Friday, August 03, 2007

என்னத்த சொல்லி?...

என்னமோ திடீர்னு வார்த்தைகளுக்கும் கற்பனைக்கும் பஞ்சம் வந்த மாதிரி எதுவும் எழுத தோணல, தொண்டை குழியில் சிக்கிக்கொண்ட வார்த்தைகள் எழுத்தில் வரவில்லை, சில பல வேலைகள், தேவையற்ற எண்ணங்கள், தவிர்த்திருக்க கூடிய சிறு பிரச்னைகள், சின்ன சின்ன மனவருத்தங்கள் என இந்த வாரம் மேகங்கள் சூழ்ந்த வானம் போல தெளிவில்லாமல் நகர்ந்து விட்டது. நம்ம மக்களும் எதுவும் எழுதற மாதிரி தெரியல சரி வழக்கம் போல மொக்கைய ஆரம்பிச்சுட வேண்டியதுதான்னு தோணிச்சு அதான் இந்த பதிவு(சொல்ற விதம் தான் மொக்கையா இருக்கும், சொல்ற விஷயம் நல்ல விஷயம் அதனால தொடர்ந்து படிங்க)

சமீபத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி செய்திதாளில் படித்தேன். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். ஒரு வேளை அன்னமிடும் செய்கையே சிறந்தது என்று கருதும் போது நாம் இறந்தபின் நம் உறுப்புகளை தானமாக விட்டுச்செல்லும் போது சில உயிர்கள் காப்பாற்றப்படுகின்றனவே அது அதை விட சிறந்தது அல்லவா? நான் கல்லூரியில் படிக்கும் பொழுதில் உடல் உறுப்பு தானம் பற்றி ஒரு கருத்தரங்கு நடந்தது. அதுவரை இரத்ததானம் மட்டும் தான் கேள்விப்பட்டிருந்த நிலையில், இது எங்களுக்கு புதிய செய்தியாக இருந்தது. MOHAN FOUNDATION என்ற தன்னார்வு அமைப்பு தான் இந்த கருத்தரங்கம் நடத்தியது. பின் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்கள் அதை முறைப்படி பதிவு செய்து DONOR CARD பெற்று கொள்ளவும் அங்கேயே ஏற்பாடு செய்தனர். நானும் பதிவு செய்ய முடிவு செய்தேன். இந்த டோனர் கார்ட் பெற்றுவிட்டால் மட்டுமே உறுப்பு தானம் செய்து விட முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால் உறுப்பு தானம் என்பது இறப்புக்கு பின் செய்வது, எனவே இறப்பிற்கு பின் இறந்தவருடைய நெருங்கிய இரத்த சொந்தங்கள் அதாவது கணவன்,மனைவி யாராவது ஆட்சேபித்தால் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த டோனர் கார்டில் இரண்டு பேர் சாட்சியாக கையெழுத்துப்போட வேண்டும். நம் இரத்த சொந்தங்களிடன் கையெழுத்து வாங்குவது நல்லது. எனவே நான் என் பெற்றோரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்தேன். என்ன சொல்வார்களோ என்று தயங்கி தான் இதை செய்தேன், ஏனென்றால் சுமார் 7 வருடங்கள் முன் இதை பற்றிய அதிக விழிப்புணர்வு இல்லை,

{இதற்கிடையில் என் தோழியர் கூட்டத்தில் ஒருத்தி மட்டும் கொஞ்சம் தயங்கினாள்,

'என்னடி உங்க வீட்டுல ஏதாவது சொல்வாங்கன்னு பயப்படறியா?' அப்டின்னு நான் கேட்க,

'இல்லடி வலிக்குமேன்னு பயமா இருக்கு' என்றாள்.

'என்னது வலிக்குமா? நீ செத்தப்புறம் தான் எடுப்பாங்க'.

'ஆனாலும் பயமா இருக்குடி' என்று சொன்னாள்.

