Friday, May 04, 2007

தொடரும் அனுபவங்கள் - 4 (இறுதிப்பகுதி)

பெரிய மலையில் யோக நரசிம்மரை தரிசித்த பின் நாம் செல்ல இருப்பது சின்ன மலை(பெரிய மலையிலேயே உங்களை ரொம்ப நாள் காக்க வச்சதுக்கு மன்னிச்சிடுங்க ஹிஹி). பெரிய மலை அடிவாரத்திலிருந்து சிறிது தூரம் நடந்துச் சென்றால் சின்ன மலை அடிவாரத்திற்கு செல்லலாம். போகும் வழியில் இடதுபுறத்தில் ஒரு குளம் வரும், அது தான் பாண்டவ தீர்த்தம். அதன் கரையில் அமைந்திருக்கும் ஒரு சத்திரத்தில் தான் எங்கள் சபா பல வருடங்களாக கார்த்திகை மாத வைபவம் கொண்டாடியது. தற்போது அந்த சத்திரம் பாழடைந்துவிட்டதால் வேறு இடத்தில் நடத்துகிறோம். குளத்தை தாண்டியதும் சிறிது தூரத்தில் சிறிய மலை அடிவாரம். சிறிய மலையானது சுமார் 350 அடி உயரமானது.

பெரிய மலை ஏறிவிட்டு இதில் ஏறும் போது அட இவ்வளவு படிகள் தானா? என்று தோன்றும். பெரிய மலை படிகளில் பாதி கூட இருக்காது. பொதுவாக வானர சகாக்கள் இங்கு தான் அதிகமாக இருக்கும் என பலர் எண்ணுவர். ஆனால் இங்கு சகாக்களின் நடமாட்டம் பெரிய மலையை விட குறைவு தான். இங்கு அமைந்துள்ள யோக ஆஞ்சநேயர் பெரிய மலையை நோக்கியவாறு அமர்ந்த யோக நிலையில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார். ஆஞ்சநேயரை தரிசித்து வெளியே வந்தவுடன் ராமர் சன்னிதி உள்ளது. சிறிய மலையின் சிறப்பு மலை மேல் உருவாகியுள்ள ஒரு குளம் தான்.

மனநிலை சரியில்லாதவர்கள்,தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இங்கு வந்து குளத்தில் குளித்து ஆஞ்சநேயரை தரிசித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுண்டு. ஆனால் குளம் மிகவும் ஆழமாக இருக்கும்,எனவே மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இங்குள்ள மடப்பள்ளியில் வடை ரொம்ப பிரசித்தம். அதை பிரசாதமாக வாங்கிச் செல்லலாம் வழக்கம் போல நம் சகாக்கள் அனுமதித்தால் மட்டுமே மடப்பள்ளி வாசலிலேயே வானரப்படையினரும் பள்ளிக்கொண்டிருப்பர். கார்த்திகை மாதத்தில் இங்கு கூட்டம் களை கட்டும், முக்கியமாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசித்தால் ரொம்ப விசேஷம். கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் நெரிசல் அதிகமாக இருக்கும், அதுவும் படிகள் முழுவதும் வரிசை இருக்கும். நாங்கள் முடிந்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் போவதை தவிர்த்துவிடுவோம்.

