Wednesday, April 11, 2007

தொடரும் அனுபவங்கள்..

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் வந்துட்டாலே எல்லாருக்கும் விடுமுறை நினைவு வரும், அதே போல் எங்களுக்கு டிசம்பர் மாதமும் ஒரு விதத்தில் கொண்டாட்டம் தான். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், அதாவது தமிழ் மாத கணக்குப்படி கார்த்திகை மூன்றாம் வாரம் நாங்கள் போகும் இடம் சோளிங்கர். எனக்கு நினைவு தெரிந்து கிட்டத்தட்ட 15 வருடங்களாக தொடர்ந்து சோளிங்கருக்கு செல்கிறோம்.அம்பி உடனே உலா வரும் ஒளிக்கதிர் என்று நினைத்து விடாதீர்கள்:).

கோவிலை பற்றி மட்டுமல்லாமல் பல விஷயங்களை இங்கே பதிவிட போகிறேன். எனக்கு ஆதாரமாக இருக்கும் கடவுள் நம்பிக்கை,கோவில்,பக்தி,பக்தி சார்ந்த வழக்கங்கள்,என் சந்தேகங்கள் என பலவும் தொடராக இங்கே வரப்போகிறது. முதலில் சோளிங்கரை பற்றி சொல்லப்போகிறேன். அரக்கோணத்திலிருந்து 45 நிமிடங்கள் பேருந்தில் பிரயாணம் செய்தால் நாம் இங்கு போகலாம். கொண்டபாளையம் என அழைக்கப்படும் அழகான ஒரு ஊரில் அமைந்துள்ள மலைத்தொடரில் சின்ன மலை,பெரிய மலை என இரு மலைப்பகுதிகள். பெரிய மலை எனப்படும் மலையில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிம்மர் ஆலயம். யோகம் என்றால் தியானம்,அமைதி எனப்படும். நரசிம்மர் என்றாலே உக்ரமாக இருப்பாரென நினனப்பீர்கள்,ஆனால் இங்கே யோகத்தில் அழகாக அமர்ந்திருப்பார். இந்த மலைக்கோயிலுக்கு 1305 படிகள் ஏறி செல்ல வேண்டும். சின்ன மலையில் யோக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இதற்கு கிட்டத்தட்ட 600 படிகளுக்கு மேல் உள்ளது.

சென்னையில் அமைந்திருக்கும் ஒரு நரசிம்மர் பக்த சபாவில் என் பாட்டி உறுப்பினராக இருந்தார். இந்த சபா சார்பில் சோளிங்கரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் மூன்றாம் வார இறுதியில் மூன்று நாட்களுக்கு அன்னதானம் நடைபெறும். இந்த ஏற்பாடுகளை செய்வதற்காக சபா உறுப்பினர்கள் மட்டும் இரண்டு நாள் முன்பே சென்று விடுவார்கள். என் பாட்டியும் அவர்கள் கூடவே சென்று விடுவார். என் பாட்டியை தொடர்ந்து அவருடைய மகன்,மகள் குடும்பங்கள் என அனைவரும் உறுப்பினராகி விட்டதால் எங்க குடும்பத்திற்கு இது ஒரு வருடாந்திர சந்திப்பு என்றே சொல்லலாம்.


என் மாமாக்கள்,அத்தைகள்,பெரியப்பா,பெரியம்மா அவர்கள் சொந்தம் என பெரிய கூட்டமே கூடி விடும்.என் பாட்டி(அம்மாவின் அம்மா)மாதிரி ஒரு பெண்ணை பார்ப்பது மிகவும் அபூர்வம். அனைவர் மீதும் அப்படி ஒரு அன்பை பொழிவார். அவருக்கு பிடிக்காத நபர் என்று ஒருவர் இருந்ததே இல்லை, சோளிங்கர் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பே தீபாவளிக்கு செய்வது போல பட்சணங்கள் செய்ய ஆரம்பித்து விடுவார். அங்கே போய் தங்கும் போது அனைவருக்கும் அதை கொடுப்பார், ஒருவரை கூட விடாமல் கணக்கு போட்டு எடுத்து வைத்திருப்பார்.

