Wednesday, April 18, 2007

தொடரும் அனுபவங்கள் - 2

போன பதிவில் பூஜை முடியும் தருவாயில் நாங்க எழுந்து வெளியே வந்துவிடுவோம் என்று சொன்னதற்கு என்ன காரணம் தெரியுமா? பஜனை பாடல்கள் பாடி முடித்ததும் சாமிக்கு நைவேத்தியங்களை படைத்து பின் கற்பூர ஆரத்தி நடைப்பெறும். சபாவிற்குத் தலைமை வகிக்கும் மாமிக்கு சரியாக ஆரத்தி எடுக்கும் நேரத்தில் சாமி வரும்,சாதாரணமாகவே சாமி வந்து ஆடுபவர்களை அடக்க முடியாது ,அதுவும் நரசிம்மர் என்றால் கேட்கவே வேண்டாம். இதனால் அவர் சாதாரணமாக இருக்கும் போதே எங்களுக்கு அவரிடம் பேச பயமா இருக்கும்.அதுவும் சின்ன வயசில் பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கும், மெதுவாக எங்க அம்மாக்களின் பின்னாடி ஒளிந்துக்கொள்வோம் நானும் என் நண்பர்களும். அந்த நேரத்தில் அங்குள்ள கிராமத்து மக்கள் அவரை நெருங்கி ஆசி கேட்க ஆரம்பித்துவிடுவர். சிறு வயதில் எங்களுக்கு சாமியாடுவது என்பது பயத்தை தந்தாலும் வளர வளர எங்களுக்குள் பல கேள்விகள் வர ஆரம்பித்தன.

பொதுவாக மனதளவில் திடமில்லாதவரும்,எளிதில் உணர்ச்சிமயப்படுபவரும் தான் சாமியாடுவார்கள். இவர்களிடம் சென்று நம் துக்கத்தை சொல்லும் போது 'பாவம், இவ்வளவு கஷ்படுகிறார்களே இவர்களுக்கு அந்த கடவுள் தான் வழிகாட்ட வேண்டுமென்று' எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். எவ்விதத்திலாவது இவர்களுக்கு வழிகாட்டவேண்டுமென்று யோசிக்க யோசிக்க தங்கள் நிலை மறந்து,தான் அவர்களுக்கு என்ன சொல்லவேண்டுமென்று நினைக்கிறார்களோ அதை கடவுள் சொல்வதாக நினைத்து சாமியாடுகின்றனர். இதனால் குறை சொல்பவர்களும் நிம்மதியடைகிறார்கள்,தங்கள் கஷ்டங்களை கடவுளிடம் இவர்கள் எடுத்துச்செல்கிறார்கள் என நம்புகின்றனர். ஆனால் எனக்கு இதில் உடன்பாடில்லை, எனவே இந்த சமயத்தில் மட்டும் நான் வெளியே வந்துவிடுவேன் இல்லையெனில் பின்னே சென்று நின்றுவிடுவேன். என்னை பொறுத்தவரை கடவுள் எதையும் நேரில் வந்து சொல்வதில்லை எல்லாவற்றையும் நம்மிடம் செயலால் தான் உணர்த்துகிறார்.

கடமையை செய்தால் நமக்கான பலன்கள் கண்டிப்பாக வந்தடையும். அதுவும் தவிர கடவுளுக்கும் எனக்கும் இடையில் எந்த விதமான பாலமும் தேவையில்லை என்று நினைப்பவள் நான். எதுவாகயிருந்தால் என் முறையிடுதல் கடவுளிடம் மட்டும் தான் இருக்கும். எனவே எனக்கு சாமியாடுவதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. இதை வீட்டில் சொன்னால் உதைப்பார்கள் ஏனென்றால் என் குடும்பத்தினரில் போன தலைமுறையை சார்ந்தவர்களுக்கு இதில் நம்பிக்கை அதிகம், அதுவும் சபாவின் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்மணியை தங்கள் குருவாகவே நம்புகிறார்கள்(சாமி வருவது என்பதை மட்டும் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மற்றபடி அவர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் மிக அதிகம்,ஏனென்றால் அவர் பக்தி அப்படிப்பட்டது, அடியார்களுக்கு பணி செய்தால் அது தெய்வத்திற்கே செய்த மாதிரி என்று சொல்வார்கள்).

