Friday, June 08, 2007

அன்புடன்..

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கவிதை என்ற பெயரில் எழுதுவதையெல்லாம் சகித்துக்கொண்ட என் தோழிகள் ஒரு கல்லூரியில் நடந்த கவிதைப்போட்டியில் பங்கேற்க சொல்லி வற்புறுத்தி அனுப்பினர்,'யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்' பாலிசி தான் எல்லாம் ;) அந்த நேரத்தில் நான் எழுதி வந்த கவிதைகள்(!) எல்லாம் எப்டின்னா, ஒரு வாக்கியத்துல இருக்கற எல்லா வார்த்தைகளையும் ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி கவுஜன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்(இப்ப மட்டும் என்னவாம்?:)) நானும் என் தோழிகள் என் கவிதைகளை புகழ்வதை பார்த்துட்டு(அது வஞ்சப்புகழ்ச்சின்னு அப்ப எனக்கு தெரியல;))போட்டில கலந்துக்கிட்டேன். எல்லாரும் கவிதை எழுதறதோட நிறுத்தாம அதை மேடையில் போய் படிக்கணும். நமக்கு இதெல்லாம் புதுசு,ஏதோ கவிதைங்குற பேருல கிறுக்கிட்டு இருந்தேன். எல்லாரும் படிச்ச மாதிரி நானும் போய் படிச்சுட்டு வந்தேன். சரி இப்ப என்ன சொல்ல வர்ர? உனக்கு பரிசு கிடைச்சுதா? அப்டின்னு கேட்கறீங்க. அதான் இல்ல, அங்க வந்தவங்க எழுதியதை பட்டிமன்றத்துல கவிதையை மேற்கோள் காட்ற மாதிரி ஏற்ற இறக்கத்துடன் ஒவ்வொரு வரியையும் இரண்டிரண்டு முறை வாசித்தனர். நானும் அப்டியே செஞ்சேன். கடைசியா பரிசுகளை அறிவிக்க வந்த நடுவர், இப்படியெல்லாம் ஒரு வரியையே திரும்பத்திரும்ப படிக்கறதனால அது கவிதையாகி விடாது என்று சொல்லிட்டு போயிட்டாரு:) நம்ம இமேஜ் டோட்டல் டேமேஜ்:) இப்டி கவிதை எழுதறேன்னு கொல வெறியோட திரிஞ்சுக்கிட்டு இருந்த நான் அதோட வச்சேன் என் கவிதை எழுதும் முயற்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி.


கல்லூரியில் அதுக்கப்புறம் ஆட்டோகிராப் புத்தகத்தில் தான் கடைசியா கவிதை எழுதினேன். என் கவிதைகளில் ஒன்றை வேற வழியே இல்லாம எங்க துறை ஆண்டு மலரில் வெளியிட்டாங்க.(கணக்குக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்?:)) இப்படியாக கல்லூரிக் காலத்தில் நிறுத்தி வைத்த என் கவிதை ஆர்வத்தை உண்மையிலேயே உருப்படியாக செதுக்க உதவியது தமிழ் வலைப்பதிவுகள் தான். எதையும் தொடர்ந்து முயற்சித்தால் உருப்படியாக ஏதாவது தேறும் என்று புரிந்துக்கொண்டு இங்கு என் வலைப்பக்கத்திலும் தனியாக கவிதைக் கடையை திறந்தேன் :) அதன் பிறகு என் வலைநண்பர்கள் தரும் ஊக்கத்தினால் இணையத்திலும் கவிதைப் போட்டிகளில் கலந்துக்கொண்டேன்.


இம்முறை அன்புடன் குழுமம் நடத்திய ஆண்டு விழா கவிதைப்போட்டியிலும் கலந்துக்கொண்டேன். இந்த கவிதைப் போட்டியின் விவரங்களை நண்பர் சிவா மற்றும் என் கவிதைக்கடையின் ரகசிய ரசிகையும், கடையிலிருந்து சில கவிதைகளை சுட்டு அன்புடன் குழுமத்தின் 'சுட்ட கவிதைகளில்' வெளியிட்டு என் கவிதைகளுக்கு மதித்தப்பளித்த சேதுக்கரசி அவர்களும் எனக்கு மடல் மேல் மடல் அனுப்பி உற்சாகப்படுத்தினார்.

