Tuesday, May 15, 2007

அம்பி கல்யாண வைபோகமே :)

ப்ளாக் உலகில் பரபரப்பாக பேசப்பட்ட அகில உலக புகழ்பெற்ற பி.மு.க கழகத்தின் உறுப்பினர், தொ(ல்)லைத்தொடர்பு துறை அமைச்சர், கலியுக நாரதர் ,ஆப்பு அம்பியின் திருமண விழா நேற்று இனிதே நடைப்பெற்றது. திருமணத்துக்கு அனைவரையும் அன்போடு அழைத்த (பின்ன அப்ப தான் மொய் நிறைய வரும் ஹிஹி) அம்பிக்கு முதலில் நன்றிகள். அவரோட ப்ளாக் உலக காதல் கதை இனி நிஜ உலகத்தில் அழகாக ஆரம்பமாகிறது :)

திருமணத்திற்கு செல்வது என்று முடிவெடுத்தவுடனே எப்பொழுது போவது? முகூர்த்தத்திற்கா? மாலை வரவேற்பிற்கா? நம்ம வலையுலக நண்பர்கள் யார் யார் வருவாங்க? என்ன பரிசு அளிப்பது(கல்யாணத்திற்கு போனா கண்டிப்பா மொய் வைக்கணுமா?:)) என ஒரே குழப்பம். போன வாரமே நம்ம சிஷ்யன் பில்லு பரணிக்கு மயில் தூது அனுப்பியிருந்தேன் . ஒழுங்கு மரியாதையா ஜி3யோட கன்சல்ட் பண்ணி நீங்கல்லாம் எப்ப வரப்போறீங்கன்னு சொல்லுங்க என்று கேட்டிருந்தேன். அதுக்கு ரொம்ப பவ்யமா,"குருவே உங்கள அப்டி விட்டுடுவோமா? கண்டிப்பா உங்களுக்கு மயில அனுப்பறேன்" அப்டின்னு சொல்லிட்டு கடைசி நிமிஷம் வரைக்கும் நான் அனுப்பின மயிலை திருப்பி அனுப்பவேயில்லை, ஒரு வேளை வறுத்து சாப்டுட்டாரோன்னு நினைச்சுக்கிட்டு, சரி இப்ப என்ன பண்றது? அப்டின்னு யோசிக்கும்போதே நம்ம திராச சார் போன் பண்ணி "என்ன? நீ எப்ப வர்ர?" அப்டின்னு கேட்டாரு.

சரி நம்ம பில்லு பரணி தான் கல்யாணத்து வந்தா எங்க மொத்த சாப்பாட்டுக்கும் அவரு கிட்ட பில் கட்ட சொல்லிடுவாங்களோன்னு பயந்து போய் பெங்களூர்ல டேமேஜர் சொல்ற ஆணியை புடுங்க போயிட்டாரு, ஜி3 காண்டாக்ட் பண்ண முடியல(மத்த நேரத்துல எல்லாம் ப்ளாக் யூனியன்ல மொக்கை போட்டுக்கிட்டு இருக்கும் மக்கள்ஸ் எல்லாம் திடீர்னு ரெண்டு நாளா லீவுல போயிட்டீங்களா?:) நம்ம சார் இருக்கும்போது என்ன கவலை? அதனால கல்யாணத்துக்கு வரேன் சார், காலைல தான் வரப்போறேன்னு சொன்னேன். அப்புறம் பார்த்தா ,அடிக்கற வெயில்ல குழாயை தொறந்தாலே வென்னீர் தான் வருது, இதுல நாம வேற அசோக் நகர் வரைக்கும், அதுவும் நம்ம வாகனத்துல(ஸ்கூட்டி) போனா அவ்ளோ தான் வண்டியோட சேர்ந்து உருகிடுவோம்னு மாலை வரவேற்பிற்கு வரேன் சார்னு சொல்லிட்டேன்.

