Friday, August 31, 2007

நலம் வாழ என்றும் என் வாழ்த்துக்கள்

அடுத்து எதை பத்தி எழுதி நாட்டுக்கு சேவை செய்யலாம்னு ரொம்ப தீவிரமா சாப்பிட்டுக்கொண்டே யோசிக்கும் போது நம்ம குருகுலத்தில் ஒரே பரபரப்பு எல்லாரும் அங்கங்க கூட்டம் போட்டு பேசிக்கறாங்க. நம்ம சிஷ்யக்கேடி ஒருத்தனை நிறுத்தி கேட்டேன்

'என்னப்பா விசேஷம்? நம்ம குருகுலத்துக்கு யாராவது சினிஸ்டார் வர்ராங்களா? ஹிஹி மாதவனை கூப்படனும்னு நானே ரொம்ப நாளா நினைச்சேன் :)'

'குரு இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல? அவனவன் பாவனா,அசின்,நயந்தாரான்னு கனவு காண்றோம் நீங்க என்னடான்னா மாதவனை சொல்றீங்க?'

'சரி இதெல்லாம் வெளில போய் சொல்டாத நம்ம குருகுலம் மானம் போயிடும் :) கூட்டத்துக்கு என்ன காரணம் அத சொல்லு'

'குரு நம்ம காயத்ரிக்கு நாளைக்கு பொறந்த நாளு அதான் எப்டி கொண்டாடலாம்னு டிஸ்கஸ் பண்றோம்'

அந்த நேரம் பார்த்து அங்க வந்த நம்ம சிஷ்யன் பில்லு பரணி காயத்ரி,பொறந்தநாள்,ட்ரீட் இந்த வார்த்தைகளை கேட்டவுடன பயந்து போய் மெதுவா நழுவராரு, நான் விடுவேனா?:)

'ஏய் பில்லு எங்க போற?'

'ஹிஹி குரு ஒரு முக்கியமான வேலை இருக்கு இதோ போயிட்டு வந்துரேன்'

'உன் முக்கியமான வேலை என்னன்னு தெரியும் அந்த மஞ்சக்காட்டு மைனாவை தான கரெக்ட் பண்ணப்போற? அது அப்புறம் பார்க்கலாம் நம்ம காயத்ரிக்கு நாளைக்கு பொறந்தநாளாம் தெரியுமா?'

'அத கேட்டுட்டு தான் எஸ்கேப் ஆக ட்ரை பண்ணினேன் குரு என்னால பில்லு கட்டி மாளலை, என் க்ரெடிட் கார்டெல்லாம் தேய்ஞ்சே போச்சு என்ன விட்ருங்க :('

'நோ டென்சன் இந்த முறை நம்ம குருகுலத்துல தான கொண்டாடப்போறோம் நீ பில் கட்ட வேணாம் பொழச்சுப்போ'

'ரொம்ப நன்றி குரு அப்ப நாம அழைப்பிதழ் அடிச்சுடலாமா?'

'என் பொறந்தநாளைக்கே இப்டி தடபுடல் பண்ணல இந்த காயத்ரிக்கு வந்த வாழ்வை பாரு' என்று மனசுக்குள் புகைந்தபடி 'சரி அதுக்கு முன்னாடி நம்ம பரமார்த்த குருகிட்ட சீசீ பரம குரு கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு'

'அய்யோ குரு அவரு கிட்ட போனாலே உறுமராரு'

'அவரு நிஷ்டையில் ஆழ்ந்து போயி எந்த பிகர் கூடவாவது டூயட்ல இருந்துருப்பாரு அப்ப போயி நீ அவரை தொல்லை பண்ணியிருப்ப சரி விடு நம்ம தலை(வலி)வி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு இல்லேன்னா 'தலைவிக்கு தெரியாம சதி' அப்டின்னு ஒரு பதிவு போட்ருவாங்க, அப்புறம் பி.மு.க தலைவர் கார்த்தி தலைமையில் நடத்தலாம்னு பார்த்தா அவரு சைலண்டா கல்யாணம் காட்சி ஏதோ பண்ணிக்கிட்டாரு போல அதான் ஆளையே காணோம். சரி நீயே பார்த்து அழைப்பிதழ் அடிச்சு எடுத்துக்கிட்டு வா ஷ்யப்பா இதுக்கே கண்ணக்கட்டுது நான் போய் சாப்டுட்டு வரேன் ஒரு மணி நேரம் முன்னாடி சாப்டது அதுக்கப்புறம் எதுவுமே சாப்பிடல'

