikku problemnu discourage panna koodadhu./
அப்படியெல்லாம் யோசிச்சா நாம் வாழ்க்கையிலே ஒன்னுமே பண்ணமுடியாது

@கோபி,
வருகைக்கு நன்றி கோபி. ஊக்கம் கொடுப்பதற்கு நல்ல மனிதர்கள் இருந்து விட்டால் ஊனம் ஒரு தடையே இல்லை,உங்க நண்பரின் நல்வாழ்வுக்கு என் வாழ்த்துக்கள்:)

வேதா said...

@அம்பி,
எவ்ளோ வேலைக்கும் இடையில் வந்து பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி;)ஹிஹி:)

@dd,
idai patri yarum yosipathe illa
பின்ன அப்டியெல்லாம் யோசிச்சா அவங்க பொழப்பு என்னாறது? இளிச்சவாய் ரசிகர்கள் இருக்கறவரைக்கும் இப்டி தான் நடக்கும்:)உங்க கடை பக்கம் வந்தேனுங்க விளக்கு பதிவு,ராம நவமி பதிவு எல்லாம் படிச்சேன் நல்லா இருந்தது:)

@ச்யாம்,
/இதை நான் மிக கடுமையாக ஆமோதிக்கறேன் :-)/
சரி இத எதிர்த்து ஒரு போராட்டம் நடத்திடலாமா?:)

/தன்மானம் மட்டும் இல்ல தன்நம்பிக்கையும் அதிகம்.... /
அட நான் விட்டத எடுத்து கொடுக்கறீங்க பாருங்க இதுக்கு தான் முதலமைச்சர் வேணுங்கறது:)

வேதா said...

@எஸ்.கே.எம்,
நீங்க என்ன புகழற அளவுக்கு ஒன்னுமே இல்ல, உண்மையில் எல்லா புகழும் என் பாட்டிக்கு தான் போகணும் ஆனா அவங்க இப்ப உயிரோட இல்ல, வாய் பேசா முடியாத இரண்டு பெண்கள் மட்டுமல்ல, பார்வை இழந்த ஒரு மகனையும்(என் மாமா) வளர்த்தவர் என் பாட்டி.

/I always wonder when it is going to happen in our country where people don't even bother to regard them./
அப்படியெல்லாம் இல்ல நம் நாட்டு மக்களை அப்படியெல்லாம் குறை கூற முடியாது. நம் அரசாங்கமும் வேலையில் சலுகை எல்லாம் கொடுத்துருக்கின்றனர்.பொது இடங்களில் தான் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் அதை பற்றிய விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டு வருவது வரவேற்பிற்குரியதே

வேதா said...

@பொற்கொடி,
மொழி படத்தை மிஸ் பண்ணிடாத:)சைகை மொழி தெரியும், ஆனா ஜோ பேசறது இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு என்று அமைக்கப்பட்ட ஒரு சைகை மொழி.நாங்க வீட்டுல பேசறது எங்க வசதிக்கேத்த மாதிரி தான். ஒரு சில சைகைகள் ஒத்துப்போகும் உதாரணத்திற்கு பெண் என்றால் மூக்குத்தியையும்,ஆண் என்றால் மீசையையும் காண்பிப்பது.மத்தபடி ஒவ்வொரு உறவினருக்கும் தனிப்பட்ட அடையாளங்களை என் சித்திகளே வைத்திருப்பார்கள்:)

வேதா said...

@கார்த்தி,
லேட்டா வந்தா தான் தலைவருக்கு அழகு:)
/எங்களுகெல்லாம் படத்தில் பார்த்தே, அப்படியொரு திகைப்பு../
உண்மை தான் இவர்களை பற்றியும் அவங்க வாழ்க்கை முறை பற்றியும் அவங்க தனிப்பட்ட உலகத்தை பற்றியும் மொழி படத்துல அழகா காமிச்சுருக்காங்க:)

Bharani said...

@porkodi...//bharani enga ponalum ipdi chatite irunga! oppice urupudum!! :D //....heehe...heehe...idhukellam naanga payapada maatom...nammala pathi kavalapaadatha office pathi namakenna kavala :)

மு.கார்த்திகேயன் said...