இம்முறை கவிதைப்போட்டி சற்று வித்தியாசமான முறையில் இருந்தது. கவிதைகளுக்கு தலைப்பு தரப்படவில்லை. அதுவும் தவிர இயல்கவிதை, படக்கவிதை, ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை என்று பிரிவுகள் வேறு. நான் பங்குக்கொண்டது இரு பிரிவுகளில் படக்கவிதை, இயல்கவிதை. சிறிது நாட்களுக்கு முன்பு தான் முடிவுகள் வெளியாகத் துவங்கின. அது மட்டுமில்லாமல் நடுவர்களின் அழகான உரைகளும் தொடர்ந்து வந்தன. சரியாக படக்கவிதை பிரிவின் முடிவுகள் வரும் போது நான் ஊரில் இல்லை. பின் இரண்டு நாட்கள் கழித்து என் மின்னஞ்சல் பெட்டியில் தகவல் வந்திருந்தது நானும் பரிசு பெற்றிருக்கிறேன் என்று. மிகவும் மகிழ்ச்சியோடு அன்புடன் குழுமத்தில் சென்று பார்த்தேன். படக்கவிதை பிரிவில் எனக்கு கிடைத்தது ஆறுதல் பரிசு என்றாலும் அதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது எனக்கு கிடைத்தது பெரிய விஷயமாக தான் எனக்கு தோன்றியது.

படக்கவிதைகளின் எண்ணிக்கை: 149
கவிஞர்களின் எண்ணிக்கை: 61


படக்கவிதைக்கு நடுவர்களாக இருந்தவர்கள் நாம் ஏற்கனவே அறிந்த வலைப்பதிவாளர்கள் திரு.ஆசிப் மீரான், திரு.பாலபாரதி மற்றும் ஒரு பெயர் வெளியிடாத நண்பர்.

படக்கவிதைக்கு நடுவர்களின் விமர்சனம்:

"தனியாக விளக்கிச் சொல்ல ஏதுமில்லாத வெளிப்படையான கவிதை. நான்கு பக்கத்திற்கு நீட்டி முழக்காமல் நான்குவரிகளில் சொல்லப்பட்டிருப்பதாலேயே இது கவனத்தை சட்டென்று ஈர்த்து விடுகிறது. எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் கவிதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு நீளமாகச் சொல்கிறோம் என்பதல்ல என்பதை நிரூபித்த கவிதை. அழகான காட்சிப்படுத்துதலைக் கையாண்டிருக்கும் இந்தக் கவிதை மண்ணடி நீரை மனிதன் உறிஞ்சி மண்ணையே தாகத்தால் தவிக்க வைத்திருக்கும் விசயத்தை சூசகமாக எடுத்துரைக்கிறது.ஆறுதல் பரிசைப் பெறுகிறது இந்தக் கவிதை."


அன்புடன் குழுமத்துக்கும்,சேதுக்கரசிக்கும் நன்றி தெரிவித்து மடல் அனுப்பலாம் என்று நினைக்கையில் நான் பரிசு பெற்றதை நம்ப முடியாமல் என் கணினியும் வேலை நிறுத்தம் செய்துவிட்டது :)இறுதியில் போட்டி முடிவுகள் அனைத்தும் வெளியான பின்பு இன்னொரு இன்ப அதிர்ச்சி, இயல்கவிதை பிரிவில் நடுவராக இருந்த 'திசைகள்' என்னும் வலையிதழ் ஆசிரியரும், எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் இயல்கவிதை பிரிவில் தன்னை கவர்ந்த கவிதைகள் என்று கூறி பத்து கவிதைகள் தேர்ந்தெடுத்தார். அதில் நான் அனுப்பிய கவிதையும் ஒன்று. அந்த கவிதையும், அதற்கு
திரு.மாலன் அளித்த விமர்சனமும் ஏன் அந்த கவிதை பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுக்கப்படவில்லை? என்ற காரணத்தையும் முன் வைக்கிறார்.