வெள்ளிக்கிழமை பஜனை முடிந்த பிறகு ப்ரசாதங்கள் விநியோகிக்கப்படும். நம்ம 'லலாம் அண்ணாச்சி' சொன்ன மாதிரி இதுக்காகவே காத்திக்கிட்டு இருந்த நாங்க முதல்ல போய் நிப்போம், விநியோகிக்க இல்ல, சாப்படறதுக்கு தான் :) பின் ததியாராதனை அதாவது அன்னதானம் நடைபெறும். கார்த்திகை மாதம் மூன்றாம் வார இறுதியில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் யார் வந்தாலும் கண்டிப்பாக சாப்பாடு உண்டு. வெள்ளி இரவு பஜனை முடிந்த பிறகு பொதுவாக அடுத்த நாட்களில்(சனி,ஞாயிறு) இரண்டு மலைகள் ஏறி நரசிம்மரையும்,ஆஞ்சநேயரையும் சேவித்து வருவோம்.

அடுத்த பதிவில் பெரிய மலை ஏறி யோக நரசிம்மரை தரிசிப்போம்.

அனுபவங்கள் தொடரும்..

36 comments:

நாகை சிவா said...

சோளிங்கரை பற்றிய தொடரா?

போன பதிவை இன்னும் படிக்கல...

இரண்டையும் படிச்சுட்டு வரேன்...

நாகை சிவா said...

முதல் கமெண்ட் நானாக இருந்தால் எனக்கு இந்த புளியோதரை, கடலை, அல்வா, பக்கார்டி எல்லாம் வேண்டாம்....

எனக்கு ஆப்பம் வித தேங்காய் பால் வேண்டும். சாப்பிட்டு ரொம்ப நாள் ஆன பீலிங்....

Anonymous said...

நல்லாயிருக்கு, இப்போதான் முந்தைய பதிவினையும் படித்தேன்.

மெளலி...

dubukudisciple said...

veda
supera ezhthi irukeenga.. kadavulukum namakum naduvil palam thevai illai.. romba correct

ambi said...

//அவர் சாதாரணமாக இருக்கும் போதே எங்களுக்கு அவரிடம் பேச பயமா இருக்கும்//

கீதா மேடம் மாதிரினு சுருக்கமா சொல்லி இருக்கலாமே! :)

கடவுளுக்கும் நமக்கும் பாலம் தேவையில்லை தான். அது யாருக்கு? எப்போ?

அந்த பக்குவத்தை அடைந்தவர்களுக்கு தான் பாலம் தேவையில்லை வேதா. அந்த பக்குவத்தை அடைவது அவ்வளவு சுலபமல்ல. உலக ஆசைகள் அவ்வளவு எளிதில் விடாது.

எனக்கு தெரிந்து 100 வருடங்கள் வாழ்ந்த காஞ்சி மாமுனியே அந்த பூரண பக்குவத்தை அடைந்தவர்.

அவ்வாறு அடைந்தவர்கள் நவசித்திகளை பெறுகிறார்கள். முக்காலமும் சொல்ல முடியும் ஒருவர் முகத்தை பார்த்தே.

குரு என்பவர் யார்?
எவர் ஒருவர் தன்னை உணர்ந்து, தன் மெய் சுகத்தை துறந்து, பிறருக்காக பிரார்த்தனை செய்கிறாரோ அவரே குரு.

