Sunday, September 16, 2007

முதல்வன்... அவன் தாள் பணிவோம்..


குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் தங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமாய், தோழனாய், தம்மில் ஒருவராய் கருதும் கடவுளர்கள் என்றால் பிள்ளையாரும், கிருஷ்ணரும் தான் என்பது என் கருத்து. குழந்தைகளுக்கு மிகவும் எளிதாய் பிடித்துவிடும் ஒரு தோற்றத்துடன் இருப்பது பிள்ளையார் தான். பிள்ளையார் சதுர்த்தி விழாக்களை இப்பொழுது கொண்டாடுவது போல் பிரம்மாண்டமாக பல வருடங்களுக்கு முன் பார்த்ததில்லை என்று என் அம்மா சொல்வதுண்டு. திருமணத்திற்கு முன்பு அவங்க அம்மா வீட்டில் விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் வாங்கி தனியாக பூசையெல்லாம் செய்யும் வழக்கமெல்லாம் கூட இல்லை என்று சொல்லியிருக்கிறார். இதற்கும் என் அம்மாவின் அம்மா ஒரு பிள்ளையார் பக்தை :) எதற்கெடுத்தாலும் பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொள்வார், எங்க கஷ்டத்துக்கு மட்டுமல்ல பிறருடைய கஷ்டத்துக்கும் சேர்த்து தான். எங்கு விநாயகர் சிலை கண்டாலும் அங்கு நின்று விடுவார். 'போச்சுடா உங்க ப்ரெண்ட் கூட பேச ஆரம்பிச்சுட்டீங்களா? இனி அரை மணி நேரத்துக்கு நகர மாட்டிங்க' என்று நாங்க கூட அலுத்துக்கொள்வோம்:) அவருக்கும் பிள்ளையாருக்குமான அந்த அழகான நட்புணர்வு அவருடைய கடைசி காலம் வரை நீண்டது, பிள்ளையார் என்றாலே என் பாட்டி நினைவு வரும் அளவுக்கு :)தம்முடைய பிறந்த வீட்டில் இல்லாத பழக்கம் அதாவது பிள்ளையார் சதுர்த்தியன்று பிள்ளையார் சிலை வாங்கி வைத்து பூசை செய்து தண்ணீரில் கரைப்பது எல்லாம் திருமணத்திற்கு பிறகு என் அம்மாவிற்கு மிகவும் புதியதாக இருந்தது. பின் அதுவே வழக்கமாகி விட்டது. பிள்ளையார் சதுர்த்தி அன்று காலையில் தலைக்கு குளித்து விட்டு நானும் என் தம்பியும் தான் பிள்ளையார் வாங்க செல்வோம். செயற்கை வண்ணப்பூச்சுகள் இல்லாத களிமண் பொம்மை தான் எப்போதும் எங்க விருப்பம். அதுவும் மிக சிறிய அளவிலானது தான், கூடவே அன்று பிள்ளையாருக்கு அணிவிக்க எருக்கம்பூ மாலையும், அழகான வண்ண காகிதத்தில் செய்யப்பட்ட ஒரு குட்டி குடையும் வாங்குவோம்((அதை அப்படியே வைத்திருந்து நவராத்திரியில் அலங்கரிக்க பயன்படுத்துவோம்). சாதாரணமாக அந்த எருக்கம்பூவை யாரும் சீந்தக்கூட மாட்டார்கள். ஆனால் அன்று ஒரு நாள் மட்டும் அந்த பூவுக்கு அவ்வளவு கிராக்கி. ரயில் தண்டவாளங்களின் ஓரம் நிறைய பூத்து இருக்கும் அந்த பூக்களை விற்று அதில் சிறிது காசு பார்க்கும் நிறைய சின்ன பசங்க/பொண்ணுங்க, அக்கா அக்கா என்கிட்ட வாங்கிக்கோங்க என்று சுற்றி சுற்றி வருவார்கள். அன்று ஒரு நாளில் பெரிய வருமானம் அவர்களுக்கு இல்லையென்றாலும் நாம் வாங்குவதால் அவர்களுக்கு சிறிதளவேனும் பலன் இருப்பதில் ஒரு மன திருப்தி தான் இல்லையா?