//உண்மை தான் இவர்களை பற்றியும் அவங்க வாழ்க்கை முறை பற்றியும் அவங்க தனிப்பட்ட உலகத்தை பற்றியும் மொழி படத்துல அழகா காமிச்சுருக்காங்க//

கடந்த ஞாயிறு தான் இந்த படத்தை இங்கு உள்ள ஒரு திரையரங்கில் பார்த்தேன் வேதா.. பிரகாஷ்ராஜிற்கும் இயக்குனர் ராதாமோகனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.. படம் வசூலை அள்ளிகுவிக்கவில்லையென்றாலும், பார்த்தவர் மனதை வருடிச் செல்கிறது.. கத்தி இரைக்கும் படங்களுக்கும் நடுவில் இது இனிமையான ஒரு முகாரி, வேதா :-)

ACE said...

//@ace,
ஒரு சின்ன டவுட்:) பொன்னியின் செல்வன் ஒரு முறை அதுவும் பல வருடங்களுக்கு முன் படித்தேன் அதான் சரியா நினைவுல இல்ல, இந்த பதிவை நீங்க எந்த விதத்துல சம்பந்தப்படுத்தறீங்க விளக்கம் ப்ளீஸ்?:)//

பொன்னியின் செல்வனில் வரும் ஊமை ஸ்த்ரீ, அருள் மொழி, காவிரியில் விழும் போது தெய்வம் போல் வந்து காப்பாற்றுவார், மற்றும், இலங்கையில் பொ.செ க்கு வரும் ஆபத்துகளை உணர்ந்து காப்பாற்றுவார்.. உடலிலே குறை இருப்பினும், மற்ற மாந்தர்களால் இயலாத மிகவும் செயற்கரிய காரியங்கள் பல செய்வார். (அவர்களும் திறமையில் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என படித்தவுடன், இவரை நினைவு கூர்ந்தேன்..) :)

என்னை மிகவும் நெகிழ வைத்த ஒரு கதாபாத்திரம்..

மணி ப்ரகாஷ் said...

இன்னும் இந்த படம் பார்க்கல. பிரகாஷ் ராஜின் எல்லா படங்களுமே நல்ல படங்கள்தான்..

பிரகாஷ்ராஜ் நல்ல கலைகளுக்காக வாழுபவன்.

ஒரு முறை பிரகாஷ்ராஜ் பேட்டியின் போது சொல்லியிருந்தார்

" என்னுடைய குழந்தைகள் பின்னொருநாளில் வந்து என்னப்பா நீங்க இந்த மாதிரி(தற்போதைய தமிழ் சினிமா-பாட்டு பைட்டு) சினிமா எடுத்தா எங்களைய வளர்த்தீங்க னு கேட்டுட்டா நான் என்ன பண்றதுனு.."

பிரகாஷ்ராஜ் அப்பாவா? பெற்ற மகனையே வக்கிரமாக காட்டும் இன்னும் சில டைரக்டர்குலங்கள் அப்பாவா?


//வெறும் வணிகத்தை மட்டும் நம்பி, ரசிகர்களின் பெயரை சொல்லி ஹீரோயிசம் காட்டும் கதாநாயகர்கள் இது மாதிரியும் நடிக்க கொஞ்சம் கத்துக்க வேண்டும்//

இது எல்லாம் நடக்கிற காரியமா தெரியல.

மணி ப்ரகாஷ் said...

//தங்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்து விடக்கூடாதென்பதில் ரொம்ப குறிப்பாக இருப்பார்கள். என் சித்திகளின் எதிரில் மற்றவருடன் பேசினால் நாங்கள் அவர்களை பற்றி தான் பேசுகிறோமோ என்று சந்தேகம் வந்து விடும்,மொத்தத்தில் அவர்களை தவிர்த்து விட்டு பேசுவது என்பது அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம்//

கேட்டிடாத/பார்த்திடாத விசயம்.


அப்புறம் நாட்டாமை சொன்னமாதிரி தன்னம்பிக்கையும் அதிகம் தான் அவர்களுக்கு.

மணி ப்ரகாஷ் said...

