Thursday, September 20, 2007

போய் வா!

எதுவும் படிக்க தோணாமல், எழுத தோணாமல் அசுவாரஸ்யமாய் தொலைக்காட்சியில் முழுகி இருந்த பொழுது வந்தது அந்த மரணச் செய்தி. 'என்னது? அப்படியா? எப்ப? என்ன இப்டி சொல்றடா?' என்று என் தந்தை பேசும் போதே கண்டுப்பிடித்து விட்டேன், அவர் உன் தந்தையிடம் தான் பேசுகிறார் என்றும் உன் குடும்பத்தில் தான் மரணம் என்றும். மனம் அவசர அவசரமாக எல்லாரையும் வரிசையில் நிறுத்தி பார்த்தது, என்றோ இறந்து போன உன் தம்பியும், சில வருடங்களுக்கு முன் இறந்துப் போன உன் பாட்டியையும் தவிர்த்து வேறு யாரையும் நினைக்க தோணவில்லை. அதனால் தான் என் தந்தை சொன்ன போது நம்ப முடியவில்லை இறந்தது நீ தான் என்று. உன் மரணச்செய்தியை விட அதிர்ச்சி தந்தது உன் மரணம் எதிர்ப்பார்க்கப்பட்டது தான் என்ற செய்தி.

உன்னை பார்த்து பல வருடங்கள் ஆயினும் உன் தந்தையை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்திருந்தது. ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் உன்னை பற்றி விசாரிப்பேன். நீ என்னை விட 4,5 வருடங்கள் மூத்தவள் என்றாலும் உன்னை என் வயதை ஒத்தவளாக தான் நினைத்து பழகியிருக்கிறேன். உன் பெயரை சொன்னவுடன் எனக்கு நினைவுக்கு வரும் விடயம் உன் கால் கொலுசு சத்தம் தான். என்னுடைய சிறு வயதில் தான் உன் குடும்பம் எங்கள் வீட்டில் குடித்தனம் வந்தது. அப்பொழுது உன் கொலுசு சத்தம் கலீரென்று கேட்க நீ எங்கள் வீட்டில் வலம் வருவாய், உண்மையை சொல்லப்போனால் இரவில் நீ நடக்கும் பொழுது நான் பயந்துப்போய் உன் பெயரை சொல்லி அழைப்பேன் நீ தானென்று உறுதி செய்ய. சில சமயங்களில் பதில் சொல்வாய், பல சமயங்களில் என்னை பயமுறத்த பதில் சொல்லாமல் கொலுசு சத்தத்தை அதிகமாக்கி புன்சிரிப்புடன் ஓடுவாய். இப்பொழுதும் யாராவது நிறைய முத்துக்களோடு கூடிய கொலுசுகள் அணிந்துச் செல்லும் பொழுது உன் நினைவு தான் வருமெனக்கு.

உன்னுடன் நெருங்கி பழகவில்லையென்றாலும் உன் மீதான அக்கறை ஏதோ ஒன்று என் மனதின் மூலையில் இருந்திருக்கிறது அதனால் தான் தொடர்பு அறுந்து பல வருடங்கள் ஆயினும் உன் தந்தையிடம் உன்னை பற்றி விசாரிக்க எனக்கு தோன்றியது. இத்தனை வருடங்களில் இந்த விசாரிப்பின் பதில்கள் ,'இருக்கிறாள் அம்மா', 'திருமணம் ஆகிவிட்டது','மருமகன் சரியில்ல',பையன் பொறந்திருக்கான்', 'பேரன் நல்லா படிக்கிறான், 'நாங்க தான் வளர்க்கறோம்' என்ற ரீதியில் தான் இருந்திருக்கின்றன. சமீபத்தில் அவரை சந்தித்த போது கூட உன்னை பற்றி கேட்டேன், 'நல்லா இருக்கா' என்ற உன் தந்தையின் பதிலை மட்டும் காதில் வாங்கிக்கொண்ட நான் அவர் கண்களை கவனிக்காமல் விட்டு விட்டேன், அதில் தெரிந்திருக்கும் உன் மரண வலி.