'விவிசி :):)'

இதுல அவளை கிண்டல் செய்வதா யாரும் நினைக்க வேண்டாம் அந்த நேரத்துல சிரிப்பு வந்தது அவ்ளோ தான், ஏதோ உடல் உறுப்பு தானத்துக்கு பதிவு செஞ்சுக்கிட்டதனால நான் ரொம்ப அலட்டறேன்னு நினைக்கறவங்களுக்கு நான் இரத்த தானம் செய்ய போய் பதட்டத்துல பல்ஸ் எகிறி என்னைய திருப்பி அனுப்பிட்ட கதையை சொன்னா நீங்க விவிசி :):) }

இதை நினைத்து சிரிப்பதா ? அழுவதா? என்று புரியாமல் முழித்த நாங்க, சரி உயிரோட இருக்கும் போது தான் இது வரைக்கும் உருப்படியா எதுவும் பண்ணல செத்தப்புறம் ஏதாவது விட்டுட்டு போகலாம்னு நானும், என் தோழியர் சிலரும் பதிவு செய்துக்கொண்டோம்.

ஆனால் நல்லவேளை என் பெற்றோர் எதுவும் கூறாமல் கையெழுத்து இட்டனர். அதோடு மட்டுமில்லாமல் நம் நெருங்கிய சொந்தங்களிடம் நாம் டோனார் கார்ட் வைத்திருக்கிறோம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதோடு நாம் எங்கே வெளியே சென்றாலும் அதையும் மறக்காமல் பர்ஸில் வைத்துக்கொள்ள வேண்டும். என் வீட்டில் என் பெற்றோர், சகோதரனுக்கு ஏற்கனவே சொல்லி வைத்து விட்டேன். (இனி தெரிவிக்க வேண்டியது ரங்கமணிக்கு மட்டும் தான் அதற்கான சரியான ஆளும் நேரமும் வந்தபின் ;))

இந்த உடல் உறுப்பு தானம் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளவும், சந்தேகங்கள் தீர்த்துக்கொள்ளவும் இங்கு சென்று படித்தறியவும்.

இப்போதைக்கு இதுக்கு மேல எழுத தோணல, அடுத்த வாரத்துல மீண்டும் சந்திக்கறேன். விடைபெறுவதற்கு முன் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் :)


இந்த கவிதை விரைவில் வெளிநாடு செல்லவிருக்கும் என் ஆருயிர் தோழிக்கு :) இது அன்புடன் கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதை அவளை மனதில் வைத்து வடித்த கவிதை :)


"நட்பென்னும் கவிதை"

நிலாச் சோற்றில்
நிலவையே சாட்சியாக்கி
எழுதப்பட்டது,
நம் நட்பென்னும் கவிதை.

நம் பாவாடை சரசரக்க,
தெருவில் புழுதி மேகங்களுக்கு நடுவில்,
மின்னலாய் விளையாடி,
சேர்த்து வைத்தோம்
நமக்கான சந்தோஷ கணங்களை.

தலையணையாய்
புத்தகங்கள் தாலாட்டுப் பாட,
ஓர் அன்னையாய்
நீ ஊட்டினாய் பாடங்களை.

பருவத்தில் மலர்ந்ததும்,
கண்களே பாலமாகி,
கடத்தப்பட்டன சில ரகசியங்கள்,
நமக்கே நமக்கான,விடயங்கள்.

மலர்ந்ததும்,
மலர்ந்தது
காதல்.

மணப்பந்தலில்,
கண்ணீரை அச்சாரமாக்கி,
நம் பிரிவைக்
கடன்வாங்கினேன்,
மீண்டும் மீட்டு விடவே.

இன்று,
கண்காணா எல்லையில்
நான் இருந்தாலும்,
என் காட்சிகள்
என்னவோ நீயாகவே..
என் வருடங்கள் சுருங்கி,
தேகம் வதங்கினாலும்,
நினைவுகள் வதங்காமல்
நம் நாட்களைப் பூமாலையாக்கி
காத்திருக்கிறேன்
உன் வரவிற்காக.

சொல்லாய் நானும்
பொருளாய் நீயும் இருக்க,
காலமே காலனாய் வந்து
நம் உறவு பிரித்தாலும்
இனி கிடையாது,
நம் நட்பென்னும் கவிதைக்கு "."