சாயங்காலம் ஒரு 6:15 மணிக்கா கிளம்பி அசோக் நகர் போறதுக்குள்ள நொந்து போயிட்டேன், அதுவும் 100 ft ரோடுல பயங்கர ட்ராபிக் எங்க பார்த்தாலும் எமகிங்கரர்கள் மாதிரி லாரிகள். திராச சார் வேற அவ்ளோ தூரம் வண்டியில பத்திரமா வருவியான்னு கேட்டாரு. என்ன பண்றது? நம்ம இருக்கறது மெயினான ஏரியா(!)ன்னு பேரு தான் ஆசியாவிலேயே பெரிய தொகுதி வேற ஆனா ஒரு பேருந்து வசதி உண்டா?:(

எங்க ஏரியாவிலேயே எங்கயாவது பக்கத்துல கல்யாணத்தை வைக்காம இப்டி ஊருக்கு ஒதுக்குப்புறமா அசோக் பில்லர் கிட்ட கல்யாண மண்டபத்தை பிடிச்சிட்டாங்க ஹிஹி :) இப்டி ஒரு வழியா மண்டபத்துக்கு வந்துப் பார்த்தா பாதி மண்டபம் காலியா இருக்கு, ஆகா நாம தான் ரொம்ப சீக்கரமா வந்துட்டோமோன்னு திராச சாருக்கு ஒரு போனை போட்டேன். அவர் அப்ப தான் காரோட்டி வந்த களைப்பு(!) தீர கீழ டைனிங் ஹால் போயிருந்தாரு(என்ன சார் காபியா? டிபனா?). அவரு வர்ர வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம திருவிழால தொலஞ்சுப்போன குழந்தை மாதிரி(ஹிஹி நாந்தான், இனி இந்த டயலாக்க அம்பி சொல்ல முடியாது;)) திருதிருன்னு முழிச்சுக்கிட்டே என்னமோ ரொம்ப தெரிஞ்ச மாதிரி வேற ப்ளாக்கர்ஸ் வந்துருக்காங்களான்னு பராக்கு பார்த்துக்கிட்டு இருந்தேன்(ஹிஹி பரவாயில்ல நிறைய பசங்களும் இருந்தாங்க) .

அப்புறம் திராச சாரும் அவரோட தங்கமணியும் வந்தாங்க (பொற்கொடி, சாரோட தங்கமணி உன்ன ரொம்ப விசாரிச்சாங்க, கோப்ஸ் உங்களையும் தான்). அவங்களோட போய் ஒரு வசதியான இடமா பார்த்து செட்டில் ஆனப்பறம் நம்ம அம்பியின் பாசப்பிணைப்பு, திராச சார் பாஷைல சொல்லணும்னா அம்பியோட கோஸ்ட் ரைட்டர் ஹிஹி அதாவது அம்பி பேருல பல நல்ல பதிவுகளை எழுதும் அம்பியின் தங்கக்கம்பி சீசீ தம்பி, கணேசன் அவர்களை சார் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரோட கொஞ்ச நேரம் பேசிட்டு சைந்தவியோட அருமையான கச்சேரியை ரசிச்சுக்கிட்டே இருக்கும்போது சுமார் 7:15 மணிக்கு தான் திரு அம்பியும் அவரோட திருமதியும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாராகி வந்தனர்.

க்ரீம் கலர் ஷெர்வானியும்,அதற்கேற்ப மெரூன் கலர் துப்பட்டாவோடு அம்பி கலக்க அவரை விட அதிகமாக கலக்கியது அவரோட தங்கமணி தான்(குஜராத்தி ஸ்டைலில் புடவை அணிந்திருந்தார், அழகான கலர் ஆனா எப்டி சொல்றதுன்னு தெரியல, ஜி3 ஹெல்ப் ப்ளீஸ் அது என்ன கலர்?). ஆங் முக்கியமான விஷயத்தை சொல்ல விட்டுட்டேனே நம்ம டுடி அக்கா முதல் நாளே குடும்பத்தோட வந்து டெண்ட் அடிச்சுட்டாங்களே அவங்கள பார்க்க முடியலையேன்னு நான் தேட, சாரும் அவங்க பரிசு வாங்க போயிருப்பாங்கன்னு சொன்னாரு. அப்புறம் தான் தெரிஞ்சது அவங்க பரிசு வாங்க போகலியாம்(நம்ம ப்ளாக் யூனியன் மூலமா அம்பிக்கு கொடுக்கற பரிசு பெங்களூரில் தான் வழங்கப்பட இருக்கிறது. இதை பற்றிய விவரங்கள் டுடி அக்கா சொல்லுவாங்க) பூங்கொத்து வாங்க போனாங்களாம். போய் ரொம்ப நேரம் ஆகுதுன்னு கேள்விப்பட்டு ஒரு வேளை இவங்களே செடி நட்டு, பூ பறிச்சு பொக்கே செய்யப்போறாங்களோன்னு நாங்க திகைச்சுப்போயிட்டோம்.

