Monday, July 23, 2007

தெய்வத்தின் தரிசனம் !

ரொம்ப நாளா எழுதறேன்னு சொல்லி இழுத்தடிச்சு இனி ஏமாத்த முடியாதுன்னு தெரிஞ்சுப்போச்சு :) காயத்ரி வேற அவ வலைப்பக்கத்துல என் கவிதைய போட்டு எனக்கு ஓசில வெளம்பரம் கொடுத்துட்டா, அப்புறமும் அவ கொடுத்த கவிதை(!) டேகை எழுதாம விட்டா அது கேவலமா போயிடும், அதனால் இதோ, நம்ம தத்துவ ஞானி தொடங்கி வைத்த "தேவதை கனவுகள்", அடுத்த அத்தியாயமாய் காயத்ரியிடம் "மன்னவன் வந்தானடி தோழி" என மலர்ந்து இங்கு "தெய்வத்தின் தரிசனம்" எனத் தொடர்கிறது. இதையடுத்து எங்கு இக்கவிதை மலரப்போகிறது என பிறகு பார்க்கலாம் :)இப்ப கவிதைக்கு போகலாமா? :)

(இது காயத்ரி எழுதிய கவிதையின்(!) இறுதி வரிகள்)

இன்று மாலையும்
கோவிலில் சந்திக்க சொல்லியிருக்கிறான்
முக்கியமான விஷயம்
பேச வேண்டும் என்று
அது என்னவாக இருக்கும்
என்று அறிந்திருந்தாலும்
ஆவலுடன் கிளம்புகிறேன்!!!(இனி என் கற்பனை!)இதுவரை
ஒரு நிமிடம் தாண்டி
என் முகம் தங்கியதில்லை
நிலைக்கண்ணாடியில்;

இன்றோ கணக்கில்லா கணங்களாய்
நான் அழகு பார்க்க,
குத்தகைக்கு எடுத்தேனோ என்று
என் நிலைக்கண்ணாடியும் வியக்க,
இது வரை உணர்ந்திராத
நானறியா என் நாணத்தை
பிம்பத்தில் கண்டு
நானும் வியந்தேன்!

பெண்மை பூரித்து
என் மெய்யில் கலந்திருந்தும்,
ஆண்மையும் வியக்கும்
ஆண்களை கண்டிருந்தும்,
சலனிக்காத என் மனம்
சட்டென கலைந்தது
உன் தரிசனத்தில்;

தேவதைகள் தரிசனம்
கனவில் மட்டும் தான்,
ஆனால்
நித்தமும் உன் தரிசனம்
நிஜத்தில் என் கிழக்கில்
ஆதித்யனாய்!

புதைந்திருந்த ஆசை,
வரைந்திருந்த கற்பனை,
நிறைந்திருந்த அன்பு,
இவையாவையும் விட
மிகுந்திருந்த என் கர்வம்
எல்லாமாக சேர்த்து வைத்தேன்
என்றாவது உன்னிடம் சமர்ப்பிக்க!

உன்னை நோக்கி,
நான் எடுத்து வைத்த அடிகளை,
கணக்கில் கொண்டால்,
உலகையே அளந்து விடலாம்,
ஆனால் உன்னை இன்னும்
நெருங்க முடியவில்லை;

உன் விழிகளால்
என் கர்வம் உடைத்தவனே
இனி எந்நாளிலும் இவ்விழிகள்
எனக்கு மட்டுமே!

இல்லை! இல்லை!
என்று கூறி வந்த என்னை
ஆம்!ஆம்!
எனக் கூற வைத்தவனே,
என் நிலை மறந்து
என் மெய் துறந்து
காதலாகி
கசிந்துருகி
நான் கேட்பதெல்லாம்,
"தேக்கி வைத்த அன்பின்
கனந்தாங்காமல் விம்மும்
என் காதலை தாங்கிக்கொள்ள
உன் தோள்கள் கிடைக்குமா?"

கேள்விக்கு பதில்தேடி
கோவிலின் படியேறினேன்
என் தெய்வத்தை தரிசிக்க!
தெய்வத்தை தேடிச்சென்ற வெண்மதிக்கு(இது தலைவிக்கு நான் வைத்த பெயர்:))கிடைத்தது வரமா? சாபமா? விடை அறிய யாராவது இந்த கவிதை சங்கிலியை தொடர வேண்டும், அதற்கு சரியான தகுதியுடையவர் என நான் கருதுவது எனது அருமை சிஷ்யன், மஞ்சக்காட்டு மைனாவை தேடி அலையும் பில்லு பரணி (இது குருவின் ஆனை சீசீ ஆணை:) சாரி பிரியா உன் நினைவுல ஆனைன்னு சொல்லிட்டேன் ஹிஹி)

30 comments:

வேதா said...

முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே இந்த கவிதை டேகை யாரு தொடர்ந்தாலும் இறுதியில பத்திரமா கொண்டு போய் ட்ரீம்ஸ் கிட்ட சேர்த்துடுங்க :) அவரு தான ஆரம்பிச்சாரு அவரே முடிக்கட்டும் ;)

அட நாந்தான் தான் பர்ஸ்ட் கமெண்டா? ;)

Anonymous said...

Attendance

ambi said...

//இது வரை உணர்ந்திராத
நானறியா என் நாணத்தை
பிம்பத்தில் கண்டு
நானும் வியந்தேன்!
//

Excellant. Own Exp...? :p

//அட நாந்தான் தான் பர்ஸ்ட் கமெண்டா? ;) //

No, that is a pin kurippu :)
anony comment chellathu!
so naan thaan pashtuuuuuu! :)

Anonymous said...

Excellent Veda
Hats Off

Dreamzz said...

//முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே இந்த கவிதை டேகை யாரு தொடர்ந்தாலும் இறுதியில பத்திரமா கொண்டு போய் ட்ரீம்ஸ் கிட்ட சேர்த்துடுங்க :)//

வேதா! ஏன் இந்த கொல வெறி?

Dreamzz said...

//பெண்மை பூரித்து
என் மெய்யில் கலந்திருந்தும்,
ஆண்மையும் வியக்கும்
ஆண்களை கண்டிருந்தும்,
சலனிக்காத என் மனம்
சட்டென கலைந்தது
உன் தரிசனத்தில்;//

அட்ரா அட்ரா!

Dreamzz said...

///"தேக்கி வைத்த அன்பின்
கனந்தாங்காமல் விம்மும்
என் காதலை தாங்கிக்கொள்ள
உன் தோள்கள் கிடைக்குமா?"//


கலக்கிபுட்டீங்க!

Dreamzz said...

//உன் விழிகளால்
என் கர்வம் உடைத்தவனே
இனி எந்நாளிலும் இவ்விழிகள்
எனக்கு மட்டுமே!
//

கவித சூப்பர்!

வேதா said...

@அனானி,
கரெக்டா அட்டெண்டஸ் போட்டாலும் உங்க பேர சொல்லாததனால இது செல்லாது :)

@அம்பி,
/Excellant. Own Exp...? :p/
ஏன் ஏன் ஏன் இப்டி வெந்த புண்ல வேல பாய்ச்சறீங்க?:)

/anony comment chellathu!
so naan thaan pashtuuuuuu! :)/
ஹிஹி பதிவுல போட்டா தான் பி.கு இது பின்னூட்ட குறிப்பு அதனால் நாந்தான் பர்ஸ்டு :) இதுக்காகவது அந்த அனானி பேர சொல்லணுமே :)

@அனானி,
/Excellent Veda
Hats Off /
முதல்ல வந்த அனானியும் நீங்க தானா? எப்டியிருந்தாலும் பாராட்டுக்கு நன்றி :)

@ட்ரீம்ஸ்,
/வேதா! ஏன் இந்த கொல வெறி? /
ஹிஹி எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்டது தான்:) சும்மா எல்லார் கிட்டயும் போய் சுத்தி சுத்தி வர்ர டேகை ஒழுங்கா முடிக்கலாம்னு ஒரு நல்லெண்ணம் தான் :)

/அட்ரா அட்ரா! /
இப்ப நீங்க தான் கொலவெறியோட அலையறீங்க :)

/கவித சூப்பர்!/
நன்றி ஹை :)

கீதா சாம்பசிவம் said...

இதை எப்படி வேணாலும் அர்த்தம் எடுத்துக்கும்படியா எழுதி இருக்கீங்க! அருமையான கவிதைகள்! வெளிச்சத்துக்கு வந்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும்!

Bharani said...

guru...yen...eduku...enna izhuthu vituteenga....indha tag-a yeerkanave dreamzz solli naan ezhudhiten...thirumbhavuma....thaangadhu guru...thaangadhu...

Bharani said...

//ரொம்ப நாளா எழுதறேன்னு சொல்லி இழுத்தடிச்சு இனி ஏமாத்த முடியாதுன்னு தெரிஞ்சுப்போச்சு //.....yen...enna pblm???

Bharani said...

//காயத்ரி வேற அவ வலைப்பக்கத்துல என் கவிதைய போட்டு எனக்கு ஓசில வெளம்பரம் கொடுத்துட்டா//....andha kavidhai super :)

Bharani said...

foto super....ullukulla yaarukaachum sethi vachi irukeengala ;)

Bharani said...

//ஆதித்யனாய்!//.....maatiyaachi...yerkanave g3 kettapa idha perathaan solli irukeenga...ippa unga kavidhai-la vera koopdareenga...avar peru adithyana....sollunga...sollunga....