நாங்கள் சிறு வயதில் பள்ளிக்கு செல்லவேண்டியிருக்குமாதலால் வெள்ளிக்கிழமை மதியம் தான் கிளம்புவோம், இரவு போய் அங்கு சேர்ந்து விடுவோம். சில வருடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை கூட கிளம்புவதுண்டு. அப்பொழுது காலை சிற்றுண்டிக்காக வீட்டிலிருந்து ஒரு பெரிய தூக்கு நிறைய இட்லி வார்த்து எடுத்து வருவார்கள் . கொண்டபாளையும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நாங்கள் வாடிக்கையாக தங்கும் சத்திரத்துக்கு வெகு தூரம் நடந்து செல்ல வேண்டும்(இப்பொழுதெல்லாம் ஷேர் ஆட்டோ வந்து விட்டது). நாங்க நடந்து செல்லும்போதே தூக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் இட்லிகளை சாப்பிட்டு விடுவோம் கூடவே எங்களை வரவேற்கும்பொருட்டு வரும் எங்க சகாக்களுக்கும் சிறிது தானம் செய்ய வேண்டும், வானர படைகளாச்சே கொடுக்கவில்லையென்றால் தூக்கையே தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்:)

சிறுவயதிலேயே சோளிங்கர் செல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டதால் அங்கே செல்வது என்பது எனக்கு கிட்டத்தட்ட சுற்றுலா செல்வது போல தான். நாங்கள் தங்கியிருக்கும் சத்திரம் முழுவதும் உறவினர்கள்,நண்பர்கள்,பல புதிய பக்தர்கள் ஆகியோரால் நிறைந்து ஒரு கல்யாணம் போல் இருக்கும். வந்தவுடன் முதல் வேலை எங்க வயதை ஒத்தவர்களுடன் விளையாட செல்வது தான். சத்திரத்தின் பின்புறத்தில் புதராக மண்டிக்கிடக்கும்,நிறைய பாறைகளும் இருக்கும். முக்கியமாக சத்திரத்தின் வாயிலிலேயே பாண்டவ தீர்த்தம் என்ற அழகிய குளம். இதில் ஆழம் அதிகமென்பதால் நாங்க போவதற்கு தடா விதிப்பார்கள். நாங்க பெரியவர்களுக்கு தெரியாமல் குளத்தில் கால் நனைப்போம். பின்புறம் புதர் மண்டிக்கிடக்குமிடமெல்லாம் பேய் இருக்கிறது என்று பயமுறுத்துவார்கள். அதையும் பொருட்படுத்தாமல் நாங்க கும்பலாக சென்று விளையாடிவிட்டு வருவோம்.

வெள்ளிக்கிழமை மாலை பஜனைக்கான ஏற்பாடுகள் நடக்கும். சத்திரத்திலேயே லட்சுமிநரசிம்மரின் படத்தை வைத்து அழகான மலர்களால் ரொம்ப அருமையாக அலங்கரித்திருப்பார்கள். பின் சபாவின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒரு மாமியின் தலைமையில் பஜனை ஆரம்பிக்கும். நாங்களோ பொறுமையில்லாமல் பாடல்களை பாடிக்கொண்டு ப்ரசாதத்திற்கு காத்திருப்போம். மெதுவாக மென்மையான பாடல்களின் ஆரம்பிக்கும் பூஜை நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகி மக்கள் அதிக உணர்ச்சிவசப்பட்டு உச்சஸ்தாயியில் பாட ஆரம்பிப்பார்கள்(நாங்க மெதுவா கூட்டத்தை விட்டு வெளியே வந்துடுவோம்)

அனுபவங்கள் தொடரும்..