இயல்கவிதை பிரிவில் நான் அனுப்பிய கவிதை :

"நட்பென்னும் கவிதை"

நிலாச் சோற்றில்
நிலவையே சாட்சியாக்கி
எழுதப்பட்டது,
நம் நட்பென்னும் கவிதை.

நம் பாவாடை சரசரக்க,
தெருவில் புழுதி மேகங்களுக்கு நடுவில்,
மின்னலாய் விளையாடி,
சேர்த்து வைத்தோம்
நமக்கான சந்தோஷ கணங்களை.

தலையணையாய் புத்தகங்கள்
தாலாட்டுப் பாட,
ஓர் அன்னையாய் நீ ஊட்டினாய்
பாடங்களை.

பருவத்தில் மலர்ந்ததும்,
கண்களே பாலமாகி,
கடத்தப்பட்டன சில ரகசியங்கள்,
நமக்கே நமக்கான,
விடயங்கள்.

மலர்ந்ததும்,
மலர்ந்தது காதல்.
மணப்பந்தலில்,
கண்ணீரை அச்சாரமாக்கி,
நம் பிரிவைக் கடன்வாங்கினேன்,
மீண்டும் மீட்டு விடவே.

இன்று,
கண்காணா எல்லையில்
நான் இருந்தாலும்,
என் காட்சிகள் என்னவோ நீயாகவே..

என் வருடங்கள் சுருங்கி,
தேகம் வதங்கினாலும்,
நினைவுகள் வதங்காமல்
நம் நாட்களைப் பூமாலையாக்கி காத்திருக்கிறேன்
உன் வரவிற்காக.

சொல்லாய் நானும்
பொருளாய் நீயும் இருக்க,
காலமே
காலனாய் வந்து
நம் உறவு பிரித்தாலும்
இனி கிடையாது,
நம் நட்பென்னும் கவிதைக்கு "."

திரு.மாலன் அவர்களின் விமர்சனம் :

நட்பிற்குக் கனம் சேர்ப்பது அருகாமையா? பிரிவா? இது ஒரு பட்டிமன்றத்தில்
பதில் தேடிப்பார்க்க வேண்டிய கேள்வியாக இருக்கலாம். ஆனால் ஒரு பருவத்தில் துள்ளி விளையாடி, இன்று தொலைந்து போய்விட்ட நண்பர்களை நினைத்துப் பார்க்கையில் உள்ளத்தின் ஓரமாய் ஓர் வலி உருவாகி மறையும். ஆண்களுக்காவது பரவாயில்லை, இந்தப் புலம் பெயர்கிற யுகத்திற்கு முன்னால் வரை அவர்களது நட்பில் பல ஆயுசு பரியந்தம் தொடர்ந்திருக்கிறது. ஆனால் பெண்களது நட்பு வளையம்? கழுத்தில் கயிறு ஏறிக் கனவன் வீட்டுக்குப் போனபின சில உறவுகளே கூட உலர்ந்து போகிற அவர்களது வாழ்க்கையில், பள்ளி நாட்களில் பயிரான அந்த பால்யகாலத்துச் சிநேகம் தொட்டுத் தொடர்ந்தா வரும்?கல்லூரி நாட்களில் அன்றாடம் பார்த்து அற்ப விஷயங்களிலிருந்து அரசியல் பிரசினைகள் வரை அலசி எடுத்து, வகுப்பெடுக்கும் ஆசிரியர் முதல் வாசல் வழி போகும் அப்பாவி மனிதர்கள் வரை அத்தனை பேரையும் கிண்டலடித்துக் கேலி பேசிகிறுகிறுத்துப் போன தோழமைகள், அந்த மூன்றாண்டுகள் முடிந்து கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறிய சில நாள்களிலேயே காணாமல் போய்விடும் சோகம் சில நட்புக்களுக்கு நேர்ந்துவிடும்.நெருக்கமான தோழியின் திருமணத்திற்குக்கூடப் போக முடியாத சூழல்களில் சிக்கிக் கொள்ளும் சிநேகிதிகளும் உண்டு. இந்த வலி தமிழ் இலக்கியத்தில் அதிகம் பதிவு செய்யப்படாத வலி. (இதை நான் ஒரு சிறுகதையாக எழுதியிருக்கிறேன் என்பதை விட்டுவிடலாம்) அந்த வலியைப் பற்றிப் பேசும் இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்த இன்னொரு கவிதை. கவிதை மொழி கைவரப்பெற்றிருந்தால் இன்னும் கனம் பெற்றிருக்கும்.

