Wednesday, August 22, 2007

அன்பு மழையில் நனைந்தேன் நான்...

ஆவணி மாதத்தில் நிறைய விசேஷம் வந்தாலும் ரொம்ப விசேஷமானது இன்று தான், ஆவணி மாதம் கேட்டை நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் நள்ளிரவு 12:15 மணிக்கு இந்த பூமியில் நான் அவதரித்தேன் :) நான் பிறந்த போதே குடும்பத்துல பெரிய கலவரத்தை உண்டாக்கிட்டு தான் பிறந்தேன். நான் பிறந்த சிறிது நேரத்திலேயே என் அம்மாவிற்கு ரொம்ப உடல்நிலை மோசமாகி கிட்டத்தட்ட உயிருக்கே ஆபத்தான நிலைமை உருவாகிவிட்டது, உடலை எங்கு கொண்டு போகலாம்னு எல்லாரும் பேசிக்கற அளவுக்கு. ஆனா அப்புறம் சரியா போச்சு. இன்னிக்கும் என் தம்பி என்ன வெறுப்பேத்த சொல்லுவான், பொறக்கும் போதே அம்மாவுக்கு கஷ்டத்தை கொடுத்துட்டன்னு, டேய் என்னைய மாதிரி ஒரு நல்லவள பெத்தெடுக்க இப்டியெல்லாம் கஷ்டப்படனும்னு நான் சொல்லுவேன் :) அதுக்கப்புறம் அது மாதிரி பேசறத விட்டுட்டான் :) எங்க வீட்டுல எப்பவும் தமிழ் பிறந்த நாளன்னிக்கு தான் கொண்டாடுவோம் அன்னிக்கு தான் ஏதாவது இனிப்பு செஞ்சு எல்லாருக்கும் கொடுத்து, கோவிலுக்கு போவோம். ஆனா எனக்கு மட்டும் வருஷத்துக்கு மூணு பொறந்த நாள் வரும் ;) என்னை பள்ளியில் சேர்க்கும் போது வேற தேதி கொடுத்துட்டாங்க, அப்புறம் ஆங்கில தேதிப்படி ஆகஸ்ட் 21 அதாவது நேத்திக்கு, அப்புறம் தமிழ் மாத கணக்குப்படி ஒரு நாள் :) நானும் ஒவ்வொரு வருடமும் சொல்வேன் மூணு பிறந்தநாளுக்கும் புது துணி எடுக்கலாம்னு ஒத்துக்கமாட்டேங்கறாங்க ;)

கல்லூரி நாட்களுக்கு பிறகு எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், என்றும் மறக்காத நினைவுகளையும் பரிசாக கொடுத்தது இந்த வருட பிறந்த நாள் தான்(அவ்வ்வ்வ் இப்டி பீல் பண்ண வச்சுட்டீங்களே:)). முதல் நாள் இரவே நம்ம மக்கள் கண்டிப்பா போன் பண்ணுவாங்கன்னு தெரியும் அதனால் செல்பேசியை ஊமையாக்கி விட்டு சைலண்டா படுத்துவிட்டேன் :) விடியக்காலையில் தூக்கம் கலைஞ்சு செல்பேசியை எடுத்து பார்த்தா ரெண்டு மிஸ்டு கால், ரெண்டு மெசேஜ் வந்துருக்கு. மிஸ்டு கால் ரெண்டுமே யார்னு தெரியல ஆனாலும் காயத்ரி மேல ஒரு சந்தேகம் இருந்தது :) மெசேஜ் காயத்ரியும், பரணியும் அனுப்பியிருந்தாங்க. இதுல வேற பரணி உங்களுக்கு கண்டிப்பா ஆதித்யன் கிடைச்சுடுவாருன்னு வாழ்த்து (ஹிஹி இது காயத்ரிக்கு தெரிஞ்சது இங்கன ஒரு கொல விழும், ஏன்னா ஆதித்யன் காயத்ரியோட கனவு நாயகன் அவன எனக்கு இப்டி தாரை வார்த்து கொடுத்துட்டீங்களே பரணி :))

மெசெஜ் படிச்சுட்டு திரும்ப தூங்கின என்னை 6 மணிக்கே போன் பண்ணி எழுப்பி விட்டுட்டா காயத்ரி, வாழ்த்து சொல்லிட்டு பேச ஆரம்பிச்ச அவள, தாயே நான் அப்புறம் போன் பண்ணி உன் கிட்ட பேசறேன் காலையிலேயே ஆரம்பிச்சுடாத நான் இன்னும் நிறைய பேர் கிட்ட பேசணும் அதுக்கு என் காது கேட்கணும் அப்டின்னு சொல்லிட்டு திரும்ப தூங்கலாம்னு பார்த்தா, பிறந்த நாள் அதுவுமா என்ன திட்ட வைக்காத மரியாதையா எழுந்திருன்னு சொல்லி எங்கம்மா நிம்மதியா தூங்க விடாம சதி பண்ணிட்டாங்க :(

