Friday, September 07, 2007

அந்த நொடி..


















படப்படத்த இதயத்தின்
வாசலை அடைத்து
ஊசி முனை தவமாய்
காத்திருந்தேன்
அந்த நொடியின்
வரவிற்கு..


கையில் ஏந்திய
புத்தகத்தின் தாள்கள்
எள்ளி நகையாடின
வார்த்தைகளை விடுத்து
வரிகளினூடே ஓடும் வெற்றிடத்தை
மட்டுமே என் கண்கள் தழுவியதை அறிந்து..

அர்த்தமிலா வார்த்தைகள்
சுமந்த என் மொழி
எதிரில் அமர்ந்தவரின்
எண்ணத்தை உறுதி செய்தது
என் மனபிறழ்வை பற்றி..

பாசாங்குகள் நிறைந்த
கணங்கள் தேயத் தேய
எதிர்பார்த்த நொடியின் அருகாமை
என் காத்திருப்பின்
மதிப்பை கேலி செய்தது..

அந்த நொடியும்
வந்தது
.
.
.
.
.
.
சென்றது..

19 comments:

Sumathi. said...

ஹாய் வேதா,

வாவ்... அருமை. எப்படி இப்படியெல்லாம் உங்களால எழுத முடியுதோ? பொறாமையா இருக்கு...

J K said...

அந்த நொடி வந்தது போனது ஓ.கே.

ஏன் அந்த நொடிக்காக காத்திருந்தீங்கனு சொன்னா இன்னும் நல்லாயிருக்குமே!.

கோபிநாத் said...

கவிதை நல்லாயிருக்கு :)

My days(Gops) said...

//அந்த நொடியின்
வரவிற்கு..//

நாங்க எல்லாம் கை கடிக்காரத்தை மட்டுமே பார்த்துட்டு இருப்போம் :(..

My days(Gops) said...

//அந்த நொடியும்
வந்தது
.
.
.
.
.
.
சென்றது..
//


:( அட என்னங்க ஒன்னுமே புரியல? யாரு வந்தா?

My days(Gops) said...

@சுமதி அக்கா:- //உங்களால எழுத முடியுதோ? பொறாமையா இருக்கு//

அவங்க ஒனிடா டிவி வச்சி இருப்பாங்க போல.. ஹி ஹீ

ambi said...

கவிதை எல்லாம் வழக்கம் போல நல்லா தான் இருக்கு. இதனால் தாங்கள் இங்கு கூற வரும் கருத்து? (ஹிஹி, ஏதோ என்னால முடிஞ்சது) :p

வேதா said...

@சுமதி,
யக்கா என்னய பார்த்து பொறாமப்படறீங்களா? ஹிஹி காமெடி பண்ணாதீங்க :)

@ஜேகே,
/ஏன் அந்த நொடிக்காக காத்திருந்தீங்கனு சொன்னா இன்னும் நல்லாயிருக்குமே!./
கவிதைய படிச்சோமா போனோமான்னு இருக்கனும் இப்டியெல்லாம் கேள்வி கேட்கப்படாது :)

@கோபிநாத்,
நன்றிங்க :)

@ கோப்ஸ்,
/நாங்க எல்லாம் கை கடிக்காரத்தை மட்டுமே பார்த்துட்டு இருப்போம் :(../

ஹிஹி விவிசி :)

/அட என்னங்க ஒன்னுமே புரியல? யாரு வந்தா?/

யாரும் வரலங்க :)

@அம்பி,
கருத்தா? ஆகா ஏங்க இப்டி எப்பவுமே ஒரு கொலவெறியோட சுத்தறீங்க :)

G3 said...

//கையில் ஏந்திய
புத்தகத்தின் தாள்கள்
எள்ளி நகையாடின
வார்த்தைகளை விடுத்து
வரிகளினூடே ஓடும் வெற்றிடத்தை
மட்டுமே என் கண்கள் தழுவியதை அறிந்து..
//

:)))))

G3 said...

கவிதை அருமை.. அசத்திட்டீங்க :)

//வந்தது//
//சென்றது.. //

வந்தப்புறம் என்ன நடந்துதுன்னும் சொல்லல.. போனப்புறம் எப்படி பீல் பண்ணீங்கன்னும் சொல்லல :(

கீதா சாம்பசிவம் said...

கவிதைப் பக்கம் என்ன ஆச்சு?
பி.கு.கவிதை குறிப்பால் உணர்த்தியது யாருக்குமே நிஜமாப் புரியலையா? :P

Dreamzz said...

என்னங்க பொன்னு பார்த்திட்டு போனாங்களா என்ன??

Dreamzz said...

கவிதை அருமையா இருக்கு. :)

வேதா said...

@காயத்ரி,
உண்மையிலேயே கவிதை புரியலியா உனக்கு? :) வந்துப்போனப்புறம் என்னத்த பீல் பண்ணப்போறோம் ?:)

@கீதா,
கவிதை பக்கமும் இருக்கு :)
/கவிதை குறிப்பால் உணர்த்தியது யாருக்குமே நிஜமாப் புரியலையா? :P/

உங்களுக்கு புரிஞ்சுதா?:)

@ட்ரீம்ஸ்,
அடப்பாவி நான் சொல்ல வந்தது என்ன நீ என்ன புரிஞ்சுக்கிட்ட? :)

Balaji S Rajan said...

Veda,

Romba think panna vendamnu parkarane... Please neengaley sollidunga please...

நாகை சிவா said...

:-)

:-((

வேதா said...

@பாலாஜி,
நீங்க ரொம்ப யோசிக்காதீங்க :)

@சிவா,
என்ன சொல்ல வரீங்க?
(இத தான் நானும் கேட்கறேன்னு சொல்லிடாதீங்க :))

Compassion Unlimitted said...

Very nice..thendral ena vandana avvarigal

CU

வேதா said...

@cu,
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி, தொடர்ந்து வாருங்கள்:)