Monday, July 02, 2007

நேற்றே எழுதியிருக்க வேண்டியது ..

நேற்று மருத்துவர் தினம் என்று தினசரியில் போட்டிருந்தார்கள். உடனே எங்கள் குடும்ப மருத்துவர் திரு.பஞ்சாட்சரம் செல்வராஜன் அவர்களின் நினைவு தான் வந்தது. இவர் எங்கள் குடும்ப மருத்துவர் என்பதை விட குடும்ப நண்பர் என்றே சொல்லலாம். மருத்துவர் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஊசி, மருந்து வாடை, வாடிய முகங்கள், மிகவும் சீரியஸான டாக்டர் முகம். ஆனால் எங்கள் மருத்துவர் அவ்வளவு எளிதாக ஊசி போட்டு விடமாட்டார். முடிந்த வரை மாத்திரைகளை பயன்படுத்திவிட்டு தேவையென்றால் மட்டுமே ஊசியின் உதவியை நாடுவார். எனவே சிறு குழந்தைகளிடையே இவர் மிகவும் விரும்பப்படுபவர். வசதியில்லாதவர்களின் நிலை உணர்ந்து உதவி புரிபவரும் கூட.


ஏதாவது உடல் நிலை சரியில்லையென்று இவரை பார்க்க செல்லும் பொழுது உள்ளே நுழைந்தவுடன் இவர் சிரித்த முகமே எங்கள் உடல் உபாதையை மறக்கடித்துவிடும். ஏதாவது நகைச்சுவையாக பேசிக்கொண்டே இருப்பார். இவரும் என்னை போல ஒரு புத்தகப்பிரியர். எங்க நூலகத்தில் உள்ள புத்தகங்களை பற்றி பேசுவோம், சில இலக்கிய இதழ்களை எனக்கு படிக்க கொடுத்து உதவுபவரும் கூட. குடும்ப நண்பர் என்ற முறையில் அவருடைய செல்பேசியின் எண்ணை எங்களுக்கு கொடுத்த அவரை செல்லில் அழைத்து மருந்து கேட்கும் பழக்கமே எங்களுக்கு கிடையாது, முக்கியமாக நானும் என் தம்பியும் அவரை சந்திக்க செல்லும் போது எல்லாரையும் போல வரிசையில் தான் செல்வோம். ஒரு முறை என் தந்தை நாங்கள் அவரை செல்லில் அழைத்து தொந்தரவு செய்ய மறுத்ததை குறிப்பிட்ட போது அவர்களும் என் பிள்ளைகள் போல தான் எனவே தாராளமாக தொடர்பு கொள்ளலாம் என கூறியது அவருடைய பெருந்தன்மைக்கும் அன்பிற்கும் ஒரு அழகிய சான்று.


அது மட்டுமல்ல இவர் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட. இவர் எழுதிய பல சிறுகதைகள் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன. அவற்றை தொகுத்து "மகாலி என்னும் மகாலிங்கம்" என்று ஒரு புத்தகமாக கூட வெளியிட்டுள்ளார். மருத்துவ துறை சார்ந்த "வியத்திகு சிறுநீரகங்கள்" என்ற புத்தகமும் எழுதி வெளியிட்டார். சிரித்த முகத்துடனும், அந்தஸ்து பேதமின்றி அனைவரையும் மதிக்கும் நற்பண்புடனும், நட்புறவுடனும், சமூக சிந்தனையுடனும், அனைத்தையும் விட சிறந்த மனிதராகவும், மருத்துவராகவும் இருக்கும் எங்கள் மருத்துவருக்கு நேற்றே மருத்துவ தின வாழ்த்துக்களை என் செல்பேசியிலிருந்து குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டாலும் இந்த பதிவின் மூலம் என் வாழ்த்துக்களையும்,நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

21 comments:

Bharani said...

naan dhaane first...

Bharani said...

ippadi oru doctor-a....me also joining u in wishing him a happy doctor's day :)

G3 said...