50 comments:

Bharani said...

nalla irukunga guru...idhu maadhiri aanmeegam kalandha vishayangal eppavume ennaku aachariyam dhaan :)

Bharani said...

family get together maadhiri enjoy panni irukeenga...super :)

Bharani said...

idhu maadhiri chennai pakkathula irukara koyil pathiyum sollunga...me will try to visit them....

Syam said...

இன்னும் ஒருத்தரும் வரலயா...:-)

Syam said...

தங்கச்சி விளம்பரம் எல்லாம் போட்டு இருக்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

Syam said...

சரி நான் போய் படிச்சிட்டு வரேன் :-)

மு.கார்த்திகேயன் said...

அட்டென்டன்ஸ் வேதா... படிச்சிட்டு மறுபடியும்

மு.கார்த்திகேயன் said...

//என் பாட்டி(அம்மாவின் அம்மா)மாதிரி ஒரு பெண்ணை பார்ப்பது மிகவும் அபூர்வம். அனைவர் மீதும் அப்படி ஒரு அன்பை பொழிவார். அவருக்கு பிடிக்காத நபர் என்று ஒருவர் இருந்ததே இல்லை, /

இந்த காலத்தில் இது நிச்சயம் அபூர்வமான விஷயம் தான் வேதா.. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்

மு.கார்த்திகேயன் said...

/அம்பி உடனே உலா வரும் ஒளிக்கதிர் என்று நினைத்து விடாதீர்கள்//

ஆரம்பமே அம்பிக்கு தலைல ஒரு கொட்டோட தான் :)

மு.கார்த்திகேயன் said...

/(நாங்க மெதுவா கூட்டத்தை விட்டு வெளியே வந்துடுவோம்)
//
அட.. அது தானே.. அடுத்த பகுதி உங்க கும்மாளமா..

//
அனுபவங்கள் தொடரும்..
//

ஆவலுடன் வெயிட்டிங், வேதா

Syam said...

//கோவிலை பற்றி மட்டுமல்லாமல் பல விஷயங்களை இங்கே பதிவிட போகிறேன்//

அப்பா தப்பிச்சேண்டா சாமி...வரட்டு வரட்டும்....நல்லா போகுது சோளிங்கர் சுற்றுளா அனுபவம்...:-)

Syam said...

//நாங்களோ பொறுமையில்லாமல் பாடல்களை பாடிக்கொண்டு ப்ரசாதத்திற்கு காத்திருப்போம்//

நம்ம வேலைல சின்ன வயசுல இருந்து கரெக்ட்டா இருந்து இருக்க :-)

Priya said...

ரொம்ப நாள் கழிச்சு போஸ்ட் போட்டிருக்கிங்க வேதா.
அருமையா எழுதியிருக்கிங்க.

/எனக்கு ஆதாரமாக இருக்கும் கடவுள் நம்பிக்கை,கோவில்,பக்தி,பக்தி சார்ந்த வழக்கங்கள்,என் சந்தேகங்கள் என பலவும் தொடராக இங்கே வரப்போகிறது. //
அட அட நிறைய நல்ல விஷயம் போல இருக்கே. போடுங்க போடுங்க.

Priya said...

//நாங்க நடந்து செல்லும்போதே தூக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் இட்லிகளை சாப்பிட்டு விடுவோம் கூடவே எங்களை வரவேற்கும்பொருட்டு வரும் எங்க சகாக்களுக்கும் சிறிது தானம் செய்ய வேண்டும், வானர படைகளாச்சே கொடுக்கவில்லையென்றால் தூக்கையே தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்//

LOL. எங்க வீட்லயும் எங்கயாவது போனா இட்லி பொடி தடவி எடுத்துட்டு வருவாங்க. அது எனக்கு ரொம்ப பிடிக்கும். வீட்ல இருந்தா 2 இட்லி கூட சாப்பிடாத நாங்க இந்த பொடி தடவின இட்லிய பெரியவங்களுக்கு மிச்சம் வைக்காம காலி பண்ணுவோம்.