இனி சோளிங்கர் செல்வது எப்படி என்பதை பார்ப்போம். சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு ரயிலில் சென்று அங்கிருந்து சோளிங்கர் செல்வது தான் எளிது. சென்னை செண்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். அரக்கோணம் ரயில்நிலையத்திலிருந்து அரக்கோணம் பேருந்து நிலையம் சுமார் 1 கி.மீ இருக்கும். முன்பெல்லாம் நடந்து தான் செல்ல வேண்டும். இப்பொழுது ஷேர் ஆட்டோவில் 5 ரூபாய் கொடுத்தால் பேருந்து நிலையத்தில் விட்டு விடுவார்கள். அங்கிருந்து சோளிங்கர் செல்லும் பேருந்தில் ஏறிக்கொள்ளலாம்(பயண நேரம் சுமார் 45 நிமிடங்கள்). ஆனால் இறங்குமிடம் சோளிங்கர் அல்ல, கொண்டப்பாளையம். கொண்டப்பாளையம் நிறுத்தத்தையும் எளிதில் கண்டுக்கொள்ளலாம். ஒரு பெரிய வளைவில் கொண்டப்பாளையம் என்று எழுதியிருப்பார்கள், கூடவே நம்மை வரவேற்று அருள் புரிய அருகிலேயே நங்கநல்லூர் ஆஞ்சநேயர் அளவில் ஒரு பெரிய ஆஞ்சநேயர் சிலை ஒன்று இருக்கும். இங்கு இறங்கிக்கொண்டு அங்கிருந்து பெரிய மலை அடிவாரத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்று விடலாம். இங்கு தேவஸ்தான பேருந்துகளும் வரும் ஆனால் அதற்காக காத்துக்கொண்டிருந்தால் நேரமாகிவிடும். எனவே ஆட்டோவிலேயே செல்லலாம். ஆனால் அதற்கு முன் கொண்டப்பாளையம் நுழைவாயிலில் உள்ள தட்டாங்குளம் என்னும் குளத்திற்கு சென்று வாருங்கள். இங்கு குளிப்பது பாவங்களை போக்கும், நாங்கள் சோளிங்கர் வந்தால் ஒரு நாளாவது இங்கு குளிக்காமல் போக மாட்டோம். ஆனால் ஆழம் அதிகம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரிய மலை அடிவாரத்தில் நான் சொன்ன மாதிரி பூமாலைகள்,துளசிமாலைகளை தவிர்த்து(தைரியமாக வாங்கிச்செல்பவர்களும் உண்டு) குங்குமம்,கற்கண்டு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு மலையேறலாம். வாங்குமிடத்திலேயே கூட நாம் கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு செல்லலாம்.

திருமங்கையாழ்வார்,பேயாழ்வார் ஆகியோரால மங்களாசாசனம், அதாவது பாடப்பட்ட ஸ்தலமான சோளிங்கப்புரம் அனைவராலும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.

15 comments:

சிங்கம்லே ACE !! said...

கடைசி பகுதியை அவசரமா முடித்த மாதிரி ஒரு உணர்வு. :)

அந்த இராமர் சன்னதியில் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்று..

ஒரு முறை, ஆஞ்சினேயர் சன்னிதியில் தரிசனம் முடித்த பிறகு, அர்ச்சகர் இராமர் சன்னிதியில் அமருங்கள் வருகிறேன்னு சொன்னார்.

நாங்க 4 பேர், போய் தரையில சம்மணமிட்டு உக்காந்திருந்தோம்.. ஒரு வானரம் (கொசம் பெரிய குரங்கு) நேரா எங்களை நோக்கி வந்தது.. நான் சும்மா இல்லாம, குரங்கு கூட நாய் மாதிரி ஓடினாலோ, பயந்த்தாலோ துரத்தும்னு அல்வா கொடுத்தேன்..

அதனால, எல்லாரும் அமைதியா அந்த குரங்கையே பாத்துட்டு உக்காந்திருந்தோம்.. அந்த குரங்கு வேகமா வந்து என் நண்பனோட மடியில தலை வச்சு குழந்தை மாதிரி படுத்திருச்சு.. :) :) :) :)

மக்கள்ஸ் பயத்துல, கத்த கூட முடியாம, ace, acenu காத்து தான் விட்டாங்க.. :) :) நான் அந்த பையனை மெதுவா தூக்கின உடனே விட்டுடுச்சு :) :) அதுல இருந்து யாரும் உக்காரதே கிடையாது :) :)

சிங்கம்லே ACE !! said...

காலைல, 6.20 பாலாஜி எக்ஸ்பிரஸ் பிடிச்சா, மாலை 4.30க்கு சென்னை வந்து சேர்ந்திடலாம்.

மணி ப்ரகாஷ் said...

first?

சிங்கம்லே ACE !! said...

இங்க குளங்களாம், குளிக்க ஏதுவான மாதிரியே தெரியலையே.. பாசி படிந்து கலங்கலா தானே இருக்கு.. :(:(

கீதா சாம்பசிவம் said...

enna velai romba athikam pole irukku? sikiram sikirama mudichutinga? irunthalum nalla irukku. Chinna malai pathi innum varnanai ethir parthen.

ambi said...