//கண்கள் பேசும் அன்பென்ற மொழி புரிந்துவிடின்
சொற்களின் மொழியும் தோற்கும் இவர்களிடம்..//


சொற்களின் மொழி? புரியலயே....


சொற்களின் ஒலி யா?


வேதா. திரும்பவும் அது என்ன திரும்பவும்..எப்பவுமே இப்படி நல்ல போஸ்டா போட்டு

ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே.

நல்ல பதிவு......

ambi said...

//எவ்ளோ வேலைக்கும் இடையில் வந்து பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி;)ஹிஹி//

இந்த உள்குத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!

வேதா said...

@பரணி,
/nammala pathi kavalapaadatha office pathi namakenna kavala :) /
அதானே? பொற்கொடி உன் ரங்கமணி உன்னை பாயிண்டர்ஸ் படிக்க சொன்னாரு நீ படிச்சியா? அப்புறம் என்ன பரணியை பார்த்து இப்டி ஒரு கேள்வி?:)

@கார்த்தி,

/கத்தி இரைக்கும் படங்களுக்கும் நடுவில் இது இனிமையான ஒரு முகாரி, வேதா :-)/
முகாரி சோக கீதமாச்சே தல:)ஓ! இது இனிமையான முகாரியா?:)

@ace,
விளக்கத்துக்கு நன்றி:) உங்க விளக்கம் எனக்கு அந்த கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தியதோடு இன்னொரு முறை பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டிவிட்டது :)

@ப்ரகாஷ்,
/பிரகாஷ்ராஜ் நல்ல கலைகளுக்காக வாழுபவன்./
சரியா சொன்னீங்க:)ஆனந்த விகடனில் அவர் ஒரு தொடர் எழுதறார், ரொம்ப அருமையா இருக்கு அதை படிச்சுருக்கீங்களா?

/இது எல்லாம் நடக்கிற காரியமா தெரியல./
குறிப்பிட்ட அந்த நடிகர்கள் கிட்ட எதிர்ப்பார்க்கமுடியாது தான், ஆனா இப்ப வளர்ந்து வரும் நடிகர்கள் கொஞ்சமாவது மாறணும்

/கேட்டிடாத/பார்த்திடாத விசயம்./
நான் தினம் தினம் பார்க்கும் ஒரு விசயம்:)

/சொற்களின் மொழி? புரியலயே..../

சொற்களின் கோர்வை தான் வாக்கியம்,வாக்கியங்களின் கோர்வை தான் மொழி அதை தான் அப்டி சுருக்கமா சொன்னேன் ப்ரகாஷ்:)

/எப்பவுமே இப்படி நல்ல போஸ்டா போட்டு ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே./

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:) எனக்கு ஒரே கூச்சமா இருக்கு ஹிஹி:) தொடர்ந்து ஒரே மொக்க போஸ்டா போட்டேன் அதான் இப்டி ஒரு நல்ல(!) பதிவு:)

@அம்பி,
ஹிஹி நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சேன் :) சரி நோ பீலிங்ஸ் இதெல்லாம் அரசியல்ல ஜகஜம்:)

Bharani said...

guru....template super...chancae illa....enga irundhu pudicheenga....naanum suttukaren :)

ambi said...

அதானே என்னடா இன்னும் template மாத்தலையே!னு பார்த்தேன்! :p

superrr vetii polirukku! :p

வேதா said...

@bharani,
u can find nice templates here

@ambi,
ungala mathiri vettiya irukumbothu kooda neraya aani pudunganumnu scene poda maaten:)

Balaji S Rajan said...

Veda,

Neatly said about those people who are physically disabled. I hate the way the word being used in our country as "Physically Handicapped". We should not term it as handicap. Each one has different talent. If one of the natural ability or organ is disabled it should not deprive the people who do not have it and the surroundings and atmosphere should help them a lot. In western world a physically disabled person can do things more on their own. The first thing I liked in UK was the way the called such people as "Physically disabled". There is lot of help from the Governments in western world for those kind of people.

I have heard about the new film 'Mozhi'. Your review is quite decent.

Syam said...

template சூப்பர்....பழைய template ல படிச்சு படிச்சு கண்ண கட்டிருச்சு :-)

Syam said...