Dreamzz said...

nalla thodar enru arambathileye thodarathu..

kovil, sandoshamana kudamba sulnilai enru kalakuthu! :)

Dreamzz said...

aduthathu seekiram podavum!

ACE said...

சோளிங்கரா?? நமக்கும் பிடிச்ச் இடம் தான்.. கல்லூரில படிக்கும் போது மாதம் ஒரு முறையோ 2 மாதத்துக்கு 1 முறையோ போவோம்... :) :)

ACE said...

நாங்க, தங்கியதெல்லாம் இல்ல.. காலைல போயிட்டு, 4.30 மணிக்கு திரும்பி வந்துடுவோம்..

இன்னும் வானரங்களே உங்க கதைல வரலயே :( :(

எப்படியும் வானரங்கள் சேட்டை நிறைய இருக்கும்.. சீக்கிரமா வரட்டும்..:) :)

ACE said...

//வானர படைகளாச்சே கொடுக்கவில்லையென்றால் தூக்கையே தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்//

நான் தான் அவங்களை பாக்கலை.. வந்துட்டாங்கோ... இந்த சகாக்கள் எங்க கிட்ட பண்ண வம்பு தும்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல...

ambi said...

நரசிம்மர் என்னிக்குமே எப்போதுமே இனிமையானவர் தான்! கெட்டவர்களுக்கு தான் கெட்டவர்.

இந்த மாத இறுதியில் நரசிம்ம ஜயந்தி வருகிறதே!

//இன்னும் வானரங்களே உங்க கதைல வரலயே //
@ACE, அதான் பிளாக் வானரங்கள் எல்லாம் வந்தாச்சே :)

ambi said...

//இன்னும் ஒருத்தரும் வரலயா//

@syam, asai dosai aplam vadai. bharaniku thaan pongal puliyotharai.

ambi said...

//ஆரம்பமே அம்பிக்கு தலைல ஒரு கொட்டோட தான் //

@karthi, மோதிர கையால் தானே, பரவாயில்ல! :)

Anonymous said...

hai 23 :-)

-porkodi

Anonymous said...

edho aanmeega post pola? nalaikku vandhu padikren guru!

-porkodi

வேதா said...

@பரணி,
எனக்கும் இந்த ஆன்மீக விஷயத்தில் ஆச்சரியம்,சந்தேகம் எல்லாம் உண்டு.

/idhu maadhiri chennai pakkathula irukara koyil pathiyum sollunga...me will try to visit them..../
இது கூட ஒரே நாளில் போய்ட்டு வந்துடலாம் பரணி, தொடரின் கடைசி பாகத்தில் எப்படி போவது என்பதை பற்றி விரிவா சொல்றேன்.

@ச்யாம்,
முதல்வரே உங்களுக்கு முன்னாடி பில்லு பரணி வந்துட்டாரு,ஆனாலும் பரவாயில்லை என்ன வேணும்னாலும் ஆர்டர் பண்ணிடுங்க இனி பரணி எங்க பின்னூட்டம் போட்டாலும் அங்க அவரு பில் பே பண்ணிடுவாரு:)

ரொம்ப பீல் பண்ணாதீங்க ஒரு கட்சின்னு இருந்தா விளம்பரம் வேண்டாமா:)

வேதா said...

/அட்டென்டன்ஸ் வேதா.../
ஓகே நோட்டட்:)
/இது நிச்சயம் அபூர்வமான விஷயம் தான் வேதா.. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்/
அவர் அந்த காலத்து மனுஷியல்லவா:) இப்ப அவர் உயிருடன் இல்லை,எங்க நினைவுகளின் எப்பொழுதும் நீங்காதவர் என் பாட்டி.

