Tuesday, June 26, 2007

ஒரு ஃபுல்லும், ஒரு குவார்ட்டரும் :)

இந்த பதிவின் தலைப்பை பார்த்து அதன் சிறப்பை எல்லாரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருப்பீர்கள். பலரும் யூகித்தது போல் இது என்னுடைய 125வது பதிவு. இந்த பதிவை மேலும் சிறப்பிக்க என்ன செய்வது என யோசிக்கும் போது தான் நம்ம சூடான் புலி எட்டு பதிவை போட சொல்லி வேண்டிக்(!)கேட்டுக்கொண்டார், நானும் பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டேன்:)(அடிப்பாவி பொய் சொல்றா! மெயிலில் மிரட்டல் வந்தத அப்டியே மறச்சுட்டா) சரி, சரி நடுநடுவில் என் மனசாட்சி கூறும் உண்மையை யாரும் படிச்சிடாதீங்க :)

இந்த எட்டுப்பதிவை ஏற்கனவே எழுதினவங்க எல்லாரும் அவங்க செய்த சாதனைகளை வரிசைப்படுத்தி இருக்காங்க. நாமெல்லாம்(டென்சன் ஆகாதீங்க அவள தான் சொல்லிக்கறா) என்னத்த சாதிச்சோம்னு யோசிச்சு பார்த்தா அதெல்லாம் இந்த எட்டுக்குள்ள அடங்காதுன்னு தெரிஞ்சுப்போச்சு(அய்யோ சாமி இவ அலம்பல் தாங்கலியே) அதனால என் வாழ்க்கையில் இது வரையில் என்னை மகிழ்வித்த, பாதித்த, மாற்றிய சின்ன சின்ன விஷயங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

1. எங்கம்மா நல்லா பாடுவாங்க ஆனா அதை மேலும் வளர்த்துக்கொள்ள அவங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கல. அதனால நானாவது பாட்டுக் கத்துக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க. ஆசைப்பட்டதுல தப்பேயில்ல, அதுக்காக என்னை பாட்டு வகுப்புல சேர்த்து விட்டதும் தப்பே இல்ல, ஆனா எப்ப சேர்த்துவிட்டாங்க? கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது :) நானும் எங்கம்மாவை மதிச்சு பாட்டு வகுப்புக்கு போனேன். இந்த அழகன் படத்துல மம்முட்டி டுடோரியல் காலேஜுக்கு படிக்க போவாரு, அப்ப அங்க இருக்கற மாணவர்கள் அவர ஆசிரியர்னு நினைச்சுப்பாங்க. அந்த மாதிரி தான் நான் பாட்டு கத்துக்கிட்ட கதையும். எனக்கே சிரிப்பா வரும், பின்ன நம்மள சுத்தி நண்டும், சுண்டுமா 5,6 வயசு குழந்தைகள் உட்கார்ந்திருக்கும். எப்படி பாட்டு வரும்? அவங்க பண்ற சேஷ்டைகள் பார்த்து சிரிப்பு தான் வரும்:) ஆனாலும் விடாமுயற்சியா 2 வருடம் பாட்டு கத்துக்கிட்டு என் கல்லூரியில் பாட்டும் பாடினேன். அது தான் எனக்கு முதல் மேடையேறிய அனுபவமும் கூட, சாதனையும் தான் ! (நீ பாடினதை முழுசா உட்கார்ந்து கேட்டாங்களே அது தான் பெரிய சாதனை அதை சொன்னியா நீ?)

2.இதுவும் ஒரு கல்லூரி அனுபவம் தான். நான் முதுகலை படிக்கும் போது(இருபாலாரும் சேர்ந்து படிக்கும் கல்லூரி) நடந்த முதல் வருட தேர்வில் ஒரு பாடத்தில் தான் வெற்றி, மற்ற எல்லா பாடத்திலும் தோல்வி. என் வாழ்க்கையில் படிப்பு விஷயத்தில் நான் சந்தித்த முதல் தோல்வி அது. நான் தேர்வில் தோல்விடைந்து விட்டேன் என்பதை விட என் பெற்றோருக்கு நான் தந்த அதிர்ச்சி, படிப்பை தொடர போவதில்லை என்று சொன்னது தான். இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது கூட எனக்கு நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன்? நன்றாக படிக்கும் நான் ஏன் சரியாக படிக்கவில்லை? தோல்வியை கண்டு ஏன் துவண்டேன்? என்பதெல்லாம் ஒரு புரியாத புதிர் தான். என் வாழ்வில் இன்று வரை எல்லா வகையிலும் நான் அனுபவப்பாடம் பெற்ற நாட்கள் என்றால் அது முதுகலை படித்த அந்த இரண்டு வருடங்கள் தான். தோல்விகளை தாண்டியும் வாழ தெரிந்துக் கொண்டேன் என்றும் சொல்லலாம். (ரொம்ப பீல் பண்றாங்களாம்:))

3. பாட்டு பாடி எல்லாரையும் மகிழ்வித்த நான்(அது உன் பாட்டை கேட்டவங்க சொல்லணும்) நாடகத்திலும் நடித்தேன். முதுகலை படிக்கும்பொழுதில் என் நண்பன் தமிழ்த்துறையில் நடந்த நாடகப்போட்டியில் கலந்துக்கொள்ளலாம் என கூறினான். நாங்களும் தமிழ் மீதிருந்த ஆர்வத்தில் ஒத்துக்கொண்டோம்(அடிப்பாவி அதுவா உண்மை? பரிசுப்பணம் 2000ரூ சொன்னப்புறம் தான ஒத்துக்கிட்ட?). உடனே அவசர அவசரமாக போட்டியில் கலந்துக்கொள்ள பேரை கொடுத்து நாடகமும் எழுதிவிட்டான் என் நண்பன். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே எழுதியிருந்தான், பின்ன என் நண்பனில்லையா?:) (அவனுக்கு மட்டும் இது தெரிஞ்சது இங்க ஒரு கொல விழும்). நாடகத்துல எனக்கு ஒரு நல்ல கதாப்பாத்திரமும் கூட, ஆனா கடைசி நிமிஷத்துல ரொம்ப ஆசைப்பட்டு கேட்டான்னு என் தோழிக்கு அதை விட்டுக்கொடுத்துட்டேன். இதுல டென்சனான என் நண்பனை கூல் டவுன் பண்ணி இன்னொரு கதாப்பாத்திரத்தை எனக்காகவே கொண்டு வந்தோம். அது ஒரு அழகிய தேவதை கதாப்பாத்திரம், நான் ஏற்கனவே தேவதை மாதிரி அழகா இருக்கறதனால மேக்கப் வேண்டாம்னு சொல்லிட்டாங்க :D (அடிப்பாவி தேவதைன்னு சொல்லி வெள்ளை புடவை கட்டிக்கிட்டு தலைய விரிச்சுப்போட்டுக்கிட்டு நீ பேசுனதை பார்த்து பயந்துட்டு தான் உங்க நாடகத்துக்கு பரிசு கொடுத்ததா எல்லாரும் பேசிக்கறாங்க) நான் ஏத்துக்கிட்ட கதாப்பாத்திரம் நாடகத்தில் ரொம்ப நேரம் வரல்லேன்னா கூட நான் பேசிய வசனங்கள் தான் எங்க நாடகத்துக்கு வெற்றி வாங்கி தந்தன (சென்னை 28 படத்துல வர்ர கதாநாயகி பேசின நாலு வரி டயலாக்கை விட கம்மியா பேசிட்டு என்னமோ சீன் போடறா? சரி இவ்ளோ சொன்னியே பரிசுப்பணம் 2000 ரூ இல்ல வெறும் 1000 ரூ தான் அதுலயும் காஸ்ட்யூம் செலவு போக மிச்சத்தை ட்ரீட் கொடுத்தே அழிச்சியே அத சொன்னியா?)