உன் குழந்தை பருவத்திலேயே இருந்து வந்த மூச்சிரைப்பு நோய் படிப்படியாய் அதிகமாகி மிக தீவிர சிகிச்சையில் நீ இருந்திருக்கிறாய் என்று தெரிந்துக்கொள்ளாமலே விட்டுவிட்டேனடி தோழி. இனி அடுத்து உன் தந்தையை பார்க்கும் பொழுது நானறியமாலே உன்னை பற்றி விசாரித்து விடுவேனோ என அச்சமாக இருக்கிறது, ஒரு வேளை உன் மரணத்தை நானும் எதிர்ப்பார்த்திருந்தால் இப்படி எனக்கு தோணாது என நினைக்கிறேன். வாழ்க்கையில் எல்லா வழித்தடங்களிலும் மரணம் நமக்காக காத்துக்கொண்டு தான் இருக்கிறது நாம் தான் அதை எதிர்பாராதது என்று கூறுகிறோம். இன்று நீ சென்று விட்டாய் மரணத்தின் வாசலுக்கு, போய் வா தோழி!

-உன் ஆன்மாவின் அமைதிக்காக வேண்டிக்கொள்வதை தவிர வேறெதுவும் செய்ய இயலாமல் நான்...

10 comments:

dubukudisciple said...

ennanga ippadi oru sogamana padivu

padithu oru sottu kanneer thaan vida mudinthathu aapis enbathal

கீதா சாம்பசிவம் said...

என்ன இது? உங்கள் தோழியா? யாராய் இருந்தாலும், இப்போது எல்லாம் மூச்சிரைப்பு ஒரு நோயே இல்லையே, நவீன மருத்துவ வசதிகள் கூடக் காப்பாற்ற முடியலையா? கடவுளே! :((((((((((((((((((((((((((

G3 said...

:((((((((

Balaji S Rajan said...

Veda,

I can understand your feelings. You have let it know beautifully through your post. Within one para you gave a short recital of the developments of your friend, like she got married, had kids, and her Post marital relationships... etc. Your friend's story seems to be like next door's girl. It is a shame that we have many women who are deprived of their basic comforts. In case of such deaths, we do not have anything to share than to help those are left behind by such people. After my father's death we were helped by numerous friends,relatives and neighbours. It was wonderful. If they had not helped, I would not be what I am today. So, if possible please try to help her kids. It could be anything from getting them Uniform or small books and if not financially, atleast helping them with love by showing affection and care. By this you can help them to become another Balaji. I cannot forget all those 1001 people who have helped me so far in my life.

வேதா said...

@டுடி,
என் தோழியின் மரணம் தான் இந்த பதிவுக்கு காரணம், என் மனதில் தோன்றியவற்றை யாரிடமாவது சொல்ல வேண்டியிருந்தது, அதனால் தான் இங்கே...

@கீதா,
ஆமாம் நவீன மருத்துவ வசதிகள் இருந்தும் அதை தாங்கிக்கொள்ளும் கட்டத்தை தாண்டிவிட்டாள் அவள்..:(

@காயத்ரி,
என் சோகத்தில் பங்கெடுத்தமைக்கு நன்றிம்மா

@பாலாஜி,
நீங்க சொல்வது போல நிறைய நண்பர்களின் உதவியால் தான் அவர்கள் குடும்பம் தற்போது ஓரளவு ஒரு நிலையில் உள்ளது. என் தோழியின் மருத்துவதிற்கும், அவள் பையனின் படிப்பு செலவிற்கும் பல பேர் உதவியுள்ளனர், என் தந்தை உட்பட. இனியும் உதவுவோம்.

ambi said...

கையறு நிலையை இதை விட அருமையாக எழுத்தில் காட்ட முடியாது. நானும் தங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறேன். :(((

Compassion Unlimitted said...

MARANATTHAI ETHIRPARTHUKONDU iruppadu ..varigal ennai badhithana.
my wife who suffered with cancer when it took a point of no return,I donno,the hopes diminished to a stage when perhaps we started prying requesting HIM to reduce the suffering. strange it may sound though.
its 15 years now, but still the suffering she underwent .

MARANATTHAI ETHIRPARTHUKONDU iruppadu oru naraga vedanai.Even a worst enemy should not suffer it
any how good you took it out for bottling up is the most dangerous thing

CU

Ravi said...

Hello Veda,
My deep condolences. Though the post was sad, I hope by making it as a post, you were able to alleviate your grief by sharing it with us. I pray that God gives the courage for your friend's family to cope up with her loss and maybe death was a solace for her pain.

Padmapriya said...

:(

Romba naal ku apparam vandhen.. ipdi oru sooga post :( my deepest condolences

நாகை சிவா said...

ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.