/ஆரம்பமே அம்பிக்கு தலைல ஒரு கொட்டோட தான் :)/
எல்லாம் ஒரு பொழுதுபோக்கு தான் :)நான் செஞ்சதையே நீங்களும் உங்க பதிவுல செஞ்சுட்டீங்க போல(அழகு பதிவை தான் சொல்றேன்):)

/அட.. அது தானே.. அடுத்த பகுதி உங்க கும்மாளமா../
கும்மாளம்னு சொல்லமுடியாது, வெயிட் பண்ணி பாருங்க..

/நம்ம வேலைல சின்ன வயசுல இருந்து கரெக்ட்டா இருந்து இருக்க :-) /
ஆமா பின்ன சாப்படற வேலையில் என்னிக்கும் குறை வச்சதேயில்ல:)

வேதா said...

@ப்ரியா,
ரொம்ப நாளாகவே இதை பத்தி எழுதணும்னு நினைச்சேன் ப்ரியா நேத்து திடீர்னு தோணியதை அப்டியே எழுதினேன், கொஞ்சம் சரியா எழுதாத மாதிரி ஒரு பீலிங் இருக்கு, அதை அடுத்த பாகங்களில் சரி பண்ணிடனும்:)

/வீட்ல இருந்தா 2 இட்லி கூட சாப்பிடாத நாங்க இந்த பொடி தடவின இட்லிய பெரியவங்களுக்கு மிச்சம் வைக்காம காலி பண்ணுவோம்./
சேம் பின்ச்:)

@ட்ரீம்ஸ்,
/kovil, sandoshamana kudamba sulnilai enru kalakuthu! :)/
ஆமா ட்ரீம்ஸ் தொடர்ந்து படிங்க:)

@ஏஸ்,
அடிக்கடி போவீங்களா? கொடுத்து வச்சவர் தான்:) அப்ப நீங்க சோளிங்கர் அருகில் தான் இருக்கீங்களா? எந்த கல்லூரியில் படிச்சீங்க?

/இன்னும் வானரங்களே உங்க கதைல வரலயே :( :(/
அதான் வந்தாச்சே ஹிஹி:)

/இந்த சகாக்கள் எங்க கிட்ட பண்ண வம்பு தும்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல.../
உண்மையை சொல்லுங்க நீங்க தான அவங்கள சீண்டுவீங்க:)

@அம்பி,
கெட்டவர்களுக்கு தான் கெட்டவர்.
உண்மையோ உண்மை:) மே மாதம் 2 ஆம் தேதி நரசிம்மர் ஜயந்தி வருகிறது என்று நினைக்கிறேன் அன்று தான் புத்த பூர்ணிமாவும்:)

/அதான் பிளாக் வானரங்கள் எல்லாம் வந்தாச்சே :)/
கேட்டுங்கோங்க ace வானர படைத்தலைவர் கூட வந்தாச்சு:)

/ மோதிர கையால் தானே, பரவாயில்ல! :)/
மோதிர கையால அதுவும் உங்க தலைல, சான்ஸே இல்ல, அப்புறம் புது மோதிரத்துக்கு எங்க போறது?:)

@கொடி,
நல்லா தூங்கிட்டு வந்து படிம்மா:)

வேதா said...

@அம்பி,
நரசிம்ம ஜயந்தி ஏப்ரல் 30ஆம் தேதியன்று வருகிறது

Bharani said...

//இனி பரணி எங்க பின்னூட்டம் போட்டாலும் அங்க அவரு பில் பே பண்ணிடுவாரு//....guru.....neengaluma :(

Balaji S Rajan said...

Veda,

Aiyo...Kolareenga... bringing back my old memories. By the way, sholingar is also famous for Vanara Kootam...ilaiya... Oh... I have good memories about those monkeys naughty things. It is a nice place totally.

Your writing is making us interesting to wait for your next post.

பொற்கொடி said...