இந்த பதிவின் மூலம் அன்புடன் குழுமத்தை சேர்ந்த திரு.புகாரி, சேதுக்கரசி மற்றும் அனைத்து நடுவர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்திய வலைநண்பர்களுக்கும் என் நன்றிகளையும், பரிசு பெற்ற மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் :)

54 comments:

Ravi said...

Veda,
Unga post padichittu, inimelum unga blog-la comment podanuma-nu thonudhu!!! ;-) Neengal ivvalavu periya aaLu theriyaama poche. Anyway, kavidhaiyum super. Adharku ungalukku kedacha paraatugalum sooper. Vaazhthukkal!!

Btw, romba naal sandhegam. General-a Tamizh kavidhaigal rhyming-a irukkaadhu. So how do you define something as kavidhai? [Sorry for the abathamaana question!]

வேதா said...

/Unga post padichittu, inimelum unga blog-la comment podanuma-nu thonudhu!!! ;-)/
என்ன ரவி இப்டி சொல்லறீங்க? நீங்கல்லாம் கமெண்ட் போடறதனால தான் நான் என் ப்ளாகை இன்னும் மூடாம வச்சுருக்கேன் :)

/General-a Tamizh kavidhaigal rhyming-a irukkaadhu. So how do you define something as kavidhai?/
இல்ல ரவி மரபு கவிதைகளை தான் நாம் வகைப்படுத்த முடியும். நான் எழுதுவதெல்லாம் மரபு கவிதை அல்ல. புதுக்கவிதைக்கு தனியாக வகைப்படுத்துதல் இல்லை,எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்:)

உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி :)

ambi said...

yabba, naan thaan technically secondaa? :)

superrrrrrrrrrr kalakiteenga veda.

ungal kavithaiku en oscar parisu kudukka koodathu?nu namma katchi saarbaa porattam nadathuvoom!

//கவிதை மொழி கைவரப்பெற்றிருந்தால் இன்னும் கனம் பெற்றிருக்கும்.
//

கவிதைக்கு அழகு வார்த்தை சுருக்கம். அத தான் சொல்றாரா ஜட்ஜு அய்யா?

என்ன சொல்ல வறோம்ங்கறது முக்கியம் இல்ல.

எப்படி சொல்றோம்? ஹிஹி, யார் கிட்ட சொல்றோம்ங்கறது தான் மேட்டர்.

ஹிஹி, நான் எழுதின கவிஜ எல்லாம் நினைச்சு பாக்கரேன்.

சிங்கம்லே ACE !! said...

வாழ்த்துக்கள் வேதா!!!

hotcat said...

Congratulations, Veda!! kavithai super....

Shankar

மு.கார்த்திகேயன் said...

இது போன்ற சந்தோச தருணங்கள் வாழ்க்கையில் நமக்கு பரமபத விளையாட்டு ஏணி மாதிரி.. மனசை காத்தாடி மாதிர் லேசாக்கி பறக்க வைக்கும்..

வாழ்த்துக்கள் வேதா.. திறமைகள் எங்கிருந்தாலும் அது ஒரு நாள் எப்படியும் வெளியே தெரியும் என்பதற்கு நீங்கள் ஒரு சான்று..

பரத் said...

வாழ்த்துக்கள் வேதா,அருமையான கவிதைகள்

கீதா சாம்பசிவம் said...