இப்டியாக கூடி முடிவெடுத்து நம்ம காயத்ரியோட பொறந்தநாளை குருகுலத்துல சிறப்பா கொண்டாட நம்ம சிஷ்யக்கேடிகள் அடிச்ச அழைப்பிதழை பாருங்க (பார்க்கறதோட சரி அதுல இருக்கறதை நம்பி சாப்ட வந்துராதீங்க ஏன்னா பில்லு கட்ட வேண்டிய பரணி எங்கேயோ தலைமறைவா போயிட்டாரு)

"உலகமெங்கும் புகழ்பெற்ற எங்கள் குரு வேதா அவர்களின் தலைமையில் இயங்கும் குருகுலத்தின் பிரதம சிஷ்யை, பதிவுலகத்தின் சொர்ணாக்கா, பி.மு.க வின் செயலாளர், 3000 பின்னூட்டங்கள் வாங்கி ப்ளாக்கரை கதறடிச்ச வீராங்கனை, பின்னூட்ட சூறாவளி, ஜி3 என்று செல்லமாக அழைக்கப்படும் காயத்ரியின் பிறந்த நாளை முன்னிட்டு அம்பிக்கு ஆப்பு வைப்பதையே முழு நேர தொழிலாக ஏற்றுக்கொண்டு அதை இன்று வரை கடைப்பிடுத்து வரும் எங்கள் தானை தலைவலி கீதா அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்க, பி.மு.க முதல்வர் நம்ம நாட்டாமை தலைமையில் தலைவாழை இலை போட்டு விருந்து நடைப்பெற உள்ளதால் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்"

காயத்ரிய தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது(பின்ன, யாரு புதுசா ப்ளாக் ஆரம்பிச்சாலும் நாட்டாமைக்கு போட்டியா புளியோதரைக்கு போய் முதல்ல நிப்பா:))ஆனாலும் நம்ம குமுதம் பாணியில ஒரு சின்ன அறிமுகம், • பெயர் : காயத்ரி என்கிற ஜி3 என்கிற சொர்ணாக்கா என்கிற.......................

  வயது : நாளைக்கு தான் பொறக்கவே போறா

  நிரந்தர தொழில் : இதெல்லாம் ஒரு கேள்வியா? வேறென்ன? உண்பதும்,
  உறங்குவதுமேயல்லால் வேறொன்றும் அறியேன் பராபரமே

  உபதொழில் : ப்ளாக்குவது, ஆர்குட்டுவது, சேட்டுவது, போன் பேசுவது இதெல்லாம் போக நேரம் இருந்ததுனா கொஞ்சம் ஆபிஸ் வேலையும் செய்வது

  திடீர் தொழில் : சென்னை வரும் வலைப்பதிவர்களிடம் ட்ரீட் கேட்டு கிலி ஏற்படுத்துவது

  நண்பர்கள் : நாம எல்லாரும் தான், இருந்தாலும் உங்க செலவுல ட்ரீட் கொடுத்தா நீங்க தான் பெஸ்ட் ப்ரண்ட்

  எதிரிகள் : அவளிடம் ட்ரீட் கேட்பவர்கள்

  பிடித்த பொருள் : சாப்பிட முடிந்த எதுவும்

  பிடிக்காத பொருள் : சாப்பிட முடியாத எதுவும்

  பிடித்த இடம் : அவள் வீட்டில் சமையலறை, அலுவலகத்தில் ஃபுட் கோர்ட் :)

  பிடிக்காத இடம் : அவள வேலை வாங்குற இடம்

  ஒரே பொழுதுபோக்கு : ஹையோ ஹையோ எத்தன வாட்டி தான் சொல்றது?
பி.கு: "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்ரி :)"

58 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

me the firstuu...

வேதா said...

படிக்காம ஏன் கமெண்ட் போடற? :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

Happy Birthday G3.. :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//வேதா said...
படிக்காம ஏன் கமெண்ட் போடற? :)
//

ஹீஹீ..

G3 said...

குருவே.. அசத்திட்டீங்க.. சிரிச்சு சிரிச்சு என் வாய் வலிக்குது :)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் G3. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

Selamat hari jadi G3

.:: மை ஃபிரண்ட் ::. said...

G3 எங்க பார்ட்டி எங்கே?

G3 said...