ஹை தூக்குல இட்லி! :-) எனக்கும் ரொம்ப புடிக்கும்! பக்கத்துல இருக்குற பீச்சுக்கே தூக்கு நிறைய தீனி எடுத்துட்டு போய் சாப்பிட்டது நினைவுக்கு வருது!! :D

என் பாட்டியும் கூட இப்படி தான்! ஒரு வேளை பாட்டிகள் எல்லோருமே இப்படி தானோ? (கீதா பாட்டி ay be an exception, can't say!) :-)

ACE said...

//@ACE, அதான் பிளாக் வானரங்கள் எல்லாம் வந்தாச்சே :) //

//கேட்டுங்கோங்க ace வானர படைத்தலைவர் கூட வந்தாச்சு:)//

Ambi : LOL :):0
and veda : LOLLO LOL :):) :)

ACE said...

//அடிக்கடி போவீங்களா? கொடுத்து வச்சவர் தான்:) அப்ப நீங்க சோளிங்கர் அருகில் தான் இருக்கீங்களா? எந்த கல்லூரியில் படிச்சீங்க?//

அதெல்லாம் அந்த காலம்.. போய் கிட்ட தட்ட ஒரு 4- 5 ஆண்டுகள் ஆகியிருக்கும் :)

படிச்சது தாம்பரத்துக்கு கிட்ட சேலயூர்ல இருக்கும் ஒரு இத்து போன காலேஜ்... :) :)பாரத்னு பேர் :) :)

//உண்மையை சொல்லுங்க நீங்க தான அவங்கள சீண்டுவீங்க:)//

நிச்சயமா இல்லை, நமக்கு ஒரு நல்ல ராசி, கிட்ட தட்ட எல்லா மிருகமும் நம்ம கிட்ட ஃப்ரென்ட்லியா தான் பழகும்.. (@அம்பி: உடனே, சிங்கம் புலி கூடவான்னு கேக்க கூடாது :) :) ) கூட வர மக்கள்ஸ தான் வான்ரங்கள் விடாது.. அதனால, எல்லாத்தையும் நான் தான் சுமந்துகிட்டு மலையேறனும்.. (ரொம்ப இல்ல, ஆனாலும்...)

ACE said...

//தொடரின் கடைசி பாகத்தில் எப்படி போவது என்பதை பற்றி விரிவா சொல்றேன்.//

பின்னூட்டத்தில் போடலாம்னு நெனைச்சேன்... நீங்களே சொல்றேன்னு சொல்லிட்டீங்க... :) :) :)

வேதா said...

@பரணி,
சிஷ்யா நிதி அமைச்சகத்தை கையில் வச்சுக்கிட்டு இப்டியெல்லாம் கவலைப்படலாமா?:)

@பாலாஜி,
அப்ப நீங்களும் சோளிங்கர் போயிருக்கீங்களா? நீங்க சொன்ன மாதிரி ரொம்ப அருமையான இடம்:)

@பொற்கொடி,
ஒரு தூக்கு நிறைய தீனி அதுவும் பீச்சுக்கு உனக்கே சரியா போயிருக்குமே:)

@ace,
ஹிஹி நமக்கு அம்பியை வச்சு காமெடி பண்ணலேன்னா தூக்கமே வராதே:)

/(@அம்பி: உடனே, சிங்கம் புலி கூடவான்னு கேக்க கூடாது :) :) ) /
பாருங்க நீங்க கூட கரெக்டா புரிஞ்சு வச்சுருக்கீங்க அம்பிய பத்தி:)

சோளிங்கர் செல்லும் விவரம் அடுத்த பதிவுகளில் தரலாம் என்றிருக்கிறேன்.

SKM said...

Happy Tamil puthandu vazhththukkal vedha.

Syam said...

தங்கச்சி...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

பொற்கொடி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)

மணி ப்ரகாஷ் said...

//தூக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் இட்லிகளை //


தூக்கு எல்லாம் இப்பவும் இருக்கிறதா.(நீங்க கொண்டு போனது இல்ல. இப்ப நடைமுறைல..)