4. வாழ்க்கையில் நாம் மற்றவர் மேல் வைக்கும் அன்புக்கு எவ்வளவு சக்தியுள்ளது என்பதை நான் புரிந்துக்கொண்டது என் பாட்டி(அம்மாவின் அம்மா) உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது தான். எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சை முடிந்து பின் நினைவு திரும்பாமலேயே சிறிது சிறிதாக எங்களை விட்டு என் பாட்டி பிரிந்துக்கொண்டிருந்தார். எங்க குடும்ப மருத்துவர் என்னிடமும் என் அம்மாவிடமும் மட்டும் என் பாட்டி இனி பிழைக்க மாட்டார் என்று சொல்லி விட்டார். அன்று இரவு மருத்துவமனையில் நான் தான் என் பாட்டிக்கு துணையாக இருந்தேன். வேறு யாரும் கூட இருக்க முடியாத நிலைமை. அந்த இரவு என்னால் மறக்கவே முடியாது, மிக தைரியமாய் யார் துணையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒரு புத்தகத்தின் துணையோடு அன்று இரவு முழுவதும் கழித்தேன். சில சமயங்களில் எந்த அசைவும் இருக்காது, பாட்டி என்று கூப்பிட்டால் அதுவரை கண் திறந்துப் பார்த்துக்கொண்டிருந்தவர் அன்று எந்த அசைவுமில்லாமல் இருந்தார். மனதில் பயத்துடனும், கவலையுடனும் அடிக்கடி அவர் மூக்கருகே கை வைத்து சுவாசம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அவரை பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் அவர் எங்களுக்காக செய்தவை அத்தனையும் கண் முன் விரிந்துக் கொண்டே இருக்க பாரமான மனதுடன் கழிந்த அந்த இரவு எனக்கு ஒரு வகையில் எதையும் எதிர்நோக்கும் தைரியம் கொடுத்தது என்றே சொல்லலாம். அதன் பின் ஒரு வாரத்தில் என் பாட்டி மரணமடைந்தார்.


(யப்பா இதுக்கே முடியல இப்பவே கண்ணகட்டுது இன்னும் 4 எழுதனுமா? அய்யோ இந்த பதிவுலக மக்கள கடவுள் தான் காப்பாத்தணும்)


5. நான் 12ஆம் வகுப்பில் படிக்கும் போது ஆங்கிலத்தில் என் திறமையை பார்த்து வியந்த(!) என் ஆங்கில ஆசிரியை கண்டிப்பாக மாநில அளவில் எனக்கு இடம் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார்(நல்ல வேளை அப்டி ஒன்னு நடக்கல உலகம் தப்பிச்சுது) அதே போல் என் வகுப்பில் இன்னொரு பெண்ணை கணித பாடத்தில் எதிர்ப்பார்த்தனர். கடைசியில் எல்லாம் தலை கீழாக நடந்தது. நான் கணிதத்தில் முதலிடமும் , அவள் ஆங்கிலத்தில் முதலிடமும் வாங்கினாள் மாநில அளவில் அல்ல பள்ளி அளவில் தான் :) இதெல்லாம் மாநில அளவில் ரேங்க வாங்கிய நம்ம மக்களுக்கு சாதாரணம் என்றாலும் நான் எதிர்ப்பார்க்காத அளவுக்கு மதிப்பெண் வாங்கியது என்னளவில் சாதனையே (இதுக்கு பள்ளியில் பரிசு கொடுக்கறாங்கன்னு சொல்லி ஒரு லஸ்ஸி குடிக்கற லோட்டா கொடுத்து உன் மானத்த வாங்கினாங்களே அத வசதியா மறைச்சுட்டியே;))

6. என் பெயரை சொன்னவுடன் ஏதோ ஓரளவுக்கு பரிச்சயமாக நம் வலையுலக மக்களுக்கு தோன்றுவதென்றால் அதற்கு காரணம் இந்த வலைப்பூக்கள் தான். இரண்டு வருடங்களுக்கு முன் நீ இவ்வளவு எழுதுவாய், கவிதைகள் என்ற பெயரில் கிறுக்குவாய் என்று யாராவது சொல்லியிருந்தால் கண்டிப்பாக நம்பியிருக்க மாட்டேன். என் தனிமை உலகத்தின் வாயிலாய் இந்த வலைப்பூக்கள் அமைந்திருப்பது என் எழுத்தின் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையும், நீங்க கொடுக்கும் ஊக்கமும் தான்.(நம்பாதீங்க, நம்பாதீங்க இதெல்லாம் பின்னூட்டம் வாங்க சொல்லப்படுகின்ற வார்த்தைகள்:))

7. அடுத்தவர்களுக்கு உதவுகின்ற,எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்கிற, என்னையே ஊக்கப்படுத்தி கொள்கின்ற, செய்தை தவறை தவறாமல் ஒத்துக் கொள்கிற, அலட்சியமாக இருக்கின்ற, கேள்வி கேட்டுக் கொள்கின்ற, புத்திமதி சொல்கின்ற, மன்னிக்கின்ற ஆனால் அதை மறக்காத என என்னை சர்வமும் ஆட்டி படைக்கின்ற என் புத்தியும், மனதும் எனக்கு வாய்த்தது தான். (இது வேற எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே,அடிப்பாவி சிவா தன் பதிவுல எழுதினதை அப்டியே ஜி3 பண்ணிட்ட? நீயெல்லாம் திருந்தவேமாட்டியா?)


8. மக்களே இதெல்லாம் விட நான் பெருமையா நினைக்கறது என் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தான். புத்தகங்கள் தான் என்றுமே நம் தனிமையின் உற்ற துணை என்பதை நான் நம்புகிறேன். ஒரு நூலகம் கூட இல்லாத மிக சாதாரண பள்ளியில்(ஆசிரியர்களை குறிப்பிடவில்லை எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் அனைவரும் அருமையானவர்கள்) படித்த நான் புத்தகங்கள் படிக்கவும், ஓரளவு நன்றாக என் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுத காரணம் எங்கள் நூலகம் தான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இயங்கி வரும் எங்க நூலகம். மிக சிறிய அளவில் தான் இருந்தாலும் எனக்கு அதில் பெருமையே(அது சரி தமிழ் புலமைன்னு ரொம்ப தான் சீன் போடற ஒரு சந்திப்பிழை இல்லாம தொடர்ந்து எழுத முடியுமா உன்னால?)

அப்பாடி ஒரு வழியா எட்டு போட்டாச்சு :) இதுக்கு விதிமுறைகள் வேற இருக்காம் , அது என்னன்னா,

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

பி.கு:
இது என்னோட 125வது பதிவு என்பதால் உங்களையெல்லாம் போனா போகுதுன்னு விட்டுரேன் யாரையும் நான் அழைக்கப்போறதில்ல பொழச்சுப்போங்க :) ஹலோ எங்க கிளம்பிட்டீங்க? கமெண்ட் போட தான? சரி இது ஒரு சிறப்பு பதிவு என்பதால முதல் கமெண்டுக்கு புளியோதரை, சுண்டல் எதுவுமில்ல அதுக்கு பதிலா இந்த பதிவுக்கு வர்ர 125வது பின்னூட்டத்துக்கு என் சார்புல நம்ம நாட்டாமை ஒரு ஃபுல்லும் ஒரு குவார்ட்டரும் வாங்கி தருவாரு :)(இப்டி சொன்னா எல்லாரும் கமெண்டை அள்ளி குவிப்பாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்:)) எங்க நிரூபிங்க , உங்க கும்மி அடிக்கும் திறமையை :)

139 comments:

G3 said...

