Monday, August 13, 2007

குறையொன்றுமில்லை..

வரவர புது பதிவு எழுதறதுக்கு ரொம்ப யோசிக்க வேண்டியதா போயிடுச்சு நமக்கு சரக்கு கம்மியாகிடுச்சா?(ஹலோ சரக்குன்னு சொன்னவுடன பக்கார்டி கனவுகளுக்கு போக வேணாம்:)) இல்ல ஆர்வம் கம்மியாகிடுச்சான்னு நம்ம நாட்டாமை தலைமையில் ஒரு பட்டிமன்றம் தான் வைக்கணும் போல :)

போன வாரம் திருப்பதி போறோம் வர்ரியான்னு என் சித்தப்பா கேட்டாரு, எனக்கோ ஒரு வாரமா மூட் அவுட், எங்கேயும் போற ஆர்வமில்ல, ஆனாலும் எங்க அம்மா வற்புறுத்திதனால வெள்ளிக்கிழமை எங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டேன். அங்க போனா தான் சொல்றாங்க சனிக்கிழமை நாலு மணிக்கே எழுந்தக்கனும்னு. ஆகா நமக்கெல்லாம் நாலு மணி நடுச்சாமம் ஆச்சே:) (நாமெல்லாம் முன் தூங்கி பின் எழும் இனமாச்சே) என்ன பண்றது? சாமி காரியமாச்சேன்னு யோசிச்சு, அப்டியும் விடாம கெஞ்சினதுல ஒரு மணி நேரம் க்ரேஸ் டைம் கொடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக போலாம்னு முடிவு பண்ணி 6 மணிக்கு கிளம்பினோம். ரெண்டு நாள் நாம இல்லாம இந்த பதிவுலகம் ஸ்தம்பிச்சு போயிடுமேன்னு ரொம்ப வருத்தத்தோட தான் கிளம்பினேன் :) 11 மணிக்கா கீழ் திருப்பதி போயாச்சு , போற வழியிலேயே சொன்னா எங்க நான் எஸ்கேப் ஆகிடுவேனோன்னு பயந்து அங்க போனவுடன, மலையடிவாரத்திலிருந்து மேல நடந்து தான் போகப்போறோம்னு சொல்லி அடுத்த குண்டை தூக்கி போட்டாரு :)

நான் உங்க பையெல்லாம் தூக்கிக்கிட்டு பஸ் புடிச்சு மேலப்போறேன், நீ சித்தியோட நடந்து வந்துருன்னு சொல்லிட்டு அவரு எஸ்கேப். நானும், சித்தியும் டிபன் கடையை முடிச்சுக்கிட்டு சுமார் 12:30 மணிக்கு நடக்க ஆரம்பிச்சோம். என் சித்தி ஏற்கனவே பல முறை மேலே கோவிலுக்கு நடந்து சென்று பழக்கமுள்ளதால் விடுவிடுவென்று ஏறத்தொடங்கினார். இதுல வேற, உஷா உனக்கு முடியலேன்னா சொல்லு கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்னு என்னய பார்த்து சொல்றாங்க. நமக்கா அவமானமா போச்சு(!) என்னோட வயசுல பெரியவங்க அவங்களே சுறுசுறுப்பா ஏறும் போது நாம நின்னுட்டா அசிங்கம்னு அந்த வேங்கடவனை மனதில் நினைத்துக்கொண்டு ஏற ஆரம்பித்தேன். தொடர்ந்து ஒரு மணி நேரம் என் சித்தி எங்கேயும் அமராமல் ஏறினார், எனக்கு சிறிது நேரத்திலேயே மூச்சிரைக்க ஆரம்பித்தாலும் மனதுக்குள் 'சித்தி சீக்கிரம் எங்கேயாவது உட்காருங்க'ன்னு நினைச்சாலும் விடாம உறுதியுடன்(ஹிஹி இதை திமிருன்னு கூட சொல்லிக்கலாம்:)) ஏறினேன்.