வாழ்த்துக்கள் வேதா, மேன்மேலும் பரிசுகள் பெறவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். மாலன் சொல்லுவது போல் நெருங்கிய தோழியின் திருமணத்துக்குக் கூடச் செல்ல முடியாத வலியை நான் உணர்ந்திருக்கிறேன். நல்ல கவிதை. நல்ல தேர்ந்தெடுப்பு!.

ambi said...

//நெருங்கிய தோழியின் திருமணத்துக்குக் கூடச் செல்ல முடியாத வலியை நான் உணர்ந்திருக்கிறேன். //

@geetha paati, என் கல்யாணத்தையும் சேர்த்து தானே சொல்றீங்க பாட்டி? :p

வேதா said...

@அம்பி,
/yabba, naan thaan technically secondaa? :)/

இன்னுமா இந்த பொழப்பு?:) கல்யாண்மாயிடுச்சுல்ல இனிமே கொஞ்சம் ரீஜண்டா நடந்துக்கோங்க:)

/ungal kavithaiku en oscar parisu kudukka koodathu?nu namma katchi saarbaa porattam nadathuvoom!/
எதுக்கு இப்டி ஒரு உள்குத்து எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்:)

/எப்படி சொல்றோம்? ஹிஹி, யார் கிட்ட சொல்றோம்ங்கறது தான் மேட்டர்./
ஆமாம் இது மேட்டர்:) பேசாம ப்ளாக் எழுதி தங்கமணி/ரங்கமணி கரெக்ட் பண்ணுவது எப்டின்னு ஒரு செமினார் எடுக்கலாம் எங்களுக்கும் கொஞ்சம் உபயோகமா இருக்கும் ஹிஹி ;)

வேதா said...

@ஏஸ்,சங்கர்,பரத்
ரொம்ப நன்றி நண்பர்களே:)


@கார்த்தி,
ரொம்ப நன்றி தலைவா :)
/ திறமைகள் எங்கிருந்தாலும் அது ஒரு நாள் எப்படியும் வெளியே தெரியும் என்பதற்கு நீங்கள் ஒரு சான்று../

இது உங்களுக்கும் பொருந்தும் :)

@கீதா,
நன்றி:)
/மாலன் சொல்லுவது போல் நெருங்கிய தோழியின் திருமணத்துக்குக் கூடச் செல்ல முடியாத வலியை நான் உணர்ந்திருக்கிறேன்./
கண்டிப்பா பல பெண்களுக்கு இந்த அனுபவம் இருக்கும்:(

@அம்பி,
/என் கல்யாணத்தையும் சேர்த்து தானே சொல்றீங்க பாட்டி? :p /
ஆமா அம்பி ஆனா உங்கள நினைச்சு இல்ல, உங்க தங்கமணியோட நிலைமைய நினைச்சு தான் பீல் பண்ணியிருப்பாங்க :P

Bharani said...

Guru....Vaazhthukal.....Kalakareenga.......sishyam pera kaapatiteenga :)

Arunkumar said...

வாழ்த்துக்கள் வேதா.. படக்கவிதை + இயல்கவிதை சூப்பர். நடுவரின் விளக்கம் அருமை..

மேலும் நிறைய போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவிக்க வாழ்த்துக்கள் :)

Balaji S Rajan said...

Veda,

Kakakiteenga... Vazhthukkal.

Super. I am searching words in the Dictionary to appreciate... Good thinking about the drought land waiting for a drop of water from the pots.

Neenga Yengaiyo Poreenga..

கீதா சாம்பசிவம் said...

@அம்பி, அது வேறே நினைப்பா? அதெல்லாம் இல்லை, மொய்ப்பணம் மிச்சம் ஆச்சேன்னு ரொம்பவே சந்தோஷமா இல்லை இருக்கேன்! :P

ambi said...

//மொய்ப்பணம் மிச்சம் ஆச்சேன்னு ரொம்பவே சந்தோஷமா இல்லை இருக்கேன்//

@geetha madam, chennai vaanga, unga kitta nerla vanthu vasool pannikaren. vida maattom illa :p

Padmapriya said...