Naan dhaan modha boniya???

G3 said...

Aaha. super..naanae firstu.. Ini gummiya aarambichida vendiyadhu dhaan :D

G3 said...

Mothama padhiva pathi sollanumna, enna dhaan unga manasaatchi appapo etti paathu nakkal vuttalum padhivu konjam seriousaavae irundhudhu :-)

G3 said...

Solla marandhutaenae.. 125-aavadhu padhivukku vaazhthukkal :-)

G3 said...

//இந்த அழகன் படத்துல மம்முட்டி டுடோரியல் காலேஜுக்கு படிக்க போவாரு, //

Idha padichitu ungala appadiyae karpanai panni paathen :-)) Neenga paatu kathu mudikkara varaikkum andha pasangalaan angayae continue pannaangalannu sollavae illa?

G3 said...

2-vadhu pointla enna solla vareenga? adhukkappuram muzhusa mudicheengala illa paadhiliyae niruthiteengala?? orey confusiona irukku :)

G3 said...

//அது ஒரு அழகிய தேவதை கதாப்பாத்திரம்,//
Ippadi solli ungala emathinavangala naan vanmayaaga kandikkindren.

G3 said...

//மிக தைரியமாய் யார் துணையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒரு புத்தகத்தின் துணையோடு அன்று இரவு முழுவதும் கழித்தேன்.//

Nijamaavae dhairiyam dhaanga ungalukku.

G3 said...

//நான் எதிர்ப்பார்க்காத அளவுக்கு மதிப்பெண் வாங்கியது என்னளவில் சாதனையே //

Idhu eppavumae en vishayathulayum nadakkum. Naan vaangina markkukku naan over sandhoshama iruppen.. (vaanginadhu verum 60-a irundhaalum :P) aanalum suthi irukkaravanga usupethi viduvaanga paarunga.. idhanaalayae en marka naan velila soldradhillai :D

G3 said...

//நம்பாதீங்க, நம்பாதீங்க இதெல்லாம் பின்னூட்டம் வாங்க சொல்லப்படுகின்ற வார்த்தைகள்:))//

Idhu engalukkae theriyumae :P

G3 said...

// புத்தகங்கள் தான் என்றுமே நம் தனிமையின் உற்ற துணை என்பதை நான் நம்புகிறேன்.//

Naanum idhai vazhi mozhigiren :)

G3 said...

Seri 125-aavadhu comment podaravangalukku naats neenga sonna menuva vaangi tharattum. Ippo 1,2,5,8(1+2+5),10(1*2*5)-aavadhu comment pottadhukku ennaikku sukh sagarla treatunnu sollunga.. correcta vandhudaren :-))

வேதா said...

@ஜி3,
என் 125வது பதிவை குத்து விளக்கேற்றி திறந்து வைத்த காயத்ரி வருக ! வருக !

/ Ini gummiya aarambichida vendiyadhu dhaan :D /
ஆமா பின்ன நமக்கு அத விட என்ன வேலை?

/appapo etti paathu nakkal vuttalum padhivu konjam seriousaavae irundhudhu :-) /
நல்ல வேளை ரொம்ப காமெடியா ஆகிடுமோன்னு கவலப்பட்டேன் :)

வேதா said...

/125-aavadhu padhivukku vaazhthukkal :-)/
நன்றி நன்றி :)
/
/Neenga paatu kathu mudikkara varaikkum andha pasangalaan angayae continue pannaangalannu sollavae illa?/

அதெல்லாம் பெரிய காமெடி அவங்கெல்லாம் பாட்டை முழுசா கத்துகிட்டாங்க :D நாந்தான் ரெண்டு வருஷத்தோட நிறுத்திக்கிட்டேன் :D

வேதா said...

/125-aavadhu padhivukku vaazhthukkal :-)/
நன்றி நன்றி :)
/
/Neenga paatu kathu mudikkara varaikkum andha pasangalaan angayae continue pannaangalannu sollavae illa?/

அதெல்லாம் பெரிய காமெடி அவங்கெல்லாம் பாட்டை முழுசா கத்துகிட்டாங்க :D நாந்தான் ரெண்டு வருஷத்தோட நிறுத்திக்கிட்டேன் :D

வேதா said...

/muzhusa mudicheengala illa paadhiliyae niruthiteengala?? orey confusiona irukku :) /
அதெல்லாம் விடமாட்டோம்ல முடிச்சாச்சு :)

/ungala emathinavangala naan vanmayaaga kandikkindren./
ஆமா நான் கூட அவங்கள கண்டிச்சேன் இப்டியெல்லாம் புகழாதீங்கன்னு :)

அய்யனார் said...

/நான் தேர்வில் தோல்விடைந்து விட்டேன்/

/இருபாலாரும் சேர்ந்து படிக்கும் கல்லூரி/

1+1= 2

ஹி..ஹி..ஆட்டோலாம் அனுப்ப முடியாதில்ல :)

ஜி said...

125ஆவது பதிவு, சங்கிலித் தொடர் ஓகே.. அது என்னங்க மொக்கை.. மொக்கைனா என்ன அர்த்தம்? (நான் ரொம்ப இன்னொஸண்ட்ங்க :(( )

ஜி said...

நல்லவேளை நீங்க யாரையும் கூப்டு கடுப்பேத்தல... என்னையும் ஒருத்தர் கூப்டுட்டாங்களேன்னு கடுப்புல சுத்திக்கிட்டு இருக்கேன்..

ஜி said...

// அய்யனார் said...
/நான் தேர்வில் தோல்விடைந்து விட்டேன்/

/இருபாலாரும் சேர்ந்து படிக்கும் கல்லூரி/

1+1= 2

//

ஹி..ஹி.. ஆமாம்ல.. ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன் :))

ஜி said...

நூறு இப்பத்தைதுக்கு என்னோட வாழ்த்துக்கள்...

வேதா said...

/Nijamaavae dhairiyam dhaanga ungalukku./
காயத்ரி ஏதோ ஒரு படத்துல நம்ம உலக நாயகன் சொல்லியிருக்காரு தைரியங்கறது பயமில்லாத மாதிரி நடிக்கறதாம் :D

/idhanaalayae en marka naan velila soldradhillai :D /
ஹிஹி நான் கூட சொல்லலியே :D

/Idhu engalukkae theriyumae :P /
இருந்தாலும் தெளிவுப்படுத்தறது என் கடமை ஆச்சே ;)

நாகை சிவா said...

ஒரு ஃபுல், ஒரு குவாட்டர் = மொத்தம் 125 வாழ்த்துக்கள்...

இன்னும் பல ஃபுல் பல குவாட்டர் அடிக்க வாழ்த்துக்கள்

வேதா said...

ஆகா கூட்டம் களை கட்டிடுச்சு :)

நாகை சிவா said...

அட கொன்னியான்...காலையில் இருந்து தண்ணி காட்டி இப்ப தான் கொஞ்சம் அசந்து இருக்கு பிளாக்கர்....

போஜனத்த முடிச்சுட்டு வந்து வச்சுக்குறேன் மிச்ச கச்சேரிய....

வேதா said...

/Naanum idhai vazhi mozhigiren :) /
அதான் நாங்க சொல்லிட்டோம்ல அப்புறம் என்ன வழி மொழியறது? :)

/ennaikku sukh sagarla treatunnu sollunga.. correcta vandhudaren :-)) /
ஹிஹி அது நாட்டாமையை தான் கேட்கணும் ஏன்னா இந்த அன்பு தங்கச்சி சார்பா அவரு தான் என்னிக்குமே ட்ரீட் தருவாரு :) இது நாட்டமையின் தங்கச்சி தரும் தீர்ப்பு :)

நாகை சிவா said...