//கடைசி பகுதியை அவசரமா முடித்த மாதிரி ஒரு உணர்வு//

Repeattuuuuu :)

ரொம்பா நல்லா எழுதி இருக்கீங்க. அந்த மங்கள சாசன பாடல்களை தேடி போட்டு இருக்கலாம். மற்றபடி இன்னும் கொஞ்சம் படம் போட்டு இருக்கலாம். அட குகிள் இருக்கே! :)

//என் நண்பனோட மடியில தலை வச்சு குழந்தை மாதிரி படுத்திருச்சு//


//மக்கள்ஸ் பயத்துல, கத்த கூட முடியாம, ace, acenu காத்து தான் விட்டாங்க.//

ஹஹா. சிரிப்பை அடக்கவே முடியலை.
என்ன கொடுமை இது சிங்கம்லே ACE? :p

வேதா said...

மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி, நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி கொஞ்சம் அவசரமா முடித்த மாதிரி தான் எனக்கும் இருக்கு:( மன்னிக்கவும் நம்ம வீட்டுல கொஞ்சம் ஆணி அதிகமாயிடுச்சு :( என்ன கொடுமை சிங்கம்லே ace இது ? :)

அம்பி நீங்க சொன்ன மாதிரி பாடல்களை கூகிளாண்டவர் கிட்ட கேட்க கூட எனக்கு டைம் இல்ல, தேடிப்பார்த்து எப்பவாவது போடறேன் ஹிஹி:)

மு.கார்த்திகேயன் said...

டூ லேட், அப்படின்னு நீங்க சொல்றது கேட்குதுங்க துணை முதல்வரே..

என்னங்க பண்றது.. ஆணிகள் அதிகம் ;(

மு.கார்த்திகேயன் said...

உங்க கூடவே நானும் மலையேறி சிம்மனை தரிசிச்சேங்க வேதா

ambi said...

//அம்பி நீங்க சொன்ன மாதிரி பாடல்களை கூகிளாண்டவர் கிட்ட கேட்க கூட எனக்கு டைம் இல்ல//

மேடமுக்கு அப்படி என்ன அவசர வேலையோ? சம்திங்க்! சம்திங்க்.

நாராயண! நாராயண! (ஒன்னும் இல்ல, சும்மா குலதெய்வத்தை கூப்பிட்டேன்)

Dreamzz said...

ungka thodar alaga irundhadhu! nalla eludhirukeenga!

Syam said...

நாங்களும் வந்துட்டு போனம்ல :-)

Syam said...

//கடைசி பகுதியை அவசரமா முடித்த மாதிரி ஒரு உணர்வு. :)//

என்ன கொடுமை சிங்கம்லே ACE :-)

Priya said...

//இனி சோளிங்கர் செல்வது எப்படி என்பதை பார்ப்போம். சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு ரயிலில் சென்று அங்கிருந்து சோளிங்கர் செல்வது தான் எளிது. சென்னை செண்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். அரக்கோணம் ரயில்நிலையத்திலிருந்து அரக்கோணம் பேருந்து நிலையம் சுமார் 1 கி.மீ இருக்கும். முன்பெல்லாம் நடந்து தான் செல்ல வேண்டும். இப்பொழுது ஷேர் ஆட்டோவில் 5 ரூபாய் கொடுத்தால் பேருந்து நிலையத்தில் விட்டு விடுவார்கள். அங்கிருந்து சோளிங்கர் செல்லும் பேருந்தில் ஏறிக்கொள்ளலாம்(பயண நேரம் சுமார் 45 நிமிடங்கள்). ஆனால் இறங்குமிடம் சோளிங்கர் அல்ல, கொண்டப்பாளையம்.//

குமுதத்துல (?) வர மாதிரி போட்டிருக்கிங்க..
ஒரு தடவை போகணும்னு ஆசை வருது நீங்க எழுதினத படிச்சு.

Anonymous said...

//மேடமுக்கு அப்படி என்ன அவசர வேலையோ? சம்திங்க்! சம்திங்க்.//

repeattey!

//குமுதத்துல (?) வர மாதிரி போட்டிருக்கிங்க..
ஒரு தடவை போகணும்னு ஆசை வருது நீங்க எழுதினத படிச்சு. //

repeatttttttttttttttey!! ;-)

-porkodi