Asathal post. Latea pottalum adhodha suvai aaradhu :-)) Avarukkum matha ella doctors happy doctors day :-))

நாகை சிவா said...

நல்ல பதிவு வேதா....

வாழ்த்துக்கள் அவருக்கும், இந்த பதிவை போட்ட உங்களுக்கும்....

இன்னும் அவர் செய்து இருக்கும் மருத்துவ சேவைகளை விவரித்து எழுதி இருக்கலாம்.

முடிந்தால் இந்த பதிவையும், கமெண்ட்ஸையும்(கும்மி ய விலக்கிட்டு) பிரிண்ட் எடுத்து காட்டுங்க...

ambi said...

technically third. :)

post padichuttu varen irunga.

ambi said...

Nice Docter! surpriseaa irukku, intha kaalathula, ippadi oru nallavara?nu... :)

//முக்கியமாக நானும் என் தம்பியும் அவரை சந்திக்க செல்லும் போது எல்லாரையும் போல வரிசையில் தான் செல்வோம்.//

thodaa, blogla thaan ammani deputy CM. ithellaam tooo muchooo much. sollitten. :p

Sumathi. said...

ஹாய் வேதா,

இத படிக்கும் போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு, இப்படி கூட ஒரு டாக்டர் அதுவும் இந்த காலத்துல இருக்காருன்னா கண்டிப்பா நாம அவருக்கு வாழ்த்து சொல்றதுல எந்த தப்புமே இல்லை. Im very proud of him. if possible convey my wishes too.

Dreamzz said...

நீங்க சொல்லறதெல்லாம் பாத்தா ரொம்ப நல்ல மனிதர் போல தான் தெரியுது!

Dreamzz said...

so, add me too in wishing him a happy doctors day!

Dreamzz said...

vanthathukku ithu extra ! :)

பொற்கொடி said...

doctor mamaku vaazhthukkal! :-)

Raji said...

Adra adra sakkai..super doctor nga Veda...
Naanum wish panninaenu sollidunga:)

Raji said...

//முடிந்தால் இந்த பதிவையும், கமெண்ட்ஸையும்(கும்மி ய விலக்கிட்டு) பிரிண்ட் எடுத்து காட்டுங்க//

Aamamnga Veda ..Puli solluradhu maadhrii senjeengana..Nalla irukkum :_)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆமாம் டாக்டர் நல்லா சிரிச்சுதான் பேசுவார் ஆன பேஷண்ட்தான் சிக்கல்

Balaji S Rajan said...

There are plenty of good Doctors like this. Convey my wishes to him too. Very glad to hear that he is human and has interest in Tamil literature too.

மு.கார்த்திகேயன் said...

நல்ல நினைவுகள் வேதா.. இது போன்ற மருத்துவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.. நானும் வாழ்த்துகிறேன் வேதா

கீதா சாம்பசிவம் said...

எப்போப் பதிவு போடறீங்கன்னே தெரியறதில்லை. இருந்தாலும் உங்கள் மருத்துவருக்கு என்னோட வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும்.

Priya said...

ஆஹா. மருத்துவர் தினத்துக்கு உங்க டாக்டர பத்தி போஸ்ட்டா. இதுலேருந்தே தெரியுதே அவர் எந்த அளவுக்கு இனிமையானவர்னு.

Priya said...

அப்புறம் உங்க 125வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

Gopalan Ramasubbu said...

மனுஷ்ய புத்திரனோட கவிதைப் புத்தகம் படிக்கறத நீங்க சொன்ன ரெண்டு பேர்ல ஒருத்தர் இவர் தானா?

Arunkumar said...

neenga oru post dedicate pannumbodhe theriyudhu avaru evalo nallavarunnu.. oru maruthuvar nalla ezhuthaalara irukkuradhu aacharyam thaan...

joining u in wishing him (belated) Doctor's day wishes :)