//அங்க வந்த நம்ம சிஷ்யன் பில்லு பரணி காயத்ரி,பொறந்தநாள்,ட்ரீட் இந்த வார்த்தைகளை கேட்டவுடன பயந்து போய் மெதுவா நழுவராரு//

யாரப்பாத்து என்ன வார்த்தை சொன்னீங்க? இதுக்கெல்லாம் அசற்றவரா அவரு??

G3 said...

//'நோ டென்சன் இந்த முறை நம்ம குருகுலத்துல தான கொண்டாடப்போறோம் நீ பில் கட்ட வேணாம் பொழச்சுப்போ'//

அவ்வ்வ்வ்வ்வ்வ்.. எம்புட்டு பெரிய மனசு உங்களுக்கு.. அப்போ நாளைக்கு ட்ரீட் லொகேஷன் சேஞ்சா? ஹோட்டல் இல்லயா? உங்க வீட்லயா?

G3 said...

//என் பொறந்தநாளைக்கே இப்டி தடபுடல் பண்ணல இந்த காயத்ரிக்கு வந்த வாழ்வை பாரு' //

நோ பொகைஸ் :P

.:: மை ஃபிரண்ட் ::. said...

// G3 said...
குருவே.. அசத்திட்டீங்க.. சிரிச்சு சிரிச்சு என் வாய் வலிக்குது :))) //

எனக்கு தலை வலிக்குது. :-P

G3 said...

//உலகமெங்கும் புகழ்பெற்ற எங்கள் குரு வேதா //

உங்க விளம்பரம் ஓவரா இருக்கே ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//யாரப்பாத்து என்ன வார்த்தை சொன்னீங்க? இதுக்கெல்லாம் அசற்றவரா அவரு?? //

அதானே அண்ணன் பரணி அசருவாரா?

G3 said...

//காயத்ரி என்கிற ஜி3 என்கிற சொர்ணாக்கா என்கிற.......................//

ஓவர் கொலைவெறியா இருக்கும் போல இருக்கே.. நாளைக்கு உங்களுக்கு ட்ரீட் நான் குடுக்கனுமா?

G3 said...

வாழ்த்துக்களுக்கும் அழைப்பிதழுக்கும் நன்றி குருவே :)

G3 said...

3 மொழிகளில் வாழ்த்திய மை ப்ரெண்டுக்கு ஸ்பெஷல் நன்றி :)

உனக்கு இல்லாத பார்ட்டியா.. நீ சென்னை வரும் போது உனக்கு நிச்சயமா ட்ரீட் உண்டு :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

Selamat Hari Jadi G3...

.:: மை ஃபிரண்ட் ::. said...

innum post padikkalai.. athukku innoru thadavai varren. varddaa...

வேதா said...

@காயத்ரி,
/யாரப்பாத்து என்ன வார்த்தை சொன்னீங்க? இதுக்கெல்லாம் அசற்றவரா அவரு?? /
அசந்துட்டாரே அதான் ரொம்ப நாளா ஆளை காணல :)

/அப்போ நாளைக்கு ட்ரீட் லொகேஷன் சேஞ்சா? ஹோட்டல் இல்லயா? உங்க வீட்லயா? /
ஹிஹி அதெல்லாம் நாங்க உஷாரில்ல :) வீட்டுல கொடுத்தா அது ட்ரீட் இல்ல கண்ணா :)

/நோ பொகைஸ் :P /
ஹிஹி அத நோட் பண்ணிட்டியா? :)

/நாளைக்கு உங்களுக்கு ட்ரீட் நான் குடுக்கனுமா?/
மவளே நான் எதுக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு பதிவு போட்ருக்கேன் :)

/உங்க விளம்பரம் ஓவரா இருக்கே ;) //
நியாயமா பார்த்தா இந்த வெளம்பரமெல்லாம் நீ தான் கொடுக்கணும் :)

@மைபிரண்ட்,
அடிப்பாவி நீ இன்னுமா பதிவை படிக்கல :)

Sumathi. said...

ஹாய் வேதா,

கலக்கிடீங்க போங்க... சூஊஊஊப்பர்.

G3 க்கு MANY MANY HAPPY RETURNS.

கீதா சாம்பசிவம் said...

எனக்கு பிறந்த நாள் வந்துச்சு, யாரும் கண்டுக்கவே இல்லை, ஏன் உங்களை விடச் சின்னவங்கிறதாலே தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஜி3, காபி, பேஸ்டுக்கே புது அர்த்தம் கொடுத்த வள்ளலே, நீடூழி வாழ்க1 மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் ஜி3 செய்து கொண்டு இருக்கவும் வாழ்த்துகிறேன்.