ஆமா அது என்ன மகளிர் சக்தி...ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான.... :-)

Dreamzz said...

புது சொக்கா சோக்கா இருக்கு!

நாகை சிவா said...

//ஒவ்வொரு முறையும் இதே தொல்லையா போச்சு உங்க கூட உங்கள யாரு போக சொன்னது?:)கமெண்டிட்டு போக வேண்டியது தான?:)//

இது என்னங்க வம்பா இருக்கு. காபி குடிக்கு போவதை கூட கமெண்ட் போட்டு பேசிக்கிட்டு இருக்கீங்க.... இதுல என்னய குறை சொல்லுறீங்க....

இது எல்லாம் ரொம்ப அநியாயம்....

நாகை சிவா said...

//வெறும் வணிகத்தை மட்டும் நம்பி, ரசிகர்களின் பெயரை சொல்லி ஹீரோயிசம் காட்டும் கதாநாயகர்கள் இது மாதிரியும் நடிக்க கொஞ்சம் கத்துக்க வேண்டும்.//

இதில் ஒரு சில விதிவிலக்கு உண்டாங்க.... ரஜினி போன்றவர்களுக்கு.....

நாகை சிவா said...

//ஜோ என்ற அருமையான நடிகையை தமிழ் சினிமா இழக்கக்கூடாது.//

நல்ல நடிகையை மட்டுமா அவங்க.....

சும்மா எங்க சோகத்தை கிளறுறீங்க... நாங்களே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மனசை தேற்றிக்கிட்டு வரோம்.....

நாகை சிவா said...

//'வாழ்க்கையில் சில விஷயங்களை கேள்வி கேட்காம ஏத்துக்கணும்'.//

சத்தியமாக, நான் கடைப்பிடிக்கும், பிறகு சொல்லும் விசயமும் இது தான்.

ஒரு சில பகுத்துறிந்து ஏத்துக்கனும். சில விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Ravi said...

//'வாழ்க்கையில் சில விஷயங்களை கேள்வி கேட்காம ஏத்துக்கணும் //

unga postla romba highlight aana line ... intha padathukuko illa common life'la irunthu maarupatavankalku mattum illa intha line ... its for everyone at some situations .. few things doesnt have reasons .. few things can never be questioned. !!!!

ne'way .. 63rd commentu dhaan .. venumna .. oru rendu mutta (athaan egg) eduthu vechutu .. briyani anupunga plz ..

//கண்கள் பேசும் அன்பென்ற மொழி புரிந்துவிடின்
சொற்களின் மொழியும் தோற்கும் இவர்களிடம்.. //

ofcourse words doesnt have expressions !!!

Harish said...

Oru vaai pesaador palliku ponappo daan avargal kashtatai neril paarka mudinjudu.....
Inda padatil pidichadu ennana...anda unathai symphatetica kaatala....

வேதா said...

@பாலாஜி,
/There is lot of help from the Governments in western world for those kind of people./
நம்ம அரசாங்கமும் இதை பின்பற்ற வேண்டும், அதற்கு மக்களிடையே விழிப்புணர்ச்சி வேண்டும்.

@ச்யாம்,
/ஆமா அது என்ன மகளிர் சக்தி...ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான.... :-)/

நீங்க அனுபவஸ்தர் அதனால உங்களுக்கு தெரியுது:) பல பேரு தெரியாம திரியிறாங்கல்ல அதுக்கு தான் இந்த டபுள் சக்தி:)இதுல தமிழ்ல வலைப்பதிவு எழுதற மகளிரின் பதிவுகள் சேர்க்கலாம்:)

@ட்ரீம்ஸ்,
/புது சொக்கா சோக்கா இருக்கு!/
நன்றிங்கோ:)

@சிவா,
நோ பீலிங்க்ஸ் ,நாம இத விட அராஜகமெல்லாம் பண்றோம் இதெல்லாம் ஒரு மேட்டரா?:)

/இதில் ஒரு சில விதிவிலக்கு உண்டாங்க.... ரஜினி போன்றவர்களுக்கு...../
ரஜினி ஈஸ் அவுட் ஆப் கொஸ்டின்:)

/நாங்களே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மனசை தேற்றிக்கிட்டு வரோம்...../
அய்யோ பாவம் :)