சுருக்கமா சொல்லனும்னா, பால் என்னவோ பசு மாட்டிலிருந்து தான் கிடைக்குது. அதுக்காக கொம்புல பால் கறக்க முடியாது.
விவேகானந்தருக்கே ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சர் தேவைபடுது. விவேகானந்தருக்கே ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சர் தேவைபடுது. இப்ப நம்ம சிஷ்யன் கோப்ஸுக்கு ஒரு அம்பியானந்தா இருக்கற மாதிரி. :)

இப்படி நச்சுனு ஒரு பதில் போட்டு எவ்ளோ நாள் ஆச்சு!

வேதா said...

@சிவா,
இது பக்தி பதிவு என்பதால் ஆப்பத்திற்கு பதில் சுண்டலும்,பானகமும்:)

@மெளலி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே:)

@டுடி,
சுருக்கமா சொல்லி நான் சொன்ன கருத்தை ஒத்துக்கிட்டீங்க நன்றி:)

@அம்பி,
இதென்ன கதாகாலட்சேபம் பண்ண என் வலைப்பக்கம் தான் கிடைச்சுதா அம்பி?;)

/இப்படி நச்சுனு ஒரு பதில் போட்டு எவ்ளோ நாள் ஆச்சு! /
எல்லாம் சரி தான் நண்பரே ஆனா நான் கேள்வியே கேட்கலையே:)

நீங்க சொன்ன மாதிரி நான் ஆசைகளை துறந்தவள் என்று எங்கேயும் குறிப்பிடவில்லையே. எனக்கான தேவைகளையும்,ப்ரார்த்தனைகளையும் நான் கடவுளிடம் நேரடியாக செலுத்தவே விரும்புகிறேன் என்று தான் சொல்கிறேன். நீங்க குறிப்பிட்ட மகான்களின் கால்தூசுக்கு கூட நான் சமானமில்லை.

Dreamzz said...

நல்ல விஷயம்.. நல்லா சொல்லற்றீங்க!

Dreamzz said...

சாமியாடுவது போன்ற பழக்கங்கள் எல்லா சமயத்திலும் வெவ்வேறு ரூபத்தில் இருக்குங்க.

Christians, After they are baptised call it as speaking in a different tongue.

Some call it a different spirit in our body that came attracted there by the mass of people.

Dreamzz said...

ithula ethu unmai enru enakku theriyathu! namakku ennaikaachum saami vandha thavira, unmai theriya vali illai :D

Ravi said...

Usha, very well said. Appadiye en ennangalai pradhipalippadhu pola irundhadhu.

Btw, I remember the Shollingar temples. Adhuvum the steps would be so steep and huge. More than climbing up, erangum bodhu, the knee joint would lock/unlock several times :) Btw, dont forget to mention the monkeys' menace there.

மு.கார்த்திகேயன் said...

சாமியாடுபவர்கள் பல பேர் கூட நெருங்கி பழுகும் வாய்ப்பு எனக்கு அமைந்திருக்குங்க வேதா.. அந்த வகையில பார்த்தா மனசுல தைரியம் இல்லாதவர்கள் அப்படிங்கிற உங்கள் கருத்து நிஜம் தான்.. ஆனா அவங்களை அடக்குவது பயங்கர கஷ்டமான காரியம்.. நான் எப்போதும் அவர்களின் பின்னால் சென்று, நகராமல் என் இரு கைகளையும் வயிறோடு கட்டி பிடித்துகொள்வேன். ஏனெனில் சில சமயம் உணர்சி வசப்படும் போது அவர்களுக்கு காயங்கள் ஏற்பட வழியுண்டுங்க வேதா..

மு.கார்த்திகேயன் said...

ம்ம்..பயணத் தொடர் நல்லாவே இருக்குங்க.. ஆனா சின்னதா இருக்கே.. :-)

மு.கார்த்திகேயன் said...