பி.கு : அப்டியே என் கவிதை பக்கத்துல நான் புதுசா எழுதின கவிதையை படிச்சுட்டு போங்க :)

30 comments:

Dreamzz said...

நான் தான் பர்ஸ்டா??

Dreamzz said...

உடல் உறுப்பு தானம்... கண்டிப்பா இது நல்ல விஷயம் தான்!! என மூளைக்கு தெரிஞ்சாலும், இதயம் மறுக்குது!! என்னோட உடல், நான் இறந்த பின், சேதப்படன்னுமா என ஒரு சந்தேகம்.... ம்ம்ம்
பாப்போம்! மனசு மாறுதானு!!

Dreamzz said...

என்னை எரிச்சு மன்னுல தூவிடுங்கப்பா ;)

Dreamzz said...

//பருவத்தில் மலர்ந்ததும்,
கண்களே பாலமாகி,
கடத்தப்பட்டன சில ரகசியங்கள்,
நமக்கே நமக்கான,விடயங்கள்.//

அழகான வரிகள்!

Dreamzz said...

//சொல்லாய் நானும்
பொருளாய் நீயும் இருக்க,
காலமே காலனாய் வந்து
நம் உறவு பிரித்தாலும்
இனி கிடையாது,
நம் நட்பென்னும் கவிதைக்கு "."//
முடிவும் நல்லா இருக்கு!!

கீதா சாம்பசிவம் said...

-உடல் தானம் செய்ய ரொம்ப முக்கியமானாது ஆரோக்கியமான உடலும் கூட இல்லையா? ம்ம்ம்ம்ம்ம்,. என்னத்தைச் சொல்றது? எங்கேயோ போயிட்டீங்க!

வாழ்த்துக்கள், உங்க நண்பியைப் போல நீங்களும் சீக்கிரம் வெளிநாடு செல்ல ஒரு நண்பியாக என்னோட வாழ்த்துக்கள்.

அது சரி, யாரும் போணி இல்லையா? இல்லை கவனிக்கலையா?

அதென்ன ப்ளாக் யூனியன் விளம்பரத்திலே என்னோட புது போஸ்ட் எதுவும் வர மாட்டேன்னு அடம் பிடிக்குது? ம்ம்ம்ம்ம்ம்ம் கவனிச்ச்சுகறேன்.

G3 said...

அருமையான பதிவு.. அழகான கவிதை..

சொல்ல வேற வார்த்தை இல்லை..

வேதா said...

@ட்ரீம்ஸ்,
ஆமா நீங்க தான் பர்ஸ்டு :) உங்களுக்கு நீ ஆசைப்பட்டு கேட்ட புளியோதரை பார்சல் :)

/நான் இறந்த பின், சேதப்படன்னுமா என ஒரு சந்தேகம்.... ம்ம்ம்
பாப்போம்! மனசு மாறுதானு!!/
செயல்படுத்தறதுக்கு முதல் படி யோசிக்க ஆரம்பிக்கறது :)

/என்னை எரிச்சு மன்னுல தூவிடுங்கப்பா ;) /
சீக்கிரம் வாங்க எரிக்க ஏற்பாடு பண்றோம் :)

/முடிவும் நல்லா இருக்கு!! /
நட்பிற்கு ஏது முடிவு :)

வேதா said...

@கீதா,
/உடல் தானம் செய்ய ரொம்ப முக்கியமானாது ஆரோக்கியமான உடலும் கூட இல்லையா?/
நீங்க அந்த வலைத்தளத்திற்கு போய் படிச்சு பாருங்க

/அதென்ன ப்ளாக் யூனியன் விளம்பரத்திலே என்னோட புது போஸ்ட் எதுவும் வர மாட்டேன்னு அடம் பிடிக்குது? /
நீங்க டாக்டர் டுடி அக்கா கிட்ட இத பத்தி ரிப்போர்ட் பண்ணுங்க :) எல்லாம் வெளிநாட்டு சதி :)

@காயத்ரி,
சொல்றதுக்கு ஒன்னுமே இல்லையா? அடிப்பாவி இதுக்கா மெனக்கட்டு கூப்டேன் :)

Balaji S Rajan said...