அதுக்குள்ள இன்னொரு குழப்பம். அம்பிக்கு என்னை தெரியும் ,ஏற்கனவே பார்த்திருக்கார், ஸோ ஜி3 வந்தா அவங்களா போய் அம்பி கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டா தான் எங்களுக்கு தெரியும். அதனால முன்னாடியே அம்பி கிட்ட போய் சொல்லிட்டோம். நடுவுல கொஞ்சம் கச்சேரியும் ரசிச்சுக்கிட்டு இருந்தோம். திடீர்னு மேடையில் நின்னுக்கிட்டு இருந்த அம்பியும், தங்கமணியும் எங்கள பார்த்து காத்துல என்னமோ எழுதி கதகளி ஆட ஆரம்பிச்சுட்டாங்க இதென்னடா இது? இவங்க தனியா நடன கச்சேரி செய்யப்போறாங்களான்னு பார்த்தா அவங்க பக்கத்துல ஜி3 நிக்கறாங்க அதை தான் அவங்க அப்டியே அபிநயம் பிடிச்சு எங்களுக்கு சொன்னாங்க.

அப்புறம் ஜி3யோட அறிமுகப்படலம் முடிஞ்சு அரட்டையை ஆரம்பிக்கும்போது ஜி3 அருணுக்கு போன் பண்ணினாங்க. அவரும் எங்க கூட எல்லாம் பேசி ஸ்பான்ஸர் பண்ண பரணி ஊரில் இல்லாததால் தன்னால் திருமணத்திற்கு வரமுடியவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். கொஞ்ச நேரத்தில டுடி அக்காவும் வந்துட்டாங்க, இவ்ளோ பெரிய சென்னை மாநகரத்துல ஒரு பொக்கே கிடைக்கலயாம் சரி பரவாயில்ல காசு மிச்சம்னு மனசை தேத்திக்கிட்டு அம்பியை வாழ்த்த நாங்க மேடைக்கு போனோம்.

எங்கள பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமான அம்பி "மொய் எங்க? மொய் எங்க? "என்று பல முறை கேட்டு நாங்க எதுவும் தராததால சே! இப்டி கலெக்ஷன் கம்மியாகிடுச்சே என்று வருத்தப்பட்டார். பின் எங்க நட்பே உங்களுக்கு பெரிய பரிசு தான்னு நாங்க எல்லாரும் ஒரு பெரிய ஆப்பை அவருக்கு வைக்கவும் அதையும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்(படங்கள் திராச சார் தான் எடுத்தார் அவரு அதை தன் ப்ளாகில் போடுவதாக கூறியுள்ளார்)பின் என்னிடம் நம் வலையுலக நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி அவர்கள் வாழ்த்துக்களையும் அவர்கள் சார்பாக நான் கூறினேன். ஜி3யின் செல் மூலமாக தலைவர் கார்த்தியும், நண்பர் அருணும் வாழ்த்தினார்கள். அதை விட முக்கியமான மேட்டர் என்னவென்றால் என்னை பார்த்ததும் மிகவும் சந்தோஷமடைந்த அம்பியின் தங்கமணி நான் அம்பியை அவருடைய ப்ளாகில் நன்றாக வாருவதாகவும்(ஹலோ இது சீப்பு வச்சு தலை வார்ரது இல்ல கோப்ஸ்:))அதை தன்னால் இனி செய்ய முடியாது எனவும் அதனால என்னை தொடர்ந்து அந்த பணியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்(ஹிஹி அம்பி உங்களுக்கு இந்த மேட்டர் தெரியுமா?) தங்கமணியாகிவிட்டதால் ஏன் அதையெல்லாம் செய்யக்கூடாது? தாராளமா செய்யலாம் இதுக்கு நீங்க ட்ரையினிங் எடுக்க சரியான ஆள் நம்ம ப்ளாக் உலக நாட்டாமை, பி.மு.க முதல்வர், ஆல் இன் ஆல் அழகு ராஜா, ச்யாம் அவர்களின் தங்கமணி என்று அம்பியின் தங்கமணியிடம் பரிந்துரைத்தேன்.