//காயத்ரி ஏதோ ஒரு படத்துல நம்ம உலக நாயகன் சொல்லியிருக்காரு தைரியங்கறது பயமில்லாத மாதிரி நடிக்கறதாம் :D//

குருதி புனல்....

பி.சி. ஸ்ரீராம் இயக்கம்....

வேதா said...

நான் சொல்லாமயே வந்து இப்டி பின்னூட்ட மழை பொழிந்த ஜி3 உன் பாசத்தை நினைச்சு உனக்கு பின்னூட்ட நாயகி பட்டம் கொடுக்கறேன் :) ட்ரீட் நாட்டாமை தருவாரு :)

நாகை சிவா said...

//நல்லவேளை நீங்க யாரையும் கூப்டு கடுப்பேத்தல... என்னையும் ஒருத்தர் கூப்டுட்டாங்களேன்னு கடுப்புல சுத்திக்கிட்டு இருக்கேன்.. //

வேதா உங்க பதிவ அப்புறம் திறனாய்வு செய்றேன்...அதுக்கு முன்னால் நம்ம ஜி அண்ணன ஒரு கேள்வி கேட்டுக்குறேன்...

அது என்னய்யா எல்லாரும் ஒரே மாதிரி சீன் போடுறீங்க... உங்களை எல்லாம் கூப்பிடுவதே பெரிய விசயம்... அது புரியாம ஒவரா அலுத்துக்குறீங்களே... உங்களுக்கே இது எல்லாம் டூ டூ டூ மச்ச்ச்ச்ச்சா தெரியல....

வேதா said...

@அய்யனார்,

/1+1= 2

ஹி..ஹி..ஆட்டோலாம் அனுப்ப முடியாதில்ல :) /
என்னங்க 1 + 1=2 சொன்னதுக்கெல்லாம் ஆட்டோ அனுப்ப மாட்டோம் கவலப்படாதீங்க :)

@ஜி,
/மொக்கைனா என்ன அர்த்தம்?/
இதோட நிறுத்தியிருந்தா பரவாயில்ல :)

/ (நான் ரொம்ப இன்னொஸண்ட்ங்க :/(( ) /
இப்டி சொல்லி அதிர்ச்சியடைய வச்சுட்டீங்க :)

/நல்லவேளை நீங்க யாரையும் கூப்டு கடுப்பேத்தல...
இப்டி சொல்லி புலிய /கடுப்பேத்திட்டீங்க பிராண்ட போகுது எஸ்கேப் ஆகிடுங்க :)

/ஹி..ஹி.. ஆமாம்ல.. ஒரு ரிப்பீட்டு போட்டுக்கிறேன் :)) /
ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு கணக்கு சொல்லி தராரு அதுக்கு ஒரு ரிப்பீட்டா? :)

/நூறு இப்பத்தைதுக்கு என்னோட வாழ்த்துக்கள்.../

நன்றி :)

வேதா said...

@சிவா,

/இன்னும் பல ஃபுல் பல குவாட்டர் அடிக்க வாழ்த்துக்கள்/
ரொம்ப நன்றி சிவா :)

/போஜனத்த முடிச்சுட்டு வந்து வச்சுக்குறேன் மிச்ச கச்சேரிய....
வந்து தெம்பா கச்சேரி பண்ணுங்க :)

/குருதி புனல்....

பி.சி. ஸ்ரீராம் இயக்கம்..../
அட அட என்ன ஒரு அப்சர்வேஷன் :)

/அது புரியாம ஒவரா அலுத்துக்குறீங்களே... உங்களுக்கே இது எல்லாம் டூ டூ டூ மச்ச்ச்ச்ச்சா தெரியல.... /
சரி சரி ப்ரீயா விடுங்க :) இப்டி தான் நானும் சொன்னேன் ஆனா போடலியா?:)

சிநேகிதன்.. said...

//இந்த அழகன் படத்துல மம்முட்டி டுடோரியல் காலேஜுக்கு படிக்க போவாரு, //
:-))))

Dreamzz said...

வாழ்த்துக்கள்!!!! வேதா மேடம்!

Dreamzz said...

/எனக்கே சிரிப்பா வரும், பின்ன நம்மள சுத்தி நண்டும், சுண்டுமா 5,6 வயசு குழந்தைகள் உட்கார்ந்திருக்கும்./

என்ன கொடும இது!!! சிங்கம்ல ஏஸ்!

Dreamzz said...

//தோல்வியை கண்டு ஏன் துவண்டேன்?//

விடுங்க! சின்ன வயசுல அப்படி தான் இருப்போம்!

Dreamzz said...

//அது சரி தமிழ் புலமைன்னு ரொம்ப தான் சீன் போடற ஒரு சந்திப்பிழை இல்லாம தொடர்ந்து எழுத முடியுமா உன்னால?)
//

ஹிஹி! சந்திப்பிழை அப்படினா என்ன?? ROFL!

Dreamzz said...

//இது என்னோட 125வது பதிவு என்பதால் உங்களையெல்லாம் போனா போகுதுன்னு விட்டுரேன் யாரையும் நான் அழைக்கப்போறதில்ல பொழச்சுப்போங்க ://

இந்த நல்ல மனசுக்கு இன்னும் இரெண்டு கமெண்ண்டி எக்ஸ்ஸ்ட்ட்ராவே போடலாம்!

Dreamzz said...

எப்ப ட்ரீட் கொடுக்க போறீங்க?

Dreamzz said...

இது எத்தணாவது கமெண்ண்ட்?

வேதா said...

@சிநேகிதன்,
:):)

@ட்ரீம்ஸ்,
/என்ன கொடும இது!!! சிங்கம்ல ஏஸ்!/
இதே தான் நானும் பீல் பண்ணினேன் எங்க விட்டாங்க :)

/ஹிஹி! சந்திப்பிழை அப்படினா என்ன?? ROFL!/
நிசமாவே தெரியாதா? க்,ச்,ப் இதெல்லாம் சரியா வார்த்தைகள் இடையில் போடாமல் விடுவது, எனக்கு அந்த விஷயத்துல எப்பவுமே ப்ராப்ளம் தான் :)

/இந்த நல்ல மனசுக்கு இன்னும் இரெண்டு கமெண்ண்டி எக்ஸ்ஸ்ட்ட்ராவே போடலாம்!/
ஹிஹி நன்றி :)

/எப்ப ட்ரீட் கொடுக்க போறீங்க?/

அதான் சொன்னேனே நாட்டாமை மீண்டும் தாய்நாடு திரும்பும்போது அவர் தருவாரு:)

Bharani said...

adukulla 40 comments-a?????....kalayila post-e illaye....

Bharani said...

guru....congrats on your 125th post....special treat onnum kuduthudunga :)

Bharani said...

melum melum niraya post ezhudhi enna maadhiri niraya peruku ezhudha kathukodukanum....adhu dhaan ennoda aasai :)

Bharani said...

//என் மனசாட்சி கூறும் உண்மையை யாரும் படிச்சிடாதீங்க//.....kandipa adha mattum padikala ;)

Bharani said...

//அவங்க செய்த சாதனைகளை வரிசைப்படுத்தி இருக்காங்க//...sila peru sodhanaigala kooda varisai padithi irundhaanga ;)

Bharani said...

//என்னை மகிழ்வித்த, பாதித்த, மாற்றிய சின்ன சின்ன விஷயங்களை இங்கு பதிவு செய்கிறேன்//....idha post-ku yen andha thalaipu vacheenga....oru kikuka....

Bharani said...

