Wednesday, October 10, 2007

மீண்டும் ஒரு பயணம் - 2
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இராமேசுவரம் வங்காளக் விரிகுடா கடலில் உள்ள ஒரு சிறிய தீவு. ரயில் வழி இங்கு செல்வதற்கு , கடல் மேல் கட்டப்பட்ட புகழ் பெற்ற பாம்பன் பாலத்தில் வழியாக தான் செல்ல வேண்டும். ரயில் பாதை தவிர தனியாக வாகனங்கள் செல்லவும் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. ரயில் பாலத்தை விட வாகனங்கள் செல்லும் பாலத்தின் உயரம் அதிகம். பாம்பன் பாலத்தின் மீது செல்லும் போது மிக மெதுவாக தான் ரயில் செல்கிறது, கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகிறது பாலத்தை கடக்க. 1914இல் கட்டப்பட்ட இந்த ரயில் பாலம் கப்பல்கள் அந்த வழியாக கடக்கும் போது இரண்டாக பிரிந்து மேலெழும்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு காலையில் வரும் இந்த விரைவு ரயில் அன்று முழுவதும் பாசஞ்சராக மதுரைக்கு சென்று வருகிறது என்று கூறினார்கள். இந்துக்களுக்கு காசியோடு இராமேசுவரமும் மிக முக்கியமான புனிதத் தலமாக கருதப்படுவதால் இங்கு வட இந்தியர்களின் கூட்டமும் அதிகம் வருகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநில மக்களையும் இங்கு காணலாம், அதனால் இங்கு மாநில வாரியாகவும் அந்தந்த இனத்தவருக்கு ஏற்ற மாதிரி சங்கர மடத்தில் தொடங்கி குஜராத்திகளின் மடம் வரை நிறைய மடங்கள் இருக்கின்றன. கோவில் அருகிலேயே சாரதா பீடத்தின் மடமும் அமைந்துள்ளது. அதை தவிர தேவஸ்தான அறைகளும் உண்டு.

கோவிலுக்கு எதிர் வரிசையில் அமைந்துள்ள அலுவலகத்தில் அறைக்கு ஏற்பாடு செய்துக்கொள்ளலாம். நாங்க போயிருந்தது வாரநாட்களில் என்பதால் தங்குமறை எளிதாக கிடைத்தது. கோவில் அருகிலேயே அறை, ஒரு நாளைக்கு வாடகை 200 ரூபாய். அறை வசதியாக இருந்தாலும் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஆகா இதுக்கும் ஒரு சண்டை போடணுமா? நாம எங்க போனாலும் அது ப்ரச்னை பூமியா மாறிடுதேன்னு நினைச்சுக்கிட்டு அறையை கொஞ்சம் சரி பண்ணுங்க, படுக்கை விரிப்பை மாத்துங்கன்னு சொல்லிட்டு வந்தோம், நாங்க கிளம்பற வரைக்கும் அது நடக்கவேயில்ல :) குளியலறையில் இருந்த வாளியில் ஒரு அங்குலத்திற்கு அழுக்கு மண்டி கிடக்கு, நல்ல வேளை அங்க தங்கியிருந்த ரெண்டு நாளும் கடலில் தான் குளித்தோம் அதனால தப்பிச்சோம்.

இதையெல்லாம் நாங்க பொறுத்துக்கிட்டதுக்கு காரணம் வேற அறை தேட அவகாசம் இல்லை , அதை தவிர எனக்கு அங்கு பிடித்திருந்த ஒரே விடயம், அறை கதவை திறந்து பால்கனிக்கு வந்தால் கண் எட்டும் தூரம் வரை கடல் தான். இங்கு மட்டும் கடல் மிக அமைதியாக, அலைகள் என்றால் என்ன என கேட்கும்விதமாக இருக்கும், எனக்கு அதை பார்க்கும் போது உள்ளே குமைந்துக்கொண்டு எப்பொழுது வேண்டுமானால் வெடிக்கத் தயாராக இருக்கும் ஒரு எரிமலையை போல் தோன்றியது :)