பின் அவர்களிடம் விடைப்பெற்று மிக மிக முக்கியமான வேலையை கவனிக்க சென்று விட்டோம்(வேற எங்க? டைனிங் ஹால் தான்). சோறு கண்ட இடமே சொர்க்கமென நான், ஜி3, டுடி, திராச சார், அவரு தங்கமணி எல்லாரும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது கரெக்டா பெங்களூரிலிருந்து மோப்பம் புடிச்சு நம்ம பரணி போன் பண்ணினார். அப்புறம் நம்ம தலைவர் கடலை கார்த்தி, அருண் அவங்க கூட பேசிட்டு வர்ரதுக்குள்ள அடுத்த பந்தி ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு மேலயும் உட்கார்ந்துக்கிட்டு இருந்தா சாப்பிடும் போதே இலை எடுத்துடுவாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு நானும், ஜி3யும் மனசேயில்லாமல் எழுந்துட்டோம். அப்புறம் எல்லாரும் வெளிய வந்து பனிக்கூழ் அதான்பா ஐஸ்க்ரீமை ஒரு வெட்டு வெட்டினாங்க. நாங்கல்லாம் கொழந்த மாதிரி ஐஸ்க்ரீம் சாப்டமாட்டோம் பீடா தான் போடுவோம்னு ஒரு பிட்டை போட்டு பீடாவை சாப்டேன்(ரெண்டு நாளா ஜுரம் ,கல்யாணத்துக்கு வந்ததே எப்டியோ சமாளிச்சு தான், இதுல ஐஸ்க்ரீம் வேறயா?)

இப்டியாக ஜாலியாக ப்ளாக்கர்ஸ் மீட் அதாவது அம்பி கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது.
என்ன இன்னுமா இருக்கீங்க? அவ்ளோ தான் ஷோ ஓவர் எல்லாரும் வந்து அம்பியை வாழ்த்திட்டு, நல்லா சாப்டுட்டு வீட்டுக்கு போயாச்சு, நீங்களும் போயிட்டு(வந்ததுக்கு நாலு கமெண்ட் போட்டுட்டு)வாங்க :)

42 comments:

Ravi said...

Veda, nalla varNaNai but photos missing. Photos click-neengala?

Anonymous said...

மிக அழகான வர்ணனை. நன்றி வேதா.

மதுரையம்பதி.

நாகை சிவா said...

//அசோக் நகர் போறதுக்குள்ள நொந்து போயிட்டேன்//

ஏங்க உங்களுக்கு இருக்குற ஷாட் கட் ட யூஸ் பண்ண தெரிஞ்சு இருக்கனும், அல்லது புகுந்து வர திறமை இருக்கனும், அது இல்லாம டிராபிக் குற்றம் சொன்னால் சரியா சொல்லுங்க...

நாகை சிவா said...

//ரெண்டு நாளா ஜுரம் ,கல்யாணத்துக்கு வந்ததே எப்டியோ சமாளிச்சு தான், இதுல ஐஸ்க்ரீம் வேறயா?)//

எம்புட்டு ஜுரமா இருந்தாலும் ஐஸ்க்ரீமை வேண்டாம் என சொன்ன உங்களை என்னனு சொல்லுறது....

G3 said...

/ஜி3 ஹெல்ப் ப்ளீஸ் அது என்ன கலர்?//

ada aandava... enga kannukku kulurchiya mandapathula pakka ethanayo vishayangal irundhappo ponnoda saree coloura poi note panni iruppennu enna pathi thappa nenachu putteengalae :-((

G3 said...

//பின் எங்க நட்பே உங்களுக்கு பெரிய பரிசு தான்னு நாங்க எல்லாரும் ஒரு பெரிய ஆப்பை அவருக்கு வைக்கவும் அதையும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்ட//

Aama aama.. ambiyoda perundhanmaiya pathi solliyae theeranum.. Kaiyae kuduthu vaazhtharom.. giftellam edhuvum kekka koodaadhunnu sonnadhum oru nimisham irunga appadinnu sollittu kaila irukkara valayala kazhatta aarambichitaaru.. ada en paasamalar thambiyae... adhu covering valayal raasanu sonnadhukkappuram dhaan engala medaya vittae keezha eranga vitaaru.. :-))

பொன்ஸ்~~Poorna said...

வேதா,
மிஸ் பண்ணிட்டேங்க.. நீங்க கீழ போய் நல்லா வெட்டிகிட்டிருக்கும் போது நானும் வந்திருந்தேன்... நான் வந்த வேலைய கவனிக்கப் போகவும் (ஹி ஹி..அதே வெட்டுற வேலை தான் ;)), அதுக்குள்ள நீங்க கிளம்பிட்டீங்க..

மிஸஸ் அம்பி நம்ம தோழியாக்கும்... அம்பி தான் மாப்பிள்ளைன்னு அங்க போய்த் தான் தெரியும்...

Ravi said...