அப்புறம் அங்கே இங்கே நின்னு இயற்கையை ரசிக்கிட்டே மூணு மணிக்கு போய் சேர்ந்தோம். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த அறையில் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம்னு நினைச்சா, இல்ல 4 மணிக்கெல்லாம் கிளம்பி போய் வரிசையில் உட்கார்ந்தா தான் அங்கப்பிரதட்சணம் செய்ய டிக்கட் வாங்க முடியும்னு என் சித்தப்பா சொல்லிட்டாரு. உடனே அவசர அவசரமா கிளம்பி 8 மணிக்கு திறக்கப்போற விஜயா வங்கி கவுண்டர்ல 4 மணிக்கே போய் உட்கார்ந்தாச்சு, அங்க போய் பார்த்தா நமக்கு முன்னாடி 15, 20 பேர் இருக்காங்க. இன்னும் 4 மணிநேரம் தள்ளணுமேன்னு புத்தகத்தை விரிச்சா கண்கள் மட்டும் தான் அங்க பதியுது, புத்தி அங்க போக மாட்டேங்குது. அப்புறம் புத்தகத்தை மூடி வச்சுட்டு போற வர்ர கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு, பக்கத்துல இருக்கறவங்க கிட்ட அரட்டை அடிச்சுக்கிட்டு, இந்து கியூ எதுக்குன்னு தெலுங்குல விசாரிச்சவங்க கிட்ட தமிழ்ல பதில் சொல்லி வெறுப்பேத்திக்கிட்டு, அடுத்து நம்ம ப்ளாகுல புதுசா என்ன எழுதறதுன்னு யோசிச்சுக்கிட்டு, அப்டியே மனசுல தோன்றிய ஒரு கவிதையை நினைவுல பூட்டி வச்சுக்கிட்டு இப்டியே 4 மணிநேரத்தை ஓட்டி டிக்கெட் வாங்கிட்டோம். அப்புறம் சாப்டுட்டு அறைக்கு போக 10 மணியாகிடுச்சு.


இரவு 2 மணிக்கு அங்கப்பிரதட்சணம் என்பதால் உடனே 1 மணிக்கு எழுந்தக்கணும். நமக்கெல்லாம் தூக்கமே 1 மணிக்கு தான் வரும், அதுவும் படுத்த மூணு மணி நேரத்திலேயே எழுந்தக்கணும்னு சொன்னா எப்டி தூக்கம் வரும்? புரண்டு புரண்டு படுத்துக்கிட்டு 1 மணிக்கு எழுந்தாச்சு(!). குளத்துல போய் குளிச்சு அப்டியே ஈர உடையோட தான் கோவிலுக்கு போகணும், அங்க போய் பார்த்தா புஷ்கரணில சொட்டுத் தண்ணி இல்ல, சுத்தம் செய்ய எல்லாத்தையும் வடிச்சு எடுத்துட்டாங்க. அப்புறம் பக்கத்துல இருந்த ஒரு குளியலறை வசதி செய்யப்பட்ட இடத்தில் ஷவருக்கு அடியில போய் நின்னா ரொம்ப குளிர்ச்சியா இல்லாம அருமையா கொஞ்சம் வெப்பத்தோட தான் தண்ணீர் வந்தது. பரவாயில்ல குளிரலையேன்னு நினைச்சுக்கிட்டு வெளிய வந்தா சும்மா சிலுசிலுன்னு காத்து அடிக்க நமக்கு பல்லு டைப்படிக்க ஆரம்பிச்சுடுச்சு. இப்டியே நின்னா இன்னும் குளிரும்னு வேகமா நடந்து வரிசையில் போய் நின்னோம்.