Hi Veda,congrats..
naa epdi miss panninen unga blog eh ithana naala??

ஜி said...

வாழ்த்துக்கள் வேதா.. மிகவும் அருமையாக எழுதியிருக்கீங்க.. உங்கள மாதிரி மக்களோட கவிதைகளப் பாத்துதான் நானும் கவிதைங்ற பேருல கவுஜய எழுதிக்கிட்டு இருக்கேன் :))

மிகவும் ரசித்தேன். இன்னொருமுறை வாழ்த்துக்கள் :))

KK said...

Vaazhthukkal for aaruthal parisu...
ipothiku attendance appurama vanthu padikuren :)

G3 said...

vaazhthukkal veda..

2 kavidhaiyum arumai.. [adhaan oorae solliduchae.. nee enna soldradhunnellam kekkapudaadhu :P]

:-))

Dreamzz said...

வெற்றி பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்! கவிதை... நீங்க எழுதினது.. சொல்லவா வேணும்!

Dreamzz said...

20?

வேதா said...

@பரணி,
நன்றி:) நீ சொன்ன மாதிரி கவித எழுதி ஆறுதல் பரிசு வாங்கிட்டேன் .நான் சொன்ன மாதிரி நீ கவிதை எழுதி அனுப்பியிருந்தா முதல் பரிசே வாங்கியிருக்கலாம்:) இப்டி மிஸ் பண்ணிட்டியே சிஷ்யா ;)

@அருண்,
ரொம்ப நன்றி அருண் :)

@பாலாஜி,
/I am searching words in the Dictionary to appreciate... /
ரொம்ப புகழறீங்க பாலாஜி நான் அதுக்கு தகுதியானவளா இனிமே தான் மாறணும்:) நன்றி:)

வேதா said...

@கீதா,அம்பி,
அதான் அதே தான் ஹிஹி இப்டியே மெயிண்டென் பண்ணுங்க எங்களுக்கும் கொஞ்சம் பொழுது போகும் :D

@பத்மா,
வாங்க வாங்க நீங்க மிஸ் பண்ணியிருக்கலாம் ஆனா நான் உங்க பதிவுகள் படிச்சுருக்கேனே :)

நன்றி:)

@ஜி,
/உங்கள மாதிரி மக்களோட கவிதைகளப் பாத்துதான் நானும் கவிதைங்ற பேருல கவுஜய எழுதிக்கிட்டு இருக்கேன் :))/

இதெல்லாம் டூ மச் சொல்டேன் உங்க கவிதை கூட படக்கவிதை பிரிவுல நடுவர்கள் பாராட்டு பெற்றிருக்கு போல :) வாழ்த்துக்கள் ஜி :D

@kk,
நன்றி :) மெதுவா வந்து படிச்சுப் பாருங்க :)

@காயத்ரி,
வாம்மா மின்னல் :) இவ்ளோ வேகமா வந்து கேட்டதுனால உனக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்:)

@ட்ரீம்ஸ்
நன்றி :)நீங்களும் திரும்ப வந்துட்டீங்க போல பட்டைய கிளப்புங்க :)

நாகை சிவா said...

நம்ம பெயரையும் மறக்காம ஞாபகம் வச்சு கூவினதுக்கு ரொம்ப தாங்க்ஸ்ங்கோ.....

படக்கவிதைக்கு உங்கள் கவிதை சூப்பர்....

நாகை சிவா said...

//பருவத்தில் மலர்ந்ததும்,
கண்களே பாலமாகி,
கடத்தப்பட்டன சில ரகசியங்கள்,
நமக்கே நமக்கான,
விடயங்கள்.//

அருமையான வரிகள். ரொம்ப நாசூக்கா கையாண்டு இருக்கீங்க....

ஆனாலும் புது கவிதை என்றாலும் கூட வார்தையில் சில ஜாலங்கள் சேர்த்து இருக்கலாம்.

Vidhya said...