Dreamzz said...

இப்படி உள்குத்தா போட்டு, வாழ்த்ஹ்தும் சொல்லறீங்க!

Dreamzz said...

என்ன அநியாயம் இது. பாவம் G3

Dreamzz said...

//படிக்காம ஏன் கமெண்ட் போடற? :) //
இதுல இது வேறயா??

பிளைட் ஏறுபவனுக்கு எல்லாம் அத ஓட்ட தெரியனும்னு இல்ல. அதே மாதிரி, கமெண்ட் போடறவங்க எல்லாம் அத படிக்கனும்னும் இல்ல!

Dreamzz said...

25 ஆச்சா??

Dreamzz said...

25?

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் G3 :)

k4karthik said...

//அத கேட்டுட்டு தான் எஸ்கேப் ஆக ட்ரை பண்ணினேன் குரு என்னால பில்லு கட்டி மாளலை, என் க்ரெடிட் கார்டெல்லாம் தேய்ஞ்சே போச்சு என்ன விட்ருங்க :('//

தம்பி பாவம்... விட்ருங்க...

இல்லேனா.. கொஞ்சம் தெளியவச்சு அடிங்க...

k4karthik said...

//இருந்தாலும் உங்க செலவுல ட்ரீட் கொடுத்தா நீங்க தான் பெஸ்ட் ப்ரண்ட்//

சான்சே இல்ல....

ளோள் ;-)

k4karthik said...

/ஒரே பொழுதுபோக்கு : ஹையோ ஹையோ எத்தன வாட்டி தான் சொல்றது?//

சூப்பரப்ப்ப்ப்ப்ப்பு....

k4karthik said...

வேதா அக்கா..கொஞ்சம் மாடரேஷன் எடுத்து விட்டீங்கன்னா.. நல்லா கும்மி அடிப்போம்...என்ன சொல்றீங்க?

மஹா said...

பொறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி3

@ வேதா குருவே,நான் ஏகலைவன் மாதிரி..என்னை உங்க சிஷ்யனா ஏத்துக்கோங்க..

.:: மை ஃபிரண்ட் ::. said...

வேதா, நான் ஒன்னு சொல்வேன். என்னை திட்ட கூடாது. ஓகே?

.:: மை ஃபிரண்ட் ::. said...

இன்னும் உங்க போஸ்ட் படிக்கலை

.:: மை ஃபிரண்ட் ::. said...

அதான் திட்ட கூடாதுன்னு சொன்னேன்ல.. இப்போ படிக்கதானே வந்திருக்கேன். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அதுக்கு முன்னே கமேண்டுகளை படிச்சுட்டு வாரேன். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//@மைபிரண்ட்,
அடிப்பாவி நீ இன்னுமா பதிவை படிக்கல :) //

அதான் மேலே விளக்கமா சொல்லிட்டோம்ல. :-D திரும்ப திரும்ப இதையே கேட்டா, ஒரே பதிலைத்தான் எத்தனை தடவை ரிப்பீட்டே சொல்றது? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//Dreamzz said...
//படிக்காம ஏன் கமெண்ட் போடற? :) //
இதுல இது வேறயா??

பிளைட் ஏறுபவனுக்கு எல்லாம் அத ஓட்ட தெரியனும்னு இல்ல. அதே மாதிரி, கமெண்ட் போடறவங்க எல்லாம் அத படிக்கனும்னும் இல்ல!
//

அப்படி போடு அறிவால. :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பெயர் : காயத்ரி என்கிற ஜி3 என்கிற சொர்ணாக்கா என்கிற.......................//

கோடிட்ட இடத்தை நிரப்பவும்????

.:: மை ஃபிரண்ட் ::. said...

//வயது : நாளைக்கு தான் பொறக்கவே போறா//

இது அநியாய்ம்.. அவங்க கேக்குல உள்ள கேண்டல்ஸை எண்ணி பாருங்க. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பிடித்த பொருள் : சாப்பிட முடிந்த எதுவும்

பிடிக்காத பொருள் : சாப்பிட முடியாத எதுவும்//

:-))))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

வேதா, இந்த கமேண்ட் மோடரேஷன் வேண்டாமே? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஒரே பொழுதுபோக்கு : ஹையோ ஹையோ எத்தன வாட்டி தான் சொல்றது?
//

தூள். :-)

J K said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் G3

கோபிநாத் said...