அம்பி, கல்யாணதிற்கு முன்னாடியே இப்படி சாமியாரா ஆயாச்சு.. சென்னை விசிட் தான் இதுக்கு காரணமா:-)

கீதா சாம்பசிவம் said...

mmmmm, I agree with you in the "sami adum concept". I just hate it. People are discriminated by this samiadum lady or laden. I saw so many incidents. I am not visiting such temples. There is one nearby our house. That lady used to tell these types of vimosanams to Baktharkal. She, the socalled "sami adi lady" is very much educated and her daughters are in US and her son is also an engineer. Even then she is doing this hereditarily. OK. Saw Karthik's head in this Bakthi Post. but he is not coming to my Bakthi post. What happened Karthik? grrrrrrrrr
@ambi, :P, so much of noise? grrrrrr

Priya said...

//பொதுவாக மனதளவில் திடமில்லாதவரும்,எளிதில் உணர்ச்சிமயப்படுபவரும் தான் சாமியாடுவார்கள். இவர்களிடம் சென்று நம் துக்கத்தை சொல்லும் போது 'பாவம், இவ்வளவு கஷ்படுகிறார்களே இவர்களுக்கு அந்த கடவுள் தான் வழிகாட்ட வேண்டுமென்று' எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். எவ்விதத்திலாவது இவர்களுக்கு வழிகாட்டவேண்டுமென்று யோசிக்க யோசிக்க தங்கள் நிலை மறந்து,தான் அவர்களுக்கு என்ன சொல்லவேண்டுமென்று நினைக்கிறார்களோ அதை கடவுள் சொல்வதாக நினைத்து சாமியாடுகின்றனர். இதனால் குறை சொல்பவர்களும் நிம்மதியடைகிறார்கள்,தங்கள் கஷ்டங்களை கடவுளிடம் இவர்கள் எடுத்துச்செல்கிறார்கள் என நம்புகின்றனர்.//

நல்ல விளக்கம். நான் சில பேர் நடிக்கறாங்களோனு நினைப்பேன் :)

Priya said...

//அடுத்த பதிவில் பெரிய மலை ஏறி யோக நரசிம்மரை தரிசிப்போம்.
//

சரி வேதா. சீக்கிரம் கூட்டிட்டி போங்க

ambi said...

//Saw Karthik's head in this Bakthi Post. but he is not coming to my Bakthi post. What happened Karthik? grrrrrrrrr//

ha haa :) sema jollyaa irukku.

//@ambi, :P, so much of noise? grrrrrr //
noise..? Grrrr!nu yaar madam putting noise..?

@veda, summa vambuku izhukalaam!nu oru build-up vitten. pls, romba naalu aachu! ethavathu sollunga pls. :p

//கல்யாணதிற்கு முன்னாடியே இப்படி சாமியாரா ஆயாச்சு//
@karthi, naama eppavume Lotus-water maathiri thaan. Always searching for eternal truth and wisdom. :)

வேதா said...

@ட்ரீம்ஸ்,
ஆமா சாமியாடுவது என்பது எல்லா மதங்களிலும் உள்ள கான்செப்ட் தான் என் கிறுத்துவ தோழி அவள் அம்மாவிற்கு அப்படி நடந்ததாக சொல்லி கேட்டிருக்கிறேன்.

@கார்த்தி,
என் உறவினர் ஒருவருக்கு கூட சாமி வரும். அது வரை மிக சாதுவாக இருப்பார்,சாமி வந்து விட்டால் அவ்வளவு தான் எங்கிருந்து தான் அவ்வளவு சக்தி வருமோ என்று தெரியாது நாங்க பின்னாடியே நிப்போம் விழும் போது தாங்கிக்கொள்ள.