//மம்முட்டி டுடோரியல் காலேஜுக்கு படிக்க போவாரு, அப்ப அங்க இருக்கற மாணவர்கள் அவர ஆசிரியர்னு நினைச்சுப்பாங்க.//.....ezhudhu good evening teacher-nu yaaru sollalaya....angayum guru-nu prove panniteenga paarunga :)

Bharani said...

//நண்டும், சுண்டுமா //....nadhu sari...adhu enna sundu.....nando-da cousin sister-a :)

Bharani said...

//கல்லூரியில் பாட்டும் பாடினேன்//....paatu paadi blog-layum oru post podunga....unga kaloori petra inbam indha blog ulagamum peratum ;)

Bharani said...

//ஒரு பாடத்தில் தான் வெற்றி, மற்ற எல்லா பாடத்திலும் தோல்வி//...idhellam engaluku saadharanam....idhuku poi padipa vituteengale guru...

Bharani said...

//தோல்விகளை தாண்டியும் வாழ தெரிந்துக் கொண்டேன் என்றும் சொல்லலாம்//.....same feelings...

Bharani said...

//பாட்டு பாடி எல்லாரையும் மகிழ்வித்த நான்(அது உன் பாட்டை கேட்டவங்க சொல்லணும்) நாடகத்திலும் நடித்தேன்//.....avvvvvv......kagalakala valli-ya neenga ;)

Bharani said...

//நாடகத்துல எனக்கு ஒரு நல்ல கதாப்பாத்திரமும்//.......stainless steel-a....pithala paathirama ;)

Bharani said...

//என் தோழிக்கு அதை விட்டுக்கொடுத்துட்டேன்//.....imbutu nallavangala neenga....

Bharani said...

//நான் ஏற்கனவே தேவதை மாதிரி அழகா இருக்கறதனால//......avvvvvvv

Bharani said...

//நான் பேசிய வசனங்கள் தான் எங்க நாடகத்துக்கு வெற்றி வாங்கி தந்தன //....oh adha ippadi kooda sollikalaama ;)

Bharani said...

//ட்ரீட் கொடுத்தே அழிச்சியே அத சொன்னியா//.....engala ellam koodave illaye neenga :(

Bharani said...

//மற்றவர் மேல் வைக்கும் அன்புக்கு எவ்வளவு சக்தியுள்ளது//....very true....

Bharani said...

//மக்கள கடவுள் தான் காப்பாத்தணும்//...adhellam remba kustam ;)

Bharani said...

//ஆங்கிலத்தில் என் திறமையை பார்த்து வியந்த(!)//.....oh neenga english guru koodava....idhu therinji irundhu english-la post poda kathukitu irupene.....adada.....

Bharani said...

//லஸ்ஸி குடிக்கற லோட்டா கொடுத்து உன் மானத்த வாங்கினாங்களே //......LOL :)

Bharani said...

//என் எழுத்தின் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையும்//....idhu dhaan nejam....

Bharani said...

//இதெல்லாம் பின்னூட்டம் வாங்க சொல்லப்படுகின்ற வார்த்தைகள்//.....guru ungaluku illadha comments-a.....evlo venum sollunga....oru comment generating algorithm ezhudhiduvom :)

Bharani said...

//எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே//....adhaane....kalayila dhaan padichen.....

Bharani said...

//புத்தகங்கள் தான் என்றுமே நம் தனிமையின் உற்ற துணை என்பதை நான் நம்புகிறேன்//...super guru.....ennakum puthagangal dhaan paadhi nera thunai....santhosamo....thukamo.....puthagam eppozhdhum en kooda irukum......but adukaaga unga range-kellam ennala ezhudha mudiyaadhu....

Bharani said...

//சந்திப்பிழை இல்லாம தொடர்ந்து //....sandi pizhaya....adhu endha sandhu.....villivaakathula iruka ;)

Bharani said...

//அப்பாடி ஒரு வழியா எட்டு போட்டாச்சு//....apada commentum potaachi :)

Bharani said...

//அழைக்கப்போறதில்ல பொழச்சுப்போங்க//....avvvvv

Bharani said...

//வர்ர 125வது பின்னூட்டத்துக்கு என் சார்புல நம்ம நாட்டாமை ஒரு ஃபுல்லும் ஒரு குவார்ட்டரும் வாங்கி தருவாரு//....popular ezhuthalargal maadhiri kadaisila thalapukaaga oru expln :)

Bharani said...

guru andha full-um quarter-um ennaku dhaane ;)

வேதா said...

@பரணி,
சிஷ்யா பயங்கரமா கும்மி அடிச்சுருக்க :) உன் குரு பக்தியை நினைச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :) இப்பவே கண்ணக்கட்டுது வந்து ஒவ்வொன்னுக்கா பதில் சொல்றேன் :)

Balaji S Rajan said...

Vedha,

Yengaiyo Poiteenga..Ponga. Unga mela innum oru 20% impression koodi poyiduchu. Humour kalakkala varudhu.. Very good. I was moved by your experience with your Patti. Your thought of what all she has done for you in those period almost brought me into emotions. Hmmm you had been a good grand daughter as well. Very good. You are really great. A perfect gentle lady with so many talents. Keep it up.

golmaalgopal said...

congrats on ur full n qwatarru ;)) chancae illanga....semma range'ah ezhudhirkkeenga...

ambi said...

congrats veda for the 125 th post. :)

ambi said...
This comment has been removed by a blog administrator.
ambi said...

G3 akka adichchu aadi irukkangale, very good.
naan aporamaa varen. :)

வேதா said...

@பரணி,
/adukulla 40 comments-a/
என்னாலயே நம்ப முடியல :)

/congrats on your 125th post....special treat onnum kuduthudunga :)
நன்றி சிஷ்யா:)
ஸ்பெஷல் ட்ரீட்டா?
இந்த மாதம் குருகுல கல்விக்கு உனக்கு நோ ட்யூஷன் பீஸ் :) ஓகேவா?:)

/ezhudhi enna maadhiri niraya peruku ezhudha kathukodukanum./
என்னால முடியல :)::)

/kandipa adha mattum padikala ;) /
ஹிஹி அது தான் நல்ல புள்ளைக்கு அழகு :)

/....idha post-ku yen andha thalaipu vacheenga....oru kikuka.../.
எல்லாம் ஒரு வெளம்பரந்தேங் :)

/ezhudhu good evening teacher-nu yaaru sollalaya..../
:) :)

/angayum guru-nu prove panniteenga paarunga :) /
இது என் பாட்டு டீச்சருக்கு தெரிஞ்சுது ரொம்ப வருத்தப்படுவாங்க:)(என்ன விட அந்த குழந்தைகள் நல்லா பாடும்:))

i/dhuku poi padipa vituteengale guru.../
அய்யோ இல்ல இல்ல இல்லவே இல்ல நான் படிப்பை விடவேயில்ல எல்லா பேப்பரையும் மொத்தமா எழுதி பாஸ் பண்ணிட்டோம்ல :) அதெல்லாம் முடிவு பண்ணிட்டா முடிச்சுடுவோம் :)

/same feelings... /
ஹிஹி அதனால தான் நீ என்னோட சிஷ்யனா இருக்க :)

/.....avvvvvv......kagalakala valli-ya neenga ;)/
இல்லியே நான் வேதவல்லி ;)

வேதா said...