பிள்ளையாரை வாங்கி முடித்தவுடன்(!) அவரை பூசையறையில் கோலம் இட்ட ஒரு மணைப்பலகையில் வைத்து என் பாட்டி(அப்பாவின் அம்மா) செய்யும் முதல் வேலை அவருக்கு ஒரு நாமத்தை போட்டு தும்பிக்கையாழ்வாராக மாற்றுவது தான். நானும் என் தம்பியும் கூட எங்களுக்குள் சொல்லி சிரித்துக்கொள்வோம், விபூதி பட்டை பூச வேண்டிய பிள்ளையாருக்கு நாமத்தை போடறாங்களே என்று:) ஆனாலும் அது அவங்க விருப்பம் என்பதாலும் தெய்வத்தை தம் மனதிற்கு நெருக்கம் தரும் அடையாளத்தோடு அவர் பார்க்க விரும்புவதை தடை சொல்ல முடியாது என்பதாலும், நமக்கு ஒழுங்கா சுண்டல், வடை, பாயசம் வந்தால் போதும் என்பதாலும் ஹிஹி நாங்க எதுவும் வெளிய சொல்லிக்க மாட்டோம்:) அப்புறம் விநாயகர் அகவல் படித்து எங்க பாட்டி பூஜை செய்வார். நானும் என் தம்பியும் மட்டும் அருகில் அமர்ந்து சுண்டல் எப்ப தருவாங்கன்னு காத்துக்கிட்டு இருப்போம், எங்க வீட்டுல கொழுக்கட்டை செய்யும் வழக்கமில்லாததால் இங்க சுண்டல் வேட்டை முடிச்சுட்டு எங்க பெரியம்மா வீட்டுக்கு போனா கொழுக்கட்டை கிடைக்கும்னு ரொம்ப ஆவலோட உட்கார்ந்திருப்போம் :) பூசை முடிந்து நைவேத்தியம் ஆன அடுத்த நொடி என் தம்பி சுண்டலை எடுத்துக்கொண்டு ஓடி விடுவான், என்னை மட்டும் ஒரு பாட்டு பாடுன்னு சொல்லி எங்கம்மா தடுத்துடுவாங்க, நானும் சரி அம்மா சொல்றாங்களேன்னு பாடுவேன், (ஹிஹி இது வரைக்கும் பிள்ளையார் எழுந்து ஓடல:)) இந்த வருடம் என் தம்பியும் ஊரில் இல்லை, என் பாட்டியும் கடந்த சில வருடங்களாக பூசை செய்யும் நிலைமையில் இல்லாததால் நான் தனியாக சென்று பேரம் பேசி களிமண்ணில் செய்த சிறிய அழகான பிள்ளையார் வாங்கி நானே பூசையும் செய்தேன்:)


பிள்ளையார் சதுர்த்தி வந்தாலே அடுத்தடுத்து பண்டிகைகள் தான். அடுத்து வரும் நவராத்திரி பண்டிகை எனக்கு மிகவும் பிடித்த பண்டிகையும் கூட, நம்ம காயத்ரி கூட வலையுலகத்துல நவராத்திரி கொண்டாடலாம்னு சொல்லியிருக்கா யார் யாருக்கு என்னென்ன வேடம் பொருந்தும்னு நம்ம மக்கள் அங்க போய் தங்கள் கருத்துக்களை சொல்லலாம்:) சீக்கிரம் முடிவு பண்ணிட்டா வர்ர கொலுவில் உங்க எல்லாரையும் உட்கார வைக்க வெயிட்டா படிகள் ஏற்பாடுகள் பண்ணிடலாம் :)

பி.கு : நேத்தே முடிஞ்சு போன பிள்ளையார் சதுர்த்திக்கு இவ்ளோ மொக்கையா ஒரு பதிவான்னு நீங்க பீல் பண்ணினா பிள்ளையார் மகத்துவத்தை பத்தி அழகா நம்ம சங்க தலைவலி கீதா எழுதியிருக்கறதை படிச்சுப்பாருங்க :)

பி.கு.கு : தாமதமாக பதிவு போட காரணம் என் தம்பி ஊரில் இல்லாததால் அவன் பங்கு சுண்டல், வடை, கொழுக்கட்டை எல்லாவற்றையும் சாப்பிடும் முக்கிய வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது தான் :)

15 comments:

k4karthik said...