/சத்தியமாக, நான் கடைப்பிடிக்கும், பிறகு சொல்லும் விசயமும் இது தான்./

சேம் ப்ளட் புலி :) இதை கடைப்பிடிச்சா வாழ்க்கை எளிதாகிவிடும்:)

@ரவி,
unga postla romba highlight aana line
படத்திலேயே இது தான் சூப்பர் டயலாக்.
oru rendu mutta (athaan egg) eduthu vechutu .. briyani anupunga plz ..
பிரியாணி தான? அனுப்பிட்டா போச்சு வித் அவுட் முட்டை தான்:)

@ஹரீஷ்,

/anda unathai symphatetica kaatala..../
சரியா சொன்னீங்க தனக்கு வாய் பேச வராது என்பதை கூட ரொம்ப நாசூக்கா கொஞ்சம் கூட தாழ்வு மனப்பான்மை இல்லாம ஜோ சொல்வாங்க:)

ambi said...

யோவ்! அடுத்த படத்த போடுங்க, இல்லாட்டி ஸ்கிரீனை கிழிச்சுடுவோம். :)

கீதா சாம்பசிவம் said...

I cannot understand anything. just wait and see. may be ok in a few days.

கீதா சாம்பசிவம் said...

just read this post now only. simply superb.
konjam namma veetukkum varathu? romba busyyoo?
I am totally surprised to see your experiences in each and everything. God bless you and your family. Very Very surprised really.

k4karthik said...

ரொம்ப டச்சிங்கா இருந்துச்சுங்க இந்த போஸ்ட்....

Sree's Views said...

Hello Vedha...romba azhaga tamizhla ezhudhareenga :)
My wishes to ur aunts :)
Nice post :)

Ravi said...

Veda, daily inga vandhu pudhu post pottirukeengala-nu paarkira enakku emaatram dhaan micham!! Naan vandhu "pudhu post podunga"-nu solra alavukku vechukaadheenga ;-) appuram naan appadi sonna "enna kodumai Saravanan idhu"-nu ellarum serndhu kummi adichiduvaanga!!!!

வேதா said...

@அம்பி,
உங்க ஆர்வம் புரியுது கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இந்த வாரத்துல புது ரிலீஸ் பண்ணிடலாம்:)

@கீதா,
புதுரகம் சென்ற பிறகும் தொண்டர்களின் வீட்டுக்கு வருகை தந்த தலை(வலி)வி வாழ்க!
நன்றி:)

@கார்த்திக்,
முதல் வருகைக்கு நன்றி கார்த்திக்,நானும் உங்க பதிவுகளெல்லாம் படிச்சுருக்கேன் ஆனா கமெண்ட் தான் போட்டதில்ல:)

@ஸ்ரீ,
நன்றி :)

@ரவி,
என்னத்த சொல்ல, என் நிலைமை அப்டி ஆகிப்போச்சு:) இந்த வாரத்துக்குள்ள எப்படியாவது புது பதிவு போட்டு விடுகிறேன்:)

Arunkumar said...

அடடா இவ்வளவு நாளா நான் உங்க ப்ளாக் வராம மிஸ் பண்ணிர்க்கேன். மாப்பு கேட்டுக்குறேன் வேதா :-(
(already standing on the bench...)

நானும் சமீபத்துல தான் மொழி படம் பாத்தேன் , உங்களுக்கு தோணினது தான் எனக்கும் தோணுச்சு.
ஜோ ஆக்டிங் சூப்பர்.

//
மொத்தத்தில் நம்மை போல சாதாரண மனிதர்களை விட இவர்கள் திறமை வாய்ந்தவர்கள் என்றே எனக்கு தோன்றும்.
//
எனக்கும். இவங்களோட தன்னம்பிக்கை நமக்கு இல்ல-னு தான் எனக்கும் தோணும்.

Arunkumar said...

//
கண்கள் பேசும் அன்பென்ற மொழி புரிந்துவிடின்
சொற்களின் மொழியும் தோற்கும் இவர்களிடம்..
//
நல்ல யோசிக்கிறீங்க வேதா.
மத்த போஸ்ட் படிச்சிட்டு வறேன்.