ஏங்க வேதா,

நீங்க மொக்கை போஸ்ட்டே இவ்வளவு நல்லா எழுதறீங்க? அப்போ நல்ல போஸ்ட் நாங்க நெருங்க முடியாதோ? கவிதை கலக்கிட்டீங்க! சகலாகலாவல்லி போல இருக்கு! ஒரு ரேஞ்ச் தான் போல இருக்கு.

Bharani said...

//என்னமோ திடீர்னு வார்த்தைகளுக்கும் கற்பனைக்கும் பஞ்சம் வந்த மாதிரி எதுவும் எழுத தோணல, தொண்டை குழியில் சிக்கிக்கொண்ட வார்த்தைகள் எழுத்தில் வரவில்லை, சில பல வேலைகள், தேவையற்ற எண்ணங்கள், தவிர்த்திருக்க கூடிய சிறு பிரச்னைகள், சின்ன சின்ன மனவருத்தங்கள் என இந்த வாரம் மேகங்கள் சூழ்ந்த வானம் போல தெளிவில்லாமல் நகர்ந்து விட்டது//.....same pinch...kadantha irandu vaarangal ippadithaan poginara guru....

Bharani said...

//ஏனென்றால் சுமார் 7 வருடங்கள் முன் இதை பற்றிய அதிக விழிப்புணர்வு இல்லை//...ippa kooda niraya peru kan dhaanam seyyave payapaduraanga....

Bharani said...

neenga 7 yrs munnadiyeva....engayo poiteenga...naanum follow panren....

Bharani said...

kavidhai vazhakam pola arumai...

//என் வருடங்கள் சுருங்கி,
தேகம் வதங்கினாலும்,
நினைவுகள் வதங்காமல்
நம் நாட்களைப் பூமாலையாக்கி
காத்திருக்கிறேன்
உன் வரவிற்காக//.....my fav lines

Bharani said...

ungalukum happy friendship day :)

Arunkumar said...

Happy Friendship day to ALL :)

Arunkumar said...

Udal Uruppu Dhaanam -- chinna payangradhunaala naan innum adhellam osikkala !!!

Arunkumar said...

//
என்னமோ திடீர்னு வார்த்தைகளுக்கும் கற்பனைக்கும் பஞ்சம் வந்த மாதிரி எதுவும் எழுத தோணல, தொண்டை குழியில் சிக்கிக்கொண்ட வார்த்தைகள் எழுத்தில் வரவில்லை, சில பல வேலைகள், தேவையற்ற எண்ணங்கள், தவிர்த்திருக்க கூடிய சிறு பிரச்னைகள், சின்ன சின்ன மனவருத்தங்கள் என இந்த வாரம் மேகங்கள் சூழ்ந்த வானம் போல தெளிவில்லாமல் நகர்ந்து விட்டது
//

ippo nagarndurchu illa?
megam theliva thaana irukka ippo...

Arunkumar said...

oru nalla vishayam sollirkinga..
Nanbargal dhina vaazthu sollirkinga...
oru superaana kavidhai ezhudirkinga...

approm edhukku title mattum "ennatha solli.."
pls change pannunga !!!

Arunkumar said...

unga friend US varaangala? neenga eppo varinga?
US nagaram ungalai anbudan varaverkiradhu :)

Arunkumar said...

//
பருவத்தில் மலர்ந்ததும்,
கண்களே பாலமாகி,
கடத்தப்பட்டன சில ரகசியங்கள்,
நமக்கே நமக்கான,விடயங்கள்.
//
wow.. superb lines

வேதா said...