//அவன் பங்கு சுண்டல், வடை, கொழுக்கட்டை எல்லாவற்றையும் சாப்பிடும் முக்கிய வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது தான் :)//

இத நீங்க நேரடியாவே சொல்லி இருக்கலாம்... தேவையே இல்லாம பிள்ளயார் பத்தி சொல்லி சுத்தி வளைச்சி... ஏன்? ஏன்?

எங்க அக்கா-வா இருந்துருந்தா இந்நேரம் அந்த சுண்டல் கதையே ஒரு பக்கத்துக்கு போஸ்ட் போட்டு அசத்திருப்பாங்க...

G3 said...

unmaiya soldren naan postai padikkavae illai :P (Ivlo perusava ezhudharadhu :(( )

Aanalum attendence poduven illa :))

G3 said...

En postukku link kuduthirukkeenga :))

Nandri hai :D

Compassion Unlimitted said...

ARUMAI..Naamam pottu konda andha pillayarin punsirippukku artham enna ?

God Bless

CU

Balaji S Rajan said...

வேதா,

திங்கள் விடியற்காலை 2 மணிக்கு உங்க போஸ்ட் படிக்க வேண்டியது ஆயிடுச்சு. இப்ப சுண்டல் சாப்பிடனும்னு ஆசை வந்துடுச்சு போங்க. பாட்டி நாமம் போட்டது, நீங்க பண்டிகையை விட்டு குடுக்காமல் (சுண்டலையும்தேன் சொல்றேன்) கலக்கிட்டீங்க போங்க. அட்லீஸ்ட் ஒரு போட்டோவாது போட்டு இருக்கலாம்.

ambi said...

தம்பி பங்கு சுண்டலையும் அமுக்கியாச்சா? இந்த பக்கமும் கொஞ்சம் திருப்பி விடறது! :))

கொழுக்கட்டை பிடிக்கற மகத்தான பணியை தங்கு என் தலையில் கட்டியதால் நோ பதிவு. :p

வேதா said...

@கே4கே,

/தேவையே இல்லாம பிள்ளயார் பத்தி சொல்லி சுத்தி வளைச்சி... ஏன்? ஏன்?/
ஹிஹி எப்டியும் மக்களுக்கு என்ன பத்தி தெரியும் அதான் சும்மா :)

/எங்க அக்கா-வா இருந்துருந்தா இந்நேரம் அந்த சுண்டல் கதையே ஒரு பக்கத்துக்கு போஸ்ட் போட்டு அசத்திருப்பாங்க.../
உண்மை தான் அந்த விசயத்துல நம்ம காயத்ரிய யாராலேயும் மிஞ்ச முடியாது :)

@காயத்ரி,
அடிப்பாவி உன் பதிவுக்கு ஓசில வெளம்பரம் கொடுத்துருக்கேன் இதுக்கே நீ எனக்கு 10 பின்னூட்டங்கள் போடனும் :)

@cu,
/Naamam pottu konda andha pillayarin punsirippukku artham enna ?/
எப்டி இருந்தாலும் ஓகே அப்டின்னு அர்த்தம் :)
நன்றி :)

@பாலாஜி,
நீங்க நடுசாமத்துல இந்த பதிவு படிச்சு பசி எடுத்தா அதுக்கு நான் எப்டி பொறுப்பாக முடியும்?:)
புகைப்படங்கள் எடுக்க கேமரா கைவசம் இல்லை, என் தம்பி ஊருக்கு போகாமல் இருந்திருந்தால் அவன் அலைபேசியில் எடுத்திருக்கலாம் :(

@அம்பி,
என்ன இன்னிக்கு இவ்ளோ தாமதம், சுண்டல் கலெக்ஷனுக்கு முதல்ல வந்து நிப்பீங்கன்னு எதிர்ப்பார்த்தேன் :)

/கொழுக்கட்டை பிடிக்கற மகத்தான பணியை தங்கு என் தலையில் கட்டியதால் நோ பதிவு. :p/
அட அட என்ன ஒரு பணிவு :)

நாகை சிவா said...