/ம்ம்..பயணத் தொடர் நல்லாவே இருக்குங்க.. ஆனா சின்னதா இருக்கே.. :-) /
என்ன பண்றது தலைவா உங்கள மாதிரி தொடர்ந்து எழுத முடியல அதான் இப்டி பிரிச்சு பிரிச்சு எழுதறேன். அடுத்த பகுதி கொஞ்சம் நீளமா தான் இருக்கும்:)

@கீதா,
சாமியாடுபவர்களிலும் இரு வகை உண்டு. ஒரு வகை தங்களுக்கு சாமி வருவதை தவிர்க்க முடியாதவர்கள் அதாவது மனதளவில் அதிலிருந்து மீள முடியாதவர்கள். இவர்களால் பெரிய பாதிப்பும் இல்லை. இரண்டாம் வகை இதை பயன்படுத்தி பணத்தையும்,புகழையும் சேர்ப்பவர்கள். இவர்கள் தான் திருந்த வேண்டும்.


@ரவி,
ஏறும்போது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும், எனக்கு பல வருடங்களாக ஏறி பழகிவிட்டதால் ப்ரச்னை இல்லை. அதுவும் தவிர மலையேறும்போது தெரியாத வலி, பின் வரும் நாட்களில் நன்றாக தெரியும்.

நான் வந்து நினைவுப்படுத்துவேனோ என பயந்து முந்திக்கிட்டீங்களோ?:)

@ப்ரியா,
நடிப்பவர்களும் உண்டு ப்ரியா:)

@அம்பி,
உங்களுக்கு புடுங்கறதுக்கு ஆணி இல்லேன்னா(அது என்னிக்கு இருந்துருக்கு)இப்டி எல்லார் பக்கத்துக்கும் போய் வம்பிழுக்கறதா?;)

/pls, romba naalu aachu! ethavathu sollunga pls. :p/

ஆமா என்னத்த சொல்றது? அதான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்டோமில்ல, எதையாவது கேட்காதீங்க நல்லா வருது வாயில, போனாப்போறது கல்யாண ஆகப்போகுதுன்னு எதுவும் சொல்லாம விடறேன், போய் கல்யாண வேலையை கவனிங்க:)

Bharani said...

// இவர்களுக்கு வழிகாட்டவேண்டுமென்று யோசிக்க யோசிக்க தங்கள் நிலை மறந்து,தான் அவர்களுக்கு என்ன சொல்லவேண்டுமென்று நினைக்கிறார்களோ அதை கடவுள் சொல்வதாக நினைத்து சாமியாடுகின்றனர்//...saami aduradhuku ippadi oru explanation-a...super :)

Bharani said...

saamiyadaradha paarkadhu sema comedy-a irukum...adhil ulla comedya paarthu vaai vitu sirithaal noi vittu pogum....saami adurathoda indirect palan idhu :)

பொற்கொடி said...

attendance! :-)

Syam said...

//என்னை பொறுத்தவரை கடவுள் எதையும் நேரில் வந்து சொல்வதில்லை//

கரெக்ட்டு, இருந்தாலும் அது மக்களோட நம்பிக்கைனு நான் அத பத்தி ஒன்னும் சொல்றது கிடையாது...என்ன போய் சாமி கிட்ட அருள்வாக்கு கேளுனு சொல்லாம இருந்தா சரி :-)

Syam said...

//இதுக்காகவே காத்திக்கிட்டு இருந்த நாங்க முதல்ல போய் நிப்போம், விநியோகிக்க இல்ல, சாப்படறதுக்கு தான் //

நம்ம தான் எப்பவுமே பந்திக்கு முந்து, வினியோகத்திற்கு பிந்து னு இருப்பமே :-)

Syam said...

@அம்ப்ர்ர்ர்ரி,

ரொம்ப உணர்ச்சி வசபட்டு இருக்க போல...

//பால் என்னவோ பசு மாட்டிலிருந்து தான் கிடைக்குது//

ஆனா அத போய் மேச்சிட்டு வரனும் முதல்ல...அப்புறம் தான் பால் கிடைக்கும்...
(இத எதுக்கு சொல்றேனு கேக்காத...ஏதாவது சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது) :-)

பொற்கொடி said...

malai eranuma?? :-( seri eruren!

பொற்கொடி said...

ambi enna idhu sorpozhivu??