/stainless steel-a....pithala paathirama ;)/
ஹும் வெள்ளி பாத்திரம் :)

/imbutu nallavangala neenga..../
அப்டி தான் எல்லாரும் பேசிக்கறாங்க ;)

/......avvvvvvv/
பாரு உண்மை உன்ன எப்டி பீல் பண்ண வைக்குது?:)

/.....evlo venum sollunga....oru comment generating algorithm ezhudhiduvom :)/
அட அட நீயல்லவா நண்பன்:)

/adhaane....kalayila dhaan padichen...../
ஹிஹி படிச்சுட்டியா?:)

/....oh adha ippadi kooda sollikalaama ;)/
இப்டி தான் சொல்லிக்கணும் :)

/ neenga english guru koodava....idhu therinji irundhu english-la post poda kathukitu irupene.....adada...../
அடப்பாவி நம்பிட்டியா ;)

வேதா said...

/santhosamo....thukamo.....puthagam eppozhdhum en kooda irukum....../
அதே அதே தான் எனக்கும் :)

/sandi pizhaya....adhu endha sandhu.....villivaakathula iruka ;)/
அடப்பாவி அது வில்லிவாக்கத்துலயும் இல்ல சைதாப்பேட்டையிலும் இல்ல ;)

/...popular ezhuthalargal maadhiri kadaisila thalapukaaga oru expln :) /
:):)

/guru andha full-um quarter-um ennaku dhaane ;)/

நீ 125வது கமெண்ட் போட்டா அது உனக்கு தான் :)

வேதா said...

@பாலாஜி,

/Unga mela innum oru 20% impression koodi poyiduchu./
இதை தக்க வைக்க ரொம்ப போராடனுமே :)

/Humour kalakkala varudhu../
உங்களிடம் வந்த இந்த பாராட்டே போதும் :)

/ A perfect gentle lady with so many talents. Keep it up. /
இதுவும் எனக்கு அதிகமே :) நன்றி :)

@கோபால்,
/congrats on ur full n qwatarru ;)) chancae illanga....semma range'ah ezhudhirkkeenga.../
நன்றி :) நன்றி :)

@அம்பி,
/congrats veda for the 125 th post. :) /
நன்றி நாரதரே :) சீக்கிரம் வந்து நீங்களும் அடிச்சு ஆடுங்க :)

My days(Gops) said...

adra adra neengalum 8 aataaama ...
ok ok

My days(Gops) said...

1. //நானும் எங்கம்மாவை மதிச்சு பாட்டு வகுப்புக்கு போனேன்.//

adra adra, ungalukku silai vaikanumnga.. ivlo nallavanga irukeengaley )

//என் கல்லூரியில் பாட்டும் பாடினேன். அது தான் எனக்கு முதல் மேடையேறிய அனுபவமும் கூட, சாதனையும் தான் //

enna paatu paaduneenganu sollavey illa...

My days(Gops) said...

2. // இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது கூட எனக்கு நான் ஏன் அப்படி நடந்துக்கொண்டேன்? நன்றாக படிக்கும் நான் ஏன் சரியாக படிக்கவில்லை?//

naan ninaikiren, neenga appo Sithi TV serial vudaama paaarpeenganu.... adhu koooda oru reason ah irundhu irukalam :)

//தோல்விகளை தாண்டியும் வாழ தெரிந்துக் கொண்டேன் என்றும் சொல்லலாம்//
:)..super ponga....

My days(Gops) said...

3. //சென்னை 28 படத்துல வர்ர கதாநாயகி பேசின நாலு வரி டயலாக்கை விட கம்மியா பேசிட்டு என்னமோ சீன் போடறா?//

he he appadi ennanga dialogue pesuneeenga?

" parisu panam engalukkey thandhudunga appadinaah?

My days(Gops) said...

5. sare sare idhuku neeeenga innum treat kodukavey illaiey.... mmmm

My days(Gops) said...

6. // நம்பாதீங்க, நம்பாதீங்க இதெல்லாம் பின்னூட்டம் வாங்க சொல்லப்படுகின்ற வார்த்தைகள்:))//

ada ennanga ippadi solliteeeenga,
thiramai engu irundhaalum thatti kodupadhey engal katchi'in nokkam..

My days(Gops) said...

7. //அடுத்தவர்களுக்கு உதவுகின்ற,எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்கிற, என்னையே ஊக்கப்படுத்தி கொள்கின்ற, செய்தை தவறை தவறாமல் ஒத்துக் கொள்கிற, அலட்சியமாக இருக்கின்ற, கேள்வி கேட்டுக் கொள்கின்ற, புத்திமதி சொல்கின்ற, மன்னிக்கின்ற ஆனால் அதை மறக்காத என என்னை சர்வமும் ஆட்டி படைக்கின்ற என் புத்தியும், மனதும் எனக்கு வாய்த்தது தான்./

adra adra, ivlo irukaa, appo ungalukku silai confirmed... :)

//அடிப்பாவி சிவா தன் பதிவுல எழுதினதை அப்டியே ஜி3 பண்ணிட்ட? நீயெல்லாம் திருந்தவேமாட்டியா?)//
ha ha ha, ada g3 pugal valarga,vaazhga... idhelam sagajam vedha.... kandukaadheeenga...

My days(Gops) said...

8. //மக்களே இதெல்லாம் விட நான் பெருமையா நினைக்கறது என் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தான்//

idha thaaan naaanga paaarthomey...
neenga mattumah, innoruthavanga koooda irukaaanga.... he he he...


//சீன் போடற ஒரு சந்திப்பிழை இல்லாம தொடர்ந்து எழுத முடியுமா உன்னால?)//
ada, neeengaley ippadi sollum bodhu, naaanga ellam ennanga solluradhu ?

My days(Gops) said...

8 pathi post la

88 pottutenaa... adra adra....
oru apple juice mattum parcel anupidunga....

My days(Gops) said...

//அதுக்கு பதிலா இந்த பதிவுக்கு வர்ர 125வது பின்னூட்டத்துக்கு என் சார்புல நம்ம நாட்டாமை ஒரு ஃபுல்லும் ஒரு குவார்ட்டரும் வாங்கி தருவாரு :)(//

nalla soneeenga ponga..

G3 ipa theridhu nee yen pullaiyaaru suzhi pottu boni ah aaarambichanu...

vaaazhga fullum valagar quarterum....

me the ejcape now..... edho ennaala mudincha nankodai ah unga 125 spl ku koduthutu poren nga.. varata.... :)

G3 said...

@Bharani

//kagalakala//
Idha paathadhum ennada bharaniyum rajini stylelea lakalakalakalakanu solla aarambichitaaronnu nenachen :P

//kagalakala valli//
appalikka adutha wordum sethu paathadhum dhaan thala sagalakala villinnu solla vandhadha spelling mistakeoda typitaarunnu purinjikkiten :D

** Narayana Narayana **

Anonymous said...

avvvvvvvvvv.........sentiyo senti post..ithula laafter track mari sidela kaamedi komments vera..kalkiteenga veda..

~gils

gils said...

avvvvvvvvvv.........sentiyo senti post..ithula laafter track mari sidela kaamedi komments vera..kalkiteenga veda..

நாகை சிவா said...

//நடந்த முதல் வருட தேர்வில் ஒரு பாடத்தில் தான் வெற்றி, மற்ற எல்லா பாடத்திலும் தோல்வி. என் வாழ்க்கையில் படிப்பு விஷயத்தில் நான் சந்தித்த முதல் தோல்வி அது.//

முதல் தடவை அப்படி தான் இருக்கும், ஆனா போக போக பழகிடும்... ;-)

அரியர் வைக்கதாவன் அரை மனிதன்....

நாகை சிவா said...

//அது ஒரு அழகிய தேவதை கதாப்பாத்திரம், நான் ஏற்கனவே தேவதை மாதிரி அழகா இருக்கறதனால மேக்கப் வேண்டாம்னு சொல்லிட்டாங்க//

சத்திய சோதனை....

நாகை சிவா said...