Naanum Naagai Siva avargalai vazhi mozhigiren. Enna juram irundha enna? Icecream-a miss pannalaama Vedha?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹாஹாஹா.. வர்ணனை ரொம்ப சூப்பரா இருக்கு.. :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//திடீர்னு மேடையில் நின்னுக்கிட்டு இருந்த அம்பியும், தங்கமணியும் எங்கள பார்த்து காத்துல என்னமோ எழுதி கதகளி ஆட ஆரம்பிச்சுட்டாங்க இதென்னடா இது? இவங்க தனியா நடன கச்சேரி செய்யப்போறாங்களான்னு பார்த்தா அவங்க பக்கத்துல ஜி3 நிக்கறாங்க அதை தான் அவங்க அப்டியே அபிநயம் பிடிச்சு எங்களுக்கு சொன்னாங்க.
//

வி.வி.சி. :-)))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ப்ளாகில் நன்றாக வாருவதாகவும்(ஹலோ இது சீப்பு வச்சு தலை வார்ரது இல்ல கோப்ஸ்:))//

கோப்ஸ், உங்களை இப்போ எல்லாரும் நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க.. ;-)

கீதா சாம்பசிவம் said...

மொய் எழுதலைன்னதும் ஒரு நிம்மதி! தானே வந்துடுச்சு! அப்பாடி!

Dreamzz said...

ஆஹா!! சூப்பர்! நம்மளால தான் வர முடியாம போகி விட்டது:(

நன்றிங்க!

சிங்கம்லே ACE !! said...

நல்ல வர்ணனை.. எங்க சார்புலையும் வாழ்த்தியமைக்கு நன்றி.. :) :)

முக்கியமான மேட்டர் மெனு என்னனு சொல்லவே இல்ல..

மெனு : பூரி, சன்னா, வெஜ் பிரியாணி, ராய்தா, பிசிபேலாபாத், ரசம், தயிர் சாதம், அப்பளம், உருளை கிழங்கு, ஜிலேபி, பஞ்சாமிர்தம், பாதாம் பால், ஐஸ்கிரீம்

கரெக்டா?? :) :)

Anonymous said...

avvvvvvvvvvvvvvvvv i missed it :-(

-porkodi

வேதா said...

@ரவி,
புகைப்படங்கள் திராச சார் தான் எடுத்தார். அவர் போடுவார்னு நினைக்கறேன் :)

@மதுரையம்பதி,
நன்றி :)

@சிவா,
நீங்க வேற நான் திருமங்கலம் சிக்னல் வரைக்கும் குறுக்கு வழில தான் போனேன் அதுக்கப்புறம் என்ன பண்ண முடியும்? ட்ராபிக் ஜோதில போயி ஐக்கியமாகிட்டேன் :)


/எம்புட்டு ஜுரமா இருந்தாலும் ஐஸ்க்ரீமை வேண்டாம் என சொன்ன உங்களை என்னனு சொல்லுறது.... /

எவ்ளோ ஜுரம் இருந்தாலும் சாப்பிட்டே தீருவேன்னு அடம்பிடிக்கற அளவுக்கு எனக்கு ஐஸ்க்ரீம் பிடிக்காது:)

@ஜி3,
/ ponnoda saree coloura poi note panni iruppennu enna pathi thappa nenachu putteengalae :-(( /
ஆகா அப்ப நீயுமா? ;)

/ada en paasamalar thambiyae... adhu covering valayal raasanu sonnadhukkappuram dhaan engala medaya vittae keezha eranga vitaaru.. :-)) /
நல்ல வேளை அப்டி ஒரு பொய்யை சொல்லி எங்கள காப்பாத்திட்ட;)

வேதா said...

@பொன்ஸ்,
ஆகா பொன்ஸ் நீங்க வருவீங்கன்னு தெரியாது இல்லேன்னா வெயிட் பண்ணி பார்த்துட்டு போயிருப்பேன். சரி பரவாயில்ல அடுத்து வேற யாராவது ப்ளாக்கர் கல்யாணத்துல சந்திக்கலாம்:)

@ரவி,
நான் சிவா கிட்ட சொன்ன பதிலையே இங்கையும் சொல்லிக்கறேன்:)

@மைபிரண்ட்,
/வர்ணனை ரொம்ப சூப்பரா இருக்கு.. :-D/
ரொம்ப நன்றிங்க தங்கச்சிக்கா:)

/உங்களை இப்போ எல்லாரும் நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க.. ;-) /
ஹிஹி அதெல்லாம் எப்பவோ புரிஞ்சுக்கிட்டாச்சு:)