இங்கு அமைத்துள்ள கடல் நீரை அக்னிதீர்த்தம் என்று கூறுவார்கள், ராமர் சீதையை மீட்டு வந்து அக்னிபிரவேசம் செய்ய வைத்த போது சீதையின் நெருப்பை போன்ற தூய்மையை தாங்கவியலாத அக்னிபகவானே தகிப்பை தணிக்க இங்கு குளித்ததால் இப்பெயர் அமைந்தது என ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். இங்கு நீராடிய பின் இராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்கள் மருத்துவ தன்மை கொண்டுள்ளவையாகும். ஈர உடையுடன் கோவிலுக்குள் சென்றால் உள்ளே அமைந்துள்ள 22 கிணறுகளிலிருந்து தண்ணீர் ஊற்றுவார்கள், இதற்கென்றே ஒருவருக்கு தனியாக 17ரூ கட்டணம் உண்டு. நம் கூடவே வந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து ஊற்ற ஒருவர் வருவார். ஆனா இங்கேயும் எல்லாம் காசு தான்.

கடலில் குளிச்சுட்டு வரும்போதே இடைத்தரகர்கள் வந்துடறாங்க, அவங்க ஒருத்தருக்கு கேட்ட பணத்தை கேட்டுட்டு பேசாம நாமளே இந்த தொழில்ல இறங்கிடலாம்னு தோணும். என் அப்பாவும் பேசி பார்த்துட்டு ஒத்து வராததனால நேரடியா டிக்கட் வாங்கி தான் போய் பார்ப்போம்னு தீர்மானிச்சோம். 3 பேருக்கும் டிக்கட் வாங்கிட்டு உள்ள போனதும் ஒவ்வொரு கிணற்றிலும் இருந்து தண்ணீர் எடுத்து யாரெல்லாம் காசு முன்னாடியே கொடுத்தாங்களோ அவங்களுக்கு மட்டும் சரியா ஊத்தறாங்க, எங்கள மாதிரி டிக்கட் மட்டும் வாங்கிட்டு போனவங்க சும்மா மேல கொஞ்சமா தெளிக்கறாங்க அவ்வளவு தான் அது கூட நாம கொஞ்சம் சண்டை போட்டா தான் நடக்கும்.

எங்க கூடவே வந்த ஒரு வடநாட்டு கும்பலில் இரண்டு வயசானவங்க காசு கொடுக்காம தண்ணீர் ஊத்தும் போது நடுவுல வந்துட்டாங்கன்னு அவங்கள பிடிச்சு தள்ளி விட்டுட்டாங்க, நல்ல வேளை அவங்க கீழ விழல. பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த நானும் என் அப்பாவும் வயசானவங்க தான ஏன் இப்டி தள்ளி விடறீங்கன்னு கேட்கவும், அவனுக்கு நாங்க காசு கொடுக்காத கோபம் அதனால அவங்க தான் என்னை கிணத்துல தள்ளி விட பார்த்தாங்கன்னு அப்டியே ப்ளேட்டை மாத்திட்டான்.

அதுக்குள்ள இங்க நடக்கற பிரச்னையை பார்த்துட்டு இன்னொரு ஆள் வந்து நீங்க ஏன் அவன் கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க, என் கூட ஒரு க்ரூப் வருது அவங்களோட நீங்களும் சேர்ந்துக்கோங்க உங்களுக்கு எவ்ளோ கொடுக்கனும்னு தோணுதோ அத கொடுங்க போதும்னு எங்கள கூட்டிக்கிட்டு போயிட்டாரு. சரின்னு அவங்க கூடவே போய் 22 புண்ணிய தீர்த்தங்களிலும் குளிச்சுட்டு(!) வந்தோம். இதுல கடைசி கிணறு கோடி தீர்த்தம் எனப்படுகிறது, ராமர் விட்ட பாணத்திலிருந்து தோன்றிய சுனை என நம்பப்படுகிறது. ஈர உடையுடன் சன்னிதியில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் அறைக்கு வந்து உடை மாற்றி கொண்டு கோவிலுக்கு வந்தோம்.

தொடரும்...

பி.கு : மீண்டும் ஒரு பயணம் என்று எழுத ஆரம்பித்ததுமே இன்னொரு பயணம் போக வேண்டியதா போச்சு அதான் இந்த பதிவு எழுத தாமதமாகிடுச்சு(ஹிஹி ஆவலா படிக்கறவங்க கொஞ்ச பேர் தான் என்றாலும் அவங்களுக்காவது விளக்கம் சொல்லனும்ல:)) அதுவும் தவிர நவராத்திரி ஏற்பாடுகளில் கொஞ்சம் பிஸி கொஞ்சம் பொறுத்துக்கோங்க :) மேற்கூறிய சில தகவல்களும், படமும் இணையத்திலிருந்து ஜி3 செய்தது.