//(யப்பா இதுக்கே முடியல இப்பவே கண்ணகட்டுது இன்னும் 4 எழுதனுமா? அய்யோ இந்த பதிவுலக மக்கள கடவுள் தான் காப்பாத்தணும்)//

இந்த கொடுமையை எல்லாம் பார்க்க கூடாது என்று தான் அவன் கல் ஆனானோ...

நாகை சிவா said...

//நான் 12ஆம் வகுப்பில் படிக்கும் போது ஆங்கிலத்தில் என் திறமையை பார்த்து //

பீட்டர்... யூ டூ.......

நாகை சிவா said...

//இது வேற எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே,அடிப்பாவி சிவா தன் பதிவுல எழுதினதை அப்டியே ஜி3 பண்ணிட்ட? நீயெல்லாம் திருந்தவேமாட்டியா?//

அதானா... கொஞ்சம் வார்த்தைகளையாவது மாத்தி போடக் கூடாதா....?

நாகை சிவா said...

//அது சரி தமிழ் புலமைன்னு ரொம்ப தான் சீன் போடற ஒரு சந்திப்பிழை இல்லாம தொடர்ந்து எழுத முடியுமா உன்னால?//

இவங்க கிட்ட ஜாக்கிரதை இருக்கனும் போல... இல்லனா சந்தி சிரிச்சிடும் போல இருக்கு....

நாகை சிவா said...

///இந்த பதிவுக்கு வர்ர 125வது பின்னூட்டத்துக்கு என் சார்புல நம்ம நாட்டாமை ஒரு ஃபுல்லும் ஒரு குவார்ட்டரும் வாங்கி தருவாரு :)(//

125 க்கு ஒரு ஃபுல், ஒரு குவாட்டர் வொர்க் அவுட் ஆகாது.

ஒரு ஃபுல் - 750ml
ஒரு குவாட்டர் - 180ml

930ml தான் ஆகுது.... ஆக 93 வது கமெண்ட் போட்டவங்களுக்கு இதை கொடுங்க

125 கமெண்டுக்கு 125 மில்லி கொடுக்கனும் இல்ல 1.25 லிட்டர் கொடுக்கனும்.

1.25 க்கு ஒரு ஃபுல் + 2 குவாட்டர், கூட ஒரு கட்டிங்கும், ஒரு பெக்கும் கொடுத்தா கணக்கு கிட்டதட்ட சரியா வரும்....

நாகை சிவா said...

நம்ம பேச்சுக்கு மதிப்பு அளித்து பதிவு போட்டதற்கு ரொம்ப மகிழ்ச்சி.

சதம் ஆச்சா?

Gopalan Ramasubbu said...

வேதா, உங்களோட எட்டுக்கு ஒரு ஷொட்டு.:)...ரெட் கலர்ல எழுதியிருக்கும் மேட்டர இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதியிருக்கலாம்:P

Loga said...

am a long silent reader of ur blogs..superaa eluthi irukkinga...then seekiramavey oru pattu paaadi pathivaaa potuta vendiyathuthaaney :)

கீதா சாம்பசிவம் said...

எனக்கு வேண்டாம் ஃபுல்லும் க்வார்ட்டரும், நேத்து பார்த்தால் ஒண்ணுமே இல்லை, அதுக்குள்ளே போஸ்ட் போட்டு கமென்ட் வேறே செஞ்சுரியா? புகையுதே! புகையுதே! :))))))))

கீதா சாம்பசிவம் said...

125வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வேதா!

Anonymous said...

adada 103 thaan agudha? epdi 125 varai wait panradhu therilaiye :-( vaazhthukal vedha! college serndhu paatu class-rotfl :-)

-kodi

Anonymous said...

@gops:
ipdi engalai kindal pannite irundha, unga samsaram puthagathai kizhaye vekka mattanga parunga!

konja nerathuku appalikka inoru round varren!

-kodi

Bharani said...

evlo comment vandhu irukune theriyalaye....

Bharani said...

kuthu madhipa oru 20 comment pota adichidalaama????

Bharani said...

//இந்த மாதம் குருகுல கல்விக்கு உனக்கு நோ ட்யூஷன் பீஸ் :) ஓகேவா?:)//...double okie....aana indha thadava english sollitharanum ;)

Bharani said...

//பேப்பரையும் மொத்தமா எழுதி பாஸ் பண்ணிட்டோம்ல :) அதெல்லாம் முடிவு பண்ணிட்டா முடிச்சுடுவோம் //...Cool :)

Bharani said...

//இல்லியே நான் வேதவல்லி //....che...just miss ;)

Bharani said...

//அடப்பாவி அது வில்லிவாக்கத்துலயும் இல்ல சைதாப்பேட்டையிலும் இல்ல //....appa anna nagar fruit shop pakkathulaya ;)

Bharani said...

//நீ 125வது கமெண்ட் போட்டா அது உனக்கு தான் //....poduren.....poduren...125 enna 200 poduren....rendu full venum ;)

Bharani said...

@g3...//sagalakala villinnu solla vandhadha spelling mistakeoda typitaarunnu purinjikkiten //....enna oru villathanam....guru appadi ellam ungala solvena...neenga sagalakala valli dhaan ;)

Bharani said...

//அரியர் வைக்கதாவன் அரை மனிதன்//....enna oru thatuvam.....

Bharani said...

adada..innum oru 9 pota 125-a???

Bharani said...

naduvula yaarum ulla poorama irukanum kadavule...

Bharani said...

119 dhaane...

Bharani said...

apa idhu 120 :)

Bharani said...

oru full-ukaaga bharani ippadi panraanenu yaarum thappa nenaika koodathu...

Bharani said...

guru 125 post potrukaanga...edho nammla mudinja sevai ;)

Bharani said...

123..

Bharani said...

124...

Bharani said...

adichachi 125 :)

Bharani said...

appada....guru naan utharava vaangikaren.....neenga innum niraya post podanum..naanga vandhu comment-a poduromnu sollitu...jute ;)

வேதா said...

நீயல்லவோ சிஷ்யன் :) உனக்கு புல் அண்ட் எ குவார்ட்டர் வித் சைட் டிஷ் ஆன் தி வே :)

Bharani said...

//உனக்கு புல் அண்ட் எ குவார்ட்டர் வித் சைட் டிஷ் ஆன் தி வே//....thank u...thank u :)

Raji said...

125 vadhu pathivaa vazhthukkal Veda :)

Raji said...

Superaa anubavangal moolama neenga kathukitta vazhkai paadathayum pottu superaa soli irukeenga :)

மு.கார்த்திகேயன் said...

vaazhthukkal vethaa..
125 pathivukal pottu, athoda oru chirappaana 8-aiyum pottu nalla ezhuthu irukkeenga kopacha

மு.கார்த்திகேயன் said...

ithuvaraikkum adikkadi varamudiyala.. inime ellaa pathivukku karektaa vanthuduren vethaa..

menmelum valara vaazhthukkal

வேதா said...