\\நம்ம நாட்டாமை தலைமையில் தலைவாழை இலை போட்டு விருந்து நடைப்பெற உள்ளதால் அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்"\\

கண்டிப்பா வந்துடுவோம்ல :)

கோபிநாத் said...

\ G3 said...
குருவே.. அசத்திட்டீங்க.. சிரிச்சு சிரிச்சு என் வாய் வலிக்குது :))) \\

அப்ப இன்னும் ரெண்டு நாளைக்கு சாப்பிட மாட்டிங்க :)

கோபிநாத் said...

\\ .:: மை ஃபிரண்ட் ::. said...
//பெயர் : காயத்ரி என்கிற ஜி3 என்கிற சொர்ணாக்கா என்கிற.......................//

கோடிட்ட இடத்தை நிரப்பவும்????
\\\

நல்லவுங்க

ரொம்ப நல்லவுங்க

ரொம்ப ரொம்ப நல்லவுங்க

(G3 காசு கரைட்ட அக்கவுண்டுக்கு வந்துடணும்)

கோபிநாத் said...

\கீதா சாம்பசிவம் said...
எனக்கு பிறந்த நாள் வந்துச்சு, யாரும் கண்டுக்கவே இல்லை, ஏன் உங்களை விடச் சின்னவங்கிறதாலே தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\\

அய்யோ...எனக்கு மயக்கமா வருதே யாரவது கொஞ்சம் என்னை பிடிங்கப்பா :)

கோபிநாத் said...

50 நான் தான்

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் :)

வேதா said...

காயத்ரி எங்கேயிருந்தாலும் வந்து எல்லா கமெண்டுக்கும் பதில் போடு :)

G3 said...

நன்றி!!! நன்றி!! பதிவு போட்ட உங்களுக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)

மு.கார்த்திகேயன் said...

ஆஹா.. வேதா.. அசத்தல் போஸ்ட்.. G3க்கு அருமையான பிறந்த நாள் வாழ்த்து போஸ்ட்

மு.கார்த்திகேயன் said...

//அப்டின்னு ஒரு பதிவு போட்ருவாங்க, அப்புறம் பி.மு.க தலைவர் கார்த்தி தலைமையில் நடத்தலாம்னு பார்த்தா அவரு சைலண்டா கல்யாணம் காட்சி ஏதோ பண்ணிக்கிட்டாரு போல அதான் ஆளையே காணோம்.//

ஆஹா..கொஞ்ச நாள் அமைதியா இருந்தா இப்படி எல்லாமா வதந்தி பரப்புறது வேதா.. இன்னும் நான் பிரம்மசாரி தான்

வேதா said...

@கார்த்திக்,
தலைவரே உங்கள வெளில வரவழைக்க எப்டியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க :) அப்ப கூட யாரோ சொல்லி தான் வந்துருக்கீங்கன்னு நினைக்கறேன் :)

மு.கார்த்திகேயன் said...

என்ன பண்றதுங்க வேதா.. வேலை.. சுற்றி நிறைய நண்பர்கள், வீட்டில் இருக்க முடிவதில்லை.. அதனால் சரி வர எழுத படிக்க முடியவில்லை..

ரசிகன் said...

ஆஹா.. ஏனுங்க வேதா.. நீங்க இப்பிடியெல்லாம் கூட எழுதுவிங்களா?..
இந்த உலகத்துல யாரையுமே நம்ப முடியலைப்பா..ஹிஹி..
அதுவும் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான்...
கலக்கிட்டீங்க.. உங்களுக்குள்ள இம்புட்டு நகைச்சுவை உணர்வு இருக்குங்கறது ஆச்சர்யமாயிருக்குங்க..
எதிர்பாக்காத இடத்துல.. அதுவும் எதிர்பார்க்காதவிங்ககிட்ட..
மனம்-உண்மை முகமுன்னாக்கா... உங்களுக்கு பல முகங்கள் இருக்கும் போலயிருக்கே...
சூப்பராயிருக்குதுப்பா.. நெறய நகைச்சுவையும் எழுதுங்களேன்..

வேதா said...

ரசிகன் என்ன இப்டி கேட்டுப்புட்டீங்க? நாம எப்பவும் சீரியஸ் கேரக்டர்னு தப்பு கணக்கு போட்டுட்டீங்க அப்பப்ப இப்டி தான் நகைச்சுவையும்(!)பொங்கி வரும் :D