எங்க ஊர்ல எல்லாம் விநாயகர் சதுர்த்திய ரொம்ப பெரிசா பண்ணுவாங்க... எங்க ஊருல இருந்து 32 அடி விநாயகர் புறப்பட்டு நாகூர்ல போய் கடல்ல கலப்பாங்க... அந்த விநாயகர் ஊர்வலத்து அப்ப பல விதமான நிகழ்ச்சிகளும் நடக்கும், திண்டுக்கல் தப்பு ஆரம்பிச்சி சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் அப்படி இப்படி பயங்கர அமர்களமா இருக்கும்... அது போக ஊருல இருக்குற எல்லாரும் முக்கியமா பொண்ணுகளும் இதை பாக்க வருவாங்க.... விநாயகரின் அருளும் கிடைச்ச மாதிரி இருக்கும், அவங்க தரிசனமும் கிடைச்ச மாதிரி இருக்கும்....

கீதா சாம்பசிவம் said...

அட, விநாயகா, கொழுக்கட்டை சாப்பிட்டு முடியும் வரை பதிவு போட்டதே சொல்லவில்லையே? இப்படி ஒரு தொண்டரா எனக்கு? போகட்டும், ஹிஹி இலவச விளம்பரம் கிடைச்சதாலே பேசாம இருக்கேன்.
அப்புறம் நவராத்திரிக்கு எனக்குச் சின்னக் குழந்தை வேஷம் தானே? காயத்திரிகிட்டே போய்ச் சொல்லிடறேன். இவங்க தான் இந்த வாரற நட்சத்திரமா? ஹிஹி, தப்பாப் போச்சோ? வாரற, இல்லை, வாரனு வரணும் போலிருக்கே! :P

Dreamzz said...

நல்ல வேலை உங்க கிட்ட சொன்னாங்க!

Dreamzz said...

//இத நீங்க நேரடியாவே சொல்லி இருக்கலாம்... தேவையே இல்லாம பிள்ளயார் பத்தி சொல்லி சுத்தி வளைச்சி... ஏன்? ஏன்?//
ரிப்பீட்டு!

வேதா said...

@சிவா,
/விநாயகரின் அருளும் கிடைச்ச மாதிரி இருக்கும், அவங்க தரிசனமும் கிடைச்ச மாதிரி இருக்கும்..../
அது சரி இதெல்லாம் எங்க ஊரிலும் நடக்கும் ;)

@கீதா,
/கொழுக்கட்டை சாப்பிட்டு முடியும் வரை பதிவு போட்டதே சொல்லவில்லையே? இப்படி ஒரு தொண்டரா எனக்கு?/
சாப்பிடும் போது எப்டி சொல்ல முடியும்? :)

தொண்டரை இப்டியெல்லாம் தப்பா எடை போடக்கூடாது உங்க பதிவுக்கு இலவச விளம்ப்ரம் வேற கொடுத்துருக்கேன் :)

/காயத்திரிகிட்டே போய்ச் சொல்லிடறேன். இவங்க தான் இந்த வாரற நட்சத்திரமா?/
நீங்க எந்த காயத்ரிய சொல்றீங்க ஜி3 அக்கா கிடையாது நட்சத்திரமா மின்னுறவங்க வேற காயத்ரி :)

@ட்ரீம்ஸ்\,
என்ன சொன்னாங்க? யார் சொன்னாங்க?

Arunkumar said...

எங்க ஏன் சுண்டல்
எங்க ஏன் சுண்டல் ???

Arunkumar said...

பிள்ளையார் பொறந்ததே நாம சுண்டல் சாப்புடத்தான... ஹி ஹி
நல்லா கொண்டாடியிருக்கீங்க..

எங்க வீட்லயும் சுண்டல் மட்டும்தான் ஆனா இங்க அமெரிக்காவுல நண்பர்களோட சேந்து நாங்களே புள்ளையார செஞ்சி நாங்களே சுண்டல் அண்ட் கொழுக்கட்டை செஞ்சி :) அத ஏன் கேக்குறீங்க..
வெகு விமர்சையா கொண்டாடிட்டோம்....

ஆஹா போட்டோஸ் போட்டு ஒரு போஸ்ட் போடலாம் போல இருக்கே.. நானும் உயிரோட இருக்கேன்னு இந்த ஊருக்கும் தெரியும்ல :)

வேதா said...

@அருண்,
நிறைய பேருக்கு அந்த சந்தேகம் உண்டு, அதனால் சீக்கிரம் ஒரு பதிவை போட்டு நீங்க உயிரோட இருக்கறதை நிரூபிங்க :)