நமக்கு பிடிச்சது எல்லாம் இப்படி போறப்ப, புளிசாதமும் சட்னியும்தான்..,

ஊருக்கு போன வுடனே இந்த மாதிரி ஒரு டிரிப்ப போட்டுட வேண்டியதுதான்.

Ravi said...

Veda, edho time constraint-naala comment podala, adhukku ippadiya seerradhu?? Neenga post potta first day annikke paarthutte but office-la, adhaan too much aanis, so comment podala. Unmayileye ungaludaya idhu maadhiri "ula varaum oLi kadhir" posta elaam sooper.

SKM said...

WOW!idhu pola indha kaalathula kuzhadhaigalukku amayaradhu aburoobam.

unga paatti super.appdi pattavangalai ippo paarpadhu aridhu.
Iniya tamil puthaandu vazhththtukkal Vedha.

கீதா சாம்பசிவம் said...

Very good post indeed.
Expecting the other parts also,
Happy Tamil New Year.

Arunkumar said...

ஆன்மீகமா? போடுங்க போடுங்க நானும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிறேன்.
உங்க அனுபவம் சூப்பர் தான்.


ஏஸ், வானரங்களப் பத்தி தனியா வேர போடனுமா? நாம எல்லாம் பத்தாதா?

வெயிட்டிங் வேதா ஃபார் தி நெக்ஸ்ட் அனுபவம்.. இனிமே ஒழுங்கா க்ளாஸ் அட்டெண்ட் பண்றேன் வேதா :)

நாகை சிவா said...

இன்னும் படிக்கல, கண்ண சொருவது.... காலையில் வரேன்.

வேதா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி:)

@ரவி,
ஏன் போஸ்ட் போடலன்னு நீங்க தான கேட்டீங்க பதிவை போட்டுட்டு பார்த்தா ஆளை காணோம், அதான் உங்க வலைப்பக்கம் வந்து நினைவுப்படுத்தினேன் ஹிஹி:)

@அருண்,
ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க நான் சொல்லாமயே பெஞ்சு மேல ஏறி நின்னுட்டீங்க:)இனி தவறாம வாங்க:)

வேதா said...

யோவ் புலி அது எப்டி என் வலைப்பக்கம் வந்தா தான் உங்களுக்கு கமெண்ட் போடாததுக்கு ஒரு காரணம் கிடைக்குமா? இப்டியே தான் எல்லா ப்ளாகிலேயும் பிட்ட போடறீங்களா?:)

நாகை சிவா said...

//யோவ் புலி அது எப்டி என் வலைப்பக்கம் வந்தா தான் உங்களுக்கு கமெண்ட் போடாததுக்கு ஒரு காரணம் கிடைக்குமா? //

எங்க கமெண்ட் போட்டுட்டு தானே போனேன். பதிவ படிக்காதுக்கு தான் காரணம் சொன்னேன்.

நாகை சிவா said...

////இப்டியே தான் எல்லா ப்ளாகிலேயும் பிட்ட போடறீங்களா?:) //

சே...சே.... யாரார் ப்ளாக் படிச்சா எனக்கு தூக்கம் வருதோ அந்த ப்ளாக்ல மட்டும் தான் இது மாதிரி.

கரகாட்டக்காரன்ல, செந்தில் சொல்லுற மாதிரி அண்ண, நீங்க வாசிங்க, நான் தூங்கனும்.. எனக்கு எது பிடிக்கலையோ நான் தூங்கிடுவேன் அப்படிங்குற டயலாக்கும் உங்க பதிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது

நாகை சிவா said...

//நாங்களோ பொறுமையில்லாமல் பாடல்களை பாடிக்கொண்டு ப்ரசாதத்திற்கு காத்திருப்போம். //

கடமை வீராங்கனை அல்லவா தாங்கள்!

நாகை சிவா said...

லேட்டா வந்தாலும் ஒரு அரை சதம் அடிச்சுட்டு போறேன்.... அடுத்த பதிவுக்கு கோயிங்...