@ My days(Gops),
/adra adra neengalum 8 aataaama .../

நான் மட்டுமா இந்த பதிவுலகமே ஆடுது :)


u/ngalukku silai vaikanumnga.. ivlo nallavanga irukeengaley )/
வைக்கறது தான் வைக்கறீங்க ஒரு தங்க சிலையா வச்சுருங்க :)

/enna paatu paaduneenganu sollavey illa.../
ஏதோ சாமி பாடு தான் :)

/ neenga appo Sithi TV serial vudaama paaarpeenganu..../
அடச்சே சீரியல் அதுவும் சித்தி? சான்ஸே இல்ல அப்டி தொடர்ந்து பார்த்திருந்தா பைத்தியம் தான் பிடிச்சுருக்கும் :)

/" parisu panam engalukkey thandhudunga appadinaah? /

சரி சரி அத இப்டி பப்ளிக்கா சொல்லிக்காட்டணுமா ? :)

/treat kodukavey illaiey.... mmmm/
என்னது என்ன சொல்றீங்க ட்ரீட்டா அப்டின்னா என்னங்க? ;)

/thiramai engu irundhaalum thatti kodupadhey engal katchi'in nokkam../
தட்டி கொடுப்பதா இல்ல தட்டி வைக்கறதா ? ஆகா உங்க கிட்ட கொஞ்சம் சாக்கிரதையா தான் இருக்கணும் :)

/ada g3 pugal valarga,vaazhga... idhelam sagajam vedha.... kandukaadheeenga.../
ஹிஹி அதை சிவா கிட்ட போய் சொல்லுங்க நான் காப்பி பேஷ்ட் பண்ணிட்டேன்னு அவருக்கு தான் கடுப்பு :)

/neenga mattumah, innoruthavanga koooda irukaaanga.... he he he.../
ஆமா கேடிய தான் சீசீ கொடிய தான் சொல்றீங்க? :)

/oru apple juice mattum parcel anupidunga.... /
யாருப்பா அது கோப்ஸுக்கு ஒரு ஆப்பிள் ஜுஸ் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் :)

/edho ennaala mudincha nankodai ah unga 125 spl ku koduthutu poren nga.. varata.... :)/
நன்றி நன்றி நன்றி :):)

வேதா said...

@கில்ஸ்,
/ithula laafter track mari sidela kaamedi komments vera..kalkiteenga veda.. /
வாங்க கில்ஸ் உங்க பாராட்டுக்கும் என் நன்றிகள் :)

@சிவா,
/அரியர் வைக்கதாவன் அரை மனிதன்.... /
என்ன ஒரு தத்துவம் :)முன் அனுபவமோ? ;)

/சத்திய சோதனை..../
ஆமா என்ன இதுக்கு மேலயும் அழகா காட்ட முடியுமான்னு எல்லாருமே திகைச்சு நின்னுட்டாங்க ;)

/இந்த கொடுமையை எல்லாம் பார்க்க கூடாது என்று தான் அவன் கல் ஆனானோ.../
நீங்க எழுதின கொடுமையை பார்த்தவுடனே கடவுள் கல் ஆகிட்டான் ;)

/பீட்டர்... யூ டூ......./
என்னை பற்றி தெரிந்தும் இப்டி ஒரு பீட்டர் கேள்வி கேட்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன் :)

/கொஞ்சம் வார்த்தைகளையாவது மாத்தி போடக் கூடாதா....?/

அப்டியே போடப்போறதா தான் உங்க கிட்ட சொன்னேன் நாங்கெல்லாம் சொன்னா சொன்னது தான் மாத்த மாட்டோம் :)

ஃபுல்லுக்கும் குவார்ட்டருக்கும் தாங்கள் கொடுத்த விளக்கம் என் ஞானக்கண்களை திறந்து விட்டது குருவே ;) இந்த அறியா குழந்தை செய்த பிழையை மன்னிச்சு விட்ருங்க ;)

/நம்ம பேச்சுக்கு மதிப்பு அளித்து பதிவு போட்டதற்கு ரொம்ப மகிழ்ச்சி./

மதிப்பு கொடுத்தடதா நினைக்கறீங்களா ?:)

வேதா said...

@கோப்ஸ்,
/ரெட் கலர்ல எழுதியிருக்கும் மேட்டர இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதியிருக்கலாம்:P/

எதுக்கு சொந்த செலவுல சூனியம் வச்சுக்கணும் ? ;)

/வேதா, உங்களோட எட்டுக்கு ஒரு ஷொட்டு.:)./
நன்றி :)

@லோகா,
ரொம்ப நன்றிங்க தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து உங்க ஆதரவை காட்டுங்க :) நான் பாடி இங்க போடனும்னா அப்புறம் பதிவுலகமே ஆடிப்போயிடும் பரவாயில்லியா ? :)

@கீதா,
/அதுக்குள்ளே போஸ்ட் போட்டு கமென்ட் வேறே செஞ்சுரியா? புகையுதே! புகையுதே! :)))))))) /

ஹிஹி சீக்கிரம் தண்ணி ஊத்தி அணையுங்க :)

/125வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வேதா!/

@கொடி,
epdi 125 varai wait panradhu therilaiye :-( vaazhthukal vedha! college serndhu paatu class-rotfl :-)

நீ லேட்டா வந்துட்ட 125வது கமெண்ட் உன் கை விட்டு போயிடுச்சு :)

எல்லாம் தங்கள் ஆசிர்வாதம் தான் :) நன்றி :)

@பரணி,
/double okie....aana indha thadava english sollitharanum ;)/
இத நீயும் நம்பிட்டியா? இவ்ளோ அப்பாவியா இருக்கியே சிஷ்யா :)

/appa anna nagar fruit shop pakkathulaya ;)/
ஆகா ஒரு முடிவோட தான் கிளம்பிட்ட போலிருக்கு ;)

/enna oru villathanam....guru appadi ellam ungala solvena...neenga sagalakala valli dhaan ;)/
நன்றி சிஷ்யா நன்றி :)

@ராஜி,
நன்றி :)

@கார்த்தி,,
தாங்கள் தலைவர் என்பதாலும் தலைவர் என்றாலே தாமதமாக வரலாம் என்பதாலும் உங்கள விட்டுர்ரேன் :) இனிமே ரெகுலரா வரணும் சொல்லிட்டென் :0
வாழ்த்துக்கு நன்றி தலைவரே :)

மணி ப்ரகாஷ் said...

வாழ்த்துகள் து.மு.

படிச்சுட்டு வரேன்... எல்லாம் டபுள் டபுளா தெரியுது...


புல்+குவார்ட்டரா..தனிய வேற அடிக்க வேண்டியதா இருக்கா,,,

முடியலலலா..


ஆமா இனிமேல் அடிக்கடி அடிக்கடி
புல் குவார்ட்டர் குடுக்க
எல்லாம் வல்ல இறைவன் "குவார்ட்டர்" கோவிந்தன் அருள் புரியட்டும்ம்ம்

Ravi said...

Hello Veda, neenga post potta anikke vandhu paduchutten but ennavo konja naala office-lerndhu comment poda mudiyala plus konjam aanis vera.

Ella points-um arumai, adhilum second point unmaiyileye ellorukkum oru inspiration-a irukkum.

But konjam kooda post-kku sambandam illaama ippadi oru thalaippai koduthirukkengalae??

வேதா said...

ப்ரகாஷ் ஏன் இப்டி தலைமறைவாகிட்டீங்க :) சுறுசுறுப்பா ஒரு விறுவிறுப்பான காலண்டர் கவிதை எழுதுங்க பார்ப்போம் :)

@ரவி,
வாங்க வாங்க இன்னிக்கு வரைக்கும் பார்த்துட்டு நாளைக்கு வந்து உங்களுக்கு அழைப்பு விடுக்கனும்னு நினைச்சேன் :) அதுக்குள்ள வந்துட்டீங்க :) இது என்னுடைய 125வது பதிவு என்பதால் அப்டி ஒரு கிக்கான தலைப்பு :)
நன்றி :)

ரசிகன் said...

//இதுக்கு பள்ளியில் பரிசு கொடுக்கறாங்கன்னு சொல்லி ஒரு லஸ்ஸி குடிக்கற லோட்டா கொடுத்து உன் மானத்த வாங்கினாங்களே அத வசதியா மறைச்சுட்டியே;))///

ஹா...ஹா..வி.வி.சி சூப்பரு..
அதிலும் உங்க உள் மனதின் குரல் சூப்பரோ சூப்பரு..:))