@கீதா,
தலை(வலி)வி உங்க வாழ்த்தை சொல்லிட்டேன். மொய் இல்லேன்னதும் ரொம்ப ஆடிப்போயிட்டார் பாவம்:)

@ட்ரீம்ஸ்,
ஆமா உங்கள எல்லாம் நேர்ல பார்க்கற சான்ஸ் எங்களுக்கும் மிஸ் ஆகிடுச்சு:(

@ஏஸ்,
யாரந்த எட்டப்பன்? நாங்க சாப்டத பார்த்து கண்ணு வச்சது மட்டுமில்லாம மெனுவையும் உங்களுக்கு அனுப்பியிருக்காங்க:)

@பொற்கொடி,
நாத்தனாரா லட்சணமா உங்கண்ணன் கிட்ட சொல்லி டிக்கட் அனுப்ப சொல்லியிருக்கலாம்ல:)

Arunkumar said...

சூப்பர் கமெண்டரி :-)

அம்பிக்கு நான் ஒரு 52இன்ச் ப்ளாஸ்மா டி.வி அனுப்பினேனே. அத கூட யாரோ சுதானு அம்பி வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருக்குற ஒருத்தங்க சைன் பண்ணி வாங்கி கிட்டதா fedex.com சொல்லுதே..

அம்பி,பெங்களூர் போனா செக் பண்ணுங்க..

அய்யனார் said...

வாழ்த்துக்கள் மண்மக்களுக்கு

சென்னை வாழ்வை ரொம்ப மிஸ் பன்றேன்
:(

மணி ப்ரகாஷ் said...

அழகான வருணனை.

கவிஞருக்கு சொல்லி குடுக்க வேண்டுமா என்ன...


சோ, கடைசியா அம்பி மாட்டிகிட்டார்....... அம்பி இனிமேல் எப்பவும் நாட்டாமையோட டிஸ்கசன்தான்..

பூரிக்கட்டையிலிருந்து எப்படி தப்பிப்பது?

மணி ப்ரகாஷ் said...

//திருவிழால தொலஞ்சுப்போன குழந்தை மாதிரி//

அப்பா தாங்க முடியலைடா சாமி....

அப்பாடா குழந்தை மாதிரி னு சொல்லிட்டீங்க..

நாட்டாமை நோட் திஸ் பாயிண்ட்..குழந்தைக்கு எல்லாம் வைர மூக்குத்தி இனி போட வேண்டாம்..

விளையாடும்போது தொலைச்சுடும்ம்ம்ம்ம்

மணி ப்ரகாஷ் said...

//ஜி3யின் செல் மூலமாக தலைவர் கார்த்தியும், நண்பர் அருணும் வாழ்த்தினார்கள்.//

அட மக்கா,நானும் இங்கதானே இருக்கேன், அப்படியே என்னையவும் இழுத்து இருக்காலாம்ல...

அருண்..கார்த்தி... grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

மணி ப்ரகாஷ் said...

4 comment pottachu..ana neenga than en pakkathukku varenu sollitu varatheeeee illa..

(ama nee ennatha ezuthara ,varathukku appadinu neenga solrathu ketkuthu.., athukkuthna nan valaippakkam kattama manivilaas nu veeta katti vachu irukkom..vanthu coffee sapdalam la...)

ராஜி said...

First time to ur Blog through G3's..
Aamamnga naan G3 kitta Ambi kalyanam eppdi irundhuchunu kaetathukku unga blog link annupuchi padichu paarunu sollitaanga...

Super Veda...Nerula paartha maadhiriyae irundhuchu....

gils said...

seekrama boto podungamma...semam review..enaku tamizhkudimagan pesina nera running commentry kudutha mari iruku :D :D

Gopalan Ramasubbu said...

en guru chamatha vantha jigudis ah paarkama irunthara illa vazakam pola thaana?

Balaji S Rajan said...

Veda,

Kalakiteenga.... Super narration. Appadiye nera ambi receptionkku vandha mathiri irundhadhu. HMmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm avaraum matikinara... Good... YAM petra thunbam peruga ivaiyagam.... First while reading I thought you are going to say that you have gone on the wrong day or you had been to the wrong mandapam. So... Ambi yeppadi adangi odungi irundhara.... Inimey post konjam adakam odukama irukuma... Ilai jilebi gilebinnu alambuvara... Poga Poga parkalam... Anyhow... Naankooda neenga yen antha scootyla 100 feet roadula ponnengannu kavalai pattane. Glad that you enjoyed and met few bloggers as well. I have been reading your posts but could not reply immediately due to lack of time. I shall try to be regular in the future. No time to browse.