சரியா ரெண்டு மணிக்கு திறந்து விட்டாங்க, அப்புறம் அரை மணிநேரத்துக்கு மேல வெயிட் பண்ணி மூணு மணி சுமாருக்கு அங்கப்பிரதட்சணம் செய்தோம். தரையில் விழுந்தது தான் தெரியும், அன்று கூட்டம் அதிகமென்பதால் ஒரு சுத்து முடிக்கவே 20 நிமிடங்கள் ஆகி விட்டன. பின் மறுபடி பெருமாளை தரிசிக்க வரிசையில் நிற்க வேண்டும், அதுக்கு சுமார் 30 நிமிடங்கள் ஆகிவிட்டன. பல சோதனைகள், வேதனைகள் தாண்டி அவன் சந்நிதி வாசலில் நிற்கும் அந்த ஒரு சில நொடிகளில் என்ன நினைத்து வந்தேனோ அத்தனையும் மறைந்து 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று தான் சொல்ல முடிந்தது :) இப்டியாக திடீரென்று புறப்பட்ட திருப்பதி பயணம் திவ்யமாக முடிந்தது. கதையும் முடிஞ்சுப்போச்சு :) நான் அங்கப்பிரதட்சணம் செய்தேன்னு சொன்னதுக்கு 'நீ அவ்வளவு நல்லவளா?' அப்டின்னு கேட்ட நம்ம காயத்ரி கிட்ட நான் சொன்னது 'நான் எவ்வளவு நல்லவள்னா திருப்பதி போற வழியில யோசிச்சு, அங்க போய் எழுதி வச்ச கவிதையை படிச்சு பாரு தெரியும்'. பக்தி கவிதைன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல, அங்க போய் படிச்சு தான் பாருங்களேன்

22 comments:

G3 said...

//நான் அங்கப்பிரதட்சணம் செய்தேன்னு சொன்னதுக்கு 'நீ அவ்வளவு நல்லவளா?' //

yakka.. enna thappa purinjikkaradhey unakku velaya pochey.. neenga "naan angapradhakshanam pannittu avanga kudutha prasathatha angayae saaptuten.. onnum kondu varala"nu sonnadhukku thaan naan "nee ambuttu nallavala"nnu ketten..

Arunkumar said...

just miss pola naan :(

Arunkumar said...

"திருப்தியா ஒரு திருப்பதி பயணம்"னு பேரு வச்சிருக்கலாமே. :)

Arunkumar said...

ராத்திரி 2 மணிக்கு அங்கப்பிரதட்சணமா?
கஷ்டம் தான்..

எனிவே நல்லா இருக்காரா மிஸ்டர் வெங்கட்?

Arunkumar said...

//
ரெண்டு நாள் நாம இல்லாம இந்த பதிவுலகம் ஸ்தம்பிச்சு போயிடுமேன்னு ரொம்ப வருத்தத்தோட தான் கிளம்பினேன் :)
//
ஆமா ஆமா.. நீங்க இல்லாம பதிவுலகத்துல ஒரு ஈ காக்கா இல்ல !!!!

Arunkumar said...

//
எனக்கோ ஒரு வாரமா மூட் அவுட்,
//
தரிசனத்துக்கு அப்பறம் இப்போ எப்பிடி இருக்கீங்க? "மீட் இன்"னா? :)

Arunkumar said...

சரி, லட்டு பார்சல் ப்ளீஸ்..

வேதா said...

@காயத்ரி,
முதல்ல நீ புரியற மாதிரி பேச கத்துக்கோ :)(ஹிஹி எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு)

@அருண்,
முதல்ல வந்த காயத்ரிக்கே லட்டு இல்ல:)

/"திருப்தியா ஒரு திருப்பதி பயணம்"னு பேரு வச்சிருக்கலாமே. :)/
இது கூட நல்லாயிருக்கே :)

/எனிவே நல்லா இருக்காரா மிஸ்டர் வெங்கட்?/
அவருக்கென்ன சூப்பரா இருக்கார் :)

/ஆமா ஆமா.. நீங்க இல்லாம பதிவுலகத்துல ஒரு ஈ காக்கா இல்ல !!!! /
இதுல ஏதாவது உள்குத்து? :)

/தரிசனத்துக்கு அப்பறம் இப்போ எப்பிடி இருக்கீங்க? "மீட் இன்"னா? :)/
ஆகா முடியல எப்டி இப்டியெல்லாம்?:)
இதுக்கு தான் கோப்ஸ் கூட ரொம்ப பழகாதீங்கன்னு சொன்னேன் ;)

Sri said...

it's nice to read something in tamil after a while (to be honest, I should actually get used to read the way it appears in the site)

Dreamzz said...