இப்டியே கள கட்ட ஆரம்பிச்ச என் பிறந்தநாள் தொடர்ந்து என் தோழர்கள், வலையுலக நண்பர்கள் என நிறைய பேரிடமிருந்து தொலைப்பேசியில்(காயத்ரி,சிபி,சிவா,ட்ரீம்ஸ்)தனிமெயிலில்( கீதா,ட்ரீம்ஸ்,அருண்,ராம்,ஜேகே,பரணி,சிவா),ப்ளாக் யூனியன் மெயிலில், வலைப்பக்கங்களில்(பரணி,காயத்ரி ரெண்டு பேரும் தனி பதிவு போட்டு அசத்திட்டாங்க),வாழ்த்துக்கள் சங்கத்தில என எல்லாரும் அசத்திட்டாங்க. எல்லாருக்கும் என் நன்றியை தெரிவிச்சுக்க தான் இந்த பதிவு. அதோட மட்டுமில்ல என் பிறந்தநாளுக்கு போன மாசமே தவறுதலா வாழ்த்து அனுப்பிய சுமதி அக்காவுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் ;)

சில விஷயங்களை சொல்லனும்னு அவசியமில்ல ஆனா சொல்றதுல தப்பில்ல அதனால வாழ்த்தின நண்பர்கள் அனைவருக்கும் நன்றி(யார் பெயரையாவது விட்டிருந்தால் மன்னிச்சு விட்டுருங்க:))நட்பு வானத்தில்
அன்பு மேகங்கள் சொரிந்த
அபிரிதமான நேசம் நிறைந்த வார்த்தைகளின்
அன்பு மழையில் நனைந்தேன் நான்..

என் இதய வாசலில்
பட்டுத் தெரித்த
மழைத் துளியின்
தூய்மையாய் பிரதிபலித்தது
உங்கள் நேசம்..

11 comments:

ambi said...

நேத்திக்கு மாலை உங்க செல்பேசிக்கு 30 நிமிஷமா கூப்பிட்டு பார்த்தேன். "This Huth number is not reachableநு சொல்லிடாங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்.
ஹட்ச் கம்பனி காரங்களுக்கு ஏன் உங்க மேல பொறாமை..? :(

நான் தான் பஷ்ட்டு!னு நினைக்கறேன். பிறந்த நாள் ஸ்வீட் தனி, இப்ப தனியா குடுத்துடவும். :p

dubukudisciple said...

thangachi..
nee anbu mazhaiyil nanaithu engaluku jaladosham vanthuchi.. seri seri seekiram marunthu anupu.. G3ku edavthu treat kuduthiya illaya

Dreamzz said...

ஹிஹி! u r welcome!

காட்டாறு said...

லேட்டா வந்தாலும், வாழ்த்தனுமின்னு தோணிச்சி. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் வேதா.

கீதா சாம்பசிவம் said...

நானும் பிடிக்கப் பார்த்தேன், முடியலை. கவிதை நல்லா இருக்கு. எப்போவும் போல்.

My days(Gops) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேதா....

வேதா said...

@அம்பி,
நீங்க என் தொலைபேசி எண்களை தப்பா குறிச்சுக்கிட்டு மத்தவங்கள குறை சொல்றீங்க :)

/பிறந்த நாள் ஸ்வீட் தனி, இப்ப தனியா குடுத்துடவும். :p /
ஹிஹி எங்க வீட்டுல கேசரி பண்ணினாங்களே உங்களுக்கு வைக்காம நானே சாப்டுட்டேன் :)

@டுடி,
அக்கா என்ன அநியாயம் இது நானும்,காயத்ரியும் ட்ரீட் கொடுத்தா அது எட்டாவது அதிசயம் :) எங்களுக்கு ட்ரீட் வாங்கி தான் பழக்கம், கொடுத்து பழக்கமில்ல ;)

@ட்ரீம்ஸ்,
நன்றி ஆனா அன்னிக்கு என் செல்பேசி எண்ணை யாரு கொடுத்தானான்னு நீங்க சொல்லவேயில்ல நானும் கேட்கவேயில்ல :) ஆனா எனக்கு தெரியும் யாரு கொடுத்திருப்பாங்கன்னு :)

@காட்டாறு,
தாமதமாக சொன்னாலும் வாழ்த்துக்கள் என்றுமே இனிக்கும் தான் :)
நன்றி :)

@கீதா,
ஏங்க நானென்ன ஓடிக்கிட்டா இருந்தேன் பிடிக்கறதுக்கு? :)
நன்றி :)

@கோப்ஸ்,
நன்றி :)

Ravi said...

Veda, Iniya pirandha naaL vaazhthukkaL. Appo list-la innoru treat serndhiduchu. So India return aana udanae ellathaiyum vaangikiren. Indha naaL matrum elaa naatkaLum inimaiyaaga irukka en vaazhthukkaL!!

பரத் said...

Belated wishes Veda

வேதா said...

@ரவி,
ட்ரீட் தான கொடுத்துட்டா போச்சு இந்தியா வந்தப்புறம் சொல்லுங்க :)

@பரத்,
வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றி :)

Arunkumar said...

appo motham 3 treataa? eppo first? :)