Hi Veda,

Unga kavidhaigala ipo thaan padika aarambichurukkein. really superb!!!!
keep going!

inum ungaloda matha kavidhaigala padika aarambika porein.

My days(Gops) said...

வாழ்த்துக்கள் வேதா..

My days(Gops) said...

//இப்படியெல்லாம் ஒரு வரியையே திரும்பத்திரும்ப படிக்கறதனால அது கவிதையாகி விடாது என்று சொல்லிட்டு போயிட்டாரு:) நம்ம இமேஜ் டோட்டல் டேமேஜ்:)//

adhutu effect thaaan ippo inga theridhey...... ungal kavidhai ellam rembavey nalla iruku...

//என் கவிதைகளில் ஒன்றை வேற வழியே இல்லாம எங்க துறை ஆண்டு மலரில் வெளியிட்டாங்க//
ennanga ivlo saadharanama sollureeenga? aandu mazhar la varadhu na summaava?

// எதையும் தொடர்ந்து முயற்சித்தால் உருப்படியாக ஏதாவது தேறும் என்று புரிந்துக்கொண்டு இங்கு என் வலைப்பக்கத்திலும் தனியாக //
correct ah soneeenga.... unga kavidhaigal ellamey padichi iruken...

My days(Gops) said...

andha padakavidhai sema top veda...... kalakiteeenga ponga...

வேதா said...

@சிவா,
/நம்ம பெயரையும் மறக்காம ஞாபகம் வச்சு கூவினதுக்கு ரொம்ப தாங்க்ஸ்ங்கோ...../
நீங்க மறக்காமல் ஒவ்வொரு முறையும் ஊக்கமளிக்கும் போது உங்கள மறக்க முடியுமா? :)

அருமையான வரிகள். ரொம்ப நாசூக்கா கையாண்டு இருக்கீங்க....
ஆமா சிவா என்னை நானே பாராட்டிக்கிட்டது இந்த வரிகளுக்குத் தான் :)

/ஆனாலும் புது கவிதை என்றாலும் கூட வார்தையில் சில ஜாலங்கள் சேர்த்து இருக்கலாம்./
ஹும் அப்டியா சொல்றீங்க? முதல் முறை எழுதியபோது இருந்த சில வரிகளை நீக்கி விட்டு தான் போட்டிக்கு அனுப்பினேன்.

@வித்யா,
ரொம்ப நன்றி:) அடிக்கடி வந்துப்போங்க :)

@gops,
/ennanga ivlo saadharanama sollureeenga? aandu mazhar la varadhu na summaava?/
அப்டி சொல்லித்தான் பெருமைப்பட்டுக்கிட்டேன் :) அந்த கவிதையை படிச்சவங்களுக்கு தான் தெரியும்:)

/ha padakavidhai sema top veda...... kalakiteeenga ponga... /
நன்றி சகா:)

கீதா சாம்பசிவம் said...

அம்பி, அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. வேணும்னா ஒரு பேப்பரில் "மொய்" அப்படின்னு எழுதிக் கொடுத்துடறேன், போதுமா? :P

சீனு said...

erandu kavithaikalum arumai....padakavithai - short and simple...good one...

ambi said...

//வேணும்னா ஒரு பேப்பரில் "மொய்" அப்படின்னு எழுதிக் கொடுத்துடறேன், போதுமா?//

@geetha paati, Y paper? let it be a cheque, (he hee adhuvum paper thaane!)

blank cheque kooda periya manasu panni accept pannikaren. :p

கீதா சாம்பசிவம் said...

ப்ளாங்க் செக் கொடுத்துட்டு உடனேயே பாங்கிற்கு ஸ்டாப் பேமென்ட் ஆர்டரும் கொடுத்துடறேன். சரியா? :P ஆசை, தோசை, அப்பளம், வடை, இதிலே எதுவுமே கிடைக்காது!

Bharani said...