Dubukku said...

விபரமான தகவல்களுக்கு ரொம்ப நன்றி...இதுக்கு தான் அலைபாய்ஞ்சுக்கிட்டு இருந்தேன் :))

Anonymous said...

apdiye kettalum! avare epoda blore ku ticket edupomnu pakraru, idhula enga enakku ticket? :-(

-porkodi

dubukudisciple said...

adada veda!!!
enaku Westmambalam , Ashok nagar rendu arealayum kidaikala...enna panrathu.poi pondybazaar la vangalamna adutha naal karthala than varuvennu thonichu..adu thaan ambi kochika matarnu vanthuten

வேதா said...

@அருண்,
இந்த விஷயத்த பத்தி கல்யாணத்துல டுடி அக்கா என் கிட்ட மூச்சே விடலியே எதுக்கும் அம்பி கிட்ட அப்புறமா விசாரிச்சு வைங்க:) அக்கா அதுக்குள்ள டிவி பொட்டில சீரியல் பார்க்க ஆரம்பிச்சுருப்பாங்க :)

@அய்யனார்,
வாங்க வாங்க உங்க வாழ்த்தையும் தெரிவிச்சுட்டா போச்சு :)

@ப்ரகாஷ்,
/பூரிக்கட்டையிலிருந்து எப்படி தப்பிப்பது?/
இனிமே எங்கேருந்து தப்பிக்கறது?:)

/..குழந்தைக்கு எல்லாம் வைர மூக்குத்தி இனி போட வேண்டாம்..

விளையாடும்போது தொலைச்சுடும்ம்ம்ம்ம் /
அதெல்லாம் நாங்க வெவரம்ல:) தொலைக்க மாட்டோம் :)

/அப்படியே என்னையவும் இழுத்து இருக்காலாம்ல...

/அருண்..கார்த்தி... grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr/
அதானே? தலைவரை கேளுங்க நான் கூட சொல்லலாம்னு நினைச்சேன் கான்பரன்ஸ் கால் தான போடறீங்க ப்ரகாஷையும் கூப்டுங்கன்னு ஆனா ஜி3யில்ல போன் பண்ணினாங்க பாவம் அவங்க கிட்ட போய் எப்டி கேக்கறது?:)

/ana neenga than en pakkathukku varenu sollitu varatheeeee illa../
ப்ரகாஷ் உண்மையை சொல்லனும்னா உங்க அழகு பதிவு படிச்சுட்டு என்ன பின்னூட்டம் போடறதுன்னே தெரியல அவ்ளோ அருமையா எழுதறீங்க :) உங்க மணி விலாஸ்ல வந்துட்டு காபி என்ன? விருந்தே சாப்டுற வேண்டியது தான் அவ்ளோ அழகா எழுதறீங்க வாழ்த்துக்கள் :)

@ராஜி,
நன்றி ராஜி அப்பப்ப எங்க வீட்டுப்பக்கமும் வந்துட்டுபோங்க :)

கீதா சாம்பசிவம் said...

ஹை வைர மூக்குத்தி அப்போ எனக்குத் தான்!

வேதா said...

@கில்ஸ்,
தமிழ்குடிமகன் ரேஞ்சுக்கு இருக்கா? :) ஹிஹி நன்றி :)

@கோப்ஸ்,
என்ன இப்டி எல்லாம் கேள்வி கேட்கறீங்க ?அவருடைய இன்றியமையா கடமையிலிருந்து என்னிக்காவது தவறி இருக்காரா? :) எல்லாம் எப்பவும் போல தான்..;)

@பாலாஜி,
வாங்க உங்க புது வேலையெல்லாம் எப்டி இருக்கு? உங்க பதிவுகளும் படிச்சுட்டு தான் இருக்கேன் :) என் வர்ணனை நேருல பார்த்த மாதிரி இருக்கா? இன்னும் சாப்பாடை பத்தி நம்ம டுபுக்கு டிசைப்பிள் எழுதியிருக்கறத படிங்க சாப்ட மாதிரியே இருக்கும் :)

@டுபுக்கு,
நன்றி டுபுக்கு அண்ணே நீங்க நேர்ல முடியாட்டியும் என் பதிவு உங்கள நேர்லயே அழைச்சுட்டு போயிருக்கும்னு நன்பறேன் :)