பொற்கொடி said...

aiyo indha saami aadradhu pathi naan vaya thorakka poradhu illa. enakku therinjadhu ellam saami padathula vikram aadinadhu thaan :-)

ambi said...

U r tagged. he hee :)
evloo naalu aachu! ipdi maati vuttu! :)

SKM said...

Neengalum "Thalaivi" pola romba arumaiya azhaga ezhudhureenga.
Nerla irukira effect irukku unga ezhuthil.

SKM said...

I too agree with you with "saamiaadradhu" .

Arunkumar said...

attendance :)
naalaiku office la poi padikkiren

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்லா இருக்கு பதிவு சொல்ல ஆசைதான். இருந்தாலும் அதை நான் சொன்னா எப்படியும் திட்டு உண்டு எனக்கு. இருந்தாலும் சொல்லிடறேன்.

மணி ப்ரகாஷ் said...

சாமியாடுதல்.

இதுல் நான் நம்பிக்கையே இல்லாம இருந்தேன். ஆனா ,சென்னையில் ஒரு மூன்று வருடங்களுக்கு முன்னால், புஷ்பவனம் குப்புசாமி,அனிதா குப்புசாமி அவர்களின் கச்சேரியினை பார்க்க நேரிட்டது.அது அந்த ஊர் திருவிழாவினை முன்னிட்டு நடத்தப் பட்டு கொண்டு இருந்தது.,. (புஷ்பவனத்தின் குரல் எனக்கு பிடித்தமான குரல்களில் ஒன்று.அவர் பேசுவதோ,இல்லை பாடுவதோ எதுவானலும் பிடிக்கும்ன் )அப்போது அவரே அறிவித்தார். நான் இங்கு ஒரு பாடலை பாடப் போகிறேன்(எதோ ஒரு நாகத்தினை முன்னிறுத்திய பாடல்)இந்த பாடலை பாடி முடிக்கும் வேளையில் கிட்டத்தட்ட ஒரு 5 பேருக்காவாது சாமிவந்து ஆடுவார்கள்.இதனை கர்வமாக சொல்லவில்லை,எனது பாடலின் வலிமையாக சொல்லுகிறேன் என்று. சொல்லி பாடலை ஆரம்பித்தார். அவர் சொன்னதுபோல 5 நபர்களுக்கும் மேலெ,அதுவும் என் முன்னே உட்கார்ந்து இருந்த ஒரு சிறுமிக்கும் வந்த போது என்னால் அதனை நம்பமால் இருக்க முடியவில்லை.

ஆனாலும்,இது ஒருவிதமான உடல் தளர்ச்சியே என்று நினைக்கிறேன்.

ஆமா இத ஏண்டா இங்க சொன்ன அப்படினு கேட்கிறீங்களா அம்பி மட்டும் அவ்வளவு பெரிய லெக்ட்சர் குடுக்கிறாரு.. அத நானும்

மணி ப்ரகாஷ் said...

ததியாராதனை --தமிழ் வார்த்தை?

ACE said...

ரொம்பவே லேட் நான்.. எனக்கும், சாமியாடுதல் மீது நம்பிக்கை இல்லை.. சீக்கிரம், நரசிம்மரை தரிசிக்க போவோம்..

வேதா said...

ச்யாம்,பரணி,ப்ரகாஷ்,எஸ்.கே.எம்,கொடி,அருண்,ஏஸ் எல்லாருடைய பின்னூட்டங்களும் படிச்சுட்டேன் நன்றி:)

திராச சார் நான் ஏன் உங்கள கோபிக்க போறேன் என்ன சொல்றீங்க? புரியவே இல்ல:)

ப்ரகாஷ்,
ததியாராதனை தமிழ் வார்த்தை இல்லையென்றே நினைக்கறேன்.

அம்பி,
இந்த சங்கிலித்தொடர்ல என்னை எத்தன பேர் தான் மாட்டி விடுவீங்க? சீக்கிரம் போட்ருவேன்:)