13 comments:

Balaji S Rajan said...

Veda,

Super!... Sitting in one corner of the world gave us a great feeling to read your post. I shall read it to my mother tonight. It reminds me of a trip to Rameswaram in my school days. Memorable! Rameswaram is a wonderful place and you have described it wonderfully. You have got a nice style of writing.

As you have said in your previous post, I have met many people who used to argue without proper seats in train. I could even visualise the scene of the couple standing near toilet. Great writing! Keep it up!

Laughed at the way your mother starts packing a week before. Here also the same. I used to joke my mother, that she will get the address of the train driver, Pilot, and keep nagging them whether they will be on duty on her particular day of travel. Nakkals thaan..!

Compassion Unlimitted said...

Rameswaran ponadillai than..irundalaum ungal varigalai padikkum podu neril sendru parpadhupol irukkiradhu,COLOURIL.!!

Namadhu kovilgalil indha kaasu vaangum Pazhakkum eppodu tholayum..Vaikundavaasa ..nee than badhil solla vendum
Thodarattum ungal thodar
TC
CU

நாகை சிவா said...

நல்ல விரிவான தகவல்கள்...

தொடருங்க...

.:: மை ஃபிரண்ட் ::. said...

நல்ல வேளை. இந்த தடவை நேரா பயணத்தை பத்தி பேச ஆரம்பிச்சிட்டீங்க.. நான் இந்த தடவை ரூம் கிடைக்க்லாஇன்னு யாரிடமாவது சண்டை போடுவீங்களோ என்று எதிர்ப்பார்த்தேன். :-P

Ravi said...

As usual, super! I was waiting for the 2nd part to post my comments! But neenga sonna maadhiri, idhu maadhiri idangaL-la ippadi kaasu pidungaradhu dhaan vedhanaikkuriya vishayam. Nyayamaa pona kooda aniyayam dhaan kedaikidhu. But Veda, neenga eppavum pola ippadi aniyayathai edhirthitte irunga! That is definitely better than being silent.

ambi said...

ஆக மொத்ததுல சென்னைல இத்தனை மாதமா குளிக்காததை எல்லாம் சேர்த்து வெச்சு குளிச்சாச்சூ போலிருக்கு ராமேசுவரத்துல! :)))


//அதுவும் தவிர நவராத்திரி ஏற்பாடுகளில் கொஞ்சம் பிஸி //

என்ன பிஸி?னு எங்களுக்கு தெரியாதா? யார் வீட்டுல என்ன சுண்டல்?னு சர்வே எடுக்கறது தானே? :p

நவராத்திரி இருப்பதால் பிளாகர் மீட்டுக்கு வர முடியாதுனு
போன வருஷம் பிலிம் காட்டீனீங்களே :p

ambi said...

ROTFL on balaji rajan's nakkal comment. :)))

சிங்கம்லே ACE !! said...

நல்ல பதிவு.. தொடர வாழ்த்துக்கள்..

Usha said...

hey Veda, long time!! Eppadi iruka? Thanks for the wishes, and nice to see you still putting up travel posts! :) Innuma suthardha niruthala nee? ;)

Raji said...

NICE INFORMATIVE payanam engalukku Veda:)

Sikiram continue pannunga:)

Selvin Anish said...

Content is Nice, But How can I read it in Good Readable format?

Selvin Anish said...

Nice one! How can I get the Tamil Text in good Readable format.

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம், நீங்க சிருங்கேரி மடத்தின் மூலமோ அல்லது காஞ்சி மடத்தின் மூலமோ முன்னேற்பாடு செய்து கொண்டு போயிருந்தால் இப்படித் தவிக்க வேண்டாம். சாப்பாடு முதற்கொண்டு அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள். சிருங்கேரி மடத்தில் தங்கும் வசதியும் நன்றாக இருக்கும். இதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் முத்திராதிகாரியின் ஆளுக்கு நாம் பணம் தனியாகக் கொடுக்க வேண்டி இருந்தாலும் முன்னுரிமை கிட்டுவதோடு சற்று வசதியாகவும் இருக்கும்.