@பொற்கொடி,
நீ முன்னாடியே இதெல்லாம் யோச்சிருக்குனும் இப்ப போய் கேட்டீனா நீ யாருன்னு உன்னையே கேப்பாரு நெலம் அப்டி ;)

@டுடி,
சரி விடுங்க இதுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க, நாங்களே செலவு மிச்சம்னு சந்தோஷப்படறோம் :)

@கீதா,
இதப்பார்ரா எப்படா கேப் கிடைக்கும்னு அலையறீங்களா? இது ஒரு அண்ணன் தங்கச்சிக்கு வாங்கி தரேன்னு வாக்களித்தது. கண்டிப்பா என் கல்யாணத்துக்காவது வாங்கி கொடுத்துடுவார் பாருங்க :)

Naren's said...

Hi i am a regular reader of your blog. You got some nice postings and a great gang. Jus wanted to share my blogspace http://narenmuse.blogspot.com with you. keep blogging. Have anice day.

SKM said...

aaahhaa! scooty veeranganai Vedha vazhga.Dhairiyamdhaanga ungalukku.

Thanks for the update.kalakiteenga with all the details.Kooda irundhu arattai adicha madhiri irundhadhu.

SKM said...

//Kaiyae kuduthu vaazhtharom.. ... oru nimisham irunga appadinnu sollittu kaila irukkara valayala kazhatta aarambichitaaru.. ..adhu covering valayal raasanu sonnadhukkappuram dhaan engala medaya vittae keezha eranga vitaaru.. :-)) //

ada Rama!appovum avar lollu pannradhai vidalaiya?LOL!:D

My days(Gops) said...

//ஆப்பு அம்பியின் திருமண விழா நேற்று இனிதே நடைப்பெற்றது//

adhai engalukku padam pottu kaamicha vedha ku oru nanri...

// கோப்ஸ் உங்களையும் தான்)//
nestu time neeenga paartheengana en saarba oru vanakatha vachidunga...


//(ஹலோ இது சீப்பு வச்சு தலை வார்ரது இல்ல கோப்ஸ்:))//
he he nallavey purinchi irukeeeenga makkals ellam.... nanri ai....

aaama seepu vacha thaaney thalai vaara mudium?

My days(Gops) said...

/நாங்கல்லாம் கொழந்த மாதிரி ஐஸ்க்ரீம் சாப்டமாட்டோம் பீடா தான் போடுவோம்னு ஒரு பிட்டை போட்டு பீடாவை சாப்டேன்(ரெண்டு நாளா ஜுரம் ,கல்யாணத்துக்கு வந்ததே எப்டியோ சமாளிச்சு தான், இதுல ஐஸ்க்ரீம் வேறயா?)
//

கொழந்த மாதிரி 'nu neeeenga aluthi sonna naaala naaan porumai'a poren.....

varata ...

மு.கார்த்திகேயன் said...

//(கல்யாணத்திற்கு போனா கண்டிப்பா மொய் வைக்கணுமா?:)) //
நல்ல கேள்வி தான் வேதா.. கட்டாயம் வைக்கணுமா என்ன

மு.கார்த்திகேயன் said...

நானும் ஒரு ரவுண்டு கல்யாணத்துக்குள்ள வந்துட்டு போன மாதிரி இருந்தது வேதா..

வர வர மக்கள் எல்லோரும் காமெடியா எழுத ஆரம்பிச்சுட்டீங்கப்பா

வேதா said...

@நரேன்,
வாங்க உங்க வலைப்பக்கத்துக்கு கண்டிப்பா வரேன்:D

@எஸ்.கே.எம்,
/Dhairiyamdhaanga ungalukku/
நீங்க வேற ரொம்ப பயந்துண்டு தான் போனேன் :)
/Kooda irundhu arattai adicha madhiri irundhadhu./
நன்றி :)

/appovum avar lollu pannradhai vidalaiya?LOL!:D/
அதெல்லாம் கூட பொறந்த குணமாச்சே :D

@கோப்ஸ்,
/nestu time neeenga paartheengana en saarba oru vanakatha vachidunga.../
கண்டிப்பா கோப்ஸ் :)

@கார்த்தி,
/வர வர மக்கள் எல்லோரும் காமெடியா எழுத ஆரம்பிச்சுட்டீங்கப்பா/
தலைவரே என்ன இப்டி ஒரு உள்குத்து?:)

Sree's Views said...

Hey Veda,
Ennapaa photo podaama vittuteenga ?
Romba azhaga ezhudhhi irukeenga :)