முதல்ல கவிதை! அப்புறம் இது :)

Dreamzz said...

/சிறிது நேரத்திலேயே மூச்சிரைக்க ஆரம்பித்தாலும் மனதுக்குள் 'சித்தி சீக்கிரம் எங்கேயாவது உட்காருங்க'ன்னு நினைச்சாலும் விடாம உறுதியுடன்(ஹிஹி இதை திமிருன்னு கூட சொல்லிக்கலாம்:)) ஏறினேன்.
//
குட்! கீப் இட் அப்!

ambi said...

திருப்பதி, நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. :)

வெண் பொங்கல் சூப்பரா இருக்கும். :)

இப்பயாவது நல்ல புத்தி வந்ததா இல்லையா? :p

கீதா சாம்பசிவம் said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வேதா said...

@அம்பி,
/இப்பயாவது நல்ல புத்தி வந்ததா இல்லையா? :p /
ஹிஹி அத கேட்கறதுக்கும் ஒரு தகுதி வேண்டாமோ? :) உங்களோட பழகும் போதெல்லாம் அது எப்டி வரும் ? :)

@கீதா,
உங்களுக்கு என் வாழ்த்துக்கள் :)

Syam said...

//ஹலோ சரக்குன்னு சொன்னவுடன பக்கார்டி கனவுகளுக்கு போக வேணாம்:)) இல்ல ஆர்வம் கம்மியாகிடுச்சான்னு நம்ம நாட்டாமை தலைமையில் ஒரு பட்டிமன்றம் தான் வைக்கணும் போல :)
//

aarambamey aappaa :-)

Syam said...

//வெண் பொங்கல் சூப்பரா இருக்கும். :)
//

avan avanukku avan avan pirachanai :-)

Balaji S Rajan said...

Aaaha.... Ezhudhitaangaya... Ezhudhitaanga.. Tirupathi padikattuleyum Kavithaiya.... Veda kalakareenga... Kandippa athu Samooga prachinai kavithaiya thaan irukkum... please.. adutha postla podungalane...

Padmapriya said...

Nalla narrate pannirkeenga Veda!!

Prasaadham foto vadhu potirkalaamla :(

வேதா said...

@ச்யாம்,
ரொம்ப நாளா வராம இருந்ததுக்கு இந்த ஆப்பு பத்தாது தான், ஆனாலும் அண்ணனாச்சேன்னு இதோட விடறேன்:)

/avan avanukku avan avan pirachanai :-) /
:)

@பாலாஜி,
நீங்க நினைக்கற மாதிரி நான் எழுதின கவித சமூக ப்ரச்னை பத்தி இல்ல :)ஆனா கண்டிப்பா அப்டி ஒன்னு எழுத முயற்சிக்கறேன் அடுத்த பதிவுல :)

@பத்மப்ரியா,
ஹிஹி கொடுத்த ப்ரசாதத்தையே அங்க சாப்ட்டு வந்துட்டேன் :)

rsubras said...

romba nalla ezhuthirukeenga vedha :) aana konjam kuraichala ezhuthiteengalo..... athunala than title kurai ondrum illai...niraya ezhuthirukkennu solreenga pola :p

ambi said...

அதானே! என்னடா டெம்ளேட் மாத்தலையே?னு பார்த்தேன். :)

ஹிஹி, அந்த காஷ்மீரி பொண்ணு சூப்பரோ சூப்பர். வாழ்க நின் தொண்டு. :p

வேதா said...

@rsubras,
/aana konjam kuraichala ezhuthiteengalo..... /
aaha ithula payangara ulkuthu iruku pola :)

@ambi,
umaku porukaathey :) muthala en bloguku suthi podanum :)