//நான் சொன்ன மாதிரி நீ கவிதை எழுதி அனுப்பியிருந்தா முதல் பரிசே வாங்கியிருக்கலாம்:) இப்டி மிஸ் பண்ணிட்டியே சிஷ்யா //....aanaalum ungaluku remba lollu guru...enna vachi comedy panradha oru pozhudhu pokkave pannikitu irukeenga....

Bharani said...

naan ezhudhi anupi irundha...padaipugaloda tharam kuranjidichinu andha potiyave cancel panni irupaanga...

Bharani said...

evlo comment vizhundhu irukune theriyalaye...

Bharani said...

39-a???

Bharani said...

oru 40...appalika varen...

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள் வேதா.
முதல் பரிசைநோக்கிச் செல்லும் பயணத்தின் முதல் அடி இது

நாமக்கல் சிபி said...

வந்துட்டம்ல!

நாமக்கல் சிபி said...

முதல் கவிதை அற்புதம்!

இரண்டாவது கவிதையும் ஓகே!
கொஞ்சம் நீளம் குறைத்திருக்கலாம் என்பது என் எண்ணம்!

சேது விக்ரம் said...

எங்கே செல்லும் இந்தப் பாதை...!
யாரோ யாரோ அறிவாரோ!

கவிதை நல்லா இருக்குதுங்க!

எங்கே செல்லும் இந்தப் பாதை...!
யாரோ யாரோ அறிவாரோ!

பேரழகன் சூர்யா said...

ரெண்டாவது கவுஜை சூப்பர்!

கையக் குடுங்க!

பரிசு பெற்ற கவிதைக்கும் வாழ்த்துக்கள்!

வேதா said...

@சீனு,
நன்றி :)

@கீதா,அம்பி
இன்னும் முடியலியா?:)

@பரணி,
/enna vachi comedy panradha oru pozhudhu pokkave pannikitu irukeenga..../
சரி பீல் பண்ணாத இதெல்லாம் நமக்கு ஜகஜம் தான:)

/...padaipugaloda tharam kuranjidichinu andha potiyave cancel panni irupaanga... /
தன்னடக்கம் இருக்கணும் தான் ஆனா இதெல்லாம் டூ மச் பிரதர் :)

@திராச,
ரொம்ப நன்றி எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் :)

@சிபி,
வாங்க வாங்க :) நம்ம காண்ட்ராக்டை மறக்காம பறந்து வந்து கமெண்ட் போட்டதுக்கு நன்றி :)

ரெண்டாவது கவிதை நீளமாக இருக்க வேண்டுமென்று எண்ணி தான் எழுதினேன் :)

வேதா said...

@சேது விக்ரம்,
ஏங்க இந்த பாட்டை இங்க வந்து பாடறீங்க இதே நம்ம கொடை வள்ளல் சிபி வீட்டுக்கிட்ட பாடினா ஏதாவது பைசா தேறும் ;)

@சூர்யா,
அடுத்த முறை ஜோவையும் கூட்டிக்கிட்டு வாங்க :)

Bharani said...

48...

Bharani said...

49..

Bharani said...

potomla oru 50 :)

வேதா said...

ஹாஃப் அடிச்ச பரணி பேர் சொல்லி நான் ஸ்வீட் சாப்டுக்கறேன்:) பில் கட்ட பயந்து நேத்து பஞ்சாயத்து வராம பின்வாங்கிட்டியே சிஷ்யா:(

மணி ப்ரகாஷ் said...

வெற்றிகளுக்கு வாழ்த்துகள்..

இன்னைக்குத்தான் பார்த்தேன்..அப்புறமா வந்து இன்னும் கமெண்டுரேன்..

இனி உங்கள் பேனாவின் வரிகள் சிலிர்க்கட்டும்..
வெற்றியேனும் பூக்களின்
வருடலில்...

வாழ்த்துகளுடன்

பி,மு.க உண்மைத் தொண்டன்

Nirai said...

Congratulations Veda :) Romba azhagaana kavidhai :)

Picture-um kavidhaikku valu serthirukku :)

Unga padhivugal-oda regular reader Naan :) Romba interesting-aavum azhagaavum ezhadareenga :)

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் வேதா :-)))))))