Monday, September 24, 2007

பார்க்க.. ரசிக்க..

குழந்தைகளை படமெடுக்கறது அப்டிங்கறது ஒரு கலை. அவங்க செய்யற சேட்டையெல்லாம் பதிவு செய்யனும்னு நினைக்கும் போது தான் நம்மள அழ வச்சுடுங்க, அவங்களுக்கே தெரியாம எடுத்தா தான் படங்கள் இயற்கையா வரும். பாருங்க, என் அண்ணன் பொண்ணை படமெடுக்க நான் முயற்சி செஞ்சப்ப அவ செஞ்ச சேட்டைகளை(இதெல்லாம் பழைய படங்கள் 5,6 மாதங்களுக்கு முன் எடுத்தது, இப்ப மேடத்துக்கு ஒரு வயசு முடிஞ்சுப்போச்சு, படமெடுக்க அழகா போஸ் கொடுப்பாங்க:))

பார்த்து ரசிக்க :
( ஒரு வயசு ஆகறதுக்கு முன்னாடி படமெடுக்க கூடாதுன்னு பாட்டி சொல்லியிருக்காங்க அதனால் நான் முகத்தை காட்ட மாட்டேன் போ..)(சொல்ல சொல்ல படமெடுக்கறியா நீ ? இரு உன் காமிரா பொட்டிய உடைக்கறேன்..)

(இது தான் கடைசி வார்னிங் சொல்டேன்..)(ஹிஹி இந்த படம் எடுத்ததுக்கப்புறம் காமிராவை என் கையிலிருந்து பிடுங்கிக்கிட்டா, நாமளே ஊரான் வூட்டு காமிராவை வச்சுட்டு படம் காமிச்சுட்டு இருந்தோம், எதுக்கு ரிஸ்க்குன்னு நானும் படமெடுக்கறத நிறுத்திட்டேன்:))(என் தம்பியோட அலைபேசியில எடுத்தது, கொஞ்சம் சிரிடி செல்லம்னு சொன்னதுக்கு கொடுத்த போஸை பாருங்க:))


(அவங்க ரெம்ப கோபமா இருந்த போது எடுத்த படம்)


படித்து ரசிக்க :

இந்த கவிதை போன வருடம் என் அண்ணன் மகள் பிறந்த பொழுதில் எழுதியது, இங்கு மீள் பதிவு செய்கிறேன்..

சிரிக்கும் உன் விழிகளில்
வழியும் அன்பு;
சிறு சிணுங்கலிலும்
தெறித்து விழும் நேசம்;
கைகட்டி நிற்பவரையும்
தொடத் தூண்டும் மென்மை;
மனம் கனமாகி
விழிகள் குளமாகி
எண்ணங்கள் உறையும் பொழுது,
உன்னை ஆரத் தழுவி
உச்சி முகர்ந்து
உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்
ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,
கடவுளை.


13 comments:

நாகை சிவா said...

//குழந்தைகளை படமெடுக்கறது அப்டிங்கறது ஒரு கலை.//

அந்த கலையில் இன்னும் சிறிது முயற்சி எடுத்தால் பெரிய லெவலுக்கு வரும் வாய்ப்பு தெரியுது...

குழந்தைக்கு சுத்தி போடுங்க... :)

நாகை சிவா said...

//உன் கண்களில் முழுகி தொலைந்து போகும்
ஒவ்வொரு நொடியும் தரிசிக்கிறேன்,
கடவுளை.//

நல்லா இருக்கு.... குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும் வரை அவர்கள் நித்தமும் நமக்கு கடவுள் தான்...

Padmapriya said...

Nice photos!!
ava peru enna??

Kavithai is also good :)

Compassion Unlimitted said...

Looking at the photographs at the end of a tiring day was wonderful.
vaazhthukkal, oru kalaignar uruvaagik kondu irukkanga !!Kuzhandaikkum iraivanukkum edhu vidyasam

vaazhga
CU

Balaji S Rajan said...

Veda,

Good pics. I appreciate your observation with your niece. It is great to have a child at home. They keep you occupied and entertain well, and we should not mind their mischief. After all that is the difference between a child and an adult.

I enjoyed all the pictures. Nalla Chitti.

Arunkumar said...

photos and kavidhai romba nalla irukku vedha.. am missing my akka paiyan here :(

வேதா said...

@சிவா,

/அந்த கலையில் இன்னும் சிறிது முயற்சி எடுத்தால் பெரிய லெவலுக்கு வரும் வாய்ப்பு தெரியுது.../
உண்மையாகவா? :) இதில் எதுவும் உள்குத்து இல்லையென்ற பட்சத்தில் நன்றி ;)

/குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும் வரை அவர்கள் நித்தமும் நமக்கு கடவுள் தான்.../
நிச்சயமா..

வேதா said...

@ப்ரியா,
நன்றி ப்ரியா குழந்தை பெயர் காவ்யா :)

@CU,
ஆமா நீங்க சொல்ற மாதிரி எத்தனையோ கவலைகள் இருந்தாலும் குழந்தைகளின் புன்சிரிப்பு அத்தனையையும் போக்கடித்துவிடும் தான் :)

நன்றி :)

@பாலாஜி,
/I enjoyed all the pictures. Nalla Chitti./
நன்றி ஆனா நல்ல சித்தி இல்ல ரொம்ப நல்ல அத்தை :)

@அருண்,
/photos and kavidhai romba nalla irukku vedha../
நன்றி அருண் இன்னுமா புது போஸ்ட் போடல? :) இப்டி கமெண்ட் போட்டே காலத்தை தள்றதா உத்தேசமா? :)

Balaji S Rajan said...

Veda,

Do you know I typed Athai first and then had a doubt. Felt lazy to browse back and thought you had mentioned Akka Ponnu. Anyhow thanks for your correction. Nalla ponnu ...Ungalai thaan solrenga...

ambi said...

அருமையான படங்கள். :)

எனக்கு என்னமோ குழந்தை உங்களை பாத்து கொஞ்சம் பயந்து போயி போஸ் குடுத்ருக்கோ?னு தோணுது. :p

Ravi said...

... unmayavae andha kozhandai .. apdi dhaanae sollichu ... chumma karpanai maathiri ezhudina engaluku theriyaatha .. ha ha ...

.. btw .. came in to read kavithai .. and am never disappointed .. evalo vaati paaratarathu .. simply superb

Ravi said...

.. BTW ... blog template romba azhaga irku veda ..

மு.கார்த்திகேயன் said...

படமும் அதற்கான கவிதையும் சூப்பர் வேதா..

குழந்தைகள் சிரிப்புக்கு ஈடு எதுவும் இல்லை.. அதன் ஷேஷ்டைகளுக்கு எத்தனை தவம் வேண்டுமானாலும் இருக்கலாம் வாழ்க்கையில்

நீண்ட இடைவெளிக்கு பிறகு..மறுபடியும் கார்த்திக்