Bharani said...

//புதைந்திருந்த ஆசை,
வரைந்திருந்த கற்பனை,
நிறைந்திருந்த அன்பு,
இவையாவையும் விட
மிகுந்திருந்த என் கர்வம்
எல்லாமாக சேர்த்து வைத்தேன்
என்றாவது உன்னிடம் சமர்ப்பிக்க//.....kavidhai-na adhu guru ezhdhuradhu dhaan....kalakiteenga guru...

Bharani said...

//உன்னை நோக்கி,
நான் எடுத்து வைத்த அடிகளை,
கணக்கில் கொண்டால்,
உலகையே அளந்து விடலாம்,
ஆனால் உன்னை இன்னும்
நெருங்க முடியவில்லை//....wow....

Bharani said...

//தேக்கி வைத்த அன்பின்
கனந்தாங்காமல் விம்மும்
என் காதலை தாங்கிக்கொள்ள
உன் தோள்கள் கிடைக்குமா//.....pinreenga....

Bharani said...

//கேள்விக்கு பதில்தேடி
கோவிலின் படியேறினேன்
என் தெய்வத்தை தரிசிக்க//....kavingarluku undaana thanithiramai.....kadhalana pathi solraangala...kadavula pathi solraangala....kaadhalan dhaan kadavula....illa kadavul dhaan kaadhalana....ore confusion dhaan....

Bharani said...

//வெண்மதிக்கு//...venmathi-ngaradhu ungaludaya innoru pera ;)

Bharani said...

//அதற்கு சரியான தகுதியுடையவர் என நான் கருதுவது எனது அருமை சிஷ்யன், மஞ்சக்காட்டு மைனாவை தேடி அலையும் //.....avvvv....guru...direct velikuthu.....

Bharani said...

idhuku mela naan enga ezhudharadhu...guru vera yaarukaachum maathi vitrunga...

Bharani said...

குரு, தங்களின் ஆணைப்படி tag போட்டாச்சி :)

குரு சொல்லி தட்டுவதா...never :)

Anonymous said...

vanten vanten...

-kodi

Anonymous said...

bharani, enga ezhudradhu nu ketta? unga blogla thaan ezhudanum :-)

-kodi

Anonymous said...

indha adhithyan thollai vara vara overa pochu :-)

-kodi

வேதா said...

@கீதா,
நன்றி கீதா மேடம் :)

@பரணி,
/thirumbhavuma....thaangadhu guru...thaangadhu.../
இப்டி சொன்னாலும் குரு சொன்ன வாக்கை காப்பாத்திட்டியே :)

/....andha kavidhai super :)/
நன்றி ஹை :)

/ullukulla yaarukaachum sethi vachi irukeengala ;)/
அடப்பாவி இப்டி ஒரு உள்குத்தா? :)

/avar peru adithyana....sollunga...sollunga.../.
அதை பத்தி நீ காயத்ரி கிட்ட தான் கேட்கணும் :)

/kaadhalan dhaan kadavula....illa kadavul dhaan kaadhalana....ore confusion dhaan..../
ஹிஹி குழம்பினா தான் தெளிவு கிடைக்கும் சிஷ்யா :)

/venmathi-ngaradhu ungaludaya innoru pera ;)/
இல்ல அது ஆதித்னனின் காதலி பெயர் ;)

/.....avvvv....guru...direct velikuthu..... /
ஹிஹி ரொம்ப குத்திட்டேனோ?:)

/குரு சொல்லி தட்டுவதா...never :)/
அது....... :)

@கேடி,
indha adhithyan thollai vara vara overa pochu :-)

ஹிஹி என்ன பண்றது எல்லா ரங்கமணிகளூம் அப்டி தான் ;)

Gopalan Ramasubbu said...

ஆகா!..கவிதை சூப்பர்..எப்படி இப்படியெல்லாம் உங்களால கவிதை எழுத முடியுது?..எனக்கு கண்மணி, பொண்மணியை தவிர வேற வார்த்தையே தோன்றது இல்லை :)

G3 said...

//நித்தமும் உன் தரிசனம்
நிஜத்தில் என் கிழக்கில்
ஆதித்யனாய்!//

அசத்திட்டீங்க :))

//"தேக்கி வைத்த அன்பின்
கனந்தாங்காமல் விம்மும்
என் காதலை தாங்கிக்கொள்ள
உன் தோள்கள் கிடைக்குமா?"
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ஒரே ஏக்கங்களா அள்ளி வீசி இருக்கீங்க :)

G3 said...

//கேள்விக்கு பதில்தேடி
கோவிலின் படியேறினேன்
என் தெய்வத்தை தரிசிக்க!//

கேள்வியின் நாயகன் தான் வந்து பதில் சொல்லனும் :)