@பாலாஜி,
ஹிஹி சகலகலாவல்லியெல்லாம் இல்ல சும்மா அந்த மாதிரி ஒரு பில்டப் தான் :)

@பரணி,
/same pinch...kadantha irandu vaarangal ippadithaan poginara guru..../
நீயுமா? :(

/...naanum follow panren..../
ஆஹா நன்றி சிஷ்யா :)

வாழ்த்துக்களுக்கு நன்றி :)

@அருண்,
/chinna payangradhunaala naan innum adhellam osikkala !!!/
என்னது இது? உங்கள விட சின்ன பொண்ணு நானே இதையெல்லாம் செஞ்சுட்டேன் நீங்க இன்னுமா யோசிக்கறீங்க?:)

/megam theliva thaana irukka ippo.../
ஹிஹி தெளிஞ்சுடுச்சு :)

/ neenga eppo varinga?
US nagaram ungalai anbudan varaverkiradhu :) /
உங்க வரவேற்புக்கு நன்றி :) நான் இப்போதைக்கு வர்ரதா இல்ல வருங்காலத்தில் எப்படியோ யாமறியோம் பராபரமே ;)

superb lines
நன்றி அருண் :)

Padmapriya said...

Thoughtful post Veda.. Kavithai kalakkeeteenga..

Naanum donate pannaradha pathi yosikkalaamnu iruken :) paapom.. bayam poiduchuna..panniduven :)

Ravi said...

Hi Veda,
Your post looks like a mixed bag this time but nice one as ever. Sorry for the short hiatus. Though I did read all your posts, I could not comment in blogspot sites from office. Finally ippo I am commenting from home.

ambi said...

congrats for the supreme sacrifice.

yow! enna nakkala? naan new post pottu 57 commentsum vaangiyaachu. Grrrrr.

nice kavithai. he hee, edho solla vareenganu puriyuthu. :p

//அதென்ன ப்ளாக் யூனியன் விளம்பரத்திலே என்னோட புது போஸ்ட் எதுவும் வர மாட்டேன்னு அடம் பிடிக்குது? ம்ம்ம்ம்ம்ம்ம் கவனிச்ச்சுகறேன்.
//
@geetha paati,
ROTFL :) IF the post is mokkai, it won't come in the list. :p

சிங்கம்லே ACE !! said...

romba nalla vishayam... vaazthukkal..

வேதா said...

@பத்மப்ரியா,
யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?:) நன்றி :)

@ரவி,
எப்டி இருக்கீங்க ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து :) எப்ப அடுத்த பதிவு போட போறீங்க?
நன்றி :)

@அம்பி,
நீங்க புது போஸ்ட் போட்ட அன்னிக்கே படிச்சுட்டேன் கமெண்ட் தான் போடல ஹிஹி :)

/IF the post is mokkai, it won't come in the list. :p/
அதான் உங்க போஸ்டும் வர்ரதில்லையா?:)

@ஏஸ்,
அட ரொம்ப நாள் கழித்து எட்டி பார்த்துருக்கீங்க?:)
நன்றி :)

மு.கார்த்திகேயன் said...

நல்ல சிந்தனை பதிவு வேதா.. இங்க நான் காருக்கு லைசென்ஸ் எடுத்த போது, உறுப்பு தானம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டார்கள்.. நான் சரி என்று இசைந்தவுடன், எனது லைசென்ஸில் ஒரு சின்னமாக அதை பதித்து விட்டார்கள்.. ஆனால் இந்தியாவில் இன்னும் பதியவில்லை..

மு.கார்த்திகேயன் said...

//சொல்லாய் நானும்
பொருளாய் நீயும் இருக்க,
காலமே காலனாய் வந்து
நம் உறவு பிரித்தாலும்
இனி கிடையாது,
நம் நட்பென்னும் கவிதைக்கு "."//

ஏற்கனவே நீங்கள் பதிவிட்டு படித்தது தான் என்றாலும், உங்கள் கவிதையின் கடைசி எழுத்தை போல எதற்கும் முடிவில்லை, வேதா..

கையில் வழித்து தேன் சாப்பிட்ட உணர்வு வேதா, கவிதை படித்த பிறகு

வேதா said...

நல்ல காரியம் செய்தீர்கள் கார்த்தி :)
நன்றி :)